​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 30 January 2023

சித்தன் அருள் - 1279 - ""அகத்தியரிடம் கேட்க வேண்டிய கேள்வி!""


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறை அருளால், அகத்தியப்பெருமான் திரு.ஜானகிராமன் கைவசம் இருக்கும் நாடியில் வந்து பொது வாக்கு தருகிறார். கடந்த முறை வாய்ப்பு கிடைத்த பொழுது, அடியேன் சேர்த்து வைத்திருந்த கேள்விகள், ஒரு சில அடியவர்கள் அனுப்பி தந்த கேள்விகளை அவரிடம் கேட்டு பதிலை பெற்றோம்.

தற்போது, அகத்தியப் பெருமானிடம், ஏதேனும் ஒரு பொது இடத்தில், விருப்பமுள்ள அகத்தியர் அடியவர்கள் பங்கேற்கும் ஒரு பொதுநாடி வாக்கை அருள முடியுமா என்று கேட்டிருக்கிறேன். இதற்கு அனுமதி தருவார் என நினைக்கிறேன். சரியான நேரத்தில் அது உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

இதற்கிடையில், அடியேனுக்கு, அகத்தியரை நாடியில் சந்தித்து கேள்வி தொடுக்கும் ஒரு வாய்ப்பு அமையும் என நினைக்கிறேன். அப்படியாயின், உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுதல்.

உங்கள் மனதில் சேர்த்து வைத்துள்ள, ஆன்மீக, சித்த மார்க்க, இகபர வாழ்க்கை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதை அடியேனுக்கு "agnilingamarunachalam@gmail.com" என்கிற மெயிலுக்கு, "அகத்தியரிடம் கேட்க வேண்டிய கேள்வி" என்று தலைப்பிட்டு தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் கேள்விகளை சேர்த்துவைத்து, வாய்ப்பு கிடைக்கும் பொழுது கேட்டு, அதை சித்தன் அருளில் வெளியிடுகிறேன். தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக உள்ள கேள்விகள் தற்போது வேண்டாம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1278 - அன்புடன் அகத்தியர் -மதுரா கிருஷ்ண ஜென்ம ஸ்தானம் வாக்கு!





13/10/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மந்திர். ஜனம் பூமி.மதுரா உத்திர பிரதேசம்.

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

அப்பனே!!! நலமாக எம்முடைய ஆசீர்வாதங்கள்!!!

அப்பனே இன்னும் அப்பனே என் பக்தர்கள் நிச்சயம் ஏராளமானோர் இவ்வுலகத்தில் உள்ளனர் என்பேன் அப்பனே!!!

அவர்களுக்கெல்லாம் நிச்சயம் நல்வாக்குகளாக செப்பி அவர்கள் மனதையும் மாற்றி இப்பிறப்பே கடைப்பிறப்பாகும் என்பதுதான் எனது தீர்ப்பு என்பேன் அப்பனே!!!!!

என்னையே நம்பிக் கொண்டு இருக்கையில் அப்பனே யானே அனைத்தும் செய்வேன்!!!

ஆனால் உண்மையானவனாக!!!! அதாவது பின் பொய் சொல்லாதவனாக!! பின் பொறாமை இல்லாதவனாக அவை மட்டும் இல்லாமல் பின் யாருக்கும் துன்பம் விளைவிக்காதவாறு தான் மட்டும் எதையென்று பின்.. அகத்தியனே போதும் என்றும் இறைவனே போதும் என்றும் என்று இருப்பவர்களுக்கு... நிச்சயம் யான் விடிவெள்ளி தருவேன்!!!

பின் சில சில விதிகளில் கூட போராட்டங்கள் இருந்தாலும் நிச்சயமாய் யான் மாற்றி அமைத்து தருவேன் அப்பனே சொல்லிவிட்டேன்!!!

அப்பனே எதை என்று ஆனாலும் அப்பனே ஒரு முறை அப்பனே அதாவது இவ்வுலகத்தை ஆண்டு வந்தான் மன்னன் அதாவது இதையென்று.."" இனயன் "" என்பது அவனுடைய நாமம்!!

ஆனாலும் நன்றாகவே ஆட்சி படைத்து வந்தான்!!! ஆனாலும் அவந்தனுக்கு சரியாக அப்பனே பின் நண்பர்கள் சரியாக அமையவில்லை அப்பனே!!!

எதனால் என்பதையும் கூட ஆனாலும் இவந்தன் இப்படியே சென்று விட்டால் உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கின்றான் என்று என்பதைக் கூட நண்பர்களின் பின் எதை என்று அறியாமலே... ஆனாலும் இவந்தனை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்பதைக் கூட பின் நண்பர்களின் பின் எதை என்றும் அப்பனே இதை இதை என்று கூற நினைத்து விட்டார்கள்!!!!

ஆனாலும் அவந்தனோ!!! ஈசனுடைய பக்தன்!!!! பெரும் பக்தனப்பா!!!! ஆனாலும் இதையென்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே ஆனாலும் நிச்சயம் எதை எவற்றில் இருந்து கூட அப்பனே நல் முறையாகவே இதனை எதனையும் என்று கூட ஆனாலும்...  அவ் அரசனும் இங்கேதான்(மதுரா) கற்றுணர்ந்தான் என்பேன்!! அப்பனே!!!

அதாவது எதை என்று அறிந்து அறிந்து வசிஷ்ட குருகுலத்தில் அப்பனே அனைத்தும் கற்றுணர்ந்தான்!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறியாமல் ஆனாலும் வசிஷ்டன் தவம் மேற்கொண்டே இருந்தான் இங்கேயே!!!

ஆனாலும் இதையென்று நம்பி நம்பி ஆனாலும் எதனையும் என்று குறிப்பிட்ட அளவிற்கும் கூட ஆனாலும் ஒவ்வொரு ஒவ்வொரு யுகத்திலும் கூட வசிஷ்டன்!! வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!

இதனையும் என்றும் ஆனாலும் இவ் அதாவது எதை என்று கூட இக்கலி யுகத்திலும் வசிஷ்டன் அழகாகவே அப்பனே எதை என்று கூற "காசி"தன்னில் அழகாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!! இப்பொழுது கூட அப்பனே!!!

அப்பனே ஆனாலும் யாருக்கும் தெரியாமலே அப்பனே!!! நெருங்கவும் முடியாது !!! ஆனால் நிச்சயம் என் பக்தர்களுக்கு காண்பிப்பேன் வரும் காலங்களில் அப்பனே பல வழிகளிலும் கூட!!!

அப்பனே என்னை நம்பி வந்து விட்டீர்கள் என்றால் அப்பனே ஆனால் எதை என்று கர்ம வினையை முழுவதுமாக அழித்து விடுவேன் !!!

அதனால் என் பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்!!!

எந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றது!!! எந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றது !!என்று யாரும் சொல்லக்கூடாது என்பேன்!! அப்பனே!!!

ஏன்!? கஷ்டங்கள் வருகின்றது? அப்பனே!! பின் உன் ஆன்மா அதாவது எதை என்று அறியாமல் செய்த தவறுக்கு தான் அப்பனே தண்டனைகள் வழங்கிக் கொண்டே இருக்கின்றது!!

ஆனாலும் அப்பனே அனைத்தும் முழுமையாக அதாவது கர்மாவை நீக்கிவிட்டு பேரருளை யான் காண்பிப்பேன் அப்பனே!!!!!

இதுதான் ரகசியம்!!!!

ஆனாலும் இதையென்று ஆனாலும்...பின் அவ் அரசனுக்கு  எதையென்று எதிர் கொள்ளும் அளவிற்கு கூட வசிஷ்டனுக்கு தெரிந்து விட்டது!!!!

ஆனால் வசிஷ்டன் பின் மனித ரூபம் எடுத்து அதாவது கூடுவிட்டு கூடு பாய்ந்து!!!! பின் நல்விதமாக அவ் மன்னனின் அருகிலே இருந்து பின் அடியோடு அனைத்தும் அழித்து அழித்து அனைவரையும் கூட அழித்து அழித்து மீண்டும் மீண்டும் அவ் மன்னனை உயர்த்தினான் என்பேன் அப்பனே!!!!

இதுதான் அப்பனே நல்விதமாக அப்பனே எங்களை நம்பினோர்க்கு நிச்சயமாய் யாங்களே கூடு விட்டு கூடு பாய்ந்து இக் கலியுகத்திலும் கூட அப்பனே அருகிலே இருப்போம்!!!!

அதனால் அப்பனே எக்குறைகளும் கொள்ளத் தேவையில்லை அப்பனே!! மனிதன் என்றால் கஷ்டங்கள் வரும் என்பதே தீர்மானம் என்பேன் அப்பனே!!!!

கஷ்டங்கள் இல்லாமல் யாரும் செல்ல முடியாது என்பதை கூட யான் பல வாக்குகளிலும் கூட யான் செப்பிக்கொண்டே வருகின்றேன் அப்பனே!!! இதனையும் எதிர்கொண்டு எதிர்கொண்டு அப்பனே நிச்சயம் எதை என்று கூற மனிதனாக பிறந்து விட்டால் அப்பனே எதனை எதனை அனுபவிக்க வேண்டும் என்பதை கூட யான்.......

ஆனாலும் என்னுடைய அருள்கள் அப்பனே எதை என்று கூற வரும் காலங்களில்..... என்னுடைய பக்தர்களுக்கு நிச்சயம் மிஞ்சிய அளவிற்கு அளித்து அவர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் மூலம் மனிதர்களுக்கு நிச்சயம் யான் நன்மைகளை செய்யத்தான் போகின்றேன் அப்பனே!!!

ஆனால் உண்மையான மனிதர்கள் அப்பனே மிகவும் பின் எதை என்று சொல்லாத அளவிற்கு கூட அப்பனே குறைவுப்பா!!!!

உண்மையான பக்தர்களை பின் எதை என்று அறியாமலே அவர்களை மட்டும் யான் தேர்ந்தெடுப்பேன் அப்பனே நலமாகவே!!!

ஆனாலும் அவர்கள் எதுவும் எதற்கும் ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே!!!
தான் உண்டு!! தன் வேலை உண்டு!!. பின் இறைவன் உண்டு!!! என்று இருப்பவர்களுக்கு மட்டுமே என்னுடைய அருள்கள் அதாவது சித்தர்களுடைய அருள்கள் கிட்டி... சித்தர்கள் அனைத்தையும் செய்வார்கள் என்பேன் அப்பனே!!!!

அவை மட்டும் இல்லாமல் அவை வேண்டும் இவை வேண்டும் அப்படி செய்கின்றேன் இப்படி செய்கின்றேன் என்றெல்லாம் பின் மனதில் நினைத்துக் கொண்டால் நிச்சயம் எங்கள் தரிசனமும் கிடைக்காது!!! அப்பனே ஏதும் கிடைக்காது!!!

அப்பனே வந்தாய்!! மாயந்து விட்டாய்!!! இதுதான் அப்பனே பின் மீண்டும் வருவாய் பின் கஷ்டங்கள் படுவாய் இப்படியே பிறவிகள் கடந்து கொண்டே இருக்கும்  அப்பனே!!!

முதலில் எதை என்று அறிய அப்பனே மானிட பிறவியே வேண்டாமப்பா!!!!!!

அதனால் தான் பல பல யுகத்திலும் யாங்கள் மனிதர்களுக்கு அப்பனே!!! பல வழிகளிலும் பல வகையிலும் நன்மைகளை அளித்து பிறவி பெருங்கடலை பின் அழகாகவே முடித்து வைப்போம்!!!

முடித்தும் வைத்தோம்! இன்றளவும் கூட!!!!!!!

அதனால்தான் நல்லதிற்காகவே எதை எதிர் கொண்டு எதிர்கொண்டு அப்பனே!!!!

இன்னும் சில வழிகளில் கூட நன்மைகளாகதான் யான் செய்வேன் அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் மகன்களே!!!! எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் ஏராளமான செய்திகளையும் கூட அப்பனே விளக்கத்தோடு அளிக்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே இன்னும் ஏராளமான சித்தர்களும் வருவார்களப்பா இதனால் நன்முறைகளாக வாக்குகள் கேட்டு நன் முறைகளாகவே இதை பயன்படுத்திக் கொண்டு அப்பனே இருந்தால்..........!!!!
 அப்பனே....ஏது??  குறை!!!  அப்பனே!!!

யாங்களே வருவோம் ஒவ்வொரு இல்லத்திற்கும் அப்பனே!!!! நலமாகவே மாற்றி அமைப்போம்!!!

அப்பனே!!! யானே !! வந்து விட்டால் அங்கு ஏதும் தேவையில்லை என்பேன் அப்பனே!!!

மந்திரங்கள் தந்திரங்கள் அப்பனே!! எதை எதை என்று கூற!!...

அப்பனே யான் எதை என்று கூற!!!! எவை என்று கூற!!

ஒரு இல்லத்திற்கு கூட சென்று விட்டேன் அப்பனே ஆனாலும் அங்கு என் படம் அழகாக இருக்கின்றது!!!!

ஆனாலும் அவ் இல்லத்தார் என்னை வணங்கவில்லை அப்பனே!!! யார் யாரோ கொடுக்கின்றதையெல்லாம்.....!!!!!

பின் அதற்குத்தான் பூசைகள் நடக்கின்றது அப்பொழுது பார்த்தீர்களா!!!! அப்பனே!!!!

எங்கு பக்திகள் உள்ளது என்பதை கூட!!!.......

அப்பனே பக்திகள் இல்லையப்பா!!!! போலியானவனுக்கே!! பல பக்திகள்!!

ஆனாலும் அதனால் ஒன்றும் பயனில்லை என்பதை கூட யான் அறிந்து விட்டேன் அப்பனே!!

எதையென்று அறிய அறிய அதனால்..... அப்பனே மூலன்(திருமூலர்) கூட ஒன்றே குலம்!!! ஒருவனே தெய்வம்!!!.......

அப்பனே எதை எதை என்று ஆராய்ந்து ஆராய்ந்து இதையும் கூட அப்பனே இன்னும் இன்னும்... வரும் வாக்குகளில் எதற்காக இதை சொன்னான்!!! என்பதையும் கூட நிச்சயமாய் எடுத்துரைப்பேன் அப்பனே நலமாகவே!!!!

அதை கேட்டிட்டு அப்பனே நலமாகவே வாழ்ந்தாலே போதுமானது அப்பனே!!!

முதலில் மனித ஜென்மமே வேண்டாமப்பா!!!!!

அவ் ஜென்மத்தை பின் எதை என்று அறிய அறிய அதனை முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் அப்பனே!!! நலமாகவே அதனால்தான் அப்பனே என் பக்தர்களுக்கு எவை வந்தாலும் அதாவது பின் கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்க கூடிய வலிமை யான் கொடுப்பேன் அப்பனே!!!!

நலமாகவே அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்!!! கொள்ள வேண்டாம்!!! அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இங்கே(மதுராவில்) ஒரு முதியவன் இருந்தான்!!!!
அவந்தனும் அப்பனே கோவிந்தா!!! கோவிந்தா!!! என்று அழைத்துக் கொண்டே இருந்தான்!!!

ஆனாலும் பின்  எதையென்று அறிய அறிய ஆனாலும் பின் அவ் முதியவனுக்கு பின் அனைவரும் பாவம்!! பாவம்!! என்று கூட!!.. அவர்களுக்கு பின் ரூபாய்கள்!!! அதாவது பின்  எதையென்று அறியாமலே கொடுத்திட்டு சென்றனர் அப்பனே!!!!

இன்னும் அவந்தன் அப்பனே கோவிந்தா !!! கோவிந்தா!!! என்று சொல்லிக்கொண்டே இருந்தான் அப்பனே!!

ஆனாலும் பணம் ஏறக்குறைய அப்பனே அவந்தனையே மூழ்கடித்து விட்டது அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே பணத்திற்கு எதை என்று அறிய இன்னும் பணங்கள் சேர்ந்து கொண்டே இருந்தது!!!! ஆனாலும் கோவிந்தா!!! கோவிந்தா!!! என்றுதான்!!!

ஆனால் அவந்தன் பணத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை அப்பனே!!!
கோவிந்தன் மீதே நம்பிக்கை வைத்தான்!!!!

அதனால் பின் ஆனாலும் வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்கின்றானே!!!!ஏன்???

இவந்தனுக்கு பைத்தியமா?????
ஆனாலும் வருபவர்கள் எல்லாம்.... பக்தர்கள் தான்!!

பார்த்துக் கொண்டீர்களா!!!!
எப்படி பக்திகள் என்பதை கூட!!!........

பின் ஆனால் அப்பனே மனதில் அழுக்கை வைத்துக் கொண்டு இறைவனை வணங்கினாலும்!! என்ன!! பிரயோஜனம்??? அப்பனே

ஒன்றுமில்லை அப்பனே!!!

ஆனால் ஏதோ!! ஏதோ!! என்று கூட..... அதனால்தான் அப்பனே சொல்கின்றேன்!!

ஆனாலும் கோவிந்தா கோவிந்தா என்று இவ் முதியவன் சொன்னதாலும் எதையென்று அறியாத அளவிற்கும் கூட..... மனிதர்கள் இவனைப் பார்த்திட்டு.... கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி எதை என்று கூற எதைத்தான் சம்பாதித்தான்????..... என்று இவனைப் பார்ப்பது பின் உள்ளே சென்று இறைவனை தரிசிப்பது!!!...

அப்பனே!! எப்படியப்பா!!!!!!!...... இப்படி எல்லாம்!!!.......எதையென்று கூட நியாயமாகும்??????????????
 
நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்!!!

அப்பனே சரியாகவே அவந்தன் மீண்டும் மீண்டும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே இருந்தான்!!!

ஆனாலும் பின் முதியவன் ஆனாலும் இன்னொரு ""முதியவன்!!! தான் வந்தான் அப்பனே!!!..

ஆனாலும் அவ் முதியவன் சொன்னான் அப்பனே அவன் யாரென்றால்??
அப்பனே எதை என்று கூட உண்மையாகவே கோவிந்தனே!!!!! அப்பனே!!
அவ் முதிவனாக வந்தது கோவிந்தன் அப்பனே!!!

ஆனாலும் வந்து விட்டான் எதை என்று பின் முதியவரே!!!! இவ்வளவு பணங்கள் வைத்திருக்கின்றாயே!!!!!

பின் உந்தனுக்கு இன்னும் நிம்மதியாகவில்லையா என்று.....இக் கிழவன் அதாவது பின் கோவிந்தன் கேட்டான்!!!!

ஆனாலும் எதற்கறிந்து அறிந்து நிச்சயம் எந்தனுக்கு இதன் மீது நாட்டம் இல்லை!!!!! பணத்தின் மீது நாட்டமில்லை!!!!

எந்தனுக்கு பின் கோவிந்தன் மீது தான் நாட்டம் என்று பின் சொல்லிவிட்டான்!!!!!

இதனால் மீண்டும் அவை முதியவன் மறைந்து விட்டான்!!!! ஆனாலும் உள்ளே சென்று யோசித்தான் இவ்வளவு!!!!! நம் மீது பக்திகளா!!!....

அப்பனே பாருங்கள் அப்பனே மாயை நம்தனக்கு அருகில் வரச் செய்யும்!!! ஆனாலும் அதற்கெல்லாம் அப்பனே மயங்கி விட்டால் கர்மத்தில் நுழைந்து விடுவாய் அப்பனே!!!

ஆனாலும் எதற்கும் மயங்காமல் இருந்தால் அப்பனே என் இறைவனை பார்க்க வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் இறைவனே!! வந்து உந்தனுக்கு பல வகைகளிலும்.. உண்மை நிலைகளை பல பல எடுத்துரைத்து உண்மைகளை கூறி அப்பனே பல வழிகளிலும் கூட நன்மைகளை செய்ய காத்திருக்கின்றான் அப்பனே!!!!

ஆனால் மனிதன் அப்படி இல்லையப்பா!!!!

பொருளுக்கும் அப்பனே சுகத்திற்கும் ஆசைப்பட்டு சென்று சென்று அப்பனே மாயையில் விழுந்து அதன் மூலம் கஷ்டங்கள் பட்டுப்பட்டு மீண்டும் மீண்டும் இறைவனை வணங்கி!!... வணங்கி!!!......

அப்பனே முதலிலே சிறிது யோசித்து இறைவனை வணங்கி விட்டாலே போதுமானது மாயத்திரை அழிக்கப்படும் என்பேன்!!!
அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எதை எதை என்று தெரியாமல் அப்பனே மனிதன் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றான்.

ஆனாலும்( ஆலயத்திற்கு) உள்ளே போன முதியவன்... வெளியில் இருக்கும் அவ் முதியவன் நம்மையே அதாவது கோவிந்தா!! கோவிந்தா!! என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானே!!!!

அவந்தனுக்கு ஏதாவது ஒன்றை தர வேண்டும் என்று கூட மீண்டும் குழந்தை ரூபத்தில் வந்தான்!!!

ஆனாலும் இதையென்று அறிந்து அறிந்து.... ஆனாலும் எவை பின் அக்குழந்தை!!! யார் ?? என்பதை சரியாக அறிந்து கொண்டான் அவ் முதியவன்!!!!

இதனால் பின் நாளும் மனதில் நினைத்தது பின் அவ் மனித!!!  அவ் கிழவன் எதை என்று அறியாமல் இருந்தானே நாம் நினைத்தது நிச்சயம் கோவிந்தன் குழந்தை ரூபத்தில் எப்பொழுது வருகின்றானோ!!!! அப்பொழுதுதான் நிச்சயம் எதை என்று அறியாமலே என் தவத்தை கலைப்பேன் என்று கூட!!!!!

கோவிந்தன்!!! அழகாகவே குழந்தை ரூபத்தில் வந்துவிட்டான்!!!! நிச்சயம் அவந்தனுக்கும் மகிழ்வுகள் ஏற்பட்டது!!!!!

கோவிந்தன்!! வந்து விட்டான்!! வந்து விட்டான்!!
எல்லோரும் ஓடி வாருங்கள்!! வந்து பாருங்கள்!!! என்று கூவி அழைத்து கேட்க!!!!

ஆனாலும் இதையென்று அறியாத மக்கள்.   பைத்தியம்!! ஏன்? அதாவது பைத்தியம் பைத்தியக்காரன் இவ்வாறு அலைந்து கொண்டிருக்கின்றானே!!! ஏன்??? என்ன இவந்தனுக்கு வந்துவிட்டது????

எதை என்று கூட அனைத்து குழந்தைகளும் கோவிந்தன் ஆகிவிடுவானா?? என்று கூட!!!

ஆனாலும் அறியாத முட்டாள்கள் மாயையில் சிக்கிக் கொண்ட முட்டாள்களுக்கு உண்மையான பொருளை எதை என்று அறியாமலே ஆனாலும் இதை சைகை(கண்ணசைத்து) வழியிலே... கண்கள் மூலமே யான் தான் கோவிந்தன் என்று அக்குழந்தை காண்பித்து மறைந்து போயிற்று!!!!

எதை என்று ஆனாலும் அனைவரும் எப்படிகுழந்தை என்றெல்லாம் ஆச்சரியப்பட்டு  எதையென்று அறியாமலே... அப்பொழுதுதான் இவன் ஞானி என்று அறிந்து கொண்டார்கள்!!!

ஆனாலும் பின் அனைவரும் இவந்தன் காலில் விழுந்து விழுந்து.... எதை என்று அறியாமலே எதை என்று புரியாமலே என் கர்மத்தை போக்குங்கள்!! போக்குங்கள்!! என்று கூற..

திடீரென்று அக் கோவிந்தனே... மாயமாக்கி கொண்டான்!!! அதாவது எடுத்துக்கொண்டான் அவனிடத்திற்கு சரியாகவே!!!

இதுதான் அப்பனே ஏதாவது என்று கூட ஒவ்வொரு ஆன்மாவிற்கும் இத்தனை பிறவிகள் என்று கூட ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது அப்பனே!!!!

அதாவது கூட்டி கழித்து பார்த்தால் அப்பனே ஒன்றும் இல்லை!!!

இவ் ஆன்மா இத்தனை வருடங்கள் ஆக வேண்டும் அதாவது இப்பூமியில் பிறந்து வளர வேண்டும் ஒவ்வொரு உடலில் சேர வேண்டும் என்பதை கூட பின் பிரம்மாவின் தீர்ப்பு!!!

அப்பனே எதை என்று அறியாமலே.... அதனால் பின் ஒரு ஆன்மா ஒரு கையில் 30 ஆண்டுகள் தங்கலாம்!!! எதை என்று எதிர் கொள்ளாமலே!!! 50 வருடங்கள் தங்கலாம்!!! அல்லது எதை என்று அறியாமலே 80 வருடங்கள் தங்கலாம்!!!.... ஆனாலும் அப்பனே இதன் கணக்கு எங்களால் சித்தர்களால் மட்டுமே செப்ப முடியும் ஒவ்வொரு ஆன்மாவும் எதை என்று அறியாமலே இத்தனை ஆண்டுகள் பின் எதையென்று கூட பூமியில் திரிந்திருக்க வேண்டும் என்பதைக் கூட......

அப்பனே!!! அத்தனை ஆண்டுகள் சென்றால் தான் அப்பனே பிறவியும் முக்தி பெறும் என்பேன் அப்பனே!!!

அதாவது இத்தனை ஆண்டுகள் எதை என்று கூட அப்பனே 300 ஆண்டுகள் போக வேண்டும் என்பேன்!! அப்பனே!!! அப்பொழுதுதான் ஒரு ஆன்மா பின் முக்தி பெறும் என்பேன்!!!

அவ் 300 ஆண்டுகள் போன பின்பு தான் என்னுடைய ஆசிகளும் அருளும் பலமாக கிட்டும் என்பேன்!!!

ஆனாலும் அப்பனே முதலிலே எதை என்று அறியாமலே  அவ் ஆன்மா முதலில் பிறந்து விடுகிறதென்றால் 80 ஆண்டுகள் வாழ்ந்து விடுகின்றதென்றால் அப்பனே பின் இறந்து பின் இன்னொரு உடம்பை தேடும் என்பேன் அப்பனே!!

பின் இன்னொரு உடம்பை தேடும் பொழுது அப்பனே அப்பொழுது இறைவனிடம் பக்திகள் இருக்காது மீண்டும் பின் பிறப்பு எடுக்கும் பொழுது பின் பக்திகள் இருக்காது ஆனால் கடைசியில் அனுபவித்து அனுபவித்து தான் இறைவன் இருக்கின்றான் என்பதைக் கூட மெய்யாக உணரும் அப்பனே!!! அவ் ஆன்மா!! எதை என்று கூட!!!

அதனால் வந்து விட்டீர்கள் அப்பனே நலமாகவே நலமாகவே எம்முடைய ஆசிகள்!!! அப்பனே பலகோடிகளப்பா!!!

எங்கெங்கு? பல சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது அப்பனே!!!! யானும் அங்கங்கு அழைத்து செல்வேன் அப்பனே!!!!

சரியான முறையில் சென்று கொண்டிருந்தால் அப்பனே ஏதும் தேவையில்லை அப்பனே!!!

உண்மைதனுக்கு அப்பனே இவ்வுலகத்தில் எதை என்று அறியாமலே வருகின்றது மாயை!! மாயை.!!

அப்பனே அழிவு காலம் வந்து கொண்டே இருக்கின்றது!!! அதனால் அப்பனே நல்லோர்களுக்கெல்லாம் அப்பனே வினையே சமமாக வந்து வந்து அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே குடும்பம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் நீண்ட நாட்கள் மனிதன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றோம் என்பதைக் கூட எண்ணம்.

ஆனாலும் அப்பனே உடம்பு போய்விடும் அப்பனே!!!! அவ் ஆன்மா மீண்டும் எதை என்று அறியாமலே மற்றொரு உடம்பை தேடி தேடி அப்பனே அலைந்து கொண்டு இருக்கும் அப்பனே!!!

அதனால் தான் அப்பனே எதை என்று அறியாமல் அதனால் அப்பனே எதை என்று உணராமலே எங்கள் பேச்சை கேட்டால் அப்பனே அனைத்தும் நலமாகும்!! என்பேன் அப்பனே!!!
ஒரு தீங்கும் அதாவது அணுவளவும் குறைகள் வராது என்பேன் அப்பனே எதை என்று அறியாமலே!!

ஆனாலும் மனிதன் மாயதிரையில் மறைந்து கொண்டு அப்பனே அனைத்தும் வேண்டும் அனைத்தும் வேண்டும் என்றால் அப்பனே... எதை என்று அறியாமலே பின் எதை என்று உணராமலே இறைவன் கொடுப்பதற்கு எதை எதை என்று கூட!!...

இதனால் எதையும் கேட்டு விடாதீர்கள் அப்பனே நலமாகவே!!!!!

எதை எடுத்து வந்தாயோ அதாவது  அவ் ஆன்மா எதையெல்லாம் எதை என்று கூற பின் அனுபவித்து வந்ததோ அதன் மூலமே கஷ்டங்கள் ஏற்படும்..இவ் பிறப்பில் கூட!!! அதுதான் அப்பனே எதை என்று அறியாமலே அதனால்தான் தவறுகள் செய்யாதீர்கள் நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்பதை எல்லாம் பின் வெட்ட வெளிச்சமாகவே சித்தர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே

அப்பனே நலமாகவே நலமாகவே வெற்றிகள் உண்டு அப்பனே எக்குறைகளும் கொள்ள வேண்டாம்... மீண்டும் ஆசிகளோடு உரைக்கின்றேன்.!!!! அப்பனே நலமாகவே!!!! நலமாகவே!!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் அடிக்கடி தனது வாக்குகளில் கூறும் செய்தி என்னவென்றால் உண்மையான பக்தியும் தொண்டு செய்யும் மனப்பான்மையும் இருந்தால் யாங்களே அவர்களை தேடிச் சென்று வாக்குகள் தருவோம் அவர்கள் இல்லத்திற்கும் செல்வோம் அவர்களை ஆசிர்வதித்து மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று வாக்குகளில் உரைத்துக் கொண்டே இருக்கின்றார்!!இன்னும் எத்தனை எத்தனையோ பேர் குருநாதரின் ஜீவனாடி வாக்குகளை கேட்பதற்கு காத்துக் கொண்டிருக்கையில் மதுரா ஆலயத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பக்தனான சிறுவனுக்கும் கருணையோடு அழைத்து அருகில் அமர வைத்து வாக்குகள் தந்து ஆசீர்வதித்தார் நம் குருநாதர்!!!! அந்தச் சிறுவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!!!!

நம் குருநாதரை நாம் எல்லாம் நினைத்து பெருமைப்படும் தருணம் இது அவருடைய அன்பிற்கும் கருணைக்கும் எல்லையே கிடையாது என்பதை ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றார் இதுதான் உண்மை!!!!

அந்த சிறுவனுக்கு நம் குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு தந்த நிகழ்வினை பார்ப்போம்

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் அருள் ஆசிகளோடு யாத்திரையில் மதுராவில் யமுனா ஸ்நானம் துவாரகதிஷ் கிருஷ்ணர் தரிசனம் ஜென்ம பூமியில் உள்ள கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை தரிசனம் எல்லாம் முடித்துவிட்டு ஆலயத்திற்கு எதிரே இருக்கும் இடத்தில் திரு ஜானகிராமன் ஐயா ஓலைச்சுவடியை பிரித்து வாசிக்க தொடங்கினார்!!

குருநாதர் அகத்திய பெருமான் அனைவருக்கும் அருளாசி வழங்கி இந்த வாக்கினை தந்து கொண்டிருந்த பொழுது ஒரு பையன் அதாவது  18 வயது மதிக்கத்தக்க அளவில் தென்னிந்திய தோற்றத்தில் வாக்குகள் தரும் இடத்திற்கு வந்து என்னவென்று கேட்க தொடங்கினான்..

ஜானகிராமன் ஐயா தமிழில் குருநாதர் வாக்குகளை வாசித்துக் கூறிய பொழுது அந்தச் சிறுவனும் நான் கேரளாவை சேர்ந்தவன்  என்று கூறி விட்டு சிறிது தூரத்தில் அமர்ந்து கொண்டு வாக்குகளை கேட்டுக் கொண்டே இருந்தான்!!!!
சிறிது நேரம் கேட்டுக்கொண்டு இருந்து அவனுடைய பெற்றோர்கள் சிறிது தூரத்தில் இருந்தனர் ஆர்வத்துடன் வாக்குகளை கேட்ட அவன் எழுந்து செல்ல முற்படுகையில்...

அவந்தனை இங்கு வரச்சொல்!! அவந்தனுக்கும் வாக்குகள் யான் உரைக்கின்றேன்!!! என்று உத்தரவிட்டார்!!!!!

அகத்தியர் அடியவர் ஒருவர் அவனை அழைத்து அமரச்சொன்னார்!!!

அச்சிறுவனும் அருகே வந்த அமர்ந்தவுடன்

எதையென்று தெரியாமலே வந்தவனுக்கும் அப்பனே நலமாகவே இவந்தனை எதை என்று அறியாமலே குருவாயூர் செல்லச் சொல்!!!! அங்கே இவந்தனுக்கு ஒரு சூட்சுமம் இருக்கின்றது!!!! என்று கூற அதை அப்படியே அகத்தியர் அறியவர் மலையாளத்தில் அச்சிறுவனுக்கு விளக்கி தந்தார்!!!!

அச்சிறுவனும் புரிந்து கொள்ள!!!!! குருநாதர் அகத்திய பெருமான் அவனுடைய முற்பிறவியை பற்றியும் கூற தொடங்கினார்

அப்பனே நலமாகவே உண்டு உண்டு ஏற்றங்கள் அப்பனே கவலைகள் இல்லை  எதையென்று அறியாமலே அப்பனே எதை என்று தெரியாமலே... குருவாயூரிலே அப்பனே வாழ்ந்து வந்தாய் முன் ஜென்மத்தில் ஆனாலும் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே குருவாயூரிலே நல்முறையாகவே தர்மம் ஏந்தி வந்தாய் நீ அப்பனே!!! அப்பனே நலமாகவே எதை எதை என்று கூற அப்பனே எதை என்று பின் உணராமல் அப்பொழுதே அவ் குருவாயூரன்( கிருஷ்ணன்) நல்முறையாகவே உந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி உந்தனை எதை என்று தெரியாமலே எவை என்று உணராமலே பின் அங்கிருந்து பழனி மலைக்கு அனுப்பினான் உன்னை!!!!

அதனால் அப்பனே அடிக்கடி பழனி தனுக்கும் எதை என்று தெரியாமலே குருவாயூருக்கும் அடிக்கடி சென்று கொண்டே இருந்தால்... உன் வாழ்க்கை தத்துவம் புரிந்துவிடும் அப்பனே எதை என்று அறியாமலே இச் ஜென்மத்திலே உந்தனுக்கு கிருஷ்ணனும் உதவிகள் செய்வான் எதை என்று அறியாமலே பழனி மலையில் பின் முருகனும் உந்தனுக்கு காட்சியளிப்பான்!!! உன் குடும்பத்திற்கே பழனியாண்டவன் தரிசனம் கிடைக்கும்!! கிடைக்கும்!! சொல்லிவிட்டேன்!!! என்று வாக்குகள் தந்தார் !!!

அச்சிறுவனும் தன்னுடைய பெற்றோரை அழைத்து வர அந்த அகத்திய அடியவரும் மலையாளத்தில் முழுவதும் எடுத்துக்கூற மிகவும் மகிழ்ச்சி அடைந்து நன்றி கூறி விடை பெற்று சென்றனர் நம் குருநாதரின் கருணையோ கருணை!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மதுரா போன்
05652 423888

ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மதுரா முகவரி: மதுரா - டீக் மார்க், டீக் கேட் சௌரஹா அருகில், ஜனம் பூமி, மதுரா, உத்தரப் பிரதேசம், 281001, இந்தியா
 
ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மதுரா கோயில் திறந்திருக்கும்
நாள்  மற்றும் நேரம்

திங்கள் காலை 5:00 - 12:00 மணி
மாலை 4:00 - இரவு 9:30
செவ்வாய் காலை 5:00 - 12:00 மணி
மாலை 4:00 - இரவு 9:30
புதன்கிழமை காலை 5:00 - மதியம் 12:00
மாலை 4:00 - இரவு 9:30
வியாழன் காலை 5:00 - மதியம் 12:00
மாலை 4:00 - இரவு 9:30
வெள்ளிக்கிழமை காலை 5:00 - 12:00 மணி
மாலை 4:00 - இரவு 9:30
சனிக்கிழமை காலை 5:00 - மதியம் 12:00
மாலை 4:00 - இரவு 9:30

ஞாயிறு காலை 5:00 - மதியம் 12:00 4:00 pm - 9:30 pm   

ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் மதுரா
தர்ஷன் & ஆர்த்தி நேர விபரங்கள்


கோடைக்காலம்

காலை 5:00 முதல் மதியம் 12:00 வரை மற்றும் மாலை 4:00 முதல் இரவு 9:30 வரை

குளிர்காலம்

காலை 5:30 முதல் 12:00 வரை மதியம் மற்றும் மாலை 3:00 முதல் இரவு 8:30 வரை

மங்கள ஆரத்தி காலை 5:30 மணி

மகான் போக் காலை 8:00 மணி

சந்தியா ஆரத்தி மாலை 6:00 மணி

ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் கோயில், கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும்.

 உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா நகரம் கிருஷ்ணரின் பிறப்பிடமாகும்.

கிருஷ்ணரின் இருப்பிடமான மதுராவைப் பற்றி:- 

மதுரா பகவான் கிருஷ்ணரின் வசிப்பிடமாக அறியப்படுகிறது, அங்கு அவர் தனது குழந்தைப் பருவம், இளமைப் பருவம் மற்றும் அவரது இளமைப் பருவத்தின் சில பகுதிகளைக் கழித்தார். பிரிஜ் பூமி என்றும் அழைக்கப்படும் மதுரா, ஏராளமான இந்துக் கோயில்களைக் கொண்ட இந்தியாவின் புனிதமான இடங்களில் ஒன்றாகும். இது அதன் வரலாறு, தொல்லியல், மத வரலாறு, கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றிற்கு நன்கு அறியப்பட்டதாகும். இது யமுனை ஆற்றின் கரையில் உள்ளது.


மதுரா பல இந்துக் கோயில்களின் தாயகமாகவும் உள்ளது,

 நகரம் முழுவதும் புல்லாங்குழல்களின் அழகான ஒலியைக் கேட்கலாம் மற்றும் நம்பமுடியாத அன்பு மற்றும் பக்தி உணர்வை உணர முடியும். ஹோலி என்பது மதுராவின் மிக முக்கியமான பண்டிகையாகும், மேலும் இந்த 
வண்ணமயமான நிகழ்வின் பக்திமயமான மகிழ்ச்சியையும் காண உலகளவில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வருகிறார்கள்.

மதுரா இந்தியாவின் முதன்மையான ஆன்மீக தலங்களில் ஒன்றாகும்.

மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவில் பற்றி

ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி கோயில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் கோயில், கிருஷ்ணரின் பெற்றோரான மாதா தேவகி மற்றும் வசுதேவரை அவரது பொல்லாத மாமா கம்சனால் சிறைபிடிக்கப்பட்ட சிறை அறையை மையமாகக் கொண்டது.

சிறை அறையைத் தவிர, கிருஷ்ண ஜென்மஸ்தான் கோயிலில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்ற கோயில்கள் உள்ளன. கோயிலின் புனிதமான சூழலும் தூய்மையும் கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்திய தலம் இது என்ற நம்பிக்கையை இதயத்தில் செலுத்துகிறது.

கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவிலில் ஜன்மாஷ்டமி (கிருஷ்ணரின் பிறந்த நாள்), பசந்த பஞ்சமி, ஹோலி மற்றும் தீபாவளி போன்ற விடுமுறை நாட்களில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும்.

#குறிப்பு: பாதுகாப்பு காரணங்களுக்காக கேமராக்கள் அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான மதுரா கோவில்கள் செல்போன் மற்றும் கேமராக்களை தடை செய்கின்றன, எனவே மதுராவில் எந்த கோவிலுக்கும் செல்லும்போதும் அவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவிலின் இருப்பிடம்
மதுராவின் டீக் கேட் சௌராஹாவிற்கு அருகில் உள்ள டீக் மார்க்கில் இந்த கோவில் உள்ளது.

மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவில் வரலாறு
கிருஷ்ணர் பிறந்த இடம் என்பதால் கிருஷ்ண ஜென்மபூமி இந்துக்களின் இதயங்களிலும் ஆன்மாக்களிலும் தனி இடத்தைப் பிடித்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday 28 January 2023

சித்தன் அருள் - 1277 - அகத்தியப்பெருமானின் அருகாமை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான், தன் அடியவர்களுக்கு அருளுவதற்காக பல ரூபங்களிலும் பல இடங்களுக்கும் செல்வதுண்டு. அடியவர் எண்ணத்தில் தோன்றி, பல புண்ணியத் தலங்களுக்கும் வரச்சொல்லி, அதிசயங்களை நடத்தி, அவர் மனம் நிறைய வாழ்த்தி அருளுவதுண்டு. அப்படி நடந்த நிகழ்ச்சியை ஒரு அகத்தியர் அடியவர், பகிர்ந்து கொண்டதை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஒரு முறை, நானும் (அகத்தியர் அடியவர), மனைவியும், கும்பகோணம் பக்கத்தில் உள்ள சில புண்ணிய தலங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து, அருள் பெற்று வரலாம் என்று கிளம்பினோம். புண்ணிய தல யாத்திரை என்பது, நேரமும், இறைவனும், குருவருளும் ஒன்று கூடி அருள்வதினால் அமைவது என்று நம்புபவன் நான்.

யாத்திரையின் முடிவாக, அகத்தியம்பள்ளி சென்று, குருநாதரை தரிசித்து அருள் அருள் பெற்று வரலாம் என்று சென்றோம்.

அகத்தியம்பள்ளி ஆலயத்தில், கூட்டம் இல்ல. சுவாமி சன்னதியில் ஒரு பூஜை செய்பவர், அகத்தியர் சன்னதியில் ஒருவர், பின்னர் நாங்களும். அகத்தியருக்கு பூஜை செய்து, நிவேதிக்க சிறிது இனிப்பு மிட்டாய்களை வாங்கி சென்றிருந்தோம். மிக சிறப்பாக பூசை செய்து, குருவின் ஆசீர்வாதத்துடன் பிரசாதத்தை தந்தார். அவருக்கு, தக்ஷிணையுடன் ஒரு சில இனிப்பை கொடுத்தபின், மிகுந்த அமைதியுடன், கோவிலில் ஒரு தனிமையான இடத்தில் சென்று அமர்ந்தோம். எதுவும் பேச தோன்றவில்லை. இருப்பினும்,

"குருநாதர் அகத்தியப்பெருமான் வந்திருக்க வேண்டும். நம்மால் தான் அவர் அருகாமையை உணர முடியவில்லையோ" என்று எண்ணம் ஓடியது. இதை கூறிய பொழுது, "அவரிடம் நம் பிரார்த்தனை போய் சேர்ந்ததா என்பதே முக்கியம்!" என்றாள் மனைவி.

சற்று நேரத்தில், காற்றிலிருந்து இறங்கி வந்தது போல், ஒரு பைரவர் வாயில் எதோ சுவைத்தபடி ஓடி வந்து, எங்கள் முன் நின்றது. அடியேன் அதை கூர்ந்து கவனிக்க, அதன் வாயில், சுவைத்து தின்ற இனிப்பு மிட்டாயின் மிச்சம் இருந்தது. ஹ்ம்ம்! பூஜை செய்தவருக்கு கொடுத்தோம், அவர் இந்த பைரவருக்கு கொடுத்திருப்பார் போல, என்று நினைத்தேன்.

அது என்னதான் செய்கிறது என பார்ப்போமே என்று அமைதியாக அமர்ந்திருந்தோம். நிதானமாக சுவைத்து தின்று தீர்த்துவிட்டு,"இன்னும் கொஞ்சம் கிடைக்குமா?" என்ற பார்வையுடன் என்னை பார்த்தது. என்னிடம் இரண்டு இனிப்புகள் மிச்சமிருந்தது. இரண்டையும் கொடுத்து விடுவோம் என்ற நினைப்பில் அவற்றை கொடுக்க, எழுந்து நின்று, வாயில் அவற்றை கவ்வி வாங்கிக்கொண்டு, ஒரு மனிதன் தரையில் அமர்ந்து உண்ணுவது போல், அமர்ந்து சுவைக்கத் தொடங்கியது. சற்று நேரம் அதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் "இதன் கர்மா என்னவோ! பைரவராக பிறந்து, இன்று இங்கு, நாளை எங்கோ!" என்றெல்லாம் எண்ணம் ஓடத்தொடங்கியது.

சற்று நேரத்துக்குப்பின், குருவை வணங்கி, இறைவனை தொழுது, விடை பெற்றோம். மனதுள், குருநாதர் வந்திருப்பார் இல்லயா? என்கிற எண்ணம் மறுபடியும் ஏறி அமர்ந்தது. திருப்தியாக ஊர் வந்து சேர்ந்த பொழுது, ஓர் அசரீரிபோல், திரும்பி, திரும்பி மனதுள் வந்து கொண்டே இருந்தது.

"முன்னரே கூறிய நாடி வாக்கை மறுபடியும் வாசித்துப் பார்!" என்று. பல தடவை நாடியில் வந்த வாக்குகளை ஒரு புத்தகத்தில் பதித்து வைத்திருந்தேன். அதை தேடினேன், கிடைக்கவில்லை.

மறுநாள், மிகுந்த தேடல்களுக்குப்பின் அது கிடைக்க, சந்தோஷத்துடன் பிரித்துப் பார்த்தால், அந்த பக்கத்தில் எழுதியிருந்தது,

"அடிக்கடி, மிருகமாகவும், பறவையாகவும் யாம் உன் முன் வருவோம்! முடிந்தால் உணர்ந்துகொள்!" என்றிருந்தார்.

அன்றைய தினம், பைரவராக நாங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து, "இன்னும் கிடைக்குமா?" என்று கண்களால் பேசி, பார்த்து, அருள் புரிந்து சென்றது, குருநாதர்தான் என்பதில் பின் எந்த சந்தேகமும் இல்லை.

அருள் புரிய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், குருநாதர் எந்த ரூபத்திலும், எவ்விடத்திலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம். நாம்தான் அவர் கண்களை உற்றுப் பார்த்து, உணர்ந்து, எளிமையாக, கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது, அன்று ஒரு பாடமாக அமைந்தது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 26 January 2023

சித்தன் அருள் - 1276 - அன்புடன் அகத்தியர் - பாலக்கபரம்பு முருகர் கோவில்!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

நம் குருநாதரின் அகத்தியரின் சாம்ராஜ்யம் என தொன்மையான பெயர் பெற்ற திருவனந்தபுரம் பாலராமபுரத்திலிருந்து நாகர்கோயில் செல்லும் வழியில் பாலக்கபரம்பு எனும் சிறிய கிராமம் உள்ளது.

குருநாதர் அகத்தியர் பெருமானின் வழியே!! என் வழி !!! என்று குருநாதரின் வழிப்பாதையை அடியொற்றி வாழ்ந்து வரும் ஒரு அகத்தியர் அடியவர். அவர் குருநாதர் அகத்தியரையும் முருகப்பெருமானையும் இடைவிடாது தொழுது வரும் பக்தர். ஒரு நாள் இந்த அடியவருக்கு பாலக்கபரம்பு செல்ல சூட்சுமமாய் முருகன் உத்தரவிட.... அந்த அடியவரும் முருகன் உத்தரவை அடிபணிந்து அந்த கிராமத்தைப் பற்றி விசாரித்து விட்டு அங்கு சென்றார்.

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமம் சுற்றிலும் வாழை தோட்டமும் வயல்வெளிகளும் நிறைந்த ஒரு அழகிய கிராமம்.

அந்த ஊருக்கு சென்று முருகன் சொன்ன உத்தரவை மேற்கொண்டு அக்கம் பக்கத்தில் விசாரிக்க அழகிய தாமரை குளத்துடன் கூடிய குளத்தின் அருகே ஒரு சிறிய முருகன் ஆலயம். அங்கிருந்தது.

அந்த முருகன் ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. சிறிது பொருளாதாரம் குறைந்த நிலைமை காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்த அடியவர் அந்த ஆலயத்திற்கு சென்று பாலாலயம் எழுப்பப்பட்டு இருக்கும் நிலையில் இருந்த முருகனையும் விநாயகர் ஐயப்பன் தெய்வங்களையும் தொழுது ஆலய நிர்வாகிகளிடம் பேசிய பொழுது முருகன் சூட்சுமமாக உத்தரவிட்டு அனுப்பிய காரணம் என்னவென்று அந்த அடியவருக்கு புரிந்தது.

அடியவருக்கு ஆலய நிர்வாகிகள் தற்போதைய நிலைமைகளை எடுத்துக் கூறிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் திகைத்து நிற்கின்றோம் என்று கூற!!!

அடியவரும் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் முருகன் தன்னுடைய விளையாட்டை துவக்கி விட்டான். அவன் காரணம் இல்லாமல் இங்கே வரவழைக்கவில்லை, என்னுடைய நண்பர் அகத்தியர் ஜீவநாடி வாசிக்கின்றார் அவரிடம் நான் பேசுகின்றேன் குருநாதர் அகத்தியர் ஜீவநாடியில் இதனைப் பற்றி பேசி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை பற்றி கேட்போம் என்று ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு... திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொண்டு குருநாதரிடம் உத்தரவு கேட்க!!!!!

குருநாதர் அகத்திய பெருமான்.... அத்தலம் மிகவும் புண்ணிய ஸ்தலம். உண்மையான பக்திக்கு மனமிரங்கி அனைத்து தெய்வங்களும் காட்சியளித்த இடம் அது.

ஆணவமும் பேராசையும் கொண்ட போலி பக்தியை கொண்ட மனிதர்கள் முன்பு உண்மையான பக்தியை காண்பித்த பக்தருக்கு அவருடைய பக்தியை உணர்த்த நீதியையும் நேர்மையையும் நியாயத்தையும் பறைசாற்ற  பிள்ளையோனும்  முருகனும் பார்வதியும்   ஈசனும் ஐயப்பனும் காட்சியளித்த ஸ்தலம்... அங்கு சென்று சுவடி வாசிக்க உத்தரவிட்டார் அகத்தியப் பெருமான்!!!

அடியவரும் மிகவும் மகிழ்ந்து போனார் இவ்வளவு சீக்கிரத்தில் குருநாதர் உத்தரவு கொடுத்து நேரடியாகவே வருகின்றார் என்று. திரு ஜானகிராமன் அய்யாவும் வந்து சேர அடியவரும் ஜானகிராமன் ஐயாவும் அந்த கிராமத்திற்கு சென்றனர்.

ஆலய நிர்வாகிகள் தக்க மரியாதை செய்து ஆலயத்திற்கு அழைத்துச் சென்று ஆலயத்தின் நிலைமைகளைப் பற்றி விளக்கினர். அந்த கிராமவாசிகளுக்கும் ஆலய நிர்வாகிகளுக்கும் அகத்தியர் ஜீவநாடி என்பதனை பற்றி எதுவுமே தெரியாது. அந்த அகத்திய அடியவர் குருநாதர் அகத்திய பெருமானை பற்றியும் ஜீவநாடி என்பது என்ன? என்பதை பற்றியும் தெளிவாக எடுத்துக் கூற அவர்களும் கேட்டுக் கொண்டனர்.

முருகனையும் குருநாதரையும் வணங்கி திரு ஜானகிராமன் ஐயா ஜீவநாடி சுவடியை வாசிக்கத் தொடங்கினார்!!!

ஆதி அந்தம் இல்லாதவனை பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எதை எதை என்று அறியாத மனிதர்கள் அப்பனே எப்படி எல்லாம் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக்கூட யான் அறிவேன்!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இத்தலம் ஒரு பெண்ணாலே வந்தது என்பேன் அப்பனே!!!!

இவைதன் எவையென்று உணராமலே இன்னும் இன்னும் காலங்கள் கடந்து கொண்டே வருகின்றது!!! ஆனாலும் அப்பனே இப் பெண்மணி எதை என்று அறிய பின் """ சிந்தாயினி !!! எனும் நாமத்திலே அழைக்கப்பட்டவள்.

ஆனாலும் இவள்தன் பின் முருகன் மீது அளவு கடந்த பக்தி கொண்டவள். ஆனாலும் இவள்தன் பழனி மலையில் இருந்தவள் தான்!! ஆனாலும் எதை என்று அறிய அறிய நலமாகவே!! நலமாகவே!! ஏற்றங்கள் பெற்று முருகா!! முருகா!! என்றெல்லாம் பாடி! பாடி! துதித்து பழனி தன்னை வலம் வந்தவள்... 

இதனால் அப்பனே பின் முருகனும் சோதிக்க எண்ணினான். பின் இப்பெண்மணி சிறு வயதிலிருந்து இப்படித்தான் எதையென்று அறியாத அளவிற்கும் கூட...நம்தன் மீது பாசங்கள்!! பாசங்கள்!! மிகுந்த வண்ணம் !!

ஆனாலும் பின் காப்போம் எதை என்று அறிந்து அறிந்து பார்ப்போம் சில சோதனைகளையும் கூட கொடுத்து பின்பு நம்தனையும் அழைப்பாளா?? என்று கூட.....

ஆனாலும் பல சோதனைகள்!! அப்பொழுது கூட விடவில்லை முருகனை!!!

முருகா!! முருகா!!! முருகா!! முருகா!!! வாயில் வருவதெல்லாம் இவ்வளவுதான் வார்த்தை!!

மற்றவை எல்லாம் பின் எவை என்று அறியாமலே ஆனாலும் இப்படி எதை என்று வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது பின்.... எதை என்று கூட பின் இவள்தனுக்கும் இளம் வயது ஆக ஆக இவள்தனுக்கும் எதை என்று அறியாமலே ஆனாலும் நிச்சயம் உணர்ந்து உணர்ந்து முருகன் ஆனாலும் நம் மீது பாசம் கொண்டிருக்கின்றாள் !!!ஆனாலும் ஏதாவது துணை வேண்டும்!!

பின்பு எதை என்று அறிந்து அறிந்து ஓர் எதை என்று அறியாமலே திடீரென்று பின் ஆனாலும் ஒருவன் எதை என்று அறிந்து அறிந்து முருகா!!! எந்தனுக்கு எப்பிறப்பு ஆயினும் உந்தனுக்கு உதவிகள் செய்யவே காத்துக் கொண்டிருக்கின்றேன் நலமாகவே பின் எப்படி என்று அறிந்து அறிந்து நிச்சயம் பின் எதை என்று அறிந்து எப்பொழுது பிறவிகள் ஆயினும்  எந்தனுக்கு கொடு!!! எதை என்று அறிந்து அறிந்து என்று கூட ஒரு மாமனிதன்.

ஆனாலும் இப்பொழுது கூட அவந்தன் இருக்கின்றான்... நிச்சயம் முருகன் மீது பற்று கொண்டால் உடனடியாக அவந்தனையும் அனுப்புவான்.

அதைப்போலவே நிச்சயம் உந்தனுக்கு வேலைகள் வந்து விட்டது என்று நிச்சயம் பின் முருகனும் அப் பெரியோனை எதை என்று அறிந்து அறிந்து பெரியவன் மூலம் எதை என்று உணர்ந்து உணர்ந்து முதியவன் போல் செல் என்று கூறிவிட்டான்.

பின் எதை என்று அறிந்து அறிந்து  அவ் அம்மைக்கு எதை என்று அறியாமலே அருகாமையில் வந்து அம்மையே!!! எதை என்று அறிய!! அறிய!! உன்னையும் யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!! பல நாட்கள் கடந்து !! கடந்து!! ஆனாலும் இப்படியே வலம் வந்து கொண்டு எதை என்று அறிந்து ஆனாலும் அப் பெண்மணிக்கு முருகன் தான் அனுப்பி வைத்தான் நம்தனுக்கு துணைகள் இல்லை!!

பின் சொல்லிக்கொள்ள யாரும் இல்லை!! சொந்த பந்தங்களும் இல்லை ஆனாலும் நிச்சயம் உணர்ந்துவிட்டாள் அதனால் பின் அப்பெண்மணி!!!   

உன்னை தந்தையாக ஏற்றுக்கொண்டு தந்தை என்று அழைக்கலாமா என்று!!!!

ஆனாலும் நிச்சயம் அப்பெரியவன் தாராளமாக எந்தனுக்குமே யாரும் இல்லை ஆனாலும் உன்னை யான் மகளாக ஏற்றுக் கொண்டேன்!!! அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் நிச்சயமாய் பின் ஏனம்மா? இப்படி வலம் வந்து பின் முருகன் மீது... யானும் உன்னை பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் என்று கூற ஆனாலும் மறைமுகமாக இவளுக்கு தெரியாமலே சொன்னான் அப்பெரியவன். 

ஆனாலும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து எவற்றில் இருந்து வந்தவை என்பதை தெரியாமல் ஆனாலும் நிச்சயம் பின் நம்தனையே அம்மா  எதைமென்று உணர்ந்து உணர்ந்து உந்தனுக்கு என்னதான் தேவை?? என்று கூற!!...

நிச்சயம் இவ்வுலகத்தில் எந்தனுக்கு எதுவும் தேவையில்லை!!! ஆனாலும் """"

முருகன் மட்டுமே போதும்!!! என்ற நிலைமைக்கு வந்து விட்டாள். 

ஆனாலும் எதையென்று அறிய அறிய முருகன் வரட்டும் !! ஓர் முறை!!! ஓர் முறை!!! அவந்தனை கண்களால் மட்டுமே பார்த்து யான் எதை என்று இப்பிறவியை பின் எதை என்று கூற பயனாக முடித்து கொள்கின்றேன் என்று!!!

நிச்சயம் அம்மையே!!! உன் கூப்பிட்ட குரலுக்கு நிச்சயம் முருகன் வருவான் என்று கூற!!!

இதனால் இன்னும் எதை என்று அறிந்து அறிந்து அம்மையே!!! யானும் உந்தனுக்கு உதவியாளாக இருப்பேன். நீ என்ன வேண்டுமானாலும் சொல்!!! அதையெல்லாம் யான் செய்ய தயாராகிக் கொண்டே இருக்கின்றேன் எப்போதாகினும் நிச்சயம் என்று கூட!!!

பின் அப்பெரியவனும் எதையென்று கூட அறிய அறிய ஆனாலும் அப்பெரியவன் முருகனால் அனுப்பப்பட்டவனே!!!!

இதையென்றும் அறிந்து அறிந்து இன்னும் ஞானங்கள் தோன்ற தோன்ற எதை என்று அறிந்து அறிந்து வலங்கள் வந்தனர்.

ஆனாலும் பின் இப் பெரியவனோ!!!  பின் அம்மையே!!! நிச்சயம் இங்கேயே பல ஆண்டுகள் தங்கி விட்டாய் !!!இன்னும் எதை என்று அறிய அறிய பின் எவை என்று உணர்ந்து உணர்ந்து செல்வோம்... முருகன் எங்கெங்கு? இருக்கின்றானோ!! அங்கெல்லாம் சென்று பின்  எதையென்று பாடி!! பாடி !!துதித்து நிச்சயம் எங்கேயாவது ஒரு தடவை எவை என்று அறிந்து அறிந்து சென்று கொண்டே இருந்தால் நிச்சயம் முருகன் நம் தனக்கு காட்சியும் கொடுப்பான் என்று பெரியவன் உத்தரவு.

பின் அப்படியே தந்தையே!!! பின் செல்லலாம் என்று கூற !!

இதனால் பழனி தன்னில் முருகா இத்தனை நாட்கள் இங்கே பத்திரமாக என்னை பார்த்துக் கொண்டாய் நீ!!! மீண்டும் எதை என்று உணர்ந்து உணர்ந்து அங்கும் இங்கும் செல்கின்றேன் என்று கூட !!!

அப்படியே முருகன் எதை எதை என்று அறிய அறிய செந்தூருக்கும் (திருச்செந்தூர்) அதன் வழியாக எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்படியே இப்பொழுது கூட பல தலங்கள் முருகனுடைய தலங்கள் அப்படியே சில ஆண்டுகள் கடந்து கடந்து பாடி!! பாடி !! எதை என்று அறிய அறிய கடைசியில் எவை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் எவை என்றும் அறிய எரி( எரித்தாவூர்) அப்பனே அங்கும் சில ஆண்டுகள் தங்கி தங்கி வழிபட்டு வழிபட்டு ஆனாலும் அனைவரும் உணர்ந்ததே!!! 

ஆனாலும் அறிந்து அறிந்து ஆனாலும் நிச்சயமாய் எதை என்று அறிந்து உணர்ந்து அம்மையே இப்படியே சென்றிருந்தால் என்ன லாபம்??? இப்படியே இதையென்று அறிய அறிய பல ஆலயங்களும் கூட இப்படியே திரிந்து விட்டோம்.

ஆனால் முருகன் காட்சிகள் தரவில்லையே?!! ஆனாலும் நிச்சயம் முருகன் எதை என்று அறிந்து அறிந்து உண்மையான பக்தியும் நீ கொண்டிருக்கின்றாய் என்று உசுப்பேற்றினான் அப்பெரியவன்.

ஆனாலும் எதையென்று அறிந்து அறிந்து நிச்சயமாய்... தந்தையே!!! யான் எதை என்று... பிறவியிலிருந்தே என் தாய் தந்தை எதையென்று அறியாமலே பின் பழனி தன்னிலே விட்டுவிட்டு சென்று விட்டார்கள்!!

ஆனால் எதை என்று யானே எப்படியாவது எதை என்று அறிந்து அறிந்து முருகன் கூட ஏதோ ஒரு ரூபத்தில் என்னை வளர்த்து வந்தான். ஆனாலும் எதை என்று அறியாமலே உன்னையும் எந்தனுக்கு முருகனும் எதை என்று அறிந்து அறிந்து கொடுத்ததே!!!!

இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய நாமும் பல ஆலயங்கள் சென்று விட்டோம் ஒவ்வொரு திருத்தலத்தில் கூட பின் எதை என்று எவற்றில் இருந்து உணர்ந்து உணர்ந்து பாடிட்டும் முருகன் வரவில்லையே என்ற ஏக்கம்!!!

ஆனாலும் அழுது புலம்பி எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் அம்மையே!! எதை என்று அறியாமலே நிச்சயம் ஆனாலும் இங்கிருந்து சில சில வழிகளில் கூட பின் அதனையும் கூட எரிதாவூர் எவை என்றும் உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அதன் மலையும் கூட சமமான இங்கே ஓர் மலை இருக்கின்றது என்பேன் பழனி தன்னில் கூட... அதனால் எதை என்று அறிந்து அறிந்து அம்மையே இங்கும் கூட பல மனிதர்கள் இருக்கின்றார்கள் ஆனாலும் நம் தனை யாருமே கண்டு கொள்ளவில்லை முருகனே!! முருகனே!! என்றெல்லாம் பாடிக்கொண்டு ஆனால் முருகன் அனைவருக்கும் எதை எதையோ செய்கின்றான்!!! நம்தனுக்கு எதையுமே செய்யவில்லையே!!!! எதை என்று அறிந்து அறிந்து சரி!!! எவற்றில் இருந்து கூட அப் பெரியவன் எதையென்று அறிந்து அறிந்து சரி அம்மையே!! எதை என்று கூற இங்கிருந்து எறிவோம் ஒரு கல்லை!!! எதை என்று அறிய அறிய!!!

அங்கு எவை என்று உணராமலே பின் எங்கு விழுகின்றதோ அங்கு நிச்சயமாய் எதை என்று அறிய அறிய ஆனாலும் அடையாளம் வைத்துக் கொள்வோம் எதை என்று அறிந்து அறிந்து தேடுவோம் எதனை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் நிச்சயம் அங்கிருந்து அதாவது இங்கிருந்து சில சில துளிகளே கடக்க முயலும் அவ்மலையும் கூட!!

அங்கிருந்து ஒரு கல்லை வீசி ஆனாலும் இங்கே விழுந்தது!!!! (பாலக்காபறம்பு) 

ஆனாலும் அவர்களும் நிச்சயம் வரட்டும் முருகன் எதை என்று அறிய அறிய நம்தனும் பல ஆலயங்களுக்கு சென்று விட்டோம் ஆனாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து எங்கேயும் முருகன் வரவில்லை இதனால் நிச்சயம் முருகனுக்கு பின் அன்பு பாசம் நம்மிடத்தில் இருந்தால் வரட்டும் இல்லையென்றால் அங்கேயே இறந்து விடுவோம்!!

எதையென்று அறிந்து அறிந்து என்று கூட நிச்சயம் எவை என்று அறிய இங்கே விழுந்தது கல்!!

ஆனாலும் தேடி தேடி கடைசியில் எதை என்று அறிய கல் இங்கேதான் இருந்தது!! இதனால் இங்கேயே ஒரு குடிசை போட்டனர் எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து அப்பனே குடிசை தன்னில் இங்கே வாழ்க்கை நடத்தினார்கள்!!! ஆனாலும் பின்  இதையென்று அறிய அறிய அப் பெண்மணிக்கும் எவை என்று உணர்ந்து உணர்ந்து முருகன் மீது பற்று!!!

ஆனாலும் இவ்வளவு ஸ்தலங்களுக்கு சென்றோமே!! எவை என்று உணர்ந்து ஆனாலும் ஒரு தலத்தில் கூட முருகன் எவை என்று கண்களுக்கு காட்சிகள் தரவில்லையே என்று அழுது கொண்டு!!! பின் இரவும் பகலும் ஆகவே எதை என்று கூட தூங்காமலே!!!!

ஆனாலும் இப் பெரியவனும் எதை என்று அறியாமலே எவற்றில் இருந்து கூட இப்படி எல்லாம் இருக்காது நிச்சயம் முருகன் உண்மையான பக்தர்களுக்கு நிச்சயம் காட்சியும் தந்தருள்வான் என்று கூற!!!

அப்பெண்மணியும் எங்கு தருகின்றான்? எதை என்று அறிய அறிய பல ஆலயங்களுக்கு சென்று விட்டோம்!! சிறு வயதில் இருந்தே முருகனை நினைத்து விட்டோம்... இதனால் எப்படி எதை என்று அறிந்து அறிந்து என்று கூட... ஆனாலும் இது எதையென்று அறிய அறிய பின் இப்பொழுது சொன்னேனே ( எரித்தாவூர்) அத்தலத்தில் இருக்கும் முருகனுக்கும் தெரிந்து விட்டது!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அங்கே தங்க நகைகளும் கூட பல வகைகளும் கூட முத்துக்களும் வைரங்களும் ஆனாலும் நிச்சயமாய் எதை என்றும் ஆனாலும் தனியாகவே ஆனாலும் உணர்ந்து பின் முருகன் எதையென்று அறிய அறிய பின் ஓர் வேடவன் போல் பின் எதை என்றும் உணர்ந்த உணர்ந்து இங்கே வந்தான்!!!

ஆனால் அவன் தான் முருகன் என்று கூட பின் தெரியாகூடாது... என்பதைக் கூட ஆனாலும் அப்பெரியவனுக்கு நன்றாகவே தெரியும் எதை என்று கூட அனைத்தும் தெரியும் ஆனாலும் அமைதி காத்துக் கொண்டிருக்கின்றான்!! இதனால் பின் எவை எதனை என்று கூட.... தம்தனுக்கு(முருகன்) சாற்றியுள்ள அனைத்தும் கூட. அது தங்க ஆபரணங்களும் எதை என்று அறிய அறிய  அப்படியே எதை என்று உணர்ந்து உணர்ந்து இங்கே வந்துவிட்டான் வேடனவன்!!!

ஆனாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப் பெண்மணியும் பார்க்கவில்லை முருகனைக் கூட!!!

அம்மையே !!அப்பனே!! நன்றாக இருக்கின்றீர்களா? என்று!!

ஆனாலும் அவ் அம்மையும் எங்கு நன்றாக இருப்பது?? நீ யார் என்று கூட தெரியவில்லை பின் எதனை என்று அறிய அறிய பல வருடங்கள் முருகன் மீது பற்று கொண்டேன்!!! ஆனாலும் முருகன் வரவில்லை பின் நன்றாக இருக்கின்றாயா? என்று கேட்கவில்லை ஆனாலும் நீ யார்? எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் என் சகோதரனைப் போல கேட்கின்றாய் எதை என்றும் அறியாமலே அதனால் நிச்சயம் எங்கெங்கு எதை என்று கூட ஆனாலும் பின் நீ யார்?? என்று கேட்க!!!!

யானும் ஒரு ஏழை தானம்மா!!! 

எதை என்று அறிய அறிய அப்பெண்மணியும் நீ ஏழையாக இருந்தாலும் இப்படி தங்க நகைகள் எதை என்று ஆபரணங்கள் உன் கழுத்தில் எதை என்று உணராமலே எதை என்று அறிந்து அறிந்து இப்படி ஜொலிக்கின்றாயே நீ ஏழையா???

எதை என்றும் கூட அதனால் அம்மையே இவையெல்லாம் எவை என்று அறிந்து அறிந்து எந்தனுக்கு பின் வேண்டுவது இல்லை என்று கூறஆனால் அப் பெண்மணியும் எந்தனுக்கும் ஏதும் தேவையில்லை அப்படியாவது எதையென்று அறிந்து அறிந்து யான் பின் முருகன் மீது பக்தி கொண்டு எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அதனால் சரி ஏதும் தேவையில்லை என்றாயே அவையெல்லாம் என்னிடத்தில் கொடுத்து விடுவாயா? என்ன? என்று கூற......

இந்தா!!..... அனைத்தும் உந்தனுக்கே எடுத்துக்கொள் என்று உடனடியாக கொடுத்து விட்டான் எதை என்று அறிய!!!

ஆனாலும் ஆனால் அப்பெண்மணிக்கு அதன் மீது பின் ஆசைகள் இல்லை ஆனாலும் முருகனோ இந்தா அம்மையே நீ கேட்டதை எதை என்று அறிந்து அறிந்து கொடுத்து விட்டான்.

ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து மீண்டும் அதிகாலையில் அத்தலத்தில் சென்றான் எதை என்று உணர்ந்திருக்கும் பொழுது அப்படியே நின்று விட்டான்!!! (எரித்தாவூர் ஆலயத்திற்கு முருகன் திரும்பிவந்து விட்டார்) 

ஆனாலும் அதிகாலையில்( எரித்தாவூர் ஆலயத்திற்கு வணங்க வந்த ஒருவர்)  சேவிக்க வந்தவன் எதை என்று உணர்ந்து எதை என்று தெரியாமலே அங்கு தங்க நகைகளும் இல்லை வைரமும் இல்லை பின் அனைவருக்கும் தப்பட்டையோடு எதை என்று அறிந்து அறிந்து தாளம் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இங்கு முருகன் இருக்கும் எதை என்று கூட தங்க ஆபரணங்கள் எவை என்று எவற்றில் இருந்து கூட தெரியாமல் போய்விட்டது திருடி விட்டார்கள் என்று கூற!!!

அதனால் அனைவருக்கும் உடனே இழுத்து மூடுங்கள் திருத்தலத்தை கூட!!! பின் எவை என்று கூட தேடினார்கள் பல வழிகளிலும் கூட பின் திருடன் எங்கிருந்தாவது எதை என்று அறிய அறிய இங்கேதான் இருப்பான் பிடியுங்கள் என்று கூட... மக்களை ஒன்றாக கூட்டி எதையென்றும் அறியாத அளவிற்கு கூட பின் அனைவரையும் கூட தேட வைத்தார்கள்!!!

ஆனால் எவை என்று கூற கடைசியில் இங்கு( பாலக்காபறம்பு) பின் வருகின்ற பொழுது எவை என்று கூற ஒருவன் கண்டு விட்டான்!! இவையெல்லாம் எவை என்று அறிந்து அறிந்து உள்ளே நுழைந்து குடிசையில் உங்களுக்கு எப்படி கிடைத்தது???

எதை என்று அறிந்து அறிந்து இது முருகனுக்கு சொந்தம்!!! ஆனால் உங்களுக்கு எதை என்று அறிந்து அறிந்து நீங்கள் தான் திருடர்கள் என்று பட்டம் சூட்டினான்!!!

ஆனாலும் எதையென்றும் உரைக்கையில் இக் குடிசையிலே எதை என்று அறிந்து அறிந்து பின் நல் எவை என்று கூற பின் எதனை என்றும் கூற வாருங்கள்!! வாருங்கள்!! பின்  எதையென்று நீங்கள் தான் திருடர்கள்  என்று கூற அழைத்துச் செல்ல காவலாளிகள்!!!

யாங்கள் வரமாட்டோம்!! எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனால் நீங்கள் வரத்தான் வேண்டும் முருகன் ஆலயத்திற்கு என்று கூற.

நிச்சயம் யாங்கள் வரமாட்டோம் முருகனுக்கு எதை என்று எங்கள் மீது அன்பு பாசம் இருந்தால் இங்கே வரட்டும் யாங்கள் திருடர்களும் இல்லை... எங்களுக்கு திருடும் பழக்கமும் இல்லை எதை என்று அறிய அறிய ஒரு வேடவன் வந்தான் அவன் தான் எங்களுக்கு கொடுத்தான் எதை என்று அறிய அறிய!!

ஆனாலும் இதன் மீதும் கூட எங்களுக்கு விருப்பமில்லை எதை என்று அறிந்து அறிந்து அவந்தனே... இந்தா!! வைத்துக்கொள் என்று கூறி விட்டான்!!!

ஆனாலும் அவ் வேடன் யார்?? நிச்சயம் எதை என்று அறிய அறிய என்பதை கேட்பதற்கும் எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அவ் வேடனை காட்டு என்று கூற!!....

ஆனால் அவ் வேடன் முருகன்தான் எதை என்று கூற மாறுவேடத்தில் வந்தது என்பதை கூட பின் ஆனால் அப்பெரியவன் அனைத்தும் அறிந்து அறிந்து புரிந்து இவையெல்லாம் முருகனின் லீலைகளே என்று எண்ணி இருந்தான் ஆனால் நிச்சயம் எதை என்றும் தெரியாத அளவிற்கும் வழிகள் வழிகளாக நிச்சயம் யான் இங்கு வரமாட்டேன் எதையென்று அறிய நிச்சயம் பின்... நீங்கள் திருடர்கள் இல்லையா??? எதையென்றும் ஆனாலும் நீங்கள் இங்கேயே இருங்கள் யான் அழைத்து வருகின்றேன் அனைவரையும் என்று பின் அனைவரும் இங்கு வந்து விட்டார்கள்.

உணர்ந்து உணர்ந்து எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட இங்கே எவை என்றும் இவள் தான் திருடன் இவன்தான் திருடன் எதையென்று உணர்ந்து உணர்ந்து இங்கேதான் தங்க நகைகள் என்று கூற.

ஆனாலும் ஒரு எதை என்று கூற பின் முருகனுக்கு சேவை செய்யும் ஒருவன் வந்து  சரியாக இருக்கின்றதா நகைகள் எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூற ஆனாலும் நிச்சயம் எதை என்று எவற்றில் இருந்து கூட சரியாக இருக்கின்றது ஆனால் இவையெல்லாம் முருகனுடைய ஆபரணங்கள் தான் அதனால் எவை என்றும் எதை என்றும் இவர்கள்தான் திருடர்கள் என்று நிச்சயமாய் பின் முத்திரை!!

ஆனாலும் அப்பெண்மணி இல்லை இல்லை நிச்சயம் யான் திருடன் இல்லை... இல்லை எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் பின் ஒரு எதை என்றும் கூற ஆனாலும் நிச்சயம் நீங்கள் என்னதான் எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் ஆனாலும் கூட்டமாகவே முருகன் மறைமுகமாக வந்திருந்தான்.( கூடியிருந்த கூட்டத்தில் முருகனும் மறைவாக நின்றிருந்தார்)
என்னதான் நடக்கின்றது என்பதை பார்ப்பதற்கே.

நிச்சயம் எதை எதை என்று அறிந்து அறிந்து பல வகையிலும் கூட அப்பெண்மணியை துன்புறுத்தினார்கள் மனிதர்கள்!!

ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய அறிய!!!

முருகா!!! என் குரல் உந்தனுக்கு கேட்கவில்லையா??? யான் என்னதான் செய்தேன்???

எவை என்று அறிந்து அறிந்து உந்தனையே நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஒரு பட்டமா???

எதையென்று அறிந்து அறிந்து நல்லோர்கள் இவ்வுலகத்தில் வாழக்கூடாதா????? நிச்சயம் பின் பொய்த்துப் போகுமா? பக்தி !!!
என்றெல்லாம் சாடினாள் முருகனை!!!

ஆனால் முருகன் எதிரிலே நிற்கின்றான் என்பதை கூட அறியவில்லை !!

ஆனாலும் இவையெல்லாம் சோதனைகள் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து பாவத்திற்கான வழிகளா?? இல்லை புண்ணியத்திற்கான வழிகளா?? ஆனாலும் நிச்சயம் எடுத்துக்காட்டாகவே எதை என்று கூற பல மக்களுக்கு உதவிகள் செய்யவே இதுவும் ஒரு நாடகம். பின் இறைவனின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனை இன்னும் சொல்கின்றேன் எதை என்றும் உணர்ந்த உணர்ந்து திருத்தலங்களுக்கெல்லாம் சென்று சென்று!!! நலன்கள் ஆகவே!!!

இதையென்றும் உணராத அளவிற்கும் கூட முருகா!! எப்படி எதை எதை என்று அறிய உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் எந்தனுக்கு இப்படி ஒரு சோதனையா? ஆனாலும் இப்பெரியவனும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து ஒன்றும் தெரியாமலே இருக்கின்றான் என்னதான் செய்வது இப்பெண்மணி!! இதையென்று அறிந்து அறிந்து முருகா!! முருகா!! உந்தனுக்கு மனசாட்சியே இல்லையா???

எதை என்று அறிய அறிய நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் நிச்சயம் வரச்சொல் முருகன் எங்கு தான்? இருக்கின்றான் என்று பார்ப்போம் என்று கூச்சலிட்டார்கள் அனைவரும் கூட....

எதை என்று கூற பின் எவை என்று கூற அவர்களுக்கும்  எதையென்று நிச்சயம் பின் நீயும் முருகா!! முருகா!!  எதை என்று யார் என்றுமே தெரியவில்லை அதில் ஒருவன் எதை என்று அறிந்து அறிந்து அனாதையாக நிற்கின்றாயா? யார் உந்தனுக்கு தங்க இடம் கொடுத்தது என்றெல்லாம் சாடினார்கள்!!

ஆனாலும் மௌனம் காத்தாள்!!! என்னதான் சொல்வது?? எதையென்று அறியாத அளவிற்கும் கூட சொந்த பந்தங்களும் யாரும் இல்லை இவ் முதியவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணி நிச்சயமாய் எதை என்று அறிய அறிய முருகா எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் பின் அனைவரும் முடிவெடுத்தார்கள்.

இப்பெண்மணியை இங்கேயே கொன்று விடலாம் என்று கூட!!

ஆனாலும் முருகா எதை என்று அறிந்து அறிந்து ஆனால் இவள் தான் திருடன் எதை என்று பட்டம் எதையென்று கூற அதனால் நிச்சயமாய் எவை என்று கூற ஆடை ஆபரணங்களை அவிழ்த்து விட்டு இவளை ஓட ஓட விரட்ட வேண்டும் என்பது அனைவரும் எதை என்று அறிந்து அறிந்து. ஆனாலும் மனிதர்கள் இப்படியும் செய்வார்களா என்பது தான் கலங்கடித்தது!!!

ஆனாலும் முருகன் உணர்ந்து கொண்டிருக்கின்றான்!!! அனைவரின் பக்தியையும் அங்கு தான் பார்த்தான்!!!

பின் எதை என்று அறிந்து அறிந்து பின் மனிதர்கள் கூட பக்தி என்று அதாவது முருகா!! முருகா!! என்று சொல்லிட்டு இப்படி எல்லாம் எதை என்று அறிய அறிய  முருகன் கூட அமைதியாகவே இருந்தான்.

இதனால்  எதையென்று அறியாமலே முருகா இப்படி செய்கின்றார்களே??? எதை என்று அனைவரும் முடிவெடுத்து விட்டார்கள் இப்பொழுது கூட வரக்கூடாதா?? முருகா!!!

நிச்சயம் நீ வரவில்லை என்றால் எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் பின் எதை என்று அறியாமலே யான் இங்கேயே என் உயிரை மாய்த்துக் கொள்ளட்டுமா??? என் மானம் மரியாதை எதை என்று அறிய அறிய நீ தான் முருகனா????  எதையென்று அறிய அறிய நீ தான் கடவுளா?? எதை என்று அறிய அறிய அனைவருக்கும் நீ உதவுகின்றாயா? இல்லை நீ பொய்!!! நீ பொய்!!! இறைவனும் பொய்!! உன் தாய் தந்தையரும் பொய்!! அனைவரும் பொய்!! அதனால் எதை என்று அறிய அறிய உடனே பிள்ளையோன் வந்தான் இங்கு!!!!(கணபதி) எதை என்று அறிந்து அறிந்து!!!

பிள்ளையோன் வந்து எதை என்றுகூற!!! அம்மையே!!! யான் இருக்கின்றேன் உந்தனுக்கு!!!!!

ஆமாம் நீ யாரப்பா?? இவை போன்றே சொல்லிச் சொல்லி எந்தனை ஏமாற்றிவிட்டார்கள் அதனால்  எதையென்று உணர்ந்து உணர்ந்து அதனால்  எதையென்றும் தெரியாமலே... 

வேண்டாம் எந்தனுக்கு!!! சொந்த பந்தங்களும் வேண்டாம் இவ்வாறு வந்து வந்து எந்தனுக்கு உதவிகள் செய்கின்றேன் என்று பங்கமாகவே ஏற்படுத்தி செல்கின்றார்கள் அதனால் எதை என்று அறியாமலே ஆனால் பிள்ளையோன் தான் வந்திருக்கின்றான் என்று கூட.... 

ஆனால் அனைவரும் அதாவது பல்லாயிரம் பேர் பின் கூடியிருந்தனர்!! ஆனால் ஒருவனே அவன் தான் பிள்ளையோன் என்று வந்துவிட்டான். பின் அம்மையே!!! இவ்வாறு இங்கு பல மக்கள் கூடி இருக்கின்றார்கள் உந்தனுக்காக யான் உரையாடுகின்றேன் என்று பக்கத்தில் வந்து விட்டான்.

ஆனாலும் சரி என்று அறிய அறிய ஆனாலும் அனைவரையும் பார்த்தான் ஆனாலும் குள்ளமாகவே இருந்தான் எதை என்றும் அப்பிள்ளையோன்!!!

பின் அனைவரும் கூச்சலிட்டனர்... இக் குள்ளோன்(குள்ளன்) எங்கு? வந்தான் ?! இங்கு!! எதை என்று அறிய அறிய அனைவரும் முடிவெடுக்கும் பொழுது இக்குள்ளோன் மட்டும் இவள்தனக்கு எதை என்று அறிய அறிய இவள் தனக்கு பின் சாதகமாக பேசுகின்றான் என்று!!!

ஆனாலும் எதையென்று  அறிந்து அறிந்து.. அந்நேரத்தில் பின் சபரிநாதனும் ஓடோடி வந்து விட்டான்!!!( ஐயப்பன்)

அம்மையே!!! எதை என்று எவற்றிலிருந்து ஆனாலும் உந்தனுக்கும் யான் விளக்குவதற்காகவே இங்கே வந்திருக்கின்றேன் அதனால் என்னதான் செய்வது எதை என்று அறிந்து அறிந்து யானும் உந்தனுக்கு உதவிகள் செய்வேன் என்று சபரிநாதனும்!!!!

அதனுள்ளே கடைசியாக ஆனாலும் முருகனே அங்கு இருக்கின்றான் மறைமுகமாகவே எதை என்று அறிய அறிய!! இதனால் எவற்றில் இருந்தும் கூற முருகனும் வந்து விட்டான் கடைசியில்!!

அம்மையே யானும் வந்துவிட்டேன் உந்தனுக்கு என்ன தான் வேண்டும் என்று கூற!!!

ஆனாலும் அப்பெண்மணிக்கு தைரியம் ஆகிவிட்டது ஆனாலும் இவ்வளவு ஆட்கள் கூடியிருக்கும் நேரத்தில் ஆனாலும் இவ் மூன்று பேரும் வந்துவிட்டார்கள் என்று சந்தோசம்!!!

ஆனாலும் அவர்களும் அடித்து விடுவார்களே!! ஆனால் மூன்று பேர் மூலம் என்னதான்? பின் இவர்கள் செய்வார்கள் என்று கூட பின் பின் அவ் அம்மையும் பின் அன்பர்களே!!! எதை என்று அறிய அறிய இத்தனை பெரிய மனிதர்கள் இருக்கின்றார்கள் ஒருவருக்கு கூட மனம் இல்லையே!!!!

ஆனால் நீங்கள் சிறுவர்கள் ஆனால் என்னிடத்தில் வந்து உந்தனுக்கு உதவிகள் செய்கின்றோம் எவை என்று அறிந்து அறிந்து நீங்கள் இவ்வாறு செப்புவது எந்தனுக்கு மனம் மகிழ்ச்சி தான் ஆனால் இவ்வளவு நபர்கள் இருக்கின்றார்கள்!!

ஆனால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் அநியாயம் தான் ஜெயிக்கப் போகின்றது என்று தெரிந்து விட்டது!!

அதனால் எவை என்று அறிய அறிய பின் உண்ணாமலை தேவியும் வந்து விட்டாள் பார்ப்போம் என்று கூட!!!

அம்மையே!!! யார் எதை எதை என்று அறிய யானும் வந்து விட்டேன்!!! எதையென்று  அறிய! ஆனாலும் இப்பொழுதுதான் தைரியமாகிவிட்டது ஒரு பெண்மணியும் நம்தனுக்கு சாதகமாக உள்ளாரே என்று அறிய!!

ஆனாலும் எதையென்று ஒரு காலத்தில் நிச்சயம் ஓர் பெண்மணி அதாவது எதையென்று அறிய அறிய தண்டனை கொடுத்தால் ஒரு பெண்மணி வந்து பின்  எதையென்று கூற சாதகமாக பேசிவிட்டால் அத் தண்டனை அளவு சற்று குறைந்துவிடும் இங்கு இதுதான் பழக்கம்!!!( அக்காலத்தில் அங்கு சுற்றுவட்டாரத்தில் யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ஒரு பெண்மணி வந்து பேசினால் வழங்கப்படும் தண்டனை அளவு குறைக்கப்பட்டு விடும் என்ற பழக்கம் இருந்தது) எவை என்று அறிய முற்காலத்தில் இதனைப் பற்றி ஆனாலும் வர வர அதுவும் மாறிவிட்டது எதை என்று அறிய அறிய இதனால் நிச்சயம் பின் ஆனாலும் அனைவரும் இவ்வளவு எவை என்று திருடிக்கு எதை என்று அறியாமலே இவ்வளவு எதை என்று அறிய ஆனாலும் உண்மையான பக்தர்கள் எல்லாம் அப்பொழுதுதான் தெரிந்தது!!

ஆனாலும் உண்மையான முருகா பெருமானே நாராயணன் நாராயணனை அழைத்து இதற்குமுண்டா??( பத்மநாபசுவாமி ஆலயம் பாலக்கா பறம்பு) நாராயணன் இதற்கும் இதற்கும் சம்பந்தங்கள் எவை என்று அறிய சிவபெருமானும் எதை என்று அறியப்பின்... அவனே மூச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிருக்கையில் அவந்தனும் அநியாயத்திற்கு தான் துணை என்று எதை என்று உணர்ந்து உணர்ந்து இதுதானப்பா கலியுகத்திலும் கூட நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனாலும் நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அப்பெண்மணி சொன்னாள்!!!( உண்ணாமலை தேவி) 

தாயே !! எதை என்று அறிந்து உன் நிலைமைகள் எந்தனுக்கு புரிகின்றது... யானும் செல்வந்தன் வீட்டுப் பிள்ளை அதனால் தங்க ஆபரணங்கள் எல்லாம் உன்னிடத்தில் கொடுக்கின்றேன் அவர்களிடத்தில் எதை என்று அறிய வீசி  விடு என்று கூற!!! 

ஆனாலும் அனைவரும் வியந்தனர்!! எதை என்று அறிய அறிய எவற்றில் இருந்தும் புரியப் புரிய!!! ஆனாலும் தங்க நகைகள் எதை என்று ஏற்கனவே முருகனுக்கு ஆனாலும் இருந்து ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எடுத்து வருகின்றேன் என்று கூற பின் மறைமுகமாகவே ஆனால் அவள் தான் பார்வதி என்று யாருக்கும் தெரியவில்லை!! எதை என்று அறிந்து அறிந்து!!

ஆனாலும் ஆனால் பார்வதி வந்தவுடன் ஈசனாரும் வந்து விட்டான் எதை என்று அறிந்து பார்ப்போம் என்று கூட அழகாக இவர்கள் என்னதான் செய்கின்றார்கள் கடைசியில்  என்னதான் முடிவு என்பதைக் கூட சரியாகவே கவனித்து கவனித்து கொண்டிருந்தான்!! ஈசனே!!

இதனால் என்னவென்று எதனை என்று அறிந்து அறிந்து சிறிது மறைமுகமாக சென்று இன்னும் பின் எதையென்று கூற பன்மடங்கு அதைவிட பன்மடங்கு நகைகளை எடுத்து வந்தாள் எதை என்று அறிய அறிய....

அதனால் மக்களுக்கு எதை என்று அறிய அறிய இத் தங்க நகைகளை எல்லாம் கொடுக்கின்றேன் உங்களுக்கு!!!!

இப் பெண்மணியை விட்டு விடுங்கள் பின் எதை என்று அறிய அனைவரும் தங்க நகைகளுக்காகவே எதை என்று ஆசைப்பட்டு ஓடோடி வந்தனர்.

இப்பொழுது புரிகின்றதா??? பக்திகள் எங்கு? சென்று விட்டது என்பதைக் கூட....

இதனால் தான்  இக் கலியுகத்தில் தான் இக்கலியுகத்தில் இன்னும் இப்படித்தான் செல்லப் போகின்றது பக்தி என்று கூட ஆணித்தரமாகவே யான் உணர்ந்திட்டேன்!!! இனிமேலும் எதை எதை என்று அறிய அதனால் மனிதர்களை சோதிப்பான் இறைவனே!!!!

அப்பொழுதெல்லாம் நிச்சயம் நம்பிக்கை வைத்துக் கொண்டு இருந்தாலே நிச்சயம் நிச்சயம் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதை கூட சரியான விளக்கம் இது!!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய அதனால் நல் விதமாகவே அனைவரும் வந்து எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய  ஆனாலும் இதையென்று அறிய அறிய அப்பெண்மணியிடம் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் பார்வதி தேவியோ எதையென்று அறியாமலே ஆனாலும் இதற்கும் கூட அனைவருக்கும் கொடுக்கின்ற பொழுது எதையென்று உணர்ந்து உணர்ந்து அப் பெண்மணி( சிந்தாயினி அம்மா)  நகைகளை பின் எடுத்து வீசி விட்டாள்!!!

இவையெல்லாம் வேண்டாம் இம்மக்களுக்கு!!!

எது எதனால் எதை என்று அறிந்து அறிந்து உண்மையான மக்கள் இவர்கள் இல்லை!!! ஏனென்றால் உண்மையான திருடி யான் இல்லை!!! அதை பின் இவர்களுக்கு தெரியாத அளவிற்கும் கூட எதையென்று அறிய அறிய இதையும் கொடுத்து விட்டால் இன்னும் ஆணவம் ஏற்படுத்தி விடும் என்று கூட பின் முருகா!!! நிச்சயம் உன் மீது பக்தி இருந்தால் இதை வீசுகின்றேன் நீ இங்கேயே கண்ணுக்கு எதை என்று தெரியாமல் எதை என்று அறிந்து அறிந்து இது ஆகட்டும் சமாதியாக என்று கூட வீசிவிட்டாள்!!!! இங்கு!!

இதனால் எதை என்று கூட அறிய அறிய இன்னும் தங்க நகைகள் இங்கே ஒளிந்துள்ளது ஆனால் அதை தெரிவித்தாலும் மக்களுக்கு எதை என்று அறிய அறிய அதனால் பொக்கிஷமாகவே இருந்து வருகின்றது எதை என்று உணர்ந்து உணர்ந்து... அதனால் அப்பெண்மனியும் நலமாகவே எதை என்று அறிய அறிய அதனால் அப்பெண்மணிக்கு கடைசியில் நீதி கிடைத்தது நலமாகவே!!!

இதனால் எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைவரும் எதை என்றும் தெரியாமலே யான் தான் எதை என்று அறிய அறிய பின் மணிகண்டன் ஆகவும் எதை என்று அறிய அறிய பிள்ளையோனாகவும் முருகனாகவும் பார்வதி தேவி எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் ஈசனும் பின் காட்சி அளித்தனர்!!!!

அப்பொழுது எதை என்று அறிய அறிய ஆனால் பின் நிச்சயம் முருகன் சொன்னான்!!!!

அம்மையே !!! இறைவனைப் பார்ப்பது சாதாரண விஷயம் இல்லை!!! பல கஷ்டங்கள் கடந்து வந்தால் தான் யாங்களும் உதவிகள் செய்வோம் அதனால் வந்து விட்டோம் உங்களுக்கு என்ன தான் தேவை என்று கூற!!!!!

முருகா!!!!  முருகா!!! இதனை நிமித்தம் நிமித்தம் காட்டி உன்னையே யான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் அதனால் உன்னை எதை என்று அறிய அறிய என்னிடத்தில் ஒன்றுமில்லை!!!!

அதனால் உங்களுடன் என்னையும் அழைத்துச் செல்!!! ஆனால் நீ இங்கேயும் தங்கி வர வேண்டும் உண்மை எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் பொய் பொய்கள்  நிறைந்து இருக்கின்றதோ அங்கெல்லாம் நீ நிச்சயம் எதை என்று அறிய அறிய சென்று அழிக்க வேண்டும்!!!

 உண்மை நிலைகளை உணர்ந்து !!!

அதனால் இங்கே இரு!!! என்று அறிய அறிய பின் எதையென்று உணர்ந்து உணர்ந்து சிலை வடிவாக ஆகவே இங்கு முருகன் தங்கி விட்டான்!!!

ஆனாலும் விடவில்லை எதை என்று உணர்ந்து உணர்ந்து  அவ் அம்மை அனைவரும் இங்கே தான் தங்க வேண்டும் எதை என்று அறிய அறிய சத்தியம் செய்து கொள்ளுங்கள்!!!

உங்கள் மீது எதை என்று அறிய அறிய ஆணையாக கூறுகின்றேன் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கின்றேன் அதனால் எதை என்று அறிய அறிய புரியப் புரிய அதனால் நீங்கள் அனைவரும் இங்கே இருக்க வேண்டும் என்று எண்ணி!!!!!

அதனால் அப்படியே இருந்து விட்டார்கள் அவரவர் கூட ஒவ்வொரு வடிவத்திலும் கூட!!!

அதனால் எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் எவை என்று அப் பெண்மணிக்கு இப்பொழுது கூட கோபம் தீரவில்லை!!!!

அதனால் தான் எதை என்று அறிய அறிய பின் முடிக்கவும் இல்லை அவள் தனே மனிதர்களும் வந்தால் பின் மனிதர்கள் மீது கோபம் தான் கொள்கின்றாள்!!!

ஆனால் அனைவரின் ஆசைகளையும் பின் எதை என்று அறிந்து அறிந்து தீர்த்துக் கொண்டிருக்கின்றாள் அதனால் பெண்களின் எதை என்று யார் எதை கஷ்டங்கள் என்று வந்தாலும் இவள்தன் உதவிகள் செய்து விடுவாள்!!!

அதனால் அம்மையை எதை என்று உணர்ந்து உணர்ந்து பின்  கோபத்தை குறைப்பாள் நிச்சயம் மக்கள் அனைவரும் உணர்ந்ததே.என்று சொல்ல சொல்ல பின் எதை என்று அறிய அறிய இங்கு இருக்கும் எவை என்று சேவைகள் செய்பவர்களும் ஒரு 108 பெண்களுக்கு நிச்சயமாய் எதை என்று அறிய அறிய உடுக்க அதாவது எதை என்று அறிந்து அறிந்து பின் உணர்ந்து உணர்ந்து ஓர் வஸ்திரம் எதை என்று உணர்ந்துஇதை என்றும் குறிப்பிட்ட அளவுக்கும் கூட பின் தாலி கயிறு (108 பெண்களுக்கு துணி மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு) இவர்களுக்கு கொடுக்க நன்று!!! அவ் அம்மையும் நிச்சயம் பின் உதவிகள் செய்வாள்!!! 

ஆனால் முதலில் எதை என்று அறிந்து அறிந்து அவள்தனையும் பின் போற்றி பாட மனமகிழ்ந்து செய்ய வேண்டும் இப்படி செய்தாலே மனம் குளிர்ந்து விடுவாள்!!!

எதை என்று அறிய அறிய இன்னும் நலன்கள் தான் உண்டு என்பேன் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் எதை என்று அறிய யான் சொன்னேன் எவை என்று அறிய அறிய இப்படி செய்ய அதனால் இதை ஓதுபவனும்( திரு ஜானகிராமன் ஐயா) எதை என்று உணர்ந்து உணர்ந்து  இதையும் கூட எவ்வளவு ஆகின்றதோ அதனையும் மைந்தன்  இவந்தனே கொடுக்க வேண்டும் இவர்களுக்கு!!!

நலன்கள் நலன்கள் அதனால் எக்குறைகளும் பட தேவையில்லை... நிச்சயம் எப்பொழுது எதை என்று அறிய அறிய எப்பொழுது ஆனாலும் இதைப்பற்றி இப்படியே விட்டு இருந்தால் யாருக்கும் தெரியாது!!!  அவ் அம்மையைப் பற்றி அதனால்தான் எதை என்று அறிந்து அறிந்து இன்னும் பல பெரியவர்களும் கூட

"" பொறுத்தார் பூமி ஆள்வார்!! என்பதற்கேற்பவே பின் அனைத்தும் எதை என்று அறிய அறிய பின் காலங்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நிச்சயம் அனைத்தும் மாறிவிடும் அனைத்தும் முருகனே செய்ய வைப்பான்!!! இது நிச்சயம் உண்மை!! உண்மை!!

எதையென்று அறிய அறிய அழகாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து முருகனுக்கும் நல்விதமாகவே இங்கு அடிக்கடி எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் நாராயணனுக்கும் கூட எதை என்றும் தெரிந்து தெரிந்து இன்னும் ஏராளமான விஷயங்களும் காத்துக் கொண்டிருக்கின்றது இதனால் நலன்கள் ஆகவே!!!

ஆனாலும் அச் சொர்ணம் எதை என்று அறிந்து அறிந்து இங்கே நிலையாகவே இருக்கின்றது என்பேன் அதனால் அனைத்தும் முடிந்தவுடன் எதையென்று அறிய ஆனாலும் அதற்கும் தீர்வு முருகனிடத்திலே உள்ளது என்பேன்!!! அது இப்பொழுது வேண்டாம் என்பேன்!!! நலன்கள் அனைவருக்கும் எதையென்று உணர்ந்து உணர்ந்து யானும் இதற்கு உதவிகள் செய்வேன்!!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் சூட்சுமமாக!!!!

ஒரு பெரியவன் என்று சொன்னேனே!!!   அப்பெரியவன் கூட எதையென்று அறிய அறிய பின் இப் பிறப்பில் பிறந்துள்ளான்!!! அவந்தன் எதையென்று அறிய அறிய அவந்தன் மூலமே எதை என்று அறிய அறிய உதவிகள் கிட்டும் என்பேன்!!!!!

நலன்கள் இதனால் கவலைகள் இல்லை எதை எதை என்று அறிய அதிவிரைவிலே எவை என்று உணர்ந்து உணர்ந்து பின் வேலைகளும் கூட இன்னும் இன்னும் ஏராளமான விஷயங்கள் கூட நடந்தேறும் என்பேன்!!!! அப்பனே நிச்சயம் முடியும் முடியும் என்பேன் அப்பனே!!!! எதையென்று உணர்ந்து உணர்ந்து!!!

நலன்கள் எதை என்று அறிய அறிய இதனால் அனைத்தும் சொல்லிவிட்டேன் நலங்களாகவே முடியட்டும் மீண்டும் எதை என்று அறிய அறிய இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் மீண்டும் வந்து கூட இங்கு வாக்குகள் செப்புவேன்!!!எதை எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் தான் சொன்னேன் எவை என்று கூற தாலி பாக்கியத்தையும் கூட இவள்தன் நிச்சயமாய் எதை என்று அறிந்து அறிந்து அதனால் பெண்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து இங்கே நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து தன் பின் எவை என்று கணவன்மார்களுக்கும் சிறிது தீய பழக்கங்களும் எதை என்று அறிந்து இருந்தாலும் நிச்சயம் வேண்டிக் கொண்டால் நிச்சயம் மாறிவிடுவார்கள் அதிவிரைவிலே என்பது மெய்!!! எவை என்று உணர்ந்து உணர்ந்து சொல்கின்றேன் மீண்டும் மீண்டும் வாக்குகள் செப்புகின்றேன் நலமாகவே!!!

ஆலய நிர்வாகிகளின் கேள்விக்கு குருநாதர் தந்த பதில்கள்!!!!!

அகஸ்திய மாமுனியே!! சரணம்!! சரணம்!!

தற்பொழுது இந்த ஆலயத்தில் செய்யப்படும் பூஜைகள் அனுஷ்டானங்கள் சரியான முறையில் நடைபெறுகின்றதா???

அப்பனே எதை என்று அறிய அறிய இதிலேயே சொல்லிவிட்டேன் யான்!!!
அப்பனே எதை என்று அறிய அறிய பின் அவ் அம்மையே எதை என்று அறியாமலே அனைத்தையும் மாறி அமைத்து எதை என்று அறிய மனங்கள் மாறினாலும் அவள் நிச்சயம் விடமாட்டாள் என்பேன் !!!
சரியாகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றது அப்பனே!!!

குருவே சரணம் சரணம் குருநாதா சரணம் சரணம் ஆலய திருப்பணியில் இன்னும் ஏராளமான திட்டங்களை நாங்கள் வைத்திருக்கின்றோம் அவையெல்லாம் சரியான முறையில் நடைபெறுமா??

அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் பின் எதை என்று அறிய அறிய அப்பனே மனிதன் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் இறைவன் எதற்கு?? அதனால்தான் சொன்னேன் அப்பனே அவ் அம்மை நினைத்தார் போல தான் அனைத்தும் நடக்கும்!!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம்!!! நாங்கள் ஆலய பெண்கள் குழு சார்பாக கேட்கின்றோம் புதைந்து கிடக்கும் முருகனுடைய ஆபரணங்கள் மீண்டும் கிடைக்குமா முருகனுக்கு சாற்றி பூஜைகள் நடத்த நாங்கள் விருப்பப்படுகின்றோம்!!!

அப்பனே எதை என்று அறிய அறிய முதலில் எதை என்று அறிய அனைத்தும் முடியட்டும் பின்பு பார்ப்போம்!!!!!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம்!! திடீரென்று திருப்பணிகள் முடங்கியதற்கு முக்கியமான தடைகள் ஏதேனும் உள்ளதா??

அப்பனே எதை எதை என்று அறிய அறிய குறைகளையும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே அவ்வளவுதான்!!!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!! ஆசிகள்!! மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன்!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!! குருநாதரின் கணக்கு கூட்டலே வேறு!! கணிப்புகளே வேறு!!!

காலங்கள் காலங்களாக ஏதோ வணங்கி வருகின்றோம் என்று ஆலயத்தின் உண்மை நிலைமைகள் புரியாமல் இருந்த அந்த ஊர் மக்களுக்கு சிந்தாயிணி எனும் பெண்மணியின் பக்தியை அவருடைய பக்திக்காக இறைவன் நடத்திய திருவிளையாடல்களை நேர்மைக்காக இறைவனை வந்து கொடுத்த தரிசனத்தை அன்றுதான் அந்த ஊர் மக்கள் அறிந்து கொண்டனர். மிகவும் பிரமித்து போயினர் குருநாதரையும் ஜீவநாடி சுவடியையும் தாழ்ந்து பணிந்து வணங்கி நன்றிகள் கூறினர்!!!

குருநாதர் அகத்திய பெருமான் கூறியது போல யானும் இதற்கு உதவிகள் செய்வேன்!!! என்று வாக்குகள் உரைத்திருந்தார்!! அடியவர்கள் இந்த ஆலய திருப்பணிக்கு தங்களால் ஆன நன்கொடைகளை செய்து முருகன் திருவருளை பெற வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

ஆலய முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்கள்.

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
பாலைக்கபரம்பு.
அதியன்னூர். ஆராலுமூடு.695123
நெய்யாற்றின்கரா . திருவனந்தபுரம். 

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி டெம்பிள் டிரஸ்ட்.

ACCOUNT NAME : PALAKKAPARAMPU SREE BALASUBRAMANYA SWAMI TEMPLE.

ACCOUNT NUMBER : 074001000018226.
IFSC: IOBA0000740.
INDIAN OVERSEAS BANK. 

CONTACT NO: 9995345586

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சம்ர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 24 January 2023

சித்தன் அருள் - 1275 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்!






12/10/2022 அன்று ஸ்ரீ முருகப்பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம், மார்கண்டேய ஆஸ்ரமம் சாலை. சிவபுராணம் மாந்தாத்தா தீவு, காண்ட்வா மாவட்டம் மத்திய பிரதேசம்.

மந்திரமாய்!!! மந்திரமாய்!! உருவெடுத்த ஓங்காரம் நாதனே!!! என் தந்தையே!! தாயே!!!!! 

பணிந்து வேலனவன் செப்புகின்றேன்!!!!

ஆனாலும் மிச்சம் என்பது ஏது??? ஏது என்பதைக் கூட நினைத்துப் பார்த்தால் ஏதுமில்லை!!!!

அறிந்தவர் உண்டா??? என் தந்தையை!!!! அறியாதவர் எவர்!!??

ஆனால் அறிந்தவர் உண்டோ அவர் நிச்சயமாய் வெளியில் காட்டுவதில்லை அறியாதவர் எவரோ அவர்தான் யான் பக்தன் அதாவது என் தந்தையுடைய பக்தன் என்று அலட்டிக் கொள்வார் பிதற்றிக் கொள்வார்கள்.

ஆனாலும் பொய் நிறைந்து அனைத்தும்  கடைசியில் பார்த்தால் இழப்பார்!!

பின் இழந்து உன்னை தான் வணங்கினேனே!!! ஈசனே!!! என்று பிதற்றுவார்!!!

எவ்வகை ஆனால் தவறுகள் மனிதனிடத்திலே!!! மனிதனிடத்திலே வைத்துக் கொண்டு என் தந்தையை எதை என்று அறியாமல் அறியாமல் அறியாமல் பிதற்றுகின்ற மனிதர்களே!!! மனித முட்டாள்களே!!!
ஜென்மங்கள் எதற்காக எடுத்தாய் என்பதை கூட அறியாமல் அறியாமல் அறியாமல் வந்து வந்து என்னிடத்தில் பல வழிகளிலும் கூட பின் எதை எதையோ கேட்டு...........

ஆனாலும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன் அன்பை!!!!

ஆனாலும் அன்பான முறையிலே கேட்டால்!!! நிச்சயம் ஆனாலும் சில காலம் அன்பை என் மீது காட்டி காட்டி பின் மறைமுகமாக பின் அனைத்தும் கொடுத்து விட்டால் நிச்சயம் இறைவன் அதாவது இல்லை!!. எந்தனுக்கு யானே கஷ்டங்கள் பட்டு எழுந்தேன் என்று கூறி விடுகின்றார்கள் மனிதர்கள்!!!

இதுதான் தன்மையா???? மனிதனின் தன்மையா??

அதனால்தான் யாங்கள் அனைத்தும் எடுத்துக் கொள்வோம் மீண்டும்!!!!

இதனால்தான் வேண்டாம் மனிதனே!!!!

இன்னும் ஞானங்கள் தித்திக்க!!!தித்திக்க!!! பல வழிகளிலும் கூட சித்தர்கள் அழகாகவே அழகாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் வாக்குகளை!!!!

இதை யார் ஒருவர் பயன்படுத்துகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயம் பின் மாற்றங்கள் என்னுடைய அருள்கள் பல கோடி ஞானியர்களின் அருள்கள் என் தந்தையின் அருள்கள் தாயின் அருள்கள் நிச்சயமாய் வந்து கொண்டே இருக்கும் யான் ஏற்பாடுகள் செய்வேன்!!!!

என் தந்தையிடம் எப்பொழுதும் கூட எதை என்று நடந்து நடந்து துன்பம் வந்தாலும் எவை வந்தாலும் நிச்சயம் என் தந்தையினை நெருங்க நெருங்க நிச்சயமாய் விடிவெள்ளி உண்டு!!! உண்டு!!!

ஆனாலும் சில சோதனைகள் வரும் அவற்றையெல்லாம் கடந்தால் தான் கடந்தால்தான் மனிதா!!! நிச்சயம் தித்திக்கும் வாழ்க்கை!!!

அவை விட்டுவிட்டு பின் ஏதோ என்று பின் அத் திருத்தலத்திற்கு சென்றேன் இத்திருத்தலத்திற்கு சென்றேன்.... இத்திருத்தலத்தில் தியானங்கள் செய்தேன் அத் திருத்தலத்திற்கு பல வழிகளிலும் கூட உபகாரங்கள் செய்தேன் என்று பிதற்றிகொள்வது எதனால்???

உன்னுடைய கர்மா எதை கொடுக்க வேண்டுமோ அதை உன்னிடத்தில் இருந்து இறைவனே எடுத்து கொள்கின்றான்!

அவ்வளவுதான்!!! வாழ்க்கை!!!

இதை நிமித்தம் காட்டி ஏன்?? வீணான வாதாடல்கள்!!!

வாதாடி ! வாதாடி ! தோற்றுப் போகின்றாயே!!! மனிதா!!! இதனை எல்லாம் ஏன்??

தோற்பது நிச்சயமாய் மனிதனே இவ்வுலகத்தில்!!!

அதனால் இறைபலங்கள் இன்னும் மனிதர்களுக்கு அதாவது சில மனிதர்களுக்கு கூடிச் செல்லும் என்பது மெய்!!!

மெய் என்பதை உணர்ந்து உணர்ந்து செயல்பட்டாலே மனிதா!! நீ எதனை? என்றும் மெய் என்பதை கூட உன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ அது பொய்!!!

அதுதான் பொய் என்பதை கூட நிரூபித்து விடும்!!! நிரூபித்து விடும்!!

எது? பொய் என்று உன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ அதுதான் உண்மை!!!!

ஆனால் இதற்கும் நினைக்கத் தெரிந்த மனமாக இருக்க வேண்டும் மனமாக இருந்து இருந்து செயல்பட்டு கொண்டிருந்தாலே என்னுடைய அருள்கள் பரிபூரணம்!!! பரிபூரணம்!!!

பரிபூரணம்!! அறிந்து அறிந்து செயல்பட்டு இன்றைய நிலைகள் மாறும்!! மாறும்!!

என்னுடைய திருத்தலத்திலே!! அதாவது நிச்சயம் நிச்சயம் உண்டு இன்னும் ஏராளம்!!
 
வள்ளி தெய்வானையோடு பல மனிதர்களுக்கு காட்சியளிக்க தான் போகின்றேன் பின் என் கோட்டம் செந்தூரிலே!!!!! (திருச்செந்தூர்) 

ஆனாலும் எவை எங்கிருந்து!!!     அங்கு(திருச்செந்தூருக்கு) புறப்பட்டு சென்றால் போகனவனும்(போகர்) அதாவது போகனையும் என் தந்தையையும் யான் அழைப்பேன்... 

போக முனியும் என்மேல் உயிராகவே இருந்தான் போகனவன்!!! அதனால்தான் எப்பொழுதும் யான் எங்கு சென்றாலும் போகனை அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றேன்!!!

இங்கும் போகன் இருக்கின்றான்!!!! எதிலும் போகன் எதிலும் போகனின் அருவுருவமாக அதாவது இந்நீரை(நர்மதை தீர்த்தம்) பின் பருகி வந்தாலே போதுமானது பல பல இன்னல்கள் அகலும்!!! அதாவது மனக்குழப்பங்கள் அதாவது சிறிய வயதிலே பைத்தியகாரனாகுதல் எதையெதையோ தெரியாமல் அலைந்து திரிந்து ஓடுதல் என்பவை எல்லாம் இந்நதியிலே நீராட!! நீராட!! நிச்சயம் மாறிக்கொண்டே வரும்!!!

அவ்வளவு மூலிகைகள் படைத்தது இவ் நதி(நர்மதை)

அவை மட்டும் இல்லாமல் எண்ணிலா கோடி ஞானியர்களும் தவம் செய்த இடங்கள்!!! தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது பலத்த!!!!

பலத்த !! பலத்த!! எதையென்று ஆனாலும் அவ் ஞானியர்கள் தவம் செய்து கொண்டிருக்கையில்!!!! என்னதான்? தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்!! என்பதை கூட......ஈசா!!!! ஈசா!!! இப்பிறவி வேண்டாம் வேண்டாம் என்று கூட!!..

அதனால் நிச்சயம் அனைவரும் ஈசனை கேட்டு ஒரே அதாவது ஒரே நேரத்தில் அனைவரும் முக்தி அடைய வேண்டும் என்று கூட பின் என் தந்தையை சேவிக்க!!! சேவிக்க!!! சேவிக்க!!! சேவிக்க!!!.... 

பின் வந்தது!!!! நீர் வெள்ளம்!!! 

நீரை விட்டான்!!! என் தந்தை ஈசன்!!!! 

நீரை விட்டதுடன் அனைவரும்     பின்    அவ் நீரினாலே என் தந்தை அனைவரையும் ஈர்த்துக் கொண்டான்!!
நதியின் அடியிலே !!!   இப்பொழுதும் கூட தவம் செய்து கொண்டே இருக்கின்றார்கள்  அவ் ஞானியவர்கள்!!!!! மனிதர்களின் நன்மைக்காக!!!!......

இவ்வளவு படைத்த ஆனாலும் இவ் ஞானியர்களின் அருள்கள் நிச்சயமாய் மனிதனை நெருங்க நெருங்க அதாவது ஞானியவர்க்கும் பின் எதை ஆனாலும் மனிதனுக்கும் சம்பந்தங்கள் உண்டு!!!

பின் நேசிக்க !! நேசிக்க!!. என் தந்தையை நேசிக்க நேசிக்க ஆனாலும் ஞானியர்கள் கண்ணை திறந்து பார்ப்பார்கள்!!!

யார் இவன்????...... பின் ஈசனையே நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்று !!!   சரி இவந்தனுக்கு விடிவெள்ளி தான் கொடுப்போம் என்று நிச்சயம் அணைத்துக் கொள்வார்கள்!!!! அணைத்துக் கொண்டு அனைத்தும் செய்வார்கள்!!!
இவ் ஞானியர்களின் இதுதான் சூட்சுமம்!!!

ஆனாலும் இதை எவை ஆனாலும் அடியார்கள் பல!! பல!!! என் தந்தையின் மீது பற்று!! பற்று!!!

அதனால் ஒரு அடியானை(அடியவனை) பற்றி சொல்கின்றேன்!!!!

""" வீர பிரம்மா!!!! என ஓர் அடியான் இங்கிருந்தான்!! ஆனால் என் தந்தைக்கு சேவை செய்வதில் மிக்க!!! மிக்க!!!

அவனைப் போல் ஈடு கொடுக்க யாருமில்லை!!!

அனுதினமும் நீரை எடுத்து வந்தான் பின் அனுதினமும் இங்கே அழகாகவே குளிப்பாட்டினான்!! என் தந்தையை!!!

ஆனாலும் பின் முதலிலே என் தந்தைக்கு அனைத்தையும் செய்து விட்டு தான் பின் உணவு!!

ஆனாலும் உணவை கூட சாப்பிட மறந்து விடுவான் ஒவ்வொரு நாளும்!!!

இப்படியே சென்று கொண்டிருக்க !! சென்று கொண்டிருக்க!!! என் தந்தை ஒரு பாடத்தை புகுத்தினான்!!!

நீரை ( நர்மதை ஆறு) எல்லாம் பின் மாற்றி விடுவோம் என்று கூட திடீரென்று நீரை வற்றச் செய்து விட்டான் !!அதாவது எங்கு பார்த்தாலும் நீர் இல்லை!!

ஆனாலும் எப்படித்தான் அபிஷேகம் செய்வது??? என்று ஆனாலும் அப்படி ஆனாலும் பின் பல தூர தொலைவில் அலைந்தான்!! திரிந்தான்!!

ஆனாலும் அங்கு பலமாகவே நீர் இன்னும் கிடைக்கப் போவதில்லை!!

எப்படி என் ஈசனுக்கு யான் நீரை அதாவது.. அவந்தன்னில்( லிங்கத்தின் மீது அபிஷேகம்) ஊற்றுவேன்??!! என்று கூட!!

ஆனாலும் இதை என்று அறிந்து கொண்ட ஆனாலும் பல வழிகளிலும் கூட அழுது புலம்பி!!!!!

அழுது!! அழுது !! அழுது!! அழுது!! நீரை சேமித்தான்(கண்ணீரை) நீரை சேமித்தான்!!!

சந்தோஷங்கள்!! ஆனாலும் இவ் நீரை ஆனாலும் பின் என் தந்தை மீது ஊற்றினான்!!! 

அதனால் என் தந்தைக்கும் பின் மகிழ்ச்சிகள்!!! மகிழ்ச்சிகள்!!! என் மீது இவ்வளவு பாசங்களா!!!!!

அழுது அழுது கண்ணீரை சேமித்து!!!!.......... இதனால் பாகுபாடின்றி பின் அருகிலே மறுநாள் பார்த்தால் நீர் ஓடுகின்றது!!!! (ஆற்றில் வெள்ளம்) ஆனால் மகிழ்ச்சி அவந்தனுக்கு!!!!

ஈசா!!!! அனைத்தும் உன் லீலைகளே!! என்று கூட!!

ஆனாலும் எதை எவற்றில் இருந்து ஆனாலும் இங்கே அமர்ந்து கொண்டான்!!

ஆனாலும் பல அரசர்கள் இங்கு வந்து ஆனாலும் பல வழிகளிலும் கூட தவம் செய்ய மேற்கொண்டார்கள் இங்கே அமர்ந்து!!!

ஆனாலும் ஒரு புலவன் பின் ஒரு மண்டலம் வரை இங்கு தவங்கள் செய்து ஈசனையே நினைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீ இவ்வுலகத்தை ஆளலாம் என்று கூறி விட்டான்!!

ஆனாலும் ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின்  அவ் அடியான்(  வீர பிரம்மா) பின் இங்கு இருந்தது பின் அவ் அதாவது அவ் அரசனுக்கு பிடிக்கவில்லை!!!

இதனால் இவனை விரட்டி விடுங்கள் என்று கூட!!

நிச்சயமாய் பின்  அனைவரும் அவந்தனை அடித்தனர்!!!

ஆனாலும் அவந்தன் செல்லவில்லை!!!

ஈசா!!!  ஈசா!!!! தந்தையே உன்னையே இங்கு யான் நினைத்துக் கொண்டிருக்கின்றேனே!!!! 

எந்தனுக்கு ஏன்? எதை! என்று எவற்றை என்றும் அறியாத என்று என்று அழுது புலம்பினான்!!!

ஆனாலும் விடவில்லை அடித்து அடித்து நொறுக்கினர்!!! பல வழிகளிலும் கூட இவந்தனை இங்கேயே சாகடியுங்கள் என்று கூட அவ் அரசன் தீர்மானித்து பின் சீடர்களுக்கு உத்தரவிட்டு விட்டான்!!!

இதனால் நதியிலே மூழ்கி மூழ்கி( மூழ்கடித்து) இவந்தனை சாகடிக்க சாகடிக்க......

அப்போது!!!!!!!!!! 

ஈசனே!!!!! வந்தான் மனித ரூபத்தில்!!!!!

வந்து ஆனால் சண்டை இட்டான்..... 

சண்டையிட்ட சீடர்களும் ஓடி வந்து அரசனே!! அரசனே!!
பின் ஒருவன் வந்து விட்டான்!!!!

அவன் யார்?? என்று தெரியாது!!!!! ஆனாலும் பின் இவந்தனை காப்பாற்றி விட்டான்!!!!

நீர் வாரும்!! வாரும்!! என்று!!

ஆனாலும் அரசனே!!! எதை என்று கூட !!.... சபையில் இருக்கும் அனைவரையும் அழையுங்கள்!!

இவ்வளவு படைத்த அதாவது பலம் படைத்த பலம் படைத்தவன் யார்??? என்று கூட அனைவரையும் அழைத்து ஆனாலும் அனைவரையும் அழைத்து சண்டையிட்டனர் ஈசனிடம்!!

அதனால் ஈசன் ஒருவனுக்காகவே சண்டை இட்டு அனைவரையும் அழித்துவிட்டான்!!! அனைவரும் அழிந்தனர்!! 

ஆனாலும் பின் வந்தது என்று யார் என்று அறிந்து கொண்டான் பின் அவ் முனி( வீர பிரம்மா). 

ஆனாலும் இதையென்று அறிந்து கொண்டு.... ஆனாலும் பின் அரசனும் கடைசியில் சண்டைக்கு வந்தான்!!!

ஆனால் பின் வந்தது ""ஈசன்!!! என்று அரசன் சரியாக உணர்ந்து விட்டான்!!!!!

இதனால் இப்பொழுதே உந்தனுக்கு ராஜாங்கம் வேண்டும் என்று நினைத்தாயே நிச்சயம் இல்லை இப்பொழுதே உன்னை இவ் தண்ணீரில் தள்ளி விடுகின்றேன் என்று... அதாவது நீ இனிமேலும் எதை என்று அறிந்து ஒரு தரித்திரனாக பிறப்பாய் என்று கூட!!!

அத் தரித்திரனாக இப்பொழுதும் பிறப்பெடுத்து விட்டான்!!!

ஆனால் எதை அவனைக் காப்பாற்ற வந்தானே ஈசன் இப்பொழுது கூட அறிந்து அறிந்து அவன் பின் ஒரு ஜென்மத்தில் தற்போது நிலைமையில் பின் சிவாஜியாக( சத்ரபதி) பிறப்பெடுத்தான்!!!! நாட்டை ஆண்டான் ஆனாலும் எதை என்று அறியாத அளவிற்கும் அனைத்து திறமைகளையும் ஈசனே!! கொடுத்தான்!!! பல வழிகளிலும் கூட!!!

அதாவது எதை என்னுடைய தந்தை பல வழிகளிலும் கூட அவந்தனுக்கு உபசாரங்கள் பல பல!!!!!

ஆனாலும் சில சில தீய செய்கைகளாலும்........ அவையெல்லாம் வேண்டாம் சித்தர்கள் சொல்வார்கள்!!!!

நல்முறையாக இப்படித்தான் என் ஈசனை வணங்குபவர்களுக்கு  ஒருவருக்காவது நிச்சயம் என் தந்தை அதாவது ஈசன் என் மனதில் குடிகொண்டுள்ள ஈசன் அன்பானவன் அழகானவன் உயர்ந்த உள்ளம் கொண்டவன் என்றெல்லாம்!!!!!

ஆனாலும் யாரொருவன் என் தந்தையின் மீது அதிக அளவு பற்று வைக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயம் மனித ரூபத்தில் வந்து என் அப்பன் அதாவது என் தந்தையானவன்... ஈசனானவன் நிச்சயம் உதவிகள் நேரடியாகவே வந்து புரிவான்!!! கலியுகத்தில் தான் இதுவும் நடக்கிறது!!!

ஆனாலும் பின் என் தந்தையை வணங்கினால் கர்மங்களாம்?!!!!!!!!!!!!!!!!!

ஆனாலும் மனிதா!!!!!!

பொய் சொல்லி ஏமாற்றுகின்றாயே!!!!!!

அனைத்தையும் செய்து விட்டு நமச்சிவாயா என்று சொல்கின்றாயே!!!!!

பின் என் தந்தை எப்படித்தான் கொடுப்பான் உந்தனுக்கு அனைத்தையும் கூட!!!......... யோசித்துக் கொள்ளுங்கள்!!!

பின் இறைவனை வைத்தே பிழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் மனிதா!!! உன்னை எப்பொழுது நீ நம்புகின்றாய்??!!

உன்னை நீ எப்பொழுது நம்புகின்றாயோ அப்பொழுது யாங்களே வந்து...பின் இழுத்துச் செல்வோம்!!!!

பழனி தன்னில் அழகாகவே யான் இருக்கின்றேன்!!!!! சில மனிதர்களுக்கு காட்சியும் அளித்துவிட்டேன்!!! இன்னும் வரப் போகின்ற நேரத்தில் காட்சியும் அளிப்பேன்!!!

இது சித்தர்களின் தீர்ப்பு!!! சித்தர்களின் தீர்ப்பு!!!!

அகத்திய மாமுனி.!!!

பின் முருகா!!! முருகா!!! யான் உந்தனை பணிகின்றேன்!!! பணிகின்றேன்!!!

இவ்வுலகம் காக்கப்பட வேண்டும்!!!! காக்க வேண்டும்!!!

அழிவுகள் நடந்து கொண்டே இருக்கின்றது!!! நல்லோர்களை காக்க வேண்டும்!! அதனால் நீ நிச்சயம் யான் பல மனிதர்களுக்கும் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்!!!

அவர்களுக்கெல்லாம் நீ காட்சியளிக்க வேண்டும் என்று!!!

ஆனாலும் குருமுனியே!!!!!! எந்தனுக்கே பல பாடங்களை கற்றுவித்தவன் நீ!!!!!

பின் ஆனாலும் அகத்திய முனியோ!!!!!!!!!!!!!!!!

அப்ப்பப்பா!!!!!!!!!!!!!!  அப்படியில்லை!!!! அனைத்தும் நீ கொடுத்தது!!!

யான் கொடுத்தேனா?????

நீ வேறா ?! ஈசன் வேறா !? அனைத்தும் நீரே!!(நீயே) என்று கூற........

அப்ப்பப்பா!!! இல்லை!!!!!! அப்ப்பப்பா!!!!!!! அகத்திய மாமுனிவரே!!!! உலகத்திற்கும் ஈடானவன்!!! 

ஆனால் என் தந்தை அழகாகவே உன்னிடத்தில் அதனால் பின் அனைத்தும் அறிந்த உந்தனுக்கு இதைப்போலவே செய்கின்றேன் என்று யானும் உத்தரவிட்டு விட்டேன்!!!!

இதனால் நிச்சயம் அனைவருக்கும் என் ரூபம் காண்பிக்க தான் போகின்றேன்!!! இன்னும் ஏராளமான உரைகளையும் கூட !!!! உரைகளையும் கூட சித்தர்கள் உரைத்துக் கொண்டிருக்க....

அதை நம்பினால் நிச்சயம் சித்துக்கள் கூடி வரும்!!!! நம்பாவிட்டால் அழிவுகள் கூடி வரும்!!! இவ்வளவுதான் வாழ்க்கை!!!! சொல்லிவிட்டேன்!!!

வாழ்க்கை என்பது ஏதடா??? வாழ்க்கை என்பது ஏதடா???
ஏது? முன் சென்று பின் வருவது ஏதடா?? பார்த்துக் கொள்வதடா பாவமடா!!!
அதைத்தான் நீ சுமந்து கொண்டே வந்து கொண்டே இருக்கின்றாயடா!!!  மனிதா!!  மனிதா!!! எண்ணங்களை மேம்படுத்து!!!! நல் எண்ணங்களை மேம்படுத்து!!!! போட்டிகள் பொறாமைகள் வேண்டாம் என்று சித்தர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்!!!

எனை வணங்கினாலும் அவை போல இருந்தால் நிச்சயம் என் அருள்கள் கிட்டாது!!!! அப்பொழுது நீ தாழ்வு நிலைக்கே வருவாய்!!! சொல்லிவிட்டேன்!!!!

யான் கந்தனை வணங்கினேன் என்று ஒரு பிரயோஜனமும் இல்லை!!! அதனால் ஏமாற்றுக்காரர்கள் தான் அதிகம் பக்தியை வைத்துக்கொண்டு ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் திரிந்து கொண்டே இருக்கின்றார்கள்.... அவர்களுக்கு என்னதான் சித்தர்கள் செய்வார்கள் என்பதை கூட எந்தனுக்கு தெரியும்!!!!

அதைத்தான் நீராடி நீராடி என்று ஆனாலும் இவ் நதியின் ஓட்டம் பார்த்தால் அடியில் பார்த்தால் நிச்சயம் பின் உள்ளுணர்ந்து சென்றால் நிச்சயம் பின் ஞானியர்கள் தவம் இயற்றுவதை பின் பார்க்கலாம்!!!!

அவை மட்டும் இல்லாமல் ஞானியர்கள் தவம் இயற்றுவதை மனதாலே நினைத்துக் கொண்டு தவம் இயற்றி  கொண்டிருக்கின்றார்கள்... அதை சரியாகவே ஓர் 5 அடி ஆழத்தில் சென்று எதை என்று கூர்மமாகவே கூர்ந்து அதாவது நிச்சயம் நல் மனதாகவே இருந்தால் மேலோட்டமாகவே தலை சாய்த்து வைத்து கேட்டால்

"""""""""" ஓம்""""""""" என்ற சப்தம் கேட்கும்!!!!!! நிச்சயம்!!!!

நிச்சயம் அவை மட்டுமல்ல!!! சரியாக பின் நடு இரவில் இங்கே அமர்ந்தாலே!!!!!

"""""""""""" ஓம் """""""""""""" என்ற சப்தம் கேட்கும்!!!!

அதையும் அகத்திய மாமுனி!!!! 

அதாவது விஞ்ஞானத்தில் தலைசிறந்தவன் என்று கூட!!! சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்!!!!

எப்படி?? எங்கு?? ஒலிக்கின்றது !!!....என்பதை கூட விஞ்ஞான வழியிலே வாக்குகள் செப்புவான்!!!! என் அகத்தியன்!!!!!

என் மனதில் குடி கொண்டவன் அகத்தியன்!!! பெருமிதத்துடன்!!!! அகத்தியனை நினைத்து நினைத்து யான் பெருமிதம் கொண்டே இருக்கின்றேன்!!

ஏனென்றால் அழகிலும் சிறந்தவன்!!!! அறிவிலும் சிறந்தவன்!!! பின் எதை ஞானத்திலும் சிறந்தவன்!!!! கருணையிலும் சிறந்தவன்!! பாசத்திலும் சிறந்தவன்!!! பின் பின் எதையென்று கூற ஏழ்மையிலும் சிறந்தவன் ஏழ்மைக்கும்!! ஏழ்மையானவன்!!!

அதனால் அகத்தியன் நிச்சயம் பின் ஏழை எளியோரை காப்பாற்றுவான் நிச்சயம்!!!

ஆனாலும் பலமுறை பல சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் அகத்தியனுக்கு!!!

அகத்தியனே!!! இவ்உலகத்தில் மனிதர்கள் யாரும் நம்பப் போவதில்லை உண்மையானதை!!!!

நீ ஏன் அலைகின்றாய் என்று கூட!!!!

அகத்தியனும்!!...... பரவாயில்லை!!! என்னை நம்பினோர்களுக்கு மட்டும் யான் உதவிகள் செய்து வருகின்றேன்!!! அவர்களுக்கு உதவிகள் செய்தால் அவர்கள் பல பேர்களுக்கு உதவிகள் செய்வார்கள்!!!! ஆனாலும் ஆனாலும் என் பெயரை அதாவது எதை என்று உணர என் பெயரையும் வைத்துக்கொண்டு ஏமாற்றுகின்றார்கள் என்பதை கூட ஆனாலும் இதை என்று அறிந்து அறிந்து ஆனால் அவர்களுக்கும் ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றேன்!!!!

பின் திருந்தினால் பார்ப்போம்!!!..... இல்லையென்றால் முருகா!!! பின் நீ உணர்த்தியும் காட்டு!!! உணர்த்தியும் காட்டு!!!

உணர்த்தியும் உணராத அளவிற்கும் கூட.... ஆனாலும் பின் பணங்கள் பணங்கள் பணங்கள் என்று சென்று கொண்டிருக்கின்றது இவ்வுலகம்!!!

ஆனாலும் இதனை நடுவில் நிறுத்தி அதாவது மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானம் செய்தாலே நிச்சயம் """"""""ஓம்"""""" என்ற மந்திரம் என் தந்தையே நிச்சயம் மனிதர்களுக்கு கொடுப்பான்.... இதை உண்மை என்று நிரூபிக்க பல சித்தர்களும் வழிவழியாக வந்தவர்களும் சொல்வார்கள்!!! இன்னும் ஏராளமானதையும் கூட சித்தர்கள் சொல்லிக் கொண்டே வருவார்கள்!!!!

நலம் நலம் அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!எம்முடைய ஆசிகள்!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி  இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது உஜ்ஜைனிக்கு தெற்கே 100 கி.மீ தொலைவில், நர்மதை ஆற்றின் வடகரையில் நர்மதையும் காவிரி ஆறும் கலக்கும் சங்கமத்துறையில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது மத்தியப் பிரதேசத்திலுள்ள மோர்ட்டக்கா என்னும் இடத்திலிருந்து 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ளது. இத் தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான  ஓம் என்ற வடிவில் அமைந்துள்ளது. . இத் தீவில் அமரேஸ்வரர் கோயில் என இன்னொரு கோயிலும் உள்ளது

தென்கரையில் உள்ள மமலேஷ்வரைத் தரிசனம் செய்யாமல் ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் தரிசனம் பூர்த்தியாவதில்லை. மமலேஷ்வர் சன்னதியில் தினந்தோறும் சுமார் ஒன்றேகால் லட்சம் மண் லிங்கங்கள் பிடிக்கப்பட்டு லிங்கார்ச்சனை செய்யப்படுகிறது. நர்மதாஷ்டகம் உதயமான இடமே இதுதான். நர்மதையின் நீர்மட்டத்திலிருந்து சுமார் நூற்றைம்பது அடி உயரத்தில் காளிகா கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலுக்கு அருகே ஒரு குகையும் உள்ளது. அந்தக் குகையில்தான் குரு கோவிந்த பாதாச்சாரியர் அரிய தவத்தை மேற்கொண்டார். அந்த மேன்மை வாய்ந்த குகையில்தான் ஆதி சங்கராச்சார்யரும் தனது குருவிடமிருந்து ராஜ யோகத்துக்கான சிட்சை பெற்றதாகத் தெரிகிறது. இரண்டரை ஆண்டு காலம் தன் குருவுடன் இந்தக் குகையில் தங்கி ஆதி சங்கராச்சார்யர் ஞானம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.அந்த இடம் இங்கே உள்ளது. 

பிரணவ சொரூபமாய் ஓம்காரேஷ்வர் தரிசனம் கிடைக்கிறது. அவ்வளவு உயரத்திலும் லிங்கத்தின் கீழ் எப்போதும் தென்படும் நர்மதையின் நீர் வியப்பையும் புல்லரிப்பயும் தருகிறது ! லிங்கத்தின் மேற்புறம் தேவி பார்வதியின் பிரதிமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஐந்து தளங்களாக உள்ள இந்தக் கோயிலில் மற்ற தளங்களில் முறையே மஹாகாளேஷ்வர், சித்தநாத், கேதாரேஷ்வர், குப்தேஷ்வர் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

ஓம்கார் லிங்கம் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பாதி சதாசிவமாக ஓம்காரேஷ்வர் ஆகிறது. மறுபாதி மண் லிங்கத்துடன் ஜோதியாய்க் கலந்து அமரேஸ்வர் அல்லது மமலேஷ்வர் ஆகிறது. இவ்விரண்டும் ஓம்காரேஷ்வர் தீர்த்தத்தின் இருகரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. காவேரி என்கின்ற சிறிய நதி ஓம்காரேஷ்வர் அருகில் நர்மதையுடன் இணைகிறது. விசித்திரம் என்னவென்றால் அது நர்மதையை இரண்டு முறை சந்திக்கிறது. முதல் முறை அது நர்மதை நதியுடன் கலக்காமல் கடந்து செல்வதாக நம்பப்படுகிறது! மாந்தாதா குன்றை வலம் வந்த பின் காவேரி நர்மதையுடன் இணைகிறது எனக் கருதுவோரும் உண்டு! பின்னர் சுமார் இரண்டரை கி.மீ.க்கு அப்பால் நர்மதையை மீண்டும் சந்தித்து இணைகிறது. இதை காவேரி-நர்மதையின் இரண்டாவது சங்கமம் என்று குறிப்பிடுவோரும் உண்டு. இரண்டு சங்கமங்களுக்கு நடுவே உள்ளது மாந்தாதா குன்று. ஓம் என்ற எழுத்தை ஒத்த வடிவாதலால் இவ்விடம் ஓம்காரேஷ்வர் எனப் பெயர் பெற்றது. ஒரு தீவாக உள்ள இந்த புண்ணிய இடத்தில் ஓம்காரேஷ்வர் குடிகொண்டிருக்கிறார்.

சிவபுரி, விஷ்ணுபுரி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது ஓம்காரேஷ்வர். சிவபுரியில் ஓம்காரேஷ்வர் எனவும், விஷ்ணுபுரியில் அமரேஸ்வர் (அல்லது மமல்லேஷ்வர்) எனவும் இறைவர் எழுந்தருளியுள்ளார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!