​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 7 January 2023

சித்தன் அருள் - 1257 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை சபரிநாதன் சன்னதி!






3/01/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு! வாக்குரைத்த ஸ்தலம் : சபரிமலை சபரிநாதன் சன்னதி!

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலன்கள்!! நலன்கள் !!அப்பனே !!! கூடிக் கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.... நலன்கள் பல வழிகளிலும் கூட அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் இவ் ஐயன் பல வழிகளிலும் கூட இன்னும் எதை எதை என்று அறிய அறிய கலியுகத்தில் நாடகத்தை நடத்துவான் என்பேன் அப்பனே!!! மனித ரூபத்திலே வந்து பல பல ஆலயங்களுக்கும் கூட அப்பனே எப்படி எதை என்று கூற தீர்மானித்துக் கொண்டே தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!! நலமாகவே!!!

அதனால் அப்பனே கவலைகள் இல்லை உண்மையான எதை என்று கூற பக்தியும் அப்பனே சரியான பின் மனமும் இருந்தாலே போதுமானது என்பேன் இவந்தனுக்கு!!!!!

நிச்சயம் பின் ஓடோடி வருவான் என்பேன் அப்பனே!!!!

அதை விட்டு விட்டு அப்பனே எதை எதையோ செய்தாலும் நிச்சயம் ஏற்க மாட்டான் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் இதனை ஒரு விளக்கத்திற்காக எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!

ஒரு எதையென்று அறிய ஏழை மகன் அப்பனே!!! அவந்தனுக்கு பின் தந்தையும் இல்லை தாயும் இல்லை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் இதை அறிந்து பின்  இவ் ஐயனை காண!! காண!!  அப்பனே அவந்தனுக்கும் சந்தோஷங்கள்!!!  இப்படியே வந்து கொண்டிருந்தான்!!! 

ஆனால் அவந்தனையும் யாரும் கண்டுகொள்ளவில்லை!!! ஆனால் ஒருமுறை எதை என்று அறிய அறிய எவை என்று தெரிய தெரிய பின் ஐயனே வந்து பின் எதன் மூலம் பின் எவற்றை என்று அறிந்து மனித ரூபத்தில் வந்து ஐயனே( அந்த பக்தனை பார்த்து) எதை என்று அறிந்து இதில் உட்காரு!!! ( தூக்கிச் செல்லும் டோலி)

யான் உன்னை மேல்நோக்கி( மலைமீது) தூக்கி அழைத்துச் செல்கின்றேன் என்று கூறி ஆனாலும் அவ் ஏழை மகனும் எதை என்று அறிய பின் என்னிடத்தில் பணம் இல்லை ஆனாலும் அனைவரும் என்னை தூக்கிச் செல்ல வந்தார்கள் ஆனாலும் எந்தனிடத்தில் அவ்வளவு பணங்கள் இல்லை!! என்று கேட்க இல்லை நீ பணங்கள் தர வேண்டாம் என்பதை நினைத்து நினைத்து பின் ஒருவனே( ஐயப்பனே சுமந்து வந்தார்) சுமந்து கொண்டு வந்தான் இதுதான் சிறப்பு என்பேன் அப்பனே!!!

இதை பார்த்தீர்களா!!!! என்பேன் அப்பனே!!!

இறைவனுக்கு எதை என்று உணர்ந்து உணர்ந்து ஏதும் தேவையில்லை என்பேன் அப்பனே!!!! பக்தி தான் சிறந்தது என்பேன் அப்பனே!!!  அவ் பக்தி இருந்து விட்டால் அப்பனே இவ் ஐயன் தானாகவே வந்து பின் அனைத்தும் கொடுப்பான் என்பது திண்ணமான வாக்கு என்பேன் அப்பனே!!!

இதைத்தான் பக்தி!!! பக்திக்குள் நுழைய நுழைய ஆசைகள் பல பல கர்மங்கள் விலகி ஓடும் என்பேன் அப்பனே!!!!

ஆனால் மனிதனின் எண்ணங்கள் பேராசைகள் எல்லாம் நினைத்துக் கொண்டு வந்தாலே அப்பனே பின் கர்மம் தான் சேரும் என்பேன் அப்பனே!!!

சபரிமலை 18 படி விளக்கம்!! 

இங்கு முதல் படி என்னதான்? குறிக்கின்றதென்றால் அப்பனே பின் காமம்!! 
காமத்தை ஒழித்து விட்டாலே அடுத்த படி பின் ஏறிவிடலாம் அப்பனே!!!

ஆனால் முதல் படியிலே தோல்வியை அடைந்து விடுகின்றான் மனிதன்!!!

அப்படி இருக்கையில் இவ் ஐயனும் எப்படிதான்!!!??? கொடுப்பான்?? என்பேன் அப்பனே!!!!

அப்பனே அடுத்தது அடுத்த படி பொறாமை... அப்பனே அடுத்த படியில் பின் பொறாமையை விலக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!! 

ஆனால் அதையும் மனிதர்கள் விலக்குவதில்லை என்பேன் அப்பனே பின் இரண்டாவது படியிலும் தோல்வி அடைந்து விடுகின்றான்!!!!

மற்றொரு படியில் அப்பனே( மூன்றாம் படி) ஆசைகள்!!!!

அப்படி ஆக வேண்டும் இப்படி ஆக வேண்டும் என்பது அதாவது மூன்றாவது படி அப்பனே அப்பொழுதே தோல்வி அடைந்து விடுகின்றான் என்பேன் அப்பனே!!!

இவ் மூன்று படிகளுமே அப்பனே முக்கியமானவை!!!

இவ் மூன்று படிகளில் கூட இவ்வாறு நினைக்காது பின் எதையென்று ஏறினால் அப்பனே....வெற்றி அடுத்த நான்காவது படிக்கு சென்று விடலாம்!!!!

ஆனால் மூன்று படிகளிலே மனிதன் தோல்வியடைவதால் அப்பனே ஐய்யனும் கூட அமைதியாக தான் இருக்கின்றான்!!! புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே நான்காவது படி என்பது அப்பனே!!!!

இறைவா!!!!  நீயே எந்தனுக்கு பின் நான்கு திசைகளிலும் கூட!!! யாரும் இல்லை!!! யான் அனாதையே என்று சொல்லி ஏறினால் மட்டுமே அவனுடைய லீலைகள் பின் தொடரும் என்பேன் அப்பனே!!!!

அதாவது எதை எதை என்று அறிய அப்பனே ஐந்தாவது பின் படி என்பது கூட புண்ணியத்தைக் குறிக்கும்!!! 

எதை என்று அறிய அறிய!!!!

பின் எவை என்று கூற பின் ஐயனே!!!! எந்தனுக்கு அதாவது புண்ணியத்தை யான் பல செய்ய வேண்டும் அதனை தா!!!! என்று உணர்ந்தால் நீ ஐந்தாவது படியில் வெற்றி பெற்று விடலாம் என்பேன் அப்பனே!!!

ஆனால் ஐந்தாவது படியிலும் தோல்வி அடைந்து விடுகின்றான் நான்காவது படியிலும் கூட தோல்வியடைந்து விடுகின்றான் அப்பனே!!!!

இப்படி இருக்க ஐயன் எப்படித் தான் கொடுப்பான்??? என்பேன் அப்பனே!!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பல மனிதர்களுக்கும் கொடுத்து இருக்கின்றான்!!! ஆனால் படிகளில் ஏறும் பொழுது கூட அப்பனே எதை என்று உணர்ந்து!! உணர்ந்து!!!

ஐயப்பா!!!!! ஐயனே!!! என்று தான் ஏறிக் கொண்டிருக்கின்றார்கள் இன்னும் கூட பல மனிதர்கள்!!!! என்பேன் அப்பனே!!! நலமாகவே இதை இதை என்று அறிவதற்கு கூட அப்பனே எதை என்று அறிய அறிய 

இவ் ஆறு(6) எதை எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் தேவையில்லை ஐய்யப்பா!!!! அனைத்தும் தேவை இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால்
அவந்தன் ஏழாவது அறிவிற்கு சென்று விடுகின்றான்!!! 

ஐயனே வந்து பின் கையைப் பிடித்து அழைத்து அனைத்து படிகளிலும் ஏற்றி விடுவான் என்பேன் அப்பனே!!!

இதுதான் சூட்சமம் என்பேன் அப்பனே!!!!!

ஆறு படிகள் வரை சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் எதையென்று அறிந்து அறிந்து  பின் எவையென்று உணர்ந்து உணர்ந்து பின் ஏழாவது எதை எதை என்று அறிய அப்பனே பின் சொல்கின்றேன் அப்பனே!!!!! 

இவ் ஆறு படிகளை கடக்க வேண்டும் எதை என்று அறிய அறிய இவ் ஆறு படியை இப்படி கடந்தால் தான் மட்டுமே அப்பனே இவ் ஐயப்பனே எதையென்று உணர்ந்து உணர்ந்து நல்விதமாக கையை பிடித்து  அனைத்து படிகளிலும் ஏறச் செய்து அப்பனே வெற்றியை நல்குவான் அப்பனே!!!!

இதுதான் ரகசியம் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் அதனால் அறியாத மூடர்கள் அப்பனே இன்னும் உலகத்தில் வாழ்ந்து தான் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!

நலமாகவே எதையென்று உணர்ந்து உணர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

யானும் பல வழிகளிலும் கூட சுற்றிக்கொண்டே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் கர்மத்தை நீக்க!!! நீக்க!!!

ஆனால் மனிதன் ஒழுங்காக அதை பயன்படுத்தியதே இல்லை என்பேன் அப்பனே அப்படி இருக்க யான் எப்பொழுது எதை என்று அறிய அறிய மற்றொரு வாக்கும் யான் உரைக்க முடியும்??????????????? என்பேன் அப்பனே!!!!.....

எதை என்று ஏனோ தானோ என்று கேட்டு விடுவது( வாக்குகள்) அப்பனே அதை சரியாக பயன்படுத்துவது கூட பின் இல்லை என்பேன் மனிதன்!!! மனித முட்டாள் எதையென்று அறிய அறிய!!!

அதனால்தான் சித்தர்களும் கூட எதை என்று அறிய அறிய மனிதனைப் பார்த்து எதை என்று மனிதன் இப்படியெல்லாமா???? என்று கூட காறியும் துப்புகின்றார்கள் அப்பனே!!!!

இன்னும் அப்பனே கர்ம நிலையில் நிச்சயம் விழாதீர்கள் என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய ஏற்கனவே  பின் கர்மா பையை சுமந்து கொண்டு தான் வருகின்றீர்கள் என்பேன் அப்பனே அதையும் எதை என்று அறிய அறிய அப்பனே இனிமேலும் இவ்வுலகத்தில் ஆசைகள் எதுவும் தேவையில்லை எதை என்று அப்பனே கர்மா உன் உடம்புக்குள்ளே உள்ளது என்பேன் அப்பனே!!!! பல வழிகளிலும் கூட ஆட்டி வைக்கின்றது என்பேன் அப்பனே!!!

அதை எப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே பல வழிகளிலும் கூட மாற்றப்பட வேண்டும் என்றால் அப்பனே வரும் காலங்களில் எதை என்று அறிய அறிய அதனைப் பற்றியும் நிச்சயம் யான் சொல்வேன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய!!!!

அதனால்தான் அப்பனே ஓர் ஓர் திருத்தலத்திற்கும் பல சிறப்புக்கள் உண்டு ஆனாலும் அங்கு நிச்சயம் இறைவன் அழைக்க விடமாட்டான் என்பது தான் ஆணித்தரமான  உண்மை!!

ஏனென்றால் அப்பனே மனிதனின் ஆசைகள் பேராசைகள் அதனால் இறைவன் நிச்சயம் பின் வரவழைப்பதே இல்லை!!!!

அதனால் அப்பனே மனிதன் யான் சித்தனை வணங்கினேனே!!! யான் ஈசனை வணங்கினேனே!!!

பல பக்திகளை காண்பித்தேனே!!!! என்றெல்லாம் பொய் சொல்லி சுற்றி எதையென்று அறிய அறிய வலம் வந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே!!! 
வலம் வந்து வலம்  வந்து என்ன லாபம்???????  அப்பனே!!!! 

நிச்சயம் நீ ஒழுங்காக இருந்தால். அப்பனே எதை என்று கூற இறைவனே உன்னை அழைத்து வருவான் என்பேன்  தம் தன் திருத்தலத்திற்கு!!!! என்பேன் அப்பனே !!!!!

நலமாகவே பின் எதை என்று அறிய அறிய ஏன்?? திருத்தலத்திற்கு வர வேண்டும் என்பதைக் கூட அடுத்தடுத்த வாக்குகளில் கூட யான் உரைப்பேன் அப்பனே நலமாகவே!!! நலமாகவே!!!

அதை மனதில் வைத்துக் கொண்டு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பல வழிகளிலும் கூட எதையென்று அறிய அறிய அப்பனே பொருள்கள் சேர்ப்பதற்கு அப்பனே பல வழிகளிலும் மனிதன் திரிகின்றான் அப்பனே!!! 

யானும் இதை பல சித்தர்களும் கூட எடுத்துரைத்து விட்டோம் அப்பனே!!!

ஆனால் எதை என்று அறிய அறிய பின் அதாவது இறைவனிடத்திற்கு நாடி, நாடி பின் செல்ல வேண்டும் என்கின்றார்கள் சித்தர்கள்!!!!

ஆனாலும் பின் ஏன் செல்ல வேண்டும்???? என்று கூட மனதில் பின் உதிக்கின்றது மனிதனின் பின் எண்ணத்தில்!!!!!

அதாவது பின் அப்படி இருக்க எப்படித்தான் கர்மம் கரைவது???????????????....... என்பதைக் கூட!!!.....

ஆனால் அப்பனே பின் அங்கு காசுகள் இருக்கின்றது என்று சொல்லிவிடு!!!!!!!!........

ஓடோடி!!!!....... செல்வான்!!!! என்பேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அங்கே!!!!!

எதையென்று அறிய பல தங்க காசுகள் இருக்கின்றது என்று சொல்!!!

எங்கே இருக்கின்றது ??என்று ஓடோடி தேடி தேடி செல்வான் !!!!
என்பேன் அப்பனே!!!!


இதுதான் மனிதனுடைய சித்து(புத்தி) என்பேன் அப்பனே!!!!

ஆனால் நல்லதை சொல்!!!!

அத்திருத்தலத்திற்கு செல் என்று சொல்!!!! அப்பனே!!!!!!!

ஏற்கனவே யான் பார்த்திட்டேன் அனைத்து திருத்தலங்களையும்!!!!

பின் ஏன் செல்ல வேண்டும்?? என்றுதான் மனித ஜென்மங்கள் !!!!!! பின் எதை என்று அறிந்து அறிந்து இதுதான் கலியுகம் என்பேன் அப்பனே!!!

அதனால் மனிதன் திருந்துவதாக ஒவ்வொரு முறையும். வாய்ப்புகள் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் யாங்கள் சித்தர்கள் அப்பனே !!!! இதனைப் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நல்கும் என்பேன் அப்பனே!!!

நல்விதமாக அப்பனே பின் ஏதும் தெரியாதவனுக்கு  அனைத்தும் தெரியுமாம்!!!!!!!!!!???? என்ற எண்ணம் தான் அப்பனே ஓங்கி நிற்கின்றது!!!!

இவ்வுலகத்தில் அப்பனே அனைத்தும் தெரிந்தும் அப்பனே தெரியாதபடி இருக்கின்றானே!!!!!! அவன் தான் எதை என்று அறிய அறிய மாமனிதன் என்பேன் அப்பனே!!!!!

அப்படிப்பட்டவனை அப்பனே யாங்களே அழைத்துச் சென்று அப்பனே பல வழிகளில் கூட உண்மைகளை உரைத்து உரைத்து உயர்வடைய செய்வோம் என்பது முக்கியமான வாக்கு அப்பனே!!!!!

ஐயன் அனைவரையும் கூட இங்கு பார்த்திட்டு அனைவரையும் கூட அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஆசிகள் கொடுத்து விட்டான் அப்பனே!!!!!

நலன்கள் இப்பொழுது கூட இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறான் அப்பனே!!!!

ஆனால் அதை யார் தான்???? உணர்ந்தார்கள்!!! அப்பனே!!!!!!!!!!!!

ஏதோ!!!!!!! வருவது எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே!!!!

பின் விளையாட்டாகவே வருகின்றார்கள் பலர் என்பேன் அப்பனே!!!!( சித்தன் அருள் 1163 இல் சபரிமலை வாக்குதன்னில் சபரிமலைக்கு எப்படி செல்ல வேண்டும்? எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்? எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது!!!   என்பதை குருநாதர் தன்னுடைய வாக்கினில் உரைத்திருக்கின்றார்)

இப்படி இருக்க இவ் ஐயனே தண்டிக்கபோகின்றான்!!! என்பேன் அப்பனே!!!! 

எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் ஐயன்!!!!

அப்பனே கோபம் வந்திட்டால்!!! ???? அப்பனே அனைத்தையும் அழித்துவிட்டு செல்வான் அப்பனே!!!!!

இதுதான் உண்மை ரகசியம் என்பேன் அப்பனே!!!!

அதனால் மனிதர்களே எதை என்று உணர்ந்து உணர்ந்து உண்மையான பக்திக்கு வாருங்கள்!!!!

உண்மையான பக்திக்கு வந்தால் இறைவனே அனைத்து சுகங்களையும் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!! அது அழிக்க கூடியதாக எதை என்று அறிய அறிய அழிக்க கூடியதாகவே இருக்கும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் இறைவன்  கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது !!!!

மனிதன் கொடுப்பதை நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் இறைவனால் தடுக்க முடியும் என்பதெல்லாம் பெரியோர்கள் வாக்கு என்பேன் அப்பனே!!!!!

நல் விதமாக பாலாம்பிகை தேவியும் அதிகாலையிலே அப்பனே ஆசிர்வதித்து சென்று விட்டாள் என்பேன் அப்பனே!!!!! ஒரு சிறு நொடியில் கூட  அவ் அம்மை எதை என்று கூற அவ் அம்மையின் மனதில் உதித்து எதை என்று கூட ஆசிர்வாதங்கள் அப்பனே நலன்களாக நலன்களாக எதை என்று அறிய அறிய அப்பனே தேவியின் அருளும் பரிபூரணம் என்பேன் அப்பனே நலமாக நலமாக வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே!!!!

இவ் ஐயன் பின் பல வழிகளிலும் கூட அப்பனே எதை எதை எப்படி செய்ய வேண்டும்??  என்பதை கூட இழுத்து செல்வான்!!!  அப்பனே!! 

நல்விதமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய இவ் மைந்தனின் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் சிறப்புக்கள் எவை என்று அறிய அப்பனே இன்னொரு வழியும் காட்டுகின்றேன் அப்பனே!!! 

ஆனால் ஒரு ஏழை இருந்தான் அப்பனே அதாவது எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே!!! 

ஆனாலும் அவந்தன் ஐயப்பன் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் பல செலுத்திக் கொண்டே வந்தான்!!!! ஆனாலும் அவந்தனுக்கு யாருமே உதவிடவில்லை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அவந்தனோ!!!! பின் சபரிநாதனே!!!! ஐயப்பனே!!! நீ தான் அனைத்தும் எந்தனுக்கு!!! ஆனால் யாரும் என்னை பார்க்க கூட வரவில்லையே ஐயப்பனே !!! என்று அறிந்து அறிந்து பின் சென்று கொண்டிருந்தான்!!! ஆனாலும் அனைவரும் இவன் பைத்தியக்காரன், இவன் ஏழை இவனிடத்தில் ஒன்றுமே இல்லை என்றெல்லாம் தன்னந்தனியாக அதாவது தனித்தனியாக போய்விட்டார்கள் என்பேன்!!

ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து அதாவது இச்சபரிமலையில் மீது இருந்தே பார்த்தான் என்பேன் ஐயன்!!! இதனால் எதை என்று அறிந்து அறிந்து மறுரூபம்( மாறுவேடத்தில் ஐயப்பன்) போட்டுக்கொண்டு அங்கே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நன்றாகவே போய் விட்டான் என்பேன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து!!!
அதனால் பின் அப்பனே!!!

உந்தனுக்கு என்னதான் வேண்டும்??? என்று கூட!!!!

பின்!!!! யானும் இங்கே கூட பிறந்து விட்டேன் அதாவது மனித ரூபத்தில் ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து என்னை கவனிக்க ஆளில்லை எதை என்று அறிந்து யாருமே இல்லை உற்றார் உறவினர் யாருமே எதுவுமே இல்லை!!!

பின் யாராவது உதவிடுவார்களா??? என்று எண்ணினேன்!!!!

ஆனாலும் பொய் சொல்லி பிழைப்பவர்களுக்கெல்லாம் மனிதர்கள் உதவுகின்றார்கள்!!! ஏதும் இல்லாதவனுக்கு யாரும் உதவுவது இல்லை என்று கூட!!!!

ஆனாலும் அய்யன் யான் உதவுகின்றேன் உந்தனுக்கு என்ன வேண்டும்??? என்று எதை என்று அறிந்து அறிந்து!!!!

அதனால் எந்தனுக்கு ஏதும் தேவையில்லை பின் ஐயனை மட்டும் பார்க்க வேண்டும் என்று கூறினான்!!! 

ஆனால் நிச்சயம் பின் நீ 10 நாட்களிலே என்னிடத்தில் என்னிடத்திற்கு வருவாய் அதாவது சபரிமலையிலே நிச்சயம் நீ என்னை காண்பாய்!!!! என்று கூட!!!

ஆனாலும் அவந்தனுக்கு சந்தோஷங்கள்!!!!! 

இருந்தாலும் பின் யார்??? என்னை அழைத்துச் செல்வார்கள் என்று கூட!!!

ஆனால் அதே பத்து நாட்களில் எதை என்று அறிந்து அறிந்து பின் அதாவது ஒரு தூதுவனை அனுப்பி அய்யன் நல்விதமாகவே பின் ரதத்தின் மேலே அழைத்து வந்தான்!!!! எதை என்று அறிந்து அறிந்து!!!!

வாருங்கள் வாருங்கள் எதை என்று என்று இதனால் நல்விதமாகவே இங்கு வந்து எதை என்று உணர்ந்து உணர்ந்து அவந்தனுக்கு கவலைகளும் போயிற்று!!! மிகுந்த செல்வந்தனாக இருக்கின்றான் இப்பொழுது!!!!! பல வழிகளிலும் கூட அன்னத்தை அளித்துக் கொண்டே இருக்கின்றான் அவன்!!!!!! மேன்மைகள் பெற்றுக் கொண்டே இருக்கின்றான்!!!! எதையென்று அறிந்து அறிந்து!!!! 

அதனால்தான் பின் உயர்ந்த இடத்தை அடைய வேண்டுமென்றால் மனதில் ஏதும் நினைக்க கூடாது இறைவா!! தா!! தா!!! என்று கூட !!

இறைவா நீயே என்று நிச்சயம் இருந்தால் அனைத்தும் கிட்டும் என்பது உண்மை உண்மை!!! அதனால் நல்விதமாக பின் ஆசிகள் !! ஆசிகள்!!!

எதை என்று அறிந்து அறிந்து இன்னும் சித்தர்கள் இவ் மலையில் கூட ஆசிகள் எதை என்று அறிந்து அறிந்து பின் தியானமும் செய்து கொண்டிருக்கின்றார்கள் பல வழிகளில் கூட இதனால் நலன்களே உண்டு உண்டு!!!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிர்வாதங்கள் மீண்டும் வந்து உரைக்கின்றேன் நலம் ஆசிர்வாதம்!!!! ஆசிர்வாதம்!!!

பின்குறிப்பு: வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!! அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா, தேவி பரமேஸ்வரியை தாயாகவே கருதிக் கொண்டு ஆலயம் எழுப்பி பூசை புனஸ்காரங்கள் செய்து வரும் குருசாமி ஒருவர் தலைமையில் தான் சபரிமலை சென்றார்.

அந்த குருசாமிக்கும் அகத்தியரின் தனிப்பெரும் கருணை எப்பொழுதும் உண்டு!!!

சபரிமலை செல்வதற்கு முன்பு கூட அவந்தனுக்கு பாலாம்பிகை அம்மையின் தரிசனம் அதிவிரைவிலே கிடைக்க பெறுவான் என்பதை ஜீவனாடி வாக்கின் மூலம் திரு ஜானகிராமன் அய்யாவிடம் குருநாதர் அகத்தியர் பெருமான் தெரிவித்திருந்தார்!!!

அந்த குருசாமி தலைமையில் திரு ஜானகிராமன் ஐயா உட்பட பக்தர்கள் குழு சபரிமலை சென்றது!!!

சபரிமலை சென்று நல்படியாக தரிசனம் செய்துவிட்டு ஐயன் சன்னதிக்கு முன்பாக நின்று கொண்டு இருந்த பொழுது ஒரு பெண்மணி திடீரென ஓடி வந்து சாமி!!!!!!!! என்று அந்த குருசாமி கையைப் பிடித்து எனக்கு ஆசிகள் கொடு!!!! என்று கேட்க குருசாமியும் என்னவென்று தெரியாமல் திகைத்து அம்மையே இங்கு ஐயப்பனின் ஆசிர்வாதங்கள் அனைவருக்கும் உண்டு என்று கூற அந்த பெண்மணியும் சிரித்துக் கொண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்து குருசாமியிடம் கொடுக்க அவர் வேண்டாம் என்று மறுக்க!!! மீண்டும் வற்புறுத்தி கொடுக்க இவரும் வாங்கி வைத்துக் கொண்டார்!!! இதெல்லாம் சில மணித்துளிகளிலே நடந்து விட்டது !!

பின்பு அந்த பெண்மணி எங்கு சென்றார் என்று தெரியவில்லை!!!! அதை குருசாமியும் மற்ற அடியவர்களும் கூட பெரிதாக எண்ணிவிடவில்லை ஆனால்  சற்று நேரத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் சுவடியில் வந்து கூறிய வாக்கில் பாலாம்பிகை அம்மை வந்து ஆசிர்வாதம் செய்து விட்டு சென்றாள் என்றதை கேட்டு குருசாமியும் உடன் சென்றிருந்த பக்தர்களும் பக்தி பரவசத்தில் ஆழ்ந்து போய்விட்டனர் அம்மையே சரணம்!!! தேவியே சரணம்!!!! ஐயப்பனே சரணம்!!!! என்று அனைவரும் நன்றி கூறினர்!!! திரு ஜானகிராமன் அய்யா அவர்களுடன் சபரிமலை யாத்திரை சென்ற அனைவருக்கும் ஐயப்பனின் திருவருளும் தேவியின் தரிசனமும் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சியோடு திரும்பினர்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Agastheeswaraya Namaha. Swamiyey Saranam Aiyyapa, Balambikayayey Potti Potti

    ReplyDelete