​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 2 January 2023

சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6


கேள்வி: அறுபடை வீட்டை எப்படி தரிசிக்க வேண்டும்?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து, அறிந்து. இதன் விளக்கம் யான் முன்பே உரைத்துவிட்டேன், அப்பனே. ஆனாலும் இப்பொழுது தேவை இல்லை என்பேன் அப்பனே! யான் முருகனிடம் கேட்டிட்டு, வந்து உரைக்கின்றேன், அல்லது முருகனே வந்து உரைப்பான்.

கேள்வி: "முருகரை வழிபாடு செய்கிற முறையை பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?"

குருநாதர்: "அப்பனே! முருகா என்று அழைத்தால், அவன்தானே சொல்லிக் கொடுப்பான், அப்பனே!.

கேள்வி: உத்தரகோசமங்கை தலத்தின் சிறிதளவுக்கான புராணம் உரைக்க முடியுமா?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! எவற்றின் தன்மைகளை புரிந்து! புரிந்து! அப்பனே! யான் என்ன செப்புவது? ஆனாலும், ஓர் மங்கை, எதை என்று அறிந்து அறிந்து, அதாவது, அத்தலத்தில் இருந்து, எது என்று அறியாமலே, பல மனிதர்களுக்கு உதவிகள், பல தான தர்மங்கள் (செய்து வந்தாள்). ஆனாலும், பல வழிகளிலும் இன்னல்கள். ஆனாலும், ஈசனை நோக்கி நோக்கியே. ஆனாலும், அங்கே உருவெடுத்தான் அப்பனே! ஈசனே!  ஈசனும் உருவெடுத்து, கூடவே பார்வதி தேவியும் வந்திட, ஈசனின் சொத்துக்கள் ஆபரணங்கள், பொக்கிஷங்கள் எல்லாம் அங்கே தான் கிடக்கின்றது அப்பனே! இதை நீ புரிந்து கொள்வாயா? சிறிதளவே சொன்னேன். இன்னும் ஏராளமாக சொல்லிவிட்டால், மனிதனே திருத்தலத்தையும் அழித்து விடுவான்.

"சரி! இதுவே போதும் அய்யா!"

கேள்வி:"சிவபுராண சூட்ச்சுமத்தை விளக்க முடியுமா?

குருநாதர்: "அப்பனே! எது என்று அறிய! அப்பனே! அதாவது, நாயைவிட யான் கேவலமானவன், என்று ஒருவன் எப்பொழுது நினைக்கிறானோ, அவந்தனுக்கு முக்தி.

அடியேன்: "உங்கள் பதில் மிக சரியாகத்தான் உள்ளது. இந்த கேள்வியை அடியேனிடம் கேட்டவர், எப்பொழுதும் நாய்க்கும் அடியேன்! என்றுதான் கூறுவார்!"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடியில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நம
    மிக்க நன்றி ஐயா🙏🌹🙏

    ReplyDelete
  2. அப்பனே முருகா 🙏... ஓம் அகத்தீசாய நம 🙏... இறைவா நன்றி

    ReplyDelete