​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 18 January 2023

சித்தன் அருள் - 1271 - அகத்தியர் ராஜ்ஜியத்தில் அவர் திருநட்சத்திர விழா!



​அமைதியாக விலகி நின்றது பல விஷயங்களை உணர வைத்தது. அகத்தியப்பெருமான், குருவுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் என, தானே உதாரணமாக நின்று, நமக்கு காட்டினார். முதல்சித்தன் ஆக இருந்தலும் குருவுக்குப் பிறகுதான் யான் என்பதை, குரு-சிஷ்ய தொடர்பு மூலம் நமக்கு உணர்ந்த்தினார்.

அடியேனுக்கு நம்பிக்கை இருந்தது. ஒரு நல்ல முகூர்த்தத்தில், முருகப்பெருமானுக்கு அவர் மரியாதை செய்தபின் தனக்கான விஷயத்தை செய்யச் சொல்வார் என. அதே போல், 10 நாட்களில் ஒரு அகத்தியர் அடியவர் வந்து முருகப்பெருமானுக்கு கவசம் செய்து தர ஒப்புக்கொண்டார். வேலைகள் மிக வேகமாக நடந்தது.

கந்த சஷ்டி அன்று, மாலை அபிஷேக ஆராதனைகளுடன் முருகப்பெருமானுக்கு வெள்ளி கவசம் சமர்ப்பிக்கப்பட்டது.

அகத்தியப்பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்குமான வெள்ளி அங்கி வேலைகளை தொடங்கலாம் என உத்தரவு கேட்ட பொழுது, சித்தன் அருள் வலைப்பூ வழி அனைவரையும் தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சிறிதளவேனும், பங்கு பெறுகிற வாய்ப்பு, அடியவர்களுக்கு மறுக்கப்பட்டது. அடியேனின் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டும், மேலும், ஒரு சில அகத்தியர் அடியவர்களின் வாட்ஸாப் குழுவுக்கு மட்டும் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டோம். குருநாதரின் ஜென்ம நட்சத்திரம் 09/01/2023 அன்று கவசத்தை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

ஒரு 200 அடியவர்கள் பங்கு பெற்று, கவசம் உருவானது. யாரெல்லாம், யாருக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என அகத்தியப் பெருமான்தான் தீர்மானித்தார். ஆறு கிலோ எடையில், மிக மிக அழகாக கவசம் வந்து சேர்ந்த பொழுது, அதன் அழகில் அடியேனே அசந்து போய் விட்டேன். அத்தனை அற்புதமான கலை திறனுடன் அதை உருவாக்கியிருந்தார், சிற்பி.

இவ்விடத்தில், இந்த அங்கி உருவாக பங்கு பெற்ற அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். இனி, குறைந்தது 70 வருடங்களுக்காவது அந்த அங்கி அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா சிலையில் பூஜைக்காக சார்த்தப்படும். அந்த சிலையின் சைதன்யம் அந்த அங்கிக்கும் கிடைக்கும். பங்கு பெற்றவர்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல், தங்களின் சந்ததிகளுக்கும் புண்ணியத்தை சேர்த்து வைத்துக் கொண்டுள்ளீர்கள். எங்கேனும் ஒரு புண்ணியத்தலத்தில், இதே போல் கவசம் செய்ய பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தால் விட்டு விடாதீர்கள். கவசம் சமர்ப்பணம் என்பது எப்பொழுதாவது ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சி என்பதால், சித்தன் அருள் வழி அடியவர்களை வந்து தரிசிக்கும்படி அழைப்பு விடுத்தோம்.

அகத்தியரின் திருநட்சத்திர தினமும் வந்தது. அகத்தியரின் ராஜ்ஜியத்துக்கு வந்திருந்த பல அடியவர்களுக்கு, அன்றைய தினம் ஏதேனும் ஒரு உழவாரப்பணி, அகத்தியருக்கு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அபிஷேக பூஜைகளுக்கான பொருட்கள், பல இடங்களிலுமிருந்து அவர் சன்னதிக்கு வந்து சேர்ந்தது. மிக மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, அவர் அருளால் அபிஷேக பூசைகள் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.

புண்ணிய நதி தீர்த்தம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், மாதுளை கனி, அரிசி மாவு, மஞ்சள் பொடி, சந்தனம், களபம், 108 மூலிகைப்பொடி, வில்வப்பொடி, நெல்லிப்பொடி,  குங்குமாதி தீர்த்தம், நவாபிஷேக கும்ப தீர்த்தம, பச்சை கர்ப்பூரம், விபூதி, குங்குமம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. கோவில் முழுவதும் அடியவர்கள் நிறைந்து இருந்தனர். அனைவரையும், அகத்தியப்பெருமான் கட்டிப் போட்டதுபோல், அமர்ந்திருந்தது, உணர முடிந்தது. ஜவ்வாது, சந்தானம், துளசி போன்ற வாசனை கலவையுடன், அவர் சன்னதிக்குள், காற்று வீசியபடி உள்ளே சென்றது. எத்தனைபேர் இதை உணர்ந்தார்கள் என தெரியவில்லை.

அபிஷேகம் நிறைவு பெற்றதும், மண்டபத்தில், அகத்தியப்பெருமானின், லோபாமுத்திரை தாயின் புது வெள்ளி கவசம், வாழை இல்லை விரித்து வைக்கப்பட்டு, விளக்கேற்றி, பூவிடப்பட்டு, ஒரு முறை கோவில் சன்னதிகளை வலம் வந்து அகத்தியர் சன்னதிக்குள் சார்த்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது.

கவசம் சார்த்தி, அலங்காரம் முடித்து, தீபாராதனைக்காக அனைவரும் காத்திருந்தோம்.

குருநாதர் வந்திருக்கிறார், எனவே, இன்றே அதைப் பற்றிய வாக்கு நாடியில் கிடைத்தால் நன்றாக இருக்குமே, என அடியேன் நினைத்தேன், பிரார்த்தனையாகவும் கொடுத்தேன். அன்று இரவு கோவிலை விட்டு இல்லம் திரும்பும் முன்னரே அவரின் நாடி வாக்கு வந்து சேர்ந்தது, அடியேனுக்கு மிக மிக மன நிறைவாக இருந்தது. ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இது அகத்தியப்பெருமானின் ராஜ்ஜியம். இந்த சன்னதியை நினைத்து, அவருடைய, லோபாமுத்திரை தாயினுடைய பாதத்தில் ஒரு பிரார்த்தனையை சமர்ப்பித்தால், அதை மிக சிறப்பாக நிறைவேற்றிக் கொடுக்கிறார் என்பது தத்ரூபமான உண்மை.

அலங்காரத்துக்குப்பின் தீபாராதனைக்காக திரை விலக்கிய பொழுது அந்த சன்னதியில் திகழ்ந்த தேஜஸை அடியேனால் நம்ப முடியவில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்தது. அம்மாவும், அப்பாவும் புது கவசத்தில் ஜொலித்தார்கள் என்பதே உண்மை. அனைவருக்கும் மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது. இருகரம் கூப்பி, அவர் பாதத்தை பார்த்து, "அடியேனுக்கு கொடுத்த வேலை, உங்கள் அருளால் நிறைவுபெற்றது! மிகுந்த திருப்தியாக இருக்கும் என நினைக்கிறேன். அனைவரையும், அருளி காத்தருள்க" என வேண்டிக் கொண்டேன்.

பூசைகள் நிறைவு பெற்றதும், அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாயாரின் ஆசீர்வாதத்துடன் பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஒரு சில அகத்தியர் அடியவர்களால், வந்திருந்த அனைவருக்கும்

1. அகத்தியப்பெருமான் லோபாமுத்திரைதான் படம்,
2. அவர்கள் படம் பதித்த ஒரு ரூபாய் நாணயம்,
3. 786, 354, 108 போன்ற எண்கள் உள்ள ரூபாய்,
4. சிறிய படம் (அகத்தியர், கிருஷ்ணர்) வழங்கப்பட்டது.

அகத்தியப்பெருமானின், லோபாமுத்திரை தாயின் அருள், ஆசீர்வாதம் அனைவருக்கும் வழங்கியதாக, அகத்தியப்பெருமான் பின்னர் வாக்கில் உரைத்தார்.

உங்கள் அனைவரையும் தெரிவிப்பதற்காக, முன் தகவலாக உரைக்கிறேன்.

1. அகத்தியர் ராஜ்ஜியத்தில் கும்பாபிஷேகம் இந்த வருடம் மே மாதம் 21ம் தேதி நடத்த கோவில் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2. லோபாமுத்திரை தாயின் மார்கழி மாத சதய திருநட்சத்திரம் 18/12/2023 திங்கள் கிழமை அன்று வருகிறது.
3. அகத்தியப்பெருமானின் மார்கழி மாத ஆயில்யம் திருநட்சத்திரம், 30/12/2023 சனிக்கிழமை அன்று வருகிறது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........தொடரும்!

6 comments:

  1. அருமை ஐயா
    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நமக
    🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் அகத்தியரிடம் வாக்கு கேட்டு சொல்லுங்கள் ஐயா அனைவருக்கும் பயன்பெறும்

    ReplyDelete
    Replies
    1. ​வணக்கம்! பலருக்காகவும் அகத்தியப்பெருமானிடம் குழந்தை பேறு அமையக் கேட்ட பொழுது, அது அவரவர் பூர்வ கர்மாவும், பிறப்பும் சம்பந்தப்பட்டது. பிறப்பு என்பது தெய்வ ரகசியம். அதை தீர்மானிக்கும் உரிமை இறைவனிடம் தான் உள்ளது. இருப்பினும், சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு சிறு சிறு பரிகாரங்கள் மூலமாகவும் பூர்வ ஜென்ம பாபத்தை குறைத்துக் கொள்வதாலும் அமைகிறது. ஜாதகத்தில் அல்லது பூர்வ ஜென்மங்களில் பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் சற்று தாமதிக்கும். ஆயினும் செய்கிற பரிகாரங்களை ஆத்மார்த்தமாக செய்து, விதி விலகி வழிவிட காத்திருக்கத்தான் வேண்டும். ஒரு போதும் மனம் தளர்வது கூடாது. தாயும், தந்தையாகவும் விரும்புகிறவர்கள், பொறுமையாக இருக்கவும் வேண்டும், மிக மிக உயர்ந்த பக்தியோடு இருக்க வேண்டும், என்றார்.

      நாடியில் பொதுவாக்கு படிக்கும் பொழுது, இதை பற்றி மீண்டும் கேட்க்கிறேன்.

      Delete
    2. https://siththanarul.blogspot.com/2023/01/1272-15.html

      Delete
  3. Dear Agnilingam Sir,

    Om Agatheesaya Namaha!!!

    First of all thank you so much for guiding me all thru this year and I am reading Sithan Arul blogs, continuously for last 10+ years & trying to adhere what Agathiar peruman given in all the Nadi readings.

    I had an immense pleasure meeting you (Nov'22) in Kodaganallur, Tirunelveli and received Abhishek Theertham from you.

    May I ask you a query which is in my mind for almost a year, humble request to clarify what is "God's blessing" means and how does it positively impact the person's life (removing karma). It would be great if you could share your experiences about blessings to illiterate people like me in Spiritual world.

    Om Agatheesaya Namaha!!
    Om Gang Ganapatheeya Namaha!!
    Om Saravana Bavya Namaha!!
    Om Namasivaya Namaha

    ReplyDelete
  4. Om Sri LopaMudra Devi Sametha Agastheeswaraya Namaha. Thank you

    ReplyDelete