​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 September 2021

சித்தன் அருள் - 1038 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


கருட பகவான், பெருமாளை பணிந்து வணங்கி,

"சர்வலோக நாயகா! யமலோகம் என்பது இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அதன் தன்மை யாது? அவற்றை தயை செய்து கூறி அருள வேண்டும்" என்று வினவினார்.

"கருடன்! மனுஷ்யர்கள் வாழும் மனுஷியலோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பதினாயிரம் காதம் இடைவெளி உள்ளது. அந்த எமலோகத்தில் வாழும் எம தர்மராஜனான கூற்றுவன், உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும், ஜீவனைப்பிடித்து வரும்படியாகத் தன் தூதுவர்களிடம் கூறுவான். யாவுமே அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்களும், கனலும் காயும் சினமுடையவர்களும், பாசம், முசலம் முதலிய ஆயுதங்களைத் தரித்தவர்களும், கார்மேகம் போன்ற கருப்பு நிற ஆடைகளை அணிந்தவர்களுமான மூவகைத் தூதுவர்களை ஏவியனுப்புவான். அவ்யம் கிங்கரர்கள் மூவரும் சென்று. வாழ்நாள் முடிந்த ஜீவனை, பாசத்தால் கட்டிப் பிடித்து. காற்றின் உருவமான தேகத்தில் அடைத்துக்கொண்டு, யமலோகத்திற்கு செல்வார்கள். அங்கு சென்றதும், அந்த ஆவியுருவ ஜீவர்களை, யமபுரிக்கு தலைவனும், நாயகனுமான கால தேவனுக்கு முன்னால் கட்டவிழ்த்து நிறுத்தி,

"தர்மராஜரே! தாங்கள் கட்டளைப்படி, வாழ்நாள் முடிந்த ஜீவனை தங்களது சன்னதி முன்பு கொண்டுவந்து நிறுத்தி விட்டோம்! இனி, தங்கள் ஆக்ஞ்சைப்படி நடக்க சித்தமாயிருக்கிறோம்!" என்று கூறி ஒருபுறமாக ஒதுங்கி நிற்பார்கள்.

எருமை வாகனனாகிய, எமதர்மராஜன், அத்தூதர்களை நோக்கி "ஏய் கிங்கரர்கள், நன்று! நன்று! இந்த சீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டு, இன்றிலிருந்து பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி அவனை மீண்டும் நம் திருச்சபை முன்பு நிறுத்துக!" என்று கட்டளையிடுவான்.

உடனே எமதூதர்கள் ஒரு நொடி நேரத்திற்குள், அந்த சீவனை கட்டிப் பிடித்து, 86000 காதவழி கடந்துவந்த அந்த சீவனின் இல்லத்திற்க்கே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள். இதுபோல் இறந்த ஜீவன், எனலோகத்திற்கு சென்று மீண்டும் பூவுலகத்தில் உள்ள அவனது இருப்பிடத்திற்க்கே மீண்டும் வருகின்றபடியால், இறந்தவன் உடலை உடனடியாக எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்யாமல், சிறிது நேரம் கழிந்த பிறகே அவ்வாறு செய்யவேண்டும். எமதூதர்களால், ஆவிஉருவில் பாசத்தால் கட்டப்பட்டிருந்த ஜீவன், அவர்களால், அவிழ்த்து விடப்பட்டவுடன், வாயு வடிவமுடைய அந்த உயிர், சுடுகாட்டிலே தன சிதைக்கு பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று, திரும்பவும் புகமுடியாதவாறு, தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியும் தன் உடலை பார்த்து, "அய்யகோ! அந்தோ! ஐயையோ!"  ஓலமிட்டு அழும். அதே ஜீவன், புண்ணியம் செய்த ஜீவனாக இருக்குமானால், "இந்த உடல் எரிந்து ஒழிந்ததே நல்லது!" என்று மகிழ்ச்சி அடையும்.

கருடா! சிதையிலே தீ மூட்டி எரியும் தீயிலே உடலானது எரிந்து, வெந்து, சாம்பலாகும் போது தலையானது, வேகும் வரையில் அந்த ஜீவனுக்கு தன உடல் மீதும், அந்த உடல் சம்பந்த பட்ட பொருட்கள், உறவு தொடர்பு, ஆகியவற்றின் மீதும் உள்ள ஆசையானது ஒழியாது. எரிகின்ற தீயிலே, சிரசு முதல் பாதம் வரை தேகமெல்லாம் வெந்து, சாம்பலான உடனே, சீவனுக்கு பிண்டத்தால் ஆன சரீரம் உண்டாகும். இறந்தவனின் புத்திரன் முதல் நாள் அன்று போடும் பிண்டத்தால் சிரசும், இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்து தோலும், மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும், நான்காம் நாள் போடும் பிண்டத்தால் வயிறும், ஐந்தாம் நாள் போடும் பிண்டத்தால் உந்தியும், ஆறாம் நாள் போடும் பிண்டத்தால், பிருஷ்டமும், ஏழாம் நாள் போடும் பிண்டத்தால், குய்யமும், எட்டாம் நாள் போடும் பிண்டத்தால் துடைகளும், ஒன்பதாம் நாள் போடும் பிண்டத்தால், கால்களும் உண்டாகி, பத்தாம் நாள் அன்று அவன் போடும் பிண்டத்தால், சரீரம் முழுதும் பூரணமாக உண்டாகும். ஜீவன், உடலை விட்டு பிரியும் முன்பே, மனைவி மக்களோடு, அவன் வாழ்ந்து வந்த வீட்டுக்கு வந்து, வீட்டின் உள்ளே செல்லாமலே, அந்த வீட்டின் வாசலில் நின்று, வீட்டுக்குள் போவோர், வீட்டிலிருந்து வெளியே வருவோர்களை பார்த்து, பசி தாகத்தால் "ஆ,ஆ" என்று கதறிக்கொண்டு பதறி நிற்பான். அந்த ஜீவன், பிண்ட உருவை பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரெண்டாம் நாளிலும் தன புத்திரனால், பிராமண முகமாய் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதிமூன்றாம் நாள் அன்று, எம தூதர்கள், எம தர்மனின் கட்டளைப்படி, அங்கு வந்து, அந்த பிண்ட உருப்பெற்ற ஜீவனை பாசத்தால் பிணித்து கட்டிப்பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல, அவன் தன வீட்டை திரும்பி, திரும்பி பார்த்து, கதறிக்கொண்டே எம லோகத்தை அடைவான்.

கருடனே! பிண்ட சரீரம் பெற்று சீவன், எம கிங்கரர்களால் பாசத்தால் பிணைத்து கட்டப்பட்ட நிலையில், எம கிங்கரர்களோடு, நாள் ஒன்றுக்கு 247 காதவழி, இரவும், பகலுமாக நடந்து செல்ல வேண்டும். அவன் போகும் வழியில், கூரிய பற்களை உடைய வாள் போன்ற இலைகளை உடைய ஒரு கானகத்தை கடந்து செல்ல வேண்டி இருக்கும். கருடா! மரங்கள் அடர்ந்த காடுகளில் செல்வது யாருக்கும் கடினமானதல்லவா? சூரி இலைகளான வனத்தில் எவ்விதம் செல்வது? அக்காட்டின் ஊடே நடக்கும் பிண்ட ஜீவன், பசியாலும், தாகத்தாலும் மிகவும் வருந்தி தவிப்பான். அவ்வாறு செல்லும் வழியில் அவன் படும் துன்பத்தை யார்தான் சொல்ல முடியும்? இது ஒரு புறம் இருக்கட்டும்!

சித்தன் அருள்.................தொடரும்!

Tuesday 28 September 2021

சித்தன் அருள் - 1037 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்!








15/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த இடம். 

ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்

நல் முறைகள் ஆகவே இத்தலம் உயர்வடையும் என்பேன் பல சித்தர்களும் இங்கு நாடி வந்து பல சித்துக்களும் செய்தார்கள் என்பேன்.

அப்பனே இங்கு ஓர் பெரிய மண்டபம் உண்டு என்பேன் இதனால் அதில் கூட பல சித்தர்கள் ஞானிகள் வந்து அமர்ந்து உறங்கி சென்று இருக்கின்றார்கள் முன்னொரு காலத்தில் என்பேன்.

நல் முறைகள் ஆகவே எவை என்று கூற இதனையும் நல் முறைகள் ஆகவே கருவூரானும் (கருவூர் சித்தர்) அமைத்தான் என்பேன்.

நல் முறைகளாக இதனால் எவ்வாறு என்பதையும் கூட இத்தலத்திற்கு இன்னும் புகழ் பெற நல் முறைகள் ஆகவே வலம்வந்து வலம் வந்து கொண்டிருந்தால் தொழிலில் உயர்வு பெறலாம் என்பேன் என்பேன்.

தொழிலுக்கு அதிபதி இவனே என்பேன்.

அப்பனே நல் முறைகளாக இன்னும் பல திருத்தலங்கள் இன்னும் சிதிலடைந்து கொண்டே இருக்கின்றது ஆனாலும் மனிதர்களோ எவை எவை என்று புதுப்புது திருத்தலங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் பழைய திருத்தலங்களில் அப்பனே பல அற்புத சக்திகள் உள்ளன என்பேன் அங்கு சென்றால்தான் மட்டுமே கலியுகத்தில் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்பேன்.

ஆனாலும் இத்திருத்தலமும் அதில் ஒன்று என்பேன்.

நல் முறைகளாக விளக்கங்கள் அப்பனே புண்ணியங்கள் எவை என்று செய்ய அப்பனே நல் முறைகள் ஆகவே இங்கு வணங்கி செல்பவர்கள் நிச்சயம் தொழில் அமைப்பார்கள் என்பேன் தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என்பேன்.

சுயதொழில் நல் முறையாக செய்வார்கள் என்பேன். இதுதான் சிறப்பு என்பேன்.

சுயதொழில் செய்பவர்கள் நல் முறையாக இங்கே பின் ஒரு மண்டலம்(48நாட்கள்) நல் முறைகளாக இவனை வணங்கி பாடி துதித்து பின் சிவ புராணத்தைப் பாடி நல் முறைகள் ஆகவே தீபம் ஏற்றி அனுதினமும் அப்பனே நல் முறைகள் ஆகவே அரை மண்டலம்(24நாட்கள்) அதன் உரையே இருபத்தி நான்கு மனிதர்களுக்கு அனுதினமும் உணவை தானம் அளித்து நல் முறைகளாக சென்று விட்டால் பின் ஒரு மண்டலம் கழித்து உயர்வுகள் வரும் என்பேன். இதுதான் இத்தலத்தின் அதி சிறப்பு என்பேன்.

அப்பனே ஆனாலும் சித்தர்களுடைய திருத்தலங்கள் எவருக்கும் தெரிவது இல்லை கலியுகத்தில் அப்பனே முன்னே சொன்னேன் அப்பனே அற்ப சுக வாழ்க்கைக்காக வே மனிதன் ஓடோடி கொண்டிருக்கிறான் அதனால்தான் அப்பனே பின் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் அவை எல்லாம் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே இதனை நன்குணர்ந்து அனைத்து தலங்கள் சித்தர்கள் வாழ்ந்த ஸ்தலங்கள் மேலும் எழும்ப இங்கு வந்தும் எவ்வாறு என்பதையும் கூட ஆங்காங்கே மனிதர்கள் வணங்கி வந்தால் விமோசனம் கிடைக்கும்.

அதனை விட்டுவிட்டு எதையெதையோ செய்து கொண்டால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

மனிதன் பின் படுகுழியில் விழத்தான் வேண்டும் என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது கருவூரானே அனைத்தும் செய்து விடுவான் என்பேன் கருவூரான் பக்தர்கள் இங்கு வருவார்கள் என்பேன் அனைத்தும் நல் முறைகள் ஆகவே எவை எவை என்று கூற அதி விரைவிலேயே இத்தலத்திற்கும் நல் முறைகள் ஆகவே நடக்கும் என்பேன் சித்தர்களும் வருவார்கள் என்பேன் முன் ஜென்மத்தில் வாழ்ந்த பல ரிஷிகளும் இங்கே வருவார்கள் என்பேன். இதனை அதி விரைவில் முடித்து யான் அகத்தியனும் இங்கு வருவேன் என்பேன்.

நல் முறைகள் ஆகவே பலப்பல அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து அப்பனே முறைகள் ஆகவே இச் சிவன் துணை புரிவான் தொழிலுக்கு மூலமான அதிபனும் துணை புரிவான் என்பேன்.

இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே முறைகள் ஆகவே இங்கு வலம் வந்து எவ்வாறு என்பதையும் கூட நிலைநிறுத்தி அனுதினமும் இச் சிவனை 108 முறை நல் முறைகளாக வலம் வந்தால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எதனால் இதனில் இவன் தனக்கு பெயரையும் வைக்கலாம் என்பேன் திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் இன்று நீங்கள் அழைத்தாலும் சந்தான ஈஸ்வரி சந்தான ஈஸ்வரர் என்றும் அழைக்கலாம் தவறு இல்லை என்பேன்.

அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே இவன்தனை வணங்க பிரம்மனும் நல் முறைகள் ஆகவே வரங்கள் தருவான் என்பேன்.

அற்புதங்கள் நிறைந்தது அப்பனே ஆனாலும் இதனை யான் ஏற்கனவே சொல்லி கொண்டே இருக்கின்றேன் எவ்வாறு என்பதையும் கூட  பல பல திருத்தலங்களை அப்பனே மனிதர்கள் வணங்கி உயர்வு பெறுகிறார் என்று சில தீய மனிதர்கள் அழித்து விட்டார்கள்.

அப்பனே ஆனாலும் ஈசன் விடமாட்டான் என்பேன். எழுவான் என்பேன்.

ஆனாலும் எவரெவர் நியமிக்கப்பட வேண்டும் என்று என்பதுகூட ஈசனுக்கு தெரியும் அப்பனே. நல் முறையாக நல் மனிதர்களை நியமத்து விட்டான். அப்பனே.

அப்பனே நல் மேல் முறைகள் ஆகவே இங்கு கருவூரான் நல் முறைகள் ஆகவே வலம் வந்து இன்றளவும் அனுதினமும் இங்கே உறங்கித்தான் செல்கின்றான். என்பேன் இத்திருத்தலத்தை நல் முறையாக முடிக்கும் வரை அனுதினமும் இங்கு வந்து சென்று கொண்டுதான் இருப்பான் என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்று நினைக்கும் அளவிற்கு கூட ராஜராஜ சோழனின் பங்கும் இங்கு உள்ளது என்பேன்.

அவனும் இம் மண்டபத்தை நல் முறையாக பெரிதாக்க அவன் தனும் பின் நல் முறைகளாக இத் திருத்தலத்திற்கு பல உதவிகள் செய்வான் என்பேன்.அதனால் ராஜராஜசோழனும் இங்கு வந்து இச் சிவனை தரிசித்து தான் சென்றிருக்கின்றான் என்பேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே அருணகிரிநாதன் இங்கு சில நேரத்தில் தங்கிச் சென்று பின்  நல் முறைகளாக பின்பு தான் அண்ணாமலைக்கு சென்றான் என்பேன்.

அப்பனே இங்கு வந்து நல் முறைகளாக அவன்தனக்கு சில சில உதவிகள் கிடைக்காததால் அண்ணாமலைக்கு சென்று அங்கு உயிரையும் துறந்துவிட துணிந்து விட்டான் ஆனாலும் முருகன் காப்பாற்றினான் அப்பனே.

முருகனும் இங்கு ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான் இங்கு.

அப்பனே நல்முறைகள் ஆகவே அப்பனே இவ்வுலகத்தில் சிவனே பெரியவன் என்பேன் ஆனாலும் இதனையும் தடுத்தழிக்க அப்பனே முன்னொரு ஜென்மத்தில் படையெடுத்து வந்து பின் மனிதர்களெல்லாம் பின் திருத்தலங்களுக்குச் சென்றால்வாழ்ந்து விடுவார்கள் என்று நினைத்து பின் அனைத்தையும் அழித்து விட்டார்கள் ஆனாலும் கலியுகத்தில் நிச்சயம் நல்லோர்களால் எவ்வாறு என்பதையும் கூட யார் மூலம் எதனை செய்தால் நல்லது என்று கூட நினைத்து ஈசனே வரவழைத்து அனைத்தும் செய்துகொள்வான் என்பேன்.

இனிமேலும் கலியுகத்திலும் அப்பனே அக்கிரமங்கள் அநியாயங்கள் நடக்கும்பொழுது ஈசன் நிச்சயமாய் அன்றன்றே தண்டிப்பான் என்பேன்.

அப்பனே இதிலும் சூட்சமம் உள்ளது என்பேன் சூட்சமங்கள் அப்பனே எவை எவை என்று கூற மனிதன் இன்னும் ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே முட்டாள்களாகவே வாழ்ந்து வருகின்றான்.

ஆனால் எவை என்று கூற இருக்கும்பொழுது இறையருள் பெற்று விட்டால் அப்பனே வேறு எதுவும் தேவை இல்லை என்பேன் இறையருளே அனைத்தும் கொடுத்துவிடும்.

ஆனாலும் மனிதன்

எதன் எதனோ மாயையில் சிக்கிக் கொண்டு அனைத்தையும் இழந்துவிட்டு திரும்பவும் இறைவனிடத்தில் வந்தால் அவன் என்ன செய்வான்? மகனே?

அப்பனே ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட மனிதன் எதை நோக்கிச் செல்கின்றானென்றால் கர்மாவை நோக்கியே செல்கின்றான்.

இதனையும் பல தடவைகளில் பல உரைகளில் யான் சொல்லியே வந்திருக்கின்றேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

மனிதன் கர்மாவை சேர்ப்பதில் வல்லவன் என்பேன் அப்பனே இவ்வாறு என்பது கடைசியில் பின் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டங்கள் வந்தால் இறைவா இறைவா என்று ஓடோடி வருவது அப்பனே அதனால்தான் ஆறு அறிவுகள் இறைவன் பயன்படுத்தி கொள்வதற்காகவே கொடுத்திருக்கின்றான். ஆனாலும் மனிதர்களுக்கு அதை ஒழுங்காக பயன்படுத்தத் தெரியவில்லை மகனே. அப்பனே நல் முறைகள் ஆகவே இந்த ஆறு அறிவையும் ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் ஏழாவது அறிவு அவனுக்கு தெரிந்துவிடும் அவன் இறைவனையே காணலாம் என்பேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே இறைவன் அனைத்து திறமைகளும் கொடுத்து தான் மனிதனை அனுப்புகின்றான் ஆனால் முட்டாள் மனிதனோ அவ விஷயங்களை அனைத்தையும் கெடுத்து கொண்டிருக்கின்றான்.

அப்பனே நல் முறைகள் ஆகவே சிவன் வருவான் எவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட அப்பனே நல் முறைகளாக அனைத்து சித்தர்களும் இங்கு வருவார்கள் என்பேன். நீங்கள் குறித்துள்ள நாட்களிலேயே நிச்சயம் அவர்களே வந்து இதனை பிரதிஷ்டை செய்வார்கள் பின் எவ்வாறு என்பதையும் கூட இதனையும் நிறுவித்து செய்வார்கள் அப்பனே இது உண்மை.

அப்பனே இதற்கும் சக்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் பொழுது அப்பனே இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றேன் அப்பனே நன்றியோடு நல் முறைகள் ஆகவே கேட்டதை நல்ல முறையில் ஆகவே எவை எவை என்றும் கூற கூறி விளக்கும் பொழுது அதில் அதிலும் சூட்சமம் உள்ளது இல்லாதது என்றெல்லாம் இல்லை என்பேன்.

அப்பா என்று இவன் தனை மனமுருகி வணங்கி வழிபட்டால் இவனும் மனம் இரங்கி அருள் செய்வான் என்பேன்.

கருவூரானும் எவ்வாறு என்பதை நினைக்கும்பொழுது அப்பனே சித்தனும் எவ்வாறு என்பதையும் கூட நன்கு பொருந்தி நல் முறையாக வாழ்ந்திட கருவூரான் உதவி செய்வான் என்பேன்.

கருவூரான் செய்த பல பல லீலைகள் எவ்வாறு என்பதை நினைக்கும்பொழுது அப்பனே அவ் லீலைகள் அனைத்தும் பிழைப்பதற்காகவே  எழுதி இருக்கின்றான் ஆனாலும் முட்டாள் மனிதர்கள் அதனை அழித்தும் விட்டார்கள் என்பேன்.

அப்பனே கலியுகத்தில் மனிதன் இன்னும் அழிப்பதற்கே பார்ப்பான்
ஆனாலும் யாங்கள் சித்தர்கள் நிச்சயமாய் விடமாட்டோம் மாட்டோம் காப்பாற்றுவோம் இப்பூவுலகை.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட கலியுகத்தில் கலி முற்றும் தருணத்தில் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களுக்கு நோய்கள் வரும் பிரச்சினைகள் பல வரும் ஆனாலும் அப்பனே அதன் முன்னே யாங்கள் எவ்வாறு என்பதையும் கூட ஈசன் பின் திருவடிகள் ஆங்காங்கே சக்தி வாய்ந்த பல திருத்தலங்களை யாங்களே யார் மூலம் என்று எண்ணி ஈசனும் சேர்த்து உருவாக்குவோம் என்பேன்.

இதனால் அப்பனே கலியின் வேகம் குறையும் என்பேன்.

அப்பனே கடைபிடியுங்கள் நல்லவையாகவே நடக்கும் என்பேன். அப்பனே ஒன்றை தெரிவிக்கின்றேன் இதனை உரைக்கும் பொழுது கருவூரானே இங்கு அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பேன்.

அப்பனே இதைபோன்று ஆசீர்வாதங்கள் எவருக்கும் இல்லை என்பேன் இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துவிட்டான் என்பேன். அவரவர் விருப்பப்படி நல் முறைகள் ஆகவே நடக்கும் என்பேன்.

அப்பன்களே அம்மை களே அனு தினமும் ஏதாவது ஒரு ஜீவராசிகளுக்கு உணவு அளித்து விடுங்கள்.

அப்பனே நல் முறையாக இவ் ஈசனையே பிடித்துக் கொள்ளுங்கள் அனைத்தும் விரும்பியவாறே நடக்கும் என்பேன். இவன் தன் அனைத்தும் செய்வான் நல் முறைகள் ஆகவே.

எவ்வாறு என்பது நினைத்துப் பார்க்கும் அளவிற்கு திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் விரும்பியவாறு நிச்சயம் அனைத்தும் கொடுக்கப்படும் என்பேன்.

இவ்வாலயத்தின் முதல் முறையாக வந்து நல் முறைகள் ஆகவே வணங்கி செல்பவர்கள் வீட்டில் சுபிட்சங்கள் சுப காரியங்கள் ஏற்படும் என்பேன். அப்பனே எவ்வாறு என்பதையும் கூட பல பல சித்தர்கள் வருவார்கள் அனைத்தும் செய்வார்கள் என்பேன் கவலைகள் இல்லை எவ்வாறு என்பதையும் கூட உயர்ந்து நிற்கும் இத்தலம் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் ஈசன் அருள் இல்லாமல் இங்கு யாரும் இத்திருத்தலத்திற்கு வரமுடியாது என்பேன்.

அலைந்து திரிந்து சிவனே கதி என்று நினைத்து இங்கு வந்துவிட்டால் அனைத்தும் மாறும் என்பேன். அனைத்தும் நல்கும் என்பேன்.

அப்பனே ஆனால் மனிதர்களோ அதை செய்தால் இவை நடக்கும் இதைச் செய்தால் அதை நடக்கும் என்று எங்கெங்கோ எவ்வாறு என்பதையும் கூட மனிதனை தேடி செல்கின்றான். ஆனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன். ஆனாலும் இவை தானே அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்றெல்லாம் மனிதனை ஆசை காட்டி தூண்டிவிட்டு அப்பனே வேடிக்கை பார்க்கின்றவன் தான் மனிதன் என்பேன் ஆனாலும் இறைவன் எவ்வாறு என்பதையும் கூட பின் யாங்கள்(சித்தர்கள்) எங்களுடைய ஆட்சிகள் வரும் என்பேன்.

ஆனாலும் ஆங்காங்கே இருக்கும் தலங்களை ஏற்படுத்தி நல் முறைகளாக மக்களுக்கு யாங்களே நல்லவை செய்வோம் மனிதனை இனிமேலும் யாங்கள் நம்பப் போவது இல்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவை எவை என்று கூற அப்பனே அகத்தியன் யான் இருக்கின்றேன் இத்திருத்தலத்தை முடிந்தவரையில் யானே முடித்து வைக்கின்றேன் இத்திருத்தலத்தை நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நலமாக நலமாக எண்ணியவாறு அப்பனே அனைத்தும் செய்வான் இவ் ஈசன் என்பேன். 

அப்பனே குற்றங்கள் இல்லை துன்பங்கள் இல்லை துயரங்கள் இல்லை. நல் முறைகள் ஆகவே அப்பனே அதனால்தான் சக்தி வாய்ந்த திருத்தலங்களை இன்னும் யாங்கள் நல் முறைகள் ஆகவே  மனிதர்களை பயன்படுத்தி கூட வெளிக் கொணர்ந்து ஏற்படுத்துவோம். எவ்வாறு என்பதையும் கூட

நல்லோர்கள் என்பதைக்கூட யாங்களே ஏற்படுத்துவோம் எங்களுக்கு தெரியும் யாரை பயன்படுத்த வேண்டும் என்று கூட. நல் மனிதர்களை யாங்கள் தேர்ந்தெடுத்து நடத்தி வைப்போம் நல் முறைகள் ஆகவே.

அப்பனே இதற்கு இது எவ்வாறு என்பதை கூட சொல்கின்றேன் நல் மனது இருந்தால் மட்டுமே போதுமானது.

அப்பனே நல் விதமாக அப்பனே எவ்வாறு என்பதையும் கூட முன்னேற்றங்கள் காணப் போகின்றது அப்பனே இங்குள்ள அனைவரும் நல் முறைகளாக சக்திகள் பெற்றுள்ளார்கள் என்பேன். அதனால் இங்குள்ள ஒவ்வொரு இல்லத்திலும் சக்திகள் கூடி அருள் பெருகும் என்பேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே இங்கிருந்து எவ்வாறு என்பதையும் கூட பாம்புகள் ராஜ்யம் என்கின்றார்களே அவ் ராஜ்ஜியம் இத்திருத்தலமே என்பேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே எங்கிருந்து எவ்வாறு என்பதையும் கூட பின் நல் முறைகள் ஆகவே அரை கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளே சென்றால் பல நாகராஜன்கள் தவழ்ந்து  கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அதனால் சக்திகள் பலம் என்பேன் இங்கு.

அப்பனே நல் முறைகள் ஆகவே ராகு கேதுக்கள் இவர்களால் ஏற்பட்ட தோஷங்களும் நிச்சயமாய் இங்கு விலகி ஓடும் என்பேன்.

அப்பனே இத்தலத்திற்கு நன்கு பல சிறப்புகள் உண்டு என்பேன் இன்னும் பல சூட்சமங்களை விவரிக்கின்றேன் நல் முறைகள் ஆகவே வரும் காலங்களில்.

அப்பனே என்னுடைய ஆசிகள் கருவூரானும் அப்பனே கேட்டு சந்தோஷம் அடைந்து விட்டான் என்பேன் மீண்டும் வந்து வாக்குகள் செப்புகிறேன் அப்பனே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

ஆலயத்தை தொடர்பு கொள்ள வேண்டிய எண்.

J.  பச்சையப்பன்
9944137269
M.  புண்ணியகோடி
9444482571
நன்கொடை வழங்க வங்கி எண்
INDIAN BANK
AC NO 589343152
IFSC NO IDIB000C048.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................. தொடரும்!

Tuesday 21 September 2021

சித்தன் அருள் - 1036 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை!


20/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த இடம் திருவண்ணாமலை. 

ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன்  அகத்தியன்

நலன்கள் காண அப்பனே நல் முறைகள் ஆக இன்றிலிருந்து நல் முறையாகவே எவை என்று சொல்ல தன் குலதெய்வத்தை நல் முறைகள் ஆகவே அமாவாசை திதி அன்றுவரை வணங்கி வந்தால் குலதெய்வத்தின் அருள் ஆசிகளும் முன்னோர்களின் அருளாசி களும் பலம் பெற்று அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

சிறிது சிறிதாக மனிதன் துன்பத்தில் நுழைந்து விட்டான் அதனால் இம்மாதத்தில் நிச்சயமாய் இதனைச்செய்ய நல் முறையாகும்.

நல் முறையாகும் ஆனாலும் இன்னும் விளக்குகின்றேன் அதிகாலையிலேயே நல் முறையாகவே துயிலெழுந்து பின் துளசி நீரை பருக பின் பருகிய பின் நல் முறைகளாய் ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கு பின் உணவளித்து நல் முறைகள் ஆகவே பின் ஒருவேளை விரதமிருந்து நல் முறைகள் ஆகவே பின் ஐந்து அல்லது நவ(9 நபர்) மனிதர்களுக்கு அன்னம் அளித்து பின் உண்டால் அப்பனே நல் முறைகளாக தம் தாம் முன்னோர்களும் உண்ணுவார்கள் என்பேன் சில துன்பங்கள் கரைந்துவிடும் கரைந்து ஓடும் என்பேன்.

ஆனாலும் அப்பனே முட்டாள் மனிதன் பின் இதைச் செய்தால் அவை நடக்கும் அதைச் செய்தால் இது நடக்கும் என்றெல்லாம் ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றான் இது தவறு என்பேன்.

இனிமேலும் யான் தவறு செய்தால் நிச்சயமாய் தண்டிக்க பின் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பேன்.

யான் ஏற்கனவே சில மனிதர்களை தண்டித்து விட்டேன் ஆனாலும் அவர்கள் எவை என்று கூறாமலேயே பொய் தனமாகவே நடந்துகொண்டு வருகின்றார்கள் அப்பனே.

திரும்பவும் கடைசியில் வரும் வரை எச்சரித்து விடுகின்றேன் துன்பத்திற்கு காரணம் யார்? எவை என்று கூற பின் சித்தர்களா? இறைவனா?

அனைத்து துன்பத்திற்கு காரணம் மனிதன் என்பேன் யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன். 

மனிதனின் பிறப்பு மிக கீழ்தரமாக உள்ளது வரும் காலங்களில் கூட அப்பனே இவையன்றி கூட ஆனாலும் இறை பலத்தை நல் முறையாக பிடித்துக் கொண்டால்தான் அப்பனே அக் கீழ்தரமான பிறவி நல் முறையாக மேல் தரமாக மேலோங்கும் என்பேன்.

அப்பனே மேன்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் அப்பொழுதுதான் மேன்மையாக வாழ முடியும் வாழ முடியுமே தவிர மற்றவையெல்லாம் அப்பனே எவை என்று கூற உன் புத்திகள் கீழ்தரமாக இருந்தால் இறைவனை வணங்கினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே.

அதனால் எதனை என்று கூற அப்பனே மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் வரும் காலங்களில் திருடர்கள் மிகுந்து காணப்படுவார்கள் என்பேன் ஆனாலும் அப்பனே யாங்கள் சித்தர்கள் விடமாட்டோம் என்போம் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் சில மனிதர்கள் எவை என்று கூட தெரியாமலே எப்படி வணங்குவது என்பது கூட தெரியாமல் புத்தி கெட்ட மனிதர்கள் திரிந்து திரிந்து பின் இறைவனை காணாமலே இறந்துவிடுகின்றான். 
இது ஒரு பிறவியா?

அப்பனே பிறவியை நல் முறையாக உபயோகிக்க வேண்டும் என்பேன். தான் நன்றாக இருக்க வேண்டும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் தன் காந்தர்வங்கள் இருக்க வேண்டும் என்றுதான் நிறைய மனிதர்கள் பின் நினைத்து நினைத்து இறைவனை வேண்டுகிறார்கள் ஆனாலும் ஒருவன் கூட இறைவா உன்னை எவ்வாறு காணலாம்? உன்னை எங்கு தரிசிக்கலாம் எல்லாம் நீயே இறைவா அனைத்தும் நீயே இறைவா என்றெல்லாம் கூட ஒருவனும் வணங்குவது இல்லை.

அப்பனே சுயநலத்திற்காக எதைச்செய்தாலும் இறைவன் நிச்சயமாய் கொடுக்கமாட்டான்.

சொல்கின்றேன் சித்தர்கள் யாங்களும் கொடுக்கமாட்டோம் நிச்சயமாய் அப்பனே நல் முறைகள் ஆக எதற்காக நீ பிறந்தாய்? எதற்காக வளர்ந்தாய்? எதற்காக இறக்கின்றாய்? அப்பனே தெரியுமா?

தெரியவில்லை அதனால்தான் அப்பனே யான் நான்கு யுகங்களிலும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே ஆனாலும் அப்பனே வருகின்றான் திருமணம் செய்கின்றான் பிள்ளைகளை பெறுகின்றான் சுயநலமாக வாழுகின்றானே தவிர இறைவனை காணாமலே சென்று விடுகின்றான் அப்பனே இதனால் என்ன லாபம்? பிரயோஜனம் இல்லை அப்பனே.

அப்பனே ஒன்றைமட்டும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகளாக ஆகவே சிறுவயதிலிருந்து துன்பத்தை அனுபவித்து அனுபவித்து அனுபவித்துக் கொண்டே வந்து நல் முறைகளாக முப்பான்ஆறின்(36வயது) மேல் இவ்வளவு பின் கஷ்டங்களை கடந்தும் இறைவன் வரவில்லையா என்று நினைப்போர்க்கு நிச்சயம் நிச்சயமாய் உண்டு என்பேன் தரிசனம் .

அதனால்தான் அப்பனே பொறுத்திருக பொறுத்திருக என்றெல்லாம் யான் வாக்குகள் கூறிக்கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் மனிதர்கள் அதைப் பின்பற்றி பின்பற்றுவதும் இல்லை அப்பனே மனிதன் எதை எதையோ நினைத்து எப்படி எப்படியோ ஏமாற்றி   ஏமாறுகின்றார்கள் ஏமாற்றுகின்றார்கள் இதனைத்தான் அப்பனே இன்னொரு முறையும் திரும்பத் திரும்ப இதைத்தான் யான் சொல்கின்றேன் அப்பனே.

இவ்வுலகத்தில் ஏமாற்றுபவர்கள் அதிகம் அதை விட ஏமாறுகிறவர்கள் அதிகம் அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே என்னை நம்பியே வாழ்கின்றனர் அப்பனே ஆனாலும் அப்பனே என்னையும் எவ்வாறு என்பதையும் கூட என் பெயரை வைத்தே ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர் அப்பனே இது நியாயமா?

அப்பனே நல் முறைகளாக அப்பனே முதலில் நீ திருந்து பின் நல் முறையாய் உன் குடும்பத்தை திருத்து பின் உலகத்தை திருத்திக் கொள்ளலாம் பின் ஆண்டவனை நேரில் தரிசிக்கலாம் என்பேன்.

அப்பனே இனியாவது திருந்தி கொள்ளுங்கள் வரும் காலங்களில் ஆண்டவனை எப்படி தரிசிக்கலாம் என்பதையும் கூட யான் எடுத்து உரைக்கின்றேன் அப்பனே.

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் அப்பனே பின் நீங்கள் எவ்வாறு எதனை நினைத்து பூஜை செய்தாலும் அப்பனை பலன் இல்லை என்பேன். எதற்காக பூஜை செய்கிறோம்? எதற்காக? இறைவனை வணங்குகின்றோம்? எப்படி இறைவனை வணங்குவது? என்பதைக்கூட தெரியாமல் முட்டாள் மனிதனுக்கு தெரியாமல் பிழைப்பு நடத்தி வருகின்றான் அப்பனே.

இதனால் கடைசியில் கஷ்டங்கள் வரும் பொழுது கஷ்டங்கள் எந்தனுக்கு இறைவா இறைவா என்றெல்லாம் ஓடோடி வருகின்றான்.
அப்பனே ஆனாலும் அப்பனே புத்தியை நல் முறையாக பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை.

அப்பனே சில மனிதர்களுக்கு மந்திரம் எதற்காக உச்சரிக்கின்றோம் என்பது கூட தெரியவில்லை.

பின் அதனால் என்ன பயன் அப்பனே மந்திரங்களை நல் முறைகளாக எவ்வாறு உச்சரிப்பது? எவ்வாறு நன்கு புரிந்து கொள்ளுவது? என்றெல்லாம் அறிந்து உச்சரித்து வந்தால் தான் அதனுடைய பலன்கள் பன்மடங்கு ஆகும் அப்பனே.

இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே மந்திரங்களை எதற்காக உச்சரிக்கின்றோம் என்றால்? அப்பனே மனதை தூய்மைப்படுத்த பின் உடம்பை நல் முறையாக பயன்படுத்த.

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள் மனிதன் யான் திரும்பவும் சொல்கின்றேன் மனிதனை திருடன்தான் என்று சொல்லுவேன்.

திருடன் திருடன் மனிதன் என்பேன்.

எதனால் என்றால் அப்பனே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

மந்திரத்தைச் சொன்னால் பின் அனைத்தும் வருமாம்!!

அப்பனே பின் யானே பூலோகத்தில் திரிந்து கொண்டிருக்கின்றேன் அப்பனே மனிதன் ஏமாந்து கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே.

மந்திரங்கள் சொன்னால் எவையும் வராது துன்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட பிற்பகுதியில் உரைக்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே மந்திரங்கள் முறையாக பின் எவை என்று கூற ஒவ்வொரு விதத்திற்கும் அப்பனே சரி முறையாய் உடம்பில் உள்ள குறைகள் நல் முறையாக நல் மனதாக மாற்றவே மந்திரங்கள் என்போம்.

இப்பொழுது கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே அதை தவிர்த்து விட்டு இதைச் சொன்னால் அது நடக்கும் அதைச் சொன்னால் இவை நடக்கும் என்று சொன்னால் அப்பனே தவறாக போய்விடும்.

இன்னொரு முறையும் அப்பனே யான் எச்சரிக்கின்றேன் மனிதர்களை அப்பனே ஒழுங்காகக் வாழ கற்றுக் கொள்ளுங்கள் ஏமாற்றிப் பிழைக்காதீர்கள். பொய் சொல்லாதீர்கள் அப்பனே இதைச் சொன்னால், செய்தால், அனைத்தும்  சித்தர்களும் வந்து தண்டிப்போம் நிச்சயமாய்.

தண்டனை நிச்சயம் உண்டு என்பேன்.

இறைவனைக் காண ஒரு கூட்டம் பொய்களின் பாதையில் ஒரு கூட்டம். ஒரு கூட்டமோ இறைவன் கிடைப்பானா?

கிடைப்பானா அப்பனே?

யார் செய்த தவறுகள்? அப்பனே யான் மனிதர்கள் மீது தான் தவறு என்று கூறுவேன்.

அப்பனே மனிதன் அனைத்தும் செய்து விடுகின்றான்.

கடைசியில் இறைவன் என்று வருகின்றான் அப்பனே எவ்வாறு இறைவன்  காண்பிப்பான் தரிசனத்தை?

அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே முன்னோர்களின் வாக்கு பெரியவர்களின் வாக்கு இளமையில் கல் எதற்காக சொல்லியிருக்கின்றார்கள்?

அப்பனே மெய்மறந்து நல் முறைகளாக இறைவனை இளமையிலேயே நீ இறைவனை பிடித்தால்தான் அப்பனே கடை காலங்களில் இறைவனை தரிசிக்க பின் ஆண்டவனை நேரில் காணலாம் என்பேன்.

அதனை விட்டுவிட்டு அப்பனே சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு பின் இவை எல்லாம் வீண் என்று இறைவனை இறைவா நீயே தான் கதி என்று தாடியும் மீசையும் வைத்துக்கொண்டு அதனை விடவும் கேவலமாக இறை பக்தனாக நடித்துக் கொண்டிருக்கிறான் மனிதன் இவ்வாறு பொய் வேடத்தில் திரிகின்றான் மனிதன் அப்பனே.

அப்பனே வேண்டாம் அப்பனே பொய் சொல்லி ஏமாற்றி வாழாதே என்பேன்.

அப்பனே நல் முறைகளாக வயதான காலத்தில் ஏன் பக்தி வருகின்றது?

ஏன் உந்தனுக்கு இளம் வயதில் பக்திகள் இல்லையா? உனக்கு வராதா? தோன்றவில்லையா? அப்பனே இளம் வயதில் பக்திகள் எண்ணிப்பாருங்கள்.

எதற்காக? எதற்காக? அனைத்தையும் ஆண்டு அனுபவித்து விட்டு எவ்வாறு அனைத்தும் பொய் என்ற நிலைமையில் தான் கடைசியில் இறைவனை காண வருகின்றான் பக்தி செலுத்துகின்றான் ஆனால் இறைவன் கொடுப்பானா??

இவன் தன் அனைத்தும் அனுபவித்துவிட்டு ஒன்றுகூட இல்லை என்றுகூட உட்கார்ந்து கொண்டிருக்கின்றான் என்பதுதான் இறைவனின் தீர்ப்பாக இருக்கும் ஆனால் அருள் கிடைப்பது அரிதாகும்.

அப்பனே அருள்கள் எவ்வாறு முறையாக வரும் என்பதைக்கூட யான் வரும் காலங்களில் தெரிவிக்கின்றேன் அப்பனே.

அப்பனே இனிமேலும் இவ்வாறாக முட்டாளாக முட்டாள்களாகவே இருந்தால் அப்பனே அனைத்தும் அழிந்து போகும் என்பேன் உன் பிள்ளைகளும் அனைத்தும்.

ஆனாலும் அப்பனே பந்த பாசங்கள் யாரை விட்டது? அப்பனே? அதனால் தான் தெரிந்து விழித்துக்கொள்ளுங்கள் அப்பனே.

யான் சொல்கின்றேன் அப்பனே இறைவன் முறையாகவே மனிதனுக்கு ஆறாம் அறிவை படைத்தான் ஆனால் அப்பனே அவ் ஆறாவது அறிவை பின் எவரும் பின்பற்றுவதே இல்லை இதுவரை.
 
யான் பின் முன் வாக்கிலும் இதைத்தான் சொன்னேன் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கள் பயன்படுத்துங்கள் என்று.

ஆறாவது அறிவை பயன்படுத்தினால் அப்பனே இறைவனை நல் முறைகளாக ஏழாவது அறிவுக்கு அழைத்துச் செல்வான் என்பேன்.

ஏழாவது அறிவில் அப்பனே இறைவனை காணலாம்.

அதைவிட எட்டாவது அறிவில் நல் முறைகள் ஆகவே அப்பனே அனைத்து சித்திகளும் நல்ல முறையில் கிடைக்கும் .அப்பனே. 

எட்டாவது அறிவில் அட்டமா சித்திகளும் கிடைக்கும்

ஆனாலும் அப்பனே இன்னும் ஆறாவது அறிவிற்கே மனிதன் இதுவரை வரவில்லையே அப்பனே.

அப்பனே புத்திகள் கொண்டு வாழுங்கள். யாரையும் ஏமாற்றி விடாதீர்கள்

என்(அகத்தியன்) பெயர் சொல்லி ஏமாற்றாதீர்கள்.

அப்பனே உன் பிழைப்பிற்காக எங்கேயும் கஷ்டப்பட்டு வா யாங்கள் துணை இருப்போம்.

இறைவன் பெயரைச் சொல்லி எங்கள் பெயரை சொல்லி ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள்.

நிச்சயம் இக்கலியுகத்தில் தண்டனை உண்டு என்பேன்.

தண்டனை உண்டு என்பேன் அப்பனே நீங்கள் செய்த தவறுக்கு நீங்கள் தான் தண்டனையை அனுபவித்தாக வேண்டும் அனுபவித்து விடுவீர்கள் என்பேன்.

அதனால் அப்பனே வேண்டாம் அப்பனே நல் முறைகளாக நல் மனதாக அப்பனே கீழ்த்தரமான பிறவி மனிதப்பிறவி அதை மேல் தரமாக ஆக்குவது மேல் முறையான எண்ணங்களே ஆகும் என்பேன்.

அப்பனே மேன்மையான எண்ணங்கள் இருந்தால் அப்பனே நீ மேல் நோக்கியே செல்வாய். என்பேன்.

அப்பனையும் ஒன்றைமட்டும் சொல்கின்றேன் அப்பனே உன் மனதை தொட்டு சொல் நீ நல்லவனா?? என்று. 

அப்பனே நீ நல்லவன் என்றால் இறைவனிடத்தில் ஈசன் இடத்தில் சண்டையிடு. அனைத்தும் கொடுப்பான் என்பேன்.

அப்பனே வேண்டாம் அப்பனே அழிவு காலம் மனிதனை மனிதன் தின்னுவான் என்பேன்.

அப்பனே இவையெல்லாம் அப்பனே இனிமேலும் அன்போடு ஒன்றாக இணையுங்கள் அப்பனே ஆனாலும் மனிதனுக்கு பொறாமை புத்திகள் கூட அதிகமாகிவிட்டது.

அகத்தியன் என்னை வணங்குபவர்களுக்கு கூட, என்னுடைய பக்தர்களுக்கு கூட, யான் தான்  பெரியவன் என்ற கர்வம் அதிகமாகிவிட்டது. நான் தான் பெரியவன் என்று கூட தெரிந்து கொண்டிருக்கின்றார்கள் இதனால் என்ன பயன்??

பின் நீதான் பெரியவனா??

ஏன் உன்னால் எதையும் சாதிக்க முடியவில்லை?

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் இறைவன் தான் பெரியவன் இவ்வுலகத்தில் மனிதர்களால் ஒன்றுகூட செய்ய இயலாது ஏனென்றால் அப்பனே ஆறாவது அறிவிற்கே மனிதன் இன்னும் நுழைய முடியவில்லை அப்பனே.

எப்படி ஏழாவது அறிவு க்கு செல்வான்??

எப்படி எட்டாவது அறிவு க்கு செல்வான்??

ஏன் அப்பனே ஒன்பதாவது அறிவும் இருக்கின்றது இதனைப் பற்றி எல்லாம் தெரிவிக்கின்றேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பனையும் ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் அப்பனே உயர்வான எண்ணத்தோடு வாழுங்கள்

வாழுங்கள் அப்பனே சொல்கின்றேன் வேண்டாம் அப்பனே இன்னும் இன்னும் கர்மத்தை சேர்த்துக்கொண்டு சேர்த்துக்கொண்டு பிறவிகள் எல்லாம் கடந்து அப்பனே எவ்வாறு வேண்டாம் ஐயனே இவ்வுலகத்திலே பிறந்தாய் உலகத்தை விட்டு நல் முறைகளாக செல்லுங்கள் அப்பனே மறுபிறப்பு வேண்டாம் இது எவரிடத்தில் இருப்பது என்றால் உங்கள் இடத்தில் தான் இருக்கின்றது அப்பனே அதனால்தான் வரும் காலங்களில் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் அப்பனே என் பெயரைச்(அகத்தியர்) சொல்லியே பொறாமைக்காரர்கள். அப்பனே சிறு வயதில் இருந்து எவ்வாறு இருந்து சிறுவயதில் கூட யான் பெரியவன். நான் தான் அகத்தியன் என்றுகூட திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.

நிச்சயமாய் வேண்டாம் அப்பனே திரும்பவும் எச்சரித்து விடுகின்றேன் வேண்டாம் அப்பனே வேண்டாம் வேண்டாம் அப்பனே. நல் முறைகள் ஆகவே யான் சொல்லிவிட்டேன் அப்பனே இம்மாதத்தில் நல் முறைகளாக  முன்னோர்களை நல் முறையாகவே மதித்து நல் முறைகளாக செய்து வாருங்கள் யான் கூறியவற்றை அப்பனே இன்றிலிருந்து.

இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் அப்பனே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கஷ்டத்திலும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள் இதனால் அப்பனே பொதுவாகவே யாம் சொல்லி விடுகின்றேன் அனைத்தும் கூட அப்பனே திருந்திக்கொள்ளுங்கள்.

தப்பித்துக் கொள்ளுங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள் என்பேன்.

மறு வாக்கும் நல் முறைகள் ஆகவே உரைக்கின்றேன் அப்பனே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

Thursday 16 September 2021

சித்தன் அருள் - 1035 - அன்புடன் அகத்தியர் - சிதம்பரம்!


சிதம்பர ரகசியம் - திருச்சிற்றம்பல தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு-மதுரை

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்

எவை என்று கூற இதிலும் சூட்சமங்கள் அடங்கியுள்ளது என்பேன் நல்ல முறையாக அமைப்பது எல்லாம் சிறிதாயினும் மூர்த்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது அப்பனே பெரிய அளவில் வருகின்றது மாயை என்பேன் இவ்வுலகத்தில் மாயை பின் மனிதனை அழிக்க.

ஆனாலும் இதனை எல்லாம் சொல்கின்றேன் சூட்சுமங்களை எல்லாம் சொல்லி அப்பனே நல் முறையாக திருத்துங்கள் மனிதனை என்பேன் மனிதன் திருந்தாவிட்டால் அப்பனே பின் இயற்கையும் திருந்தாது என்பேன்.

அப்பனே எவை வேண்டும் என்றுகூட கேட்டாலும் அப்பனே தன் சுயநலத்திற்காக வே இறைவனை வேண்டுகிறார்கள் அதை நாங்கள் ஏற்பதில்லை மகன்களே எப்பொழுதும் கூட.

அப்பனே எல்லோருக்கும் ஒன்றை தெரிவியுங்கள் அப்பனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வணங்க வேண்டும் இதனை தெரிவித்து விட்டால் இறைவனுக்குத் தெரியும் அப்பனே இவையன்றி கூட இன்னும் பல சூட்சமங்கள் இவ்வுலகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.

அப்பனே இவை மட்டுமன்றி அப்பனே மீண்டும் ஈசன் திருத்தலங்கள் கூட எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைக்கூட என்பதை பார்த்தால் அதுவும் ஒரு ஆச்சர்யமே என்பேன். வரும் காலங்களில்.

அப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்றுகூட சிதம்பர ரகசியம் என்கிறார்களே அவ் ரகசியத்தை ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை.

அப்பனே அத்திருத்தலத்தை ஈசனே அமைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை . அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.

அதை அங்கு அவன் வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.

அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான் நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.

இவையன்றி கூற அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில்.

பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன் அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன்.

அப்பனே எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு நல் முறையாக வருடத்தில் ஒரு நாள்  அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்) நடக்கும் என்பேன்.

அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.

அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான்.

ஆனாலும் அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான் அனைவரும் காத்திருப்பார்கள் ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பான்.

அவ்விடத்தில் நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.

அப்பனே இன்னொரு சூட்சுமத்தை சொல்கின்றேன் இப்பொழுது அப்பனே இந்த ஊரிலேயே மீனாட்சி தாய் இருக்கின்றாளே  எப்படி என்று எவை என்று கூற நினைக்கும் பொழுது ஈசனே சிதம்பர ரகசியத்தை ஏற்படுத்தி விட்டான் அதையும் யான் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் பார்வதிதேவி கோபம் கொண்டு  நீ அமைத்தாயா?  யானும் அமைக்கின்றேன் என்று போட்டியில் தனக்கென திருத்தலம் அமைத்துக்கொண்டாள். இப்பொழுது கூட மீனாட்சி திருத்தலம் என்று அழைக்கப்படுகின்றது என்பேன். அத்திருத்தலமே மீனாட்சி கோயில்.

அப்பனே இவையன்றி கூற இன்னும் பல ரகசியங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன் அப்பனே ஒரு ரகசியத்தை சொல்லி விட்டேன்.

இனி ரகசியங்களை ஒன்றொன்றாக சொல்கின்றேன் அப்பனே.

ஆனாலும் இவையன்றி கூற ஓர்நாள் அப்பனே நல் முறைகளாக உள்ளே தங்கி சென்றால் அப்பனே அங்கு எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது ஈசன் உடுக்கை யால் நல் முறைகள் ஆகவே ஓர் நிமிடம் பின் உடுக்கையை ஆட்டி பின் நல் முறைகளாக நடனம் ஆடுவான் என்பேன் .

அங்கு தங்கினால் இச் சத்தமும் கேட்கும் என்பேன் ஆனால் காலப்போக்கில் பல மனிதர்கள் பின் அங்கு சென்று அவனுடைய சத்தம் மனிதன் கேட்டால் மனிதன் பெரும் புகழும் பெரும் செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவார்கள் என்று அதையும் கேடு கெட்ட மனிதர்கள் கெடுத்து விட்டனர்.

அப்பனே இப்பொழுதும் கூட அங்கே ஞானியர்கள் நல் முறைகளாக ஈசனின் உடுக்கை சத்தத்தை கேட்க வருவார்கள் என்பேன்.

ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பாருங்கள் அப்பனே உங்களுக்கே தெரியும் அவையெல்லாம் அப்பனே ஒவ்வொரு சித்தனும் வாழ்ந்த இடம் என்பேன்.

இவை அன்றும் இன்னும் பல பல உண்மைகள் உண்டு என்பேன் இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்து உரைக்கின்றேன் அப்பனே.

அப்பனே அனைவருக்கும் நல்லாசிகள் அப்பனே நலமாக நலமாக அனைத்தும் சொல்லிவிட்டேன் மறு வாக்கும் அதி விரைவிலேயே உரைக்கின்றேன் சூட்சமத்தோடு அப்பனே அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Tuesday 14 September 2021

சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!



ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை. 

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகிறேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக இப்பொழுதும் கூட கந்தன் அங்கு சுற்றித் திரிகிறான் என்பேன் நல் முறையாக அமர்கிறான் என்பேன் அவனுக்குப் பிடித்த இடம் அங்கே இருக்கின்றது அங்கே சென்று அவன் அமர்ந்த இடத்தில் அமர உங்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கும் என்பேன். அடுத்த வாக்கில் அந்த இடத்தைப் பற்றி கூறுகின்றேன் அப்பனே நல் முறைகளாக யானே சொல்வேன் பொறுத்திருக. 

ஓதி மலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன்  நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன் கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன் அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள் அப்பனே அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட .

அப்பனை இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால் பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும் பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு. 

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே அப்பனே அம்மாவாசை திதியில் இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வாறு நல் முறைகள் ஆக பல பெரிய பெரிய அரசர்களும் இவ்வாறு செய்து பல சித்துக்கள் பெற்று விளையாடினார்கள் என்பேன்.

இதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் நல்லோருக்கு நான் எப்பொழுதும் உதவிகரமாக இருப்பேன் என்பேன் இச் சூட்சுமத்தை இப்போது யான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு.

அப்பனே எவை என்று கூற அப்பனே நல் முறைகளாக இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே ஓதியப்பனே அங்கிருந்து (ஓதிமலை) நடைபயணமாக பழனிக்கு வருவான் என்பேன் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட இதனை சாந்தி தானம் என்பார்கள் அது ஒரு நாள் மட்டும் நடக்கும் அங்கு எப்பொழுது நடக்கும் என்று கூட யான் சொல்லி விடுகின்றேன் அப்பொழுது நடைபாதையில் நீங்களும் மேலிருந்து கீழே இறங்கினால் அவன் தன் பார்வையில் நீங்கள் பட்டுவிட்டால் அற்புதம் மகன்களே.

அப்பனே ஏன் எதற்கு இதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே போகன் கர்ம நிலையில் பாதிக்கப்பட்டிருந்த பொழுது அப்பனே அங்கு வந்து அமர்ந்து விட்டான் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் என்ன செய்வது என்பது கூட தெரியாமல் போய் விட்டது போகனுக்கு.

அதனால் முருகனே வந்து பின் போகனே நீ இவ்வாறு அமர்ந்து இருக்கின்றாயே உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க

போகன் அப்பனே முருகா எந்தனுக்கு ஒன்றுமே தெரியவில்லை இவ்வுலகத்தில். 

எதை எதையோ சாதிக்க நினைத்தேன் பின் எதையும் அனுபவிக்காமல் போய்விட்டேன் உலகத்தை ஆளும் என் தாயவள் புவனேஸ்வரி  அவளும் என்னை கைவிட்டு விட்டாள் என்றெல்லாம் போகன் சொல்ல.

அப்பனே போகா என் தாய் உன்னை கைவிடவில்லை என்று முருகனும் கூற உந்தனக்கு என்ன தேவை என்பது எந்தனுக்கு தெரியும் .

இங்கிருந்து போ அதோ அங்கே ஒரு மலை தென்படுகின்றது அவ் மலைக்கு சென்று வா அங்கே என்னுடைய ஸ்தலத்தை அமைத்துக் கொள் யானும் அதற்கு உதவிகரமாக நிற்பேன் என்று நல் முறையாக முருகனும் வாக்கு உரைத்துவிட்டான். 

ஆனாலும் போகனுக்கு புரியவில்லை எந்தனுக்கு ஏதும் தெரியவில்லை முருகா எங்கு அவ் மலை இருக்கின்றது.

ஆனாலும் முருகன் பின் சொன்னான் அப்பனே என் தந்தையும் நல் விதமாக ஆசிர்வாதம் கொடுத்துவிட்டான் என் தாய் அவளையும் நீ நேசித்து நேசித்து வணங்கி வந்தாய் பின் அவளே என்னிடத்தில் அனுப்பி விட்டாள். 

அதனால் யான் முன்னே செல்கின்றேன் நீ பின்னே வா என்று சொல்ல பின் அன்றைய நாள் மட்டும் இங்கிருந்து நல் முறைகளாக முருகன் பழனிக்கு செல்வான் நடைபயணமாக நடைபாதையில் அப்பொழுது போகனும் கூடவே செல்வான் அந்நாளை யானும் சொல்கின்றேன் எந்த தேதி என்றும்கூட தைப்பூசம் என்கின்றார்களே அதன் முந்தைய தினம் தானப்பா. அதையும் இப்போதே சொல்லிவிட்டேன்.

அப்பனே இவை என்று கூற நல் முறைகளாக ஆனாலும் இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல்ல முறையாக விதிகள் மாறும் என்பேன்.

முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன்.

இரண்டாவதாக பழனி.

மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே போகன் குழந்தை வேலப்பரை  இங்கு (பூம்பாறை)  செய்து முடித்தான்.

ஆனாலும் இது இருக்க முருகனும் போகனிடம் ஒரு சூட்சுமத்தை கூறிவிட்டான் அப்பனே போகா நீ இங்கு அமைத்தாய் அமைத்தும் விட்டாய் ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூற இங்கே வருவார்கள் ஆனாலும் அப்பனே இதிலிருந்து நேர் திசையாக (பழனி) சென்று பின் அப்பனே அங்கே ஒருமுறை அமை.

அங்கு அமைத்தால் அப்பனே அவ்மலையைச் சுற்றி பல பல அற்புத தேவர்கள் தேவயானிகள் அப்பனே பறந்து சுற்றி செல்வார்கள் அப்பொழுது அங்கு சென்று மனிதன் அங்கு செல்ல அப்பனே தேவர்களும் தேவதைகளும் ஆசீர்வதித்து விடுவார்கள் அப்படி அங்கு சென்று செய்ய அனைத்து கர்மங்களும் விலகியே நிற்கும்

ஆனாலும் அப்பனே கர்மாக்களில் நூறில் ஐம்பதாவது கழித்து விடலாம் என்பேன்.

அப்பனே ஆனாலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பனே போகன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஒரு யுகத்தில் பழனியிலும் சமாதி அடைந்து விட்டான். பின் மறு யுகத்திலும் கூட குழந்தை வேலப்பன் முருகன் அடியிலேயே அவன் இருக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் இதுவரை யாரும் உணர்ந்ததில்லை.

அப்பனே அங்கு செல்ல நல் முறையாக முருகனை வணங்க முருகன் வடிவிலேயே போகனையும் வணங்கலாம் என்பேன்.

அப்பனே இது எதனால் வந்தது என்று நீங்கள் கேள்வியும் கேட்கலாம் என்பேன்

இவைதனை உணர அப்பனே பின் நல் முறைகள் ஆகவே  அப்பனே முருகனும் கூறிவிட்டது என்னவென்றால்

யானும் வந்துவிட்டேன் நலன்களாக   செய்துவிட்டேன். மீண்டும் உந்தனக்கு என்ன வேண்டும் போகா என்று கேட்க

பின் நல் முறைகள் ஆகவே போகனும் முருகனிடத்தில் எப்பொழுதும் உன் காலடியிலேயே இருக்க வேண்டும் என்று பணிந்து நின்றான் அதனால் தான் முருகன் தேர்ந்தெடுத்தான் என் காலடியிலேயே இரு அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இரு என்று.

இங்கு வருபவர்கள் அனைத்து நோய்களையும் சீர் படுத்திக் கொள்வார்கள் என்பேன் அப்படி சீர்படுத்தி முடியாவிட்டாலும் சில மூலிகைகள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன். அவ் மூலிகைகளை  பயன்படுத்திக்கொண்டு வாழுங்கள் அப்பனே.

அப்பனே பலமுறை உரைத்தது உண்டு அப்பனே இதுதானப்பா எவ்வாறு என்பதையும் கூட

பழனியப்பன் அப்பனே முறையாய் ஓதியப்பன் பின் வேலப்பன் இதனையெல்லாம் கூர்ந்து பார்த்தால் ஓர் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் இதன் திறமையை.

அப்பனே கூர்ந்து நோக்கினால் பழனி லிருந்து தொடங்கினால் ஒரு வளையம் போல் வரும் இதில்தான் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே! இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் கூர்ந்து கவனித்தால் பக்கத்தில் இருக்கும் திருத்தலங்கள் கூட ஓம் என்று சொல்கின்றார்களே அந்த ஓம் வடிவத்தில் இருக்கும் என்பேன்.

இதனையும் பார்த்து அப்பனே இப்பொழுதும் கூட சொல்கின்றேன் புதிதாக குக்கே சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர் அவ்விடத்திலிருந்து கவனித்தால் அப்பனே தெரியும் வேல் வடிவமாக.

அப்பனே நல் முறைகளாக பல சூட்சமங்கள் உண்டு என்பேன்.

அப்பனே நல்லாசிகள் அனைவரும் ஆறாவது அறிவிற்கு நல் முறையாக வாருங்கள் அனைவருக்கும் நல் முறையாக ஆசிகள் இதன்  சூட்சுமத்தை அடுத்த வாக்கில் சொல்கின்றேன் பலமாக அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Thursday 9 September 2021

சித்தன் அருள் - 1033 - அன்புடன் அகத்தியர் - வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்!





29/8/2021 அன்று வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்(உற்றுற கேட்கும் ஈஸ்வரன்) ஆலயத்தைப்பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. 

உலகை ஆளும் ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்.

இத்தலத்தில் பல பல பெருமைகள் பின் நல் முறைகள் ஆகவும் பூசலான் (பூசலார் நாயனார்) என்கின்ற ஞானியும் இங்கு வந்து நல் முறையாகவே பின்பற்றி பின் அனைத்தும் செய்வித்தான். மக்கள் கூட்டம் அலைமோதியது என்பேன்.

பின் நன்றாகவே வாழ்ந்து வந்தநிலையில் பலப்பல கர்மாக்களும் நீக்கி வந்தான் இவ் ஈசன்.

ஆனாலும் இதனையும் முன்னோக்கி பின் சில சில தீய மனிதர்களாலும் எவை என்று கூற இதனையும் போக வேண்டும் என்று எண்ணி சில சில மனிதர்கள் இதனையும் அழித்துவிட்டார்கள் கண் காணாமல் எவை என்றும் கூட.

ஆனாலும் ஈசன் இங்கு மறைந்து இருக்கின்றான் முழுவதும் பலப்பல சிலைகளும் காத்துக் கொண்டிருக்கின்றது மேல் எழும்ப.

இன்னும் மர்மங்கள் சொல்லப்போனால் பின் நல் முறைகள் ஆகவே இதனடியில் நாக தேவதைகள் இன்னும் பல உண்டு என்பேன்.

அப்பனே எவை என்றும் இங்கிருந்து நல் முறைகள் ஆகவே இப்பொழுதும் கூட மேற்கு நோக்கி பார்த்தால் பலபல பலபல வடிவமுள்ள ஈசன் நல் முறைகள் ஆகவே பின் மண்ணுக்கடியில் மறைக்கப்பட்டு கீழ்நோக்கி அமர்ந்து இருக்கின்றான் அது விரைவிலேயே அனைத்தும் மேலே எழும்பும் என்பேன்.

பல கோடி மக்கள் நல் முறைகள் ஆகவே இங்கு வந்து அனைவரும் குறை தீர்த்து சென்றுகொண்டிருந்தனர் ஆனாலும் ஓர் இப்பொழுதும் கூட இவை என்று கூற ஆங்கிலேயர் என்று சொல்கின்றார்களே அவர்களும் இங்கு வந்து எதனை என்றும் கூற பரிசுத்தமான இதயங்களை கொன்றார்கள் மக்களை அழித்தார்கள். பல பேர் இங்கு மடிந்து விட்டனர்.

இதனையும் நிமித்தம் காட்டி பின் அனைவரும் எவ்வாறு என்பதையும் கூட முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் அருளாசி பெற்றவர்கள் அவர்களுக்கு அந்தக் கொடுமை நடந்தது  எப்பொழுது என்றால் பின் அதுவும் விநாயகர் சதுர்த்தி என்கிறார்களே அந்நேரத்தில்.

அப்பனே நல் முறைகள் ஆகவே பின் நல் முறைகள் ஆகவே எவை எவை என்று கூற விநாயகப் பெருமானும் பின் நல் முறைகள் ஆகவே தற்போது வரும் நிலைகள் இன்னும் மேலோங்க செய்வான் என்பேன். அவனுடைய நாளிலிருந்து(விநாயகர் சதுர்த்தி முதல்). நல் முறைகள் ஆகவே இன்னும் பல ஆத்மாக்கள் இங்கு வலம் வந்து தான் கொண்டிருக்கின்றன.

இங்கு நிச்சயம் அவ் ஆன்மாக்கள் சபதம் இறைவனை வேண்டி நின்றன எவ்வாறு என்பதைக் கூட யான் இப்போது உரைக்கின்றேன்.

இங்கு வருபவர்கள் நல் முறைகள் ஆகவே யாங்கள் ஆசீர்வதித்து பின் எங்களுக்கு   அழிவில்லாத ஆன்மாக்கள் ஆகவே இங்கு பறக்கச் செய்ய வேண்டும் என்பதைக்கூட ஈசனிடம் அவர்களும் முறையிட ஈசனும் அப்படியே நடக்கட்டும் என்று சொல்ல அவர்களும் இங்கு வலம் வந்து தான் கொண்டிருக்கின்றார்கள். இதனால் மனப் பிரச்சினைகள் மனப் போராட்டங்கள் இவையெல்லாம் இருந்தால் இங்கு நல் முறையாக தங்கிச் தங்கி சென்றால் பின் அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்க அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

கலியுகத்தில் ஆனாலும் ஈசன் எவ்வாறு என்பதைக்கூட இவ் நல் விதமான ஆன்மாக்களும் ஈசனிடம் கேட்க இறைவா போதும் ஆனாலும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் அநியாயங்கள் அக்கிரமங்கள் இனிமேலும் மேலோங்கும் மேலும் இதனால் நிச்சயம் நீ எழ வேண்டும் என்பதைக்கூட நல் முறைகள் ஆகவே அவ் ஆன்மாக்கள் முறையிட்டனர் அவர்களை தேவதைகள் என்று கூட  சொல்லலாம்.

அப்பனே இவ்வாறு என்று உணர்ந்து நிச்சயம் கூடி நினைக்கும்பொழுது ஈசன் தான் இங்கு நல் முறைகள் ஆகவே எழுந்தருளினான் என்பேன் இதனால் அவன் வேலையை தன் நலமாக அவன் நிச்சயம் பார்த்துக்கொள்வான் என்பேன் இனிமேலும்.

இவ்வாலயத்தைப் பற்றி இதன் முன்னே இதன் பின்னே விரிவாக எடுத்துரைக்கின்றன வரும் காலங்களில் .

இன்னும் சில ஆண்டுகளில் புகழ் ஓங்கும் என்பேன் ஓங்கும் என்பேன் அனைவரும் இங்கு வந்து வழிபட வழிபட சில சில வினைகள் மாறும் வினைகள் மாறும்பொழுது ராகு கேதுக்களின் தோஷங்களும் மறையும் என்பேன்.

ஏனென்றால் எவ்வாறு என்பதை கூட ஈசனும் ஈசனையும் நல் முறைகள் ஆகவே பல வருடங்களாகவே நாகராஜன் காத்துக்  கொண்டிருக்கின்றான். இப்பொழுதும் கூட இங்கு அவன் அலைந்துகொண்டு இருக்கின்றான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே அனைத்தும் நடக்க நல் முறைகள் ஆகவே சந்தோசம் அடைவீர்கள் என்பேன்.

அப்பனே அனைத்தும் இங்கு பொய் என்பேன் இறையே மெய் என்பேன் இறை சக்திகள் மிகவும் பலம் வாய்ந்தது என்பேன் அப்பனே அதைவிட உலகத்தில் சொந்தங்கள் வேறு ஏது.

நல் முறைகளாக எவை என்று கூற குறிப்பிட்ட அளவிற்கு நின்ற பொழுதும் கூட அப்பனே ஈசன் வருவான் இன்னொரு விஷயத்தையும் கூறுகின்றேன் அப்பனே.

இவ் அம்பாள் இடத்தில் உரைத்துக் கொண்டிருக்கிறேன் அம்பாள் இப்போது உறங்கவில்லை கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றாள் என்பேன்.

நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே மேன்மை நிலை இவ் குடில் பெறும் என்பேன். அப்பனை ஆனாலும் எவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு யாங்களும் எவ்வாறு என்று நிமிர்ந்து ஈசனும் எவ்வாறு என்று உணர்ந்து பார்த்தால் ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன் நல் முறைகள் ஆகவே.

இன்னும் அப்பனே எவ்வாறு என்று நீண்டுகொண்டே போனால் இதன் இங்கிருந்து சரியான நேர் பாதையில் 60 கிலோ மீட்டர்களில் பல கோடி லிங்கங்கள் அமைந்துள்ளது என்பேன்.

நேராக கிழக்கு திசை என்பேன்(காஞ்சிபுரம்)

இவை எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள் என்பேன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்று பல மனிதர்கள் வந்து வாழ கற்றுக் கொண்டுதான் சென்று இருந்தனர் இதனை சில தீயவர்கள் மறைமுகமாக எதிர்த்து இதனை அழித்துவிட்டால் அனைத்தும் நம் வசம் வந்துவிடும் என்று அனைத்தையும் அழித்து விட்டனர் ஆனாலும் இதுபோல் செல்லலாகாது என்பேன்.

அனைத்தும் எழுந்து நிற்கும் .

ஈசனை அனைவரையும் அழிப்பான் என்பேன்.

ஈசனின் விளையாடல் திருவிளையாடல் இன்னும் மக்களுக்கு புரியவில்லை என்பேன். ஆடினான் ஆட்டம்.

ஆனாலும் திருந்தவில்லை மனிதர்கள்.

அப்பனே இதைவிட சிறப்பு என்னவென்றால் அப்பனே இங்கு எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது அப்பனே நீரிலே பல பலப்பல ஆலயங்களும்  மிதந்துள்ளன என்பேன்.

ஆனாலும் அப்பனே எவை என்று கூற ஆனாலும் அனைத்தையும் இடித்துத் தள்ளினார்கள் என்பேன்.

அப்பனே எவை என்றும் எதனை என்றும் கூறும்பொழுது அப்பனே இங்கேயும் அலை கடலாக இருந்தது ஒரு காலத்தில்.

அப்பனே நலமாக நலமாக சித்தி முக்தி கிடைக்கும் என்பேன் நல்ல முறையாக இங்கு.

நல் முறையாக வேண்டியதை இங்கு நல் முறையாகவே நிச்சயமாய் ஈசனும் தந்து முன்னோர்களும் காணச் செய்வார்கள் என்பேன்.

ஆனாலும் இங்கு வந்த நல் முறைகளாக வணங்கிச் சென்று இங்கு ஒரு கோமாதாவை வைத்து அமைக்க வேண்டும் என்பேன் கோமாதாவிற்கு நல் முறைகள் ஆகவே பல தானியங்கள் கொடுத்து நல் முறையாக செய்ய அப்பனே அவ்வாறு செய்யும் நபர்களுக்கு நிச்சயம் வெற்றி என்பதே உண்மை. நல் முறைகள் ஆகவே இதுவும் வரும் என்பேன் நல் மனிதர்கள் இதனையும் செய்து கொடுப்பார்கள் என்பேன்.

காணக்கிடைக்காத அற்புதங்களும் இங்கே புதைந்து உள்ளது என்பேன் அதன் சூட்சுமத்தையும் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன்.

இத்திருத்தலம் ஓங்கும் என்பேன் சிறப்பு பெறும் என்பேன். எதனால் என்பதையும் கூட விஜயராகவன் என்ற அரசனும் இங்கு வந்து வழிபட்டு சென்றுதான் போய் இருக்கின்றான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே பூசலான்(பூசலார்நாயனார்)வள்ளல் பெருமானும் (வள்ளலார்) இங்கு நல் முறைகளாக வந்து வணங்கி சென்றிருக்கின்றார்கள் என்பேன்.

இவர்கள் தவிர யானும் இங்கே வந்தேனப்பா (அகத்தியர்). 

அதனால்தான் யான்  இப்போது இங்கு வந்து வாக்குகள் இப்பொழுது உரைத்துக் கொண்டிருக்கிறேன் அப்பனே.

அப்பனே  நல் முறைகள் ஆகவே  இவ்வாறு இருக்க பாலமுருகன் என்கின்ற அடிகளானும் (பாலமுருகன் சித்த சுவாமிகள்) இங்கு நல் முறையாக ஜீவ சமாதியும் அடைந்திருக்கின்றான்.  என்பேன்.

அப்பனே இது தான் சூட்சமம் மனிதனுக்கு தெரியாத பல விஷயங்கள் இங்கு உண்டு என்பேன் இதனைத்தான் எவ்வாறு என்பதையும் கூட அமைத்திருக்கும் ஆலயத்தின் கருவறை அடியிலேயே அவன் ஜீவசமாதியும் அமைந்திருக்கின்றது என்பேன்.

அப்பனே இதனால் சிறப்பு பெற்ற சக்திகள் இத்தலத்திற்கு உண்டு என்பேன்.

அப்பனே இதனால் நன்மைகள் பெருகப்பெருக அப்பனே அனைவரும் இவ்வாறு வழிபட்டுச் சென்றால் அப்பனே நல் முறைகளாக மனிதனுக்கு எவ்வித ஆசைகளும் வளராது என்பேன்.

முன்னோர்கள் ஆசீர்வாதத்தால் அப்பனே நல் முறையாக நல் முறைகள் ஆகவே அனைத்தும் நடக்கும் என்பேன் முன்னேறலாம்.அவர்கள் அனைத்தும் செய்வார்கள் என்பேன் இத் தலத்திற்கு வருபவர்களுக்கு முறைகள் ஆகவே.

பல சித்தர்கள் எவ்வாறு என்பதையும் பல நிமித்தம் காட்டி இனிமேலும் பல திருத்தலங்கள் திருத்தலங்களை உருவாக்குவார்கள் என்பேன் ஏனென்றால் மனிதனை நம்பி நம்பி எவ்வாறு என்று போன போக்கிலே புதுப்பித்து எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களின் நிலைமையை யான் சொல்வதற்கு இல்லை.

அதனால்தான் சித்தர் ஆட்சி சித்தர் பூமி என்பதெல்லாம் இனிமேலும் நடக்கும் பொழுது அப்பனே அனைத்தும் எழும்  என்பேன் யாங்களும் நல் முறைகள் ஆகவே துணை புரிந்து அனைவராலும் அனைவரும் நல் முறைகள் ஆகவே வாழ்ந்து பின் இறையருள் சேர வேண்டும் என்பதே சித்தர்களின் கொள்கை என்பேன் இதனால் நாங்களே நிச்சயம் பல திருத்தலங்களுக்கு சென்று நல் முறைகளாக யார்? யார்? எதன் மூலம்? எதனை மூலம்? என்பதையும் கூட நியமித்து அத் திருத்தலத்தை உருவாக்கும் பொழுது அங்கு வருபவர்கள் நல் முறைகள் ஆகவே சில கர்மாக்களையும் நீக்குவார்கள் இதனால்தான் எங்களால் இவையெல்லாம் நடக்கும் என்பதே உண்மை.

இது தவிர எவ்வாறு என்பதையும் கூட அதைச் செய்து தருகின்றோம் இதைச் செய்து தருகின்றோம் என்பதை நம்புவது எல்லாம் வீண். நடக்கவும் நடக்காது அதைச் செய்தாலும் பின் நேர் வினையாக இருந்து எதிர்வினை ஆகவும் எதிர்வினையாக இருந்து நேர் வினையாகவும் இருக்கும்பொழுது ஆனால் அதன் வழியே கஷ்டங்கள் ஆக வந்துவிடும்.

இறைவனின் சக்திகள் பலம் ஆவதற்கு நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு நின்று காத்தருளும் அளவிற்கு ஈசனும் பாலகுமாரன் முருகனும் இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே இங்கு அமைத்தல் வேண்டும் என்பேன் அப்பனே.

அப்பனே பூசலார் உருவாக்கிய ஸ்தலம் இது அப்பனே அவனுக்கு  வேலையே எவ்வாறு என்பதை கூட இதைத்தான் இதனைச் சுற்றி வட்டாரங்களில் உள்ள பல ஆலயங்கள் அவனால் உருவாக்கப்பட்டவை என்பேன். அதனால்தான் யான் சொன்னேன் மனதில் உள்ள காரியங்கள் எண்ணிக்கொண்டு ஈசனையும் எவ்வாறு என்பதையும் எண்ணிக்கொண்டு மனதில் எண்ணிக் கொண்டிருந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பேன். இதுதான் இத்தலத்தின் சிறப்பு ஆகும்.

அப்பனே இக் கர்மா பூமியில் இன்னும் பழைய பழைய எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலைகள் இருக்கின்றன இப்புவியில். அவையெல்லாம் எழும்பும் பொழுது நல் முறையாகவே இறைவனை பார்ப்போம் என்பேன் இதனால் மக்களே நல் முறையாக கலியுகத்தில் கலியுகத்திலும் வாழ்வார்கள் என்பேன்.

கலியுகத்தில் இனிமேலும் மனிதர்கள் வாழ்வதற்கு கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் போய்க்கொண்டே இருக்கும் அவை எல்லாம் மாற்றுவதற்கே இன்னும் பல சக்தி மிகுந்த திருத்தலங்கள் இப்புவியின் அடியில் அழிந்து விட்டது அதையெல்லாம் நல் முறைகள் ஆகவே ஈசனே வருவான் வர வைப்பான் என்பேன்.

எவ்வாறு என்பதையும் கூட அதை யாங்களே(சித்தர்கள்) சொல்லிக் கொண்டு வருவோம் என்பேன் இதனால் அப்பனே பேரருள் கிட்டி இறைவனின் நல்லாசிகள் பெற்று அப்பனே நல் முறைகளாக வாழுங்கள் என்பேன்.

வாழுங்கள் என்பேன் இறை என்று கூற அப்பனே அதனால்தான் இனிமேலும் அனைவருக்கும் கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கும் வந்துகொண்டே இருக்கும் ஆனாலும் இதனை நிறுத்த வல்லவன் ஈசன். நிறுத்த வல்லவன் ஈசன் என்பதெல்லாம் யாங்கள் நல் முறைகள் ஆகவே சக்திகள் இருக்கும் தலத்தை பற்றியும் அடிக்கடி உரைத்துக் கொண்டே இருக்கின்றோம் அங்கு சென்று நலம் பெறுக என்பேன். இதுதான் அப்பனே விதி.

அப்பனே எவை எவை என்று கூறும்பொழுது கூட அப்பனே மக்கள் எவ்வாறு மிகுந்திருந்த பொழுது போது கடல் எவ்வாறு என்பதை  கூட உள்ளே புகுந்த பொழுது செல்வங்கள் அழிந்து விட்டது பலப்பல உண்மைகள் பொக்கிஷங்களும் அழிந்துவிட்டது இங்கே இவையெல்லாம் புதைக்கப்பட்டுள்ளது என்பேன்.

இவையன்றி அப்பனே நல் முறைகளாக இத்  திருத்தலமும் நல் முறையாக எழும்பும் என்பது விதியப்பா.

அப்பனே நல் முறைகளாக கவலை இல்லை என்பேன் அப்பனே அதிவிரைவிலேயே  அனைத்தும் நினைத்தவாறு நடக்கும் என்பேன்.

ஈசனும் நல் முறைகள் ஆகவே இங்கு ஒரு வாரம் நல் முறைகள் ஆகவே தங்கிச் செல்வான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே ஆசிகள் பின்பு என் அப்பனே நல் முறைகள் ஆகவே இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றேன் இத் தலத்தைப் பற்றி அப்பனே முறைகளாகவே பின் எவ்வாறு என்பதையும் கூட கிரகங்களால் கோச்சாரத்தால் பின் அடிபட்டவர்கள் இங்கு நல் முறைகள் ஆகவே இங்கு தங்கிச் சென்றால் பின் கிரகங்களாலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே இத்தலத்தின் சிறப்பை பற்றியும் எடுத்துரைத்து விட்டேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே இன்று இருக்கும் நிலையை எவ்வாறு என்று பார்க்கும் பொழுது அப்பனே நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதை உண்மை நிலையை புரிந்து என்னுடைய ஆசீர்வாதங்கள் என்பேன்.

ஆசீர்வாதங்கள் என்பேன் இன்னும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே அதி விரைவிலேயே இதன் செயல்கள் தொடங்கும் என்பேன் இதனால் கவலைகள் இல்லை என்பேன்.

ஆபத்சகாயேஸ்வரர் என்பதே மெய் உற்றுற கேட்கும் ஈஸ்வரனும் இவன் நாமமே இதுவும் மெய்யே இதிலேயே அர்த்தமுள்ளது யோசித்துக் கொள்ளுங்கள் அகிலாண்டேஸ்வரி என்பதும் ஞானபிரசுராம்பிகை என்பதும் மெய்யே என்பேன் இதைத்தான் பெயராக சூட்ட வேண்டும் என்பேன்.

அப்பனே நல் முறையாக அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் மீண்டும் வந்து வேறொரு சக்தி வாய்ந்த தலத்தைப் பற்றி வாக்குகள் உரைக்கின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஆலய முகவரி 

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஞானபிரசுராம்பிகை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் உற்றுற கேட்கும் ஈஸ்வரர் கோயில்

வணக்கம்பாடி கிராமம். ஆரணி சாலை. 

திமிரி பேருராட்சி. 

ஆற்காடு வட்டம் .

ராணிப்பேட்டை மாவட்டம்.

ஆலய திருப்பணி குழு தொடர்பு எண்:-

9344488868.

8675564007

9444452393

9443730125.

சித்தன் அருள்.................தொடரும்!

Sunday 5 September 2021

சித்தன் அருள் - 1032 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் தரிசனம்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே

உண்மையான பக்தியும் தொண்டு செய்யும் மனப்பான்மையும் தன்னலமற்ற சேவை எண்ணமும் இருந்தால் இறைவனை நாம் தேடி செல்ல வேண்டியதில்லை அந்த இறைவனே நம்மை தேடி வருவான் என்பதை உணர்த்தும் ஒரு உண்மைச் சம்பவம்

குருநாதர் தரிசனத்தைக் காட்டி ஒரு அன்பருக்கு நடத்திய திருவிளையாடல்.

மதுரையைச் சேர்ந்த அகத்தியர் பக்தர் ஒருவர் தொழு நோயாளிகளை நல்லமுறையில் பராமரித்து அவர்களுக்கு அன்னதான சேவையை முடிந்தவரை ஒரு குழுவாக இணைந்து கடந்த பத்து வருடங்களாக செய்து வந்து கொண்டிருக்கின்றார்.

அவருக்கு குருநாதர் அகத்தியர் நேரில் தன் தரிசனத்தைக் காட்டி கூடவே பயணித்து உரையாடிய அற்புதத்தை பார்ப்போம்.

சமீபத்தில் அவர் ஜீவநாடி பார்த்த பொழுது குருநாதர் அவருக்கு அப்பனே என்னுடைய மைந்தன் நீ கடை நாள்வரை என் மைந்தன் ஆகவே இருப்பாய் நீ செய்து வரும் காரியங்கள் அற்புதம் என்று சொல்லுவேன் விரைவில் என்னுடைய தரிசனமும் உனக்கு கிடைக்கும் என்று வாக்கு உரைத்து இருந்தார்.

அந்த அன்பர் ஒரு நாள் மதுரையிலிருந்து தன்னுடைய நண்பர்கள் குழுவுடன் அழகர் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபடும் பொழுது அவரைச்சுற்றி சந்தனமும் ஜவ்வாதும் துளசியும் கலந்த நறுமணம் இடைவிடாது அவரைச் சுற்றிக் கொண்டே இருந்ததாம். எங்கு சென்றாலும் அந்த பரிமள மணம் வீசிக்கொண்டே இருந்தது அவருக்கும் ஒரே திகைப்பு.

எந்தப் பக்கம் நடந்தாலும் இந்த மணம் வந்து கொண்டே இருக்கின்றதே என்று ஒரே குழப்பம். இதனை எண்ணிக்கொண்டே பேருந்தில் ஏறி ஓட்டுனர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையிலிருந்து இதனை யோசித்துக்கொண்டே வந்திருக்கின்றார்.

பொய்கரைப்பட்டி பரம சித்தர் கோயில் பஸ் நிறுத்தம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு எளிய கிராமத்து மனிதர் தலையில் முண்டாசு கட்டி கையில் கம்பு ஒன்று ஊன்றி பேருந்தில் ஏறி இவர் அருகே அமர்ந்து மதுரை மக்கள் பேசும் தமிழில் உரையாட தொடங்கினார் பெயர் என்ன ஊர் என்ன எங்கிருந்து வருகிறாய் உன்னுடைய மனைவி பெயர் என்ன குழந்தைகள் பெயர் என்ன என ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டே வர இவரும் அந்தப் பெரியவருக்கு பதில் கொடுத்துக் கொண்டே வந்திருக்கின்றார்.

அன்பரிடம் அந்தப் பெரியவர் பயணச்சீட்டு எடுத்துத் தரச் சொல்லி கூறியிருக்கின்றார் இவரும் எடுத்து தந்திருக்கின்றார் பரிமள மணம் கமழ கமழ உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதங்கள் அப்பா 

செய்து கொண்டிருப்பதை சிறப்பாக செய்து கொண்டே இரு அனைத்தும் நல்லபடியாக முடியும் என்று ஆசீர்வாதங்களும் பல வழங்கி இருக்கின்றார்.

இடையில் இவருக்கு சந்தேகம் வராது இருக்க கிராமத்து மனிதர் செய்யும் செயல்களைப் போல் முண்டாசு அவிழ்ப்பது அதை திரும்பவும் கட்டுவது நான் ஒருவனிடம் கடன் கொடுத்திருந்தேன் அதை வாங்க வந்தேன் என்னுடைய ஊர் புலியூர் அங்கு பாம்பாட்டி சித்தன் கோயில் இருக்குதப்பா அங்கே சென்றால் பிரச்சினைகள் எல்லாம் தீரும் அப்பா என்றெல்லாம் கூறிக் கொண்டு வந்து இருக்கின்றார்.

பிறகு நீ எங்கு செல்கிறாய் என்று கேட்டு இருக்கின்றார் இவரும் நான் நரிமேடு செல்கிறேன் சொக்கன் குளம் அருகில் உள்ளது என்று கூற அந்தப் பெரியவர் அப்பன் சொக்க நாதனின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வந்திருக்கின்றார்.

உன்னுடைய சொந்த ஊர் என்னவென்று அன்பரிடம் அந்த பெரியவர் கேட்டதற்கு இவர் திருநெல்வேலி என்று கூற 

திருநெல்வேலி யா நல்ல ஊரப்பா அகத்தியர் இருக்கும் ஊர் அல்லவா அது என்று அந்தப் பெரியவர் கூறியிருக்கின்றார்.

அன்பருக்கு மிக  ஆச்சரியம் பார்ப்பதற்கு எளிய கிராமத்தான் போல் இருக்கும் இந்தப் பெரியவருக்கு அகத்தியரை எல்லாம் தெரிந்திருக்கிறது என்று.

வந்திருப்பது நான்தான் என்று காட்டிக்கொள்ளாமல் குருநாதர் எளிய கிராமத்து மனிதர் பேசும் பேச்சுக்கள் இடையிடையில் தத்துவங்கள் கைகூப்பி நின்று ஆசீர்வாதங்கள் செய்துவிட்டு ஒரு நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

அன்பருக்கு ஒரே மனக்குழப்பம் வந்தவர் பெரிய மனிதர் போல இருந்தார் அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் விசித்திரமாகவும் பல பல உண்மைகளை போகின்ற போக்கில் எடுத்து உரைத்து விட்டு சென்றுவிட்டாரே யாராக இருக்கும் இவர் என்று நாடியில் திரும்பவும் வாக்கு கேட்ட பொழுது.

அப்பனே வந்தது யாமே உன்னுடன் உன்னை கண்டு விளையாடல் புரிந்தோம் அடுத்த முறை மீண்டும் லோபமுத்திரை அம்மையோடு உனக்கு காட்சி தருவோம் என்று வாக்கு தந்துள்ளார்.

அன்பர் திக்குமுக்காடி மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டு குருவிற்கு நன்றியைக் கூறினார்.

யாரும் அருகில் கூட செல்ல தயங்கும் உற்றார் உறவினர்கள் இவர்களால் கைவிடப்பட்ட தொழுநோயாளிகள் இடம் எந்த ஒரு முக சுளிப்பு இல்லாமல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் கையால் உணவை எடுத்து ஊட்டிவிட்டு அவர்களுக்கு செய்த சேவையை குருநாதர் தன்னுடைய தரிசனத்தால் அன்பை காட்டியுள்ளார்.

தொழுநோயாளிகள் இவர் தினமும் கொண்டுபோகும் அன்றாட உணவுகளான இட்லி தோசை இதைக்கூட அவர்களுக்கு சாப்பிட கிடைத்ததில்லை இதெல்லாம் நாங்கள் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகின்றன என்று ஆசையாகக் கேட்டு கேட்டு வாங்கி உண்பார்களாம்... இந்த அன்பரும் உள்ளன்போடு அவர்கள் ஆசைப்படும் உணவுகளை நண்பர்கள் குழு உதவியோடு இவர் கையால் செய்து வருகின்றார். இவர் செய்த தன்னலமற்ற அன்போடு அன்னம் அளிக்கும் செயலுக்கு குருநாதர் தந்த கருணையை பார்த்தீர்களா குருவின் கருணையே கருணை.

எவன் ஒருவன் தன்னலம் பாராது தான தர்மங்களை செய்து வருகின்றானோ அவன் இறைவனை தேடி வரத் தேவையில்லை யாங்களே அவர்களைத் தேடிச் செல்வோம் என்பது குருநாதரின் வாக்கு அவரின் வாக்குப்படியே அவரைத் தேடிச் சென்று தன் தரிசனத்தைக் காட்டி ஆசிர்வாதம் செய்தது எத்தகைய அற்புதச் செயல்.

குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் அன்பு செலுத்துங்கள் இயலாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்யுங்கள் இறைவனுக்கும் எங்களுக்கும் அதுவே போதும்.

மாறாக அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று செய்து கொண்டிருந்தால் அதை நாங்கள் ஏற்பதில்லை என்று உரைத்திருக்கிறார்.

குருநாதர் நடத்திய இந்த அற்புதத் திருவிளையாடல் நிகழ்ச்சியில் இருந்த நாம் கற்றுக்கொள்ள வேண்டியது முடிந்தவரை ஏழை எளியவர்கள் வாயில்லா ஜீவன்கள் இவர்களுக்கு அன்னம் அளித்து வந்தாலே எந்த ஒரு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி வந்தாலே இறைவனின் அருளும் குருநாதர் அகத்தியர் திருவருள் கிட்டும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது

நாமும் தர்ம காரியங்களில் ஈடுபட்டு குருவின் திருவருள் பெறுவோம்.

ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்...............தொடரும்!

Saturday 4 September 2021

சித்தன் அருள் - 1031 - ஓதியப்பர் நாள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று (04/09/2021) ஓதியப்பர் (சுப்ரமண்யரின்) திருநட்சத்திரம். மனம் ஒன்றி, அவரை நினைத்து, ஏதேனும் ஒரு நல்ல கர்மாவை செய்து, அவர் அருள் பெற்றுக்கொள்ளுங்கள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Thursday 2 September 2021

சித்தன் அருள் - 1030 - அன்புடன் அகத்தியர் - சிவன் கோயில், பாக்கம் - பொதுவாக்கு!








குருநாதர் அகத்தியர் பாக்கம் சிவன் கோயில் பற்றிய பொது வாக்கு.

வாக்குரைத்த இடம். பாக்கம் பாளையம். சிவன் கோயில், அணைகட்டு தாலுகா. வேலூர் மாவட்டம்.

உலகத்தின் முதல் சித்தனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்

அப்பனே நல்அருள்கள் இருக்க அனைத்தும் நிறைவேறும் என்பேன் அதி விரைவிலே.

அப்பனே சொல்லியவாறே நிச்சயம் நிறைவேறும் என்பேன் என்பேன் காகபுஜண்டர் முனியும் நல் முறைகள் ஆகவே தங்கி நிற்க அனைத்தும் நிறைவேறும் என்பேன் நிறைவேறும் என்பேன் பின் ஈசனே அனைத்தும் நல் முறையாக அவனே செய்து கொள்வான் என்பேன் இதனால்தான் பின் சொல்லிக்கொண்டே போகலாம் என்பேன். மனிதர்களை இனி ஈசன் நம்ப போவதுமில்லை என்பேன் ஏனென்றால் திருடர்களே அதிகம் என்பேன்

எவை என்று கூற அவன் ஸ்தலத்தை அவனே தேர்ந்தெடுத்து எதன் மூலம் பின் எவற்றின் மூலம் பின் நன்றாக மனிதர்களை தேர்ந்தெடுத்தால் அனைத்தும் நலம் ஆகும் என்று ஈசனுக்கே தெரியும்

அதனால் அவனே தேர்ந்தெடுத்துக் கொள்வான் என்பேன் நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே பின்னாளில் யோக காலங்கள் என்றாலும் எதனையும் தீர ஆராய்ந்து ஈசனும் எவ்வாறு நின்று பார்க்கும் பொழுது ஒடுக்கத்தூர் சுவாமிகள்(சித்தர்) என்கின்றார்களே அவரிடம் நிலையானதாக அனைத்தையும் முடித்துவிட்டு வா என்று உத்தரவு விட்டுவிட்டான்.

இதனால் நிச்சயம் இப்பொழுதுகூட இங்கேய தான் அமர்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன்.

அதனால் தோல்விகள் இல்லை என்பேன் வெற்றிகளே பின் நினைத்த மாதிரியே உறுதி செய்யப்படும் பொழுது ஈசனே நல் முறையாய் மனதை வைத்து கும்பாபிஷேகம் என்கிறார்களே அதையும் குடமுழுக்கும் என்கின்றார்களே இதையும் மாறுபட்டு இருக்கின்றது இவ் விஷயத்திலும் இரண்டு இரண்டு இதனையும் கழித்தால் ஒன்றுமில்லை வாழ்க்கையில் இதிலும் அர்த்தம் உள்ளது போல் நின்றிருந்தால் ஈசன் நிச்சயம் வருவான் என்பேன் அதே முறையில் நல் முறைகளாக வைத்துக் கொள்க.

நல் முறைகள் ஆகவே அதன் முன்னே ஈசனும் பலமாக மனிதன் மனதில் நுழைந்து பின் பலமாக பலமாகவே அனைத்தும் நிறைவேற வைப்பான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே எதை எதை என்று கூற எதனையும் முன் படுத்தும் பொழுது பின் நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதையும் கூறும் பொழுது கூறி விளக்கும் அளவிற்கு பல கோடி சித்தர்கள் எவ்வாறு நின்ற போதும் கூட தெரிவிக்கும் அளவிற்கு கூட பல புண்ணியங்கள் பல புண்ணியங்கள் நின்ற அதனாலே எவ்வாறு முன் நின்று பார்க்கும் பொழுது ஒன்றுமில்லை அப்பா உலகில்.

வாழ்வே இவ்வாறு என்பதற்கு இணங்க முன்னொரு காலத்திலே இவன்(சிவன்) தன் நல் முறைகள் ஆகவே இங்கு இருக்க

பின் எவை எவை என்று கூற பின் மனிதர்கள் பொருளுக்கும் செல்வங்களுக்கும் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு இவ் ஈசனை மறைத்து வைத்து விட்டனர் என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே இங்கு இருக்கும் நல் முறைகளாக அருள்பாலித்து வந்திருந்தான் ஈசன் ஆனாலும் சில சில மனிதர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை பின் நாங்கள் தான் வாழ்வோம் பின் சிலசில மனிதர்களை வாழ வைக்காமல் வாழ வைத்து விடக்கூடாது என்பதற்கு இணங்க சிவனை அடியோடு எவ்வாறு என்பதையும் கூட பெயர்த்து விட்டார்கள் பின்பு நீரினால் சிறிது அழிந்தது.

ஆனாலும் ஈசன் நின்றான் அதனையும் விட்டு வைக்க கூடாது என்று பின் மனிதர்கள் கம்பிகளால் இடித்து இங்கே புதைத்துவிட்டனர் இப்பொழுதும் கூட அந்தத் தழும்புகள் தெரிகின்றது என்பேன்.

ஆனாலும் இன்றைய அளவில் அக்கிரமங்கள் அநியாயங்கள் இவ்வட்டாரத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது உலகத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது உண்மை.

இதனால் ஈசன் அங்கங்கு எழுவான் யார் மூலம் எவர் மூலம் எதன் மூலம் தேர்ந்தெடுத்தால் நல்லது என்று நினைத்து தேர்ந்தெடுத்து விட்டான். இதனால் கவலைப்பட தேவையில்லை.

ஈசனே இத்தலத்தை மீண்டும் உருவாக்குவான் என்பதே மெய்.

நல் முறைகளாக மனிதர்கள் எத்தனை எத்தனையோ நினைத்து குழம்பிக் கொண்டு அவர்கள் அவ் மனிதர்கள் இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள் எப்படி இது நடக்கும் என்று எண்ணியபடியே இருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு உண்மையான பொருள் எது என்பது தெரியவில்லை அப்பனே சக்திகள் எதன் இடத்தில் இருந்து வருகின்றது என்பது தெரியாமல் போய்விட்டது முட்டாள் மனிதர்களுக்கு.

ஆனாலும் இதனைப் பற்றியும் கவலை கொள்ளாத இருங்கள் நல்ல முறையாக இங்கு வருபவர்களுக்கு ஒரு சூட்சுமத்தை உரைக்கின்றேன்.விரிவாக விவரிக்கின்றேன்.

அனைத்தும் நல்கும் என்பேன்

அனைத்தும் கொடுக்கும் ஈசன். அப்பனே இதனால் முன் ஜென்மதிலே வாழ்ந்த மனிதர்கள் இதனை அழித்துவிட வேண்டுமென்றே இதனையும் அழித்து விட்டார்கள் .

ஆனால் மீண்டும் எழுந்தான்.

தேர்ந்தெடுப்பவன் மிகப்பெரியவன் என்பேன் ஆனால் கீழ்தரமானவர்கள் மனிதர்கள்.

அப்பனே நல் முறையாக இன்பம் துன்பம் எதன் இடத்தில் இருந்து வருகின்றது என்று பார்த்தால் அனைத்தும் மனிதர்கள் இடத்தில் இருந்துதான் வருகின்றது என்பதை யான் சொல்வேன்.

இன்பம் வரும் பொழுது ஆடி விட்டு துன்பம் வரும் பொழுது துன்பம் வரும் பொழுது தான் இறைவனிடத்தில் நாடிச் செல்கின்றார்கள் அதனால்தான் முதலில் இன்பம் கொடுப்பான் இறைவன் அப்பொழுது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பேன்.

அத் இன்பத்திலும்தாழ்வான மனது இல்லாமல் நல்ல எண்ணங்களுடன் புண்ணியங்களை செய்தால் துன்ப காலத்தில் இன்பமாகவே மாறிவிடும் என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே ஒன்றை உரைக்கின்றேன்

இங்கு நல் முறையாகக் கட்டி முடித்து கட்டிடங்கள் எழுந்து நினைத்த நாளில்  நடைபெறும் மாணிக்கவாசகனும் இங்கு தங்கிச் செல்வான் மனிதர்களைப் போலவே சுற்றித் திரிவான்.

நல் முறைகள் ஆகவே எவை எவை வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவற்றை நிச்சயம் நிறைவேற்றித் தருவான் இவ் ஈசன்.

அப்பனே அம்மையே யான் அனுப்புகின்றேன் மனிதர்களை நல் முறையாக நல் முறைகள் ஆகவே இனிமேலும் புண்ணியங்கள் செய்தால்தான் மனிதனால் பிழைக்க முடியும் என்பேன்.

அதனை விட்டு எதனை எதனையோ நாடிச் சென்றால் அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பேன்

ஒன்றை கூறுகின்றேன் குறிப்பாக குறிப்பாக மனிதர்கள் கர்மத்தை தேடிக் கொள்வதில் வல்லவர்கள் என்பேன் ஏனென்றால் கர்மா அதிவிரைவில் அழைத்து  சென்றுவிடும் ஆனாலும் புண்ணியங்கள் செய்வதற்கும் மனம் வராது என்பேன்.

இறைவனும் நல் முறையாக மனிதனை படைக்கின்றான் இப்புவி உலகத்திற்கும் அனுப்புகின்றான் ஆனாலும் மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டு எதனையோ எதனையோ நினைத்துக்கொண்டு வருந்திக் கொண்டு பின் கர்மாக்களை எதன் மூலம் தேர்ந்தெடுக்கிறான் என்றால் கர்மாக்களை உருவாக்குபவன் மனிதன் தான் என்பேன்.

அப்போது இறைவன் மீது எவ்வாறு குற்றம் சொல்ல இயலும்?

ஏன் இறைவன் மீது நீங்கள் குற்றம் சொல்லலாம்

ஆனாலும் யான் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்

மனிதர்கள் தங்கள் மனதை தொட்டு மனசாட்சிக்கு விரோதமாக இல்லாமல் இறைவா எந்தனக்கு ஏன் கொடுக்கவில்லை?? என்று கேளுங்கள்.

இந்த நிலைமையிலேயே இருந்தால் பின் கஷ்டங்கள் சோதனைகள் சோதனைகளும் மனிதர்களால் உருவாகின்றது என்பேன்.

சோதனை சோதனை என்று மனிதன் திரிந்து கொண்டே இருக்கின்றான் ஆனால் முட்டாள் மனிதன் சோதனை எதிலிருந்து வந்தது என்பதை உணர வில்லையே

 அதனால்தான் சிவவாக்கியன்  பாடிவிட்டு சென்றான் கோடி கோடி மனிதர் பிறந்தும் ஒன்றுமில்லாமல் போய் விட்டார்கள் இறைவனையும் அறியாமல் போய் விட்டார்களே ஆனாலும் கலியுகத்தில் தெரிந்துகொள்ளுங்கள் என்பேன்.

சிவ வாக்கியனும் நல் முறைகளாக பின் பல உயரத்திலும் எண்ணத்திலும் வித்தைகளை செய்வான் அதனால் வாக்கியனின் வாக்கியபடியே இங்கு பல உண்மைகள் பொதிந்து இருக்கின்றன என்பேன் அப்பனே அம்மையே நல் முறைகளாக கவலைப்பட தேவையில்லை என்பேன்.

ஈசனே நாடகத்தை நடத்துவான் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள்.

உண்மை நிலை என்னவென்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை என்பேன் அன்பே கடவுள் கடவுள் மீது அன்பை வைத்து விட்டால் இறைவனும் அதைவிட பன்மடங்கு திரும்ப அன்பு செலுத்துவான் என்பேன் என்பேன் ஆனால் இதனையும் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை.

மாயை மாயையே கண்ணை அடைத்து விடுகின்றது பின் கர்மாக்கள் இன்னும் ஒரு முறை உரைக்கின்றேன் இதைப்பற்றி. யோசியுங்கள் பலமாக கர்மம் யார்? உருவாக்குகின்றான்? என்று.
 
நிச்சயமாய் சொல்வேன் மனிதனே. மனிதர்கள் மாறாதவரை இந்த உலகம் மாறுவதாக இல்லை

அப்பனே நல் முறைகள் ஆகவே யானும் இத்தலத்தில் தங்கி சென்று கொண்டுதான் இருக்கின்றேன் நிச்சயமாய் நடத்தி வைப்பேன் யானும்.

நல் முறைகள் ஆகவே ஆனாலும் மனிதர்கள் ஏமாற்றுவார்கள் எதை எதையோ எண்ணிக் கொண்டு.

ஈசனை மட்டும் நம்புங்கள்.

இவ்வுலகத்தில் ஈசனை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என்பேன்.

அனைத்திற்கும் காரணமானவன் ஈசன் இருக்கும்பொழுது ஆனாலும் மனிதர்கள் எதையோ எண்ணிக் கொண்டு அதைச் செய்தால் இது நடக்கும் எதைச் செய்தால் அது நடக்கும் என்று எண்ணிக் கொண்டு அலைந்து அலைந்து திரிந்துகொண்டு பொய்யான உலகத்தில் மெய்ப்பொருள் என்ன என்பதுகூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர் ஆனாலும் அனைத்தும் வீணே.

ஈசனை விட சக்திகள் இவ்வுலகத்தில் ஏதும் இல்லை என்பேன்.

நம்பினால் நம்பி பாருங்கள் தெரியும் சக்திகள் எதில் இருந்து வருகின்றது என்பது.

அதனால்தான் நாங்கள் நம்பிக்கை நம்பிக்கை என்று எடுத்து சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

எதன் மீது நம்பிக்கை வைத்தாலும் அது வீணாக போய்விடும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் எப்போதும் வீணாகாது என்பேன்.

சோதனைகள் சோதனைகள் தந்து தான் மீட்டு  கொள்வான் ஈசன்.

நிச்சயம் இவ்வாலயத்தில் திருநாள் நடக்கும் என்பேன் ஈசனும் கலந்து கொள்வான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே சந்தோசம் நிச்சயம் அவன் கொடுப்பான் என்பேன் ஆனால் அதை பெற்றுக் கொள்ள தகுதியானவன் மனிதன் இல்லையேப்பா.

ஈசனும் நல் முறைகள் ஆகவே இங்கு வந்து வந்து தான் செல்கின்றான். அதனால் அம்மையே அப்பனே ஏது குறை?

ஈசனே என் கதி என்று நினைத்துக் கொண்டு வாழுங்கள் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு அனைத்தும் செய்வான் என்பேன்.

அப்பனே வாழ்க்கையே பொய்யடா இதில் மெய்யானது நிலையானது என்று எண்ணிக்கொண்டு மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அப்பனே மெய் என்பது என்னவென்றால் இறைவனே மெய் அவ் மெய்யை  பிடித்து விட்டால் பின் அனைத்தும் நலமே. ஆனால் அப்பனே முட்டாள் மனிதன் இதை உணர்வதும்  இல்லை அப்பனே.

மனக்குழப்பம் கொள்ளாதீர்கள் அப்பனே மனக்குழப்பம் கொண்டால் அப்பனே மனிதனின் நோய்க்கு மூலாதாரமே மனக்குழப்பம் தான் நல் முறையாக இறை பக்தியை பின் கடைப்பிடித்து நல்ல கதி அடையலாம் என்பேன்.

இத்தலத்திற்கு நல் மனிதர்கள் வந்து புண்ணியம் சேர்த்துக் கொள்வார்கள் இங்கு.

அப்பனே கலியுகத்தில் மனிதர்கள் ஏமாற்றுவார்கள் ஏமாற்றி தான் பிழைப்பார்கள் என்பேன்.

அம்மையே நல் முறையாக ஒடுக்கத்தூர் சுவாமிகள் இங்குதான் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே என்னுடைய( அகத்தியர்)  பக்தர்கள் அனைத்தும் செய்விப்பார்கள் .

யானே நல் முறையாக அவர்கள் மனதை மாற்றுவேன் அப்பனே கவலை இல்லை உண்மையான சிவனடியார்களும் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள்.

அவர்களும் வருவார்கள் நாடிவந்து நல் முறைகள் ஆகவே வரங்களைப் பெற்று செல்வார்கள் என்பேன்.

ஒரு ஈசனின் தளம் அமைப்பது சாதாரண காரியமல்ல பல புண்ணியங்கள் பெற்று இருந்தால் மட்டுமே நல் முறையாக அமைக்க முடியும் அப்பனே அம்மையே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்.

அப்பனே நடக்க வேண்டியது சரியான நேரத்தில் நடக்கும் கவலை விடுங்கள்.

நல் முறைகள் ஆகவே பல உலக அதிசயங்கள் இவ்வுலகில் நடக்கப் போகின்றது கலியுகத்தில் முறையாகவே ஆங்காங்கே இன்னும் சிவ ஸ்தலங்கள் எழும் என்பேன்.

ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன் பல தேவர்களும் நல் மனிதர்களும் இனிமேலும் நடமாடுவார்கள் என்பேன் நாட்டிலே. ஆனாலும் யாங்களும் சித்தர்களும் மனிதர்களை நம்பி நம்பி ஏமாந்து கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம் . பின் இவன் பக்தியாக இருந்து நல்லது செய்வான் என்று எண்ணினால் ஆனால் அவனோ பணத்திற்கு ஆசைப்பட்டு ஏதேதோ தொழிலில் இறங்கி அவன் கர்மத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்.

ஆனாலும் தேவர்களும் ஞானிகளும் நல் மனிதர்களை ஆங்காங்கே தேர்ந்தெடுத்து பல திருத்தலங்களை திரும்பவும் அமைப்பார்கள் என்பேன்.

கலியுகத்தில் கெட்டது நடந்தாலும் இருக்கின்றார்கள் சித்தர்கள்.

நல் முறைகளாக யாங்களும் பல பல ஞானியர் களும் பலப்பல விளையாட்டுகள் விளையாடி பின் நல் முறையாக நல் முறையாகவே இவ் உலகத்தை திருத்துவோம்.

அப்பனே கவலை வேண்டாம் அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

இத்தலத்திற்கு ஓர் சிறப்பு

அப்பனே நினைத்ததை நினைத்த முறையே கொடுக்கும் திறன் இவ்வாலயத்திற்கு உண்டு என்பேன் இது சத்தியம்.

அப்பனே அம்மையே நல் முறைகளாக அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு இத்தலத்தின் சிறப்பை பற்றி இன்னும் விரிவாக விவரிக்கின்றேன் கும்பாபிஷேகம் முடிந்த பின்.

அனைத்து சித்தர்களும் வருவார்கள் இங்கே நல் முறையாக வந்து செல்வார்கள்  நல் முறையாக வந்து செல்வார்கள்.

நல் முறையாக ஒடுக்கத்தூர் சுவாமிகள் நட்டு வழிபட்ட ஈசன் இவன்.
இடையில் மனிதர்கள் செய்த தீவினைகள் பின் ஈசன் மீண்டும் இயல ஒடுக்கத்தூர் சுவாமிகள் இங்கு முன்னிருந்து அனைத்தும் செய்விப்பான் ஈசனின் கட்டளைப்படியே. நல் முறையாக அவனும் இங்கேயேதான் அமர்ந்து கொண்டு இருக்கின்றான்.

அப்பனே இத்தலம் ரம்பையும் ஊர்வசியும் சாபம் பெற்றபோதுஇங்கே வந்து சென்ற  சென்ற ஸ்தலம் இது அப்பனே.

இந்தக் கோயிலின் அடியிலேயே பல கோடி சித்தர்கள் தியானத்தில் இருக்கின்றனர் நல் முறையாக யான் இப்பொழுது உரைப்பதையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்தலத்தின் அடியிலேயே ஜீவ சமாதியும் உள்ளது அப்பனே அவன் பெயர் ராமலிங்கன் சாமிகள் என்று நல் முறையாகவே இதனை முன் நின்று பார்க்கும் பொழுது திவ்ய முனி என்பவனும் இங்கே அமர்ந்து இருக்கின்றான். நல் முறைகள் ஆகவே இவ்வாறு என்பதை கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்குக்கூட பின் பின்

தோன்றாமைக்கு காரணம் கூட இன்னும் உண்டு என்பேன் பல சித்தர்கள் இங்கு உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன்.

அதனால் அப்பனே நல் முறைகள் ஆகவே அவர்களே உருவாக்குவார்கள் இத்தலத்தை.

இத்தலத்தை நல் மனிதர்கள் தேடிவந்த வரம் பெற்று செல்வார்கள் என்பேன் வரும் காலங்களில்.

அப்பனே  நல் முறைகளாக நாம் என்று சொன்னால் தான் அனைத்தும் நடக்கும் என்பேன்.

நான் என்ற வார்த்தைகள் ஈசன் அடியில் இருக்கக் கூடாது என்பேன்.

நல் முறைகளாக ஈசனை வணங்குபவர்கள் நான் என்னுடையது நான்தான் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பேன்.

அப்பனே ஈசன் மனிதர்களுக்கு ஓர் அறிவு அதிகமாக படைத்துவிட்டான் ஆனால் அந்த அறிவை இதுவரை மனிதர்கள் பயன்படுத்தியதாக சரித்திரமே இல்லை என்பேன்.

ஆனாலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டால் பின் இறைவனையே காணலாம் என்பேன்.

அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் அப்பனே ஒன்றென்று இருங்கள் தெய்வம் நன்றென்று இருங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் மீண்டுமொரு திருத்தலத்தில் வாக்குகள் உரைக்கின்றேன் இன்னும் பலமாக.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!