​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 5 September 2021

சித்தன் அருள் - 1032 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் தரிசனம்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே

உண்மையான பக்தியும் தொண்டு செய்யும் மனப்பான்மையும் தன்னலமற்ற சேவை எண்ணமும் இருந்தால் இறைவனை நாம் தேடி செல்ல வேண்டியதில்லை அந்த இறைவனே நம்மை தேடி வருவான் என்பதை உணர்த்தும் ஒரு உண்மைச் சம்பவம்

குருநாதர் தரிசனத்தைக் காட்டி ஒரு அன்பருக்கு நடத்திய திருவிளையாடல்.

மதுரையைச் சேர்ந்த அகத்தியர் பக்தர் ஒருவர் தொழு நோயாளிகளை நல்லமுறையில் பராமரித்து அவர்களுக்கு அன்னதான சேவையை முடிந்தவரை ஒரு குழுவாக இணைந்து கடந்த பத்து வருடங்களாக செய்து வந்து கொண்டிருக்கின்றார்.

அவருக்கு குருநாதர் அகத்தியர் நேரில் தன் தரிசனத்தைக் காட்டி கூடவே பயணித்து உரையாடிய அற்புதத்தை பார்ப்போம்.

சமீபத்தில் அவர் ஜீவநாடி பார்த்த பொழுது குருநாதர் அவருக்கு அப்பனே என்னுடைய மைந்தன் நீ கடை நாள்வரை என் மைந்தன் ஆகவே இருப்பாய் நீ செய்து வரும் காரியங்கள் அற்புதம் என்று சொல்லுவேன் விரைவில் என்னுடைய தரிசனமும் உனக்கு கிடைக்கும் என்று வாக்கு உரைத்து இருந்தார்.

அந்த அன்பர் ஒரு நாள் மதுரையிலிருந்து தன்னுடைய நண்பர்கள் குழுவுடன் அழகர் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபடும் பொழுது அவரைச்சுற்றி சந்தனமும் ஜவ்வாதும் துளசியும் கலந்த நறுமணம் இடைவிடாது அவரைச் சுற்றிக் கொண்டே இருந்ததாம். எங்கு சென்றாலும் அந்த பரிமள மணம் வீசிக்கொண்டே இருந்தது அவருக்கும் ஒரே திகைப்பு.

எந்தப் பக்கம் நடந்தாலும் இந்த மணம் வந்து கொண்டே இருக்கின்றதே என்று ஒரே குழப்பம். இதனை எண்ணிக்கொண்டே பேருந்தில் ஏறி ஓட்டுனர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையிலிருந்து இதனை யோசித்துக்கொண்டே வந்திருக்கின்றார்.

பொய்கரைப்பட்டி பரம சித்தர் கோயில் பஸ் நிறுத்தம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு எளிய கிராமத்து மனிதர் தலையில் முண்டாசு கட்டி கையில் கம்பு ஒன்று ஊன்றி பேருந்தில் ஏறி இவர் அருகே அமர்ந்து மதுரை மக்கள் பேசும் தமிழில் உரையாட தொடங்கினார் பெயர் என்ன ஊர் என்ன எங்கிருந்து வருகிறாய் உன்னுடைய மனைவி பெயர் என்ன குழந்தைகள் பெயர் என்ன என ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டே வர இவரும் அந்தப் பெரியவருக்கு பதில் கொடுத்துக் கொண்டே வந்திருக்கின்றார்.

அன்பரிடம் அந்தப் பெரியவர் பயணச்சீட்டு எடுத்துத் தரச் சொல்லி கூறியிருக்கின்றார் இவரும் எடுத்து தந்திருக்கின்றார் பரிமள மணம் கமழ கமழ உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதங்கள் அப்பா 

செய்து கொண்டிருப்பதை சிறப்பாக செய்து கொண்டே இரு அனைத்தும் நல்லபடியாக முடியும் என்று ஆசீர்வாதங்களும் பல வழங்கி இருக்கின்றார்.

இடையில் இவருக்கு சந்தேகம் வராது இருக்க கிராமத்து மனிதர் செய்யும் செயல்களைப் போல் முண்டாசு அவிழ்ப்பது அதை திரும்பவும் கட்டுவது நான் ஒருவனிடம் கடன் கொடுத்திருந்தேன் அதை வாங்க வந்தேன் என்னுடைய ஊர் புலியூர் அங்கு பாம்பாட்டி சித்தன் கோயில் இருக்குதப்பா அங்கே சென்றால் பிரச்சினைகள் எல்லாம் தீரும் அப்பா என்றெல்லாம் கூறிக் கொண்டு வந்து இருக்கின்றார்.

பிறகு நீ எங்கு செல்கிறாய் என்று கேட்டு இருக்கின்றார் இவரும் நான் நரிமேடு செல்கிறேன் சொக்கன் குளம் அருகில் உள்ளது என்று கூற அந்தப் பெரியவர் அப்பன் சொக்க நாதனின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வந்திருக்கின்றார்.

உன்னுடைய சொந்த ஊர் என்னவென்று அன்பரிடம் அந்த பெரியவர் கேட்டதற்கு இவர் திருநெல்வேலி என்று கூற 

திருநெல்வேலி யா நல்ல ஊரப்பா அகத்தியர் இருக்கும் ஊர் அல்லவா அது என்று அந்தப் பெரியவர் கூறியிருக்கின்றார்.

அன்பருக்கு மிக  ஆச்சரியம் பார்ப்பதற்கு எளிய கிராமத்தான் போல் இருக்கும் இந்தப் பெரியவருக்கு அகத்தியரை எல்லாம் தெரிந்திருக்கிறது என்று.

வந்திருப்பது நான்தான் என்று காட்டிக்கொள்ளாமல் குருநாதர் எளிய கிராமத்து மனிதர் பேசும் பேச்சுக்கள் இடையிடையில் தத்துவங்கள் கைகூப்பி நின்று ஆசீர்வாதங்கள் செய்துவிட்டு ஒரு நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

அன்பருக்கு ஒரே மனக்குழப்பம் வந்தவர் பெரிய மனிதர் போல இருந்தார் அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் விசித்திரமாகவும் பல பல உண்மைகளை போகின்ற போக்கில் எடுத்து உரைத்து விட்டு சென்றுவிட்டாரே யாராக இருக்கும் இவர் என்று நாடியில் திரும்பவும் வாக்கு கேட்ட பொழுது.

அப்பனே வந்தது யாமே உன்னுடன் உன்னை கண்டு விளையாடல் புரிந்தோம் அடுத்த முறை மீண்டும் லோபமுத்திரை அம்மையோடு உனக்கு காட்சி தருவோம் என்று வாக்கு தந்துள்ளார்.

அன்பர் திக்குமுக்காடி மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டு குருவிற்கு நன்றியைக் கூறினார்.

யாரும் அருகில் கூட செல்ல தயங்கும் உற்றார் உறவினர்கள் இவர்களால் கைவிடப்பட்ட தொழுநோயாளிகள் இடம் எந்த ஒரு முக சுளிப்பு இல்லாமல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் கையால் உணவை எடுத்து ஊட்டிவிட்டு அவர்களுக்கு செய்த சேவையை குருநாதர் தன்னுடைய தரிசனத்தால் அன்பை காட்டியுள்ளார்.

தொழுநோயாளிகள் இவர் தினமும் கொண்டுபோகும் அன்றாட உணவுகளான இட்லி தோசை இதைக்கூட அவர்களுக்கு சாப்பிட கிடைத்ததில்லை இதெல்லாம் நாங்கள் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகின்றன என்று ஆசையாகக் கேட்டு கேட்டு வாங்கி உண்பார்களாம்... இந்த அன்பரும் உள்ளன்போடு அவர்கள் ஆசைப்படும் உணவுகளை நண்பர்கள் குழு உதவியோடு இவர் கையால் செய்து வருகின்றார். இவர் செய்த தன்னலமற்ற அன்போடு அன்னம் அளிக்கும் செயலுக்கு குருநாதர் தந்த கருணையை பார்த்தீர்களா குருவின் கருணையே கருணை.

எவன் ஒருவன் தன்னலம் பாராது தான தர்மங்களை செய்து வருகின்றானோ அவன் இறைவனை தேடி வரத் தேவையில்லை யாங்களே அவர்களைத் தேடிச் செல்வோம் என்பது குருநாதரின் வாக்கு அவரின் வாக்குப்படியே அவரைத் தேடிச் சென்று தன் தரிசனத்தைக் காட்டி ஆசிர்வாதம் செய்தது எத்தகைய அற்புதச் செயல்.

குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் அன்பு செலுத்துங்கள் இயலாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்யுங்கள் இறைவனுக்கும் எங்களுக்கும் அதுவே போதும்.

மாறாக அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று செய்து கொண்டிருந்தால் அதை நாங்கள் ஏற்பதில்லை என்று உரைத்திருக்கிறார்.

குருநாதர் நடத்திய இந்த அற்புதத் திருவிளையாடல் நிகழ்ச்சியில் இருந்த நாம் கற்றுக்கொள்ள வேண்டியது முடிந்தவரை ஏழை எளியவர்கள் வாயில்லா ஜீவன்கள் இவர்களுக்கு அன்னம் அளித்து வந்தாலே எந்த ஒரு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி வந்தாலே இறைவனின் அருளும் குருநாதர் அகத்தியர் திருவருள் கிட்டும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது

நாமும் தர்ம காரியங்களில் ஈடுபட்டு குருவின் திருவருள் பெறுவோம்.

ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்...............தொடரும்!

17 comments:

  1. அற்புதம் மகா அற்புதமான குருவின் திருவருள் தரிசனம் சம்பவம்..... குருவே உன் பாததிருக்கமலங்கள் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ.

    ReplyDelete
  3. ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி.. அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி
    குருவடி சரணம்.. திருவடி சரணம்.. குருவே துணை...

    ReplyDelete
  4. அடிக்கடி பதிவு செய்வது ஒரளவு நிம்மதியாக உள்ளது.ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ.

    ReplyDelete
  5. ஐயா அவர் எங்கு ஜீவ நாடி பார்த்தார் என்று சொல்ல முடியுமா.எனக்கு நீண்ட நாட்களாக பல பிரச்சினைகள் உள்ளது.பிரார்த்தனை பரிகாரம் செய்து சோர்ந்து விட்டேன்.கடந்த நான்கரை ஆண்டுகளாக அகத்தியர் நாமம் சொல்லிவருகிறேன்.ஆனால் தொல்லைகள்தான் அதிகரிக்கிறது.அகத்தியப் பெருமான் எனக்கு உதவி செய்வாரா என்று தெரியவில்லை.அகத்திய பெருமான் பிறருக்கு உதவி செய்யும் சம்பவங்களை அவ்வப்போது இதில் பதிவிட்டு வர வேண்டிக்கொள்கிறேன்.அதை படித்து மன ஆறுதல் அடைந்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. UTHAVI SEIVARA ENA ENNATHIR AYYA.SHARANAGATHI SEIYUNGAL AVARIDAM.UNGALUKKAGAVE VARUVAR.
      AGATHIYAM SHARANAM.

      Delete
    2. ஐயா, இந்த blogஇன் வலது பக்கம் பார்க்கவும். அதையே இங்கு கீழே கொடுத்துள்ளேன்.

      நாடி வாசிக்க தொடர்பு கொள்க!
      திரு.ஜானகிராமன்,
      CELL NO: 8610738411
      [வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.
      ​SMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]

      TO READ NAADI - CONTACT:-

      SRI.JANAKIRAMAN
      CELL NO:8610738411
      [ONLY ON WEDNESDAY/
      THURSDAY/FRIDAY]
      SEND SMS STATING(YOUR NAME,
      PLACE, CELL NO) FOR REGISTRATION.

      Delete
  6. அற்புதம் ஐயா. ஜீவநாடி எங்கே பார்ப்பது என்று சொல்லுங்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, இந்த blogஇன் வலது பக்கம் பார்க்கவும். அதையே இங்கு கீழே கொடுத்துள்ளேன்.

      நாடி வாசிக்க தொடர்பு கொள்க!
      திரு.ஜானகிராமன்,
      CELL NO: 8610738411
      [வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.
      ​SMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]

      TO READ NAADI - CONTACT:-

      SRI.JANAKIRAMAN
      CELL NO:8610738411
      [ONLY ON WEDNESDAY/
      THURSDAY/FRIDAY]
      SEND SMS STATING(YOUR NAME,
      PLACE, CELL NO) FOR REGISTRATION.

      Delete
  7. Omsri lopamudrà samata Agastiyar thiruvadi saranam.Arputha Darashan🙏🙏am.Appanae ,thaiyae saranam.

    ReplyDelete
  8. அற்புதம் ஐயா
    அருமை அருமை அருமை
    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ
    🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  9. குருவே சரணம்!
    ஓம் அகத்தீசாய நம!

    ReplyDelete
  10. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

    ReplyDelete
  11. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  12. மதுரையைச் சேர்ந்த அகத்தியர் பக்தர் அவர்களின் தொலைபேசி நம்பர் கொடுங்கள் ஐயா. ஒரு மருத்துவர் தொழு நோயாளிகளுக்கு உதவுதற்காக கேட்கிறார்.

    ஓம் அம் அகத்தீசாய நமஹ.

    ReplyDelete
    Replies
    1. அவரது தொடர்பு எண் 9842170513 .

      Delete
  13. அகத்தீசா 🙏🙏🙏

    ReplyDelete