[இந்த தொகுப்பு, வார்த்தைகள் எதையும் கத்திரிக்காமல், தலைப்பை விலக்கிவிட்டு, தரப்பட்டுள்ளது. எத்தனை இடங்களில் ஒரு விஷயம் குருநாதர், திரு.ஜானகிராமன், ஒரு அடியவர் என்பவர்களால் மறுபடியும் மறுபடியும் கூறப்படுகிறது என்பதை கவனித்தால், உங்களுக்கே அயர்வு ஏற்படும். 15 வருடமாக குருநாதர் வாக்கை படித்தும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அடியவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், எப்படி அவர் வாக்கை உங்கள் வாழ்க்கையில் நடை முறைப்படுத்தப் போகிறீர்கள்? என்பதை யோசியுங்கள்.]
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 22/09/2026 அன்று தண்ணீர்மலை மலேசியாவில் நடந்த கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்கு - பகுதி 3
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன்.
( பகுதி 2 …அதன் தொடர்ச்சியாக…)
குருநாதர்:- இதைத்தன் அறிய , யானும் அதாவது முருகனும் அவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- நானும் முருகனை கெட்டியாக பிடிச்சு வச்சிருக்கிறேன். என்னை கெட்டியாக யார் வச்சிருக்காரு?
குருநாதர்:- எவை என்று அறிய முருகனை பார்த்து, முருகா !!!!!! அதாவது தேவலோகம் வேண்டுமா? இல்லை என்றால் என்னிடத்திலே இருக்கின்றாயா நீ என்று ?
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்திய பெருமான் கேக்குறாரு. உனக்கு தேவலோகம் வேண்டுமா?
அடியவர் :- என் கூட இருக்கிறியா?
சுவடி ஓதும் மைந்தன் :- என் கூடயே இருக்கின்றாயா?
குருநாதர்:- இவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். என்னென்ன பேசினார்கள்? நீயே கேட்டாய். ஆனாலும் முருகா !!!!!! பின் எதை, நீயே முடிவெடு.
சுவடி ஓதும் மைந்தன் :- நீயே பார்த்துட்டு இருக்கிற…. (அனைவரும்) என்னென்ன பேசினாங்க வந்து? நான் எதுவுமே கண்டுக்கல. நீயே ஒரு முடிவெடு.
குருநாதர்:- அனைவருக்கும் தெரியும். பார்த்துக்கொள்வோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ என்ன முடிவெடுக்கிறியோ, அதுக்கு நான் சம்மதிக்கிறேன். எல்லாமே நீ சொல்லு என்று சொல்லிவிட்டார்.
குருநாதர்:- எதை ஏது என்று புரிய ஆனாலும் அனைவரும், உன் தாய் தந்தை அங்கே காத்துக் கொண்டிருக்கின்றார்கள். முருகா, வந்துவிடு. இவன் பேச்சை கேட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் வந்து என்ன பண்றாங்க?
அடியவர் :- உங்க அப்பா, அம்மா உங்களுக்காக காத்துக் கிடக்கிறார்கள். வந்துவிடு. இவர் பேச்சை கேட்காதே.
சுவடி ஓதும் மைந்தன் :- கேட்காதே என்று
குருநாதர்:- நிச்சயம் எதை ஏது என்று புரிய பின் நிச்சயம் பின் அதாவது அழகாக அறிந்தும், புரிந்தும் அழகாக என்று அறிய பின் முருகன், அதாவது கண்ணீர் சிந்தி, பின் அதாவது எனக்கு இத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்.
****** அகத்தியனே, உனக்கு யார் இருக்கின்றார்கள்? ******
****** என்று பின் கண்ணீருடன் என்னை அணைத்துக் கொண்டான் முருகன். ******
அடியவர் :- அதாவது முருகன் என்ன சொல்றாருன்னா, எனக்காக இவ்வளவு பேர் இருக்காங்க. உனக்காக யார் இருக்கா?
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து?
அடியவர் :- நான் இருக்கிறேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் இருக்கிறேன். அப்ப என்ன பண்றாரு? முருகன் என்ன பண்றாரு? என்னை எல்லாம் தேவலோகத்துல எல்லாரும் என் பக்கத்துல வந்து அழைக்கிறாங்க வந்து. உன்னை எல்லாரும் கேக்குறாங்க வந்து. இந்த பூலோகத்துக்கு நல்லது, நீ சொல்ற வந்து. ஆனா உனக்கு யாருப்பா இருக்கிறாங்க? முருகன் கண்ணீரோடு அணைத்து என்ன பண்றாரு?
அடியவர் :- அணைத்துக் கொள்கின்றார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அணைத்துக் கொள்கின்றார்.
குருநாதர்:- முருகன் சிறுவயதினாக இருந்தாலும், அவனுக்கு அறிவு. ஏன் எதற்காக என்றால், மக்களை காப்பாற்றுவதற்காகவே என்று பின் முருகன் சிந்தித்துக் கொண்டான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் இவ்வாறு அகத்திய பெருமான் சொன்னார் என்று முருகனுக்கு தெரியுமாம். என்ன சொல்லிட்டு? மக்களை…..
அடியவர் :- இங்க இருந்து முருகன் கிளம்பிட்டாருன்னா , இங்க அழிவுகள் வந்துவிடும். நேரடியாக மக்கள் அழிந்து விடுவார்கள். நாம் படைத்த மக்கள். நாம்தான் காப்பாற்றுவோம், அப்படின்னு சொல்லிட்டு நான் இருக்கின்றேன் இங்கே. அதனாலதான் அகத்திய பெருமான் கேக்குறாருன்னு முருகன் புரிந்து கொண்டார். சின்ன பையனா இருந்தாலும், நல்ல அறிவுடன் புரிந்து கொண்டு, ஒரு டிசிஷன் எடுக்குறாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. டிசிஷன் எடுக்குறாரு.
குருநாதர்:- இதைத்தன் அறிய எவ்வாறு என்பதெல்லாம். ஆனாலும் இதைத்தன் அறிய. ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு பின் சிறு எவை , எதை என்று புரிய , சிறுவயதிலே எதை அறிவு, அதாவது பலங்கள் அதாவது பல பெற்றவன் முருகனே !!!!!!
****** அதாவது பின் கருணை உடையவனே முருகன். ******
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால சின்ன வயதிலேயே வந்து, பெரும் ஞானத்தை பெற்றவன் யாரு?
அடியவர் :- முருகன்.
அடியவர்கள் :- முருகன், முருகன்….
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன், பின் கருணை மிகுந்தவன்?
அடியவர் :- முருகன்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகர். யார் சொல்றாரு?
அடியவர் :- அகத்திய பெருமான் சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்திய பெருமான்
குருநாதர்:- இதைத்தன் அறிய, பின் மீண்டும் முருகன் எவ்வாறு என்பவையெல்லாம்.
குருநாதர்:- ****** எனக்கு ஏதும் தேவையில்லை. ******
குருநாதர்:- ****** அகத்தியன் தான் வேண்டும். ******
குருநாதர்:- ****** அகத்தியன் என்ன சொல்கின்றானோ அதைத்தான் யான் கேட்பேன் ******
குருநாதர்:- என்று பலமாக இவ் மலையில் இருந்து..
குருநாதர்:- பின் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர்:- ****** இவ்வாறாக பின் கடலும் பின் கொந்தளித்து எழுந்து…… ******
குருநாதர்:- ****** பின் இவை தன் அனைத்தும் ஆடியது. ******
குருநாதர்:- ****** மலைகளும் ஆடியது. ******
அடியவர் :- அதாவது முருகன் சொல்லிட்டாரு. எனக்கு நீங்க என்னதான் சொன்னாலும், எனக்கு அகத்தியன் மட்டும் தான் வேணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கு அகத்தியன் தான் வேணும்னு சொல்லிட்டு என்ன சொன்னார்? கடலும் வந்து….
அடியவர் :- கொந்தளித்தது…..
குருநாதர்:- இதைத்தன் அறிய சந்தோஷத்தில் ஆடியது. இப்பேர்ப்பட்டவனை எதை என்று கூற, தலை வணங்குகின்றோமே என்று கடல் எவை என்று அறிய பின் மலைகளும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே தலை வணங்குதாம் அகத்தியருக்கு. இப்பேர்ப்பட்ட மனிதன் வந்து.. ஒருவர் எல்லாரும் அங்க என்ன நடக்குதுன்னு சொல்லிட்டு… இப்பேர்ப்பட்ட ஒருவர் இந்த உலகத்தை காக்கணும். மனுஷனை காக்கணும்னு வந்து நிக்கிறாருன்னு சொல்லிட்டு என்ன பண்ணுதாம்?
அடியவர் :- தலை வணங்கி….
சுவடி ஓதும் மைந்தன் :- தலை வணங்கி…… அப்படியே கடல் எழுந்து….அப்படியே தலை வணங்குது. மலைகளும்?
அடியவர் :- தலை வணங்குகிறது.
சுவடி ஓதும் மைந்தன் :- தலை வணங்குகிறது. எல்லா செடி.. கொடி… மலைகள் எல்லாமே வந்து… அகத்தியருக்கு என்ன பண்ணுது?
அடியவர் :- தலை வணங்குகிறது.
அடியவர்கள் :- தலை வணங்குகிறது.
குருநாதர்:- அப்பா, என்னை பற்றி யான் பெருமை பேசவில்லை. அப்பா எதை என்று அறிய பின் உண்மையை சொல்கின்றேன்.
அடியவர் :- அவர் என்ன சொல்றாருன்னா, என்னை உயர்த்திக்க இதை சொல்லல.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லல.
அடியவர் :- உண்மை இதுதான். இந்த தண்ணீர் மலையில் நடந்தது என்று உண்மை உரைக்கின்றார்.
குருநாதர்:- முருகா எதை என்று கூற, அறிய , பின் அதாவது வார்த்தை இல்லை. முருகனுக்கு என்ன கூறுவது என்று
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது கண்ணுல தண்ணீர் வருது. யாருக்கு?
அடியவர் :- அகத்தியருக்கு…
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியருக்கு… கண்ணில் தண்ணீர் வருது. முருகன் கிட்ட நான் என்ன கேட்கணும்?
அடியவர் :- என்ன கேட்கணும்னு தெரியல.
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியல.
குருநாதர்:- இதை தன் அறிய எவ்வாறு என்பதையெல்லாம் பின் முருகனே மனமுவந்து பின் அகத்தியனே !!!!!! யான் என்ன சொன்னாலும் இங்கிருந்து பின் நிச்சயம் போகமாட்டேன். உனக்கு என்ன வேண்டும் என்று கூறு?
அடியவர் :- அப்ப முருகன் என்ன சொல்றாருன்னா…. நீ என்ன சொன்னாலும், இங்க இருந்து போகமாட்டேன். அப்ப என்னன்னா இப்பவும் அகத்திய பெருமான்….. முருகன் இங்கே இருக்கிறார். நம்மளை பார்த்துக் கொண்டிருக்கிறார். நம் எதிரில் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று அகத்திய பெருமான் சொல்றார்.
குருநாதர்:- முருகா !!!!!!...... உனை ஒன்று கேட்கின்றேன். இதை நீ செய்வாயா என்று?
குருநாதர்:- (முருகப்பெருமான்) அகத்தியனே !!!!!!.... உனக்காக அனைத்தும் செய்வேன் என்று.
குருநாதர்:- இதனால் இப்பொழுது நீ ஒரு உடம்பாக இருக்கின்றாய். இதேபோல் ஒரு பத்து உடம்பாக மாற்றி, இங்கு சில நேரத்தில் அழிவு வரப்போகின்றது. அதனால் அங்கங்கு நீ இருந்தால் உன்னை பயந்து, அதாவது உனக்காக பயந்து அனைத்தும் அப்படியே நிற்கும்.
அடியவர்:- அது என்ன சொல்றாருன்னா, இந்த இடத்துல நீ ஒருத்தனா இருக்க. நீ வந்து பத்து உடம்பா தனியா வா. பத்து திசைகள் நில்லு. எந்த திசையில இருந்தாலும் அழிவு வராம நீ காப்பாத்து. அப்படின்னு அகத்திய பெருமான் வந்து கேக்குறாரு முருகரை.
குருநாதர்:- இதனால நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு இருந்து, அதாவது நட்சத்திரம் போல் நின்றுவிட்டான், அதாவது முருகனே.
அடியவர்:- அதாவது நீங்க இந்த தண்ணீர் மலையை சுத்தி எல்லாம் முருகர் ஆலயத்துடைய கூகுள் மேப்ல… ஏதோ ஒரு வரைபடம் போட்டு பார்த்தீங்கன்னா, அது ஒரு நட்சத்திர வடிவுல வரும். எல்லாம் லிங்க் பண்ணி ஒரு நட்சத்திரம் மாதிரி வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு நட்சத்திரம் மாதிரி வரும். அப்ப முருகன்… அங்கங்கு என்ன பண்ணிட்டார்?
அடியவர்:- முருகன் எங்கும் இருக்கின்றார்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் எங்கும் இருக்கின்றார்.
குருநாதர்:- ஆனாலும் ஒன்றை தெரிவித்துக் கொள்கின்றேன்.
குருநாதர்:- ****** முருகா!!!!!! ******
குருநாதர்:- ****** நிச்சயம், அதாவது பிறப்பவர்கள் அனைவரும் உன் நாமத்தையே சொல்ல வேண்டும் என்று. ******
அடியவர்:- என்ன சொல்றாங்கன்னா, முருகா !!!!!! எல்லாரும் உன் நாமத்தையே வந்து….
சுவடி ஓதும் மைந்தன் :- யார் யார் எல்லாம் இந்த தேசத்திலே வந்து பிறக்கின்றார்களோ….
அடியவர்:- உன்னை நாடி வருகின்றார்களோ…
சுவடி ஓதும் மைந்தன் :- உன்னை நாடி வந்தா, உன் நாமத்தை தான் சொல்ல வேண்டும். சரின்னு சொல்லி… உன்னை தான் வந்து கேட்டு வரவேண்டும்.
குருநாதர்:- அகத்தியனே !!!!!! நிச்சயம் அப்படி இல்லை.
குருநாதர்:- ****** சிறு பேர்தான், அதாவது நிச்சயம் அன்பு. ******
குருநாதர்:- ****** இதனால், அதாவது எனக்கு யார் தேவைப்படுகின்றார்களோ, அவர்கள் மட்டும் இங்கு பின் வரவழைத்து, பின், அதாவது நீ எண்ணியபடியே, இவ் தேசத்தை யான் காத்துக்கொள்கின்றேன். ******
அடியவர்:- அவர் என்ன சொல்றாருன்னா, எனக்கு யார் தேவையோ, அவர்களை வரவழைத்து, இந்த தேசத்தை நான் காத்துக் கொள்கின்றேன்.
குருநாதர்:- இதனாலே எதை என்று புரிய, ஆனாலும்
குருநாதர்:- ****** அகத்தியனே, இன்னும் உனக்கு என்ன வேண்டும் என்று பின் முருகனும் கூட. ******
அடியவர்:- முருகன் கேக்குறாரு. உனக்கு இன்னும் என்னப்பா வேண்டும்னு கேளு. அப்படிங்கிறாரு.
குருநாதர்:- இதைத்தன் அறிய இப்பொழுது, அதாவது அனைவரும், அதாவது தேவலோகத்திலும் சென்றுவிட்டார்கள். ஆனாலும் யான் சென்று அவர்களை பார்த்து வருகின்றேன். மீண்டும் கேட்கின்றேன் என்று.
அடியவர்:- இப்ப என்ன ஆச்சுன்னா, எல்லாரும் திருப்பியும் தேவலோகத்திற்கே சென்று விடுகிறார்கள். இப்ப திருப்பி வந்து, சரி, அகத்திய பெருமான் நான் போய் கேட்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு…
குருநாதர்:- இதைத்தன் அறிய ஆனாலும் தேவலோகத்திற்கு எதை என்று அறிய யாரும் என்னை உள்ளே விடவில்லை.
அடியவர்:- அகத்தியரை யாரும் தேவலோகத்திற்கு வந்து உள்ளே விடலை.
குருநாதர்:- ஏன், எதற்காக, எதை என்று புரிய கலியுகத்தில் அழிவுகள் பல பல. ஆனாலும் இப்படித்தான் விதிகள் எழுதப்பட்டிருக்கின்றது ஏற்கனவே. அதனால் நிச்சயம் அகத்தியன் காத்திருவான் எதை என்று புரிய என்றெல்லாம் அனைவருக்கும் தெரியும்.
அடியவர்:- அதாவது கலியுகத்தில் வந்து அழிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்றன. அதை எப்படியும் வந்து அகத்திய பெருமான் காத்திடுவார் என்று அனைவருக்கும் தெரியும்.
குருநாதர்:- இதனால், அகத்தியனே, பின் பூலோகத்திலிருந்து மனிதன் அழியபோவது நிச்சயம். அதனால், அவர்களோடே நீயும் அழியும் என்று, இங்கு வராதீர்கள் என்று பின் சொல்லிவிட்டார்கள்.
அடியவர்:- அதாவது ( அகத்திய மாமுனிவர் ) இவர் வந்து இயற்கைக்கு மாறாக நடக்கிறார். அழிவை தடுக்க பார்க்கின்றார் அப்படின்னு சொல்லிட்டு,
சுவடி ஓதும் மைந்தன் :- பூலோகத்திற்கு… அழிவை தடுக்கின்றார். ஆமா, தேவலோகத்திற்கு, நீ தேவையில்லை. நீ மனுஷன்…மனுஷன்… மனுஷன் என்றே போய்க்கொண்டு இருக்கின்றாய். மனுஷன் வந்து எல்லாம்…. நீயும் மனுஷனும் அழிய போறான். நீயும் அழிய போற. நீ இங்க வராத. நீ அப்படியே போய்விடு பூலோகத்திற்கு,
அடியவர்:- அப்படின்னு தேவர்கள் எல்லாம் சொல்றாங்க. அவர் உள்ள விடாம தடுக்கிறாங்க.
குருநாதர்:- இதனால், எதை என்று புரிய கலியுகத்தில் நிச்சயம் அவர்கள் சொல்வது போலையே நடந்து கொண்டிருக்கின்றது.
அடியவர்:- அதாவது கலியுகத்தில் மனிதனை மனிதனை அழிக்கின்றான், அப்படின்னு அகத்திய பெருமான் சொல்றார்.
குருநாதர்:- இதனால்தான் நிச்சயம் தன்னில் மீண்டும் மீண்டும் பின் ஈசனிடம் கேட்டு கேட்டு மனிதனை திருத்துவேன், திருத்துவேன் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் வந்து வாக்குகள் செப்பிக்கொண்டே இருக்கின்றோம்.
அடியவர்:- அவர் என்ன சொல்றாருன்னா, நான் மனிதனை திருத்துவேன், திருத்துவேன் அப்படின்னு சொல்லிட்டு, மீண்டும் ஈசனிடம் கெஞ்சி கெஞ்சி…. மனிதருக்கு வாக்குரைத்து…. நல்வழி கொடுத்து… அகத்திய பெருமான் முயன்று கொண்டிருக்கிறார்.
குருநாதர்:- மீண்டும் பல சித்தர்கள், ஞானிகள் ஒரு முறை சந்தர்ப்பத்தை காரணம் காட்டி, மேலும் பின் மேலோகத்திற்கு சென்று, அனைவரும் அழைத்து வந்து கொண்டே இருக்கின்றேன் பூலோகத்திற்கு. ஏன் என்றால், அழிவுகள் பலம் பெற்று, அனைவரும் வாருங்கள். ஒவ்வொரு மக்களுக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்து, நிச்சயம் அனைத்தும் செய்வோம் என்று
அடியவர் :- அதாவது ஒவ்வொரு சித்தரையும் கூப்பிடுறாங்க. காகபுசண்டர், போகர், திருமூலர், இடைக்காடர், அப்படின்னு…. ஒவ்வொரு சந்தர்ப்பமான மக்களுக்கு கொடுங்க. உங்க வழியில உங்களுக்கு ஒரு நல்வழியை உங்களுக்கு காட்டுங்க. அதை பின்பற்றினால், அதை இந்த பூலோகத்தை காத்தவர்தான் என்று அகத்திய பெருமான் நம்மளுக்காக போராடுகிறார்.
குருநாதர்:- மீண்டும், அதாவது அழகாக எதை என்று புரிய, அதாவது முருகனிடம் வந்தேன், அதாவது மனம் கலங்கி. முருகன் பார்த்தான். அகத்தியனே !!!!!! அதாவது என்ன சொன்னார்கள்?
குருநாதர்:- ஆனாலும் முருகனுக்கு அனைத்தும் தெரியும். ஆனாலும் என்ன சொன்னார்கள் என்று.
குருநாதர்:- நிச்சயம் இதை தன் அறிய ,
குருநாதர்:- எவ்வாறு பின் முருகா !!!!!! யான் சொல்வது?
குருநாதர்:- ஏனென்றால் யான் அங்கு சென்றிருந்தேன். ஆனால் அனைவரும் பின் நிச்சயம் பூலோகம் அழியப் போகின்றது. இதனால் நீ நிச்சயம் அங்கேயே இருந்து மனிதர்கள் ஒன்றும் திருந்த மாட்டார்கள். அவர்களுடனே அழி என்று சொல்லிவிட்டார்கள் முருகா!!!! என்று
குருநாதர்:- ****** நிச்சயம் சொல்லியது தவறு. ******
குருநாதர்:- ****** அகத்தியனே !!!!!! நீ எப்பொழுதும் இவ் உலகத்தை பின், அதாவது காக்கின்றாய் என்று நின்று விட்டாய் !!!!!!. *****
குருநாதர்:- ****** யானும் உன்னுடன் நிற்பேன் !!!!!!… *****
குருநாதர்:- என்று பின் அன்றைய தினத்தில் பின் எதை என்று அறிய சத்தியத்தோடு…
குருநாதர்:- ****** நிச்சயம் இது சத்தியம் !!!!!! . ******
குருநாதர்:- ****** அகத்தியன் என்னென்ன செய்கின்றான், எதை என்று புரிய ******
குருநாதர்:- ****** அனைத்தும் யான் துணை இருப்பேன் !!!!!! எங்கு நீ எதை என்று கூற பின் அறிந்தும் புரிந்தும் கூட. ******
அடியவர் :- அதாவது என்ன சொல்றாங்கன்னா, இந்த உலகம் வந்து அழிஞ்சிரும். நீ போய் இவ்வளவு கெஞ்சுகின்றாயே என்று சொல்லிட்டு, முருகன் வந்து ரொம்ப ஃபீல் பண்றாரு அகதியருக்காக… ஒரு தனி ஒருத்தர் இவ்வளவு போராடுறாரே தேவர்களோடு… அப்படின்னு சொல்லிட்டு, இனிமேல் நீ எங்கெங்க செல்றியோ, அங்கெல்லாம் நான் உனக்காக துணை இருப்பேன். அப்படின்னு…
சுவடி ஓதும் மைந்தன் :- நான் இருப்பேன், கை கொடுக்க, உன் கூட இருந்து, இது சத்திய வாக்கு, சத்தியம் செய்து கொடுத்துவிட்டு…… இங்கதான் சத்தியம் செய்து கொடுத்தார் அகத்தியருக்கு…
அடியவர் :- தண்ணீர் மலை அப்படின்னு உரைக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் வந்து சத்தியம் செய்து கொடுத்தார். யாரு?
அடியவர்கள் :- முருகன்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன். யாருக்கு செய்து கொடுத்தார்?
அடியவர் :- அகத்தியருக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியருக்கு
குருநாதர்:- இதைத்தன் அறிய பின் நிச்சயம்
குருநாதர்:- ****** எவ்வளவு சோதனைகள், எவ்வளவு அழிவுகள் வந்தாலும் ******
குருநாதர்:- ****** யான் நிச்சயம் மேல் லோகத்திற்கு செல்லப் போவதில்லை. ******
குருநாதர்:- ****** பூலோகத்திலே இருந்து…******
குருநாதர்:- ****** அகத்தியனே !!!!!! ******
குருநாதர்:- ****** உனக்கு துணையாக இருந்து, அனைத்தும் காப்பேன் என்று. ******
அடியவர் :- அதாவது யார் வந்து, எந்த சூழ்நிலையில் உன்னை அழைத்தாலும்…
சுவடி ஓதும் மைந்தன் :- எந்த நேரத்திலயும்…
அடியவர் :- இங்கிருந்து நான் போகப்போவதில்லை. இந்த இடத்திலும் சரி, பூலோகத்திலும் சரி, நான் போகப் போவதில்லை. அகத்தியருடன் துணை நின்று இந்த உலகத்தை காப்பேன்… அப்படின்னு சொல்லி… முருகப்பெருமான் நம்பளை நம்பி வாக்கு கொடுத்திருக்கிறார் என்று உரைக்கின்றார்.
சுவடி ஓதும் மைந்தன் :- கொடுத்திருக்கிறார்.
குருநாதர்:- இதனால்தான் அங்கங்கு பின்
குருநாதர்:- ****** மலைகளையும், அதாவது நீர்நிலைகளையும் எதை என்று புரிய தடுப்பதற்கு ******
குருநாதர்:- ****** அழகாக எதை என்று அறிய, “வில் அம்பு” ஒன்று யான் கொடுத்திருக்கின்றேன் முருகனுக்கு !!!!!! ******
குருநாதர்:- ****** இதனால் நிச்சயம் தன்னில் கூட ஏவி விடுவான் !!!!!!. ******
குருநாதர்:- ****** பின் அழிவுகள் வந்தாலும் சொல்லிவிட்டேன் அனைவருக்கும் !!!!!! ******
குருநாதர்:- ****** கவலைப்பட தேவையில்லை !!!!!!. ******
குருநாதர்:- ****** இதனால் நல்ல எண்ணங்களாக மாறி, தர்மத்தை கடைபிடிங்கள். ******
குருநாதர்:- ****** போதுமானது என் மக்களே !!!!!! ******
அடியவர் :- அவர் என்ன சொல்றாருன்னா, முருகன் எங்கெங்க ஒரு மலையில… “குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” அப்படின்னு சொல்லுவாங்க. (அதாவது குன்று இருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமான் இருப்பார்).
அடியவர் :- அவருடைய பார்வை படும் தூரம் வரை, அவர் அழிவு வராமல் தடுப்பதற்காக, அகத்திய பெருமான் வில்லம்பை முருகன் கையில் கொடுத்திருக்கிறார். அந்த அழிவு வருதுனாலே, அவர் அம்பை எடுத்தாலே, அங்க பின் வாங்கிடும் அழிவு. அதனால, மக்களே, நீங்கள் நல்லெண்ணத்தோடு இருங்கள். தர்மத்தை கடைபிடியுங்கள். இந்த உலகத்தை காப்பாற்றலாம் என்று அகத்திய பெருமான் உரைக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரிஞ்சுதுங்களா எல்லாருக்கும்?
அடியவர்கள் :- புரியுது ஐயா.
குருநாதர்:- அம்பு என்பது அன்பாகவும், வேலாகவும் வைத்துக்கொள்ளலாம்.
அடியவர் :- இந்த அம்பு என்பது அன்புன்னு வச்சுக்கலாம், அப்படின்னு சொல்லி சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்பு என்பது அன்பாகவும் வைத்துக் கொள்ளலாம். வேலாகவும் வைத்துக்கொள்ளலாம். அப்படி விட்டாருன்னா….
அடியவர் :- அந்த அம்பு வந்து வேலாகவும் கூட இருக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- வேலாக கூட இருக்கலாம். வேல் வந்து விட்டாருன்னா என்ன ஆகும்? கடலும் அப்படியே நிக்கும். மலையில் நின்று அப்படியே பார்த்துட்டு இருப்பார்.
குருநாதர்:- இதனால் இதைத்தன் அறிய இன்று முதல் எதை என்று கூற
குருநாதர்:- ****** உனக்கு சேவகனாக யான் இருக்கின்றேன் என்று ******
குருநாதர்:- ****** பின் பரிபூரணமாக என்னை கட்டி தழுவிக் கொண்டான்.******
குருநாதர்:- ****** எனக்கு வார்த்தைகள் சொல்ல வரவில்லை.******
குருநாதர்:- ****** பின் கண்ணீர் தான் வந்து கொண்டிருந்தது.******
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, கெட்டியாக வந்து முருகன் என்ன பண்றாராம்?
அடியவர் :- அகத்தியருக்கு சேவகனா நான் இருக்கேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் உனக்கு சேவனா இருப்பேன். அங்கங்க நிக்கிறேன். காட்டுல நிக்கிறேன். மேட்டுல நிக்கிறேன். கடல் கிட்ட நிக்கிறேன். அங்கங்க நிக்கிறேன். நான் போயிட்டு உனக்கு சேவனாக இருக்கின்றேன். வந்ததெல்லாம் ஒரு வில்லு போட்டா, அது அப்படியே போயிடும்.
அடியவர் :- அப்படின்னு சொல்லி…..
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படின்னு சொல்லிட்டு வந்து யார் சொல்றாரு? முருகர் யார்கிட்ட சொல்றாரு?
அடியவர்கள் :- அகத்தியரிடம்…
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்திய பெருமான் சொல்றாரு. அகத்திய பெருமான் என்ன பண்றாரு? வார்த்தை இல்லை பேசுவதற்கு. கண்ணீர். கண்ணீர் தான் வந்து புரியுதுங்களா?
குருநாதர்:- இதைத்தன் ஏன் சொன்னேன் என்றால் முருகனை பற்றி அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
குருநாதர்:- இவ்வாறு ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வதும், பின் நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் ஆற்றல் உங்களுக்கு அதிகமாகி, நல்லதே நடக்கும். அதனால்தான்.
குருநாதர்:- பல பல புலவர்கள், பல பல ஞானிகள் இருக்கின்றார்கள். அவர்களுடைய ஆற்றல் மிகவும் மிகவும் பலம் வாய்ந்தது. இவ்வாறாக பலம் வாய்ந்தது பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்களும் ஆகுவீர்கள்.
அடியவர் :- என்ன சொல்றாங்கன்னா, நீங்கள் அனைவரும் இந்த தண்ணீர் மலைக்கு வந்து, முருகப்பெருமானை வணங்கும்போது, இந்த சரித்திரத்தை ஞாபகப்படுத்தி வணங்கினா, உங்களுக்கு இன்னும் ஆற்றல் பெருகும். இந்த சூழ்நிலையில்தான் முருகனே இங்கே வந்தார். நமக்காக இங்கே வீற்றிருக்கிறார். நாம் தர்மத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று நினைச்சு, நீங்க வணங்கினீங்கன்னா, உங்களுக்கு இன்னும் பல ஞானிகளோட அருளை கொடுத்து, அவங்க (power) பலத்தை எல்லாம் கொடுத்து, உங்களையும் ஒரு வெற்றிமானாக மாற்றுவார்.
சுவடி ஓதும் மைந்தன் :- மாற்றுவார்.
குருநாதர்:- இதனால்தான் ஒருவனுக்கு சொல்லி சொல்லி….. இதனால் அனைவரும் அழைத்துச் சொன்னால், அனைவரும் நன்றாக இருப்பார்கள். இனிமேல் இப்படித்தான் சொல்ல வேண்டும்.
அடியவர் :- அதாவது தனி ஒரு தனி நபர் வார்த்தை சொல்றதை விட, இந்த மாதிரி நிறைய பேர் கூட்டி சொன்னா, அது வேகமா பரவும். அப்படிங்கிறதாலே, இப்ப உதாரணமா, நேத்து பத்துமலை (Batu Caves) போய் சுவடி வாக்கு படிச்சோம். ரெண்டு இடத்துலயும் முருகப்பெருமான் தான் வாக்கு உரைத்தார்கள். அங்கு நாங்க அகத்திய பெருமான் வருவாங்க அப்படினு எதிர்பார்த்தோம். ஆனால் இன்று இந்த இடத்தில அகத்திய பெருமான் வந்து வாக்கு உரைக்கின்றார் முருகனுக்காக. ஏன்னா, இந்த செய்தியை வந்து அவர் சொல்லி, அதுக்காக சண்டை போட்டாரு. இங்க உலகத்தை காட்டணும், அப்படின்னு சொல்லிட்டு, சோ அதனாலதான் நிறைய பேரை வரவழைச்சு, உங்களை வரவழைத்து, உங்கள் மூலம் செய்தி பரவ வேண்டும் என்று சொல்கின்றார்.
குருநாதர்:- எதை ஏது என்று புரிய எவ்வாறெல்லாம் , நிச்சயம் தன்னில் கூட, அதாவது தேவலோகத்திலிருந்து முருகன் என்ன கஷ்டங்கள் படுகின்றானே என்றெல்லாம், நிச்சயம் தேவலோகத்திலிருந்து பின், அதாவது எதையோ பின் எடுத்து வந்தார்கள்.
குருநாதர்:- பின் பல பழங்களும், பல பல வழிகளில் கூட என்னவோ பின் உண்ணுவதற்கு. ஆனாலும் முருகன் வைராக்கியத்தோடு, அகத்தியனுக்கு யார் இருக்கின்றான் என்று, நிச்சயம் எதையும் வாங்கி எவை என்று கூற உண்ணவில்லை.
அடியவர் :- அதாவது இந்த மலையில அவருக்கு என்ன கிடைக்கும், அப்படின்னு சொல்லிட்டு, தேவலோகத்திலிருந்து பல பல வகையான பழங்கள் எல்லாம் எடுத்துட்டு வராங்க. ஆனா முருகன் சின்ன குழந்தை, நீ கஷ்டப்படுறியே, அப்படின்னு சொல்லி, இதை சாப்பிட்டு, அவர் தண்ணி தண்ணி கூட்டிட்டு போயிடலாம், அப்படின்னு சொல்லிட்டு. ஆனால் முருகன் எதற்கும் அபயத்தை கொடுக்கவில்லை. நான் அகத்தியருக்காக இங்கேயே நிற்பேன் என்று சொல்லி, அந்த எதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது இந்த மக்களுக்காக, முருகன் எதையும் ஏற்றுக்கொண்டு, மேலோகம் செல்லவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- செல்லவில்லை. நீங்க எல்லாம் உங்களுக்கு தேவையில்லை. நீங்க போங்க. அப்படின்னு சொல்லிட்டு யார் வந்து எல்லாரும் எனக்கு தேவையில்லை.
அடியவர் :- முருகன் வந்து வந்த தேவர்கள் எல்லாம் திருப்பி அனுப்பிச்சு விட்டார்.
குருநாதர்:- எதைத்தன் முருகா !!!!!! இப்படி அதாவது பின் எதை என்று புரிய, உனக்கு என்னதான் வேண்டும்? என்று, அதாவது அறிந்தும் யான் கேட்டேன்.
குருநாதர்:- ஆனாலும் அகத்தியனே !!!!! பின் எனக்கு ஒன்றும் தேவையில்லை, அன்பே போதுமானது.
குருநாதர்:- இருந்தாலும் நீ பசியோடு இருக்கின்றாய், என்ன வேண்டும் என்று?
குருநாதர்:- அதாவது நீ ஒரு, அதாவது அதிசய, அதாவது நீர் ஊற்று ஏற்படுத்து. இதனை பின் நிச்சயம் எடுத்து வா என்று. அதனால் அழகாக அதை எடுத்து வந்து பின் இந்தா என்று யான் கொடுத்தேன்.
அடியவர் :- அதாவது அகத்திய பெருமான் வந்து கேட்கிறாரு. எனக்காக இவ்வளவு பண்ணுகின்றாயே அப்பா. உனக்கு என்ன வேணும்? ஏன்னா நீ சாப்பாடு இல்லாம தான் இருக்க… அப்படின்னு சொல்லி அவர் கேட்கிறார் அகத்திய பெருமான் . அதுக்கு முருகன் சொல்றாரு, இல்ல நீ மட்டுமே போதும் என்று முருகன் சொல்கின்றார். அப்படின்னு சொல்லிட்டு நீர் ஊற்று,
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதோ ஒரு நீர் ஊற்று இருக்குது வந்து… (முருகப்பெருமான் அகத்திய மாமுனிவரிடம்) அய்யா அகத்திய பெருமான் எடுத்துட்டு வா அப்பா நீர். அதுவே எனக்கு போதும்.
அடியவர் :- எனக்கு போதும். ஏன்னா முருகன், முருகனும் அகத்தியரும் உண்டாக்கிய சுனை.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கு இருக்கிறது.
அடியவர் :- இங்கு இருக்கிறது என்று அகத்திய பெருமான் பெருமான் சொல்கிறார்,
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்கின்றார்.
( அடியவர்கள் இதன் விபரங்களை “மலேசியா தண்ணீர் மலையில் உள்ள நீர் ஊற்று” என்று தேடி பார்க்க பல விபரங்கள் தெரியவரும்.)
குருநாதர்:- இதனால் எதை ஏது என்று புரிய , எவ்வாறெல்லாம், இதனால் அவ் நீர் இங்கேயே, அழகாக யார் யாருக்கு பின் என்ன நோய்கள், எதை என்று இருக்கின்றதோ, அவ் நீரை இல்லத்தில் பின் எடுத்துக்கொண்டு, அழகாக பின் எதை என்று புரிய, மிளகும், தேனும் இன்னும் துளசி இலைகளும் இன்னும், பின் அதாவது வேப்பிலை இன்னும் பல வகைகள் கூட, வில்வத்தை இன்னும் பல மூலிகைகள் சேர்த்து, அதாவது அந்நீர், தன்னில் கூட ஊற வைத்து, அதிகாலையில் அருந்தி வந்தால், உங்களுக்கு ஆற்றல் பெருகும். நிச்சயம் சில நோய்களும் மறையும். நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமாக சந்தோஷம் கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது இங்க இருந்து ஒரு சுனை இருக்குது, அந்த சுனையிலிருந்து தண்ணி எடுத்துட்டு போயிட்டு….
அடியவர் :- அதாவது பல மூலிகை கலந்து , வில்வம், துளசி, வேப்பிலை , இது போன்ற பல மூலிகைகள் கலந்து, இரவு (நைட்) ஊற வைத்து,, அதை எடுத்து காலையில நீங்கள் அருந்துகிறீர்கள் என்றால், சில நோய்கள் தீரும். மனத்தெளிவு கிடைக்கும். சந்தோஷம், மனமகிழ்ச்சி உண்டாகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- உண்டாகும்.
அடியவர் :- அது அருமருந்தாக… அந்த சுனைக்கு இருக்கும், அப்படிங்கிறதை அகத்திய பெருமான் சொல்கின்றார்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)


