​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 31 May 2026

சித்தன் அருள் - 2213 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7 

நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 
===========================

( அடியவர்கள் அவசியம் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரலையை அவசியம் பார்க்கவும். அதன் பின்னர் பின் வரும் வாக்கு ரகசியங்கள் நன்கு புரியும்) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, படிக்கிறேன். கேளுங்க, அடுத்தாக தேரையர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம். 

தேரையர் சித்தர் :- "அறிந்தும், அடுத்தடுத்து, இவ்வெழுத்துக்களில் அனைத்தும் அடங்கும். இவை இல்லை என்றால் உலகம் இயங்காது." 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த எழுத்துக்கள்ல “அ“வில் இருந்து...

அடியவர் :- அக்கண்ணா (ஃ)  வரைக்கும் இருக்கு. இதுல அடங்கி இருக்கு. இது இல்லனா...

சுவடி ஓதும் மைந்தன் :- இதுல தான் உலகம். எல்லா மதத்திலயும், எல்லா மொழிகளிலும்...

அடியவர் :-  இந்த எழுத்துக்களை பயன்படுத்துறாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- பயன்படுத்தாத இல்லை.

அடியவர் :-  இல்லை.

தேரையர் சித்தர் :- இதனால்தான் அனைத்து மதமும் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா மதமும்… இறைவன். 


தேரையர் சித்தர் :- மனிதன் தான் இங்கு பிரித்து வைத்திருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் தான்...


அடியவர் :-  பிரித்து வைத்திருக்கின்றான்.


===========================
# அகத்திய மாமுனிவரின் வீர விளையாட்டு…..
===========================


தேரையர் சித்தர் :- அடுத்து, என் அகத்தியனின் வீர விளையாட்டை பாருங்கள். எழுதுங்கள், எழுதுகோலை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து, என் அகத்தியன் கண்டுபிடிச்சது நான் சொல்றேன்னு தேரையர் சொல்றாரு.


அடியவர் :-   வீர விளையாட்டு. குருநாதருடைய வீர விளையாட்டை பார்க்கலாம் வாங்கன்றாரு.


அடியவர் :-  உலகத்துல முதல் முறையாக ரகசியங்கள் எல்லாம் வெளிப்படுத்துறாங்க.


( இப்போது இவ்வேளையில் அனைத்து “ஆ” கார வரிசை எழுத்துக்களை எல்லாம் அழித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாரானார்கள் அடியவர்கள் )


நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=5h23m36s  


===========================
# ஜாதக கட்டங்களில் உலகில் முதன் முறையாக ஆங்கில எழுத்துக்கள் 
===========================


தேரையர் சித்தர் :- "அறிந்தும், இவை தன் ஆ என்ற இடத்திலே, அறிந்தும்—அதாவது ஏது  என்று அறிய அறிய  மூன்று மூன்று, பின் நட்சத்திரங்கள்—இதனை மூன்று மூன்றாக ஆங்கிலத்தில் எழுதுக." 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, ஏபிசிடி எழுத சொல்றாரு. இங்க ஏபிசி, இங்க... ஏபிசி. எழுதுங்க ஐயா. ஏ, பி, சி. அப்படியே எழுதிடுவாங்க.


( ஒவ்வொரு ராசி கட்டத்திலும் 3 நட்சத்திரங்கள் இருக்கும். எனவே ஆங்கில எழுத்துக்களை மூன்று மூன்றாக, வரிசையாக  எழுத சொன்னார்கள். அடியவர்கள் பின்வருமாறு எழுதினார் அங்கு உள்ள ஜாதக கட்டத்தில்… 


மேஷம் - A, B , C 
ரிஷபம் - D, E , F 
மிதுனம் - G, H , I
கடகம் - J, K , L 
சிம்மம் - M, N, O
கன்னி - P, Q, R
துலாம் - S, T, U
விருச்சிகம் - V, W, X
தனுசு - Y , Z  - இத்துடன் 26 எழுத்துக்களும் நிறைவு.
மகரம் - 
கும்பம் -
மீனம்  -  ) 


தேரையர் சித்தர் :- இதை என்று அறிய, மீண்டும், அதாவது விட்டு இருக்கின்றதே அதை நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க ( மகரம், கும்பம் ,மீனம்  ராசிகளில் )    விட்டு இருக்குது இல்ல?  என்ன பண்ணப் போறீங்கன்றாரு. யோசிங்க?


அடியவர் 2 :-  இறுதி கட்டத்துக்கு என்ன செய்யப் போறீங்க?


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன செய்யப் போறீங்கன்னு கேக்குறாரு.


அடியவர் :-  (சித்தர்கள்) அவங்க ஏதாவது சொல்லணும்.




தேரையர் சித்தர் :- "அறிந்தும், எவை என்று புரிய, கடைசியில் எங்கு முடித்திருக்கின்றான்?" 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடைசியில் எங்க?


அடியவர் :-  ஐ.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐ. எங்க தனுசு?


அடியவர் :-  தனுசு.


சுவடி ஓதும் மைந்தன் :-  குரு.


அடியவர் :-  குரு.


தேரையர் சித்தர் :- இவையெல்லாம் ( தனுசு ராசி )  இங்கிருந்து வந்துவிட்டாலே “ஓம்” காரத்தை அடைந்து விடலாம்.அதனாலே. 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் இங்கிருந்து வந்து இதுவரைக்கும் ( தனுசு ராசி )  தெரிஞ்சுச்சுங்கன்னாவே அடுத்து என்னது? ஓம்காரத்தை இறைவன் யார்? ஆங்கிலத்திலேயே சுலபமா அறிஞ்சுக்கலாம்ன்றாரு இறைவன். ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :- ஐ வரைக்கும் வந்துட்டோம்னா “ஓம்”காரம் யார்?


சுவடி ஓதும் மைந்தன் :-   “ஓம்”காரம் யார்? ஐயா சொல்லுங்க, எக்ஸ்பிளைன் பண்ணுங்க கொஞ்சம் ஐயா.


அடியவர் :- ஓம்காரம். ஆ, உ, ம். அதான் ஓம். அதோட ஆரம்ப எழுத்து சொல்றேன் பாருங்க. ஔம். அது ஆரம்பம். அதுதான்… அங்க இறைவனை வந்து பாக்குறதுக்கு போலாம்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல இல்ல. இருங்க இருங்க எழுதிடுங்க. சொல்றேன் இருங்க. ஒரு நிமிஷம்.


===========================
#  தனுசு ராசி ரகசியங்கள் 
===========================


தேரையர் சித்தர் :- "அறிந்தும், ( தனுசு ராசி வரை ) இவையனைத்தும் பின் நிச்சயம் தெரிந்து வைத்திருந்தால், குருவானவன் உன்னிடத்திலேயே வருவான். தெரிந்து வைந்திருக்கவில்லை என்றால், நீ அலைந்தாலும் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை." 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம்?...


அடியவர் :- இந்த விஷயங்கள் அடிப்படை விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். தெரிஞ்சாதான் வந்து குருவானவர்ட்ட உங்களாலயும் போட முடியும், அவங்கள தேடி வர முடியும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  குரு வந்து நம்மளுக்கு இந்த Z , ஐ வரைக்கும் தெரிஞ்சிருந்தா அடுத்து குரு என்ன பண்ணுவாரு?


அடியவர் :- இறைவனை காமிப்பாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை காண்பிப்பாரு. ஆனா இங்கிருந்து வர்றது...


அடியவர் :- குருவருள் கிடைக்கலன்னா இறையருள் கிடைக்காது.


சுவடி ஓதும் மைந்தன் :-  கிடைக்காது. ஐயா புரியுதுங்களா? 


===========================
#  உலகில் முதன் முறையாக அனைத்து கடவுள்களும் ஜாதக கட்டத்தில்…
===========================


தேரையர் சித்தர் :- அப்பா,  இப்பொழுது யான் ஏன் இங்கு ஆங்கில வார்த்தைகளை... இதனால் அனைத்தும் ஏது  என்று புரிய, அனைத்து தெய்வங்களிலும் அனைத்து சமயங்களிலும் எழுதுக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நான் ஆங்கிலத்துல ஏன் கொண்டு வந்தாருன்னா தேரையர் சொல்றாரு...


அடியவர் :-  எல்லா மொழிகளும்.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா மொழிகள். ஐயா... இயேசுநாதர் இங்க இருக்காரு. ஆமா. ஜீசஸ் எங்க இருக்கு? ஜே (J) எங்க இருக்கு? அங்க போடுங்க. ( கடகம் - J, K , L ) 


இவ்விடத்தில் நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=5h27m06s

அடியவர் :- ஜீசஸ். ( அடியவர் கடக ராசியில் - J என்று முன்பு எழுதப்பட்ட எழுத்தின் அருகில் “JESUS” என்று எழுதினார்கள். அதனை மேல் குறிப்பிட்டுள்ள காணொளியில் பார்க்கவும்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அல்லாஹ் எங்க இருக்கிறார் வந்து?


அடியவர் :- 


சுவடி ஓதும் மைந்தன் :-  “A” வே வந்துட்டார். ( மேஷம் - A, B , C  )


அடியவர் :- அல்லாஹ்.. ( அடியவர் மேஷம்  ராசியில் - A என்று முன்பு எழுதப்பட்ட எழுத்தின் அருகில் “ALLAH” என்று எழுதினார்கள். அதனை மேல் குறிப்பிட்டுள்ள காணொளியில் பார்க்கவும்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்புறம் வேற நாமம் என்ன சமயமா இருக்குது?
Speaker 1
அடியவர் :-  புத்தர்.
Speaker 2
சுவடி ஓதும் மைந்தன் :-  புத்தர். ( மேஷம் - “B”UDHAR   ) இங்கேயே. ஐயா பாத்தீங்களா? எல்லாருக்கும் தெரியல. இந்த மாதிரி தெரியாத நம்ம இருக்கக்கூடாதுங்க ஐயா.


அடியவர் :-   குருநானக்,  மகாவீரர்.


( அது போலவே அங்கு அந்த , அந்த ராசிகளில் எழுதினார்கள். அதனை மேல் குறிப்பிட்டுள்ள காணொளியில் பார்க்கவும்) 

===========================
#  மகரம்   - ALPHA
#  கும்பம்  - BETA
#  மீனம்   - GAMA 
===========================


தேரையர் சித்தர் :- கதிர்கள் மூன்று. அவையும் இணை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா. காமா கதிர்கள். அது மூன்று கதிர்கள் இருக்குல்ல இங்க வந்து. 


அடியவர் 2 :-   ஆல்பா பீட்டா. ஆல்பா பீட்டா காமா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது வந்து ஆல்பா பீட்டா காமா.


அடியவர்   :-  ஓ!!!!!!!!  ஆல்பா.. பீட்டா.. காமா….


(அடியவர் மகர ராசியில் ALPHA, கும்ப ராசியில் BETA, மற்றும், மீன ராசியில் GAMA  என்று எழுதினார்கள்)


தேரையர் சித்தர் :- இதை அறிந்து இவ்வாறாக மீண்டும் ஒரு சுழற்சி. (ஃ) “அக்” என்பது போல் இரண்டு. 


( இவ்விடத்தில்  சுவடி ஊதும் மைந்தன் எண்ணத்திலும் நாடி ஓடினால் மட்டுமே இப்படி உரைக்க முடியும் என்று உணர்க. )


===========================
#  ஜாதக கட்டத்தின் நடுவில் INFINITY/இன்பினிட்டி. அதுவே இறைவன்.
===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  ( INFINITY ) இன்பினிட்டி. இங்க போடுங்க. இன்பினிட்டி. முடிஞ்சு போச்சு. ஐயா புரியுதுங்களா? எனக்கும் புரியல. இதுல சொல்ல வராரு என்னன்னு சொல்லிட்டு. 


தேரையர் சித்தர் :- ஏது  என்று புரிய, அப்பா அறிந்தும் இக்கட்டத்திலே அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. அனைத்து மொழிகளிலும் இதிலே பேசலாம். கற்றுக் கொடுக்கின்றேன் மொழிகளைப் பற்றியும். 


அடியவர்   :-  ( ஆச்சரியத்தில் ) அப்பா !!!!!!!!!!!!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுலயே வந்து...


அடியவர்   :- எல்லா மொழிகளும் இருக்குன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா மொழிகளிலும் நீங்க பேசலாம். ஏய் எத்தனை மொழிகள் ஐயா? ஹிந்தி பேசலாம் இதுலயவே. இங்கிலீஷ் பேசலாம்.


அடியவர்   :- கர்நாடகா பேசலாம். மலையாளம் பேசலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  மலையாளம் பேசலாம்.


அடியவர்   :- மராத்தி பேசலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  தமிழ் பேசலாம். மராத்தி பேசலாம். குஜராத்தி பேசலாம்.


அடியவர்   :- உருது பேசலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  உருது பேசலாம். இன்னும் ஜப்பானி பேசலாம்.


அடியவர்   :- சைனீஸ் பேசலாம். கொரியன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சைனீஸ் பேசலாம்.


அடியவர்   :- சொல்லிக் கொடுக்கிறேன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் சொல்லிக் கொடுக்கிறேன்பா. 


===========================
#  ஏன் ஜாதக கட்டத்தின் நடுவில் இறைவன்.
===========================


தேரையர் சித்தர் :- அனைத்து சமயங்களையும்  கடந்தவன் இறைவன். இப்பொழுது புரிகின்றதா?


அடியவர் :- நிச்சயமா.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா...


அடியவர் :- இறைவன் ஒருவன் எல்லாத்தையும் கடந்தவன்.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் கடந்தவன். 


தேரையர் சித்தர் :- அனைத்து தேசங்களையும் கடந்தவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா தேசங்களையும் கடந்தவன்.


அடியவர் :- அதான் எல்லா மொழிகள், மதங்கள், இனங்கள், தேசங்கள் எல்லாத்தையும் கடந்தவன் இறைவன் என்பதை  இதன் மூலம் உணர்த்துறாங்க. 


தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று புரிய, இப்பொழுது ஒன்றைச் சொல்கின்றேன். அதாவது அனைத்தும் எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் ஏது என்று புரிய, கூட்டுக. 


===========================
#  உயிரெழுத்துக்கள் - 12
# ஆங்கில எழுத்துக்கள் - 26
# ஆயுத எழுத்து - 1 
# ராசிகள் - 12
# ஆக மொத்தம்  - 51
# ஆல்பா, பீட்டா, காமா - 3
# 51 - 3 = 48 ( ஒரு மண்டலம் )
# ஒரு மண்டலம்(48) * 2 = 96 ( சிற்றிலக்கியங்கள் )
===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா தமிழ் எழுத்துல இங்க எவ்வளவு எழுத்துன்னு கூட்டி எழுதிங்க ஐயாங்க. 


அடியவர் :- 12 உயிரெழுத்துக்கள். எழுதுங்க. 


தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று புரிய, அறிய இவை தன். அதாவது அறிந்தும் கூட அறிந்தும். அதாவது ஆங்கில எழுத்துக்களும் கூட்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (26) ஆங்கில எழுத்துக்களும் கூட்டணும். எழுதுங்க.. ( அடியவரும்  அவ்வாறே எழுதினார்கள் ) 


தேரையர் சித்தர் :- அறிந்தும் அக் என்றையும் எழுது.


( அடியவரும்  அவ்வாறே ஆயுத எழுத்து அதற்கு 1 என்று எழுதினார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகே.


தேரையர் சித்தர் :- கிரகங்களை  கூட்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ராசியும்…..


அடியவர் :-  12.


நேரலை :-  https://youtu.be/C5OQ5pL4GnY?t=19822


( அடியவரும்  அவ்வாறே ராசிகளை 12 என்று  எழுதினார்கள் ) 


தேரையர் சித்தர் :- இவை அனைத்தும் கூட்டு.


சுவடி ஓதும் மைந்தன் :-  கூட்டுங்க. 


( அடியவரும்  அவ்வாறே  கூட்ட ….12 + 26 + 1 + 12 = 51 ) 


தேரையர் சித்தர் :- இதிலிருந்து ஏது என்று அறிய, அதாவது இவை தன் உணர்ந்து, இவை தன் மூன்று வகையான அறிந்தும், பின் கழி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த கழி…ஆல்பா பீட்டா காமா கழிங்க.


அடியவர் :-  ஆல்பா, பீட்டா, காமா. மூணு கழிங்க …அதாவது -3. 


அடியவர் :-  51 -3 = 48.


அடியவர் 2 :- ஒரு மண்டலம்.


தேரையர் சித்தர் :- இவை தன் அனைத்தும் சரியாக விரதம் இவ்வாறாக இருந்தால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும் அறிந்து கூற ஒரு உண்மை நிலை உங்களுக்கு புரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வாறு ஒரு 48 நாட்கள்….


அடியவர் :- அந்த ஒரு மண்டலம்னு சொல்றோம்ல, அந்த ஒரு மண்டலம் எப்படி வந்ததுன்றத காரணத்தை விளக்குறாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-   காரணம் காட்டுறாரு வந்து. அதே மாதிரி இறைவன் வந்து, ஒரு 48 நாள் நீங்க வந்து எதையும் வந்து சரியா வந்து விரதத்தை கடைபிடிச்சு இருந்தீங்கன்னா, இறைவன் யார் என்பது?  


அடியவர் :- புரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியும். 


தேரையர் சித்தர் :- இவை தன் அறிந்தும் இதன் மூலமே பின் இன்னும் பின் அதனைப் பின். பெருக்கு இரண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இரண்டால பெருக்குங்க ஐயா.


அடியவர் :- இரண்டால பெருக்குங்க ஐயா. 48*2 போடுங்க. 


எழுது பலகையில் எழுதும் அடியவர் :- (96 என்று எழுதினார்கள்).


தேரையர் சித்தர் :- எதை என்று அறிய சிற்றிலக்கியங்கள் எவ்வளவு?


அடியவர் :- 96 சிற்றிலக்கியங்கள்.


தேரையர் சித்தர் :- எதை என்று அறிய அப்பா அனைத்தும் எழுதுக பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் எழுதுக சிற்றிழைக்கம். ஐயா.


அடியவர் :-  ஐயா கூகுள் ஆண்டவரை தான் கூப்பிடணும்.
Speaker 2
சுவடி ஓதும் மைந்தன் :-  96 ஐயா புரியுதுங்களா?
96 சிற்றிழைக்கங்கள்.


அடியவர் :- ( சொல்ல சொல்ல , எழுது பலகையில் எழுதும் அடியவர் அப்படியே எழுதினார்கள் ) 


96 இலக்கியங்கள். 
அகப்பொருள் கோவை எழுதுங்க ஐயா. ஐயா இன்னொன்னு சொல்றேன் ஐயா வரிசையில. வரிசையில. 
அகப்பொருள் கோவை. வரிசையில. 
அகப்பொருள் கோவை. 
அங்கமாலை. 
அட்டமங்கலம். 
அங்கமாலை. 
அட்டமங்கலம். 
அரசன் விருது. 
அலங்கார பஞ்சகம். 
அலங்கார பஞ்சகம். 
அனுராக மாலை.
அலங்கார பஞ்சகம்.


நேரலை : https://youtu.be/C5OQ5pL4GnY?t=19961


தேரையர் சித்தர் :-  அறிந்தும் அப்பா அனைத்தும் நீ சொல். அனைவரையும் சொல்லச் சொல்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் சொல்லுங்க .


அடியவர் :-  அம்மா எல்லா பேரும் சொல்ல சொல்ல சொல்லுங்க. இதை சொன்னாலே சில விஷயங்கள் இருக்குன்னு சொல்றாங்க போல. எல்லாரும் திருப்பி சொல்லுங்க. 96 சிற்றிலக்கியங்கள் இப்ப சொல்லி இருக்காங்க தேரையர் பெருமான். அதை சொல்றேன் எல்லாரும் திருப்பி சொல்லுங்க.


( இப்போது அடியவர் சொல்ல சொல்ல அனைவரும் அங்கு அதனை அப்படியே சொல்ல ஆரம்பித்தனர்… )  


அகப்பெருள் கோவை.
அங்கமாலை.
அட்டமங்கலம்.
அரசன் விருது.
அலங்கார பஞ்சகம்.
அனுராக மாலை.
அரண்மனை வஞ்சி.
ஆற்றுப்படை.
இணை மணிமாலை.
இயல்பு நவீர்ச்சி மாலை.
இரட்டை மணிமாலை.
இருவா இருபது.
உலா.
உலா மடல்.
உளத்திப்பாட்டு.
ஒளிங்கை மாலை.
உற்பவ மாலை.
ஊசல்.
ஊர் நேரிசை.
ஊர் வெண்பா.
ஊர் இன்னிசை.
என் செய்யுள்.
ஐயடிகள்.
ஒளியலந்தாதி.
ஒருவா ஒருவது.
கண்படை நிலை.
கலம்பகம்.
காட்சி மாலை.
காப்பு மாலை.
காரிகை.
காப்பியம்.
குடைநிலல்.
குலகன்.
குரவஞ்சி.
கேசாதிபாதம்.
கைக்கிளை மாலை.
கையருநிலை.
கொடிமாலை.
கோவை.
சதகம்.
சாதகம்.
சின்னப்பூ.
செருக்கல வஞ்சி.
செவி அறிவூறு.
தசாங்கம்.
தசாங்கத் தயல்.
தண்டக மாலை.
தவம்.
தாரகை மாலை.
தாரை மாலை.
தானை மாலை.
தூது.
தும்பை மாலை.
துகிலடை நிலை.
தொகைநிலைச் செய்யுள்.
நயனப்பத்து.
நவகண்டம்.
நவமணி மாலை.
நாமமாலை.
நாளிகை பத்து.
நான்மணி மாலை.
நால்வர் நாற்பது.
நாரை விடுதூது.
நொண்டி நாடகம்.
பதிகம்.
பதிற்றந்தாதி.
பயோதரப்பத்து.
பரணி.
பல்சந்த மாலை.
பவனிக்காதல்.
பன்மணி மாலை.
பாதாதி கேசம்.
பில்லைத் தமிழ்.
புகழ்ச்சி மாலை.
புறநிலை.
பெயராரவம்.
பெயர் நேரிசை.
பெயர் இன்னிசை.
பெருமகிழ்ச்சி மாலை.
பெருங்காப்பியம்.
போர்க்கெழு வஞ்சி.
மங்கள வெல்லை.
மடல்.
மணிமாலை.
மும்மணிக்கோவை.
மும்மணி மாலை.
மெய்கீர்த்தி.
மேக விடுதூது.
வசந்தமாலை.
வஞ்சி மாலை.
வரலாற்று வஞ்சி.
வறுக்கக்கோவை.
வறுக்கமாலை.
வாகைமாலை.
விருத்தப்பயன்.
வீர வெட்சி மாலை.


அடியவர் :- திருச்சிற்றம்பலம். 




அடியவர் :-  இதெல்லாம் 96… நமக்கு 96 இப்பதான் நான் முதல் கேள்விப்படுறேன் குருவருளால… சிற்றிலக்கியங்கள் 96 இருக்குன்னு தெரியும். but …. 96 counting…


===========================
#  ஆல்பா, பீட்டா, காமா - அலைகள் உங்கள் கண்களுக்கு எப்போது தெரியும்? 
===========================


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=20150


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இவை தன் அறிய அதாவது பின் இவை என்று அறியாமல் இருந்தாலும் இவ் காப்பியங்கள் மூன்று மாதத்தில் சரியாக எவன் உச்சரிக்கின்றானோ,  அவனுக்கு அதாவது பின் இவ்வாறாக அதனைப் பற்றி, அதாவது நிச்சயம் ஒரு அலை நிச்சயம் செல்லும். அதாவது அவ் அலை பற்றி தெரியும், பின் ஆங்கிலத்திலே சொல்வார்களே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை வந்து, அந்த சிற்றிலக்கியங்கள் வந்து, மூணு மாசங்கள்ல வந்து, இதெல்லாம் படிச்சோம்னா, ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் போல தான், ஆல்பா பீட்டா காமான்னு…. அந்த அலை வந்து உங்களுக்கு தெரியும்ன்றார். மூணு மாதத்துல அப்ப ஆல்பா பீட்டா காமா பத்தி தெரியும் பாருங்க.


அடியவர் :- அந்த ஒளிக் கதிர்வீச்சு தான் அந்த இறைவனை பார்க்கிறதுக்கு ஒரு மூலம்னு சொல்ல வராங்க. அந்த ஒளிக்கதிர்வீச்சை பார்க்கிறதுக்கு தான்…. 


தேரையர் சித்தர் :-  அப்பா மீண்டும் அதாவது அறிந்தும் கூட அதாவது ஒன்பது கிரகங்கள் ஆனாலும் 12 கட்டங்கள் ஏன்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்பது கிரகங்கள் தான் இருக்குது. ஏன் 12 கட்டங்கள்? 


அடியவர் :-  கிரகங்கள் ஒன்பது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இருக்குது ஓகே. மொத்தத்துல ஒன்பது கிரகங்கள். ஏன் 12 கட்டங்கள் விட்டாங்க? 


அடியவர் :-  ஒன்பது கிரகங்கள். மூன்று கதிர்வீச்சு. 


தேரையர் சித்தர் :-  இவ் ஒன்பது கிரகங்களை ஏது என்று புரிய சரியாகவே பின் அதாவது அறிந்து கொண்டால், நிச்சயம் இவ் கோடானது உங்கள் கண்களுக்கு தெரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஒன்பது கிரகங்களையும் நீங்க வந்து அறிஞ்சுக்கினீங்கன்னா ஆல்பா பீட்டா காமா வந்து 


அடியவர் :-  கண்ணுக்கு தெரியும்ன்றாங்க கண்ணுக்கு தெரியும் அந்த 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஐயா யாருங்க ஐயா ஐயா புரியுதுங்களா ஐயா அப்ப என்ன ஆச்சு ஒன்பது +  மூணு = 12.  முடிஞ்சு போச்சு. அப்ப இன்பினிட்டியை காணலாம். இன்பினிட்டி யாரு? 


அடியவர் :-  முடிவில்லாதவன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  முடிவில்லாதவன். ஆதியும் அந்தமும் இல்லாதவன் 


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=20266


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஆங்கிலத்தில் 26 … ஆனா 27 வது என்ன வருது? இன்பினிட்டி.. அப்ப 27 நட்சத்திரங்கள் ஐயா புரியுதுங்களா? 27 நட்சத்திரங்கள். 12 மெய்யெழுத்துக்கள். 


(இவ்விடத்தில் பல உரையாடல்கள். அதன் சாரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.  ) 


உயிர் எழுத்து - 12
ஆங்கில எழுத்துக்கள் - 26
ஆயுத எழுத்து (ஃ)   - 1
மொத்தம் = 12 +26+1 = 39
infinity - 1 
மொத்தம் 39 + 1 = 40 




தேரையர் சித்தர் :-  ஏது என்று புரிய இவை தன் அறிய அறிந்தும் இவை தன் வென்றால் அறிந்தும் அனைத்தும் வெல்லலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை வந்து வென்றாலே அனைத்தும் வெல்லலாம் என்றார் வந்து. இது எப்படிங்க ஐயா? உயிரெழுத்துக்கள் 12. உயிரெழுத்து படிக்கணும். ஆயுதம் தெரியணும். ஆங்கிலத்துல எழுத்து எல்லாம் தெரியணும். இதை வந்து நீங்க இந்த உலகத்தை வெல்லலாம். 




சுவடி ஓதும் மைந்தன் :-  அப்புறம் ஓம்கார பொருள்…. ஐயா ஐ வரை செஞ்சுக்கினீங்கன்னா, அடுத்து உங்களை யார் இயக்குறது?


அடியவர் :-  இறைவனை இயக்க ஆரம்பிச்சுருவார்.


சுவடி ஓதும் மைந்தன் :-   இறைவன்… குருவானவரை இயக்குவாருங்க ஐயா. ஓம்காரம் யாருன்னு தெரிஞ்சுக்கிறோம். ஆல்பா பீட்டா காமா தெரியும். எல்லாம் ஓம் என்ற ஓம் ஓம்னு சொல்றீங்களே அது என்னன்னு அதுவும் கண்ணுக்கு தெரியும்ன்றார். உந்துகாரம் ஒன்னும் இல்லைங்க ஐயா ஐயா புரியுதுங்களா 


அடியவர் :-  அப்படின்னா ஐயா நம்ம இங்க இருந்து இதுவரைக்கும் ( மேஷ ராசியில் இருந்து தனுசு ராசி வரைக்கும் )  நம்ம கஷ்டப்பட்டு வரணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  வரணும் 


அடியவர் :-  குரு வந்து இறைவனை காண்பிப்பார். ( அதாவது ஆல்பா , பீட்டா , காமா மூலமாக )


சுவடி ஓதும் மைந்தன் :-  ரைட் அவ்வளவுதான். முடிஞ்சு போச்சுங்க ஐயா. அப்ப குரு வந்து இங்க இருந்து ( தனுசு ராசியில் இருந்து ) இங்க ( மீன ராசி வரை ) இயக்குவார் ஓம்காரத்தை. ஓம்காரனா யாரு?  ஓம் யாரு? ஆமா குரு.


இவ்விடத்தின் நேரலை :-  https://youtu.be/C5OQ5pL4GnY?t=20414


தேரையர் சித்தர் :-  அப்பா இவை என்று அறிய அடுத்து பின் பக்கத்தில் இடு பின் “ம்” மை 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒ  பக்கத்துல இடுங்க ஐயா “ம்”மை. 


எழுதும் அடியவர் :-  மகர ராசி அங்கு  “ஒ” அதனுடன் “ம்” அதனை இணைந்தார்கள். ( மகர ராசி  - ஒம்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  (கும்ப ராசி) அதுலயும் இருங்க…ஓம் ஓம் ஓம் 


எழுதும் அடியவர் :-  கும்ப  ராசி அங்கு  “ஓ” அதனுடன் “ம்” அதனை இணைந்தார்கள். ( கும்ப ராசி  - ஓம்) 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் கடைசியிலும் இடு இவ்வாறு 


எழுதும் அடியவர் :-  மீன  ராசி அங்கு  “ஔ  அதனுடன் “ம்” அதனை இணைந்தார்கள். ( மீன ராசி  - ஔம்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இப்பொழுது பின் அதாவது முதலிலேயே எடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப முதலிலேயே எடு என்றார் வந்து, இப்ப அ எடுங்க, ( மேஷ ராசி அருகில் ) அம் எழுதுங்க. அப்படியே எழுதுங்க ஐயா. ஒரு மந்திரம் இங்க எழுதுங்க மேல… 


அடியவர் :-  தனியா எழுதுங்க 


எழுதும் அடியவர் :-  ( பின்வருமாறு எழுது பலகையில் மேலே எழுதினார்கள் ) 


அம் ஆம்  ஓம் ஔம்


அடியவர் :-  நாலு மந்திரம் சொல்லிக் கொடுத்திருக்காங்க குருநாதர் 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் ஏது என்று புரிய பின் “இ”லும் இவ்வாறு இடு 


எழுதும் அடியவர் :-  ( இம் என்று எழுதினார்கள் ) 


தேரையர் சித்தர் :-  இன்னும் இ பற்றி இயக்கவில்லை. யான் சொல்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் நான் வந்து இ பற்றி சொல்லல. இ பற்றி சொல்கின்றேன். ஐயா  அம் ஆம் இம், ஓகேங்களா? 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் பின் “உ” பற்றியும் சொல்கின்றேன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  உம் 


எழுதும் அடியவர் :-  ( உம் என்று எழுதினார்கள் ) 


===========================
#  ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் நடராஜ பெருமான் ஆடும்  ஆட்டத்தின் ஒலி மந்திரம் -  “அம்  ஆம் இம் உம் ஓம் ஔம்”
===========================


நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=20497


தேரையர் சித்தர் :-  அனைத்தும் எழுது 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் எழுது. தனியா எழுதுங்க அய்யா.




எழுதும் அடியவர் :-  அம்  ஆம் இம் உம் ஓம் ஔம் ( என்று எழுதினார் )


தேரையர் சித்தர் :-  அப்பா எதை என்று அறிய இவ்வாறாக பின் ஈசன் நடனமாடிக்கொண்டே இருக்கின்றான் அதாவது நடராஜனாக பின் அதாவது கால்களையும் கைகளையும் தூக்கி தூக்கி. அது பின் அதாவது ஒலியானது இவ்வாறாக பின் கேட்டுக்கொண்டே இருக்கும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா? நடராஜர் வந்து எப்பவுமே ஆடிக்கொண்டே இருப்பாராம் வந்து. ( விளக்கங்கள் அளித்தார்கள் ) 


தேரையர் சித்தர் :-  கடைசியில் ஏது என்ற அறிய பின் ஔம் என்ற சத்தம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் அப்படியே…. எப்படி சொல்றாருன்னா…. எப்படிங்க? அப்படியே ஔம் என்ற வந்து ஒலிக்கும் 


அடியவர் :-  அதாவது இந்த பேரொளி பிழம்பு….முன்பு குருநாதர் சொன்னாங்கல  பேரொளி பிழம்பு…அதாவது  ஈசன் நடனமாடிக்கொண்டு உலகத்தை இயக்குறாரு. அப்ப இயக்குறப்போ வந்து, அந்த ஒலியின் சப்தத்தினால கிரகங்கள் அனைத்தும் இயக்கப்படுது அப்போ அந்த ஒலிகள் வந்து… இந்த ஒலிகள் எல்லாம் வருதுன்றாங்க…. அந்த ஈசன் நடனம் ஆடுறப்போ. 


தேரையர் சித்தர் :-  இதைத்தன் அறிந்தும் ஏது என்று புரிய அனைத்தும் பின் அறிந்திருந்தால் காதுகளுக்கும் கேட்கும் இவ் பின் எவை என்று ஒலி  


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒலியானது காதுக்கும் கேட்கும்ன்றாங்க ஏன்னா தெரிஞ்சிருந்தா கேட்கும் இதெல்லாம் வந்து அறிஞ்சிருந்தான்றார்.


===========================
#  ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் நடராஜ பெருமான் ஆடும்  ஆட்டத்தின் ஓசை - நம்மால் கேட்க முடியும். ஆனால் ….
===========================

வணக்கம் அடியவர்களே , நாம் தியானம் செய்யும் போது ஒரு ஒலி எப்போதும் நம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதனை அனைவராலும் உணர இயலும். 

ஆனால் அந்த ஒலியில் உள்ள இந்த மந்திரங்கள் , அதன் மந்திர அட்சர ஓசையை (அம்  ஆம் இம் உம் ஓம் ஔம்)   நம்மால் இப்போது கேட்க/உணர  இயலாது. ஏனென்றால் அன்புடன் தேரையர் சித்தர் உரைப்பது போல,  நாம் இன்னும் நிறைய அறிந்திருக்க வேண்டும்.

அவ் இறை ஒலியை , ஓசையை உணர்வதே பெரும் புண்ணியமாகும்.  

தியானம் செய்து முயன்று பார்த்து, நீங்கள் கேட்கும் அந்த அவ் இறை ஒலி எப்படி என்று  இங்கு பதிவிடுங்கள் உங்கள் கருத்துக்களை. 

நமது அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால், 

அவ் இறை ஓசை கேட்க, உங்கள்  தியானங்கள் தினமும் நடக்கட்டும். 

அவ் இறை ஓசையின் மூலம் உங்கள் மாயை திரை விலகட்டும்.

அவ் இறை ஓசையின் மூலம் உங்கள் கர்மங்கள் விலகட்டும்.

அவ் இறை ஓசையின் மூலம் உங்கள் புண்ணியங்கள் பெருகட்டும். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 14 May 2026

சித்தன் அருள் - 2212 - நந்தியார் வட்டை பூ!


நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது,  பூக்களிலேயே மிக உன்னதமான மூலிகை சக்தி உடையது என சித்தர்கள் கூறுகிறார்கள். இது கண் பார்வை சம்பந்தமான எந்த குறையையும் (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளெழுத்து, கண் புரை, குளுகோமா) போன்றவைகளை சரி செய்யும்.

சரி எப்படி உபயோகிப்பது?

நான்கு அல்லது ஐந்து பூக்களை பறித்து, 100 அல்லது 200 மில்லி சுத்தமான தண்ணீரில் போட்டு குறைந்தது மூன்று மணி நேரம் வைத்து இருந்து, பூக்களை அகற்றி அந்த நீரை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து, தொடர்ந்து தினமும் காலை ஒரு சொட்டு இரு விழிகளிலும், மாலை ஒரு சொட்டு இரு விழிகளிலும் விட்டு வந்தால், எந்த குறை இருந்தாலும் அது விலகிவிடும். கண்ணாடியை ஒதுக்கி வைத்துவிடலாம், கண் புரை காணாமல் போய்விடும், அறுவை சிகிர்ச்சையை தவிர்க்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 12 May 2026

சித்தன் அருள் - 2211 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!





25/4/2026 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.

ஆதி பகவானின், பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, ஆசிகள்.

 அப்பனே, ஏன்-எதற்கு? அப்பனே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை என்பதையெல்லாம் அப்பனே பல வாக்கியத்தில் செப்பியுள்ளேன்.

 ஆனாலும், அப்பனே, அக் குறைகள் அப்பனே எப்படி நீங்கும்????? என்பவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

 அப்பனே, அவை யார் இயக்குவது? அப்பனே, எதன் மூலம் செயல்படுவது???? என்பதையெல்லாம் அப்பனே தெரியாமல் நின்றாலும், அப்பனே, அதற்கு வருங்காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின், அதாவது பின் அறிந்தும் ஒன்றிணை புகுந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இதற்கும் அப்பனே சான்றாக ஒரு தீபத்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்வேன், அப்பனே.

அத்  தீபம் என்ன??? தீபம் என்பவையெல்லாம். அப்பனே, !!!

அனைத்தும் ஏன் இந்த நாடகங்கள்???? என்பவையெல்லாம் அப்பனே பின் அதாவது அழகாகவே அப்பனே இறைவன் படைத்துத்தான் அனுப்புகின்றான்.

 அவ் நாடகத்தில் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட வெற்றி பெறுவதா???, தோல்வி பெறுவதா???? என்பவையெல்லாம் அப்பனே மனிதன் தீர்மானிக்கின்றான், அப்பனே. 

அதாவது இறைவன் அப்பனே நிச்சயம் நாடகத்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாக நடக்க  அதாவது ஆரம்பமாகி, அப்பனே முடித்து வைப்பது மனிதனே.

 அதனால்தான் அப்பனே நாடகத்தில் அப்பனே சரியாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல உண்மைகள் அதாவது நாடகம் தான் கஷ்டம் என்பேன், அப்பனே.

 அவ் நாடகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நல்முறையாக நல்மனதாக திருந்திவிட்டால், அப்பனே நாடகம் பின் முழுமை அடைந்துவிடும் என்பேன், அப்பனே.

 அப்படி இல்லை என்றால், அப்பனே மறுபடியும் ஒரு நாடகத்தை அப்பனே நிச்சயம் கொடுப்பான் என்பேன், அப்பனே.

 மக்கள் அதனால்தான் அப்பனே துன்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றார்கள் இக்கலியுகத்தில் என்பேன், அப்பனே.

 அதாவது ஒரு நாடகம் இறைவன் மனிதனுக்கு கொடுக்கின்றான். அவ் நாடகத்தில் அப்பனே பின் நிச்சயம் தன்னில் வெற்றி பெறுவதில்லை.

 இதனால் மறு நாடகம் மறு நாடகம் என்று போய்க்கொண்டே இருக்கின்றது என்பேன், அப்பனே.

 இதனால் அப்பனே நல்விதமாகவே முதல் நாடகத்திலே அப்பனே உண்மை நிலை தெரிந்து கொண்டு இறைவனை சரணாகதி அடைந்து, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மெய்ஞானத்தை உணர்ந்தால், அப்பனே அடுத்த நாடகத்தில் அப்பனே நல்முறையாகவே அனைத்தும் நடக்குமப்பா.

 இதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெய்வத்தின் அனுக்கிரகம்.

 அப்பனே, ஏனென்றால் கலியுகத்தில் உண்மை நிலை தெரிந்து கொள்ள முடியாதப்பா.

 அதனால்தான் அப்பனே சித்தர்கள் பல வகையில் கூட அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அதாவது சொல்லியிருக்கின்றோம், அப்பனே. அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே எப்படி அலைவான்???, எங்கு நன்றாக அதாவது எங்கு நல்லது நடக்கின்றது??? என்பதையெல்லாம் அப்பனே மனிதன் அலைந்து திரிந்து கொண்டு, அப்பனே கடைசியில் பின் உறங்குவான் என்பேன், அப்பனே.

 அதாவது இவ் உறங்கு என்பது அப்பனே யான் எதை எங்கு? சொன்னேன் என்பவையெல்லாம் அப்பனே தீர்மானித்துக் கொள்ளுங்கள், அப்பனே. 

இதனால் அப்பனே ஏது என்று புரிய அப்பனே உடலில் உள்ள மனதில் உள்ள அழுக்குகள் எடுக்க அப்பனே நல்முறையாக ஆகும். நல்முறையாகும்.

 அப்பனே அவ்வாறாக பின் எடுக்கப்படவில்லை என்றால், அப்பனே இறைவனே பின் நிச்சயம் பின் எடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட இறைவன் எடுக்க வேண்டுமென்றால், அப்பனே பின் கஷ்டத்தை கொடுத்துத்தான் எடுப்பான் என்பேன், அப்பனே. 

அதனால் உண்மை நிலை தெரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.

 அதனால் ஒவ்வொரு மனிதனும் அப்பனே அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் நல்வாழ்க்கைத்தான் தருகின்றான்.

 ஆனாலும் இடையே அப்பனே மாயையில் சிக்கிக்கொண்டு பல வகையான அப்பனே நிச்சயம் தரித்திரங்கள் பெற்றுக்கொண்டு, அப்பனே எது என்று புரிய அப்பனே.

 இதனால்தான் அப்பன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது அப்பனே கலியுகத்தில் அனைத்தும் மனிதனிடத்தில் தான் கொடுத்துள்ளான் என்பேன், அப்பனே.

 ஆட்சி பலங்கள் என்பேன், அப்பனே.

 அவை சரியாக பயன்படுத்துவதே இல்லை.

 அதனால்தான் அப்பனே சித்தர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையான பின் மனிதர்களுக்கு வந்து அப்பனே உரைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஞானத்தை!!!


 தெளிவு பெறவில்லை என்றால், அப்பனே அழிவுகள் தான் பலம் என்பேன், அப்பனே.


 ஏனென்றால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.
 அப்பனே!!


 நிச்சயம் மனிதன் திருந்தவில்லை என்றால், அப்பனே பின் மனிதன் ஏது என்று புரிய பின் அதற்கு மீறி அப்பனே ஒருவன் பின் அதாவது மனிதனை அப்பனே அழைத்து வந்தால்தான் என்பேன், அப்பனே. நிச்சயம் திருத்தவும் முடியும் என்பேன், அப்பனே. 

அதாவது பின் மனிதன் திருடனாக இருந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பொய் குருவனாக (போலி ஆன்மீக குரு) இருந்தால், அப்பனே இன்னும் பலவற்றை செய்து கொண்டிருந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதேபோலத்தான் மனிதனை எடுத்து வந்து அப்பனே அமர வைத்து அப்பனே அனைத்தும் சரி செய்ய வேண்டும் !!

 சொல்லிவிட்டேன், அப்பனே. 


அதாவது ஒவ்வொரு மனிதனின் கூட கடமையாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல்லொழுக்கங்கள் தேவைப்படுகின்றது என்பேன், அப்பனே.!!


 அவ் ஒழுக்கங்கள் வருங்காலத்தில் அழிந்து கொண்டே இருக்கும் என்பேன், அப்பனே. 


இதனால் அப்பனே அவ் ஒழுக்கங்கள் எப்பொழுது அழிகின்றதோ!?, அப்பொழுது தர்மங்கள் கூட அப்பனே இன்னும் கூட தாழ்வாக போகும் என்பேன், அப்பனே


 ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை என்பேன், அப்பனே.


 கெட்டியாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மீண்டும் அப்பனே தர்மத்தை அப்பனே நிலைநாட்டுகின்ற பொழுது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில சில சங்கடங்கள் அப்பனே பின் சில அப்பனே பின் சண்டைகள் வரலாம்.


 ஆனாலும் அப்பனே நல்விதமாகவே அனைத்தும் மாற்ற வைப்போம், அப்பனே.


 ஏது என்று புரிய அப்பனே. அதாவது இறைபலங்கள் மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன், அப்பனே.


 ஏனென்றால் மாயை இருக்கின்ற பொழுது இறைபலங்கள் தெரியாதப்பா.


 அப்பனே மாயைக்காகவே இறைவனை வணங்குகின்றான் மனிதன். 


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் மாயை அப்பனே பின் எப்படி கண்ணுக்கு தெரிவதில்லையோ!?, அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் இறைவனை வணங்கினாலும், அப்பனே மாயையை வைத்துக்கொண்டு இறைவனும் கண்ணுக்குத் தெரிவதே இல்லை என்பேன், அப்பனே.


 இதனால் அப்பனே மனது ஒரு திருடன் இதை தன் புசுண்டனும்(காகபுஜண்டர்) எடுத்துரைத்துவிட்டான். 

அவ் மனதில் அப்பனே எவ்வளவு? ஏது? என்று புரிய அப்பனே எத்தனை திருடர்கள் இருக்கின்றார்கள், அப்பனே. அத்திருடர்கள் எல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்து கூட பின் வெளியேற்ற வேண்டும், அப்பனே.

 அவை வெளியேற்றுவதற்கு இறைவன் தான் அப்பனே நிச்சயம் தேவைப்படுகின்றான் என்பேன், அப்பனே.


 நிச்சயம் ஒவ்வொன்றாக பின் வெளியேற்றுவதற்கு ஒவ்வொரு அடியாக பின் அடித்து அடித்து அப்பனே வெளியேற்றுவதனால், அப்பனே நிச்சயம் உங்களுக்கும் அப்பனே தெரியாமல் கஷ்டங்கள் வருகின்றது.

 தெரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.
 அறிந்தும் கூட!!

 இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே எத்தனை? எத்தன விதமான அப்பனே நிச்சயம் இறைவன்  பால் அப்பனே பக்தர்கள் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறாக பின் எதை என்று புரிய அப்பனே நல்விதமாக பல வழியில் கூட அப்பனே பின் எத்தனை?? எத்தனை??? நாராயணனுக்கு பக்தர்கள் என்பேன், அப்பனே.
 உண்மையான பின் பக்தர்கள் !!

ஆனாலும் இக்கலியுகத்தில் அவையெல்லாம் மாறிவிட்டது என்பேன், அப்பனே. 


ஏதோ!?? இறைவனை பார்க்கின்றோம், இறைவன் தருவான் என்றெல்லாம் நின்று கொண்டிருக்கின்றான் என்பேன், அப்பனே. மனிதன் !!


இதனால் அப்பனே பின் அதாவது ஏழு மலையான் பின் பற்றி கூட மனிதன் ஏது என்று கூட அங்கு சென்றால் தவறாக நடந்துவிடும் என்றெல்லாம், அப்பனே. 


(சில மனிதர்கள் திருப்பதி சென்றால் தவறாகிவிடும் இந்த ராசிக்காரர்கள் திருப்பதி செல்லக்கூடாது இந்த நட்சத்திரக்காரர்கள் திருப்பதி செல்லக்கூடாது என்றெல்லாம் யூட்யூபில் அரைகுறை ஜோதிடத்தை வைத்துக்கொண்டு பேசுவதை நாம் காண முடிகின்றது.. இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் திருப்பதி சென்றால் செல்வங்கள் அனைத்தையும் பெருமாள் பிடுங்கிக் கொள்வார் என்றெல்லாம் தவறாக தகவல்கள் பரப்பப்படுகின்றது..

திருப்பதி திருமலைக்கு மட்டுமல்ல சில நவகிரக ஸ்தலங்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் உட்பட அங்கு சென்றாலீ ஆட்சி கவிழ்ந்து விடும் பதவி பறிபோய்விடும் தோஷங்கள் ஏற்படும் என்றெல்லாம் போலியான மனிதர்கள் தங்கள் இஷ்டம் போல திருத்தலங்களைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிக் கொண்டு வருகின்றார்கள் இப்படிப்பட்டவர்கள் தாழ்வு நிலைக்கு சென்று விடுவார்கள்)


அதாவது இறைவன் பற்றியே அப்பனே மனிதன் குறை கூறும் அளவிற்கு கலியுகம் வளர்ந்துவிட்டது என்பேன், அப்பனே.



 அப்படி நிச்சயம் தன்னில் எப்பொழுது??? அப்படி வளர்ந்து விடுகின்றதோ, அப்பொழுதே மனிதன் பின் நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் கீழ்நோக்கி தான் செல்வான். அப்பனே!!


அப்பனே  அத் திருத்தலம் செல்லக்கூடாது, இத் திருத்தலம் செல்லக்கூடாது, அத் திருத்தலம் சென்றால் இவ்வாறு நடக்கும் என்பவையெல்லாம், அப்பனே.


இறைவன் பற்றியே மனிதன் எவ்வளவு?? கர்வங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றான். 


அப்பொழுதே அப்பனே மனிதன் அழிந்தான் என்பது அப்பனே ஏது என்று புரிய!!


 அனைத்து இடங்களிலும் கூட ஒரு சக்தி இருக்கின்றது என்பேன், அப்பனே.

 அவை எப்பொழுதுமே மனிதன் உணர்ந்ததில்லை என்பேன், அப்பனே.


 அதாவது மாயையை  அப்பனே பின் கிழித்து எறிந்தால்தான் உணரவும் முடியும்.

 அவையும் எப்படி?? கிழித்து எறிவது???? என்பதையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைத்துக் கொண்டே, எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன், அப்பனே. நலங்களாகவே



 அதாவது ஏது என்று புரிய, அப்பனே. இவ்வாறாக அப்பனே நல்விதமாகவே எதை என்று புரிய, அப்பனே. நிச்சயம் எங்கிருந்தோ அப்பனே ஏது என்று புரிய, அப்பனே. பின் இமயம் தன்னில் கூட(இமயமலையில் இருந்து) 

 அப்பனே எது என்று அறிய, அப்பனே. அங்கு தவம் இற்றிக் கொண்டிருந்தார்கள் என்பேன், அப்பனே. நல்விதமாக அப்பனே பின் இரு சந்நியாசிகள், அப்பனே.


 இதனால் அவர்களுக்குள்ளே அப்பனே பின் சண்டைகள் வந்தது!!


 ஏது என்று புரிய, அதாவது பின் அறிந்தும் கூட இவையும் கூட அப்பனே பின் ஈசன் திருவிளையாடலே என்பேன், அப்பனே.

 அதாவது நாராயணன் ஏது என்று புரிய, பிரம்மாவும் அப்பனே.

 அதாவது அறிந்து கூட பின் அதாவது என் நாராயணன் தான் பெரியவன்.


 இன்னொருவன் அறிந்தும் கூட பின் அதாவது பின் ஈசன் தான் பெரியவன் என்று இருவருக்கும் சண்டைகள்.



 ஆனாலும் பின் சென்று பின் பார்ப்போம் எதை என்று அறிய  என்றெல்லாம்!!

 ஒருவன் அண்ணாமலை சென்றான், 


ஒருவன் ஏழுமலையில் சென்றான்.



 அதனால்தான் ஒருவன் பெயர் பின் எது என்று புரிய, பின் அறிந்தும் கூட எதை என்று புரிய, அப்பனே.



 இவ்வாறாக அப்பனே பின் அங்கு அண்ணாமலையில் தங்கி, அப்பனே ஏது என்று புரிய, அறிந்தும் கூட தவங்கள் இயற்றிக் கொண்டு நிச்சயம் தன்னில் கூட!!

 இருவரும் பேசிக் கொண்டனர்.

 பார்ப்போம் !!....

ஏது என்பது யாருக்கு?? சீக்கிரமாகவே பின் இறைவன் தரிசனம் கொடுக்கின்றானோ??, அவர்கள் நிச்சயம் மீண்டும் பின் இமயமலையில் வந்து ஏது என்று புரிய, 
பின் இங்கே வந்து விடுவோம் என்று.

 இதனால் பின் அவர்களுக்கும் தெரியும் ஏது எங்கு சென்றால் என்பது,??


 அதாவது கீழ்நோக்கி (தக்ஷின பாரதம்) சென்றால்தான் விஷயங்கள் இருக்கின்றது என்பதை எல்லாம் பின் வந்தார்கள்!!


 அதாவது அண்ணாமலை நோக்கி தவம் புரிந்தான் ஒருவன்,



 இன்னொருவன் ஏழுமலையில் வந்து பின் தவம் புரிந்தான்.


 இருவருக்கும் ஏது என்று புரிய, 


ஆனாலும் பின் பல வழியில் கூட பின் தவம் புரிந்தார்கள்.


 ஆனாலும் பின் ஏதுவுமே கிடைக்கவில்லை. 


ஏது என்று அறிய அறிய இறைவனும் கூட எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இதனால் எவை என்று புரியாமல் கூட தவம் செய்து கொண்டே இருந்தார்கள்.


 ஆனாலும் பின் அறிந்தும் கூட பல ஆண்டுகள் பின் எதை  என்றறிய, !!!


பின் ஒருவன் நமசிவாய,!!!!


 ஒருவன் 
நமோ நாராயணா!!!!

 என்றெல்லாம்!!!


 நிச்சயம் வா!!! வா!!! அறிந்தும் கூட!!




 பின். அதாவது  உமக்கே சேவை செய்து கொண்டிருந்தோம்,


 இன்னொருவன் இன்னொருவன் கூட உமக்கே சேவை செய்து கொண்டிருந்தோம்.

 அங்கிருந்து சண்டைகளிட்டு!!

 ஏது என்று புரியாமலும், அதனால் நீயே தான் பெரியவன் என்று !!

ஆனாலும் இவனும் அப்படி தான்.

 இருவரும் கூட அங்கே அண்ணாமலை தான் ஒருவன் பெரியவன் என்று பின் வணங்குகின்றான்.


 இங்கு ஏது என்று புரிய, பின் புரியாமல் இங்கே நாராயணன் தான் பெரியவன் என்று பின் வணங்குகின்றான்.


 ஏது என்று புரிய, அப்பனே இவை போலே ஏது என்று புரிய, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.

 ஆனாலும் இருவரும் சலித்துவிட்டனர். அறிந்தும் புரிந்தும் கூட


 இதனால் ஏது என்று புரிய இவ்வாறு சலித்துவிட்டனர்.


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அவனுக்கு தெரிந்தது. பின் அதாவது அண்ணாமலையில் இருப்பவனுக்கு தெரிந்தது. 



அதனால் இறைவன் வரப்போவதில்லை. எதை என்று புரிய,


 பின் அதாவது அவன் அங்கு இருக்கின்றான் அல்லவா?(மற்றொரு ஞானி) ஏழு மலைக்கு செல்வோம் என்று அறிந்தும் கூட, 


அதாவது எவை என்று கூட இவனும் நினைத்தான். அதாவது இவ்வளவு நாட்கள் தவம் செய்து கொண்டிருந்தோம்.!!!

 ஏழு மலையானும் நிச்சயம் பின் ஏது என்று புரிய, அறிந்து கூட வரப்போவதில்லை.
 நிச்சயம் தன்னில் கூட


 பின்  அவன்  இருக்கின்றான் அல்லவா?  (அண்ணாமலையில் மற்றொரு ஞானி)


அண்ணாமலைக்கு செல்வோம் என்று!!!




 இருவரும் இங்கிருந்து அங்கு செல்ல 
அங்கிருந்து இங்கு வர
 முடிவெடுத்தார்கள்.


 அண்ணாமலையில் இருப்பவன் இங்கு வந்துவிட்டான்.


 இங்கு இருப்பவன் அண்ணாமலைக்கு சென்றுவிட்டான்.
அழகாக!!

 ஏது என்று புரிய, அறிந்தும் கூட எதை இங்கு பின் அண்ணாமலையில் இருந்து இங்கு வந்தவனுக்கு  இங்கு தரிசனம் கிட்டியது. ஈசன் போல்!!!

 எதை என்று புரிய,!!

(அண்ணாமலையிலிருந்து ஏழு மலைக்கு வந்த ஈசன் தான் பெரியவன் என்று சண்டையிட்ட சிவ பக்த ஞானிக்கு ஏழுமலையான் ஈசனைப் போன்று தரிசனம் கொடுத்தார்)


 பின் அறிந்தும் கூட இங்கிருந்து, பின் அறிந்து கூட அங்கு செல்பவனுக்கு அப்பனே அறிந்து கூட ஏது என்று புரிய. பின் அதாவது பின் ஏழு மலையான் தரிசனம் கிடைத்தது.
 எதை என்று புரிய,

(நாராயணன் தான் பெரியவன் என்று சண்டையிட்ட விஷ்ணு பக்த ஞானிக்கு அண்ணாமலையில் ஈசனார் ஏழுமலையான் பெருமாளாக தரிசனம் கொடுத்தார்)



 எவை என்று கூட இருவரும் பின் ஏது என்று கூட பின் தரிசனம் அறிந்தும் கூட. 


பின் அதாவது எவ்வாறு? எதை என்று புரிய, அதாவது இவ்வாறுதான் நினைத்தோம்,


 ஆனால் மாறி வந்துவிட்டதே என்பதை எல்லாம் அறிந்தும் கூட பின் குழப்பங்கள்.


 ஆனாலும் இவனை பார்த்தால் அங்கில்லை, அங்கில்லை, இங்கில்லை. எதை என்று புரிய,


 அதனால்தான் ஏது என்று புரியாமலும் தவித்தனர். 


ஆனாலும் நிச்சயம் அதாவது இவன் நினைத்துக் கொண்டான், அவன் இறந்துவிட்டான் என்று. 


பின் அவன் நினைத்துக் கொண்டான், இவன் இறந்துவிட்டான் என்று. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் மாறி மாறி எதை என்று புரிய. பின் அதாவது அண்ணாமலையில் காட்சி அளிக்கும். பின் இறைவன் பின் இங்கு ஏது என்று ஏழு மலையில் காட்சி அளித்தான். அறிந்தும் கூட 


பின் இங்கு தரிசனத்திற்காக இருந்தவன் அங்கு பின் காட்சி  அங்கு சென்றுகின்ற பொழுது அறிந்தும் கூட. பின் அதாவது பின் அண்ணாமலை எவை என்று கூட எது என்று புரிய.


 ஆனாலும் இருவரும், ஆனாலும் உயிரோடு தான் இருக்கின்றார்கள்.


 பக்திகள் தான் அதிகம் ஏது என்று புரிய. 

ஆனாலும் நினைத்துக் கொண்டனர், அறிந்தும் கூட. 

பின் ஏது என்று கூட, பின் இறந்து விட்டிருப்பான். எத்தனை?? வருடங்கள் ஆகிவிட்டது என்று இருவரும் கூட,

(அவர் இறந்து விட்டார் என்று இவரும் இவர் இறந்துவிட்டார் என்று அவரும் நினைத்துக் கொண்டார்கள் ஏனென்றால் இருவரும் பார்த்துக் கொள்ள முடியவில்லை)


 ஆனாலும் ஏது என்று புரிய. அறிந்தும் கூட, பின் இப்படி ஏன்? அதாவது பின் அண்ணாமலைக்கு வந்தோம். 

இங்கு பின் நாராயணன் தரிசனம் காட்டுகின்றான்.

 அவனும் கூட ஏழு மலையை நாடி வந்தோம். 
ஆனாலும் அண்ணாமலை தரிசனம் ஏது என்று புரிய, 

புரியாமல் இருவரும் தனித்தனியாக தவித்தனர்.


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட,


 ஆனாலும் பின் இருவரும் கூட அறிந்து கூட அங்கென்றே, இங்கென்றே. நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எது என்று புரியாமல் இருக்கின்றோம்.


 அதாவது புரிய வையுங்கள்!! என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட.


 அதனால் மீண்டும் இருப்பிடத்திற்கே செல்வோம் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட இருவரும் முடிவெடுத்தனர்.


 இங்கிருந்தே,(ஏழுமலையிலிருந்து) 

 அங்கிருந்தே.(அண்ணாமலையிலிருந்து) 

 ஆனாலும் பின் மீண்டும் இமயமலைக்கு சென்றனர்.


 ஆனாலும் அங்கு இருவரும் ஒன்றாக காட்சி தந்தனர். ஏது என்று புரிய,
(சிவ விஷ்ணு கோலம் சங்கரநாராயணர் தரிசனம்!! அரியும் சிவனும் ஒன்று!! ஹரிஹரன் தரிசனம்)



 அப்பொழுதுதான் புரிந்தது. 


அறிந்தும் கூட,

 ஏது என்று புரிய. ஆனாலும் பின் இருவரும் பின் அங்கேதான் பார்த்துக் கொண்டனர்.(இருவரும் இமயமலையில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்)



 ஆனாலும் எவை என்று புரிய. இப்படித்தான் கலியுகத்தில், அதாவது இறைவனை அருகிலே வைத்துக்கொண்டு, எது என்று புரியாமல் அங்கு செல்கின்றேன். ஏது என்று அறிய,

 நிச்சயம் தன்னில் கூட இங்கு பக்திகள் காட்டுகின்றேன் என்றெல்லாம்!!.....


 கடைசியில் பார்த்தால், தன்னிடத்திலிருந்தே இருப்பான்.


 அதாவது ஒழுங்காக எது என்று கூட, பின் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இறைவன் அறிந்தும் கூட, 


பின் அதாவது பக்கத்திலே இருந்தான். 


ஆனால் எப்பொழுது??? சண்டைகள் வந்துவிட்டதோ,!?!?!? அப்பொழுது!?!?!?!?!?!?!

(கடவுள்கள் பெயரால் என்னுடைய கடவுள் பெரியவர் உன்னுடைய கடவுள் சிறியவர்.. என்றெல்லாம் பக்திக்குள் சண்டை)



 ஆனாலும் இறைவன் அப்பொழுது தெரியவில்லை. 
ஏது என்று புரிய.


 ஆனாலும் பின் இங்கு வந்து,(ஏழுமலைக்கு) 

 பின் அங்கு வந்து!!!,(அண்ணாமலைக்கு) ஏது என்று புரிய.

 கடைசியில் பார்த்தால், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, மீண்டும் அங்கே பலமாக தரிசனம் கிடைத்தது. அறிந்தும் கூட,


 பின் அதாவது அறிந்தும் ஏது என்று புரிய. இருவர்களும் எது என்று புரிய!!

. பின் இப்பொழுது ஏது என்று அறிய. பின் இருவரும், பின் ஒருவரை ஒருவர் முகங்களை  பார்த்துக்கொண்டு,  கண்ணீரில்!!!... கண்ணீர் எதை என்று கூட, பின் ஏது என்று புரிய.

 எவ்வளவு??? ஏது என்று புரிய.

 இங்கேயே அமர்ந்திருக்கலாமே. பின் அங்கும் இங்கும்.


 ஆனாலும் இவையும் விட திருவிளையாடலே.

ஏனென்றால் உலகம் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? இறைவன் யார்? உண்மைப் பொருள் யார்? என்பவை எல்லாம் !!!!



நிச்சயம் தன்னில் கூட உண்மைப் பொருள், பின் தனக்குள்ளே மறைந்து இருக்கிறது என்பது தெரியாமல் மனிதன் அலைந்து வயதைக் கடந்து விடுகின்றான்.


 அதுவும் ஒரு மாயையே என்பேன்.


 அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட இறைவன் கொடுப்பதற்கு தயாராகத்தான் இருக்கின்றான்.


 மனிதன் என்னவோ,!?? ஏது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றான். 


(ஈசனும் நாராயணனும் அவர்களை பார்த்து) 

இதனால் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் ஒன்றே!!!!!


 உங்களுக்கு என்ன தேவை ???? 


 என்பவை எல்லாம் உணருகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட,

(இரு ஞானிகளும் ஈசன் நாராயணனை பார்த்து)

 அதாவது அழகாக, பின் நீங்கள் எங்கு தரிசனம் கொடுத்தீர்களோ!!!!.....

, அங்கேயே யாங்கள் இருந்து கொண்டு பல மக்களுக்கு, பின் வருவோருக்கெல்லாம் நன்மையைச் சொல்லி, இதுதான் இறைவன் என்று நிச்சயம் புகுவிக்க (புகுத்த) வேண்டும் என்பது எல்லாம் எங்களது, பின் ஆசை.


 அதனால் இவ் வாய்ப்பை கொடுங்கள் என்று அதேபோல், பின் எதை என்று அறிய, அண்ணாமலை தவம் புரிந்தவனை இங்கேயும்,(ஏழுமலையில்)

 இங்கு தவம் புரிந்தவனை அங்கேயும்(அண்ணாமலையில்), நிச்சயம் நிற்க வைத்து,!!!


 அனைத்தும் ஒன்றே!!!!.....
 என்றெல்லாம்.......


பின் வருவோருக்கெல்லாம் உணர்த்திக் கொண்டே!!!!....


, ஏது என்று கூட அருளாசிகள் பெற்றுத் தந்து கொண்டே இருக்கின்றார்கள்.
 இதை கலியுகத்தில் ஏது என்று புரிய.



 இதனால் அறிந்தும் கூட, இதற்கும் கூட, பின் அதாவது வைத்திருக்கின்றேனப்பா, நல்விதமாக,


 அப்பனே, பின் அறிவியல் வழியாகவே, இதற்கும் எடுத்துரைப்பேன்.


 அப்பனே, மனிதன் புதுப்புது விஷயங்கள் எல்லாம், அப்பனே, தேடிச் செல்கின்றான். அப்பனே, 


பின் யாங்களும் எதை என்று புரிய. அப்பனே, எங்களுக்கும் தெரியும் என்பேன். அப்பனே, புதுப்புது விஷயங்களை தெரிவிப்பதற்கு, அப்பனே, பின் மனிதன் தெளிவதற்கு.


 ஏனென்றால் மனிதன் பழைய விஷயங்கள் எல்லாம் கடைபிடித்து, அவை இவை என்றெல்லாம், அப்பனே, சொல்லுகின்ற பொழுது, அப்பனே, இங்கு உண்மை நிலை மறைந்துவிடும் என்பேன். அப்பனே,

 அனைத்தும், அப்பனே, பொய்யாகத்தான் போகும் என்பேன். அப்பனே, 


இதனால் உண்மையான பொருளை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எப்படி எல்லாம் மனிதன் கண்டுபிடிக்கின்றான்??. 


அதற்கும் மேலே யாங்கள் கண்டுபிடித்து, அப்பனே, பின் மக்களுக்கும், அதாவது எப்பொழுதோ கண்டுபிடித்தோம்,


 ஆனாலும் புதுமையில், அப்பனே, பின் இப்பொழுது தெரிவித்து, அப்பனே, பின் உண்மை நிலையை தெரிவிக்கின்றோம். அப்பனே,

 அவ்வளவுதான் என்பேன். அப்பனே,


 இறைவன் யார்? இறைவன் எங்கு இருக்கின்றான்?

 அப்பனே, மனிதன் யார்? 

மனிதனின் பின் கூற்று என்ன? மனிதன் என்னென்ன? ஏது என்று குறை எங்கெல்லாம்? பின் அறிந்தும் கூட, ஏது என்று அறிய சில மாயவலைகள் இருக்கின்றது என்பதை எல்லாம் எடுத்துரைப்பேன். அப்பனே, 



இதனால் அனைத்தும் ஒன்றுதான் என்பேன்.அப்பனே!!!


, மனிதன் பிரித்து வைத்திருக்கின்றான் என்பேன். அப்பனே, கலியுகத்தில் என்பேன். அப்பனே,


 அவையெல்லாம், அப்பனே, உணர்த்தி, அப்பனே, அனைவருக்கும் தெளிவுபெற்று, அப்பனே, பின் ஞானத்தை, அப்பனே, அடைந்து விட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் மோட்சமும் கிட்டும் என்பேன். அப்பனே,


 இதனால், அப்பனே, இவர்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் இறைவன் யார்??? என்பதை தெரிந்து கொள்வதற்காகவே வந்தவர்கள் தான் என்பேன். அப்பனே,


 இதனால், அப்பனே, பின் அதாவது வயதாகின்ற பொழுதுதான், அப்பனே, உண்மை நிலையே தெரிகின்றது என்பேன். அப்பனே,


 ஆனாலும், அப்பனே, மனிதனுக்கு இதனால்தான், பின் அவர்கள் இருவரும் முடிவெடுத்தார்கள்.


 இதனால் யாங்கள் கூட ஒரு பிறவியை அறிந்தும் கூட புரிந்தும் கூட!!!
(தவம் செய்து மீண்டும் ஒரு பிறவி எடுத்து வந்து)

 தவங்கள் இயற்றி,!!  இயற்றி!!,

 இதேபோல், நிச்சயம் தன்னில் கூட, பின் மனிதனுக்கும் உண்மைகளை தெரிவித்தால், அவர்களும் பிழைத்துக் கொள்வார்கள்.  

அதற்கிணங்க அப்பனே, அவ் ஞானிகள். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் மலை ஞானியும், அப்பனே, அதாவது அண்ணாமலை ஞானியும், அப்பனே, பின் ஏழு, பின் மலையான், பின் ஞானியும், அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் இன்னும் கூட மக்களை காத்து பல பரிசுத்த, அப்பனே, பின் ஆன்மாக்களுக்கெல்லாம், அப்பனே, விடுதலைகள் கொடுத்து, அப்பனே நல்விதமாக ஆற்றல் எல்லாம் கொடுத்து, வருவோருக்கெல்லாம் அனைத்தும் ஒன்றே என்பதெல்லாம், அப்பனே தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள்!!!


 இதனால்தான், அப்பனே, அங்கும் இங்கும், அப்பனே, செல்ல, அப்பனே, வெற்றி நிச்சயம் என்பேன். அப்பனே, இங்கு சென்று, அங்கு செல்ல, அங்கு சென்று, இங்கு செல்ல, அப்பனே, நிச்சயம் பல வித்தியாசங்கள் உண்டு என்பேன். அப்பனே,

(திருப்பதி திருமலை தரிசனம் செய்துவிட்டு திருவண்ணாமலை தரிசனம்../அண்ணாமலை தரிசனம் செய்துவிட்டு திருப்பதி திருமலை தரிசனம் இப்படி அங்கும் இங்கும் தரிசனங்கள் செய்து கொண்டே வந்தால் பல மாற்றங்கள் உண்டு)





 இவற்றுக்கும் வரும் காலங்களில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில விதிமுறைகளோடு எடுத்துரைப்பேன். அப்பனே, 


திருப்பதி திருவண்ணாமலை இந்த யாத்திரையை குருநாதர் சொல்லும் விதிமுறையை வழிமுறையை பின்பற்றி அப்படிச் சென்றால்,(குருநாதருடைய விதிமுறைகளை பின்பற்றி) 

 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது எவை என்று அறிவியல் பாதையை பார்த்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நல்விதமாக, அப்பனே, ஏது என்று கூட ஒரு கம்பி போல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு ரேகை செல்லுமப்பா,


(திருவண்ணாமலையிலிருந்து திருப்பதி வரை!!

திருப்பதியில் இருந்து அண்ணாமலை வரை

ஏழுமலையிலிருந்து ரிஷிகேஷ் வரை!!


 (அட்சரேகை தீர்க்க ரேகை போல கம்பி போல் ஒரு கோடு ஒரு ரேகை பாதை செல்கின்றது)


 அப்பனே, அதாவது, அதாவது, பின் இங்கிருந்து ஏழுமலையிலிருந்து இருந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் அண்ணாமலைக்கும்!!!
, அண்ணாமலையிலிருந்து, அப்பனே, ஏழுமலைக்கும், இங்கிருந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் அறிந்தும் கூட, பின் அதாவது, ரிஷிகேஷுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, பின் அதாவது, ஒரு ரேகை போல் செல்லுமப்பா,


 பின் இவைதன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவ் ரேகை வழியே சென்று, அப்பனே, பின் அமர்ந்தால், அப்பனே, தியானங்கள் செய்தால், அப்பனே, உடம்பு முழுமை பெறும், அப்பனே,

 ஆன்மா முழுமை பெறும் என்பேன். அப்பனே, 


நிச்சயம் தன்னில் கூட, அவ்விடம் கூட, ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சரியாக, அப்பனே, பின் கணித்து, ஏது என்று, ஏது என்று அறிய, அப்பனே, பின் வசிஷ்டன் குகையே என்பேன். அப்பனே,

(உத்தர் காண்ட் மாநிலம் ரிஷிகேசில் அமைந்திருக்கும் வசிஷ்டர் குகை..

வசிஷ்டர் குகையில் 1/10/2024 ஆண்டு சித்தன் அருள் பதிவு எண் 1735 ல் குருநாதர்
வாக்குகள் உரைத்துள்ளார் மீண்டும் ஒருமுறை படித்து புரிந்து கொள்ளுங்கள்)

 நல்விதமாக, இதனால்தான், அப்பனே, மூன்றின் பின் மூன்று எவை என்று, அப்பனே, 

(அண்ணாமலை 
திருப்பதி 
ரிஷிகேஷ்)




பின் முக்கோணமாக பார்த்தாலும், அப்பனே, பின் அதற்கும் பல வகை, பல வகையான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மூன்று இடத்தில் கூட, அப்பனே, தங்கியுள்ளது என்பேன். அப்பனே, சில ஒளிகள் என்பேன். அப்பனே,



 இதனால்தான், அப்பனே, அறிந்தும் ஏது என்று புரிய, அப்பனே, அங்கு (ஒளிக்கதிர்வீச்சுக்கள்)  விழுந்து, அப்பனே, நிச்சயம் இங்கு பட்டு, அப்பனே, மீண்டும் ஏது என்று, அப்பனே, நிச்சயம் அண்ணாமலையில் பட்டு, அப்பனே, பின் அது, பின் முக்கோணமாக, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, செல்கின்றது என்பேன். அப்பனே,


 இதன் வழியே சென்றுவிட்டால், அப்பனே, நிச்சயம், பின் உண்மைப் பொருளை  கண்டு உணர்ந்து தெளியலாம் என்பேன். அப்பனே,

இவையெல்லாம் ஏது என்று புரிய, அப்பனே, பின் வருங்காலத்தில், இவையெல்லாம், அப்பனே, மக்களுக்கு ஏது என்று, அப்பனே, ஒருவன் ஏது என்று அறிய, அப்பனே, பின் பல வழியில் கூட, அப்பனே, அறிஞர்கள் கண்டுபிடித்து, அப்பனே, அவற்றையெல்லாம் எடுத்துச் சென்று, அப்பனே, புதுமையான விஷயங்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள்.

(எதிர்காலத்தில் ஒருவர் குருநாதருடைய வாக்குகளை சரியாக புரிந்து திருவண்ணாமலை திருப்பதி ரிஷிகேஷ் இந்த மூன்று புனித தலங்களுக்கும் இடையே இருக்கும் கோடுகள் ஆராய்ந்து அதன் வலி எங்கு செல்கின்றது ஏனென்றால் அட்சரேகை தீர்க்க ரேகை போல ஒரு கம்பி போல ஒரு கோடு செல்கின்றது இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து அதை கண்டுபிடித்து  அறிஞர்களும் இதை ஆராய்ந்து கண்டுபிடித்து மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்)


 அப்பனே, எளிதாக,


 அப்பனே, அதனால்தான், அப்பனே, எங்கள் வாக்குகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, அப்பனே, எங்கள் வாக்குகள், அதாவது, நிச்சயம், பின் அழியாதப்பா,


 ஏது என்று புரிய, அப்பனே, அறிந்தும் கூட,


 அதனால்தான், அப்பன், நிச்சயம் தன்னில் கூட, இவையெல்லாம் வருங்காலத்தில், அப்பனே, பின் ஒரு பெரிய, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட, எங்கெங்கே சென்று, அப்பனே, பின் கலியுகத்தில், மனிதன், அப்பனே, பின் அழியக்கூடாத , அப்பனே, சக்திகளையும் கூட, அப்பனே, எங்கள் வாக்குகள் ஏற்படுத்தும் என்பேன். அப்பனே,


 இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன், அப்பனே, மிகவும், அப்பனே, பின் கலியுகத்தில், கொடூரக்காரனாகவே மாறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றான். அப்பனே,


 அவை தடுத்தாக வேண்டும்,


 இல்லையென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் அனைத்தும், அப்பனே, பின் அழித்துவிட்டு சென்று விடுவான்.


 ஆனாலும், அப்பனே, மனிதன் ஒரு ஏது என்று புரிய, அப்பனே, சில சக்திகளாக, அப்பனே, அதாவது, தீய சக்திகளாக, அப்பனே, புகுந்து, அப்பனே, பின் அழித்துக் கொண்டே வருகின்றது.


 ஆனாலும், அப்பனே, யாங்களும் அதற்கு ஏற்றார்  போல், நல் சக்தி எல்லாம் கொடுத்து, பின் அப்படி தீய, அப்பனே, சக்தி உள்ளவரை எல்லாம் அடித்து, அப்பனே, மாற்றத்தை ஏற்படுத்துவோம். அப்பனே, அழகாக,


 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,!!

 அண்ணாமலையின் ஞானியும் கூட, பின் ஏது என்று புரிய, அப்பனே, பின் ஏழுமலை ஞானியும் கூட,!!!

 உங்களுக்கு ஆசீர்வதிக்கட்டும், அனைவருக்கும் ஆசீர்வதிக்கட்டும்,!!

 புத்திகள் தரட்டும். அப்பனே,

 ஆசிகள், ஆசிகள், இன்னும், அப்பனே, உரைக்கின்றேன், ஏழுமலையான் பற்றி, ஆசிகள்!!, ஆசிகள்!!, இப்பொழுது!!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத கத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!