வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
பித்ரு தோஷங்களால் ஒருவரின் ஜாதகத்தில் பலவிதமான தடங்கல்கள் இருக்கும். அவை, பித்ரு தோஷம், பித்ரு சாபம், இறை அபசாரம், இறை அடியார் அபசாரம், பித்ருக்கள் இறை சொத்தை அபகரித்து அனுபவித்து, பின் தலைமுறைக்கு கொடுப்பது போன்ற பல்வேறு, நாம் அறிந்திராத நிகழ்ச்சிகளால், இப்பிறவியில் அனுபவிக்க நேரிடும். இவர்களுக்கான சரியான பரிகாரங்களை செய்தால் அன்றி, தடங்கல்கள் (திருமணம், சந்ததி இன்மை, வருமானம், தொழில்/வேலை இல்லாமாய், நோயினால் தொடர்ந்து அவதிப்படுவது, நிம்மதி இன்மை, திருப்தி இன்மை ETC .,) விலகி, விதி வழிவிடுவதில்லை.
பாதிக்குமேல் நமக்கிருக்கும் பிரச்சினைகளுக்கு, பித்ரு தோஷமே காரணம் என்கிறார்கள். பித்ரு தோஷத்தை, இறை ஏற்றுக்கொண்டு, அவரே திதி சம்ரக்ஷ்ண பெருமாளாக அமர்ந்து நாம் செய்கின்ற திதியை தான் வாங்கிக்கொண்டு, நம் பித்ருக்களை ஆசிர்வதிக்கும் தலம்தான், நென்மேலியில் அமைந்துள்ள, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்.
இனி, கோவிலுக்குள் செல்வோம்.
பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா?
பித்ரு கடன் செலுத்துவது, ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் இல்லாமல் இறப்பவர்களுக்கு யார் தர்ப்பணம், திதி கொடுப்பார்கள்? மேலும், பலருக்கு தங்களின் முன்னோரின் இறந்த திதி தெரியாது. இவர்கள், எப்படி திதி கொடுப்பது? தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு எப்படி திதி கொடுப்பது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையாக இருக்கிறார், லட்சுமி நாராயண பெருமாள்.
செங்கல்பட்டு அருகே, நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.
இந்தக் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி, சிரார்த்த ஸம்ரட்சண நாராயணர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம், அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது. காசி மற்றும் கயாவுக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது.
ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞவல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண சர்மா – சரஸ வாணி தம்பதி, இந்தக் ஆலயத்தின் பெருமாளின் மீது, அதீத பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை, இந்த ஆலயத்தின் பணிகளுக்கு செலவு செய்து விட்டனர். இதனால், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அரச தண்டனையை ஏற்க விரும்பாமல், திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். எனினும், தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன் இறந்தனர். ஆகையினால், அவர்களின் மனவருத்தத்தை தீர்க்கும் வகையில், இந்த ஆலயத்தின் பெருமாளே, தம்பதிக்கு ஈமகடன்கடன்ளை செய்ததாக, கோவிலின் தலவரலாறு கூறுகிறது.
பின்னர், திவானின் வேண்டுகோளுக்கு இணங்க, சந்ததிகள் இல்லாதவருக்கும், திதி செய்ய இயலாதவர்களுக்கும், பெருமாளே திதி செய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
தினமும், பகல், 12 மணி முதல், 1 மணி வரை உள்ள காலம், பித்ருக்களின் காலமாக கருதப்படுகிறது
இந்த ஒரு காலம் மட்டும், ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள்.
எனவே, இங்கு திதி செய்ய விரும்புபவர்கள், பித்ரு காலத்தில் நடக்கும் பூஜையில், தங்கள் முன்னோர்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு, பெருமாளிடம் சுவாமியிடம் சமர்ப்பிப்பதே, திதி சம்ரட்சணம்.
பெருமாளுக்கு, வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதை மட்டும் ஏற்றுக் கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள்!
அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ, ஆலயத்தில் பித்ரு கால பூஜையில் கலந்து கொண்டால், கயாவில் சென்று திதி கொடுத்த பலனைக் கொடுக்கும். திதிகொடுக்க விரும்புபவர்கள், காலை, 11 மணிக்குள் ஆலயத்துக்கு வர வேண்டும். மஞ்கள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், தாம்பூலம், பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்பித்து, தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
பின், விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில், திதி செய்பவர், தங்கள் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து, பெருமாளிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்பிப்பதே, திதி சம்ரட்சணமாகும்.
பித்ரு தோஷம் இருந்தால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்பதாகவே இருக்கும். பித்ரு தோஷம் நீங்க, இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு கால பூஜையில் பங்கேற்க வேண்டும்.
மஹாளய பட்ச காலத்தில், இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு பூஜையில் பங்கேற்றால், முன்னோர்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அதனால், நமக்கு பித்ருகளின் முழுமையான அருளும் கிடைக்கும்.
ஒவ்வொருவரின் குடும்பத்தின் நிலையையும் பரிசோதித்து, அவரவர் தீர்மானித்து, இத்திருக்கோவிலில் திதி கொடுத்து, பயனடையலாம்.
சித்தன் அருள் ................. தொடரும்!
Sir please send gurunadar kalyana photo
ReplyDeleteSir please consider my request
ReplyDeleteAlready sent to you are e mail id
ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி போற்றி
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை