​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 26 October 2021

சித்தன் அருள் - 1045 - குருவுக்கு நமஸ்காரம்!


குருவே சரணம்!

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி!


20/10/21  பௌர்ணமி அன்று  ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி. 

காசி 
    
காக்கும் சிவன்

ஈரேழு உலகத்தையும் காத்து அருளக் கூடிய நமச்சிவாயன் வாக்குகளை    நாட்டுகின்றேன். 

இவைதன் காசிதன்னிலே!

காசி தன் பொருள் விளங்க காசி காசி எதனைக் குறிக்கின்றது?

காக்கும் சிவனே காசி என்பேன்.

இதனை மனிதர்கள் உணர வேண்டும் என்பேன்.

என்னிடத்தில் வந்து விட்டால் மற்றவையெல்லாம் யான் பார்த்துக்கொள்வேன் ஆனாலும் மனிதர்கள் தம் நிலையை அறிவதில்லை.

அறிவதில்லை பொய்யான பொய்யானவையே தேடித் தேடிச் சென்று கடைசியில் உண்மை என்ற பொருளை உணர்ந்து கொள்கின்றார்கள் பின்பு வருகின்றார்கள். ஆனாலும் அதனுள்ளே பல கர்மங்களை சேர்த்துக்கொண்டு சேர்த்துக்கொண்டு வருகின்றார்கள். அதனால் என்ன பயன்??

என்ன பயன்? என்னை அடைந்தாலும் சிறிது சிறிதாக முதலில் கர்மத்தையே நீக்குவேன் என்பேன்.

என்பேன் இதனால் சித்தர்களும் வருவார்களப்பா. இனிமேலும் நேரடியாகவே சில உபயங்களை தெரிவிப்பதற்கு.

ஏனென்றால் சித்தர்கள்  மனிதர்களை நம்பி நம்பி நம்பி நம்பி மோசம் போய் விட்டார்கள் என்பதுதான் உண்மை நிலை.

இவ் உண்மை நிலையை மாற்ற யானே பல ஜீவ சமாதியில் இருக்கும் சித்தர்களை எழுப்புவேன் இனிமேலும்.

இதனால் நிச்சயம் நல் முறைகளாய் வந்து அவந்தனும் மக்களை காப்பாற்றுவார்கள் என்பேன்.

மிஞ்சியது ஒன்றுமில்லை இனிமேலும் பொய்யானதற்கு இவ்வுலகில் இடம் இல்லை என்பேன்.

இடம் இல்லை என்பேன் யான் யானே தண்டிப்பேன். ஒருவர் ஒருவர் மூலமாகவே.

இதனையும் நன்குணர்ந்து மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

பேச்சுதான் பேச்சுக்களாகவே அதைச் செய்வேன் இதைச் செய்வேன்.

ஆனாலும் ஒருவர் கூட ஒரு உருப்படியான செயலை செய்ய முடியாது என்பேன்.

ஏன்? எதனை? என்றும்கூட அகத்தியன் நல்லதே செய்வான் நல்லதையே செய்வான் என்பதெல்லாம் பொய் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறான் மனிதன்.

எதனால் ?எதனால்? நன்மை எவ்வாறு? என்பதையும் கூட என்னுடைய குரு அகத்தியர் என்றே பொய் வேடதாரிகள் .

ஆனாலும் இதனையும் நன்குணர்ந்து அகத்தியன் செய்வான்! அகத்தியன் செய்வான்!

எவ்வாறு செய்வான்?

நீ நல் மனது! தூய மனது! பொறாமை இல்லாத போட்டியில்லாத தூய குணங்கள் இருந்தால்தான் அகத்தியனும் செய்வான்.

ஆனாலும் தன் சீடன் மிஞ்சியது போலே உள்ளது இதன் வாக்கு.

சீடன் அகத்தியனுக்கு என்ன செய்தான்? என்பதுதான் எனது கேள்வி.

இதனால் எவ்வாறு என்பதைக்கூட ஒரு சீடன் கூட அகத்தியனுக்கு சரியான மரியாதை கொடுப்பதாக தெரியவில்லை.

அகத்தியனை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர ஆனாலும் பிரயோஜனமில்லை.

இதனையும் நன்கு உணர தன்  அகத்தியன் என் தந்தை என்கின்றார்களே தந்தைக்கு நீ என்ன செய்கின்றாய்??

செய்கின்றாய் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கின்றாய் இதுதான் உண்மை.

ஆனாலும் என் பிள்ளை அகத்தியன். யான் சொல்வேன். சொல்வேன் இனிமேலும் அகத்தியன் பெயரைச் சொல்லியும் சித்தன் பெயரைச் சொல்லியும்  ஏமாற்றினீர்கள் என்றால் நிச்சயம் தண்டனை உண்டு.

உண்டு. பொய்யான மனிதர்களே திருந்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் உன்னையே உன்னை பார்க்க முடியவில்லை மற்றவர்களுக்காக ஏங்குகின்றாயா?? 

உன்னை நீ முதலில் பார்.  மற்றவை தேடுகின்றது, தேடுகின்றது.

 
நீயே நிலை இல்லை. நிலை இல்லாததையே! தேடுகின்றாயே! நியாயமா மனிதா? 

திருந்திக் கொள் இவ்வுலகத்தில் வந்தாயா! இறைவனை வணங்கினாயா! சென்றாயா! என்று இருக்க வேண்டுமே தவிர அவை வேண்டும் இவை வேண்டும் எல்லாம் கொடுப்பதற்கு நீங்கள் எல்லாம் பின் அவ்வளவு  ஞானிகள் இல்லை என்பேன்.

இல்லை என்பேன் .ஞானி ஆவதற்கும் இனிமேலும் சித்தர்கள் வழி வகுப்பார்கள் என்பேன் .

ஒவ்வொரு யுகத்திலும் யான் பார்த்து கொண்டேதான் வந்திருக்கின்றேன் மனிதர்களை ஆனாலும் நிச்சயம் இக் கலியுகத்திலே பொய்யான மனிதர்கள்.

இனிமேலும் சொல்கின்றேன் இனிமேலும் சொல்கின்றேன் பொய்யானவைக்கே மிகும் புகழ் என்பேன் இவ்வுலகத்தில்.

அதனால் உண்மை நிலை சற்று தாழ்ந்து போகும் என்பேன் அதனால் மனிதன் மனிதனையே அழித்துக் கொண்டு தான் இருக்கின்றான் என்பேன்.

மனிதருக்குள் மனிதனே போட்டிகள் பொறாமைகள் இவையெல்லாம் தாங்குமா ?நிலைமை

இப்புவி தன்னிலே பூமா தேவியும் காத்து கொண்டு இருக்கிறாளே அவளைத் தான் சொல்ல வேண்டும் என்பேன் யான். 

அவள் தனும் நடுங்குவாள் சிறிது காலத்திலே என்பேன்.

இதனாலும் தன் இனத்திற்கு எவ்வாறு இனம் சேர்க்க வேண்டும் புகழ் சேர்க்க வேண்டும் தன் இனத்திற்கே சேவை செய்ய வேண்டும் என்பதெல்லாம் மனிதனின் தவறான கணக்காகவே போய்க் கொண்டிருக்கின்றது.

ஆனாலும் யான் கணக்கு நல் முறையாகவே செய்து கொண்டிருக்கின்றேன்.

அழகாக படைத்தான் படைத்தான் என்பதைவிட பொய்யானவை எவ்வாறு பொய்யானவை இனிமேலும் ஓங்கும் என்பேன்.

ஓங்கும் என்பேன் எதனால் என்பதைவிட மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

மறுப்பதற்கு ஒன்றுமில்லை அகத்தியனை பற்றியே தெரிவதற்கு ஒன்றும் இல்லை இவ்வுலகில்.

அகத்தியனை பற்றியே இன்னும் புரிந்து கொண்டவர் எவர்? 

அகத்தியனின் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே இதனையும் உரைப்பதற்கு அளவிற்கு அகத்தியனின் 12000 என்ற நூலை தேர்ந்தெடுங்கள் அதில் உரைத்து இருப்பான் அகத்தியன் என்பேன்.


அதனைக் கூட இன்னும் பல நூல்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது இக் காசி தன்னில்.

காசி தன்னில் இப்பொழுது கூட இன்னொரு முறையும் உரைத்து விடுகின்றேன்.

காசி என்றால் காக்கும் சிவனே என்பேன்.

இதனையும் நன்குணர்ந்து. காசி தனில் என்னிடத்தில் வந்து விட்டால் யான் கர்மாவை போக்கி விடுவேன் அதி விரைவிலேயே.

ஆனாலும் எங்கு பார்த்தாலும் காசிக்கு நிகரான தலம் காசிக்கு நிகரான ஸ்தலம் என்றே பொய் கூறி மக்களை மக்களே ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். எதற்காக?

ஆனாலும் நீ மனதார என்னை எண்ணி நல் முறையாய்

ஈசனே!

நமச்சிவாயனே!

யான் காசிக்கு ஒருமுறை வரவேண்டும் வரவேண்டும் நீதான் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வணங்கினாலே பணிந்தாலே போதுமானது.

யானே கையைப் பிடித்து அழைத்து வருவேன்.

ஆனால் மனிதனோ பின் அனைத்து கர்மாவும் செய்துவிட்டு காசியிலே நீராடினால் கருமம் தொலைந்துவிடும் என்கிறார்களே இது நியாயமா??

மக்களே மனிதர்களே மனித ஈனப்பிறவிகளே திருந்திக் கொள்ளுங்கள்.

உங்களிடமே அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றேன் யான்.

ஆனாலும் அதனை ஒழுங்காக பயன்படுத்த தெரியவில்லை இதனால் பின் அனைத்தும் அழித்துவிட்டு பின்பு நீ என்னை அணுகுகின்றாயே! 

அணுகுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது??

பொய்யான மனிதர்கள் என்பேன்.

சித்தர்களும் இனிமேலும் அங்கங்கே வருவார்கள் தரிசனத்தையும் கொடுப்பார்கள் என்பேன். நல் மனிதர்களுக்காகவே.

இங்கேயும் இப்பொழுதும் கூட இக் காசி தன்னில் பல சித்தர்கள் பின் தவத்தை மேற்கொண்டு அடியினிலே நிற்கின்றார்கள் என்பேன்.

அவர்களையும் அனுப்புவேன் மனிதர்கள் எவ்வாறு செய்கின்றார்கள் உண்மை தத்துவத்தின் தவ யோகிகளும் இங்கு உள்ளனர் என்பேன்.

இதனால் மானிடப் பிறவிகளே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

இப்பிறப்பு எதனை நோக்கி செல்கின்றது? கலியுகத்தில் ஒழுங்காக ஒழுக்கமாக நடந்து கொண்டாலே போதுமானது.

இறைவன் வருவான் வருவதற்கு சமமானவைகள் உண்டு என்பேன்.

ஆனால் ஒழுக்கம் கெட்ட வாழ்கின்றார்களே இனிமேலும் சொல்கின்றேன் கலியுகத்தில்.

கலியுகத்தில் நிலையானதாக யாருமில்லை இல்லை இதனால் நிலை உள்ளதை தேடுங்கள்.

இதனையும் அகத்தியன் சற்று சற்று ஒய்ந்து ஒய்ந்து நிற்கின்றான்.
மனிதர்களைப் பார்த்து இப்படியா மனிதன் என்றுகூட.

ஆனாலும் பல யுகத்தில் வாழ்ந்த சித்தர்களும் நல் முறைகள் ஆகவே மனிதருக்கு சொல்லிக் கொடுத்தனர் அதன் வழியே வந்துதான் பின் மனிதர்கள் மீண்டு நல் முறைகளாக இறைவனையே தரிசிக்கும் நேரம் வந்திருந்தது ஆனாலும் இக்கலியுகத்தில் இறைவனை தரிசிக்கலாம் .

ஆனாலும் அதற்கு தகுதியானவனாக மனிதன் இல்லை என்பேன்.

இதனால் அகத்தியனும்  சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றான்.

ஆனாலும் மனிதர்கள் பரிகாரங்கள்! பரிகாரங்கள்! என்றே அலைக்கின்றனர்.

எதற்காக பரிகாரங்கள்? எதற்காக பரிகாரங்கள்?? சொல்லுங்கள்.

நீங்கள் தவறைச் செய்துவிட்டால் அதற்கு பரிகாரமாக சொல்லிவிட்டால் செய்துவிட்டால் தண்டனைகள் தீர்ந்துவிடுமா?? என்ன?

நிச்சயம்  தீராது என்பேன்.

எந்தனுக்கு கோபங்கள் தான் வருகின்றது.

பரிகாரங்கள் செய்யுங்கள் இன்னும் கஷ்டம் தான் வரும் என்பேன்.

எதனால் ?

இறைவன் இறைவனை எப்படி வணங்குவது என்று தெரியாமலே மனிதன் வணங்குகின்றான்.

ஒருவர் நிலையில்லாதவை கூட கேட்கின்றான்.

 ஆனாலும் இன்னொரு முறையும் உச்சரிக்கின்றேன்.


நீயே நிலை இல்லாதவன் நீயே நிலை இல்லாதவன் ஆனால் நீயே நிலையில்லாததை கேட்கின்றாயே நியாயமா? மனிதா!

மனிதா புரிந்துகொள் அறிவுகள் பலமாக இருக்கின்றது 

பொய் என்பது உண்மை என்பது கூட தெரிந்து கொள்.

இனிமேலும் பொய்க்குத்தான் சக்திகள் அதிகம் என்பேன் கலியுகத்தில்.

அவ் பொய்யைத் தேடிச் சென்றால் நிச்சயம் நீ அழிந்து போவாய் என்பது விதிக்கப்பட்டதா? இல்லை விதித்தது நீயேவா?

நீயேதான் விதித்துக் கொண்டாய் என்பேன்.

விதியின் பாதை ஆராய்ந்து பார்த்தால் விதியினை நிச்சயமாய் வென்றுவிட முடியும் என்பேன் .

அதற்கு தகுதியானவனாக நீ இருந்தால் யானே மாற்றி விடுவேன்.

ஆனாலும் இதற்கு தகுதியானவனாக மனிதன் இல்லை இல்லை என்பேன்.

நிதானத்துடன் நடந்து கொண்டு எதனையும் நின்று என் தலத்திற்கு கூட வருவீராகினால்

அண்ணாமலையை நோக்குக அண்ணாமலையை நோக்குக 

நடராசன் தில்லையில் பார்க்க கோடி புண்ணியம் திருவையாறில் என்னைப்பார்க்க கோடி புண்ணியம் கோடி புண்ணியம் கைலாயத்தில்.

ஆனாலும் மனிதனை யான் அழைப்பேன் கைலாயத்திற்கு.

கைலாயத்திற்கு அழைப்பேன் எதனால்? என்பதைக்கூட சற்று இதன் அழிவு காலம் எப்பொழுது என்பதுகூட அடுத்த வாக்கில் யான் கூறுகின்றேன் கைலாயத்திலே. 

நல் முறைகள் ஆகவே இன்னும் ஏதேது? நடக்கப்போகின்றது என்பதை கூட கைலாயத்திலிருந்தே உரைக்கின்றேன்.

ஆனால் மனிதர்கள் உணர்வதில்லை வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் நிசாதிக்கின்றான் என்பேன்.

ஆனாலும் இல்லை என்பேன். மனிதன் சந்தோஷமே சிறிது நேரமே.

அவ் சந்தோசம் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால் இறைவனின் நினைப்பை தவிர ஏதும் இருக்கக் கூடாது என்பேன்.

மனிதன் எதற்காக? பிறந்தான்? எதற்காக? வளர்கின்றான் ?
எதற்காக ?போய்ச்  சேர்கின்றான்? 
மீண்டும் பிறப்புக்கள் எடுக்கின்றான்.

இங்கே நிம்மதியாக வாழ்கின்றானா? இல்லை.

எதற்காக? எதற்காக? என்றெல்லாம் மனிதனே உருவாக்குகின்றான் அனைத்தும்.

மனிதனே  உருவாக்குகின்றது எல்லாம் அழிவுகள் நிச்சயம் என்பேன்.

நிச்சயம் என்பேன் இதனை கூட முன்னிறுத்தி நினைத்துப் பார்க்கும் அளவிற்கு இனிமேலும் கொடுமைகள்.

ஆனாலும் கொடுமையின் பாதையில் இனிமேலும் சித்தர்கள் வழிகள் சித்தர்களின் வழிகள் சித்தர்களே ஏற்படுத்தி விடுவார்கள் என்பேன். நலமாகவே கையை காட்டி அழைப்பார்கள் என்பேன்.

 அகத்தியனே
 மூலனே
 போகனே
 புஜண்டனே என்றெல்லாம் அழைத்தால் நிச்சயமாய் மனம் மகிழ்ந்து அவர்களே வருவார்கள்.

ஆனால் அதற்கும் நீ நல் முறைகளாக மனம் கொள்ள வேண்டும் மனம் கொள்ள வேண்டும் எதற்காக எதற்கு தகுந்தவையாக இருக்க வேண்டும்.

தகுதியானது அனைத்தும் காரணம் இறைவனை என்று உணர்ந்து விட்டால் சித்தர்கள் கையை காட்டி நினைத்து நல் முறைகளாக அழைத்து வருவார்கள்.

வருவார்கள் பொய்யான கூட்டம் திரியும் என்பேன் வரும் காலங்களில் பொய்யான வையே பேசும் என்பேன் பேசும் என்பேன் பொய்யான மனிதர்களே பொய்யான பக்தியையும் காண்பிப்பார்கள் என்பேன்.

எதனால் அனைத்தும் காரணத்திற்காகத்தான் இருக்கின்றது.

ஆனாலும் இதில் கூட நல்லோர் தீயோர் இவையெல்லாம் இருக்கின்றார்களா இவ்வுலகில் நன்மை செய்பவர்கள் நல்லோர்களா ? தீமை செய்தவர்கள் தீயோர் களா? .

இதற்கு இவற்றிற்கெல்லாம் விடைகள் சற்று அதிகமாகவே உள்ளது.

உள்ளது இல்லையப்பா இவ்வுலகில் நல்லவை.

நல்லவை கலியுகத்தில் இனிமேலும் ஒழுக்கம் கெட்டு வாழ்வார்கள் .

இவ்வொழுக்கம் இவ்வொழுக்கமே தன் அழிவை தீர்மானிக்கிறது.

வள்ளுவனும் புகழ்ந்தான் புகழ்ந்தான் ஒழுக்கத்தைப் பற்றி அதனை நிச்சயமாய் உருவாக்கியவன் யானே. 

யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.

ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.

இதனையும் நல் முறையாக உணர்ந்துவிட்டால் வாழ்க்கையின் தத்துவத்தை வாசகனுக்கும் (மாணிக்கவாசகர்) உதவி செய்தேன் பன்மடங்காக அதனால் நீங்கள் தகுதியானதாக இருந்தால்தான் நானும் உதவி செய்வேன்.

ஆனாலும் சித்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் யாராவது ஒரு சீடன் கிடைப்பானா? கிடைப்பானா? என்று!

நல் மனிதன் கிடைப்பானா? கிடைப்பானா? என்று.

ஆனாலும் மனிதன் ஏமாற்றுபவனே. ஏமாற்றுபவனே என்பதுதான் மிஞ்சியது உலகில்.

ஆனாலும் இனிமேலும் படைப்புக்கள் நிச்சயம் சித்தர்களால் படைப்புகள் வரும் படைப்புக்கள் வரும் நல்லோர் இனியும் வருவார்கள் என்பேன் இக்கலியுகத்தில் கூட இனியும் மாற்றுவார்கள் என்பேன்.

இவ்வாறு நல் படைப்புக்கள் சித்தர்களே ஈந்து பின் உலகத்தை திருத்துவார்கள் என்பேன்.

கடைசியில் கிருஷ்ணனே வந்துவிடுவான் இதனையும் அவந்தனே சொல்லிவிட்டான் தன் வாயால் என்பதையும் கூட.

இதற்கும் பல சூட்சமங்கள் உண்டு யார்? யார்? எதனிடம் கேட்க வேண்டும் எதனிடம் உணர வேண்டும்? என்பதையெல்லாம் யான் என்னிடத்தில் கைலாயத்திலிருந்து உரைக்கின்றேன்.

மனிதனே நிலையில்லாதது நிலையில்லாததை தேடிக் கொண்டிருக்கிறாய்.

ஆனால் எப்பொழுது நிலை உள்ளதை தேட போகின்றாய்?

தேட போகின்றாய் என்று தான் உணர்ந்து இருக்கின்றோம் இறைவனே விட்டு விடுகின்றானா? இல்லை 

ஈசனே யான் எதனை என்று கூட உங்களிடத்தில் பேசுவது?

பேசுவதற்கு தகுதி இல்லாமல் நடந்து கொண்டு இருக்கின்றீர்கள் நீங்கள் இதனையும் வெறுத்து வெறுத்து விட்டு எதனால் நீங்கள் மக்களுக்கு எதனை வைத்து சேவை செய்ய வேண்டும்?

முதலில் தன் நிலைமையை பார். பின் பிறர் நிலைமையைப் பார் அப்பொழுது தான் இறைவன் வந்து உன்னை ஆட்கொள்வான்.

மனிதர்கள் இன்னொரு முறையும் சொல்கின்றேன் சொல்கின்றேன் பின் கஷ்டங்கள் பட்டு பட்டு ஏதும் நடக்கவில்லை என்றால் 
நமச்சிவாயனே என்று ருத்ராட்சத்தை அணிந்து கொள்கின்றான்.

இது நியாயமா???

இது தகுமா??

இது உகந்ததா??

ஆனாலும் மனிதனின் பொறாமைகள் தன்னைத்தானே அழித்துவிடுகின்றன.

யான் ஒவ்வொன்றையும் பார்க்கின்றேன் இவ்வுலகத்தில்.

என்னையே நம்பி நம்பி நமச்சிவாயா என்று சொல்லிச் சொல்லி பொய் கூறி புறம் கூறி யான்தான் பெரியவன் யான்தான் பெரியவன் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றான்.

ஆனால் இங்கே யான் தான்(சிவன்) பெரியவன் என்று தெரியாமல் போய்விட்டது. மனிதர்களுக்கு.

மனிதர்களே ஒன்று நீங்கள் திருந்துங்கள் இல்லையென்றால் இல்லை என்றாலும் நிச்சயம் நோய்கள் ஓடோடி வரும் ஓடோடி வரும் என்பதற்கு தகுதியற்றவை இங்கில்லை இங்கில்லை நலன்களே உரித்ததாகும் .  உரித்ததாகும் என்பேன்.


இவ்விஷயத்திலும் சரியாக சரியாக என்னையும் பல திருத்தலங்களில் பூஜை செய்கின்றார்கள் ஆனால் பணத்திற்காக மட்டுமே .

ஆனாலும் இவையெல்லாம் தெரிந்துகொண்டு அவந்தனக்கு கஷ்டங்கள் வருகின்றது.

ஆனால் என்னையே ஈசனே உந்தனுக்கே யான் செய்து கொண்டிருக்கின்றேனே! 

இப்பொழுது கூட என்னை இப்படி ஆக்கி விட்டாயே என்று ஆனால் அவன் செய்தது தவறு என்பது உணர்வதே இல்லை என்பேன். இல்லை என்பேன். 

இவ்வுலகத்தில் மாற்றங்கள் எவ்வாறு நின்று நின்று வரும் என்பதையும் கூறுகின்றேன்.

முதலில் ஒழுக்கங்கள் கடைபிடிக்க வேண்டும் ஒழுக்கங்கள் கடைபிடிக்க வேண்டும் இவை பலமுறையும் யான் சொல்லிவிட்டேன். சித்தர்களும் சொல்லிவிட்டார்கள்.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே உலகம் பிழைத்துக் கொள்ளும் உலகம் பிழைத்துக் கொள்ளும் இனிமேலும் நன்மைகள் நன்மைகள் எதுவாயினும் இனிமேலும் வருமப்பா. 

ஆனாலும் தாங்கியிருக்கும் பூமாதேவி பின்பு அசைந்தால் நீங்கள் எல்லாம் அசைந்து விடுவீர்கள் கீழே.

இதனால் ஜாக்கிரதையாகவே இதற்கும் மாறாக உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை.

உலகத்தில் நிலையானவன் இறைவனே என்பதை முன்கூட்டியே முன்கூட்டியே சித்தர்களும் சொல்லியிருக்கின்றனர் ஆனாலும் சித்தர்கள் பேச்சையே கேட்பதில்லை மனிதர்கள்.

மனிதர்கள் பின் ஏனோதானோ சொல்லி விடுகின்றான் பின் ஓர் 5 ஓர் 10 நாட்களுக்குள் தன்னை தானே மனதில் செதுக்கிக் கொள்கின்றான். ஆனால் மறைந்து விடுகின்றான்.

ஈசன் சொல்வதையும் இதனையும் யான் ஈசன் இனிமேலும் வருவேனப்பா நிச்சயம்  என் பக்தர்களுக்கு காட்சி அளிப்பேனப்பா.

ஆனாலும் யான் வந்தாலும் என் பக்தனே நீயா? ஈசன் என்று கூறி விடுவான் என்பதுதான் இங்கு பின் நகைத்தாடுதலாக உள்ளது.

ஆனாலும் அகத்தியனே  வந்து விட்டாலும் கூட நம்புவதற்கு ஒன்றுமில்லை.

அகத்தியனே திரிந்து  கொண்டிருக்கின்றான் இவ்வுலகத்தில் கூட. நிதானித்து நிதானித்து யாரையாவது நல் மனிதனைக் கண்டால் தூக்கி விடுவோமா என்று.

ஆனாலும் இதனை இதனையும் நன்குணர்ந்து பின் அகத்தியன்

தன் பிள்ளைக்கு படிப்பு வேண்டும் தன் பிள்ளைக்கு வேலை வேண்டும் தன் இனத்திற்கு இனம் சேர்க்க வேண்டும் தன் பிள்ளைகளுக்கு இன்னும் பிள்ளைகள் பிறக்க வேண்டும் இவை எல்லாம் ஒரு பிறப்பா??? பிறப்பா?  என்பேன்.

பிறப்புக்கள் இல்லை இவையெல்லாம் இறைவன் உருவாக்குவது இல்லை மனிதனே உருவாக்குகின்றான்.

இப்பொழுதும் கூட கடைசியாக சொல்கின்றேன். மனிதன் உருவாக்குவதற்கு நிச்சயம் தண்டனை மனிதனாலே  உண்டு அதனால் நிச்சயம் உண்டு.

தர்மங்கள் தானதர்மங்கள் செய்வதுண்டு மனிதர்கள் ஆனாலும் அதனை எதற்காக செய்கின்றார்கள் அதனை புரிந்து கொண்டு நல் முறைகளாக செய்தால் மட்டுமே தான தர்மங்களுக்கு பின் புகழ் உண்டு.

ஆனாலும் பின் இதை நினைத்து யான்தான் செய்தேன் யான்தான் செய்தேன் என்றால் நீயே செய்து கொள் உந்தனுக்கு.

தன் கடமையை பணி.

அவந்தன் கர்மாவும் நீ எடுத்துக்கொள்வாய் அதனால் உதவி செய்வதை யாராலும் எதனாலும் பின் எதனை என்றும் கூட உரைக்கக் கூடாது என்பேன்.

யான்(சிவன்)  கூட பல மனிதர்களுக்கு உதவிகள் செய்கின்றேன். 

சொல்கின்றேனா?? 

கூறுங்கள் மனிதர்களே!

அதனால் உனக்கு இட்ட கட்டளை நீ சரியாக செய்து என்னிடத்தில் வந்து விடு இதுதான் நன்மையாக்கும் என்பேன்.

மற்றபடி விளம்பரங்கள் தேவையில்லை என்பேன்.

உண்மை பொருளுக்கு தேவையில்லை தேவையில்லை என்பேன்.

பொய்யான பொருளுக்கே விளம்பரங்கள் யான் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் விளம்பரங்கள் என்ன தேவையா???

மனிதனே முட்டாள் மனிதனே சிந்தியுங்கள் அனைத்தும் பொய் பித்தலாட்டம் இதில் கூட நியாயம் பேசுகின்றீர்கள் மனிதர்களே .! நீங்களே அழித்து வாழ்ந்து விடாதீர்கள்.

யான்  கூட இருக்கின்றேன் இவ்வுலகத்தை மாற்றுவதற்கு.

யானே  இங்கு பெரியவன் என்று கூட சொல்வதற்கு நீங்களே எதனால் என்பது கூட ஈசனே பெரியவன் என்று யான்  சொல்லிவிட்டால் நீங்கள் திரும்பவும் ஈசன் பெரியவன் என்று சொல்லிவிட்டான் என்று கூட நகைத்து விடுவீர்கள்.

இப்பொழுது உலகத்தில் பன்மடங்கு அநியாயங்கள் நடக்கப்போகின்றது.

மனிதன் மனிதனே சீர்திருத்த போகின்றானா? 

நீங்கள் என்ன அதற்கு செய்தீர்கள் என்பதைக்கூட முடிவெடுக்க வேண்டும்.

அதனால் பொய் மனிதர்களே

யான் அன்னதானம் செய்தேன் யான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன்
ஆனால் இவ்வுலகத்தில் நியாயம் நிற்கவேண்டும். தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு நீ என்ன செய்தாய்??

இதுதான் இங்கே கேள்வி!!!

யான் அடுத்தமுறை நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே கைலாயத்தில் உரைக்கின்றேன் மனிதனே திருந்திக் கொள்ளுங்கள் வரும் காலங்களில் நோய்கள் பட்டதாகவே ஓடிக்கொண்டு இருக்கின்றது.

நிச்சயம் ஒருமுறை மனதார எண்ணுங்கள்.

இக் காசி தன்னில் பல கோடி எண்ணிலடங்கா சித்தர்கள் தவம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

யானேஉங்களை அழைத்து வந்து பாவங்களை தீர்த்து விடுவேன்.

மனதார நமச்சிவாயனே என்று கூறுங்கள் போதுமானது.

அடுத்த வாக்கும் கைலாயத்திலிருந்து உரைக்கின்றேன் நல் முறையாக.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Friday, 22 October 2021

சித்தன் அருள் - 1043 - அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் - 18/10/2021




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நடந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சென்ற தொகுப்பில் அடியேன் கூறிய "என் இயலாய்மையை புரிந்து கொண்ட அகத்தியர்............ மறுபடியும் முதலிலிருந்தா, மானசீகமாக என்னால் அது முடியாது என கூறிவிட்டேன், குருநாதரிடம்" என்பதை பல அகத்தியர் அடியவர்களும், தவறாக நிதிநிலைமையுடன் தொடர்புபடுத்தி, உடனேயே அடியேனுக்கு நாங்களும் நிதி தருகிறோம், வழி சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். இது முற்றிலும் தவறு. அடியேனின் உடல் நிலை காரணமாக அதிகமாக உடலால் உழைக்க முடியவில்லை. உழவாரப்பணிக்குத்தான் உதவி தேவை. நிதியால் அல்ல. பூஜையில் பங்கு பெற்று, அருள் பெற்றுக் கொள்ளுங்கள், அது போதும்! எல்லா வருடமும் அகத்தியர் அடியவர்கள் உழவாரப்பணி செய்து பூசையை நிறைவு செய்வதுபோல், இந்த இரண்டாவது பூசையும் நடக்க வேண்டும் என்று ஒரு சிறிய அவா!

பூஜை தினத்துக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளையும் கூறுகிறேன்.

 • பாலராமபுரம் அகத்தியப்பெருமான் கோவிலை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒருநாள் அகத்தியப் பெருமானிடம் ஒரு எளிய வேண்டுதலை வைத்தேன்.
 • "இந்த வருட பூசை மிக சிறப்பாக நடக்க வேண்டும். வரும் அனைவருக்கும் தாங்கள் அருள வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பி, பூசையில் கலந்து கொண்டு மறுபடியும் வீடு சென்று சேரும் வரை தாங்கள் கூட இருந்து காத்தருள வேண்டும்" என்றேன்.
 • அன்றைய தினம் இரவு பூசையின் பொழுது, அங்கிருக்கும் பூசாரி திரு.சுமேஷ் அவர்களுக்கு நம் குருநாதர் ஒரு உத்தரவை கொடுத்தார்.
 • "நீ போய் பூசையில் கலந்து கொண்டு, எல்லோருக்கும் கனகத்தை எம் சார்பாக அளித்துவிடு" என்றார். எந்த பூசை?  கனகம் என்றால் "தங்கம்" ஆயிற்றே! எதை பற்றி கூறுகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அடியேன் அவரை தொடர்பு கொண்டேன். காசை, சித்தர்கள் கானகம் என்றும் கூறுவார்கள். பூசை 18/10/2021 அன்று நடக்கிறது. நிறைய காசை அவரிடம் வைத்து பூசை செய்து கொண்டு வந்து கொடுங்கள்" என்றேன்.

எப்படியெல்லாம் குருநாதர் நம்மை சூழ்ந்து நின்று காக்கிறார் என்பதற்கு, இதுவும் ஒரு உதாரணம்.

அகத்தியர் உத்தரவால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பூசை நாள் வந்தது. இனி நடந்ததை பார்ப்போம்.
 • அகத்தியப்பெருமானின் அருளால், அன்றைய தினம் ஒரு அர்ச்சகர், திரு.குமார் என்பவர் பூஜைக்கு வந்து சேர்ந்தார். வழியே இல்லை என்று நாம் நினைத்தாலும், நம் குருநாதர் நினைத்தால் எதுவும் நடத்தி தருவார் என்பதில் சந்தேகமில்லை.
 • ஒரு வாரத்திற்கு முன் தாமிரபரணியை கண்டா போகுது, ஓரளவுக்கு ஓடிய நீர், மேலும் வற்ற தொடங்கியது. பெருமாளிடம், அகத்தியரிடம், தாமிரபரணி தாயிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்தேன். அந்தநாள் அன்று நீருக்கு குறைவிருக்கக்கூடாது, என்பதே வேண்டுகோள். முதல் நாள் கூட வற்றிய நிலையில் ஓடிய நதி, அன்றைய தினம் சுழித்துக்கொண்டு ஓடியது. கால் கவனமாக பாதிக்கவில்லை என்றால், கொண்டு போய்விடுவேன் என்கிற வேகம். கண்டதும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.
 • நிறைய அடியவர்கள், தாமிரபரணி தாய்க்கு விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அனைத்து தாம்பூலமும் நீரை எதிர்த்து ஒரு இடம் வரை சென்றுவிட்டு, திரும்பி நீர் ஓட்டத்தில் சேர்ந்து சென்றது. இதை கண்டவுடன், தாமிரபரணி தாயே, தாம்பூலத்தை வாங்கி, தன இருப்பிடத்திற்கு கொண்டு செல்வதுபோல் இருந்தது. அந்த காட்ச்சியை காணவே இரு கண்கள் போதாது. தன கையினால் தாம்பூலம் கொடுத்தவர்கள், மிக மிக புண்ணியம் செய்தவர்கள், என தோன்றியது.
 • கோவிலில் நிறைந்த அகத்தியர் அடியவர் கூட்டம். அர்ச்சகர் அபிஷேக பூஜையை மூலவருக்கு முன் நடத்துவதாக தீர்மானம் செய்தார். உள்ளே இடவசதி குறைவாக இருந்ததால் நிறைய அடியவர்கள் வெளியே எப்போதும் அபிஷேகம் நடக்கும் மண்டபத்தில் அமர வேண்டி வந்தது.
 • நவகும்ப தீர்த்தம் வைத்து ஜெபத்துடன் பூசை தொடங்கியது.
 • பெருமாளுக்கு தைல காப்பு சார்த்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த எண்ணையை வாங்கிக் கொண்டவர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள். ஏன் என்றால், பாலராமபுரம் அகத்தியப்பெருமான் கோயில் பூஜாரி திரு.சுமேஷ் தன கையால் அனைவருக்கும் கொடுத்தார். அகத்தியர் லோபாமுத்திரையை தொட்டு பூசை செய்கிற கைகள். நம் மீது அவர் விரல் பட்டாலே அகத்தியரை தொட்டு, அவர் சேமித்த அருள், நம் உடலில் பாயும்.
 • தைலக்காப்புக்குப்பின், அபிஷேகம் தொடங்கியது. பால், தயிர், வாசனாதி தைலப்பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், தேன், இளநீர், பச்சைக்கற்பூரம், என அபிஷேக விதங்கள் நீண்டு சென்றது. உற்ச்சவ மூர்த்தியை கண்டவுடன், அடியேனுக்கு தோன்றியது என்ன வென்றால், ஒரு சின்ன குழந்தையை தலையில் நீர்விட்டு குளிப்பாட்டும்பொழுது, மூச்சு முட்டி கைகளால், முகத்தில் வழியும் நீரை துடைத்துவிட்டு, இன்னும் தலையில் நீர் விட வேண்டும் என சிரித்தபடி பார்க்குமே, அந்த உணர்வுதான் அடியேனுக்கு வந்தது. அத்தனை அழகு.
 • அபிஷேகம் முடிந்து, அடியவர்கள் கொண்டு வந்த பூக்கள். மாலைகளால் பெருமாளையும், தாயார்களையும், அர்ச்சகர் மிக அழகாக அலங்கரித்தார்.
 • நான்குவித நிவேதனம் பெருமாளுக்கும், தாயாருக்கும், கொடுக்கப்பட்டு, தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெற்றது.
 • அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், தீர்த்தம், சடாரி, அபிஷேக மஞ்சள் வழங்கப்பட்டது.
 • பாலராமபுரம் அகத்தியர் கோவில் சார்பாக, அனைத்து அடியவர்களுக்கும் பூஜாரி திரு.சுமேஷ், "அகத்தியர் படம் பதித்த ஒரு ரூபாய் காசும்", பாலராமபுரம் அகத்தியர் லோபாமுத்திரை படமும், வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக கொடுக்கப்பட்டது.
 • அனைவருக்கும், அகத்தியப்பெருமான், பெருமாள் சார்பாக, 786,108,354 எங்கள் கொண்ட ரூபாய் வழங்கப்பட்டது.
 • கூடவே, அகத்தியர் அடியவர்கள் கொண்டுவந்த இனிப்பு பண்டங்களும், ப்ரசாதத்துடன் கொடுக்கப்பட்டது.
 • பூசையை பற்றி நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்டபொழுது, அவரே அங்கிருந்ததாகவும், அடியவர்கள் ஏற்பாடு செய்த பூசையை பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதியாக வந்திருந்து மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டதாகவும், கூறியுள்ளார். அனைவரையும், ஆசிர்வதித்ததாகவும் உரைத்துள்ளார்.
 • இந்த பூஜையை மிக சிறப்பாக செய்ய உதவிய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், குருநாதர் உத்தரவின் பேரில் முன் நின்று நடத்திய திருமதி.லக்ஷ்மி குழுவினருக்கும், கோவில் நிவாகத்திற்கும், லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கும், நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
 • இரண்டாவது அபிஷேக பூசையை பற்றி குருநாதரிடம், நாடியில் ஒரு சில விஷயங்களை கேட்டுள்ளோம். அவர் கண் அசைவுப்படி, விஷயங்கள் நடக்கும். உரிய நேரத்தில் அனைவருக்கு தெரிவிக்கிறோம்.
ஒரு சிறு குறிப்பு:-

"ஏன் அய்யா! உங்களுக்கு மட்டும் இந்த வருடம் இரண்டு பிறந்தநாள் பூசையா? அதன் விசேஷம் என்ன? என வினவியதற்கு, பெருமாளுக்கும் இரண்டாவது பூசையை செய்யச் சொல்கிறார். இதில் என்னவோ ஒரு சூட்சுமம் உள்ளது. அதை பற்றி மேலும் அகத்தியப்பெருமானிடம் கேட்டுள்ளேன். பதில் வந்ததும் தெரிவிக்கிறேன். அகத்தியப்பெருமானின் திருநட்சத்திரம் டிசம்பர் 23, 2021 அன்று வருகிறது. கொண்டாட விரும்புகிறவர்கள், தயாராகலாம்.

மேலும் ஒரு நாடியில் வந்த செய்தி:-

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே * அப்பனே அம்மாவாசை திதியில்* இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வாறு நல் முறைகள் ஆக பல பெரிய பெரிய அரசர்களும் இவ்வாறு செய்து பல சித்துக்கள் பெற்று விளையாடினார்கள் என்பேன்.

இதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் நல்லோருக்கு நான் எப்பொழுதும் உதவிகரமாக இருப்பேன் என்பேன் இச் சூட்சுமத்தை இப்போது யான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு.

நவம்பர் 04 ம் தியதி அமாவாசை. அது முதல் ஒன்பது நாட்கள், முடிந்தவர்கள் காவிரியில், துலா ஸ்நானம் செய்து அவர் அருள் சித்து பெற்றுக்கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்..................தொடரும்!

Wednesday, 20 October 2021

சித்தன் அருள் - 1042 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 18/10/2021



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்தநாள்>>இந்த வருடம், கோடகநல்லூரில் 18/10/2021 அன்று மிக சிறப்பாக அபிஷேக, அலங்கார பூசையுடன் நடந்தேறியது. கோவிலில் பவித்ர உற்சவம் அன்று தொடங்குவதினாலும், வேறு சில காரணங்களாலும், பூஜை காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை வேளை 4 மணி வரை நீண்டு சென்றது. இம்முறை, அபிஷேக ஆராதனைகள் மூலவர் சன்னதிக்கு முன்பு வைத்து நடத்தப்பட்டது. நிறைய அகத்தியர் அடியவர்கள் வந்திருந்தனர். இடமின்மையால், வந்தவரில் பலரும், வெளியே அமர்ந்திருந்தனர்.

சில விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க சற்று பின் செல்வோம்.

அகத்தியர் மைந்தன் திரு.ஹனுமந்ததாசன், (அகத்தியர் ஜீவநாடி வாசித்தவர்) அவர்களின் மூத்த சகோதரர், திரு.ராமஸ்வாமி அய்யங்கார், தச்சநல்லூரில் வசித்து வந்தார். அவரின் உதவியினால், எல்லா வருடமும் அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் "அந்தநாள் இந்த வருட" கோடகநல்லூர் விழா மிக சிறப்பாக நடந்தேறியது. செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே, அடியேனின் உடல் இயலாய்மையை கண்ட அகத்தியப்பெருமான், இந்த வருட பூசைக்கான ஏற்பாட்டை செய்கிற வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க சொன்னார். அவர் சொன்னபடி திருமதி.லக்ஷ்மி (சென்னை) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சற்று விலகி நின்றேன். ஏதோ ஒரு விஷயம் நெருடியது. சற்று பொறுத்திருந்து பார்ப்போம் என அமைதியானேன். செப்டம்பர் மாதம் 26ம் தேதி, திரு.ராமஸ்வாமி அய்யங்கார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். கோடகநல்லூர் முதல் தொடர்பு அறுந்து போனது. பெருமாளுக்கு வேண்டியதை செய்ய இனிமேல் அகத்தியர்தான் பார்த்து உதவ வேண்டும் என மனதை தேற்றிக் கொண்டேன். இந்த சித்தன் அருளை வாசித்து, கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் அருளை பெற்ற நாம் அனைவரும், அகத்தியப்பெருமான், திரு.ஹனுமந்ததாசன் அவர்கள், திரு ராமஸ்வாமி அய்யங்கார் அவர்கள் போன்றவர்களுக்கு மிக மிக கடமைப்பட்டிருக்கிறோம். அன்னாரது இறுதி சடங்கில், ப்ரஹன்மாதவர் கோவில் அர்ச்சகர் திரு ரமணன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. தனியாக அழைத்து 18/10/2021 அபிஷேக பூஜையை பற்றி பேச, "செய்யலாம்! ஆனால் கோவிலின் பவித்ர உற்சவம் அன்று தான் தொடங்குகிறது. இப்படி வராதே. கோவில் உற்சவம் முடிந்துதானே எப்போதும் வரும். ஒரு முறை கூட தியதியை சரி பார்த்துவிடுங்கள் என்றார்.

"அது குருநாதர் அகத்தியப்பெருமான் பார்த்துக் கொடுத்தது. மேலும் அன்றைய தினம் பூசை நடக்கும் எனவும் ஆசிர்வதித்துள்ளார்" என்ற செய்தியை தெரிவித்தேன். அப்படியானால் செய்து விடலாம் என தெரிவித்தார். இம்முறை பொறுப்பு எனக்கில்லை, திருமதி.லக்ஷ்மி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடியேனும் வரப் பார்க்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என பெருமாளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நீங்களே முன் நின்று நடத்தி தர வேண்டும் என்றேன்". சம்மதித்தார்.

பூஜைக்கு ஒரு வாரம் முன்பு, அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. திரு.ரமணன் அர்ச்சகரின் தாயார் அவர்கள் இறைவன் திருவடியை அடைந்தார், அதனால், அவருக்கு 16 நாட்களுக்கு கோவிலுக்குள் வர முடியாது என. உடனே அவரை தொடர்பு கொண்டவுடன், அடியேனின் வருத்தத்தை தெரிவித்து, என்ன சூழ்நிலை என வினவினேன்.

அவரால் வர முடியாது எனவும், பதிலுக்கு வேறு ஒருவரை தின பூசைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அவரால் "அந்தநாள்" பூசையை செய்து தர முடியாது என கூறியதாகவும், தெரிவித்தார்.

வேறு வழி இல்லை, என்ன செய்வது இன்னும் நான்கைந்து நாட்களே உள்ளது. வேறு அர்ச்சகர் யாரும் கிடைக்க மாட்டார்கள். அகத்தியரிடம் நாடியில் கேட்போம் என தீர்மானித்தோம்.

நாடியில் வந்ததை கீழே தருகிறேன்.

"யாமும், லோபாமுத்திரையும் கோடகநல்லூர் தாமிரபரணிக்கரை வழியாக நடந்து வந்த பொழுது பெருமாளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றோம். அப்பொழுது, "அகத்தியா! நீ ஏன் இங்கே அலைந்து நடக்கிறாய்? என கேள்வியை எழுப்பினார், பெருமாள்.

அனைவரையும் ஆசிர்வதிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன், என்றார்.

எனக்கு ஒரு உதவி செய் அகத்தியா. இந்த ஐப்பசி மாதம் முழுவதும் இங்கிருந்து எனக்கு அபிஷேக பூசைகளை செய்! என்றார் பெருமாள்.

செய்கிறேன் என கூறியும், எனக்கு சத்தியம் செய்து கொடு என சத்தியம் வாங்கிக்கொண்டார். ஆகவே இந்த ஐப்பசி மாதம் முழுவதும் யாம் இங்கே இருந்து பெருமாளுக்கு பூசை செய்யப் போகிறோம். அதை மனிதர்களாகிய உங்களால் காண முடியாது. அன்றைய தினம் (18/10/2021) அபிஷேக பூசைகள் நடக்கும். இருந்தாலும் அபிஷேக பூசையை அவர் செய்தால் (திரு.ரமணன் அவர்கள்) பெருமாள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார். ஆனால் 18/10/2021 அன்று அது நடவாத காரியம். நடக்கிற பூசையை ஏற்று கொள்ள சொல்லி பெருமாளிடம் யாம் விண்ணப்பிக்கிறோம்.

இருந்தும் எம் சேய்கள் ஒன்று செய்யுங்கள். அவர் (திரு.ரமணன்) கோவிலுக்கு வரும்பொழுது ஒரு நல்ல தினத்தில், இவைகளை அவரிடம் கூறி, ஐப்பசி கடை நாளுக்குள், ஒரு முகூர்த்தத்தை தேர்ந்தெடுத்து, ஒரு முறைகூட, பெருமாளுக்கு அபிஷேக பூசையை செய்துவிடுங்கள்" என்றாரே பார்க்கலாம்.

இதை கேட்டதும் அடியேன் அசந்து போனேன்.  மறுபடியும் முதலில் இருந்தா?

மானசீகமாக என்னால் அது முடியாது என கூறிவிட்டேன், குருநாதரிடம்.

"கவலை வேண்டாம்! எல்லாம் நடக்கும். போய் நடக்கிற விஷயங்களை கவனித்து கொண்டிரு! பூஜைக்கு உதவி வரும்! இரண்டு அபிஷேக பூசையும் நடக்கும். எம் ஆசிகள் உண்டு!" என முடித்துக் கொண்டார்.

இனி அவர் வந்து சேர்ந்து பேசிய பின்தான் ஏதாவது ஒரு தீர்மானம் எடுக்க முடியும் என உணர்ந்தேன்.

சித்தன் அருள்...................தொடரும்!

Monday, 11 October 2021

சித்தன் அருள் - 1041 - அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்த நாள் >> இந்த வருடம் என்கிற தலைப்பில், பல இடங்களிலும் முக்கியமான முகூர்த்த நேரத்தை அகத்தியர் பெருமான் நமக்கு கோடிட்டு காட்டியது நினைவிருக்கும். அதில் ஒன்றான "கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர்" கோவில் உங்களுக்கு நினைவிருக்கும்.

அந்த கோவிலின் அபிஷேக பூஜை தினம் இந்த வருடம், வரும் 18-10-2021, திங்கட்கிழமை  அன்று வருகிறது.

அந்த முகூர்த்த தினத்தின் முக்கியத்துவத்தை சிறிது உரைக்கிறேன். அதற்கு முன், நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நாடியில், திரு ஜானகிராமன் கேள்விக்கு, கீழ் கண்டவாறு பதில் உரைத்துள்ளார்.

"குருவே! வரும் 18/10/2021 அன்று உங்கள் உத்தரவின் பேரில், கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் கோவிலில் பெருமாளுக்கு அபிஷேக பூஜைகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது. அடியேன் அங்கு சென்று பூஜையில் கலந்து கொள்வதற்கு அனுமதி உண்டா? ஆயின் முன் பதிவு செய்ய வேண்டும்!" என வினவினார்.

"அந்த புண்ணிய முகூர்த்தத்தில் யாமே அங்கிருக்கப் போகிறோம். அபிஷேக பூஜைகளை செய்யப்போகிறோம்! ஆகவே கிளம்பி செல்க, அனுமதி உண்டு!" என பதில் உரைத்துள்ளார்.

புண்ணிய முகூர்த்த முக்கியத்துவம் என்னவென்றால்,

 • எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள்.
 • தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.
 • அன்றைய தினம், அனைத்து நதிகளும், தாமிர பரணியில் நீராடி தங்களை சுத்தி செய்து கொள்கிற நாள். ஆகையால், அன்று அங்கு நீராடி, அடியவர்களும், தங்களை சுத்தி செய்து கொள்ளலாம். 
 • அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
 • சித்தன் அருளை வாசிக்கும், எத்தனையோ அடியவர்களின் வேண்டுதலை/பிரார்த்தனையை நிறைவேற்றிய முகூர்த்த நாள்.
சமீபத்தில் கோடகநல்லூர் பெருமாள் கோவில் அர்ச்சகர், திரு.ரமணன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. 18/10/2021 அன்று கோவிலின் "பவித்ர உற்சவம்" தொடங்குகிற படியால் அதனுடன் சேர்த்து அகத்தியப்பெருமான் அருளும் அபிஷேக பூஜைகளை நடத்துவதாக தீர்மானித்துள்ளார். எல்லா அகத்தியர் அடியவர்களும் பங்கு பெறலாம், என உரைத்தார். அநேகமாக அபிஷேக பூஜையை காலை 10 மணிக்கு துவங்க தீர்மானித்துள்ளார். அனைத்து அகத்தியர் அடியவர்களும் இந்த செய்தியை அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ளவும், வேண்டியுள்ளார்.

நெல்லை சந்திப்பை அடைந்தவர்கள், தீவுத்திடலில் உள்ள தற்காலிக பேரூந்து நிலையத்தில், சேரன்மாதேவி செல்லும் பஸ்சில் நடுக்கல்லூரில் இறங்கி அங்கிருந்து 1 1/2 கி.மீ நடந்தோ, ஆட்டோவிலோ பயணித்து கோடகநல்லூரை அடையலாம்.

பூக்கள், துளசி உதிரியாகவோ, மாலையாகவோ, சிறிது பச்சை கற்பூரம், பெருமாளுக்கு பூஜைக்கு வாங்கி கொடுத்து, பிரார்த்தனையை கொடுத்து, அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.

உழவாரப்பணிக்கு வாய்ப்பு கிடைத்தால் ஏற்று செய்யுங்கள்!

மற்றவை அகத்தியப் பெருமானின் சித்தம் போல்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

ஒரு வேண்டுதல்:-

18/10/2021 அன்று கோயிலுக்கு வருகிற அகத்தியர் அடியவர்கள், தயவு செய்து முகக்கவசம் அணிந்து வரவும். நம்மால் பிறருக்கு ஒரு ஊறு விளைந்து விடக்கூடாது,என்பதில் கவனமாக இருங்கள்.

Friday, 8 October 2021

சித்தன் அருள் - 1040 - அன்புடன் அகத்தியர் - திருமூலர் வாக்கு!


3/10/2021 அன்று 

திருமூலர் உரைத்த பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் : கங்கை கரை. காசி. 

உலகையாளும் சிற்றம்பலனை பணிந்து வாக்குகள் உரைக்கின்றேன்.  மூலனவன். (திருமூலர்). 

நல் முறையாக அனு கிரகங்கள் மனிதர்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றது ஆனாலும் மனிதன் அதை ஒழுங்காக பயன்படுத்த தெரிந்திருக்கவில்லை.

தெரிந்து கொண்டால் பின் அனைத்தும் நீங்கள் மனதில் நினைத்தவாறே நடக்கும் நடக்கும் என்பேன். இதனால் யாங்களும் பல பல மனிதர்களை எவ்வாறு வரவேண்டும் என்று எண்ணி முறையான பணி தன்னில் செலுத்தி அவர்களையும் மாற்றுத்திறன் ஆக வளர்க்க முயற்சி செய்கின்றோம்.

 ஆனால் மனிதனோ தீய எண்ணங்களால் தீயவை நினைத்து அழிந்து விடுகின்றான். எதனால்? மனிதன் போக்கைப் பார்த்தால் சரி இல்லாததாக தோன்றுகின்றது.

இதனால் பின் யாங்களும் உரைத்துக்கொண்டே வந்து கொண்டே இருக்கின்றோம். இவ்வுலகத்தில் யாரும் யார் மீது பின் குறைசொல்ல இனிமேலும் மனிதன் இறைவன் மேலேயே குறை சொல்லுவான் அது தவறு என்பேன்.

நிச்சயம் தான் தான் செய்த பாவத்திற்கு தான்தான் தண்டனையை அனுபவிக்க வேண்டுமே தவிர இறைவன் மேல் குற்றம் சொல்வதற்கு மனிதர்களுக்கு தகுதி இல்லை என்பேன்.

இதனால் இன்னும் பல மாற்றங்கள் நிகழ போகின்றது. வரும் காலங்களில் இதனால் மனிதன் யுத்தத்தில் எவ்வாறு இருக்கின்றானோ அவ்வாறே பல கஷ்டங்கள் நடந்தேறும் இதனையும் தடுப்பதற்கு சித்தர்கள் முயற்சிகள் செய்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

கலியின் வேகம் ஆண்டுகளாக ஆக ஆக கலியின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பக்தர்களுக்கு எவை கூற?

பக்தர்களுக்கு பக்தர்களே விரோதம் ஆவார்கள்.

பக்தர்களுக்கு பக்தர்களே யான் தான் பெரியவன் நீ சிறியவன் என்ற போட்டிகள் இனிமேலும் வரும்.

வேண்டாம் மனிதனே! அறிவுகள் பலமாக படைத்திருக்கின்றான் இறைவன்.

ஆனால் யான் மனிதனை அறிவுள்ள முட்டாள் என்றுதான் உரைப்பேன்.

ஏனென்றால் எதையுமே தெரிந்து கொள்ளாமல் பிறக்கின்றான் மனிதன் பின் எதனையுமே தெரிந்துகொள்ளாமல் இறந்து போகின்றான் மனிதன். என்ன லாபம்??

இதனிடையே சிலகாலம் போராட்டங்கள் சிலகாலம் எவை எவையோ நினைத்து ஆனாலும் இதனின்றி எவ்வாறு நீ எதன் மூலம் மிகப் பற்று வைக்கின்றாயோ அதன் மூலமே அழிவு என்பது தெரியாமல் போய்விட்டது.

ஏன்?  நமச்சிவாயம்!

உரைத்ததை நன் முறையாகவே நன் முறையாகவே பயன்படுத்துபவர் எவர்?? எவர் என்பேன். 

ஏன்? இறைவனே மனிதனிடம் மனிதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றான்.

எதனால்??

பலபல ஞானியர்களையும் இறைவன் உருவாக்கினான் ஆனால் ஆனாலும் மனிதன் திருந்தப் போவதாகவே இல்லை .இல்லை.

 ஏன்? 

இயேசுவும் நல் முறைகளாக நபிகள் நாயகமும் தன் தன் இனத்தோரை இப்படி மனிதர்கள் பின் யாங்கள் சொல்லாததை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்களே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் கலியின் வேகம் கலியவே வென்று விடுவதாக உள்ளது.

 இதனால் மானிட ஜென்மங்களே திருந்திக் கொள்வது நன்று என்பேன்.

புத்தனே வந்தாலும் மனிதன் பின் எவ்வாறு பல பல உண்மைகளை சொல்லிவிட்டு சென்றுவிட்டான் ஆனால் அவனுக்கு எதிராகவே போராட்டங்களாம்! மனிதன் திருந்துவதாக இல்லை திருந்துவதாக இல்லை இப்படியே சென்று கொண்டிருந்தால் நிச்சயம் இன்னும் கஷ்டங்களை இறைவன் ஏற்படுத்துவான் என்பேன்.

அதனால் மனித ஜென்மங்களே திருந்துங்கள் நீங்கள் சரியாக நடந்து கொண்டால் இறைவனை உன்னிடத்தில் வந்து அனைத்தும் செய்வான். பின் நீ சரியாக நடந்தது கொள்ளவில்லை என்றாலும் நீ இறைவனை தேடியும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அன்பு மக்களே கேளுங்கள் இனிமேலும் உறங்கிக் கொண்டிருக்க வேண்டாம் என்பேன்.

விழித்துக் கொள்ளுங்கள் விழித்துக் கொண்டால் தான் நன் முறையாக நன்முறை களாகவே நீங்களும் உங்கள் சந்ததிகளையும் நல் முறைகளாக வலம் வருவார்கள் இவ்வுலகத்தில்.

அதை விட்டுவிட்டு பின் மனதை பின் எவையெவை மீதோ செலுத்திக் கொண்டே இருந்தால் போதாது வாழ்க்கை. 

பிறப்புக்கள் தோன்றித் தோன்றி கஷ்டங்கள் பட்டு பட்டு கடைசியில் பின் பைத்தியக்காரன் ஆகவே போய்விடுவான்.

யான் பல மனிதர்களை பலப்பல மனிதர்களை இவை  மூலம் பார்த்துக் கொண்டே தான் வந்திருக்கின்றேன் இக்கலியுகத்திலும். 

யான் முன்பே சொன்னேன் என் நூல்களையும்(திருமூலர் திருமந்திரம்) படிப்பதால் மாற்றங்கள் உண்டாகும் என்பேன்.

ஆனாலும் அதையும் அழித்து விடுகின்றான் மனிதன் வேண்டாம் முட்டாள் மனிதனே. மனிதனே இனிமேலும் கேளுங்கள் யான் சொல்வதையும் நன் முறைகளாக கவனித்து என்னுடைய நூலையும் சிறிது ஆராயுங்கள். அதில் எவ்வாறு எழுதி இருப்பதைப் பற்றியும் யான் விளக்கமாக பின் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு வருடமாக நினைத்து நினைத்து உலகத்தில் மனிதன் இப்படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றானே  என்று எண்ணி தான் யானும் படைத்திருக்கின்றேன்.

இதனால் மக்களே பின்வரும் காலங்களில் அநியாயங்களை மனிதனே  ஏற்படுத்துவான். இதற்கு நீங்கள் காரணம் ஆகாதீர்கள்.

காரணம் ஆகாதீர்கள் இறைவன் மீது குற்றம் சொல்லாதிருங்கள். 

சொல்லுங்கள் இனிமேலும் நாங்கள் நல் முறைகளாக வாழ்வோம் நல்லெண்ணத்தோடு வாழ்வேன்.

 பின் பொய் கூறாமை பின் நன்மைகள் தன்னைப்போலவே பிறரையும் எண்ணுவேன். அனைவரும் ஒருவரே அனைவரும் என் சொந்தங்களே என்று நினைத்து நினைத்தால் மட்டுமே விடிவெள்ளி உண்டு என்பேன் .

விடிவெள்ளி உண்டு என்பேன் இதனால் யானும் சொல்கின்றேன் மறைமுகமாகவே.

மறைமுகமாகவே உரைக்கின்றேன் இனிமேலும் கெடுதல்கள் எதன் மூலம் மனிதன் செய்கின்றானோ அதன் மூலமே அழிவுகள் நிச்சயம் உண்டு உண்டு இதனால் பல மாற்றங்கள் புவி உலகில் உண்டு இதனால் இறைவனும் சற்று மௌனம் சாதித்தால்  நீங்கள் நிச்சயமாய் அழிவுகளில் ஏற்பட்டு விடுவீர்கள்.

யான் சொல்கின்றேன் இனி மேலும் நீங்கள் தவறான பாதையில் செல்கின்றது நிச்சயம் என்றால் யாங்களும் கஷ்டங்களை நிச்சயம் நிறைய அள்ளி தருவோம் இதுவும் நிச்சயம் என்பேன்.

நோய்களையும் ஏற்படுத்துவோம் என்பேன்.

ஆனாலும் இதனையும் மனிதன் உணர தான் கடமையை செய்துவர எத்துன்பமும் வருவதில்லை மனிதனுக்கு. தன் துன்பத்தை நிச்சயம் இறைவன் துடைப்பான் என்பேன்.

அதை விட்டுவிட்டு மனிதனே ஒழுங்காக வாழ கற்றுக்கொள். இனிமேலாவது பிழைத்துக் கொள்.

ஏன்? நீயும் இருக்கின்றாய். மனைவியும் இருக்கின்றாள். ஏன் உன் பிள்ளைகளை பற்றியும் நினைத்துப் பார். சிறிதாவது நினைத்துப்பார் அப்பொழுது தெரியும் நீ தான் கர்மம் சேர்த்துக் கொண்டு இருக்கின்றாயே?  

இன்னும் உன் பிள்ளைகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் கர்மத்தை சேர்த்து வைக்க வைக்கின்றாயா? 

தெரிந்து கொள் வேண்டாம் இனிமேலும் நல் பாதையில் செல்க.

என்னுடைய நூல்களையும் நல் முறைகளாக ஓதுக.

அனைவர் இல்லத்திலும் ராமனின் கதை ராமாயணம் என்கின்றார்களே அதையும் வைத்துக்கொள்ளுங்கள் .கீதையையும் வைத்துக் கொள்ளுங்கள். வைத்துக்கொள்ள வைத்துக்கொள்ள நன்றே. 

அதன் மூலம் ஒவ்வொரு விஷயத்திலும் இறைவன் நல் முறைகள் ஆகவே சொல்லி வந்து கொண்டே இருக்கின்றான் இதனையும் பின் தாழ்வானதாக மனிதன் நினைத்தும் இன்னும் மயங்கி பின் கலியுகத்தில் மாய உலகத்தை நோக்கி தான் மனிதன் செல்கின்றான் .

அதனை யாவது யாங்கள் நிச்சயம் நிச்சயமாய் தடுப்போம் தடுப்போம் இவையன்றி கூட இனிமேலும் ஞானங்கள் நல் முறைகளாக நல் மனதாய் பிறப்பதற்கு ஒன்றே வழி கஷ்டங்கள் தான்.

கஷ்டங்கள் கொடுத்தால்தான் மனிதன் இனிமேலும் திருந்துவான்.

 ஆனாலும் இறைவனை சொல்லி இறைவன் பெயரைச் சொல்லி பின் பொய் பேசி புறம் கூறி பின் அவனவன் வாழ்வதற்கு அவன் பணத்தை சேமித்து கொண்டிருக்கின்றான்.

பணத்தை சேமித்ததை  விட அதனோடு கர்மாக்களையும் சேர்த்துக் கொள்கிறான் என்பதை அவனுக்கு தெரியவில்லை இதனால்தான் அறிவுள்ள முட்டாளே என்கின்றேன் மனிதனை.

இதனால் நல் முறைகளாக முதலில் நீ பிழைத்துக் கொள் பிழைத்துக் கொள் பின் இறைவன் நல் முறைகள் ஆகவே மனிதனை படைத்தான் எப்படி?

அப்படியே அவனுக்குத் தெரியும் மனிதர்களை காப்பாற்றுவதற்கு.

ஆனால் இவையன்றி நீயும் பிழைப்பதற்காக வே அதைச் செய் இதைச் செய் இவையெல்லாம் கூறிக்கொண்டே வந்துகொண்டிருந்தால் நீயும் கர்மத்தை சேர்த்துக் கொள்வாய் பின் உன் நிழலில் வருவோர் அனைவரையும் கர்மத்தின் பாதைக்கு எடுத்துச் செல்வாய்.

அதனால் இறைவனை நம்புங்கள் இறைவனை நம்புங்கள் இறைவனுக்கு நல் முறையாய் பின் இறைவனை தேடி அலையுங்கள். ஆனாலும் இறைவனின் ரூபம் எங்கு உள்ளது? என்பதைக் கூட மனிதன் காணவில்லை.

 பல பெரியோர்கள் உரைத்தும் விட்டனர்.

இறைவனை எங்கு வணங்குகின்றார்களோ அங்கு வருவான் நல் மனதாக இருந்தால் மட்டுமே.

இதனால் விதிவிலக்கும் உண்டு என்பேன்.

பின் வெளிச்சத்திற்கு வாருங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் மட்டுமே பிழைத்துக் கொள்வீர்கள் இனிமேலும்.

கர்ம பூமியில் 

கர்மா மனிதனை சுமந்து கொண்டிருக்கின்றதா?? 

இல்லை 

மனிதன் கர்மாவை சுமந்து கொண்டிருக்கின்றானா?? 

என்பதைக்கூட சந்தேகத்திலேயே திகழ்கின்றது .

 மனிதன் யோசிக்க.

புத்திகள் செயலாக்குக.

அறிவுகள் மேம்படுக.

அறிவுகள் கொடுத்தான் இறைவன். அவ்அறிவை ஒழுங்காக பயன்படுத்தியதே இல்லை மனிதன் இதனை பல சித்தர்களும் பல பல வண்ணங்களில் எடுத்துரைக்கின்றோம் .

ஏன்? அகத்தியனும் மனிதன் திருந்துவான்! திருந்துவான்! என்று

பூவுலகில் நிச்சயமாய் நின்ற பொழுதும் கூட பின் திரிந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறான்! அகத்தியனும்.

 இவ்வளவு மனிதன் கீழ்தரமாக உள்ளானே! என்று.

அகத்தியன் எப்பொழுதோ புவி உலகத்தில் வந்து இறங்கி விட்டான்.

மனிதனை நோக்கி பார்த்தால்!  ஆ!!?? இவ்வாறா?  மனிதன் இருக்கின்றான்! பொய் வேடமா! போடுகின்றான்! இவையெல்லாம் எண்ணும் பொழுது!

அகத்தியனுக்கே  மனம் பொறுக்கவில்லை அதனால்தான் அகத்தியனும் பின் தலைகுனிந்து  உட்கார்ந்து விட்டான்.ஓர் இடத்தில். பின் அவை எவ்வாறு என்பதை நிமிர்ந்து பார்த்தால் குற்றாலத்திலே இப்பொழுது கூட தங்கி இருக்கின்றான்.

அகத்தியன் என்பேன்.

இதனையும் நன்குணர்ந்து இனிமேலும் பைத்தியக்காரனாக திரியாதே மனிதனே எச்சரிக்கின்றேன் யானும் கூட இதனால் தான் உணர்ந்து உணர்ந்து யான் பல நூல்களை படைத்தேன். அதில் மனிதன் பல நூல்களை அழித்து விட்டான் .

அவ் நூல்களின் வழியாக சொல்லியதை யானும் மக்களுக்கு இனிமேலும் உரைப்பேன். அழிந்ததை இனிமேலும்.

ஆனாலும் மனிதர்கள் யாங்கள் எழுதியதை நல் முறைகளாக உண்மையானதை கலியுகத்தில் எப்படி நடக்கின்றது யார் காப்பார்கள் என்பதையெல்லாம் மனிதன் தெரிந்துகொண்டு பின் மனிதன் மனிதனே அழிய வேண்டும் என்று எண்ணி அதனையும் அழித்துவிட்டார்கள் பைத்தியக்கார மனிதர்கள்.

பைத்தியக்கார மனிதர்களே இனியும் திருந்துங்கள் வேண்டாம் வேண்டாம் என்பேன் எதனையும் நினைத்து.

இறைவனின் பலமே இங்கு அதிகமாகக் கூடிக்கொண்டிருக்கின்றது .

இதனால் மனிதனே யான் தான் இறைவன் 

யான் தான் இறைவன் யான் குரு என்றெல்லாம் மனிதன் இனிமேலும் தன்னைத்தானே போற்றி கொள்வான்.

அது பொய் அதுதான் பொய் அங்கேதான் கர்மம் ஆரம்பிக்கின்றது.

யான் தெரியாமல் கூறுகின்றேன் கூறுகின்றேன் இவையே என்று யான் முருகனை பார்ப்பேன்

யான் ஈசனை பார்ப்பேன் .

யான் அகத்தியனை பார்ப்பேன் யான் சித்தனை பார்ப்பேன்.

யான் ஏன் எதனை எதனையோ என்று யான் இறைவனை நேசித்த தோடு பார்ப்பேன் என்று ஆனால் இதனை எல்லாம் எதற்காக என்று தெரியுமா??

பணம் சம்பாதிப்பதற்கே! 

பணம் சம்பாதிப்பதோடு மட்டும் நின்று விடாமல் மனிதன் தன்னைத்தானே இழந்து கொண்டு.!

 மனிதா இப்பொழுது தெரியாது நீ செய்யும் செயல்கள்.

தெரிந்து கொள்!

மகனே மகளே என்று கூட அகத்தியன் அன்பாக உரைத்துக் கொண்டிருக்கின்றான்.

அப்பொழுது கூட அகத்தியனா? அகத்தியனா??

போனால் போகட்டும் எந்தனுக்கு பணம்தான் மூலாதாரம் என்று கூட சென்று கொண்டிருக்கின்றான் மனிதன்.

என்ன லாபம்??

லாபமில்லை கோடிகோடி மனிதர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் இவ்வுலகத்தில் பிறக்கின்றான் திருமணம் செய்கின்றான் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்கின்றான் கடைசியில் பார்த்தால் இறைவா பயமாக இருக்கின்றது என்று கதறுகிறான்.

முதலிலேயே நீ இறைவனை பிடித்துக்கொண்டால் இறைவனே அனைத்தும் தருவான் எடுத்துக்கொள் என்று.

இதனால் பயம் ஒன்றும் இல்லை ஆனாலும் மனிதனின் நிலைமையைப் பார்த்தால் தவறுகள் இனிமேலும்.

ஒருமுறையும் இனிமேலும் விளக்குகின்றேன் ஒருவர் இருவர் தனியாக சென்று தவறு செய்தாலே அது கர்மா நிலைக்கு சமம் ஆகின்றது தெரிந்து கொள்ளுங்கள் எதனை என்று கூட.

எதனை என்றும் நிற்கும் பொழுதும் கூட பலமுறையும் இனிமேலும் வருவார்கள் இன்னும் பொய்யர்கள் திருடர்கள்.

 திருடர்கள் இவர்களும் எப்படி.? கண்டுபிடிப்பது? என்பது கூட!

 ஈசனின் மறு வாக்கும் நல் முறைகளாக

இங்கேயே தன் காசிதனிலே (காசியில்) உரைப்பான் என்பேன். நல் முறைகளாக மக்களுக்கு.

ஈசன் அமைதியாக இனிமேலும் நடந்து கொண்டிருந்தால் உலகம் பொய்யாக கூடிவிடும். பின் ஆற்றில் அடித்துக்கொண்டே போய்விடும் இதனால் இன்னும் பல கஷ்டங்கள் பலப்பல மறைமுகமாகவே வரும்.

 இதனால் ஈசன் நிச்சயமாய் காப்பாற்றுவான் .

அவனுக்கு யாங்கள் எல்லாம் எத்தனை என்றும் கூற முற்படும் பொழுது எங்களுக்கும் தெரிவித்தான்!

 சித்தர்களே நீங்கள் மனிதரை காப்பாற்றுங்கள் என்று. 

ஆனால் மனிதனை போய் பார்த்தால் 

 எங்களை பின் (சித்தர்கள்) கீழ்தரமாக எண்ணி 

எங்கள் பெயரைச் சொல்லி நடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இது தகுமா??

என்று கூட சித்தர்கள் இல்லாமல் இல்லை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். பயம் வேண்டும் இனிமேலும் தவறு செய்யாதீர்கள் இறைவன் இருக்கின்றான் இறைவன் தண்டிப்பான் என்று கூட நினைக்க வேண்டும் நிச்சயமாக தண்டிப்பான் என்பேன் .பின் எதனை என்றும் கூட.

இவை போலும் இப்பொழுதும் கூட தண்டித்து கொண்டே தான் இருக்கின்றான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டுதான் வந்திருக்கின்றோம் நாங்கள் .

அதனால் மக்களே நீங்கள் ஒன்றும் ஞானிகள் இல்லை 

ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயம் பின் விடிவெள்ளி என்பேன்.

விடிவெள்ளி உண்டு என்பேன் இனிமேலும் பின் ஏமாறாதீர்கள் ஏமாந்து விடாதீர்கள் பின் இரவிலேயே மீந்து விடாதீர்கள். பகலுக்கும் வாருங்கள். பகலுக்கும் வாருங்கள்.

 இதனால் தான் அகத்தியன் அகத்தியன் என்று கூட இனிமேலும் அகத்தியனை பார்த்தால் என் பெயர் அகத்தியன் இப்படியெல்லாம் கூட மனிதர்கள் பொய்யான மனிதர்கள் பெயர் வைத்து திரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.

ஏன் ஏன் பல கோடி வருடங்களாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் இவ்வாறே அகத்தியன் என்ற பெயரை சொல்லி சொல்லி ஏமாற்றி ஏமாற்றி பெயரை மாற்றிக்கொண்டு இப்பொழுது அகத்தியன் பல அகத்தியன் என்று கூட பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் பின் பகலுக்கு ஒருவனே சூரியன்.

இரவுக்கு ஒருவனே சந்திரன்.

உலகத்திற்கு ஒருவனே அகத்தியன்.

மானிடா தெரிந்துகொள் ஏன் பித்தலாட்டங்கள்??

பிழைப்பதற்கு வேறு வேலை இல்லையா?? உந்தனுக்கு??

வேண்டாம் இனிமேலும் நல்வழிப்படுத்த மனிதனுக்கு மனிதன் முயற்சிகள் செய்ய வேண்டும் .

இவ்வாறு செய்க.

இவ்வாறு திருத்தலங்களுக்கு சென்று வாருங்கள் அங்கே நன்மையை செய்யுங்கள்.

சில மனிதர்களுக்கும் பின் இயலாதவர்களுக்கும் இருக்கும் உன்னிடத்தில் இருந்து நல் முறைகள் ஆகவே கொடுங்கள்.

இயலாதவனுக்கும் இல்லாதவருக்கும். நல் முறைகளாக.

பலகோடி எவ்வாறு என்பதையும் கூட ஜென்மங்கள் எடுத்தாலும் மனிதன் திருந்த போவதாக இல்லை ஏன் நல் மனதாக தூய உள்ளம் ஆக இருந்து விட்டால் ஏன் இறைவனைத் தேடி நீ அலையத் தேவையில்லை இறைவனே உன்னை தேடி வந்து நோக்குவான்.

இதனால் எங்கெங்கு சென்று எங்கெங்கெல்லாம் கர்மங்களை அழிக்க வேண்டும் என்பதைக் கூட அவனே உன் கையைப் பிடித்து இழுத்து அழைத்துச் செல்வான்.

 அதை விட்டு விட்டு பின் பிழைப்பதற்காகவே பின் இறைவனை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தால் 

நிச்சயம் கர்மாக்கள் உண்டு உண்டு உண்டு .

இதனால் பிறவிகள் உண்டு உண்டு உண்டு.

மனிதனே  யான் தான் பெரியவன் என்று நினைத்து விடாதே

யாங்களும் சித்தர்களும் இதன் மூலம் நன்கு உணர்ந்து தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோம் மறைமுகமாகவே.

யாங்கள் வந்துவிட்டால் யான் மூலன் (திருமூலர்)  என்று சொன்னாலும் 

ஓ !மூலனா??? என்று கீழேயும் மேலேயும் பார்ப்பார்கள் அதனால் தான் மறைமுகமாக மறைமுகமாக ஆனாலும் அகத்தியனும் இப்புவி உலகத்தில் வந்து பார்த்து திருந்துவானா?  என்றான் .

என்றெல்லாம் எதை எதையோ சொல்லிக்கொண்டு ஆனால் அகத்தியனுக்கே! பின் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்களே! மனிதர்கள் என்று பின் தலை குனிந்து உட்கார்ந்து விட்டான்.

மக்களே இனியும் உங்களிடமே இருக்கின்றது தகுதியானவை அனைத்தும் கூட. 

இதனால் சிறு பிள்ளை யிலிருந்து ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஈசனாரும் சொன்னார் என்பேன்.

அதனால் சிறு பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தாருங்கள் இப்போதுகூட இப்போதிலிருந்தே கொடுத்தால்தான் இனிமேலும் உலகம் அழியாது என்பேன்.

அழியாது என்பேன் ஆனாலும் 

இனிமேலும் இவ்வாறு உண்மைகளை சித்தர்களும் படையெடுப்பார்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த. இன்னும் ஆனாலும். இதனை அன்றி கூட 

கலியுகத்தில் முதலில் ஆபத்தாக வருபவை நோய்களே என்பேன்.

இதுதான் கலி யுகத்தின் ஆரம்பம் என்பேன்.

புரிந்துகொள்ளுங்கள் இறைவனை நாடுங்கள்.

அமைதியாக மௌனத்தை கடைபிடியுங்கள்.

ஏன் என் இறைவனே இறைவனே வணங்குவதற்கும் போட்டி பொறாமைகள். புத்திகெட்ட மனிதனே திருந்துங்கள்.

அனைவருக்கும் இறைவன் ஒன்றே என்பேன்.

பொறாமைக்காரர்களை

 யானே  நிச்சயம் தண்டிப்பேன் .

பின் அகத்தியனை வணங்கிக்கொண்டு ஏன்? மூலனை வணங்கிக்கொண்டு! ஏன்? போகனை (போகர்)  வணங்கிக்கொண்டு! ஏன் பல பல சித்தர்களை வணங்கி கொண்டு யான்தான் பெரியவன் யான்தான் பெரியவன் என்றெல்லாம் திரிந்து விடுகின்றீர்கள்.

பின் பொறாமைக்காரர்களே மனிதர்களை பொறாமைக்காரர்களே என்றுதான் யான் அழைப்பேன் . திரும்பவும்.

மனிதன் முட்டாளே யூகித்துக் கொள் பொறாமை வேண்டாம் பொறாமை வேண்டாம். 

மனிதனடா  நீ உன்னால் என்ன செய்ய முடியும்?? என்ன செய்ய இயலும்?

 பொறாமை படுவதைத் தவிர!

பொறாமை உன்னை அழித்து விடும் என்பதை கூட உந்தனுக்கு தெரியாத வண்ணமாக நிகழ்கின்றது .

வேண்டாம் பின் சித்தர்களை தூண்டினால் நிச்சயம் அடி பலமாக இருக்கும் என்பேன்.

சொல்லி விடுகின்றேன் எச்சரிக்கின்றேன் எச்சரிக்கையாக   சொல்லி விடுகின்றேன் காசி தன்னிலே! 

இனிமேலும் நீங்கள் இவ்வாறு போட்டி பொறாமைகள் கொண்டு யான்தான் பெரியவன் யான்தான் பெரியவன் என்று கூறிக்கொண்டே இருந்தால் நிச்சயம் அதி விரைவிலேயே அழிவுகள் உண்டு மனிதனே.

அதனால் உந்தன் நாக்கே உந்தனக்கு பகையாகி விடும் என்பேன்.

அதனால் அனைத்தும் பெரியவர்களே!  என்ற எண்ணத்திற்கு அனைவரும் வரவேண்டும்.

தன் போல மற்றவரை எண்ண வேண்டும் எண்ண வேண்டும் என்பேன்.

பொறாமைக்கார மனிதனே! தேவையா? இது?

யான் காறியும் துப்புவேன்! இனிமேலும் மனிதனை.

ஏன் ?இறைவன் இல்லாததையும் கூட ஏன்? சித்தர்கள் மறைமுகமாக இருப்பதை எண்ணி இவ்வாறு பல வாக்குகளை யான் சொல்லிக் கொண்டு இருந்தால் சித்தர்களுக்கா? தெரிய போகிறது?  இறைவனுக்கா? தெரியப்போகிறது?

என்றெல்லாம் பொய் பேசி புறம் கூறி நல்லோர் போல் நடித்து நன்றி கெட்ட மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் எங்கள் பெயரை சொல்லி.

ஆனாலும் இனிமேலும் இவ்வாறே பிழைத்துக்கொண்டிருந்தால் வரும் காலங்களில் அதி விரைவிலேயே இறைவனும் பொய் சித்தனும் பொய் என்ற நிலைமைக்கு வந்து விடுவார்கள் என்பேன்.

அதனால் பொய்யான பக்தியை காண்பிக்கவே வேண்டாம் என்பேன்.

ஒன்று நீ திருந்து இல்லையென்றால் அமைதியாக உட்கார்ந்து விடு.

இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.

பொய்கள் எல்லாம் கூறி இவன் ஞானி போல் நடிப்பான் என்பேன்.

 தான் தான் ஞானி தான் தான் சித்தன் தான் எண்ணுவதெல்லாம் சிறப்பு என்றெல்லாம் கூட மக்களை மயக்கி கடைசியில் பார்த்தால் அவன் கர்மா அவனை விட்டு விடாது.

பல நோய்களுக்கு ஆட்பட்டு பின் மறைந்து விடுகின்றான்.

ஆனால் அவனுடைய கர்மா பின் அவந்தனை  அனுபவித்துவிட்டு இவன் பெயரை எவ்வாறு இவன் தன் யார் யார் மக்களுக்குச் சொன்னார்களோ இக் கர்மம் அவர்களுக்கும் சேர அவந்தனும் அழிந்து போவான் என்பேன்.

இதனால் கடைசியில் இறைவா இறைவா என்று வருவது நியாயமா?

அதனால் மனிதன் திருந்தி கொண்டால் மட்டுமே உண்டு என்பேன்.

இனிமேலும் பின் சபதத்தை ஏற்க வேண்டும் .

தன்னைப்போலவே பிறரை எண்ண வேண்டும்.

யான் தான் பெரியவன் என்று எண்ணக்கூடாது. என்பேன்.

யான் தான் சிவனின் மகன் யான் தான் அகத்தியன் மகன் யான் தான் சித்தர்களின் மகன் என்றெல்லாம் பொய் கூறி திரிந்துவிடக் கூடாது.

நீங்கள் அவ்வாறு சொன்னாலும் யாங்கள் ஏற்றுக் கொள்வதுமில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

பின் அவ்வாறே சொல்லுங்கள் ஏன்?

உந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றது?? அகத்தியன் பிள்ளை என்றால் ஏன்? உந்தனுக்கு கஷ்டம் வருகின்றது??

எண்ணிப்பார் மனிதனே முட்டாள் மனிதனே அறிவுள்ள முட்டாள் மனிதனே

எண்ணிப் பார்

 காறித் துப்புவேன் இவை போன்று செயல்பட்டால். 

காறித் துப்புவேன்  இவை போன்றும் கூட

முறைகளாக செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள் 

வேண்டாம். அடுத்த வாக்கும் கூட  இக் காசி தனிலே நிச்சயமாய் ஓர் முறை ஈசனும் உரைப்பான். 

இன்னொருமுறை பதிகம் பாடி துதித்து நல் முறைகள் ஆகவே.

 என்று கூட சொன்னாலும் மனிதனுக்கு வெட்கமில்லை வெட்கம் இல்லை என்பேன்.

 போட்டி பொறாமைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.

என்ன ?லாபம்? என்ன? லாபம்? 

மனிதன் இவ்வாறே செய்து கொண்டு இருந்தால் வீணாகவே போய்விடுவான் ஏன்? 

இவன் மட்டும் வீணாக போவதில்லை அவனைச் சுற்றி இருப்பவர்களும் வீணாக போய் விடுமாறு செய்து விடுகின்றான்.

ஏனிந்த? மறைமுகமான போராட்டங்கள் போராட்டங்கள்.

வந்தோமா இறைவனை வணங்கினோமா இவ்வுலகத்தில் இருந்து சென்று விட்டோமா என்று இல்லாமல் மனிதன் பொய் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கின்றான்.

மனிதனே தவறு நீ எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் பொய் கணக்கு.

இறைவன் எண்ணும் எண்ணங்கள்தான் மெய்க்கணக்கு. 

இனிமேலும் திருந்துவதாக நீங்கள் இல்லை என்றால் நிச்சயம் யாங்களே தண்டிப்போம் கஷ்டங்களைக் கொடுப்போம் கொடுப்போம் கொடுப்போம்

அப்போதாவது நீங்கள் திருந்துவதற்கான வழிகள் உண்டா? என்று 

உண்டு .

நல் முறை தீயமுறை இவையெல்லாம் எவ்வாறு வருகின்றது என்பதெல்லாம் மனிதன் மனிதன் உணர்ந்து கொண்டு நன்றாக செயல்பட்டாலே இனியும் விடிவு காலம் பிறக்கும் பிறக்கும் .

அடுத்த திங்களும் (மாதமும்)  நமச்சிவாயம் உரைப்பான்.

சித்தன் அருள் ......... தொடரும்!


Friday, 1 October 2021

சித்தன் அருள் - 1039 - அன்புடன் அகத்தியர் - சிவன் வாக்கு -காசி!

 

1/10/2021 பிரம்மமுகூர்த்தத்தில் காசி கங்கைகரையில் - உலகையாளும் பரமேஸ்வரன் பார்வதி தேவியின் கேள்விகளுக்கு   உரைத்த பொது வாக்கு
 
வாக்குரைத்த ஸ்தலம்: காசி. கங்கைகரை.

படைத்தல் காத்தல் அழித்தல் முத்தொழிலும் செய்யும் என் தேவனே மனதில் நன்றாக துதித்து சில கேள்விகளை நாட்டுகின்றேன் பார்வதி தேவி.

தேவனே இவ்வுலகத்தில் என்னென்ன இனியும் நடைபெறும்?

தேவியே பின் அநியாயங்கள் அக்கிரமங்கள் பித்தலாட்டங்கள் இன்னும் பலவகையான தரித்திரங்கள் எல்லாம் இனிவரும் காலங்களில் நடந்தேறும் என்பேன்.

தேவனே இதனையும் தடுக்க யாரிடம் சக்தி உள்ளது??

சொல்கின்றேன் தேவியே மனிதனிடத்தில் சக்திகள் இருக்கின்றது ஆனாலும் இதை உணரவே இல்லை மனிதன்.
மனிதன் பைத்தியக்காரனாகவே திரிந்து கொண்டிருக்கின்றான் இவ்வுலகில்.
இவ்வுலகில் என்று யான் எடுத்துச் சொல்வேன்.

மனிதனாலே அழிவுகள் வரும் என்பேன்.
இதனால் மனிதன் ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் பொய் கூறாமை இருக்க வேண்டும் நன்மைகளை செய்ய வேண்டும் தானங்களைச் செய்ய வேண்டும் இவையெல்லாம் செய்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் மனிதன் பிழைப்பதற்கான வழிகள் என்பேன்.

தேவனே! ஏன் இன்னும் மனிதனின் செய்கைகள் மாறவில்லை??

சொல்கின்றேன் தேவியே!
சில மனிதர்கள் பணத்தை தேடி.
சில மனிதர்கள் பெண்ணை தேடி.
 சில மனிதர்கள் எதை எதையோ தேடி தேடி இப்படியே அலைந்து திரிந்து அதனாலே அழிவுகள் பெற்று பின் கடைசியில் நமச்சிவாயா என்று என்னையே அழைக்கின்றனர் பின் இப்பொழுது இப்படி எல்லாம் மனிதன் செய்துவிட்டு பின் மனிதனே அழிவுகள் ஏற்படுத்திக்கொண்டு பின்  திரும்பவும் என்னிடத்தில் வந்து விடுகின்றான்.

தேவாதி தேவனே!
நீயும் அவர்களுக்கு நன்மைகள் செய்யக்கூடாதா??

தேவியே!
ஆனாலும் யான் ஒவ்வொரு முறையும் பிரம்மாவிடம் எடுத்துச்சொல்லி பின் பிறப்பின் ரகசியத்தை கூறி பிறப்புக்களை நன்றாகவே படை என்று கூறிவிட்டு கூறிக்கொண்டே தான் ஆனாலும் இதனையும் மனிதன் உணர்வற்ற செயலுக்கு எடுத்துச்சென்று ஆனாலும் பிரம்மா மனிதனை நல் விதமாக படைத்துப் படைத்து தன் வேலையை சரியாக செய்து வருகின்றான் ஆனாலும் படைக்கும் பொழுது நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் குழந்தை ஈன்றெடுத்து பின் குழந்தை நன்றாகத்தான் வளர்கின்றது வளர்கின்றது ஆனாலும் வயது ஆக ஆக சில கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழ்ந்து விடுகின்றனர் இதனால்தான் மனிதன் அழிந்து விடுகின்றான். ஏனெனில் யான் கூட துணை இருந்து கொண்டேதான் இருக்கின்றேன் ஆனாலும் இவன் செய்கைகள் இவனையே அழித்து நொறுக்குகின்றது என்பேன்.

தேவாதி தேவனே இன்னும் வரும் கால கட்டங்களில் இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது??

தேவியே
தாய் தந்தையரை தன் குழந்தை எவ்வித  பேச்சையும் கேட்க போவதில்லை ஒழுக்கமற்று வாழ்வார்கள் ஒழுக்கமே அழிந்துபோகும் இவ்வுலகத்தில் வாழ்வோருக்கு துன்பங்கள் அதிகமாகும் ஆனாலும் இதை போக்குவதற்கு பலப்பல திருத்தலங்களும் உள்ளது. அங்கெல்லாம் சென்று தானதர்மங்கள் செய்தாலே போதுமானது.

தேவாதி தேவனே!! அத் திருத்தலங்களை பற்றி பற்றி எடுத்துரைக்குக !

சொல்கின்றேன் தேவியே!

முதலில் திருவாரூர் நன்கு செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது அங்கே தானங்களும் இட வேண்டும்.
ராமேஸ்வரத்திற்கு சென்று அங்கும் பல தானங்கள் செய்ய வேண்டும் பின் காசியிலும் கங்கையில் நீராடி அங்கே பல தானங்களும் செய்யவேண்டும் அண்ணாமலை என்று என்னுடைய பெயரை சொல்கின்றார்களே அங்கேயும் வலம் வந்து பல தானங்களை செய்ய வேண்டும். செய்ய வேண்டும் இதனையும் பல திருத்தலங்கள் உள்ளன அங்கெல்லாம் சென்று இயலாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே இக்கலியுகத்தில் மோட்சம் கிடைத்து நல் முறையாக நல் முறையாகவே மற்ற பிறவிகள் இல்லை. இல்லை தேவியே!.

தேவாதி தேவனே இங்கே எல்லாம் மனிதர்கள் செல்லப் போவது இல்லை ஏனென்றால் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தான் மனிதர்கள் செல்வான் என்பேன்??

தேவியே செப்புகின்றேன்! மனிதனுக்கு கஷ்டங்கள் வருவது இயல்பே!

இதனால் கஷ்டங்கள் பட்டு பட்டு பின் இவைகளையெல்லாம் வணங்கி விட்டால் அவன் தனக்கு நேரடியாகவே யான் தரிசனம் கொடுப்பேன் கலியுகத்தில் நினைத்தாலே என் பெயரை நமச்சிவாயா என்று சொன்னாலே நிச்சயம் விடிவெள்ளி உண்டு உண்டு உண்டு.

தேவாதி தேவனே ஏன் உன் பெயரை பலமுறை மனிதர்கள் உச்சரித்து தான் கொண்டு வந்திருக்கின்றனர் ஆனாலும் நீ ஏன்?? அவ் மனிதர்களுக்கு கஷ்டங்கள் கொடுக்கின்றாய்??

தேவியே செப்புகின்றேன்!

மனிதன் நன்றாக வாழ வேண்டும் என்பதே எனது கடமையாகவே யான் செப்புகின்றேன். மனிதன் ஒழுங்காக வாழ்வது இல்லை திருட்டு பொய் களவு பொறாமை ஒழுக்கம் இல்லாமை இவையெல்லாம் செய்துகொண்டே நமச்சிவாயா என்று அழைக்கின்றான் இது தகுமா? அவந்தனக்கு !. அதனால் தான் எந்தனக்கும் கோபம் வருகின்றது தேவியே!.

தேவனே

படைக்கும் தொழில் பிரம்மா தொழிலையும் நல் முறைகள் ஆகவே அவன் தன் இஷ்டத்திற்கு படைத்துக் கொண்டே இருக்கின்றான் இவ்வுலகில், இதை எவ்வாறு தடுப்பது??

தேவியே இதனை தடுக்க முடியாது கர்மங்களுக்கு ஏற்பவே பிறந்துகொண்டே வந்து கொண்டிருக்கின்றான் அதனால் பின் பல சித்தர்கள் இவ்வுலகத்தில் தோன்றி புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய் என்றெல்லாம் மனிதர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். ஆனாலும் மனிதன் இப் பேச்சைக் கேட்பதே இல்லை இதனால்தான் பிரம்மாவிற்கும் இனிவரும் காலங்களில் படைப்புத் தொழில் அதிகமாக உள்ளது என்பேன் புண்ணியங்கள் புண்ணியங்கள் செய்க !செய்க! என்றெல்லாம் கூறி சித்தர்கள் இப்புவி உலகத்தில் உலாவந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மனிதன் திருந்தப் போவதாகவே இல்லை. அதனால் பிறப்பிற்கு காரணம் பிரம்மாவா?? தேவியே!  மனிதன்தான் காரணம் என்பேன்.

தேவாதி தேவனே இவ்வளவு மனிதர்களுக்கு பார்த்தால் இன்னும்கூட துன்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது எவ்வாறு? நிறுத்துவது? அதை?

சொல்கின்றேன் தேவியே !
பணம் பணம் என்று மனிதன் போய்க் கொண்டிருக்கிறான் அதை முதலில் நிறுத்த வேண்டும் படைக்கும் முத்தொழிலின் அதிபதியாகிய யான் மனிதனுக்கு என்ன தேவை என்று என்னால் தீர்மானித்து கொடுக்க முடியும். ஆனால் மனிதனே நான் தான் இவ்வுலகத்தில் ராஜா என்று பின் சில மனிதர்கள் பணத்தை தேடி சில மனிதர்கள் பெண்களை தேடி சில மனிதர்கள் பல பலவற்றையும் தேடித்தேடி திரிகின்றனர் ஆனாலும் இவையெல்லாம் நியாயமா?

தேவாதி தேவனே!

ஆனாலும் மனிதனுக்கு ஆசைகள் இவற்றின் மேலே உள்ளது இவற்றின் மூலம் உள்ளது இதனை எவ்வாறு மாற்றி அமைப்பது???

தேவியே செப்புகின்றேன்!.
மனிதனின் தன்மைகள் மாற இவையெல்லாம் மாற்ற முடியாதது மாற்ற முடியாதது ஆனாலும் இறை சக்தியால் மாற்ற முடியும் மாற்ற முடியும்.
 தியானங்கள், சிலசில திருத்தலங்களுக்குச் செல்லுதல், பலவகைகளில் பல வழிகளில் நன்மைகள் செய்தல், இவையெல்லாம் செய்துகொண்டு வந்தாலே போதுமானது. சீரும் சிறப்புமாகவே வாழலாம்.

மனிதனுக்கு புத்திகள் வரும் காலங்களில் பின் மிகவும் தாழ்வுடமையாகத்தான்  இருக்கும்.

தேவாதி தேவனே எதனையும் இவ்வுலகத்தில் நடக்கும் என்கின்றானே?! மனிதன், மனிதன் சொல் பலிக்குமா???

தேவியே இவையெல்லாம் பலிக்காது என்பேன் என்னைவிட மீறிய சக்திகள் இவ்வுலகத்தில் எதுவும் இல்லை.
ஆனாலும் மனிதன் அவை செய்து தருகின்றேன் இவை எல்லாம் நடக்கும் அதெல்லாம் நடக்கும் என்று கூட தன் பொய் நாக்கினால் எடுத்துரைக்கின்றான். ஆனாலும் கடைசியில் கர்மா அவனையும் விட்டுப் போவதில்லை பின் நிற்கும்பொழுது இவனையும் சொல்பவனும் அழிந்துவிடுகின்றான் செய்பவனும் அழிந்து விடுகின்றான். இதனால் என்ன லாபம்??.

தேவாதி தேவனே இன்னும் இக்கலியுகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது???

மனிதன் மனிதனையே அழித்து விடுவான் ஒழுக்கம் இல்லாமல் வாழ்வார்கள். சிறுவயதிலேயே கெட்டுப் போவார்கள் இறைவன் புத்திக்கு வரமாட்டான் தீய எண்ணங்களே புத்திக்கு வரும்.
தாய் தந்தையரை மதிக்கமாட்டார்கள். தாய் தந்தையர் சொற்களையே மீறுவார்கள்.
குரு சொல்வதையும் மீறுவார்கள். இறைவன் சொன்னதை எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஏன்? இக்கலியுகத்தில் நேரில் யான் சென்றாலும் நீயா ஈசன்? என்று நகைத்து விடுவார்கள்! தேவியே.

தேவாதி தேவனே இன்னும் நீ எப்படி  இவ்வுலகத்தை காப்பாய்??

தேவியே சொல்கின்றேன்  பல ஞானியர்களை யான் அனுப்பி வைத்தேன் . பல பலப்பல உண்மைகளை உண்மையான ஞானியர் களும் பிறந்தனர் ஆனாலும் அவர்களும் மனிதர்களுக்கு நல் முறைகள் ஆகவே பல சொற்களை எடுத்துரைத்தனர். ஆனாலும் மனிதன் திருந்துவதாக தெரியவில்லை. இன்னும் பல கஷ்டங்களில் மனிதர்களுக்கு கஷ்டங்கள் மிகுந்து காணப்படுகின்றது அவையெல்லாம் ஓட ஒன்றே பக்தி பக்திக்கு வந்தால்தான் இவையும் பிறந்து சிறந்து விளங்குவதோடு மனிதர்களுக்கு பெருமை சேர்க்க முடியும்.

தேவனே !
இனிவரும் காலங்களில் மனிதர்களை யார்? காப்பது?

சொல்கின்றேன் தேவியே!

முதலில் காப்பது அகத்தியனே!
அகத்தியனே  என்பேன். பின் இதனை அறிந்து யான் அகத்தியனிடம் சென்றேன்.
அகத்தியனே! நீ ஓடோடிச் இவ்வுலகத்தை  காத்துக் கொண்டிருக்கின்றாய்!
ஆனாலும் மனிதர்கள் உன் பெயரை சொல்லி ஏமாற்றி ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்களே.
ஏன் அவர்களுக்கு திரும்பவும் நீ நல்லதே செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்கும்போது!
அகத்தியன் ஒரே வார்த்தை சொல்லி விட்டான்
 பிழைத்தால் பிழைக்கட்டும் என்று.
ஏன்? அப்படியாவது நன்றாக வாழட்டும் என்று.

யானும் கூறினேன் அகத்தியனிடம்.
இவை ஆனால் மனிதனக்குள் மனிதன்களுக்கு போட்டிகள் .
ஆனால் மனிதர்கள் சித்தர்கள்  இடையே போட்டி போடுவது சரியா?
அதனால் அகத்தியனும் சொன்னான் அவந்தனக்கு  கர்ம பலம் அதிகம் உள்ளது அதனால் தான் சித்தர்களிடமே போட்டிபோட்டு கொண்டிருக்கின்றான். இது அழிவிற்கு சமமானது.
ஆனாலும் என் கருணை மனம் பின் பிழைத்துக் கொள்ளட்டும் பிழைத்துக் கொள்ளட்டும் என்றே கூறுகின்றது. இவையும் சொல்லிவிட்டான் சித்தர்கள் வரும் காலங்களில் நல் வழி களாகவே எடுத்துரைப்பார்கள் மனிதர்களுக்கு. மனிதர்கள் வழியை பின்பற்ற வில்லை என்றால் பின் கஷ்டங்களை மிகுதியாக கொடுப்பார்கள். இப்பொழுதே தொடங்கிவிட்டான்  அகத்தியன் மனிதர்களுக்கு கஷ்டங்களை கொடுப்பதற்கு.
ஏன் ?

அகத்தியன் அகத்தியன் என்று பெயரைச் சொல்லி ஏமாற்றுவதற்கா? பிழைப்பதற்கா?

சரி இன்னொரு கேள்வி கேள்  தேவியே!

தேவாதி தேவனே! படைத்தல் தொழிலையும் காக்கும் தொழிலையும் அழித்தல் தொழிலையும் ஓர் ஒருவராக கூ நன்றாக செய்கின்றீர்களே ஆனாலும் ஏன்? உன்னை நம்பியவர்களுக்கு பல துன்பங்கள் வருகின்றது?

தேவியே இதனையும் யான் உரைத்தேன் முத்தொழிலுக்கும் நீயே சொன்னாய் யான் அதிபதி என்று என்னால் காக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் படைக்கவும் முடியும் ஆனால் அதற்கு தகுந்தார்போல் மனிதன் இருக்க வேண்டும்.  ஆனால் மனிதன் தன்மை இல்லையே? தேவி!.

தேவாதி தேவனே கலியுகத்தில் வரும் காலங்களில் என்னென்ன?? கஷ்டங்கள் நிகழப் போகின்றது??

சொல்கின்றேன் தேவியே மனிதனுக்கு தெரியாத நோய்கள் வரும்.
நோய்கள் வரும் அதனை சிறிது சிறிதாக தன் குடும்பத்திற்கே வரும் இவைபோன்றவை தான் கலியுகத்தில் வரும் என்பேன். மற்றவை ஆனாலும் கலியுகத்தில் எதனைத்தேடி? செல்கின்றோமோ!
அதனாலும் கவலைகள் வரும் என்பேன்.
பணத்தைத் தேடி சென்றால் அதன் மூலமே நிச்சயம் அழிவான்.
பெண்ணைத் தேடிச் சென்றால் அதன் மூலமே நிச்சயம் அழிவான்.
நிச்சயம் அழிவான் எதனை எதனையோ தேடி.
எதனை எதனையோ தேடித்தேடி இறைவனை தேடுவதில் மனிதன் தயங்கிவிடுகின்றானே !இதுதான் மனிதனுக்கு அழிவு.

தேவாதி தேவனே எப்படி எப்படி சிறுவயதிலேயே இறைவனை காண முடியும்??

தேவியே செப்புகின்றேன் . சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் தன் பிள்ளைகளை இறைவன் இருக்கின்றான் என்று வளர்க்க வேண்டும் வளர்க்க வேண்டும் என்பேன்.

சரி முறையாக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென்று ஊட்டி ஊட்டி வளர்க்க வேண்டும்.
உணவை ஊட்டுவதை விட ஒழுக்கத்தை ஊட்ட வேண்டும்.
ஏனென்றால் சிறுவயதிலிருந்தே ஒழுக்கம் தவறி வாழ்கின்றனர் இதனால்தான் அவந்தனை   அவந்தனே  அழித்துக் கொண்டிருக்கிறான்.
வரும் காலங்களில் ஏன் சிறுவயதிலேயே அழிந்து விடுவான் பின் அனைத்தும் இவ்வாறு நடந்து விட்டதே என்று இறைவனை நினைத்து என்னிடத்தில் வந்தால் யான்  கூட எப்படி செய்வது??

தேவாதி தேவனே!
இவ்வளவு சொல்கிறாயே? ஏன்? அவந்தனை நீ மாற்றக் கூடாதா??

சொல்கின்றேன் தேவியே !
என்னால் மாற்ற இயலும் . ஆனாலும் சிறிது இவனை விட்டு விடுகின்றேன் இவன் என்ன செய்யப் போகிறான்? என்று!இவள் என்ன செய்ய போகிறாள் என்று!
ஆனாலும் ஒழுக்கத்திற்கு கீழாகவே கீழ் பிறவியாக வே இளைஞர்கள் நடந்து கொண்டு நடந்து கொண்டு பின் அழிவை அவர்களே தேடிக்கொண்டு தேடித்தேடி அலைந்து அழிந்து போகின்றார்கள்.
இதனால் யானும் மீட்டெடுக்க பின் மனதை மாற்றும் பொழுது கூட ஆனாலும் விடுவதில்லை ஏன் என்று கூட.

சரி போகட்டும் தேவனே! வரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும்?? மனிதன் சரியாக வாழ்வதற்கு??

தேவியே சொல்கின்றேன் கலிகாலம் முற்றிக் கொண்டே வருகின்றது அதனால் பொறாமைகள் போட்டிகள் மது மாது சூது இவையெல்லாம் செய்து கொண்டுதான் மனிதன் வாழ்வான்.

இறைவா என்பான் மறைமுகமாக போடா என்பான்.

இறைவனே நேரில் வரும்பொழுது நீயா இறைவன் என்று நகைப்பான்.

அதனால் தான் அகத்தியனும் மறைமுகமாகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றான்.

அனைவரும் இவ்வுலகத்தில் அகத்தியனை நேசிக்கும் அளவிற்கு அகத்தியனே மனம் திருப்பி விடுவான்.

ஆனாலும் அகத்தியனே  நேரடியாக வந்து மனிதா!
 யான்  அகத்தியன் என்று சொன்னால் மனிதர்கள் நம்பிவிட மாட்டார்கள் .
ஏன் என்று தெரிந்து கொள் .
அப்பொழுது எதற்காக வணங்குகிறார்கள் என்று.

எல்லாம் வேஷம் தான்.

தேவாதி தேவனே! விடிவுகாலம்! இல்லையா? இவ்வுலகத்திற்கு?

தேவியே !
உண்டு என்பேன்.
பொய் கூறுதல் கூடாது .
தன் கஷ்டத்தால் வாழவேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தில் சிறந்தவையாக இருக்க வேண்டும்.
சிறுவயதிலிருந்தே பக்தியை கடைப்பிடிக்க வேண்டும்.

என்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிரும் எந்தனக்கு சொந்தமானது.
அவையெல்லாம் பின் அவை தன்னில் அழிவை மனிதனால்
அதனை அழித்து விடக்கூடாது.

இவ்வாறே செய்து வந்தால் நிச்சயம் மாறும் நிலை.

தேவாதி தேவனே அதிகாலைப் பொழுதில் பல கேள்விகளை உன்னிடத்தில் யான் கேட்டு விட்டேன்.

ஒரு கேள்விக்கு விடை சொல்!

உலகம் மாறுமா? மாறாதா?

தேவியே !
நிச்சயம் மாறாது மனிதன் மாறினால்தான் மாறும்.

தேவாதி தேவனே!

அனைத்து செயல்களும் செய்கின்ற நீயே இவ்வாறு கூறலாமா??

தேவியே யானும் பலப்பல வழிகளில் மக்களுக்கு நன்மைகளை செய்ய துடிக்கின்றேன் ஆனாலும் மனிதன் அனைத்துமே தீய செய்கைகளால் செய்துவிட்டு திரும்பவும் என்னிடத்திலே வந்து என் பெயரையே உச்சரிக்கின்றான். நமச்சிவாயா நமச்சிவாயா என்று.!

எந்தனுக்கு கோபம் சற்று மிகுதியாகவே காணப்படுகின்றது.

தேவாதி தேவனே! கோபம் மனிதர்களுக்கு வருவதெல்லாம் எவ்வாறு??

செப்புகின்றேன் தேவியே!

ஒரு மனிதனுக்கு கோபம் வந்துவிட்டால் அவன் அனைத்திற்கும் அடிமையாவான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுதே கூறுகின்றேன்.
இதனை நிச்சயமாய் மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் அனைத்திற்கும் அடிமை என்பேன் தீய செயல்களுக்கும்.
இதனை நன்கு உணர்ந்து கொண்டால் சிறப்பு என்பேன்.

கண்டுபிடித்துவிடலாம் இவன் பொய்யானவனா? வேடதாரியா?என்று.

சித்தர்கள் பெயரைச் சொல்லி என் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் சிறுது அவனிடத்தில் சென்று பின் ஏதாவது அவனிடத்தில் பழகினால் அவனுக்கு எப்பொழுது கோபம் வந்துவிட்டதோ அங்கேயே  ஆணவம் தாண்டவமாடும்.

தாண்டவமாடும் பொய் பித்தலாட்டங்கள் செய்கின்றான் என்பதை உணர்க.

என்னுடைய அடியார்களுக்கும் சித்தர்கள் அடியவர்களுக்கும் சித்தர், அகத்தியரை வணங்குபவர்களுக்கு கோபங்கள் நிச்சயம்
வரக்கூடாது வரக்கூடாது வரக்கூடாது என்பேன்.

அதை மீறி வந்தால் அவன் பொய்யானவனே.

தேவாதி தேவனே!

அகத்தியன் பாவம் புவி உலகத்தில் அலைந்துகொண்டு இருக்கின்றான்.
மனிதர்களை நம்பி! நம்பி நம்பி அகத்தியனும் நன்மை செய்யலாமே என்று எண்ணி எண்ணி எண்ணி புவி உலகத்தில் வலம் வந்து மக்களை காப்பாற்றி கொண்டிருக்கின்றான்.

தேவியே சொல்கின்றேன்.
அகத்தியனும் புவி உலகத்திலே நடமாடிக் கொண்டிருக்கும் பொழுது

அகத்தியனை கூட ஒரு விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் மனிதன்.

அகத்தியனை மட்டும் வணங்கவில்லை.

மந்திரம் தந்திரம் மாந்திரீகம் இவையெல்லாம் மனிதன் சென்று விட்டு அதன்மூலம் அழிவைத் தேடிக் கொண்டு கடைசியில் அகத்தியா என்று கூட வருகின்றனர்.

ஆனால் அகத்தியனே அங்கு சென்று மௌனத்தை காத்து விடுகின்றான்.

சொல்கின்றேன் தேவியே!

இவ்வுலகத்தில் என்னைவிட மீறிய சக்திகள்
இல்லை
இல்லை
இல்லை... அதனை விட்டுவிட்டு மற்றவைகளிடம் தேடிச் சென்றால்
அதன் மூலம் நிச்சயம் அழிவுகள் உண்டு. தேவியே.

தேவாதி தேவனே அனைத்திற்கும் விடை அளித்தாய் இன்னும் இன்னொன்று கேட்க போகின்றேன்

மனிதர்களுக்கு துன்பங்கள் எப்பொழுது வளராது??

சொல்கின்றேன் தேவியே
மனிதன் இதையும் தாண்டி ஒழுக்கமுடன் தியானங்கள் யாருக்கும் தீங்கு செய்யாமல் பிறர் துன்பத்தை தன் துன்பமாக எடுத்துக்கொண்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளித்து கொண்டு முதலில் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தால் சீரும் சிறப்புமாக வாழலாம்.
யான் நல் முறைகளாக படைத்தும் இப்போவே உலகத்திற்கு அனுப்பும் பொழுது மனிதனே தன் அழிவைத் தேடிக் கொண்டிருக்கையில்
எவ்வாறு நிச்சயம்?
ஆனாலும் யானும் கருணை உள்ளவன் தான்.
கருணை உள்ளம் கொண்டவன் தான். நமசிவாயா என்று என்னை அழைத்தாலே ஓடோடி வந்து விடுகின்றேன்.

அவனை மாற்றலாமா என்று எண்ணும் பொழுது அவன் பல தீய செய்கைகளை செய்து கொண்டு வருகின்றான் இதனால்தான் யானும் மௌனத்தை காக்க முடிகின்றது.

வரும் காலங்களில் மனிதன்தான் இவ்வுலகத்தை நிச்சயமாய் ஆட்சி செய்கின்ற எண்ணம் நிகழ்கின்றது. அதனை நிச்சயமாய் யானே தடுப்பேன் என்பேன்.
மனிதனுக்கு தன்னால் அனைத்து செய்ய முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது. அதனால் இன்னும் சில வழிகளில் கஷ்டங்கள் நிச்சயமாய் யான் கொடுக்க போகின்றேன். தெரிந்து கொள்ளுங்கள். இதனை பிரம்மா வும் தடுக்க முடியாது விஷ்ணுவும் தடுக்க முடியாது வேறு எவ் சக்தியாலும் தடுக்க முடியாது. முடியாது என்பேன் தேவியே எச்சரிக்கின்றேன் மனிதர்களை.

நல் முறையாக கடமைகளுடன் செயல்படுக.

தன் கடமைகளை ஒழுங்காக செய்க செய்து கொண்டே வந்தால்  நலமாகும். அதைவிட்டுவிட்டு
வீணாக ஏமாற்றுதல், பித்தலாட்டம் ,
பிறரை கவருதல்.
பிறர் துன்பங்களுக்கு ஆளாகுதல். இவைகளெல்லாம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் கஷ்டங்கள் ஏற்படுத்துவேன்.

என் மகன் அகத்தியன் பெயரைச்சொல்லி ஏமாற்றித்திரிபவர்களை யான் நிச்சயம் அழிப்பேன் அழிப்பேன்
அழிப்பேன்! பொய் பித்தலாட்ட மனிதர்களே திருந்துங்கள்.

திருந்தா விடில் யான்  அழிப்பேன்.

இன்னும் சொல்கின்றேன் பின் அகத்தியன் பெயரைச்சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு நல் முறைகளாக யான் கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே
வந்து கொண்டிருக்கிறேன்.

புத்திகெட்ட மனிதனே இன்னும் திருந்த வில்லையா
நிச்சயமாய் திருந்துங்கள் திருந்துங்கள் என்பேன்.

உங்களுக்கும் அனைத்தும் உண்டு ஏன்? அகத்தியன் பெயரைச் சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கின்றீர்கள்?  ஏன் வேறு வேலைகள் உந்தனுக்கு இல்லையா??
ஏன் பொய் வேடதாரிகள் செய்து சித்தர்களை ஏமாற்றுகின்றீர்கள்?
இப்படியே செய்து கொண்டிருந்தால்
ஏன் இதனை கூட நம்ப மாட்டார்கள் அதனால் தான் உலகத்தை நம்பி நம்பி எவ்வாறு நின்ற பொழுதும் கூட எடுத்துரைக்கின்றது மனிதன் கடவுள் இல்லை என்ற நிலைமை க்கு கூட வந்து விடுகின்றான்.
ஏமாற்றாதீர்கள் இனிவரும் காலங்களில் அவ்வாறே செய்து கொண்டிருந்தால் நீயும்  ஏமாறுவாய் மனிதர்களும் ஏமாற்றுவார்கள்.

ஒன்று சேருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே விடிவெள்ளி உண்டு என்பேன்.

விடிவெள்ளி உண்டு என்பேன் இதனை விட்டுவிட்டு அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் இவ் மந்திரத்தைச் சொல்லி செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு செய்து கொண்டே இருந்தால் நீயும் அழிந்து போவாய். மற்றவர்களையும் அழிந்துபோக அழைத்துச் செல்வாய். இதனால் பொய்யாகும் கடமைகள்.

உன் கடமையை நீ சரியாக செய். யான் யானே  என் கடமையை சரியாக செய்கின்றேன்.

மனிதனை வேண்டாம் இனிமேலும் பொய் பித்தலாட்டங்கள் பொறாமைகள் பொறாமைகள் நின்ற கோலத்தில் நின்ற கோலங்கள் கூட இதனால் மனிதன் தன்னையே ஈசனையே பொய் என்று கூட கூறுகின்றான். ஆனால் இதற்கெல்லாம் காரணம் மனிதனே அதனால் தான் இன்னும் சில கஷ்டங்களை யான் நிச்சயமாய் மனிதர்களுக்கு கொடுப்பேன் யான்.

அதனையும் மனிதனால் தீர்த்துக் கொள்ள முடியாது என்பேன்.

இவ்வாறே செய்துகொண்டிருந்தால் அனைத்தும் அனைத்து திருத்தலங்களும் அழிந்து போகும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது.

இதற்கெல்லாம் யார் காரணம் என்றால் மனிதனே.

பைத்தியக்கார மனிதனே  திருந்திக்கொள்.

தேவனே! தேவனே! கோபம் கொள்ளாதே சற்று பொறுத்திரு !

தேவியே கோபப்படவில்லை
மனிதன் எப்படி இறைவனே கீழ்நோக்கி விழும்படி செய்து விட்டான். இதற்கு யார்? காரணம்?
இனி மேலும் சில அழிவுகளை ஏற்படுத்தி தான் மனிதனைத் திருத்தி வைக்க வேண்டும் அவ் அழிவின் மூலமே நன்றாக வழி காட்டுவேன்.
மற்றவை எல்லாம் வீண்.

நன்மைகளாக செய்துகொண்டு மனிதனுக்கு வழி விட்டால்

இறைவன் பொய்யென்று அதனால்தான் இன்னும் என்னுடைய திருத்தலங்கள் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.
 வரும் காலங்களில் அழியும் மக்களால் மட்டுமே.
இதனால் கஷ்டங்கள் நிச்சயம் கொடுப்பேன் பல மாற்றங்கள் ஏற்படுத்துவேன் சித்தர்களாலும் சித்தர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் யான் சொல்லிவிட்டேன். அனைத்தும் மாறும். இவ்வுலகத்தை ஆட்சி செய்வான்  இவ்தேசத்தை புண்ணிய தேசத்தை ஒரு புண்ணியவானே வரும் சில ஆண்டுகளில் ஆன்மிக பூமியாக மாற்றுவதற்கு யானே ஏற்பாடு செய்கின்றேன்.


தேவாதி தேவனே நல் முறைகளாக கோபங்கள் உந்தனுக்கும் தாண்டவமாடி விட்டது.

கேள்விகளை நிறுத்தி வைக்கின்றேன்.

தேவியே போதும் இன்னும் வாக்குகள் மறுமுறையும் செப்புகின்றேன்
 
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
 
சித்தன் அருள்..................தொடரும்!