வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அந்த நாள் >> இந்த வருடம் என்கிற தலைப்பில், பல இடங்களிலும் முக்கியமான முகூர்த்த நேரத்தை அகத்தியர் பெருமான் நமக்கு கோடிட்டு காட்டியது நினைவிருக்கும். அதில் ஒன்றான "கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர்" கோவில் உங்களுக்கு நினைவிருக்கும்.
அந்த கோவிலின் அபிஷேக பூஜை தினம் இந்த வருடம், வரும் 18-10-2021, திங்கட்கிழமை அன்று வருகிறது.
அந்த முகூர்த்த தினத்தின் முக்கியத்துவத்தை சிறிது உரைக்கிறேன். அதற்கு முன், நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நாடியில், திரு ஜானகிராமன் கேள்விக்கு, கீழ் கண்டவாறு பதில் உரைத்துள்ளார்.
"குருவே! வரும் 18/10/2021 அன்று உங்கள் உத்தரவின் பேரில், கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் கோவிலில் பெருமாளுக்கு அபிஷேக பூஜைகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது. அடியேன் அங்கு சென்று பூஜையில் கலந்து கொள்வதற்கு அனுமதி உண்டா? ஆயின் முன் பதிவு செய்ய வேண்டும்!" என வினவினார்.
"அந்த புண்ணிய முகூர்த்தத்தில் யாமே அங்கிருக்கப் போகிறோம். அபிஷேக பூஜைகளை செய்யப்போகிறோம்! ஆகவே கிளம்பி செல்க, அனுமதி உண்டு!" என பதில் உரைத்துள்ளார்.
புண்ணிய முகூர்த்த முக்கியத்துவம் என்னவென்றால்,
- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள்.
- தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.
- அன்றைய தினம், அனைத்து நதிகளும், தாமிர பரணியில் நீராடி தங்களை சுத்தி செய்து கொள்கிற நாள். ஆகையால், அன்று அங்கு நீராடி, அடியவர்களும், தங்களை சுத்தி செய்து கொள்ளலாம்.
- அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
- சித்தன் அருளை வாசிக்கும், எத்தனையோ அடியவர்களின் வேண்டுதலை/பிரார்த்தனையை நிறைவேற்றிய முகூர்த்த நாள்.
சமீபத்தில் கோடகநல்லூர் பெருமாள் கோவில் அர்ச்சகர், திரு.ரமணன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. 18/10/2021 அன்று கோவிலின் "பவித்ர உற்சவம்" தொடங்குகிற படியால் அதனுடன் சேர்த்து அகத்தியப்பெருமான் அருளும் அபிஷேக பூஜைகளை நடத்துவதாக தீர்மானித்துள்ளார். எல்லா அகத்தியர் அடியவர்களும் பங்கு பெறலாம், என உரைத்தார். அநேகமாக அபிஷேக பூஜையை காலை 10 மணிக்கு துவங்க தீர்மானித்துள்ளார். அனைத்து அகத்தியர் அடியவர்களும் இந்த செய்தியை அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ளவும், வேண்டியுள்ளார்.
நெல்லை சந்திப்பை அடைந்தவர்கள், தீவுத்திடலில் உள்ள தற்காலிக பேரூந்து நிலையத்தில், சேரன்மாதேவி செல்லும் பஸ்சில் நடுக்கல்லூரில் இறங்கி அங்கிருந்து 1 1/2 கி.மீ நடந்தோ, ஆட்டோவிலோ பயணித்து கோடகநல்லூரை அடையலாம்.
பூக்கள், துளசி உதிரியாகவோ, மாலையாகவோ, சிறிது பச்சை கற்பூரம், பெருமாளுக்கு பூஜைக்கு வாங்கி கொடுத்து, பிரார்த்தனையை கொடுத்து, அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.
உழவாரப்பணிக்கு வாய்ப்பு கிடைத்தால் ஏற்று செய்யுங்கள்!
மற்றவை அகத்தியப் பெருமானின் சித்தம் போல்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.............தொடரும்!
ஒரு வேண்டுதல்:-
18/10/2021 அன்று கோயிலுக்கு வருகிற அகத்தியர் அடியவர்கள், தயவு செய்து முகக்கவசம் அணிந்து வரவும். நம்மால் பிறருக்கு ஒரு ஊறு விளைந்து விடக்கூடாது,என்பதில் கவனமாக இருங்கள்.
அகத்தீசாய நம நன்றி அய்யா
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteகுரு வாழ்க 🙏 குருவே துணை 🙏 குருவே சரணம் 🙏🙏 குருவின் திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏🙏🙏
ReplyDeleteவணக்கம் சாமி. கடல் கடந்து எங்களால் வர இயலாது. அந்த முகூர்த்த நேரம் கிடைத்தால், நாங்களும் இங்கு பிரார்த்தனை செய்வோம் அய்யா.
ReplyDelete18/10/2021 - BETWEEN 10.00-12.15
Deleteநமஸ்காரம்.
ReplyDeleteஹநுமந்ததாசன் ஐயாவின் அகத்தியர் அனுபவங்கள் போல இப்பொழுது ஜானகிராமன் ஐயா அவர்களின் அனுபவங்கள் நமது வலைத்தளத்தில் பதிவு செய்ய அகத்தியர் ஐயா உத்திரவு கேட்டு செய்ய வேண்டுகிறேன். இதற்கு திரு அக்னிலிங்கம் ஐயா அவர்களுக்கு உதவிகள் செய்ய என்னை போல பலர் காத்து உள்ளனர்.
நன்றி.
ஓம் ஈஸ்வராய நமஹ
ஓம் சரவணபவ
ஓம் அம் அகத்தீசாய நமஹ ||
அக்னிலிங்கம் ஐயாவிற்கு நமஸ்காரம்,
ReplyDeleteதிரு கார்த்திகேயன் ஐயா அவர்கள் எப்படி உள்ளார்கள், அவர்களிடமிருந்து சித்தன் அருள் அகத்தியர் அடியவர்களுக்கு ஏதேனும் செய்தி கேட்டு விண்ணப்பம் வைக்கின்றேன்.
ஓம் அம் அகத்தீசாய நமஹ||
Im unable to contact this திரு.ஜானகிராமன், CELL NO: 8610738411 from malaysia, i need urgently get hold of him, please help
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம