​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 22 October 2021

சித்தன் அருள் - 1043 - அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் - 18/10/2021




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நடந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சென்ற தொகுப்பில் அடியேன் கூறிய "என் இயலாய்மையை புரிந்து கொண்ட அகத்தியர்............ மறுபடியும் முதலிலிருந்தா, மானசீகமாக என்னால் அது முடியாது என கூறிவிட்டேன், குருநாதரிடம்" என்பதை பல அகத்தியர் அடியவர்களும், தவறாக நிதிநிலைமையுடன் தொடர்புபடுத்தி, உடனேயே அடியேனுக்கு நாங்களும் நிதி தருகிறோம், வழி சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். இது முற்றிலும் தவறு. அடியேனின் உடல் நிலை காரணமாக அதிகமாக உடலால் உழைக்க முடியவில்லை. உழவாரப்பணிக்குத்தான் உதவி தேவை. நிதியால் அல்ல. பூஜையில் பங்கு பெற்று, அருள் பெற்றுக் கொள்ளுங்கள், அது போதும்! எல்லா வருடமும் அகத்தியர் அடியவர்கள் உழவாரப்பணி செய்து பூசையை நிறைவு செய்வதுபோல், இந்த இரண்டாவது பூசையும் நடக்க வேண்டும் என்று ஒரு சிறிய அவா!

பூஜை தினத்துக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளையும் கூறுகிறேன்.

  • பாலராமபுரம் அகத்தியப்பெருமான் கோவிலை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒருநாள் அகத்தியப் பெருமானிடம் ஒரு எளிய வேண்டுதலை வைத்தேன்.
  • "இந்த வருட பூசை மிக சிறப்பாக நடக்க வேண்டும். வரும் அனைவருக்கும் தாங்கள் அருள வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பி, பூசையில் கலந்து கொண்டு மறுபடியும் வீடு சென்று சேரும் வரை தாங்கள் கூட இருந்து காத்தருள வேண்டும்" என்றேன்.
  • அன்றைய தினம் இரவு பூசையின் பொழுது, அங்கிருக்கும் பூசாரி திரு.சுமேஷ் அவர்களுக்கு நம் குருநாதர் ஒரு உத்தரவை கொடுத்தார்.
  • "நீ போய் பூசையில் கலந்து கொண்டு, எல்லோருக்கும் கனகத்தை எம் சார்பாக அளித்துவிடு" என்றார். எந்த பூசை?  கனகம் என்றால் "தங்கம்" ஆயிற்றே! எதை பற்றி கூறுகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அடியேன் அவரை தொடர்பு கொண்டேன். காசை, சித்தர்கள் கானகம் என்றும் கூறுவார்கள். பூசை 18/10/2021 அன்று நடக்கிறது. நிறைய காசை அவரிடம் வைத்து பூசை செய்து கொண்டு வந்து கொடுங்கள்" என்றேன்.

எப்படியெல்லாம் குருநாதர் நம்மை சூழ்ந்து நின்று காக்கிறார் என்பதற்கு, இதுவும் ஒரு உதாரணம்.

அகத்தியர் உத்தரவால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பூசை நாள் வந்தது. இனி நடந்ததை பார்ப்போம்.
  • அகத்தியப்பெருமானின் அருளால், அன்றைய தினம் ஒரு அர்ச்சகர், திரு.குமார் என்பவர் பூஜைக்கு வந்து சேர்ந்தார். வழியே இல்லை என்று நாம் நினைத்தாலும், நம் குருநாதர் நினைத்தால் எதுவும் நடத்தி தருவார் என்பதில் சந்தேகமில்லை.
  • ஒரு வாரத்திற்கு முன் தாமிரபரணியை கண்டா போகுது, ஓரளவுக்கு ஓடிய நீர், மேலும் வற்ற தொடங்கியது. பெருமாளிடம், அகத்தியரிடம், தாமிரபரணி தாயிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்தேன். அந்தநாள் அன்று நீருக்கு குறைவிருக்கக்கூடாது, என்பதே வேண்டுகோள். முதல் நாள் கூட வற்றிய நிலையில் ஓடிய நதி, அன்றைய தினம் சுழித்துக்கொண்டு ஓடியது. கால் கவனமாக பாதிக்கவில்லை என்றால், கொண்டு போய்விடுவேன் என்கிற வேகம். கண்டதும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.
  • நிறைய அடியவர்கள், தாமிரபரணி தாய்க்கு விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அனைத்து தாம்பூலமும் நீரை எதிர்த்து ஒரு இடம் வரை சென்றுவிட்டு, திரும்பி நீர் ஓட்டத்தில் சேர்ந்து சென்றது. இதை கண்டவுடன், தாமிரபரணி தாயே, தாம்பூலத்தை வாங்கி, தன இருப்பிடத்திற்கு கொண்டு செல்வதுபோல் இருந்தது. அந்த காட்ச்சியை காணவே இரு கண்கள் போதாது. தன கையினால் தாம்பூலம் கொடுத்தவர்கள், மிக மிக புண்ணியம் செய்தவர்கள், என தோன்றியது.
  • கோவிலில் நிறைந்த அகத்தியர் அடியவர் கூட்டம். அர்ச்சகர் அபிஷேக பூஜையை மூலவருக்கு முன் நடத்துவதாக தீர்மானம் செய்தார். உள்ளே இடவசதி குறைவாக இருந்ததால் நிறைய அடியவர்கள் வெளியே எப்போதும் அபிஷேகம் நடக்கும் மண்டபத்தில் அமர வேண்டி வந்தது.
  • நவகும்ப தீர்த்தம் வைத்து ஜெபத்துடன் பூசை தொடங்கியது.
  • பெருமாளுக்கு தைல காப்பு சார்த்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த எண்ணையை வாங்கிக் கொண்டவர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள். ஏன் என்றால், பாலராமபுரம் அகத்தியப்பெருமான் கோயில் பூஜாரி திரு.சுமேஷ் தன கையால் அனைவருக்கும் கொடுத்தார். அகத்தியர் லோபாமுத்திரையை தொட்டு பூசை செய்கிற கைகள். நம் மீது அவர் விரல் பட்டாலே அகத்தியரை தொட்டு, அவர் சேமித்த அருள், நம் உடலில் பாயும்.
  • தைலக்காப்புக்குப்பின், அபிஷேகம் தொடங்கியது. பால், தயிர், வாசனாதி தைலப்பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், தேன், இளநீர், பச்சைக்கற்பூரம், என அபிஷேக விதங்கள் நீண்டு சென்றது. உற்ச்சவ மூர்த்தியை கண்டவுடன், அடியேனுக்கு தோன்றியது என்ன வென்றால், ஒரு சின்ன குழந்தையை தலையில் நீர்விட்டு குளிப்பாட்டும்பொழுது, மூச்சு முட்டி கைகளால், முகத்தில் வழியும் நீரை துடைத்துவிட்டு, இன்னும் தலையில் நீர் விட வேண்டும் என சிரித்தபடி பார்க்குமே, அந்த உணர்வுதான் அடியேனுக்கு வந்தது. அத்தனை அழகு.
  • அபிஷேகம் முடிந்து, அடியவர்கள் கொண்டு வந்த பூக்கள். மாலைகளால் பெருமாளையும், தாயார்களையும், அர்ச்சகர் மிக அழகாக அலங்கரித்தார்.
  • நான்குவித நிவேதனம் பெருமாளுக்கும், தாயாருக்கும், கொடுக்கப்பட்டு, தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெற்றது.
  • அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், தீர்த்தம், சடாரி, அபிஷேக மஞ்சள் வழங்கப்பட்டது.
  • பாலராமபுரம் அகத்தியர் கோவில் சார்பாக, அனைத்து அடியவர்களுக்கும் பூஜாரி திரு.சுமேஷ், "அகத்தியர் படம் பதித்த ஒரு ரூபாய் காசும்", பாலராமபுரம் அகத்தியர் லோபாமுத்திரை படமும், வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக கொடுக்கப்பட்டது.
  • அனைவருக்கும், அகத்தியப்பெருமான், பெருமாள் சார்பாக, 786,108,354 எங்கள் கொண்ட ரூபாய் வழங்கப்பட்டது.
  • கூடவே, அகத்தியர் அடியவர்கள் கொண்டுவந்த இனிப்பு பண்டங்களும், ப்ரசாதத்துடன் கொடுக்கப்பட்டது.
  • பூசையை பற்றி நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்டபொழுது, அவரே அங்கிருந்ததாகவும், அடியவர்கள் ஏற்பாடு செய்த பூசையை பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதியாக வந்திருந்து மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டதாகவும், கூறியுள்ளார். அனைவரையும், ஆசிர்வதித்ததாகவும் உரைத்துள்ளார்.
  • இந்த பூஜையை மிக சிறப்பாக செய்ய உதவிய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், குருநாதர் உத்தரவின் பேரில் முன் நின்று நடத்திய திருமதி.லக்ஷ்மி குழுவினருக்கும், கோவில் நிவாகத்திற்கும், லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கும், நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
  • இரண்டாவது அபிஷேக பூசையை பற்றி குருநாதரிடம், நாடியில் ஒரு சில விஷயங்களை கேட்டுள்ளோம். அவர் கண் அசைவுப்படி, விஷயங்கள் நடக்கும். உரிய நேரத்தில் அனைவருக்கு தெரிவிக்கிறோம்.
ஒரு சிறு குறிப்பு:-

"ஏன் அய்யா! உங்களுக்கு மட்டும் இந்த வருடம் இரண்டு பிறந்தநாள் பூசையா? அதன் விசேஷம் என்ன? என வினவியதற்கு, பெருமாளுக்கும் இரண்டாவது பூசையை செய்யச் சொல்கிறார். இதில் என்னவோ ஒரு சூட்சுமம் உள்ளது. அதை பற்றி மேலும் அகத்தியப்பெருமானிடம் கேட்டுள்ளேன். பதில் வந்ததும் தெரிவிக்கிறேன். அகத்தியப்பெருமானின் திருநட்சத்திரம் டிசம்பர் 23, 2021 அன்று வருகிறது. கொண்டாட விரும்புகிறவர்கள், தயாராகலாம்.

மேலும் ஒரு நாடியில் வந்த செய்தி:-

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே * அப்பனே அம்மாவாசை திதியில்* இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வாறு நல் முறைகள் ஆக பல பெரிய பெரிய அரசர்களும் இவ்வாறு செய்து பல சித்துக்கள் பெற்று விளையாடினார்கள் என்பேன்.

இதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் நல்லோருக்கு நான் எப்பொழுதும் உதவிகரமாக இருப்பேன் என்பேன் இச் சூட்சுமத்தை இப்போது யான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு.

நவம்பர் 04 ம் தியதி அமாவாசை. அது முதல் ஒன்பது நாட்கள், முடிந்தவர்கள் காவிரியில், துலா ஸ்நானம் செய்து அவர் அருள் சித்து பெற்றுக்கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்..................தொடரும்!

18 comments:

  1. அகத்தீசாய நம நன்றி அய்யா

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சரணம்

    ReplyDelete
  3. அக்னி லிங்கம் ஐயா வணக்கம், அகத்தியர் பூஜையில் தானும் பங்கு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உதவி எப்படி செய்வது என்று கேட்டு இருந்தேன். அகத்தியர் அடியவர்கள் அனைவரும் சேர்ந்து பூஜையில் பங்கு கொள்ள அனைவர்க்கும் வழி காட்டுங்கள்.நன்றி G. K Sreenivasan

    ReplyDelete
  4. நமஸ்காரம் ஐயா. உங்கள் எழுத்துக்களாலும் வழிகாட்டுதலினாலும் நான் புடம் போடப்பட்டு வருகிறேன். தங்கள் வாக்கை அகத்திய பெருமான் வாக்காக எண்ணி ஏற்று கொண்டு அதன் வழி நடக்கிறேன். தாங்கள் சொல்லி கொடுத்தது தான் எல்லாம். தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  5. கோதாவரி தாய்க்கு ராமர் பூஜை செய்யும் பொழுது பத்ராசலம் நதியில் வெள்ளம் வரும்
    அதைப் போலவே ஒவ்வொரு வருடமும் கோடகநல்லூர் இல் அகத்தியர் பூஜை செய்யும் பொழுது தாமிரபரணியில் வெள்ளம் வருகின்றது

    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
    Replies
    1. ஆம். அது ஆவணி மாத வளர்பிறை என சிறிய ஞாபகம்.

      Delete
  6. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  7. The decision of removing english interpretation of jeev Arul vakku is beyond understanding.Its not the appreciable move as there are many non tamil agastya devotees.Those devotees can freely read the English version of jeev nadi reading as and when possible.The messages from Lord Sivan and siddhas are for spreading light everywhere.When someone had taken responsibility to render English version of messages,why was there a difference of opinion? It is at all demotivational and I request to put the English compilation again.

    ReplyDelete
    Replies
    1. Someone translated it. After some days, he has removed it for his own reasons. I did not edit or removed it.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. My humble request to have it.Its the need of the hour.Your contribution will make difference in many lives.Thank you.

      Delete
  8. ஐயா மறுபடியும் நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு அருள் பெற வேண்டும் ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

    ReplyDelete
  9. ஐயா.வணக்கம் காவிரி நீராடல் என்பது தாமிரபரணி ஆற்றில்தானா அல்லது தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில்உள்ள காவிரி ஆற்றில் நீராடலாமா ஐயனிடம் கேட்டு தெரிவிக்கவும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. துலா காவேரி நீராடலை எப்படி, எந்த திதி இல் இருந்து, செய்யவேண்டும் என குருநாதர் விளக்கியுள்ளார். தாமிரபரணி ஸ்நானம் அல்ல.

      Delete
  10. @ Yogvivek.... Agnilingam ayya is doing great service. That's all I can say. Hope here everyone will understand.

    ReplyDelete