​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 19 June 2021

சித்தன் அருள் - 1008 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - 17/06/2021


ஆதி சித்தனை மனதில் எண்ணி, உரைக்கின்றேன் அகத்தியன். இனி நாளும், ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு குடும்பத்தில் நேரும் என்பேன். இதனால், இறைவனை பாடிப்பாடி தொழுதால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு என்பேன். வரும் காலங்களில், பல குற்றங்கள் நடைபெறும் என்பேன். என்பேன், இதற்கும் சமமான, ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள். வாழ்வார்கள், பின் மழையும் நிந்தித்து, ரத்த வெள்ளமாக போகும். போகும் அதனால், மன நிலை மாறும், இறை நம்பிக்கை சற்று குறையும், என்பேன். வரும் காலங்களில், ஆங்காங்கே, சில சில பூகம்பங்களும் ஏற்படும் என்பேன். மறைமுகமாக இன்னும் சில தீய வினைகள். ஆனாலும், இறைவனை வணங்கினால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு. மற்றவை எல்லாம் ஆகாது என்பேன். ஆகாது என்பேன், வரும் காலங்களில், நெருப்பு மழையும் பொழியும் என்பேன். மனிதர்களின் குணங்கள் மாறும் என்பேன். ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால், தன் இனத்திற்கு தகுந்தாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், நாடோடியாக திரிவார்கள். திரிவார்கள் என்பேன், மனிதர்கள், சில சில சமயங்களில், உண்மை இல்லாமல் வாழ்வார்கள். ஆனாலும், இறைவன் நம்பிக்கை குறைந்து விடும். இறைவன் மீதுள்ள அன்பும் குறைந்து விடும். பின் அப்படி இறைவன் மீது நம்பி, அன்பு கொண்டாலும், மன மாற்றங்கள்.

மனமாற்றங்கள் வேண்டாம் அப்பனே! அப்பனே, மனதுள், இறைவன் இருக்கின்றான் என்று பலமாக பிடியுங்கள். இறைவன் இருக்கின்றான் என்று பிடித்தால் மட்டுமே, வரும் காலங்களில் தப்பித்துக் கொள்ளமுடியும். இப்பொழுதும் கூட ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பிரச்சினையாக இருந்து கொண்டு இருக்கின்றது. சொல்லத் தெரியாமலே, மனிதர்கள் தவிக்கின்றனர். பரிகாரமாக, அதை செய்வோமா, இதை செய்வோமா என்று. ஆனால், எவ்வித பரிகாரமும் செயல் படவில்லை. செயல் படவில்லை என்பேன். சில சில நேரங்களிலும், அவதார புருஷர்கள் வருவார்கள், இவ்வுலகில், காப்பாற்ற. காப்பாற்ற அதி விரைவில் வருவார்கள்.  முறையாக நடந்தாலும், முறையற்றதாக நடந்து போகும் கலியுகத்தில். கலியுகத்தில், இன்னும் பல பெரியோர்களை மதிக்க மாட்டார்கள் என்பேன். பின் குருவை நிந்திப்பார்கள் என்பேன். குருவருள் இல்லாமல் திருவருள் கிடையாது என்பது போல், குரு என்று சொல்லியெல்லாம் ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றிவிடுவார்கள், குருவையே. பின் நல் முறையாய் நட்புக்கள் வைத்திருந்தாலும், நட்பில் பிரிவு ஏற்படும். அதனால், பாவங்கள் கூடிக்கொண்டே இருக்கும்.

எனவேதான், இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே, பிழைக்க முடியும் என்பேன். ஆனாலும், இறை என்று கெளரவத்துக்காக பிடிப்பார்கள். பிடிப்பார்கள், வீணான வாழ்க்கையை. வீணான வாழ்க்கை உண்டு நிச்சயம். ஆனாலும் இறைவன் அனைவரையும் காப்பாற்றுவான். ஆனாலும் மற்றவைகள் எல்லாம் இறைவனை நோக்கி இல்லாத போது, பின் கீழ் நோக்கி விழுதலே ஆகும். ஆனாலும், அவை போன்று செயல்பட விடாதீர்கள் என்பேன். என்றாலும், மனதைரியத்துடன், எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்று இரு. அனைத்தும் நன்மைக்கே. எதை இங்கு கொண்டு வந்தாய், கடைசியில் எதை கொண்டு போகிறாய் என்று நினைத்தாலே, முக்தி நீ பெறுவாய். இதனுள்ளே வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும். வாழ வேண்டும், அதோடு நற்பண்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நற்பண்புகள் ஏற்படுத்தி, சில தீய வினைகள் அகல வேண்டும்.

அப்பனே! ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன். நற்பண்பு, கருணை, இவை இருந்தால் மட்டுமே, இவ்வுலகத்தில் இனி வாழ முடியும். பின் பொய், களவு, திருட்டு, பின் மனதை பல வழிகளில் செலுத்தி விட்டீர்களானால், அழிந்து விடுவீர்கள். மனிதனை அழிப்பதற்கு இங்கு யாரும் இல்லை. மனிதனை, மனிதன்தான் அழித்துக் கொண்டிருக்கின்றான். இதுதான் உண்மை. ஆனாலும், நல்முறையாய், எதனை என்று தீர்மானிப்பதற்கு, இங்கு பல சித்தர்களும், தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள், உலகத்தை காப்பாற்ற. காப்பாற்ற தோன்றுவார்கள், அங்கங்கே.  ஆங்காங்கே தோன்றி, மற்ற பொய்யான குருக்களை கொண்டு வருவார்கள், வெளியே. எச்சரிக்கின்றேன், இப்பொழுது கூட. நிச்சயமாய் மாறுங்கள், மாறுங்கள், மாறுங்கள் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றேன். அதனால், இப்பொழுதே மாறிக் கொள்ளுங்கள். பின் சித்தர்கள் வருவார்கள். சித்தர்களே, பின் பொய்யான வழிகளை செய்துகொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து, பின் அவர்களே, சித்தர்களே, வெளிக் கொண்டு வருவார்கள். அப்பொழுது. தேவை இல்லாமல், நீங்களே தலை குனிந்து நிற்காதீர்கள். இப்பொழுதே சொல்லுகின்றேன். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், எதனை என்று. எதனை என்று பார்த்தால், பூலோகத்தில் இருந்து, திரிந்து, திரிந்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால், தற்பெருமைக்காக சிலர், சிலர் எதனையும் செய்யாமலே இருக்கின்றனர். எல்லாம், பொய்யானதே. பொய்யானதே! எந்தனுக்கும் கோபம் கூட வருகின்றது. ஆனால், அகத்தியன்! அகத்தியனே! அகத்தியர் அப்பா! என்று மனமார கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு கூறிய பொழுதே என் கருணை தாங்கவில்லை. ஆனால் செய்வதோ தவறுகள். வேண்டாமப்பா! அத்தவறுகள் பின் தண்டித்தால், ஒன்றை மட்டும் கூறுகின்றேன். நீ செய்யும் தவறுகள் சிறிது தூரம் செல்லக்கூடும். ஆனால் அங்கே ஒரு பள்ளம், அதில் விழுந்து விட்டால், யாரும் காப்பாற்ற முடியாது. இறைவனும் காப்பாற்ற முடியாது. சித்தர்கள், யாங்களும் காப்பாற்ற முடியாது. சொல்கின்றேன். ஏன் என்றால், தவறுமேல் தவறு செய்யாதே என்று எச்சரித்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.

நான் ஒன்றும் எங்கும் இல்லை. இவ்வுலகத்தில் சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றேன். இப்பொழுது கூட சொல்கின்றேன். ஒழுக்கமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். ஏதும் தேவை இல்லை. இறைவனை அன்பால் வணங்குங்கள். போதுமானது. இன்னும் வருவார்கள் திருடர்கள். அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என. இதை எல்லாம் செய்வேன் என்று ஏமாற்றி பிழைப்பார்கள். இப்பொழுது கூட பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதை யான் கண்ணால் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன். ஆனால் நிச்சயம், அவர்களுக்கு, அடி, உதை பலமாக இருக்கும் என்பேன். எச்சரிக்கிறேன். எப்பொழுதோ, முன்பே எச்சரித்து விட்டேன். ஆனாலும், இப்பொழுது கூட எச்சரிக்கின்றேன். பொறுமை காத்திருங்கள். அன்பு, கருணையோடு, பகைமை இல்லாமல் இறைவனை வணங்குங்கள். எல்லாமே நீதானப்பா இன்று இறைவனை நோக்கி வணங்குங்கள். போதுமானது. அதை விட்டு விட்டு, அதை செய்தால் இது நடக்கும், இதை செய்தால் அவை எல்லாம் நடக்கும், இப்பரிகாரத்தின் மூலம் அவை எல்லாம் நடக்கும் என்றெல்லாம் இயங்கிக் கொண்டிருந்தால், நிச்சயம் விடிவுகாலம் வராது, வராது என்பேன். இதனால் அன்போடு அலையுங்கள். உங்களுக்கு தேவை எது என்று கூட எங்களுக்குத் தெரியும். நற்பண்புகளோடு இருந்தாலே போதுமானது. நாங்கள் ஓடோடி வருவோமப்பா. சித்தர்கள், யாங்கள், நல் மனிதர்கள் யாராவது இருக்கின்றார்களா என்று பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். ஆனாலும், அப்பனே, ஏமாற்று வேலைகள் மிஞ்சுகிறது. மிஞ்சுகிறது, எதைப்போட்டாலும் சரியாக வரவில்லையே அப்பா. அப்பனே தெளிந்து கொள், அன்பால் யான் கூறுகின்றேன். பொய், பித்தலாட்டம் வேண்டாம் அப்பா. பித்தலாட்டம் செய்தால், பித்தலாட்டமே உன்னை அழித்துவிடும். அப்பனே! யானும் பூலோகத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். தான் வாழ்வதற்காக, என்னென்னவோ செய்கின்றார்கள். வேண்டாம் அய்யனே, வேண்டாம் அய்யனே! என்றுதான் இப்பொழுது கூட தாபத்தோடு சொல்கின்றேன்.

அனைவருக்கும்! வேண்டாம்! இன்னும் சில காலங்கள் ஆனால் கட்டங்கள் வரும். கெட்டதை செய்து கொண்டிருக்கின்றீர்கள். யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். ஆனாலும் அவை வந்துவிட்டால், யான் கூட காப்பாற்ற மாட்டேன். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அனைத்தும் கூட. ஏன்? ஒன்றை தெரிவிக்கின்றேன் உங்களுக்கு.  அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று சொல்கிறீர்களே, நீங்கள் ஏன் செய்கின்றீர்கள். எங்களுக்கு தெரியாதா. யாங்கள் செய்வதற்கு,  சரியானதாக. கருணையோடு சொல்கின்றேன். அப்பா அகத்தீசா! எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நீதான் அழைத்து செல்ல வேண்டும் என்று. அன்போடு வார்த்தை கூறும் யான், யான் இருக்கின்றேன். அதை விட்டுவிட்டு, பின் காசுக்காக எதை எதையோ செய்துவிட்டால், அப்பனே! நான் சொல்ல மாட்டேன், செய்துவிடுவேன். இப்பொழுது கூட சொல்கின்றேன். யார் யார் எப்படி அழியப்போகிறீர்கள் இக்கலியுகத்தில் என்று விளக்கமாக சொல்ல முடியும். கருணையோடு சொல்கின்றேன். பொய், பித்தலாட்டம் வேண்டாமப்பா! பொய் பித்தலாட்டமே அழிந்து விடும். ஏன்? உன்னை மட்டும் அழிக்காது, பரம்பரையையை அழித்துவிட்டு போகும். தெரிந்து கொள்ளுங்கள்.

மீண்டும் வந்து உரைக்கின்றேன் வாக்குகளை, பலமாக!

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

Thursday, 17 June 2021

சித்தன் அருள் - 1007 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

Thursday, 10 June 2021

சித்தன் அருள் - 1006 - அன்புடன் அகத்தியர் - ராமேஸ்வரத்தில் சிவபெருமான் வாக்கு!


நமச்சிவாயம் யான் இயம்புகின்றேன். பின் பின் மறைமுகமான பல இன்னல்களும் இவ்வுலகத்தில் வரும் என்பேன். மனிதரிடையே புத்தி நிரந்தரமாக நின்று விட்டது. அதனால் ஒரு சோதனை கொடுக்கலாம் என்றேன். நீங்களே பார்த்து விட்டீர்கள். யானும் வருடங்களாக இங்கு இருந்து இருந்து, பின் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அவரவர் இஷ்டத்துக்கு ஏற்ப பணத்தைத்தான் மதிக்கின்றனர். ஆனாலும் நேரடியாக யான் வந்து நின்றாலும் அவன்தான் என்னையும் கண்டுகொள்வதே இல்லை.  இதற்குப் பெயர்தான் பக்தியா? பக்தி செலுத்த கோபங்கள், தாபங்கள் விலக்க வேண்டும். என்றால்தான் என்னை அடையலாம்.

யான் நல்முறையாய் செய்வேன் என்று உணர்ந்து அகத்தியனும் பூமியில் சுற்றிக் கொண்டிருக்கின்றான், என்பேன். ஆனாலும் அகத்தியனை வழிபடு என்று சொல்லியெல்லாம், பொய், பித்தலாட்டங்கள். யான் ஏற்கனவே அகத்தியனுக்கு சொல்லிவிட்டேன். ஆனால் அகத்தியனோ, பார்ப்போம், என் பக்தர்கள் மெய்யானவர்கள், இவ்வுலகில் உண்டு என்றான். ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் பார்த்தால், "ஐயோ" என்கிற நிலைமை அவன்தனுக்கு தோன்றுகின்றது. சிவனே, அப்பனே என்றெல்லாம் என்னை பூ உலகிலிருந்து அழைக்கின்றான். ஆனாலும் பார்ப்போம் என்றுதான் உலா வந்து கொண்டிருக்கின்றான், அகத்தியனும். ஆனாலும், எவை என்றும், எதனை என்றும், மனிதனே, தன் இனத்தை, கீழ்ப்படுத்துவான் என்பேன். மனிதனின் புத்திகள் மாறும் இனி மேலும். ஆனாலும் ஒழுங்காக செயல்படமாட்டான். மனிதரும் இவை, எவை என்று தெரியாமல் வாழ்வார்கள். இதனை கண்டு யான் எத்தனை நாட்கள் பொறுத்திருப்பது. என் இடத்திலே வந்து கூட சில கேள்விகள் கேட்கின்றனர். ஆனாலும் ஒருவர் கூட என்னை வேண்டும் என்று கேட்பதில்லை. ஒரு இல்லோன் கூட இங்கு வந்து நிம்மதியாக வழிபட அனுமதிப்பதில்லை. அன்பை அன்றி வேறு ஒன்றை யாங்கள் எதிர் பார்ப்பதில்லை.

அப்பனே, இவ்வுலகில் உண்மையான பக்தியை விட பொய்யான பக்தியே நிலவுகின்றது. இத்தனையும் யான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எவை என்று கூற, நிச்சயம் தண்டனை உண்டு என்பேன். இப்பிறவியிலேயே செய்த தவறுகளுக்கு தண்டனையை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று விதி. யான் கட்டளை இட்டுவிட்டேன் நவகிரகங்களுக்கு. நவகிரகங்கள் விடாது என்பேன். ஒவ்வொருவரும் மனசாட்சிப்படி நடக்க நடக்க நன்மைகள் விளையும். தவறு செய்தால், அவன்தனுக்கு அப்பொழுதே தண்டனையை யானே கொடுப்பேன் என்றேன்.

பல கோடி ஞானியர்களும் திரிந்து கொண்டுதான் இருக்கின்றனர் இங்கே. இங்கு நிச்சயமாய் சித்தர்கள் ஆட்சி வரும். இங்கேயே பல ஞானியர்களும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இதனையும் (ராமேஸ்வரம்) பிடித்தமான ஸ்தலம் என்பதால், யானே தான் அமைத்துக் கொண்டேன். இதன் சரித்திரத்தை யாரும் சரியாக கணிக்கவில்லை என்பேன். எப்பொழுது ராமனும் சீதையும் இங்கு வருவார்கள் என்பதும் எந்தனுக்கு தெரியும். சித்திரை மாதத்தில் ராமனும், சீதையும் வந்து வணங்கி, பின் நல்முறையாய், இங்கே உறைவார்கள். ராமனுக்கு விடிவுகாலம் இங்கிருந்துதான் ஏற்பட்டது என்பேன்.

எமது ஆசிகள் அனைவருக்கும் உண்டு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday, 3 June 2021

சித்தன் அருள் - 1005 - அன்புடன் அகத்தியர் - போகர் பெருமான் வாக்கு!

உலகை ஆளும் நமசிவாயத்தை பணிந்து, என் பாச பிள்ளை கந்தனை வணங்கி

ஈரேழு உலகத்தையும் தன் பாச கருணையினால் கட்டி அணைத்து என்குரு நாதனையும் வணங்கி உரைக்கின்றேன் போகன் அவன். நிச்சயமாய் எளிதில் மாற்றம் நிகழ்வது கடினம் என்பேன்

குரு போன்று நன்மை தீமைகளையும் ஆராய்ந்து இப்பூவுலகில் பின் பல யுகங்கள் வாழ்ந்து வரும் என் குரு அகத்தியர் நல் முறையாக சுற்றித்திரிந்து எவ்வாறு மனிதர்களுக்கு நல் முகமாய் ஆசிகள்  வழங்கினால் தப்பித்துக் கொள்வார்கள் என்று நினைத்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் ஆனால் மனிதனோ மாயையில் சிக்கி வழி மாறிச் சென்று கொண்டிருக்கின்றான்.

பூலோகத்தில் அகத்தியரும் வலம் வந்து கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இனிமேலும் மனிதன் தவறு செய்து கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டு பொறுப்பதில்லை.

மனிதனைப் பார்த்து பாவம் மனிதன் என்றுதான் அகத்தியரும் கருணையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சித்தர்கள் நல்லது செய்ய நினைத்தாலும் கூட மனிதன் மாய வலையில் சிக்கி தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறான்.

இனிமேலும் மனிதன் தவறான வழியில் செல்வது ஒரு உயிரை கொன்று உண்ணுவது.

இவ்வாறான பாவ காரியங்கள் செய்துகொண்டிருந்தால் இனிமேலும் கஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

மனிதர்களின் கஷ்டத்திற்கு மனிதர்களே காரணம். யோசித்துப்பார் மனிதனே அகத்தியர் நல்முறையாக வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும் அதற்கு  போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.

அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

 • கீழாநெல்லி
 • அக்கரகாரம்
 • மாசிக்காய்
 • ஜாதிபத்திரி

இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.

 • மலை நெருஞ்சி இலை
 • முருங்கை இலை
 • துளசி இலை
 • புதினா இலை
 • கறிவேப்பிலை
 • காட்டுக் கொடித்தோடை
 • குப்பைமேனி இலை
 • கண்டங்கத்திரி இலை
 • வில்வ இலை

இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.

வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.

இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும் அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான்.

பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.

இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து   உபதேசம் செய்வேன்.

இப்பொழுது குரு மந்திரம்  கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.

இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.

மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.

மீண்டும் வந்து சில மூலிகைகளை உரைக்கின்றேன்.

திரு போகர் சித்தர் உரைத்த பொது வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday, 27 May 2021

சித்தன் அருள் - 1004 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!


ஆதி இறைவனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன். பேரன்புக் குழந்தைகளே, இனி வரும் காலங்களில் ஒருவருக்கும் ஒருவர் கூட ஒத்தாசை இல்லை என்பேன். என்பேன், எதனால் இப்படி நடந்து கொண்டிருக்கிறது என பல விடயங்களில் யான் சொல்லிக் கொண்டேதான் வருகிறேன்.  ஆனாலும், இந்த நிலைமையை மனிதன் பார்த்தால், எதனால் என்று கூறத்தெரியாமல் இருக்கின்றான்.  ஆனால், சிறிது கவனித்துப் பார்த்தால், தன் இந்த நிலைமைக்கு தானே காரணம் என புரிந்து கொள்வான். பின், எவை என்றும், எதன் மூலம் வருகிறது என்று யோசித்தால் தெரியும். இனிமேலும், திருந்துவதாக மனிதன் ஒரு பொழுதும் ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனாலும் பிறரை சரி செய்வான். அப்பனே! அதர்மம் ஒரு பொழுதும் நிலைக்காது என்பேன். அதனால்தான் தர்மமும் சிறிது ஓங்கட்டும். ஆனாலும் இப்புவியில் யான் இருந்து என்மக்களை காத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஆனாலும், அவர்களுக்கே கூட சில சமயங்களில், தீமைகள் நடந்து விடுகின்றது. இது எதனால் என்பதை கூட யான் முன்னே பார்த்துவிட்டேன். இத்தனையும் ஒற்று சமமாக பார்க்கின்றேன்.

சனி பலம் பெற்றவன், பல வழிகளிலும். ஆனாலும், ஈசனிடம் பல வரங்களை பெற்று, சனி நியாயாதிபதியாக இருக்கின்றான். அதனால்தான், அவன்தனுக்கு அனைவரும் பயப்படுகின்றனர். ஆனாலும், நியாயமாக, நீதியாக நடந்து கொண்டால் பயம் இல்லை என்பேன். ஆனாலும், எதனை என்று கூற? ஈசனும் மனம் மகிழ்ந்து அமைதியாக இருந்து விட்டான். இத்தனையும் சனி நிர்ணயித்து, பின்னர் அனைவருக்கும் கட்டங்களை வழங்கினான். ஆனாலும், யான் அவன்தனை சென்று பார்த்தேன். ஈசனே என்று கூட அவனை அழைத்தேன்!

சொல்லுங்கள் அகத்தியன் என்று கூட அவன் பதில் உரைத்தான், எதனால் என்று, ஏன் இந்த நிலைமை! பின் சனியும் சொன்னான்,

அகத்தியா! எதனால் என்பதை கூட யான் அறிந்தேன்! ஆனாலும், யான் 30 வருடங்கள் பார்த்துக் கொண்டேதான் இருந்தேன் மனிதனை. ஆனாலும். மனிதர்கள் செய்யும் செயல்கள் சரி இல்லை. சரி இல்லை என்பதுபோல், ஒழுக்கம் இல்லாமல் வாழ்கின்றனர் மனிதர்கள். உள்ளத்தில் ஒன்றும், பின் புறம் கூறுவதாக ஒன்றையும் செய்து கொண்டு, ஏமாற்று வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். அதனிலும் பின் நிர்ணயித்து, பொய் கூறுதலும், பொறாமையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. நியாயங்கள் இல்லை, தர்மங்கள் இல்லை, ஆனாலும், யான் வந்து, பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். ஆனாலும் எதனை என்று கூற? என்வீட்டில் (மகரம்) யான் அமர்ந்துவிட்டேன். யான் நியாயாதிபதியாகவும் இருந்து, அனைவருக்கும் அவரவர்கள் தர்மத்தை செய்வதை பார்த்துத்தான் வரங்கள் வழங்குவேன், என்பேன், என்பதைப்போல் அவன்தனும் சொல்லிவிட்டான். நிச்சயமாய், அவன்தானும் தீமையை குறைப்பதில்லை  என்று கூறிவிட்டான்.

ஆனாலும் ஈசன் கூட பின் அவனிடத்தில் சென்று எதனை என்று நிர்ணயித்து, பின் சனி கூறினான்,

நீங்கள்தான் எந்தனுக்கு வரம் தந்தீர்கள். நியாயாதிபதி எப்பொழுதும், இறங்கிவிடக் கூடாது என்று கூட. யான் என் வீட்டில் அமர்ந்து கொண்டேன். பார்க்கின்றேன் ஒரு கையும் கூட. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும் யான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனாலும், எதை எப்பொழுது செய்வது என்று, பின் ராகு, கேதுவிடம் கூட உரையாடினேன். உரையாடிவிட்டு, பின் அவர்களும் ஒத்துக் கொள்ளவில்லை.  எதனால் என்று பின் பார்த்தால், அவர்களும், அவரவர் வீட்டில் அமேந்து பல கட்டங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இது ஈசன் கட்டளை.

இன்னொரு சூட்சுமமும் யான் உரைக்கின்றேன், பரிபூரணமாக. கேட்டுக்கொள்ளுங்கள். ஈசன் மீண்டும் கட்டளையிட்டான், கிரகங்களுக்கு. யான் உந்தனுக்கு கட்டளையிடுகின்றேன். பின் எப்பொழுது, எதை செய்தாலும் உடனடியாக தண்டனை கொடுத்துவிடு. இதைப்போல் பின் நிறுத்தி, நிறுத்தி வைத்தல் கூடாது. மனிதர்கள் இச்சென்மத்தில் எந்த எந்த தவறுகளை செய்கிறார்களோ, அதற்கும் தண்டனைகளை வாரி, வாரி வழங்கு, என கிரகங்களுக்கு ஈசன் கட்டளையிட்டுவிட்டான்.

அதனால், மனிதர்களே, ஒழுங்காக வாழ கற்றுக் கொள்ளுங்கள், என்பதைப்போல் இருக்கின்றது. இனிமேலும் ஒழுக்கம் இல்லாமல் வாழக்கூடாது என்பேன். பின் உலகிலே ஏன் இந்நோய்கள் வருகின்றது என்று பார்த்தால், எதனையும்/எதிலுமே பொருட் படுத்தாமல், மனிதன், நான்தான், நான்தான் என்று சென்று கொண்டிருந்தான். அத்தனையும் ஈசன் தடுத்துவிட்டான்.  பின் இப்பொழுது கூட சொல்கின்றேன். பின் நீதி கிடைக்கும் வரை, சனியும் எதையும் வாரி வாரி வழங்குவான். இந்த நோயும் போகும் போகும் என கூறினாலும், அவரவர் உடலில் தங்கிவிட்டது. இதனை முன்பே யாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இந்நோய் புதிதாக இல்லை என்பேன்.  எவ்வாறு என்று நிர்ணயித்துப் பார்த்தால். மனிதன் வேறு வேறு பெயர்களாக வைத்துக் கொண்டுதான் இருக்கின்றான். பின் எதனை என்று நம்புவது. ஆனாலும் இது அறுநூற்று ஆண்டுகளுக்கு வந்து கொண்டேதான் இருக்கும். இருப்பினும், கிரகங்கள் தம் சொந்த இல்லத்தில் அமர்ந்து கொண்டு இன்னும் வாரி வாரி வழங்குவார்கள் என்பேன்.

மனிதர்களே ஒழுங்காக வாழக் கற்றுக் கொள்ளுங்கள், என்பேன். அவனவன் வேலையை ஒழுங்காக செய்தால் ஒன்றும் ஆகாது என்பேன். இனிமேலும் எதனையும் நம்பிவிடாதீர்கள். ஏமாற்று வேலைகளை செயாதீர்கள் என்பேன். பின் தெரிந்தே செய்தால், கிரகங்கள், உடனேயே நோய்களை ஏற்படுத்தும். இப்பொழுதே எச்சரித்து விடுகின்றேன். யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்பேன். அவன் பெரும் சித்தனாகக்கூட இருக்கட்டும் என்பேன். அப்பனே! இனி எதையும் தவறு செய்துவிடாதீர்கள் இனியும். அன்பே தெய்வம் என அன்றே கூறி சென்றுவிட்டான். இறைவனிடம் அன்பை செலுத்துங்கள். அது போதும்.

இனி வரும் காலங்களில் இன்னும் நோய்கள் வரும். அதனையும் நேர்கொள்ள மூலிகை மருந்துகளை கூறிவிட்டேன். அவைகளை உண்டு உங்களை காத்துக் கொள்ளுங்கள், என்பேன். இனிமேலும் பல சித்தர்களும் வருவார்கள் என்பேன். தர்மத்தை நிலைநாட்ட, ஜீவ காருண்யத்தையும் பிடித்துக் கொண்டால் ஒரு குறையும் வராது.

ஒன்றை மட்டும் உரைக்கின்றேன். தர்மத்தை, தர்மத்தின் பாதையில் நின்று செய்யுங்கள். உந்தனுக்கு ஒரு குறை வந்தால் கூட எந்தனிடத்தில் கேள். அதற்க்கு யாம் பதிலளிக்கிறேன். மனிதர்களை பார்த்தால், தர்மம் செய்து வாழ்வது போல்தான் இருக்கின்றது. ஆனாலும், என் பெயர் சொல்லி, சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையானவர்கள் யாரும் இங்கில்லை. நான் சித்தன் என்று கூறிக்கொண்டிருந்தால், சித்தர்களே அவனை அழிப்பார்கள். அதனால். யாங்கள் போட்ட பிச்சையில்தான், நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.  அதனால் அப்பனே! எதையும், யான் செய்கின்றேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லிவிடாதீர்கள். அப்பனே, என்னை வைத்து பிறரை ஏமாற்றிவிடாதீர்கள். பாவம் அது என்று கற்றுக்கொள்ளுங்கள். வாழக் கற்றுக்கொள்ளுங்கள். எதனையும் கூறிவிடாமல் வாழ்வது நலம் என்பேன். அப்பனே, உண்மையை கூறிவிட்டேன். நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள், வாழுங்கள். சனியின் பார்வை குறைவதும் இல்லை என்பேன். அதனால், எவை என்று கூற, சனியும் நியாயாதிபதியாக இருந்து, நீதிபதியாக, அவன் ஆட்டத்தை தொடங்குவான். நான் என்ன துரோகம் செய்துவிட்டேன், எனக்கு ஏன் வந்தது என்று கூட நீங்கள் ஆராயலாம். இஜ்ஜென்மத்தில் செய்த தவறுகளை ஆராயுங்கள். அதனால்தான் சனி தண்டனையை வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும், எம்மக்களை யான் காப்பாற்றுவேன், நிச்சயமாக. மறுபடியும் வாக்கை கூறுகின்றேன் - பத்து நாட்கள் பொருத்தே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Friday, 21 May 2021

சித்தன் அருள் - 1003 - குருவாக்கு!

குரு வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Thursday, 20 May 2021

சித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!

காக்கும் கடவுளை மனதில் எண்ணி, பலமாக உரைக்கின்றேன், கொங்கணவன். உண்மையில் ஞானி அவர்கள் எவர் என்பதும் கூட இனி வரும் நாளில் தெரிய வரும் என்பேன். ஆனால், உண்மையான ஞானி என்பவர் யார் என்று இனி வரும் நாளில் தெரியவரும். அகத்தியரின் அருளும் பெற்று இருந்து, பின் பின் எவ்வாறு உயர்வது என்று கூட அகத்தியன் சரியான முறையில் கணித்துக் கொண்டுதான் போயிருக்கிறான் என்பேன். இதனால், பின் இவைதான் என்று கூறாமல், அகத்தியனும் பக்கத்திலே பன்மடங்கு இருப்பான் என்பேன்.  ஏன் என்றால், இப்பவுர்ணமி அன்று (சித்திரா பௌர்ணமி) கூட சித்தர்கள் தவத்தை மேற்கொள்வார்கள் என உறுதியாக கூறுகிறேன். இப்புவியில் என்ன என்ன நடக்கப் போகிறது என்று அறிவார்கள் சித்தர்கள். இதனால் இப்பவுர்ணமியை "சித்தர்கள் பௌர்ணமி" என்று கூட அழைக்கலாம். பின் அனைவருக்கும் நல்மனதாய் சித்தர்கள் ஒவ்வொரு இடத்திலும் தவம் செய்வார்கள் என்பேன்.

சரியான முறையாய் சித்தர்களை வணங்குபவர்களுக்கு பின் நல் முறையாய், எவை வேண்டும் என்பவர்களுக்கு, அவை தன் பக்தர்களுக்கு எப்பொழுது வரும் என்றும், அதனுடன் கட்டங்களையும், நிச்சயமாய் வந்து நீக்கி விடுவார்கள். அகத்தியனும் தவத்தில் தான் உள்ளான் என்பேன். இவ்வருடத்தில் எந்த எந்த கட்டங்கள் வருகிறது என்று அவனுக்கும் தெரிந்து விடும். 

இப்பவுர்ணமியில் சில சித்தர்கள் அண்ணாமலையில் வலம் வருவார்கள். மலை பகுதிகளிலும் இதுபோல்தான், ஓர் சித்தன் தவம் செய்வான். இப்படி பல இடங்களிலும் சித்தர்கள் தவம் செய்வார்கள். எந்தெந்த விளைவுகள், இவ்வுலகில் மாற்றம் அடையச் செய்கிறது என்று கூட ஒரு வாக்கு இருக்கிறது. இதனால்தான், எத்தனையோ பரிகாரங்கள் உரைக்கினும், இப்பவுர்ணமியில் அதை செய்தாலும், பலனளிக்காது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்தாலும், அவர்கள் தலை எழுத்தை சித்தர் வழியில் செல்ல மாற்றுவார்கள். ஏன் என்றால், இது "சித்தர்களுக்கான பௌர்ணமி" என்று கூறப்படுகிறது.

பரிகாரங்களை இங்கு(கோடகநல்லூர்) வந்து செய்கிற பொழுது, ராகு காலத்தில் வந்து செய்கிற பரிகாரங்கள் பலனளிக்கும் என்பேன். நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நல்முறையாய் ராகு கேதுக்களை கட்டுப்படுத்த இன்னொரு முறையையும் யான் சொல்கின்றேன். பிறை என்று சொல்கிறார்களே "மூன்றாம் பிறை" அதை தொடர்ந்து நவமாதங்கள் பார்த்துவிட்டால் ராகு, கேதுக்கள் நன்மை செய்துவிடும். இதை யார் உணர்வார்கள். ஏன் என்றால், எதனையும் நீக்குவதற்கும், அடிக்கடி பெருமாள் இங்கு வந்து அமர்ந்து விடுவார், யான் பார்த்தேன். யானும் வேங்கடவன் மலையில் தங்கி இருக்கும் பொழுது, இவன்தனை இழுத்து, இழுத்து வரவேண்டியுள்ளது. அதனால்தான் இப்பொழுது இங்கு வந்தேன் என்பேன். 

நல்விதமாய் ஆசீர்வாதங்கள். நல் முறையாய் சித்தர்களின் அருளால் நன்மையே ஏற்படும். அகத்தியனும், நல் முறையாய், நல்ல வழிகாட்டியாய் இருப்பான் உங்களுக்கு.  இனிமேலும் வரும் காலங்கள் உயர்வான காலங்கள் என்பேன்.  நல்முறையாய் வரும் காலங்கள் மக்களுக்கு சரியானதாய் இல்லை என்றாலும், அகத்தியனை நம்பி, பின் அவர்பின் தொடர்பவர்களுக்கு, பின் குறை இல்லாத வாழ்வே அகத்தியன் அளிப்பான், என்று நல்வாக்கு, பலிக்கும்.

அப்பனே உங்களுக்கும், நல்முறையாய், நல்ல ஆசீர்வாதங்களை, அகத்தியன் பெற்று தந்து கொண்டிருப்பான். இவ்வுலகில் நலமாக வாழ மூலாதாரமாக இருப்பது இறை சக்தி ஒன்றுதான். இறை சக்தி இருந்தால், பின் நல் முறையாய் அனைத்தும் தேடி வந்துவிடும். உங்கள் அனைவருக்கும் நல்முறையாய் இறை அருளை பெற்று தருவதற்கு, மூலகாரணமே அகத்தியன் என்பேன். இப்பொழுதும் நல் முறையாய், உங்களை பற்றிய சிந்தனைகளும் ஓடுகிறது என்பேன். இப்பொழுது தவம் செய்கின்றார்கள். ஈசனும் கூட வந்து நின்று எங்கெங்கோ பார்த்தான். அவன் திருவிளையாடல் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஈசன் வந்து பார்த்ததை நாடியில் யான் கூறியதை கண்டு மகிழ்ந்து, அகத்தியன் த்யானத்தில் இன்னும் இருப்பான். அனைத்து சித்தர்களும், இந்நாடியில் வந்து வாக்குரைப்பார்கள்.

எம்முடைய ஆசிகள், நலன்கள்.

சித்தன் அருள்........... தொடரும்!

Thursday, 13 May 2021

சித்தன் அருள் - 1001 - அன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு சில விஷயங்களை கேட்டு அதற்கு நாடி வழி நம் குருநாதர் பதிலளிக்கையில், பொதுவாக ஒரு விஷயத்தை கூறினார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

இனி வரும் காலங்களில், மனிதனுக்கு, என்ன வியாதி இது என்று தெரியாத அளவுக்கு நோய்கள் வரும், என்கிறார் அகத்தியப்பெருமான். அவற்றிலிருந்து விடுபட, கீழ் கூறிய மூலிகைகளை பொடித்து, ஒன்று சேர்த்து, தேனில் கலந்து, ஒரு சிறு உருண்டையாக்கி, தினம், காலை, மதியம், இரவு என மூன்று வேளை உட்கொண்டால், நோயிலிருந்து விடுபடலாம் என்ற தகவலை நமக்கு அருளிய பின் "இருவாரங்களுக்கு த்யானத்தில் இருக்கப்போகிறேன், அருள் வாக்கு யாருக்கும் இப்போது கிடையாது" என்று கூறி சென்றிருக்கிறார்.

அவர் கூறிய மூலிகைகள் (அளவு குறிப்பிடவில்லை):-

 1. எலுமிச்சை தோல் - 4
 2. சோம்பு
 3. கிராம்பு 
 4. பட்டை 
 5. சுக்கு 
 6. மிளகு 
 7. ஏலக்காய் 
 8. அதிமதுரம் 
 9. சித்தரத்தை 
 10. ஆடாதோடை 
 11. துளசி 
 12. மஞ்சள் 
 13. கடுக்காய் 
 14. இஞ்சி 
 15. கரிசலாங்கண்ணி 
 16. பொன்னாங்கண்ணி 
 17. மணத்தக்காளி 
 18. கோரைக்கிழங்கு 
 19. நித்யகல்யாணி 
 20. ஆவாரம்பூ பொடி 
 21. குறுமிளகு 
 22. கருஞ்சீரகம்
 23. செம்பருத்தி பூ 
 24. அவுரி இலை
 25. வெற்றிலை
 26. தூதுவளை 
 27. கற்பூரவல்லி
 28. நெல்லிப்பொடி
 29. காசினிப்பொடி
 30. வேப்பம்பூ
இயன்றவர்கள், அகத்தியப்பெருமானின் இந்த மூலிகைகளை பயன்படுத்தி, நல் ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Saturday, 8 May 2021

சித்தன் அருள் - 1000 - பொதிகையில் முதலில் ஸ்தாபித்த அகஸ்தியர் சிலை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பொதிகையை அகத்தியப்பெருமானுக்கு தாரை வார்த்து அங்கேயே இருந்து கொள்ளும்படி ஆசிர்வதித்தது சிவபெருமான் என்பது தெரிந்திருக்கும்.

அப்படிப்பட்ட பொதிகையை பிற மதத்தவர்கள் கையடக்கி அவர்கள் வழிபாட்டு ஸ்தலமாக மாற்ற முயன்ற பொழுது, ஒரு சில நல்ல மனிதர்களின் முயற்சியால், அகத்தியப்பெருமானின் சிலை 1970-71இல் நிறுவப்பட்டது. அந்த சிலை இப்பொழுது இல்லை எனினும், அந்த நிகழ்ச்சி சம்பந்தமாக கிடைத்த இரு புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிறிய சிலையாக இருந்தாலும், மிக அழகாக வடிவமைக்கப்பட்டதும், இன்றும் எங்கும் காண முடியாத அழகுடன் இருப்பதை கவனியுங்கள்.ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

Thursday, 6 May 2021

சித்தன் அருள் - 999 - அன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு!


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம். இந்த பொது நாடி சமீபத்தில் வாசிக்கப்பட்டது. இப்படி ஒரு கோபம் நிறைந்த நாடி வாக்கு இன்று வரை அகத்தியப்பெருமான் உரைத்து, அடியேன் கேட்டதில்லை. யாரை குறிவைத்து இவற்றை கூறுகிறார் என்று புரியவில்லை. முதலில், இதை வெளியிட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இருப்பினும், சித்தன் அருளை வாசிக்கும், உண்மையான அகத்தியர் அடியவர்கள் யாரும் தெரியாமல் எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள கூடாது என்கிற நல்ல எண்ணத்தில், சமர்ப்பிக்கிறேன்.

ஆதி ஈசனை நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன். இவ்வாண்டில் சில மாற்றங்கள் ஏற்படும் என்பேன். நம்பிக்கை இல்லோரை பின் மீண்டெடுக்க முடியாது என்பேன். பின் பலத்த மழையால் அழிவு ஏற்படும் என்பேன். ஏன் என்றால், ஈசன் சிறு சிறு விளையாட்டை, பெரு விளையாட்டாக மாற்றி விடுவான் என்பேன். என்பேன் பொய்யான பக்தியின் வழியில் மனிதர்கள் செல்வார்கள் என்பேன். இறைவனை நம்பினால் ஒன்றும் கிட்டாது என்று, நல் வழியை பயன்படுத்தி, தீய வழியில் செல்வார்கள். பின் அவர்களே அழிந்து போவார்கள். இவ்வாண்டு கூட, பொய்யான பக்தியை நிலைநாட்டி,  எல்லாமே அடைந்துவிடலாம் என்று, பக்தி மார்கத்தில் சில பொய்யான உருவங்கள் பக்தி மார்கத்தை நாடும் என்பேன். பின் சித்தர்களை வைத்து (கூறி) பொருள் பணம் சம்பாதித்து விடுவார்கள். ஆம்! ஆனால், அழிவு நிச்சயம் என்பேன். என்பேன், பின் மறைமுகமாக சில எண்ணங்கள் தோன்றி பெண்களை ஏமாற்றுவார்கள் என்பேன். பக்தி பாதை என கூறி அழைத்து சென்றவர்களே, எதிரியாகி விடுவார்கள். இதனால்தான் யான் கூறுகிறேன், அகத்தியனை நம்பினால், பின் அகத்தியனை மட்டும் வணங்கு என்று. பின், அகத்தியன் என்னும் பெயரை சொல்லி ஏமாற்றுவார்கள். பின்னர் பலப்பல வித்தைகளையும் மனிதர்கள் காண்பிப்பார்கள். பின், இனியும் வருவார்கள் மனிதர்கள். யாரையும் நம்பிவிடக்கூடாது.

அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் யான், திருத்தலங்களை கட்டுகிறேன் என்று பொருளும், பணமும் சேகரித்து, அவன் சௌகரியமாக அமர்ந்து கொள்வான். பின்னர் அத்திருத்தலங்களில் உள்ள தெய்வ மூர்த்தங்களே அவனை அழித்து விடும. இதனால் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமா, நீயே போய் செய்துவிடு, என்பேன். பின் ஒன்றை கேட்கின்றேன். சன்யாசிகளுக்கு இவையெல்லாம் எதற்கு? போகட்டும், மூன்று வேளை உணவிருந்தால் போதாதா? என்று கூட யாம் முன்னே பல முறை கூறியுள்ளேன். சந்நியாசியாக வந்துவிட்டால், சுகபோகமாக வாழ்வு கிடைக்கும் என மனிதர்கள் வருவார்கள். ஆனாலும், அன்னை, தந்தை, மனைவி, மகள், அண்ணன், தங்கை இவர்களை விட்டு விட்டு வருவார்கள்.

அனைவரும் என் மக்களே. அனைவரும் மிக கவனமாக இருங்கள். அனைவருக்கும் பலமாக, நல் ஆசிகளை இறைவன் உரைத்துவிட்டான். இனியும் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள் என்பேன். வருவார்கள், கலியுகத்தில், ஆனாலும் ஒன்றை உரைக்கின்றேன். இவர்களால்தான் இந்து மதம் கெட்டுக்கொண்டே இருக்கின்றது. எந்த மதத்ததையும் பற்றி பேசவில்லை. அனைத்து மதங்களும் எங்களுக்கு ஒன்றுதான். ஆனாலும் இதை பற்றி பேசத்தான் இங்கே கூறுகின்றேன்.  பின் இவர்கள் செய்கின்ற தவறுகளால், இந்து மதத்தையே இழிவுபடுத்தி விடுவார்கள். அதனால் தான் கூறுகிறேன், ஒழுங்காக வாழக் கற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல், யாங்களே, சித்தர்களே அழித்து விடுவோம். ஏனென்றால், நீ ஒழுங்காக இறைவனை வழிபட்டால், ஒழுங்காக வழிபட்டு சென்றுவிடு. மற்றவையெல்லாம் ஏன்? நீ என்ன இறைவனா? உன்னால் என்ன செய்ய முடிகின்றது? மனிதா! என் கோபத்திற்கு ஆளாகாதே! நிச்சயமாய் அழித்துவிடுவேன். இப்பொழுது கட்டளை இடுகின்றேன், அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று பொய் பித்தலாட்டம் ஆடுகின்றீர்களே, ஆனால் நிச்சயம் யானே அழித்து விடுவேன். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள், இனிமேலும் எந்தனுக்கு கோபம் வந்தால், அனைத்தையும் அழித்துவிட்டு போவேன். ஈசனைவிட எந்தனுக்கும் திறமைகள் அதிகமாக இருக்கின்றது. மானிடா, சொல்லுவதை மட்டும் கேளுங்கள். மானிடா, உங்களால் என்ன செய்ய முடியும். யங்கள் தான் உங்களையே காப்பாற்றுகின்றோம்.

நீங்கள் உங்கள் திறமைகளை பயன்படுத்தி, பித்தலாட்டம் செய்து எங்களுக்கு செய்வீர்களா? பார்க்கின்றேன், ஒவ்வொருவரையும் அடித்து நொறுக்குகின்றேன். அதனால் தான் கூறுகின்றேன். மானிடா, ஒழுங்காக வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்கள வேலை என்னவோ காய் மட்டும் செய்யுங்கள். மறைமுகமாக பெண்களை ஏமாற்றி விடாதீர்கள். சித்தர்கள் என்று சொல்லி சொல்லி வாழ்ந்த நிலையை இனிமேலும் யான் பொறுத்துக் கொள்ளமாட்டேன். ஈசன் எவ்வாறு நாடகத்தை நடத்த உள்ளான்,என்பதை விட அதிகமாக எந்தனுக்கு தெரியும். அனைத்து திறமைகளும் என்னிடத்தில் இருக்கின்றது. மானிடா, ஒழுங்காக வாழ கற்றுக்கொள். இல்லையெனில், பக்தன், பக்தன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?

இனிமேலும் சொல்கின்றேன், ஒழுங்காக இருங்கள். அகத்தியனின் கருணை கொண்டு கரையும் உள்ளம் கொண்டுதான் பார்க்கின்றேன். ஆனாலும் என்னை வைத்து இவ்வுலகில் பொருள் சம்பாதிப்பவர்கள், நோய் நொடி பற்றி வருவார்கள். பின் அவர்கள் இல்லத்தில் ஒரு அசம்பாவிதமும் நடக்கும். ஏனடா! எங்களை மறைபொருளாக வைத்து சம்பாதிக்க நாங்கள்தான் கிடைத்தோமா? யான் உங்களை காப்பாற்றுகின்றேன், நீங்கள் யார் எந்தனுக்கு செய்வதற்கு?

உந்தனுக்கு எதுவும் தேவை இல்லை என்று வந்துவிட்டாய். பின்னர் அத்தனை சுகம் கேட்கிறதா? அந்த சுகத்தை எவ்வாறு நிறுத்துவது என்பதும் எங்களுக்கு தெரியும். காகபுஜண்டனும் நல் முறையாய் கோபத்தில்தான் உள்ளான் என்பேன். அழித்துவிடுவான். பின் ஜாக்கிரதையாய் இருங்கள்.

வந்து உரைக்கின்றேன், இரு மாதங்களுக்குப் பின்.

சித்தன் அருள்............. தொடரும்!

Thursday, 29 April 2021

சித்தன் அருள் - 998 - அன்புடன் அகத்தியர் - நாடி வாக்கு - சிதம்பரம்!


ஒரு முறை சிதம்பரம் கோவிலில் அர்த்தஜாம பூஜைக்காக காத்திருந்த பொழுது, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் நாடி வாசிக்க வேண்டி வந்தது. தனிப்பட்ட நாடி வாக்கில் அகத்தியப் பெருமான் வந்து பொதுவான ஒரு சூட்சுமத்தை உரைத்தார். அதை மட்டும் அடியவர்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே தருகிறேன்.

"அப்பனே, இன்னொரு விளக்கத்தையும் ஒரு சூட்சுமமாக விளக்குகின்றேன்.  யாரும் விளக்கவில்லை. அப்பனே! பௌர்ணமி, அமாவாசை திதிகளில் இங்கு அமர்ந்து/உறங்கினால் அப்பனே, உடுக்கை சத்தம் கேட்கும், அப்பனே! நடை பயணம் கேட்கும், சலங்கை ஒலி கேட்கும். அப்பனே இங்கு திரிவார் என்பது திண்ணம். சிவபெருமான் இங்கு நடப்பதை கேட்கலாம். இது ஞானிகளுக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது.

அப்பனே! எவையென்று கூற! அப்பனே! இன்னொரு விளக்கத்தையும், மிக சூட்சுமமாக விளக்குக்கின்றேன். இதையும் யாரும் விளக்கவில்லை. அப்பனே! இரவு இங்கு உலா வந்து ஒரு காலம் அமர்ந்து, பின்னர் அண்ணாமலைக்கு வருவான். பின்னர் அங்கு சுற்றி திரிவான் இறைவன். பின்பு ஏகாம்பரம் என்றழைக்க கூடிய காஞ்சிபுரம் செல்வான். இங்கிருந்து காளத்திரி (காளஹஸ்தி) போவான். அதன் பின்னர் அதிகாலையில் திருவானைக்காவில் நீராடுவான் இவன்" என்றார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நாடி வாசித்தது ஒரு அமாவாசை திதி அன்று, சிதம்பரத்தில். நாடி வாக்கை பதிவு செய்த பொழுது, பின்னணியில் சதங்கை ஒலியும் பதிவாகியுள்ளது. அதை உணரும் பாக்கியம் ஒரு சிலருக்குத்தான் கிடைத்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்! 

Sunday, 25 April 2021

சித்தன் அருள் - 997 - அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-2!

இன்னும் ஒரு சூட்சுமமான விஷயத்தை உரைக்கின்றேன். கெட்ட வினைகளால் இன்னும் கெடுதல் நிகழ்ச்சிகள் வரும். ஒன்றை உரைக்கின்றேன். நல் முறையாக அனுதினமும், மாலை வேளையில் இல்லத்தில் ஒரு தீபமேற்றி, அதில் நல் மூலிகைகள் இட்டு, ஒரு சிறு கற்கண்டம், ஏலக்காயும் இட்டு, நல் முறையாய் வேண்டிக்கொண்டு, "அகத்தியன்" என்று சொல்லிவிடுங்கள். அப்பனே, யான் இருக்கின்றேன். யான் இருக்கும்பொழுது, எதையும் நம்பாதீர்கள். அப்பனே, இதையும் யான் சொல்லுகின்றேன். யான்தான் அகத்தியன் என்றெல்லாம் வருவார்கள். அப்பனே நம்பிவிட்டால், நீங்கள்தான் அதற்கு பொறுப்பு என்று சொல்வேன். [தீபம் ஏற்றுவதை பற்றி தெளிவாக உரைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நாடியில் கேட்ட பொழுது "கிராம்பு, ஏலக்காய், கற்கண்டும், ஏதேனும் ஒரு வாசனாதி பொருள் (பச்சை கற்பூரம் ஆகலாம்) - இவை அனைத்தையும் பொடித்து சேர்த்து, தினமும் விளக்கேற்றி, நம் குருநாதருக்கு என வேண்டிக்கொண்டு, அதன் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்" என சொல்கிறார்].

அகத்தியன் என்று ஒருவன் இருக்கின்றான், இப்பொழுது தேடி வந்தீர்களே, எவ்வாறு தேடி வந்தீர்கள், நீங்களா வந்தீர்கள், இல்லை யானே அழைத்தேன். யானே அழைத்த பொழுது, நல்லது செய்யாமல் விட்டுவிடுவேனா நான். அதனால் பக்தன் என்று நிறைய பேர் வருவார்கள். இனியும் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லுவேன். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை எடுத்து வாருங்கள். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை விட்டுவிட்டு, நாடி சென்றால், நீயும் மனிதன், அவனும் மனிதன். இதை சிந்தித்துக்கொள் என் மக்களே! இப்பொழுது கூட சொல்லிவிடுங்கள் "அகத்தியன் இருக்கின்றான்" என. பின்பு, உங்கள் வேலையை பார்க்கத் தொடங்குங்கள்.

சாமியார் வேடம் போட்டு உட்கார்ந்து கொண்டால் எல்லாம் வரும் என்றுணர்ந்து, தானே சாமியார், என கூறுவான். அவன்தன் பலவித சுகங்களை அனுபவிப்பான். இவனைவிட கீழான மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. ஆனால் யாரையும் நம்பாதீர்கள், நம்பாதீர்கள் என்றுதான் யான் சொல்வேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமைகள் இருக்கின்றது. இனிய அறிவை யான் கொடுத்துவிடுவேன். ஆயினும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான வினைகளில் மாட்டிக் கொண்டிருக்கின்றீகள், என்பது எந்தனுக்குத் தெரியும். அவை, சிறிது சிறிதாக விலகும் என்பேன்.

அப்பனே, நல் முறையாக எதனை செய்தால், என்றெல்லாம் தோன்றும். எதுவும் வேண்டாம். அகத்தியனை நினைத்துக் கொள்ளுங்கள். அப்பனே, பின் மகன்களுக்கு எதை செய்யவேண்டும் என்று எமக்குத்தெரியும். அதை யான் செய்கின்றேன். அதை விட்டுவிட்டு, அது வேண்டும், இது வேண்டும் என கேட்டுக் கொள்ளாதீர்கள்.  அன்பு மட்டும்தான் இந்த மாய உலகில் சிறந்தது. ஆகவே அன்பை செலுத்துங்கள், போதுமானது.

வரும் வழியிலேயே ஆசீர்வாதங்களை கொடுத்துவிட்டேன். அன்பு மகன்கள், இப்பொழுதும் யான் இங்கே இருக்கின்றேன். அனைவருக்கும், எனது ஆசிகள். மீண்டும் வந்து வாக்குகள் உரைக்கின்றேன். அப்பனே எம்மை தேடி இங்கு வந்தீர்களே! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சுபிட்சம் நடக்கப்போகின்றது. இதுவரை ஈசன் நடத்தும் நாடகத்தில் கட்டங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றது. அதையும் யான் பார்த்துக் கொள்கின்றேன். அன்பு மகன்களே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் செல்லுங்கள்.

மீண்டும் ஒருமுறை உரைக்கின்றேன். அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் இருக்கின்றது. நீங்களே பக்திமான்களாகலாம். அதை விட்டுவிட்டு, எதை எதையோ சென்று அடைந்தால், மீண்டும் தோல்விகள்தான் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், என் மக்களே. அனைவருக்கும் ஆசீர்வாதங்களை கொடுத்து அனுப்புகின்றேன், இப்பொழுது.

பொதிகை வாக்கு நிறைவு பெற்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

Thursday, 22 April 2021

சித்தன் அருள் - 996 - அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-1!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.ஜானகிராமன் அவர்கள், நாடியில் வாசிக்கும் விஷயங்களை ஒரு தலைப்பின் கீழ் வெளியிட, வாசகர்களிடம், ஒரு தலைப்பை சொல்லுங்களேன், என கேட்டிருந்தேன். நிறைவாக அகத்தியர் அடியவர்கள் நிறையபேர் பலவித தலைப்பை கூறியிருந்தனர். அவற்றை குருநாதரிடம் சமர்ப்பித்து கேட்ட பொழுது "அன்புடன் அகத்தியன்" என்ற தலைப்பு அவரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தலைப்பை அகத்தியர் அடியவர் உமாராணி என்பவர் கூறியிருந்தார். அவருக்கும், வேறு பல தலைப்பையும் கூறிய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைத்தளத்தின் "நன்றி"யை தெரிவித்துக்கொள்கிறேன்.  நலமாய் வாழ்க!

முதன் முதலாக, அகத்தியப்பெருமானுடன் ஆன நாடி வாக்கு யாத்திரையை "பொதிகையிலிருந்து" தொடங்குவோம்.

2021இல் ஒரு அகத்தியர் குழுவானது, பொதிகை சென்று அகத்தியப் பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்தனர். அந்த குழுவில்  இருந்த, திரு ஜானகிராமன் அவர்கள், பூசைக்குப் பின் அகத்தியரிடம் பொது அருள் வாக்கு கேட்டார். அவர் நாடியில் வாசித்ததை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக கீழே தட்டச்சு செய்து சமர்ப்பிக்கிறேன்.

"அப்பனே நலன்கள் ஏகும்! காண வந்தீர்கள், எவை என்று கூறாமல்! அப்பனே அத்தனை அனுக்ரகங்கள். ஒவ்வொருவரையும் யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். அப்பனே கவலை இல்லை. ஆனாலும் வரும் காலம் அழியும் காலம் என்பேன்.  அப்பனே! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள், கட்டங்கள் வந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் அப்பனே! என்னை நம்பியவர்களை ஒரு பொழுதும் கைவிட்டதாக சரித்திரம் இல்லை. அப்பனே வரும் காலங்களில் இதைத்தான் சொல்லுகின்றேன்.

ஈசனும் வரும் காலங்களில் பலவித கட்டங்களை கொடுப்பான். என் பக்தர்களை, கூடவே இருந்து கட்டங்களிலிருந்து காப்பேன் என்று இப்பொழுது உத்தரவு அளிக்கின்றேன்.  எவ்வாறு என்றும் கூட, முடியாமல் பின் எவ்வாறு தாழ்ந்து வந்தீர்கள் என்று கூட என்னால் பார்க்க முடிந்தது. அப்பனே இருந்த போதிலும், என் ஆசிகள் பரிபூரணம் என்பேன்.

அப்பனே, இங்குள்ளவருக்கும், ஒவ்வொருவருக்கும் நான் பார்த்து ஆசிர்வதித்துவிட்டேன் என்பேன், அவரவர் வழியில் செல்ல. அப்பனே, ஆனாலும் துன்பங்கள் நீங்காது, ஏன் என்றால் இது கலியுகம். அகத்தியன் என்று சொன்னாலே மோட்சம்தான். ஆனாலும் சில சில வினைகளால், கட்டங்கள் வரும், அதையும் நான் தீர்த்து வைத்துவிட்டால், பின் மனித பிறப்பிற்கு சரித்திரமே இல்லாமல் போய்விடும். இதனால் நன்கு உணர்ந்து எதனை செய்வது என்றும், எதனை செய்யக்கூடாது என்பதும் எந்தனுக்கு தெரியும். பின்பு சிறிது கட்டங்கள் வந்தாலும், அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள். ஆனாலும் இன்பமே வந்துவிட்டாலும், மோக்ஷ கதியை அடைய முடியாது. அப்பனே, அகத்தியனை வணங்குபவர்கள்,நிச்சயமாய் மோக்ஷகதியை அடைவார்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கட்டங்கள் வந்து கொண்டிருக்கும். அதையும், தனிப்பாதையாய் மாற்றுகிறேன். அப்பனே, இப்பொழுது சொல்கின்றேன், அனைவருக்கும், இது மோக்ஷ பிறப்பு. அது எப்படி என்று உணராமலேயே என்னை வந்து கண்டுவிட்டீர்கள். ஆனால் நானும் வழியில் உங்களோடு வந்தேன் என்பேன்.  அதனால், தொல்லைகள் இல்லை, தொல்லைகள் வராது என்பேன். அப்பனே, எவை என்று சிந்தித்துப் பார்த்தால், பொய்யான உருவங்கள், பொய்யான பக்தர்கள், பொய்யானவர்கள், நிறைய வருவார்கள். அப்பனே நம்பிக்கையாக இருங்கள், அகத்தியன் இருக்கிறான் என்று. ஆனாலும், யாரையும், இனிமேல் நம்புதல் கூடாது என்பேன். அப்பனே, நான் அதை செய்வேன், இதை செய்வேன் என்றெல்லாம் வருவார்கள். எம்மை நம்பிவிட்டால், (அவர்களால்) ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.  அகத்தியன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிடுங்கள். அனைவருக்கும், ஆசிகளாக, எந்தனுக்கு அகத்தியன் இருக்கின்றான் என்று சொல்லிவிடுங்கள். ஆனாலும், நிறைய பேர்கள் வருவார்கள். அதனை செய்கின்றேன், இதனை செய்கிறேன் என்பார்கள். அதனால் ஒன்றும் பிரயோசனமில்லை, கட்டங்கள்தான் வரும். இங்கு இறைவனின் சக்தியை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அதனால்தான் சொல்லுகின்றேன்.

அதை செய்தால், இது நடக்கும், இதை செய்தால் அது நடக்கும் என்று கூட பணத்துக்காக வருவார்கள். அப்பனே! இன்றே உரைக்கின்றேன், சூட்சுமமாக. யாரையும் நம்பிவிடாதீர்கள். அப்பனே என்னை நம்பிவிட்டீர்களா, என்னையே நம்பி விடுங்கள். அப்பனே, வழியை நல்ல வழியாக யாம் காண்பிக்கிறேன். அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும். இதை விட்டுவிட்டு மற்றவைகளை நம்பி போனால், எவை என்று தெரியாத அளவுக்கு, கட்டங்களை அள்ளித்தந்து போவார். அப்பனே! ஈசன் நடத்தும் நாடகத்தில், அழியும் காலம் வந்துவிட்டது. அப்பனே, ஒவ்வொரு வினைகளாலும் மனிதன், மனிதனை அழித்துக் கொள்வான்.

சித்தன் அருள்...............தொடரும்!

Thursday, 15 April 2021

சித்தன் அருள் - 995 - அகத்தியர் ராஜ்ஜியம் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் அருளால், அவரின் உத்தரவின் பேரில், திரு. ஜானகிராமனை, நாடி வாசிப்பவராக  சித்தன் அருள் வலைப்பூ வழி உங்களுக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகமிருக்கும், என நினைக்கிறேன். எத்தனையோ அடியவர்களின், கேள்விகளுக்கு விடை அளித்து, வழி நடத்தி, மனப்புண்களுக்கு மருந்துதாக, யாம்  உன்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றெல்லாம் அருள்வாக்கு தருவதாக, தெரிய வந்தது.

திரு ஜானகி ராமன், அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுது, அடியேனை அழைத்து, அவருக்கு அகத்தியப்பெருமான் இடுகின்ற கட்டளைகளை, அதன் வழி நடத்துகிற நல்ல விஷயங்களை, அனுபவங்களை, முடிந்தவரை, அகத்தியர் உத்தரவுடன் பகிர்ந்து கொள்வார்.

அனுபவங்களை கேட்கும் பொழுது, அடடா, இதுவல்லவா, குருநாதர் நடத்தும் நாடகம். இதில் அடியேனுக்கு பங்கு பெற முடியாமல் போனதே! என நினைக்க தோன்றும். இருப்பினும், ஒரு முறை, பேசும்பொழுது, "இந்த மாதிரி அனுபவங்களை/பொது வாக்கை, அகத்தியர் அனுமதியுடன் சித்தன் அருள் வலைப்பூவில் வெளியிடலாம்! அவரிடமே, உத்தரவு கேளுங்களேன், என்றேன்.

கேட்டுப் பார்க்கிறேன், என்ன சொல்வார் எனத் தெரியவில்லை! என்றார்.

"சரி! பார்க்கலாம்! என்றேன், சிரித்தபடி.

வருடங்களாக ஒரே பிரார்த்தனையை திருப்பி திருப்பி அகத்தியப்பெருமானிடம் வைத்து, அவர் மனம் இளக வைத்த அடியவர்கள் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்த்தார் என்றால், இந்த ஒரு வேண்டுதலையும் அனுமதிப்பார் என்று அடியேன் மனம் கூறியது. பொறுமையாக காத்திருந்தேன்.

இரு வாரங்களுக்குப்பின் அகத்தியப்பெருமான் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியால் மனம் குளிர்ந்து, மிகுந்த சந்தோஷத்தில் இருந்த நேரம், ஜானகி ராமன், அகத்தியப்பெருமானிடம் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டார்.

"நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் எந்த விதத்திலும் அந்த நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள் மனம் நோகாமல், அவர்கள் அடையாளம் வெளியே தெரியாமல். வார்த்தைகளை மிக கவனமாக உபயோகித்து, யோசித்து வெளியிட வேண்டும். அனைவரும் எமது சேய்களே!  ஒருவரின் அனுபவம், பிறருக்கு பாடமாக அமையலாம், வழி நடத்தலாகவும் அமையலாம். ஆகவே, அனுமதி உண்டு!" என ஆசிர்வதித்தார்.

இந்த தகவலை அவர் அடியேனிடம் தெரிவித்த பொழுது, மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். இத்துடன், அவ்வப்பொழுது, அகத்தியப்பெருமான் நாடியில் உரைக்கும், பொது வாக்கினையும் அனைவருக்கும் தெரிவிக்கலாம் எனவும் அனுமதித்துள்ளாராம்.

சரி! இங்கு தெரிவிக்கப்படுகிற விஷயங்களை ஒரே தலைப்பின் கீழ் தொகுத்து வழங்கலாம் என்று ஒரு எண்ணம்.

"அகத்தியர் ராஜ்ஜியம்" என்கிற தலைப்பை யோசித்துள்ளேன். உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் கூறுங்கள். மிக சிறப்பாக இருக்கிறது என அகத்தியப்பெருமான், கூறினால் அதை எடுத்துக்கொள்ளலாம்.

விரைவில் அடியேன் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்!

சித்தன் அருள்............தொடரும்!

Wednesday, 14 April 2021

சித்தன் அருள் - 994 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22]


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2020ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள் இந்த வருடம்", எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து இறைவன்/பெரியவர்களின் அருள், ஆசிர்வாதம், நிம்மதியான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:- 

07/06/2021 - திங்கள்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

20/07/2021 - ஆடி மாதம் - செவ்வாய்க்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம் 

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

21/07/2021 - ஆடி மாதம் - புதன்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி திதி - கேட்டை நட்சத்திரம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

22/07/2021 - ஆடி மாதம் - வியாழக்கிழமை  - சுக்லபக்ஷ திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம்.

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

04/09/2021 -ஆவணி மாதம் - சனிக்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.

18/10/2021 - திங்கள் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - பூரட்டாதி/உத்திரட்டாதி நட்சத்திரம். 

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்தியப் பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து, நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2021 முதல் 13/01/2022க்குள் வருகிறது. 

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-

23/12/2021 - வியாழக்கிழமை - மார்கழி மாதம், சதுர்த்தி திதி - ஆயில்யம் நட்சத்திரம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Tuesday, 13 April 2021

சித்தன் அருள் - 993 - இந்த வருட திருவோண நாட்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது.

"ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.

எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது."

சித்திரை - 04/05/2021
வைகாசி - 31/05/2021
ஆனி - 27/06/2021
ஆடி - 25/07/2021
ஆவணி - 21/08/2021
புரட்டாசி - 17/09/2021
புரட்டாசி - 15/10/2021
ஐப்பசி - 11/11/2021
கார்த்திகை - 08/12/2021
மார்கழி - 05/01/2022
தை - 01/02/2022
மாசி - 28/02/2022
பங்குனி -28/03/2022

அகத்தியரின் உத்தரவை நிறைவேற்றி, அவர் அருள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

Monday, 29 March 2021

சித்தன் அருள் - 992 - அகத்தியரின் பாலராமபுரத்தில், திருவிழா!

 வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பாலராமபுரம் அகத்தியப்பெருமானின் கோவிலில், வருடாந்திர பூசை திருவிழா, ஏப்ரல் மாதம் 5ம் தியதி முதல் 14ம் தியதி வரை நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை கீழே தருகிறேன். இந்த திருவிழாவில் பங்கு பெற விரும்புகிறவர்கள், தொடர்பு கொள்ள வேண்டியது,

திரு.ரத்தீஷ், செயலர் பாலராமபுரம் கோவில் - 90483 22565.

அனைவரும் அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாயின் அருள் பெற்று சிறப்பாக வாழ வேண்டிக்கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Monday, 22 March 2021

சித்தன் அருள் - 991 - அனந்தபத்மநாப சுவாமி கோவில், திருவனந்தபுரம்-பத்மநாப ஸ்வாமிக்கு சூரிய பகவானின் நமஸ்காரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

திருவனந்தபுரத்திலுள்ள, ஸ்ரீ பெரும்தேவி தாயார் சமேத அனந்த பத்மநாபா சுவாமி கோவில் என்பது நம் குருநாதர் அகத்தியப் பெருமானுக்கு நிறையவே தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். அகத்தியப்பெருமான், சிவபெருமானின் உத்தரவால், பாரத கண்டத்தை காக்க பல விஷயங்களை நடத்திக் கொடுத்தார். அதில் மிக மிக உயர்ந்த நிலையில் அவரே விரும்பி தன் ஜீவசமாதியாக பத்மநாபசுவாமி கோவிலையும் அமைத்துக் கொண்டார். அப்படிப்பட்ட கோவிலை பின்னர் காலங்களில், விரிவுபடுத்திய பொழுது, கட்டிடக்கலையின் மிக அரிதான சூக்க்ஷுமத்தை கோபுர வடிவில் அமைத்தார். அது என்ன என்பதை கீழே விளக்குகிறேன்.

வருடத்தில் இரண்டு நாட்கள் பகலும், இரவும் சரி சம அளவாக இருக்கும் நாட்கள் இரண்டே நாட்கள் தான். அவை, மார்ச் மாதம் 21ம் தியதியும் செப்டம்பர் மாதம் 23ம் தியதியும். இந்த இரண்டு நாட்களிலும் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், கோவிலின் கிழக்கு வாசலில் நின்று கோபுரத்தை பார்த்தால், சூரியன், தன் கதிர்களை கோபுரத்தின் ஐந்து வாசல்கள் வழியும் நுழைந்து, வெளிச்சம் போட்டு கோபுரத்தை அழகுபடுத்தி செல்வதை காணலாம்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சி நம் குருநாதரின் சமாதி கோவிலில் எல்லா வருடமும் நடக்கிறது என்பது மிக ஆனந்தம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

அடியேனுக்கு கிடைத்த ஒரு காணொளியை, நீங்களும் கண்டு மகிழ இங்கு சமர்ப்பிக்கிறேன்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள் ............... தொடரும்!

Thursday, 18 March 2021

சித்தன் அருள் - 990 - அகத்தியப்பெருமான் அருளிய ஒரு சிறு பரிகாரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நவகிரகங்களில், சனி கிரகத்தினால், மனிதர்கள் கடுமையாக பாதிக்க படக்கூடாது என்பதற்காக அகத்தியப்பெருமான் ஒருமுறை அருள்வாக்கில் நல்ல வழியை உரைத்தார். அதை செய்து பார்த்த பொழுது, அன்னம் தானமாக கொடுப்பதின் பலனை அடியேன் தத்ரூபமாக அனுபவித்ததினால், நண்பர்களுக்கு தெரிவித்து நல்ல பலனை அவர்கள் பெற்றதையும் கண்டேன்.  இன்று அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சனிக்கிழமையன்று ஒரு உள்ளங்கை நிறைய பச்சரிசியோ அல்லது அதை நன்கு பொடி செய்து மாவோ எடுத்து, சூரியன் உதித்தபின் நமஸ்காரம் செய்துவிட்டு, அரச மரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வந்து, அந்த அரிசியை/அரிசி மாவை மரத்தை/விநாயகரைச்சுற்றிப்போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம்.  சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள், தமது மழைக் காலத்திற்காக  சேமித்து  வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படிஇரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அது வலு இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு  உணவாகப் போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, சனி மகா தசை நடப்பவர்களுக்கு, இது ஒரு மிகப் பெரிய வரப்ரசாதம் ஆகும். இதனுடன், உடல், ஊனமுற்றவர்களுக்கு காலணிகள், அன்ன தானம் அளிப்பது, மிக நல்லது.

இதை தொடர்ந்து செய்து வர பல தலைமுறைகளுக்கான புண்ணியத்தை நாம் எளிதில் சேர்த்துவிடலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Sunday, 14 March 2021

சித்தன் அருள் - 989 - குருநாதர் அகத்தியப் பெருமானுக்கு சமர்ப்பணம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானுக்கு குருதக்ஷிணையாக திரு.R.தேவராஜன் அவர்கள் சமர்ப்பித்த பாடல் தொகுப்பில், இரண்டு பாடல்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இரு பாடல்களையும் கேட்டுவிட்டு, இயற்றி, இசை அமைத்து, பாடி சமர்ப்பித்த அனைவரையும், வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இன்னும் இதுபோல் நிறைய பாடல்களை குருநாதர் மேல் பாடி சமர்ப்பிக்க வேண்டிக் கொண்டு, அடியேன் அவர்களை வாழ்த்துகிறேன்.

பாடல் : சப்த ரிஷிகளில்
இயற்றியவர் : திரு.கு.மா.பா.திருநாவுகரசு
இசை :திரு.R.தேவராஜன்
பாடியவர் : திரு.பிரசன்னாபாடல் : அ முதல் ன் வரை எழுத்துக்கள்
இயற்றியவர் : திரு.கு.மா.பா.திருநாவுகரசு
இசை : R.தேவராஜன்
பாடியவர் : R.தேவராஜன்பாடல்கள் ஐந்தையும் டவுன்லோட் செய்ய கீழே உள்ள தொடுப்பை  உபயோகிக்கவும்.


ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்................தொடரும்!

Saturday, 13 March 2021

சித்தன் அருள் - 988 - பச்சைவண்ணப் பெருமாளுக்கு/குருவுக்கு சமர்ப்பணம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.R.தேவராஜன் என்கிற இறை/அகத்தியர் அடியவர் ஒரு பாடல் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது பாடலாக, "கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமாள்" மீது இயற்றி பாடப்பட்ட பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 

பாடல்:திரு.ந.முரளிதரன்
இசை:R.தேவராஜன்
பாடியவர்: :R.தேவராஜன்  

பாடலை கேட்டபின், இயற்றி, இசையமைத்து, பாடிய அனைவரையும் வாழ்த்தி வணங்கிட வேண்டுகிறேன். இவர்கள், மேலும் மேலும் நிறைய பாடல்களை சமர்ப்பித்து, இறையருள்/குருவருள் பெற வேண்டிக்கொள்கிறேன்.


பச்சை வண்ண பெருமாளே
----------------------

பல்லவி :-
-----------------

பச்சை வண்ண பெருமாளே
பவளவாய் திருமாலே
ப்ரஹன் மாதவனே
உன்னை, ஐப்பசியில் காண்பேனோ
ஐயுற்றேன் நானே
தொற்று எங்களை தடுக்குமோ
உன் திருவடி
பற்ற வழி  பிறக்குமோ

சரணம் :-
----------------

குருவின் திருவருள்
குறையின்றி இருக்க
கலக்கம் எல்லாம்
காற்றாய் பறக்க
அம்பாய் அடியவர்கள்
தெம்பாய் கிளம்பிட

திரயோதசி மலர்ந்த காலை
லோப அன்னையை வணங்கிய வேளை
சேயென தழுவி
குளிர்ந்து போனாளே  
ஆசி வழங்கி போனாளே

சரணம் :-
---------------

குறுமுனி  கையால்
அபிஷேகம் கிடைக்க
ஆனந்த லயமாய்
மாதவன் சிரிக்க
பண்பாய் அன்பர்கள்
பரவசமாய் பார்த்திட

கருட பூமி வந்த நாளே
கோடி புண்ணியம்
சேரும் நாளே
நீரென அருவி
எந்தன்  க(ண்)ணிலே
சேரும்
உந்தன் பாதத்திலே


குருவே சரணம்

பாடல்:திரு.ந.முரளிதரன்
இசை:R.தேவராஜன்
பாடியவர்: :R.தேவராஜன்


குருவே சரணம்
 ----------------------------

பல்லவி :-


குருவே சரணம் குருவே சரணம்
எனை ஆட்கொண்ட மாமுனியே சரணம்
கருவே வினை தருமே பிணை
மறுபிறவி அறுக்கும் மாமருந்தே சரணம்

இடகலை பிங்கலை இடையே நடமிடும் சிவமைந்தனே சரணம்

சரணம் :-
---------------

உந்தன் தமிழ்தனை
துளியென தந்தனை
என்னுள் அமிழ்தென
நாளும் வளர்த்தனை
அருளினை தருவாய்
அறத்தினை முகிலாய்
மனத்தினில் பொதித்த
மாமுனியே சரணம்

சரணம் :-
--------------

கோபக் கனலினை
குளிர செய்தனை
பாபச் சுமையினை
பஞ்சென குறைத்தனை
அகத்தினை ஒளியாய்
சகத்தினை காப்பாய்
லோப மணாளனே சரணம்

ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday, 11 March 2021

சித்தன் அருள் - 987 - அகத்தியப்பெருமானுக்கு குருதக்ஷிணை சமர்ப்பணம்!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய மஹாசிவராத்திரி அன்று எல்லோரும் இறையருள் பெற்று நலமாய் வாழ பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய!

திரு.தேவராஜன் என்கிற அகத்தியர் அடியவர், நம் குருநாதர், கோடகநல்லூர் பெருமாள் பெயரில், ஒரு பாடல் தொகுப்பை இசை தட்டாக வெளியிட்டுள்ளார். மிக சிறப்பாக வந்துள்ள அந்த பாடல்களை, கோடகநல்லூர் பெருமாள் சன்னதியில் சமர்ப்பித்தபின், சென்னை தியாகராஜ நகரில் உள்ள அகத்தியர் ஆலயத்திலும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

இசை தட்டில் வெளியிட்ட ஐந்து பாடல்களையும், அடியேனுக்கு அனுப்பித்தந்து, அனைத்து அடியவர்களும் கேட்டு பயனுற, அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூவில் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளார். முதல் பாடலை வீடியோவாக உருமாற்றி கீழே தருகிறேன். பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளது. 

பாடல்: உம்மை தேடி சென்ற வழிகள்
பாடியவர்:D.பிரவீன் சக்ரவர்த்தி
இசை:R.தேவராஜன்
இயற்றியது-திரு.அக்னிலிங்கம்குருவுக்கு தக்ஷிணையாக பாடலை சமர்ப்பித்த திரு: R.தேவராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பித்து, பாடிய திரு.பிரவீன் சக்ரவர்த்தி மேலும் இதுபோல் நிறைய பாடல்களை குருவின் மீது இயற்றி/பாடி வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன். நீங்களும் பாடலை கேட்டு, அவருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

உம்மை தேடிக் சென்ற வழிகள் என்னை
அழைத்து சென்றது ஆண்டவனிடம்

குரு தக்ஷிணை கொடுக்க உம்மை
ஓடித் தேடிய அப்பொழுது
"நல்லது செய்ய பழக
வாய்ப்பளித்தது இறைவன் என்றீர்!"
அவனுக்கு நன்றி கூறு
அதுவே குருதக்ஷிணை ஆகும்
இறையே அனுமதிக்கா எதுவும்
எங்கள் தட்சிணையாகாதென்றீர்.

மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கவேண்டா!
மனமது செம்மையாகிட
ஆசைகளை அறுமீன்காள் என்றீர்
கரையேரா ஆசைகள் எல்லாம்
வாசனையாய் மாறுமென்று
கடவுளை நாடிச்செல்ல
கடத்திவிட மறுத்ததேனோ!

உங்களின் தரிசனம் கூட
நியாயமாய் மறுக்கப்பட
இருமுறை சன்னதி வந்தும்
கதைவடைத்தது அது ஏனோ!
அனுபவமே நான்தான் என்று
ஆதியில் இறையே உரைக்க
அனுபவம் தேடிச்சென்று
இறையை கண்டு கொண்டேன்.

மேலான தர்மங்கள் மனிதருக்கு உரைத்திட
இறைவன் அனுமதிதான் என்றும் தேவை என்றீர்
மனிதருக்கு புரியும் விதமாய்
மனதினை மாற்றியமைக்க
குருவருள்தான் என்றும் வேண்டும் அய்யா!

இனியுள்ள வாழ்க்கையில்
குரு உம்மை அடிபணிந்து
உம் திருப்பாதம் சிரசில் ஏந்தி
மகிழ்ந்திட வாய்ப்பளிப்பீர்!

சித்தன் அருள்............தொடரும்!

Thursday, 4 March 2021

சித்தன் அருள் - 986 - ஆலயங்களும் விநோதமும் - ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருநெல்வேலி!


திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது. இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது

முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். 

பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.

நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார். ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.

ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.

நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் 5–ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.

தாமாகத் தோன்றிய பெரிய திருமேனி. மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

திருத்தொலைவில்லிமங்கலம் அருகிலுள்ள சௌரமங்கலம் கிராமத்தில் அவதரித்த நம்மாழ்வாரை, அவரது பெற்றோர் குருகூருக்கு அழைத்து வந்து ஆதிநாதன் ஸந்நிதியில் விட்டனர். குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்தது. மதுரகவி ஆழ்வார் இங்கு வந்து தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய்மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. அதனால் 'ஆழ்வார் திருநகரி' என்று பெயர் பெற்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!