வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நம் குருநாதரின் மேற்பார்வையில் ஆன்மீக பயணம் செய்வது மிக இனிமையான ஒன்று. பலமுறை, நம்மை கழட்டிவிட்டு, "நீ விலகி நின்று வேறு ஒருவரை செய்ய விடு" என்று உத்தரவிடுவார். குருநாதர் என்ன சொல்கிறாரோ அதற்கு தலைவணங்கி அதன் படி விலகிநின்று வேடிக்கை பார்ப்பது ஒரு சுவாரசியமான விஷயம்.
கோடகநல்லூர் ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு, இரண்டாவது அபிஷேக பூஜையை அவர் எண்ணப்படியே நடத்தி எடுத்துக்கொண்டார். இவ்வுலகில் அதர்மம் வளர்ந்துபோய், காலத்தில் கலியின் விளையாட்டால், விஷம் ஏறிப்போய், மிக ஆபத்தான "கிரகநிலைக்குள்" பூமி அகப்பட்டுக்கொண்டு, காலசர்ப்ப தோஷமும், "தூமகேதுவின்" வரவுக்குள் மனிதம் மிகவே சிரமங்களை அனுபவிக்கும் என்றறிந்து, காலசர்ப்ப தோஷத்தை நிர்வீர்யமாக்க, பெருமாளின் அருள் தேடி, நம்மை ஒன்று சேர வைத்து, அவரை அபிஷேக பூசை செய்து குளிரவைத்தார். இதுதான் நடந்த உண்மை. ஒருமுறை கூட நிதானமாக படித்துப்பார்த்தால், எத்தனை பெரிய விஷயத்துக்கு, நம்மை எல்லாம் அகத்தியப்பெருமான் ஒன்று சேர்த்து, லோகஷேமத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டார் என்பது விளங்கும்.
பூசை முடிந்து, கோவிலை சுற்றி மட்டும் பெய்த மழையே, பெருமாள் நம் பிரார்த்தனையை, மனமகிழ்ந்து, அபிஷேக பூசையுடன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு ஒரு நற்சான்று.
மிக மிக சிறப்பாக, அனைத்தையும் ஏற்பாடு செய்து, உழவாரப்பணி செய்து, மனதாலும், உடலாலும் தன்னை அகத்தியர் பாதத்தில் அர்பணித்துக் கொண்டு, அன்றைய தின பூசையை நிறைவாக செய்த அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீவீர் நலமாய் வாழ்கவென அகத்தியப்பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன்.
இந்த வருடத்தின் மற்றொரு நிகழ்ச்சியாக, அனைத்து அடியவர்களும் மனம் மகிழ்ந்து பங்கு கொள்ளும் "நம் குருநாதரின் மார்கழி-ஆயில்ய திருநட்சத்திரம்" வருகிற 23/12/2021 வியாழக்கிழமை அன்று வருகிறது. நம்மை பொறுத்தவரை அந்தநாள் மிக முக்கியமான தினம். ஆம்! அவரது இரண்டாவது முறை வருகிற நட்சத்திர நாள். 2022இல் மார்கழி-ஆயில்யம் வருவதில்லை. 2023இல் ஜனவரி 09ம் தியதி மறுபடியும் வரும். ஆனால் அதை கொண்டாட நாம் ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை குருநாதர் நமக்கு கொடுத்ததை சரியான முறையில் அவர் பாதம் பணிந்து அன்றைய தினம் ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமானின் சன்னதியில், அபிஷேக பூசையுடன் சிறப்பாக அமைத்துக்கொள்ளுங்கள்.
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற எண்ணத்தில், எப்போதும் போல், பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் அபிஷேக பூசைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருட இரண்டாவது பூசை, 23/12/2021 அன்று மாலை 5 மணிக்கு அபிஷேகத்துடன் தொடங்கி, அலங்காரம், புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அன்னம் பாலித்தலுடன் நிறைவு செய்வார்கள்.
"அன்றைய தினம், யாம் அங்கு வந்து அன்னம் பாலிக்க கேட்போம். அன்னம் இட்டுவிடு. அது போதும்" என பூசாரி திரு சுமேஷ் அவர்களுக்கு நாடியில் அகத்தியர் உரைத்துள்ளார்.
பாலராமபுரம் கோவில், அகத்தியப்பெருமான் விரும்பி அமரும் இடங்களில் ஒன்றாக அவரே, நாடியில் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில், பிரார்த்தனைக்குப் பின் பலருக்கும் நடந்த நல்ல விஷயங்கள், விடிவுகாலம், போன்றவை சாட்சியாக அமைந்துள்ளது.
அன்றைய தின பூசையில் கலந்து கொள்ள விரும்பும், அகத்தியர் அடியவர்களுக்காக, பாலராமபுரம் கோவில் நிர்வாக தொடர்புகளை கீழே தருகிறேன். அவர்களை தொடர்பு கொண்டு, பூசையில் கலந்துகொண்டு, அகத்தியப்பெருமானின் அருளை பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.
பாலராமபுரம் அகஸ்தியர் கோவில்!
BALARAMAPURAM AGASTHIYAR TEMPLE!
திரு:ரதீஷ் (RATHEESH) - 9048322565 திரு:செந்தில் (SENTHIL) - 9840303281
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............... தொடரும்!
அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை சிறப்பாக நடைபெற பொருளுதவி செய்த அணைவருக்கும், அருளுதவியாக பூஜை சாமான்கள் ஏற்பாடு, அபிஷேகத்தில் உதவுதல், பிரசாதம் வழங்குதல் போன்ற அனைத்து நிகழ்விலும் உடலுழைப்பை நல்கிய அனைவருக்கும் , நம் தளம்( தேடல் உள்ள தேனீக்கள் - TUT குழு) சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகு வழிபாட்டை நமக்கு அருளி, வழிகாட்டிய சித்தன் அருள் வலைத்தளத்திற்கு, திரு. அக்னிலிங்கம் ஐயா அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம். அனைத்து அகத்தியர் அடியார்களின் பாதம் பணிந்து நன்றி கூறுகின்றோம்.
ReplyDeleteநன்றி
வணக்கம்
ரா.ராகேஸ்
தேடல் உள்ள தேனீக்கள் - TUT குழு
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
ayya ,give pictures of oothimalai on 9.12.
Deleteit was an blissful exp that day.share to all ayya
சீக்கிரம் வந்து நல்லவர்கள் மட்டும் வாழவழி செய்ய முகங்கள் சித்த முனிவரே சீக்கிரம் வா
ReplyDeleteஅகத்தீசாய நம
ReplyDelete