​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 15 December 2021

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை!



13/12/2021 இன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். திருமலை திருப்பதி. 

ஆதி ஈசனின் பொற் பாதத்தை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.

எவ்வாறு என்பதையும் கூட நலன்கள் யான் சொல்லிக்கொண்டே வந்து கொண்டே தான் இருக்கின்றேன் இருக்கின்றேன் அப்பனே.

எவை என்று கூறும் அறியாமல் கூட அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே எவை என்று கூற என்னுடைய பக்தர்களுக்கு ஒரு தீங்கும் ஏற்படாது என்பேன்.

ஆனாலும் மனிதனாக பிறந்து விட்டால் இதை தான் யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அப்பனே மனிதனாகவே பிறந்துவிட்டால் கஷ்டங்கள் என்ற நிலைமை வந்துவிடும்.

ஆனாலும் அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்தாலும் அப்பனே அது மனிதனுக்கு அப்பனே இயல்பல்ல. மனிதன் என்ற தன்மையை இழந்து விடுவான் என்பேன்.

அப்பனே இவை என்று கூற அப்பனே பெரிய மகான்கள் அப்பனே ஞானியர்கள் ஏன் சித்தர்கள் இவர்கள் எல்லாம் கூட கஷ்டப்பட்டுதான் வந்தார்கள் என்பேன்.

இப்படி இவ்வாறு பின் அனைத்தும் இழந்து இழந்து பின் இவையன்றி கூட கஷ்டங்கள் பட்டால்தான் இறைவன் அருள் புரியும் என்பேன்.

ஆனாலும் அப்பனே இதனையும் என்று கூற சிலருக்கு அனைத்தும் கொடுத்துக் கொண்டே இருப்பான் ஆனாலும் இறைவன் அப்பனே அவந்தன் நினைக்க நேரங்கள் இல்லாமல் சென்று விடும்.

ஆனாலும் இறைவனே சில நேரங்களில் கஷ்டங்கள் கொடுத்த பின் இறைவன் தன் பால் இறைவன் தான் என்ற உண்மை நிலைக்கு பின் ஏற்படுத்துவான் என்பது உறுதியானது.

உறுதியானது இவைத்தன் இணங்க இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பேன்.

அதனால் அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் என்பதெல்லாம் என்னுடைய பக்தர்கள் இனிமேலும் கேட்க கூடாது என்பேன்.

அப்பனே என்னுடைய பக்தர்களுக்கு பின் எவை செய்ய வேண்டும்? எவை செய்யக் கூடாது? என்பதெல்லாம் எந்தனுக்கு தெரியும் அப்பனே. 

அப்பனே விதியின் போல் விதியின் பாதையை யான் ஆராய்ந்துதான் இனிமேலும் செய்வேன் அப்பனே.

விதியை மாற்றும் தகுதியும் என்னிடத்தில் இருக்கின்றது ஆனால் அப்பனே உன் கடமையை உங்கள் பணியை சரிவர செய்து வந்தாலே அப்பனே மென்மேலும் சிறப்புகள் ஏற்படும் என்பது உறுதி.

அதைவிட்டுவிட்டு அப்பனே அவை வேண்டும் இவை பின் இதை தொடர அப்பனே ஆனாலும் மனிதனால் இவையெல்லாம் செய்ய முடியாது என்பேன்.

அப்பனே அதனால் இறைவா நீயே கதி என்று உணர்ந்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே.

அனைத்தும் யாங்கள் செய்துவிடுவோம் அப்பனே.

இதனையும் நன்கு உணர்ந்து அப்பனே சித்தர்கள் ராஜ்ஜியமே அப்பனே உறுதியானது என்பேன்.

இதனால் தான் அப்பனே இன்னும் மனிதர்களுக்கு மென்மேலும் சில கஷ்டங்கள் நிச்சயம் கொடுப்பான் இறைவனே.

அதனால் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே புவி உலகில் ஆளலாம் என்பதற்கிணங்க அப்பனே என்னுடைய அருள்களை பெற்று விடலாம்.

அதை விட்டுவிட்டு அப்பனே அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அவையெல்லாம் இவையெல்லாம் என்று பின்னால் சென்று கொண்டிருந்தால் அழிவு நிச்சயம் என்பேன் அப்பனே.

இதனையும் என்று கூற அப்பனே பின் தரிசனத்திற்காக ஒதி மலையிலிருந்து கூறிவிட்டாய்.

(ஓதிமலையப்பன் சூட்சுமத்தை பற்றி அகத்தியர் 7/9/2021 அன்று  உரைத்த ஜீவநாடி பாெதுவாக்கு 

ஓதிமலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன். நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன். கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன். அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள். அப்பனே! அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட.

அப்பனே! இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால், பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும்பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு.

முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். 

ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள்.

 என்று குருநாதர் திரும்பவும் வாக்குரைத்திருந்தார்.

 இவ்வருடத்தில் கார்த்திகை மாதத்தில் கடைசி சஷ்டி நாள்  (09/12/2021 - வியாழன் அன்று)

 சொல்கின்றேன் அப்பனே

நல் விதமாக இவை என்று கூற 

அன்று கந்தன் அப்பனே ஐயப்பன் அப்பனே நல் விதமாகவே பின் இதனையும் அறிந்து பிள்ளையோனும்(பிள்ளையார்) நல்விளையாட்டாக விளையாடி பின் அனைவருக்கும் ஆசிகள் தந்துவிட்டார்கள். அன்றைய தினத்தில் அனைவருக்கும் ஆசிகளே.

இன்னும் மென்மேலும் சில சில வினைகளால் சில  கஷ்டங்கள் ஏற்பட்டபின் இவர்களுக்கும் நல் விதமாகவே சிலசில கர்மங்களில் இருந்து நீக்கி விட்டான் பின் ஓதிமலையப்பன்.

இதனை அறிந்து கூட அவரவர் ஒருவர் ஒருவர் தம் நினைப்பிலும் இவ்வாறு ஆக வேண்டும் அவ்வாறு ஆக வேண்டும் என்று நினைத்ததற்கு எல்லாம் பின் நல்வழிகள் தந்துவிட்டான்.

ஆனாலும் விதியில் இல்லாததையும் சிலபேர் கேட்டனர் ஆனாலும் அதையும் கூட முருகன் தயங்கினான் என்பேன்.

ஆனாலும் இதையும் பின் இவையன்றி  கூற சிறிது சிறிதாக கொடுப்போம் என்று எண்ணி பின் நல் விதமாகவே பின் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும்.பின் தன் குழந்தைக்கும் திருமணம் பாக்கியம் இல்லாதவர்களுக்கும் தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் பாக்கியமும் நிச்சயம் உண்டு என்பேன்.

என்று கூற நிச்சயமாய் ஐயன்(ஐயப்பன்) கூட அருளி விட்டான் என்பேன் என்பேன்.

என்பதற்கிணங்க பிள்ளையோனும் விளையாட்டாக பின் எதனையும் என்றும் கூட இவர்களும் இங்கு வந்து விட்டார்களா?!

யாம் எதனை என்று கூற பின் எதனையும் என்று கூற பொய்யான பக்தர்கள் இனிமேலும் எதனை என்று கூறாமலே  பின் எதனை என்றும் தெரியாமலே வணங்கு கின்றனர் என்று கூட பிள்ளையோன் சிறிது நேரம் பின் அமர்ந்திட்டான். 

ஆனாலும்

பின் இதனையும் என்று கந்தனிடம் இவையன்றி கூற பின் பிள்ளையோனும் கூறி கூறினான் இவ்வாறு.

கந்தனே இவ்வாறு என்று உந்தன் இடத்தில் எவ்வாறு வணங்குகின்றார்கள் என்பதற்கிணங்க அனைவரும் மாயையையே கேட்கின்றார்களே

ஆனாலும் நீயும் கொடுத்து அனுப்புகின்றாய்  அதனையும்

ஆனாலும் கடைசியில் அம்  மாயை அழிந்து விட்டு பின் திரும்பவும் திரும்பவும் கேட்கிறார்களே அப்போதெல்லாம் நீ என்ன செய்வாய்? என்று கேட்க.

கந்தனும் இவை என்றெல்லாம் பின் இவந்தன்  தெரிந்து கொள்ளத்தான் யான் கொடுக்கின்றேன்.

ஆனாலும் இவந்தனே பின் அழித்துவிட்டு பின் கடைசியிலே பின் கந்தா என்று வருகின்றார்கள் அதனால்தான் மனச்சஞ்சலம் அவந்தனுக்கே. 

அதனால் தான் மனிதன் போனால் பிழைத்து கொள்ளட்டும் என்றெல்லாம் கூட என் ஆசீர்வாதங்கள் தந்து கொண்டேதான் இருக்கிறேன்.

அவ் ஆசீர்வாதங்களை மனிதன் சரியாக முறையாக பயன்படுத்துவதே இல்லை என்பேன்.

சரியாக முறையாக பயன்படுத்தினால் அவனை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

என்னுடைய அருள் பெறுகின்றவர்களும் இனிமேலும் நலன்களே ஏற்படுவது உறுதி என்பேன்.

உறுதி என்பேன் இன்னும் பல போராட்டங்களும் வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும் இக்கலியுகத்தில்.


நிச்சயமாய் கந்தன் நல் விதமாகவே அவனுடைய அருள் பெற்று விட்டால் இவ்வுலகத்தில் ஏதும் எவராலும் செய்ய இயலாது என்பேன்.


இவ்வுலகத்தில் நிச்சயமாய் இவ் கலியுகத்தின்  தெய்வமாக கந்தனே விளங்குவான் என்பதைக்கூட உறுதியாகச் சொல்கின்றேன்.

அதனால் அப்பனே இவையன்றி   கூற இனிமேலும் மனிதர்கள் நிச்சயம் பின் பணத்திற்காக இவையன்றி கூற சில போராட்டங்களுக்காகவே இவைதன் தீர்க்க தீர்க்க இறைவனிடத்தில் ஓடி வந்தால் நிச்சயம் செய்ய மாட்டான். 

அமைதியாக இறைவா இறைவா உன் அருளே போதும் என்று நினைத்திருந்தாலே போதுமானது.

போதுமானதற்கிணங்க பின் பின் மேலும் முயற்சிகள் மேற் கொண்டால் அப்பனே அனைத்தும் நிறைவேறும் அனைத்தும் நடக்கும் அப்பனே.

ஓதியப்பனின் அருள் அப்பனே பன் மடங்கு என்பேன்.

 அங்கு சக்திகள் அப்பனே பல பல என்பேன்.

ஆனாலும் யாரும் உணர்வதில்லை அப்பனே.

இன்று கூட அங்கு போராட்டங்கள் அப்பனே சிலசில வினைகளால் அப்பனே எதிரிகள் கூட தங்கி நின்று அப்பனே எவை எவை என்று கூட நிற்கின்றார்கள்.

ஆனாலும் முருகனோ  அப்பனே அன்று இரவும் எவ்வாறும் அன்றிலிருந்து இன்று வரையும் கூட அப்பனே சிறிது ஓய்வெடுத்து பின் உறங்கி தான் செல்கின்றான் அப்பனே.

இவையன்றி  கூற இன்னும் பெரிய பெரிய மாற்றங்கள் இவ்வுலகத்தில் வந்து கொண்டே இருக்கும் அப்பனே.

அப்பனே இவைதன் நல் விதமாக ஓதிமலையப்பனை தரிசனம் கண்டே வந்தால் அப்பனே வாழ்க்கையில் உயர்வுகள் பெற பெற இருப்பது நிச்சயமே என்பேன் அப்பனே.

அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே இவையன்றி கூட பின் 

நேற்றைய பொழுதிலும் அப்பனே பெருமாள் நிச்சயமாய் அவ் நல்லூரிலே (கார்கோடகநல்லூர்)
அப்பனே தரிசித்து நல் ஆசிர்வாதங்கள் தந்துவிட்டான்.

அப்பனே அகத்தியன் யான் அங்கேயும் சென்று இருந்தேன் அப்பனே.

இவையன்றி கூற இப்பொழுதே இங்கே அப்பனே திருமலையிலே யான் உரைத்து விடுகின்றேன் அப்பனே.

பெருமாளுக்கு இவை யன்றி கூற இங்கே(திருமலை திருப்பதி)  இருப்பான்.

மற்றொன்று அங்கேதான்(கோடகநல்லூர்) அவந்தனக்கு பிடித்த இடம்.

இன்னொன்றும் இருக்கின்றது அப்பனே நவதிருப்பதிகள் என்கிறார்களே அங்கெல்லாம் அப்பனே சனி தோறும் அவந்தன் ஒருநாள் வட்டம் விடுவான் என்பேன் அங்கு.

அவந்தனுக்கு பிடித்தமான ஒன்று ஸ்ரீவைகுண்டமும் ஒன்று. என்பதைப் போல் இன்னும் பன் பன் திருத்தலங்களும் இருக்க.

பின் உலகளந்த பெருமாள் இவையன்றி கூற காஞ்சியில் இருக்கின்றதே அவந்தனக்கு நல் விதமாக பிடித்தமான தலம் என்று கூறுவேன் அப்பனே.

இவ்வாறு அவந்தனக்கு பிடித்தாற்போல் பின் ஸ்தலங்களை நாம்  தரிசிக்க தரிசிக்க கர்மங்கள் தீரும் என்பேன்.

அப்பனே இவையன்றி  கூற அப்பனே நல் பூஜையில் யானே பெருமாளிடம் முறையிட்டு பின் சிறிது அப்பனே வானிலிருந்து மழை பொழிக என்று உத்தரவிட்டேன் அப்பனே.

நன்று எல்லோருக்கும் அப்பனே ஆசீர்வாதங்கள் அப்பனே இவ்வாறு என்பதையும் கூட அப்பனே இவ்வாறுதான் கர்மாவை தொலைக்க முடியுமே தவிர 

அப்பனே எந்தனுக்கு அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் நிச்சயம் கர்மாக்கள் தொலைக்க முடியாது என்பேன்.

அப்பனே இதனால் தான் சொல்கின்றேன். யானே சொல்கின்றேன்.

அப்பனே! அகத்தியா அகத்தியா எல்லாம் நீயே என்று சொல்லி இருங்கள்.

அப்பனே விதியை மாற்றும் தகுதி அப்பனே யானே  படைத்திருக்கின்றேன். அப்பனே.

அப்பனே இவையன்றி கூற விஷ்ணு அப்பனே ஈசன் அப்பனே இவையன்றி    கூற பிரம்மா இவர்களுக்கெல்லாம் அப்பனே யான் எதனை என்று கூற அப்பனே இதனையும் நன்குணர்ந்து சித்திர குப்தனுக்கும் அப்பனே பலவழிகள் யான் காட்டியுள்ளேன் அப்பனே.

அகத்தியன் அப்பனே காலத்தை வென்றவன் எந்தனுக்கு அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நட்சத்திரம் ராசி இவை நாட்கள் இவையெல்லாம் அப்பனே எந்தனுக்கு இல்லை என்பேன் அப்பனே.

அனைத்தும் முற்றும் துறந்த துறவிக்கு அப்பனே இவையெல்லாம் வீணே.

ஆனாலும் மக்களே எண்ணி எண்ணி செய்கிறார்கள் அப்பனே இவையன்றி கூற இனிமேலும் அப்பனே எதனை என்று கூட என் பக்தர்களுக்கு அப்பனே உண்மையான பக்தர்களுக்கு உண்மையாக இருந்தால் நல்லவை செய்வேன்.

ஆனாலும் கெட்ட நடவடிக்கைகளால் அப்பனே அகத்தியர் என்று சொன்னால் அன்று நிச்சயம் அவனுக்கு பதில் என்பதையும் கூட அன்றே அடி பலமாக விழும் என்பேன்.அப்பனே. 

அனைத்து சித்தர்களும் அப்பனே மனிதர்களை சரியாக புரிந்து கொண்டுள்ளனர் என்பேன் .இதனால் அப்பனே மனிதர்களை தவறு செய்யாதீர்கள் செய்யாதீர்கள் என்பதைக்கூட யாங்கள் எச்சரித்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே அவ்வாறு மீறி செயல்பட்டாலும் தண்டனைகள் நிச்சயமாக உண்டு என்பேன்.

அதனால் அப்பனே யான் இறைவனை வணங்கினேனே எந்தனுக்கு இவ்வாறு தண்டனை என்று கூட கூறக்கூடாது என்பேன் அப்பனே.

அனைவருக்கும் நலம் என்னுடைய ஆசிகள். 

அப்பனே மறுவாக்கும் சொல்கின்றேன் ஒரு நல் இடத்தில் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

11 comments:

  1. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  2. AGATHIYAR SHARANAM.BLISSSFUL OOTHIAPPAR SHARANAM.ANBUKANNA SHARANAM

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சரணம்
    ஓம் அகதீசாய நம

    ReplyDelete
  4. I am fool i paused the chance to visit odhimalai. I am a sinner. I failed to read deeply mentioned posting. I pray the God to bless me to read deeply

    ReplyDelete
    Replies
    1. We are blessed... people who couldn't go there will get all blessings by reading Sitthanarul ..so don't worry sir....maanaseegama i am there whenever I'm reading all temple visits and naadi reading. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

      Delete
  5. 9ம் தேதி என்பது 15ம்தேதிதெரிவிக்கபட்டுள்ளது

    ReplyDelete
  6. Ohm Agatheesaya namha.Thank you Ayya for always being with us.

    ReplyDelete
  7. ஓம் அகத்தியர் போற்றி எங்களை போன்ற வீட்டிலேயே முடக்க பட்டிருக்கும் பெண்களுக்கெல்லாம் என்ன வழிபக்தி இருந்தாலும் ஆற்வமிருந்தும் இந்த திருத்தளங்களுக்கெல்லாம் போகவழியில்லாமல் தவிக்கும் எங்கள் ளுக்கெல்லாம் முருகன் னோ அகத்தியரோ காட்டும் வழி என்ன எல்லாரையும் இது போன்ற திருத்தளங்களுக்கு சென்று வர இயலுமா இயலாத எங்களை அகத்தியர் காத்தருள வேண்டும்

    ReplyDelete
  8. அனுதினமும் அருள் வாக்கை படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா இந்த பாக்கியம் கிடைக்கும்மா ஐயா

    ReplyDelete
  9. Translation:
    https://drive.google.com/file/d/1ix-1ZJIDktuJSrlvm76i_PwGTzMn57Mg/view?usp=sharing

    ReplyDelete