வணக்கம் அகத்தியர் அடியவர்களே
நம் குருநாதர் அகத்திய பெருமான்.... காசியில் உரைத்த வாக்கில்...என் பக்தர்கள் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கூறியுள்ளார்...இவ் வாக்கினை அனைவரும் உணர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்
அப்பனே ஒரு ரகசியத்தை இப்பொழுது சொல்கின்றேன் என்பேன் அப்பனே
முதுகில் அப்பனே வெளிச்சமும் அதாவது இரவும் பகலுமாக அப்பனே பின் நிச்சயம் இருக்கும் அப்பா.. அதைத் தன் வெளிச்சமாக எடுத்து வந்தால் அப்பனே நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்பேன். அப்பனே
அப்பனே அதை தன் வெளிச்சமாகவே பின் ஆக்கிவிட்டால் அப்பனே அனைத்திலும் வெற்றியப்பா
அப்பனே இதற்கும் கூட அப்பனே பின் மூச்சுப் பயிற்சி அனுதினமும் செய்ய வேண்டும் (பிராணயாமம்) என்பேன் அப்பனே
அப்பனே முதுகுத்தண்டு சாதாரணமில்லை என்பேன் அப்பனே
அதில் தான் அனைத்து விஷயங்களும் அடங்கியுள்ளது என்பேன். அப்பனே... அவை தான் கிரகங்களின் சக்தியை கூட ஈர்த்துக் கொடுக்கின்றது என்பேன். அப்பனே... இரவு அதாவது வெளிச்சமே இல்லாமல் இருந்தால் அப்பனே கிரகங்கள் தாக்குகின்ற பொழுது பல கஷ்டங்கள் வரும் அப்பா
ஆனாலும் வெளிச்சம் ஆகிவிட்டால் அப்பனே பல கஷ்டங்கள் வராதப்பா
அப்பனே அங்கு வெளிச்சம் ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் நிச்சயம் புருவம் மத்தியில் அப்பனே தானாகவே ஒரு ஒளி வந்துவிடும் அப்பா
அப்பனே அங்கு இறைவனை வரவழைத்து விடலாம் என்பேன். அப்பனே பின்பு
நீங்கள் தியானத்தில் அமருகின்ற பொழுது என்னென்ன நடக்கும் என்பதை எல்லாம் நீங்களே அறிந்து கொள்ளலாம் என்பேன். அப்பனே.
மூச்சு பயிற்சியை தொடர்ந்து அப்பனே செய்து கொண்டு வருகின்ற பொழுது முதுகுத்தண்டில் வெளிச்சம் ஆகிவிடும் அப்பா!!!
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இதை அனைவருக்கும் தெரிவி!!!
அனைவரும் இதை கடைப்பிடித்து வர வேண்டும் என்பேன் அப்பனே!!
நிச்சயம் பின் அதாவது பிரதோஷ வேளைகளில் கூட அப்பனே எப்பொழுதும் கூட அப்பனே நிச்சயம் அதாவது பின் ஏதாவது ஒன்றை திருத்தலத்திற்கு சென்று செய்து கொண்டே வாருங்கள் அப்பனே இன்னும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே.
(பிரதோஷ காலசமயங்களில் ஈசன் ஆலயத்திற்கு சென்று ஏதாவது சேவைகள் வழிபாடு மற்றும் செய்து வர வேண்டும்)..
அப்பனே நிச்சயம் பின் ஏகாதசி அன்று அப்பனே நிச்சயம் சர்க்கரை பொங்கலை இட்டு அப்பனே நிச்சயம் விஷ்ணுவிற்கு சமர்ப்பிக்க நல் செய்திகளும் வருமப்பா
அப்பனே பின்பு அப்பனே ஏகாதசி அன்று முடிகின்ற மறுநாள் அப்பனே (ஏகாதசி முடிந்து அடுத்த நாள்) அவையைக் கூட அப்பனே (பெருமாளுக்கு நைவேத்தியமாக படைத்த சர்க்கரை பொங்கலை) பின் அழகாக எறும்புகளுக்கு இட்டு விடுங்கள்.
(குருநாதர் வாக்கினை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பக்தர் ஏகாதசி என்று சாதத்தை சமைப்பது இல்லை என்ற ஒரு ஐதீகம் இருக்கின்றது... என்று கேட்டதற்கு பெருமாளுக்கு படைத்து விடுங்கள் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக என்று குருநாதர் மறுமொழி கூறினார்.
அப்பனே அது மட்டும் இல்லாமல் சங்கடஹர சதுர்த்தி அன்று அப்பனே பின் பிள்ளையோனுக்கு அப்பனே அதாவது நல்முறையாக அப்பனே 9 குடங்களில் அப்பனே நீர் நிரப்பி அப்பனே அவனை குளிப்பாட்டினால் அப்பனே யோகங்கள் வரும் அப்பா
(வாக்குகள் கேட்டுக் கொண்டிருந்த வட இந்திய பக்தர் வட இந்தியாவில் விநாயகருக்கு இது போன்ற அபிஷேகங்கள் செய்ய முடியாத வகையில் விநாயகர் பிரதிஷ்டை இருப்பதை தெரிவித்த பொழுது இதை வீட்டில் செய்யலாமா என்று கேட்டதற்கு
அப்பனே எதை என்று அறிய அறிய நிச்சயம் அனைத்தும் ஒன்றே
என்று மறுமொழி கூறினார்.... சங்கடஹர சதுர்த்தி அன்று ஆலயத்தில் அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒன்பது குடங்கள் அல்லது ஒன்பது தீர்த்த சொம்புகளில் நீர் நிரப்பி 9 முறை விநாயகருக்கு அபிஷேகம் செய்து வர வேண்டும்... ஆலயங்களுக்கு சென்று செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் கணபதி சிலைக்கு செய்து வரலாம்)
அப்பனே அவை மட்டுமில்லாமல் தேய்பிறை அஷ்டமி பின் வளர்பிறை அஷ்டமி இவைதனில் கூட அப்பனே பைரவனுக்கு தீபம் ஏற்றி வருதல் சிறப்பு
அப்பனே பின்பு அதாவது அறிந்தும் கூட பஞ்சமி (திதி )தன்னில் கூட அப்பனே நல்ல முறைகளாகவே அப்பனே பின் ஈசனை வணங்கினால்... அனைத்து தோஷங்களையும் கூட அப்பன நீக்கும் அப்பா
அப்பனே இதனை நீங்கள் அனைவரும் செய்யலாம் அனைவருக்கும் சொல்லலாம் என்பேன் அப்பனே
என் பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனை தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும் என்பேன். அப்பனே இவையெல்லாம் செய்கின்ற பொழுது சில தடை தாமதங்கள் நீங்கும் அப்பா பின்பு தான் அனைவருக்குமே வெற்றி கிடைக்கும் அப்பா.
(காலபைரவர் ஆலயத்திற்கு வேலை அலுவல் காரணமாக ஏனென்றால் இதைக் கேட்ட ஒரு பக்க அரசாங்க பணி நிமித்தம் காரணமாக பல ஊர்களுக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை அதனால் இதை நான் செய்ய முடியவில்லை என்றால் என்னுடைய வீட்டில் இருப்பவர்கள் யாராவது சென்று செய்யலாமா என்று கேட்டதற்கு !!
யாரை வேண்டுமானாலும் செய்யச் சொல்லலாம் அப்பனே என்று குருநாதர் மறுமொழி கூறினார்.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!.... ஏற்கனவே ஹிவர்கேட் மகாராஷ்டிரா ஆலய வாக்கில் பிரதோஷம் வேளையில் ஆலயத்திற்கு சென்று ஏதேனும் ஒரு சேவை அதாவது பிரசாதம் பால் அபிஷேகம் ஆலயத்தை சுத்தப்படுத்துவது தீபங்களுக்கு என்னை வழங்குவது என ஏதேனும் ஒரு சேவையை செய்து வரச் சொல்லி குருநாதர் கூறியிருந்தார் அதை இப்பொழுது அனைவருக்கும் செய்து வர வேண்டும் என்று கூறி இருக்கின்றார்
இந்த பிரணாயாமம் நீங்களாக ஐந்து கட்டளைகளை அடியவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் காலண்டரில் ஒவ்வொரு மாதத்திற்கும்
பிரதோஷம்
ஏகாதசி
சங்கடகர சதுர்த்தி
வளர்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமி
பஞ்சமி திதிகளை
குறித்து வைத்துக்கொண்டு அந்தந்த நேரத்தில் குருநாதர் கூறிய வழிபாடுகளை செய்து கொண்டு வரலாம்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி இறைவா 🙏
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.
https://youtu.be/H3kN1I20xCs
5 திதி ரகசியங்கள் - திதி வழிபாட்டின் மூலம் வெற்றி பெறுவது எப்படி ?
அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் வாக்கு
5 திதி ரகசியங்கள்
திதி வழிபாட்டின் மூலம் வெற்றி பெறுவது எப்படி ?
சித்தன் அருள் - 1764 - 5 திதியில் செய்ய வேண்டியவை!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteமிக்க நன்றி அப்பா.
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.
ஒரு அட்டவணை - 5 திதி ரகசியங்கள் - திதி வழிபாட்டின் மூலம் வெற்றி பெறுவது எப்படி ?
https://siththarkalatchi.blogspot.com/2025/01/423.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete