17/1/2025 அன்று குருநாதர் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: கதிர்காமம் சிங்காரவேலன் திருக்கோயில். மாணிக்க கங்கை நதிக்கரை. ஊவா மாகாணம் மொனராகலை. ஸ்ரீலங்கா.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே பல விசித்திர திருத்தலங்கள் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே.
ஆனாலும் அதை அப்பனே மனிதனால் பின் கண்டு உணர்வதில்லை என்பேன் அப்பனே.
அதற்கும் பல பல புண்ணியங்களும் தேவைப்படுகின்றது அப்பனே நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் அப்பனே நிச்சயம் அதாவது பின் ஈசன் அப்பனே உலகத்திற்கு அனுப்பும் பொழுதே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சரியாகவே புண்ணியத்தை வைத்து!!!
ஆனாலும் அப்பனே அதை தன் சரியாகவே மனிதன் பயன்படுத்தாமல் அப்பனே எதை எதையோ பயன்படுத்தி கடைசியில் அப்பனே பின் நிச்சயம் எதற்காக வந்தோம்?? என்று தெரியாமலே அப்பனே சென்று மீண்டும்..இவ் ஆன்மா பிறப்பெடுத்து அப்பனே மீண்டும் மீண்டும்.
அப்பனே நிச்சயம் எதற்காக வந்தோம்?? என்று தெரிந்து கொண்டால் அப்பனே பின் நிச்சயம் மோட்சமப்பா!!!
ஆனாலும் அப்பனே பின் தெரியாமல் வாழ்ந்தால் அப்பனே நிச்சயம் பின் மீண்டும் மீண்டும் பின் அதாவது பிறவி எடுத்து இவ் ஆன்மா பின் கஷ்டங்களை பின் பட்டு கொண்டு தான் இருக்க வேண்டும்.
இதற்காகத்தான் நிச்சயம் தன் பக்தர்களைக் கூட நல்விதமாக தெரிந்துகொண்டு வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே.
அதாவது இறைவன் எங்கு இருக்கின்றான்?? பின் எப்படிப்பட்டவன் என்பதை எல்லாம் அப்பனே பின் நன்கு உணர்ந்து கொண்டாலே.. வெற்றிகள் மிகப்பெரிய வெற்றிகள் காத்துக் கொண்டே!!!!!!
அப்பனே நிச்சயம் பின் அதாவது குழந்தை பிறக்கும் பொழுது அப்பனே சிறிது காலத்திற்கு தந்தையானவனையும் தெரியும் தாயானவளையும் தெரியும்.
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அவ்வாறு தெரிந்த பின்பு பின் தந்தையே தாயே என்றெல்லாம்!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் போக போக தெரிந்து விடும்...
இது போலத்தான் இறைவன் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனை பின் அதாவது அதற்கடுத்து அப்பனே நிச்சயம் அப்பனே குருவாகவும் அதாவது குருவானவனை இறைவனாகவும் அப்பனே இதனை தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் பின் உங்களை யாராலும் வெல்ல முடியாதப்பா!!!
அதனால் முதலில் பின் அம்மா என்று!! பின் அப்பா என்று!!! நிச்சயம் அப்பனே ஒரு குழந்தை அதன் பின் அப்பனே நிச்சயம் அப்பனே குரு என்ற ஸ்தானத்தை அதாவது குரு என்பவன் இறைவனாகவும் இருக்கலாம் என்பேன் அப்பனே!!
இதனை அப்பனே பின் நிச்சயம் அக் குழந்தை அப்பனே நிச்சயம் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வளர வளர அப்பனே யாராலும் பின் நிச்சயம் அப்பனே எவ் கிரகங்களாலும் அப்பனே எவ் சக்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் தாய் தந்தையை தெரிந்து கொண்டு ஆனாலும் அப்பனே உண்மை பொருளை நிச்சயம் பின் மறந்து பின் விடுகின்றது இவ் ஆன்மா.
அப்பனே அறிந்தும் கூட இதற்கெல்லாம் யார் காரணம்? என்றால் நிச்சயம் மனிதனே!!!
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இதற்கு தான் நிச்சயம் தாய் தந்தையர் அப்பனே நிச்சயம் குழந்தைக்கு சிறுவயதிலிருந்தே நிச்சயம் தன்னில் கூட இறைவன் இருக்கின்றான்.. இறைவன்!! அதாவது தவறு செய்தால் நிச்சயம் தன்னில் கூட இறைவன் தண்டிப்பான்... என்றெல்லாம் (சொல்லி வளர்க்க வேண்டும்)
அவை மட்டும் இல்லாமல் பின் நிச்சயம் அப்பனே இவ்வாறாகவே அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் பழைய பின் கல்விக்கூடங்களில் எல்லாம் நிச்சயம் சத்தியம் செய்வார்கள்.. இப்படித்தான் வாழ்வேன் என்று!!
(முந்தைய காலகட்டத்தில் எல்லாம் குருகுலங்களில் பள்ளிக்கூடத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்வது)
ஆனாலும் அப்பனே பின் அதிலிலே பொய் சொல்லி அப்பனே மனிதன் பின் அதாவது சிறு வயதிலே பொய் சொல்லி அப்பனே பின் பொய்களாக்கி பொய்களாக்கி அதையே அப்பனே வேலையாக செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
எப்படியப்பா வெற்றிகள் கிடைக்கும்???
அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் பின் பொய் சொல்லி கொண்டே வந்தால் அப்பனே பின் தோல்வி அடைந்து கொண்டே வருவீர்கள் என்பேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் அப்பனே நன் முறைகளாகவே இறைவனிடத்தில் அன்பை காட்டிக் கொண்டே வந்தால் அப்பனே இறைவன் உங்கள் மீது அன்பை பன்மடங்கு காட்டிக் கொண்டே வருவான் அப்பனே.
ஆனாலும் அப்பனே நீங்கள் காட்டுவதில் அப்பனே பின் நிச்சயம் எது? உண்மை? எது? பொய் ? என்றெல்லாம் இறைவனுக்கு தெரியும் அப்பா!!
ஆனாலும் அப்பனே இறைவன் மறைமுகமாக உங்கள் மேல் பின் அன்பை செலுத்தி செலுத்தி கடைசியில் உண்மை பொருளை தெரிவித்து விடுவான் என்பேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே பல வகையிலும் கூட கந்தன் அப்பனே பின் சுற்றி திரிந்தான் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே விளக்கங்கள் இன்னும் இன்னும் அப்பனே பின் சித்தர்கள் செப்புகின்ற பொழுது... நிச்சயம் உண்மை பொருளையும் கூட அப்பனே தெரியவரும் என்பேன் அப்பனே.
உண்மை பொருளை தெரிந்து விட்டால் அப்பனே நிச்சயம் நீங்களே நிச்சயம் அறிந்தும் கூட பின் உங்களை வென்றிட்டு அப்பனே பின் உங்கள் பின் அதாவது குழந்தைகளும் கூட நல்வாழ்க்கையும் கூட அப்பனே நீங்களும் தீர்மானித்து அப்பனே நன்முறைகளாகவே உங்கள் குடும்பங்களே செழிக்கும் என்பேன் அப்பனே.
அப்படி இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்திலும் கஷ்டங்கள் அப்பனே நிச்சயம் தாய் தந்தையரை மதிக்காமல் போதல் என்று தன் பிள்ளைகள் அப்பனே என்றெல்லாம் போய்க் கொண்டே இருக்குமப்பா.
பின் அச் சூழ்நிலை அப்பனே நிச்சயம் இக்கலி யுகத்தில்..
அதனால்தான் அப்பனே பின் நிச்சயம் அப்பனே மனிதன் தவறு செய்தாலும் அவனை திருத்திக் கொண்டு உண்மை பொருளை என்னவென்று? பின் விளக்கிக் கொண்டே வருகின்றோம் சித்தர்கள் அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் நற்பண்புகள் அப்பனே யாங்களே.. வரும் காலத்தில் பின் கொடுத்து கொடுத்து அப்பனே மாற்றுவோம்!!!
அப்பனே கந்தன் அழகாகவே அப்பனே பின் சுற்றி கொண்டிருந்தானப்பா!!!
அப்பனே எங்கு?? என்றால் இங்கு தான் என்பேன் அப்பனே!!
அப்பனே இங்கும் கூட பின் அப்பனே பின் ஈசனுடைய சாம்ராஜ்யம் அப்பனே.
ஒரு கயிலை மலையே (கைலாச மலை போன்று) என்று சொல்லலாம் அப்பனே.... இங்குதான் அப்பனே பின் இங்கு தான் அப்பனே பெரிய மலை அப்பனே நிச்சயம் பின் அது தன் கூட பனிக்கட்டியாகவே அப்பனே இறைவன்.
அதாவது அப்பனே பின் அனைத்து தேவாதி தேவர்களும் கூட இதன் அருகிலே அப்பனே பின் அதாவது சிறிது தொலைவிலே அப்பனே பின் இன்னும் கூட அப்பனே அடியில் ஒளிந்துள்ளதப்பா!!!
( கதிர்காம கோயிலில் இருந்து 3 அரை கிலோமீட்டர் தொலைவில் கதிரை மலை என்ற இடம் உள்ளது அங்கு ஏழு மலைகள் சூழ்ந்த பகுதி அங்கும் கோயில் இருக்கின்றது அதன் அருகில் ஈசனுடைய சாம்ராஜ்யம் பனிக்கட்டியாக இருக்கும் மலை அடியில் உள்ளது)
அப்பனே நிச்சயம் இங்கு தான் அப்பனே பின் பிடித்தமான ஒன்று!!!
பின் அதிகாலையிலே கந்தன் அப்பனே சுற்றிக் கொண்டே வருவான்.
ஆனாலும் அப்பனே காலப்போக்கில் அப்பனே பின் அனைவரும் கூட இங்கு வந்தார்கள் என்பேன் அப்பனே..
ஈசனை காண அப்பொழுதெல்லாம் அப்பனே கைலாயம் அங்கே இருக்கின்றது...(பாரத பூமியில்) ஆனாலும் அப்பனே பின் கைலாயம் இங்கும் இருக்கின்றதப்பா!!!(இலங்கையில்)
அப்பனே நிச்சயம் எங்கும்!!!! அதாவது விளையாட்டாகவே சொல்கின்றேன்....
எங்கும் நிறைந்தது கைலாயமே!!!!!
அப்பனே ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் ரகசியங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே.
அதை நிச்சயம் அப்பனே என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
என்னை அகத்தியனே என்று வணங்குகின்றீர்களே!!!!!!
ஏன்???
எதற்காக???? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தெரிந்து வணங்க வேண்டும்!! அதனால்தான் என் பக்தர்களுக்கு நிச்சயம் அனைத்தும் சொல்லி பக்குவங்கள் ஏற்படுத்தி நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் கொடுத்திடுவேன் என்பேன் அப்பனே.
அதாவது மாயையை தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பவை எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... ஆனாலும் உண்மை பொருளை கேளுங்கள் அப்பனே.
நிச்சயம் பின் அனைத்தும் நிச்சயம் அப்பனே பின் கேட்டாலும் அப்பனே இத் தந்தை உங்களுக்கு என்னவோ பின் அதைத்தான் கொடுப்பேன்!!
சொல்லிவிட்டேன் அப்பனே.
இதனால் அப்பனே... சரியாகவே ஆனாலும் இதற்கு தகுந்தார் போல் அறிந்தும் கூட !!!
இதனால் அப்பனே நிச்சயம் பின் ஆனாலும் பின் ஈசனுக்கு நிச்சயம் பின் பார்வதியும் நிச்சயம் அறிந்தும் கூட இதை என்று பின் சொல்ல இதையன்றி யான் சொல்ல !! இவை என்று உணரும் பின் பொருளுக்கும் கூட பின் அப்படியே!!
இதனால் நிச்சயம் கலியுகம் தொடங்குகின்றது!!! (கலியுகம் தொடங்கும் நேரத்தில்) அதாவது பின் பார்வதி தேவியிடம் ஈசனாரும் கூட
தேவியே!! கலியுகம் தொடங்குகின்றது தேவியே!!
இதனால் பின் இங்கிருந்து........இதனால் பின் இங்கிருந்து அதாவது இது மூழ்கும்!!
ஆனாலும் இது பின் இன்னும் இன்னும் பின் அறிந்தும் கூட இவ் மலை கீழ்நோக்கி செல்கையில் நிச்சயம் பின் மனிதனும் கீழ்நோக்கி சென்று கொண்டே இருப்பான்.. இதனால் நிச்சயம் இன்னும் அதாவது நம் பாதைக்கு செல்வோம்.. இதுதான் நிச்சயம் என்று.
இதனால் நிச்சயம் ஆனால் கந்தனோ !? ...... பின் ஒத்துப் போகவில்லையே!!!
தந்தையே!!! நில்லுங்கள்! பின்! உலகத்திற்கே நிச்சயம் பின் தொண்டு செய்து அனைத்து உயிர்களையும் கூட தன்போல் என்று எண்ணி நிச்சயம் காத்தருள்வாயே!!!
நிச்சயம் எங்கு செல்வோம்?? என்று!!
ஈசனார்.
வேலவா!!! கேள்!!!
அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் இவை எல்லாம் ஏற்கனவே யானே.. நிச்சயத்ததுதான். தீர்மானித்தது தான்!! இவ்வாறு (கலியுகம்) தொடங்குகின்ற பொழுது பின் அதாவது யுகங்கள் இன்னும் இன்னும்!!!
(ஒவ்வொரு யுகத்திலும் என்னென்ன இருக்க வேண்டும் என்னவெல்லாம் இருக்கக் கூடாது என்பதை எல்லாம் ஈசன் தீர்மானித்து எழுதிய விதிப்படி தான் ஒவ்வொரு யுகம் நடக்கும்)
(அகத்தியர் தற்போது)
அப்பா சொல்கின்றேன் ஒவ்வொரு யுகம் என்ன? ஏது?... அவ் அவ் யுகத்தில் என்னென்ன நடந்தது என்பதை எல்லாம் நிச்சயம் சொல்வேன் அப்பனே!!
அனைவருக்குமே அப்பனே!! அனைவரும் தெரிந்து கொண்டு உண்மை பொருளை பின் நிச்சயம் தேர்ந்தெடுத்து நிச்சயம் உண்மையாக வாழ்ந்து நிச்சயம் பின் அறிந்தும் பின் அதாவது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பின் புவியில் படைத்து விட்டான் அல்லவா!!!
நிச்சயம் அறிந்தும் கூட அனைத்தும் தெரிந்து கொள்ளாதவரிடத்தில் நிச்சயம் அறிந்தும் கூட பின் யாங்கள் எவை எதை என்று நிச்சயம் பின் தெரிந்து கொண்டு வாழ்ந்திட்டு நிச்சயம் மோட்ச கதியை அடையுங்கள்!!
நிச்சயம் பின் அதாவது வேலவனும் கூட பின்
வேலவன்
தந்தையே நில்லும்!! ஏன்? எதற்கு? இப்படி என்று!!
ஈசனார்.
வேலவா!! உனக்கு ஒன்றும் தெரியாது!!
நிச்சயம் கலியுகத்தில் பின் நிச்சயம் பின் நீங்கி விட்டு நாம் வேறு தேசத்திற்கு செல்வோம் என்றெல்லாம் நிச்சயம்.
வேலவன்.
இல்லை!! இல்லை!! யான் இல்லை!!! இங்குதான் இருப்போம் என்று!
பின் பார்வதி தேவியும் கந்தனை பார்த்து
பார்வதி தேவி
குகனே!!! அறிந்தும் தந்தை சொல் கேள்!!! என்று!!
வேலவன்.
நிச்சயம் தாயே கேட்கின்றேன்... எனக்கு இங்கே தான் பிடித்தார் போல் இருக்கின்றது அதாவது யான் இங்கேதான் இருப்பேன் என்று!! அறிந்தும் இதை என்று உணர்ந்தும் கூட!
ஆனாலும் பின் கணபதியும் கூட!!!
கணபதி!!
பின் குழந்தாயே!!! தந்தை தாய் சொல்கின்றார்கள் அல்லவா!!! நிச்சயம் நாம் சென்று விடுவோம் என்றெல்லாம்!!
ஆனாலும் நிச்சயம் கூட அறிந்தும் ஆனாலும் இவை தன் கூட பின் அறிந்தும் கூட ஆனாலும்...சரி!!! என்று ஈசனாரும் கூட சரி!!
ஈசனார்
குகனே!!... இங்கே பின் இருக்கின்றாய் அல்லவா... சரி!! இரு!!... யார் வேண்டாம் என்று சொன்னது!!!
ஆனாலும் நிச்சயம் உந்தனக்கு புரியாது இப்பொழுது!!
பின் அதாவது யாங்கள் செல்கின்றோம்... அதாவது இன்னொரு கைலாயத்திற்கு!! என்றெல்லாம்!! அங்கிருந்து!!
பின் அங்கிருந்து பின் இது போல் இருக்கும் என்று..
ஆனாலும் பின் கந்தனும் யான் வரமாட்டேன்.. வரப்போவதில்லை நீங்கள் சென்று வாருங்கள்.
ஆனாலும் நிச்சயம் பின் கந்தனும் இங்கிருந்து!!!
ஆனாலும் மனது வரவில்லை!! பின் அறிந்தும்...(சித்தர்கள்) யாங்களும் வந்து!!!
சித்தர்கள்
பின் கந்தா!!!....வா!!!!.... அறிந்தும் பின் அனைவருமே உன்னை அழைக்கின்றோம் அல்லவா!!.. வா நாம் வேறு கைலாயத்திற்கு சென்று விடுவோம் என்று!!
வேலவன்
ஆனால் பின் இதுவும் கைலாயம் தானே.... யான்.. ஏன்?? எதற்கு??? அங்கு வரவேண்டும் ?? என்று
ஆனாலும் பின் பிரம்மனும் கூட....
பிரம்மன்
முருகா!!!... நீ இவ்வாறு பின் சொல்லலாமா???
ஏன் அடம் பிடிக்கின்றாய்??? என்று!! எங்களுடன் வா என்று!!!
பின் விஷ்ணுவும் கூட
விஷ்ணு
பின் கந்தனே... அறிந்தும் ஏன் சிறுவனாக இருக்கின்றாய்!!! இன்னும் நீ சிறுவனாகவே இருக்கின்றாயா?? என்று!!
பின் அனைத்து தேவாதி தேவர்களும் இந்திரனும் வந்து இங்கு அறிந்தும் கூட பின்.... முருகனை அழைத்த பொழுது..
முருகன் யான் வருவதில்லை... இதுதான் எந்தனுக்கு சொந்தம் என்று.பின் இங்கே அமர்ந்திட்டான்!!!
சரி!!... பின் ஆனாலும் பார்வதி தேவியும்!!
பார்வதி தேவி
குகனே நிச்சயம் இவ்வளவு பேர்கள் உன்னை அழைக்கின்றார்கள் அல்லவா!!!
ஏன் ?உனக்கு மட்டும் இவ்வளவு ?... இப்படி அடம் பிடிக்கும் மனமா??? என்றெல்லாம்.
வேலவன்
யான் வரப்போவதில்லை... இதுதான் எனக்கு கைலாயம் என்று.
சரி என்று ஈசனும் அறிந்தும் இதை தன் கூட நிச்சயம்
ஈசனார்
கந்தா!!!.... சரி!!! உன்னுடைய விருப்பம்.. நிச்சயம் நிறைவேறட்டும்!! யாங்கள் அங்கு செல்கின்றோம்...
உந்தனுக்கு மனதிருந்தால் வா!!!
அதாவது இத் தாயையும் தந்தையையும்.. பின் அனைவரையும் பார்க்க!!
இல்லையென்றால் இங்கேயே தங்கிவிடு என்று!!
வேலவன்
நிச்சயம் யான் வருகின்றேன்... ஆனாலும் நிச்சயம் இங்கே தான் எந்தனுக்கு பிடித்தது..
ஆனாலும் பின் கணபதியும் கூட பின் !!!
கணபதி
முருகா!!! அறிந்தும் கூட.. உனக்கு மட்டும் தான் இங்கு பிடித்தது !!
நீ மட்டும் தான் தனியாக இங்கு விளையாடுவாய்! யாங்கள் எல்லாம் கிளம்புகின்றோம் என்று!!
வேலவன்
பின் சென்றிட்டு வா என்று பின் முருகனும் கூட!!
அறிந்தும் இவைதன் கூட... இதனால் அனைவருமே மனம் வருந்தி அதாவது முருகனை விட்டுவிட்டு பின் மனம் !!!
அறிந்தும் கூட... பின் அதாவது பின் அனைவருமே... பார்வதி தேவியும் கூட மகனே!! மகனே!!
என்றெல்லாம் !! (மனம் வருந்தி)
நிச்சயம் பின் அதாவது இங்கிருந்து இன்னும் (பாரத பூமியில் இருக்கும்) கைலாய மலைக்கு அனைவரும் சென்றனர்.
அங்கு பின் அங்கிருந்தே அழைத்தனர்.... முருகா! முருகா! என்று!!
வேலவன்
ஆனாலும் பின் எந்தனுக்கு கேட்கின்றது... நீங்கள் அனைவருமே என்னை விட்டு விட்டு சென்று விட்டீர்கள் அல்லவா!! நிச்சயம் என்றெல்லாம்!
பின் ஆனால் கணபதியே நீயும் இப்படித்தான் எப்பொழுதும் பேசுவாய்...
ஈசனும் பின் அனைவரும்
சரி பின் இங்கிருந்தே யாங்கள் பார்க்கின்றோம்!! பின் நீ அறிந்தும் கூட!!!
இதனால் பின் அதாவது பின் ஈசனாரும்!!!
எனை (அகத்தியரை) அழைத்து பின் அகத்தியனே!!!... அறிந்தும் பின் அதாவது.. அவனுக்கு துணையாக இரு...
அவந்தன் வேலவன் பிடிவாதக்காரன் அல்லவா!!
நிச்சயம் அவந்தனக்கு துணையாக இரு!
இங்கே நிச்சயம் அதாவது அனைத்தும் நீயே அறிந்தவன். பின் நிச்சயம் கலியுகம் தொடங்குகின்றது
இதனால் பின் அக்கிரமங்கள் அநியாயங்கள் என்றெல்லாம் நிச்சயம்..
அதனால் முருகனை பின் கவனமாக பார்த்துக் கொள்! என்று!!
பின் யானும் சொன்னேன்.... அவன் வேலவன் அறிவில் வல்லவன்!!! அனைத்து விஷயங்களும் தெரிந்தவன்!!! பின் உந்தனுக்கு தெரியாதா? என்ன ஈசனாரே என்று!!
ஈசனார்
நிச்சயம் நீ அங்கு செல்!! அனைத்திற்கும் காரணங்கள் உண்டு என்று!!
ஆனாலும் அறிந்தும் நிச்சயம் இங்கு வந்தேன்...
(குருநாதர் அகத்தியர் இலங்கை கண்டி கதிர்காமம் வருகை)
அழகாகவே மீண்டும் பின் முருகா என்று அழைத்தேன்!!!
வேலவன்!!
அகத்தியனே பின் அறிந்தும்... பின் நீ கூட!!! அதாவது பின் அறிந்தும் விளையாட்டாகவே என்னிடத்தில் இருந்து என்னை விட்டிட்டு நீ கூட சென்று விட்டாயே என்று!!!
அகத்திய பெருமான்
அய்யய்யோ!!!! முருகா!!! பின் நான் உன்னை எப்படி பின் விட்டு செல்ல????????
பின் என் செல்ல குழந்தையைக் கூட எப்படி இங்கு விட்டுட்டு செல்வேன்???
அதனால்தான் பின் அதாவது உன் தாயும் தந்தையும் பின் சென்றனர் அதனால்... யானும் சென்றுவிட்டேன்.
ஆனாலும் மனதில் ஒரு கவலை முருகனை விட்டுவிட்டோமே!!!... அதாவது விட்டு விட்டு வந்து விட்டோமே என்று!!!
ஆனாலும் உன் தந்தை அதை சரியாக கணித்து பின் எனை அழைத்து பின் ஆனாலும் பின் ஈசன் என்ன சொல்லப் போகின்றான்?? என்பதை கூட யான் அறிவேன்!!!
அதைத்தான் சொல்லப் போகின்றான் என்று யான் சந்தோஷம் கொண்டேன்!!!.. மனம் வருத்தத்தோடு இருப்பதைப் போல் முகத்தை காட்டி கொண்டேன்!! முருகா என்றெல்லாம்!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எவை என்று கூட
வேலவன்.
அகத்தியரே!!! நிச்சயம் உன்னை விட இங்கு அறிவாளி யார்??
நிச்சயம் தெரிகின்றது நிச்சயம் அனைவரையும் கூட இப்படித்தானே காப்பாய் என்றெல்லாம்!!
அகத்தியர் பெருமான்
நிச்சயம் சரி!! அனைவரும் சென்று விட்டனர். பின் நீ மட்டும் இங்கு இருப்போமா? என்று!!!
நிச்சயம் அறிந்தும் பின் அதாவது முருகா!!! நிச்சயம் பின் அதாவது இங்கு நிச்சயம் அறிந்தும் கூட இங்கே... இருந்து பின் ஏன்?? உன் தந்தையும் பின் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டார்கள் என்றால்?!....
நிச்சயம் அதாவது அறிந்தும் கூட இவ் பனிமலையும் கூட அப்படியே உள் செல்லப் போகின்றது... இதுதான் கலியுகத்தின் ஆரம்பம்!!! இதனால் நிச்சயம் பின் அதாவது
வேலவன்
அகத்தியரே !!!பின் ஏன் உன்னால் தடுக்க முடியாதா???
அகத்திய பெருமான்
நிச்சயம் உன்னாலும் தடுக்க முடியும் குகனே!! நிச்சயம் இவ்வாறு தான் படைக்கப்பட்டது என்று
வேலவன்
அதாவது இங்கே விலங்கினங்கள் இன்னும் சிறிய சிறிய நிச்சயம் அன்புக்குரியவைகள்!! இன்னும் அறிந்தும் கூட மரங்கள் செடிகள் இன்னும் பின் அழகாக இருக்கின்றதே இவையெல்லாம் பின் நிச்சயம் அடியில் சென்றுவிடுமா???
அகத்திய பெருமான்
நிச்சயம் பின் முருகா!!! பின் நாம் சென்று விடுவோம்.. என்றெல்லாம்!! நிச்சயம் அறிந்தும் கூட பின்...பார்!!!
அதோ வருகின்றதே... பலத்த காற்று பின் புயலும் கூட!! நிச்சயம் அறிந்தும் கூட பின்.. இவை வந்தால் இன்னும் அடியில் சென்று விடுவோம் என்றெல்லாம்! நிச்சயம் அறிந்தும் கூட!
வேலவன்
பின் அகத்தியரே!! உந்தனுக்கு புரியும் உந்தனுக்கு தெரியும் அல்லவா!!!
நிச்சயம் அதனை தடுத்து நிறுத்து!!! நிச்சயம்!!
அகத்திய பெருமான்
முருகா!!! நிச்சயம் பின் தடுத்து நிறுத்த முடியும்!! ஆனாலும் பின் அங்கிருந்து சொல்வார்கள்!! பின் யான் நிச்சயம் தடுத்து நிறுத்தினால்!!!.... அகத்தியனே!!! உன்னை எதற்காக??? இங்கே அதாவது முருகனிடத்தில் போகச் சொன்னேன்?? என்றெல்லாம் நிச்சயம் ஈசன் கேட்பார்!
அதனால் அழிவு நிச்சயம் ஆரம்பித்துவிட்டது!!!
வேலவன்
நிச்சயம் யான் வரப்போவதில்லை என்றெல்லாம் அறிந்தும் கூட!!!
பின் அதாவது வேடிக்கையை பார்!! அகத்தியனே என் வேடிக்கையை பார்!! இப்பொழுது வருவதை அங்கேயே தடுத்து நிறுத்துகின்றேன் என்று!!
முதலில் அறிந்தும் பின் வேல் ஒன்றை கையில் பின் அதாவது பின் எதை நினைக்கின்றானோ!!!! அதை தன் நிச்சயம் கையில் வரவழைக்கும் திறன் நிச்சயம் அதாவது அனைத்து திறன்களையும் கூட பெற்றவன் தான் முருகன்!!!
இதனால் கையில் வேலை வரவழைத்து வேலை எடுத்தான்!!! நிச்சயம் அதை நோக்கி (பலத்த காற்றை) பின் வேகமாக வீசினான்!!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பின் வேலை எதிர்த்து அவ் காற்றும் வந்து கொண்டே இருந்தது...
அகத்திய பெருமான்
பின் முருகா பார்த்தாயா!!! இதனால் நிச்சயம் இன்னும் உன் தந்தைக்கு கோபம் தான் வரப்போகின்றது!! பின் அதாவது... யான் தான் சொல்லிக் கொடுத்தேன் என்று உன் தந்தை என் மீது கோபம் கொள்ள போகின்றான்...
இதனால் நிச்சயம் நீ வந்துவிடு என்று!!!
வேலவன்
அகத்தியனே நிச்சயம் யான் வரப்போவதில்லை!! இதுதான் எனக்கு சொர்க்கம்!!! நீ வேண்டுமானால் செல். ஆனால் யான் நிச்சயம் இதை தடுத்து நிறுத்துகின்றேன்!!!
மீண்டும் என் தந்தையையும் தாயையும் கூட இங்கே அழைத்து வாருங்கள்.. அனைவரையும் கூட என்று!!
அகத்திய பெருமான்
நிச்சயம் முடியாது!!!
வேலவன்
பின் அகத்தியனே நிச்சயம் முடியாது என்பதை கூட நீ சொல்கின்றாயா??????
நிச்சயம் இதனை யான் ஏற்கப் போவதில்லை!!!
அகத்திய பெருமான்
பின் சில நேரங்களில் சொல்லித்தான் ஆக வேண்டும் முருகா!!! அறிந்தும்!!
ஏனென்றால் உன் தாயும் தந்தையும்... யான் என்ன பேசுகின்றேன் ? என்று அங்கே இருந்து பின் செவி கொடுத்து கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள்!!! அறிந்தும் இதை தன் உணர்ந்தும் கூட!
இதனால் நிச்சயம் முருகா வந்துவிடு என்று!!!
வேலவன்
நிச்சயம் சரி...
வேல் மீண்டும் பின் வந்துவிட்டது..
முருகன் வேலுடன் பேசினான்... பின் இவை என்று அறிய!!! மீண்டும் பின் சரியாகவே வந்து நிச்சயம் தன்னில் கூட இங்கே புதைந்தது மர்மமாகவே!!! இன்னும் இப்பொழுது மறைமுகமாக இருக்கின்றதே !! (கருவறையில்)அங்கு அடியில் வேல் ஒன்று அதாவது திரும்பி வந்து விட்டதே...அவ் வேல் நிச்சயம் உள்ளே சென்றுவிட்டது!!! அறிந்தும் கூட!!!
இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன்!!! ஆனாலும் கடைசியில் தான் விளக்கி விளக்கி சொல்வேன்!!!
((குருநாதர் குறிப்பிடும் மறைமுகமான இடம் கதிர்காமம் ஆலய கருவறை .ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம ரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார் கருவறை வாயிலில் திரைச்சீலை ஓவியம்
எந்த இந்துக் கோயில்களிலும் இல்லாத வழக்கமாக, எந்நேரமும் கருவறையை மறைத்தபடி கருவறை வாயிலில் திரையிட்டு இருப்பது கதிர்காமம், கந்தன் கோயிலில் மட்டுமே காணப்படும் நடைமுறை.பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர்.
ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம ரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது.
குருநாதர் குறிப்பிடும் மறைமுகமான கருவறையில் முருகன் வேல் அடியில் உள்ளது இந்த ரகசியம் குருநாதர் மூலம் நமக்கு தெரிய வருகின்றது)
இதனால் பின் வேல் உள்ளே சென்று விட்டது!! அங்கே!!!
இருப்பினும் பின் அறிந்தும் கூட மீண்டும்!! முருகன் என்னை பார்த்து
வேலவன்
அகத்தியனே நிச்சயம் பார்த்தாயா!!! என் தந்தை தான் இதற்கு காரணம் !!!
பின் அதாவது யான் இதைக் கூட வெல்ல மாட்டேனா!!!???
என் தந்தை தான் அங்கிருந்து இயக்குகின்றான் என்று!!!
அகத்திய பெருமான்
யார்? இயக்குகின்றார்கள்? என்று தெரிகின்றதா முருகா!!!!...
இதனால் நிச்சயம் நீ வந்துவிடு!!! நாம் சென்று விடுவோம் என்று!!!
வேலவன்
விடப்போவதில்லை!!! என்று
இதனால் பின்( யந்திர) தகட்டை சடாசரத்தை எடுத்தான்!!!
பெரிய ஒரு தகட்டை நிச்சயம் பின் அதாவது வீசினான்!!! அறிந்தும் கூட எதை என்று புரிந்தும் கூட!!
(சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரவணபவ மந்திரத்தின் பிரயோகம்)
பின் மீண்டும் அச் சடாச்சர பின் அதாவது தகடு அறிந்தும் எதை என்று அறிய அறிய மீண்டும் பின் பின் அதாவது எவ்வளவு பின் வேகத்தில் வீசினானோ!!!!... அவ்வளவு பின் வேகத்தில் பின் திரும்பி வந்து மீண்டும் அங்கே விழுந்தது!!
இப்பொழுது ... அருவமாக அதாவது எதையும் காட்டவில்லையே!!!
(தரிசனத்தின் போது திரை சீலை இட்டு எதையும் காட்டாமல்)
(கதிர்காம கருவறையில் திரைச்சீலை விட்டு மூடி எதையும் காட்டாமல் எதையும் பார்க்க முடியாமல் இருக்கும் இடத்தில் வேலுடன் சேர்ந்து அந்த ஷடாக்சர எந்திர தகடு இரண்டும் அங்கே உள்ளே மறை பொருளாக இருக்கின்றது)
அதில் என்னென்ன ?? உள்ளது என்பதை கூட யாங்கள் அறிவோம்!!!
பின் மீண்டும் அங்கே வந்துவிட்டது!!!!
வேலவன்
பின் அகத்தியனே ஏன் இந்த நிலைமை????
பின் அதாவது என் தந்தையிடம் சொல்!!! நிச்சயம் யான் சாதிப்பேன் என்று!!!
அகத்திய பெருமான்
அப்பப்பா!!!!.... எந்தனுக்கு ஒன்றும் தெரியாதப்பா!!!... பின் ஈசன் என்னை அனுப்பினான்... யான் அமைதியாக தான் காத்திருப்பேன் என்று!!!
வேலவன்.
அகத்தியனே உன்னால் முடியும் அல்லவா!! நீ ஏதாவது செய்!! என்று!!
அகத்திய பெருமான்
நிச்சயம் யான் செய்யப் போவதில்லை! ஏனென்றால் கலியுகம் பின் நிச்சயம் அதாவது.. உன் தந்தைக்குத் தெரியும்... எப்படி எல்லாம் மனிதர் இருப்பார்கள்!! எப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை எல்லாம்....
இதனால் யான் அமைதியாகவே!!! அதாவது அமைதி காக்கின்றேன்!
அதாவது... பின் நீ செய்வதெல்லாம் யான் விளையாட்டாக எண்ணி பின் நிச்சயம் பார்க்கத்தான் போகின்றேன்.. அவ்வளவுதான் என் வேலை!! நிச்சயம்.
வேலவன்
பின் அகத்தியனே!!!! நிச்சயம் பின் அதாவது யான் அதாவது பின் அறிந்தும் கூட இவ்வாறு யான் செய்வதெல்லாம் உந்தனுக்கு விளையாட்டாக தெரிகின்றதா????
அகத்திய பெருமான்
அய்யய்யோ!!! பின் அப்படி இல்லை முருகா!! அப்படி யான் பேசவில்லை முருகா... யான் உந்தனுக்கு உதவினால் நிச்சயம் உன் தந்தையானவன் அங்கிருந்தே பார்த்துக் கொண்டிருக்கின்றான்.. பின் என்றெல்லாம் நிச்சயம்!!
அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய... பின்பு மீண்டும் எதை என்று அறிய அறிய பின்
யானே செல்கின்றேன்!!!! அதாவது... மீண்டும் மயில் ஒன்றை அனுப்பினான். நிச்சயம் மயிலும் கூட திரும்பி வந்துவிட்டது.. அறிந்தும் எதை என்று புரிய.. இதனால் எப்படி ஏது என்று அறிய!!!
வேலவன்
நிச்சயம் பின் அகத்தியனே!!! நிச்சயம் அவ்வளவுதானா!! அவ்வளவுதானா!!! பின் அனைத்தும் திரும்பி வந்து விட்டது!!
பின் இனி யான் என்ன செய்வேன்??? என்றெல்லாம்!!!....
அகத்தியர் பெருமான்
நிச்சயம் தெரிகின்றதல்லவா முருகா!! வா நிச்சயம் நாம் சென்று விடுவோம் என்று!! பின் அறிந்தும் எதை என்று புரிய புரிய!!
ஆனாலும் நிச்சயம் பின் செல்வோமா என்று!!!
ஆனாலும் முருகன் நிச்சயம் பின் என் கையைப் பிடித்து... அறிந்தும் கூட என்னை இழுத்து!!!
ஆனாலும் எனக்கும் மனம் வரவில்லை!!! ஏனென்றால் நிச்சயம் அறிந்தும் கூட பின் அவை வந்து விட்டால் நிச்சயம் பின் அதாவது பாதி அளவு நீராகவே இருக்கும் என்று!!!(கடல் வந்து மூடிவிடும்) ஆனாலும் நிச்சயம் ஆனாலும்!!
ஈசனாரும் கூட அறிந்தும் கூட!!!
பின் அதாவது மீண்டும் ஒரு முயற்சி எடுப்போம் என்று முருகனும் கூட!!!
மீண்டும் எதை என்று அறிய நிச்சயம் பின்...
வேலவன்
அகத்தியனே !!! அதாவது நிச்சயம் உன் சக்தி எவ்வளவு என்று யானே உணர்வேன்.
அதனால் நிச்சயம் தன்னில் கூட யான் மயில் மீது அமருகின்றேன்.. நீ என் பின்னாலே அமர்... போதுமானது.
அகத்திய பெருமான்
நிச்சயம் ஐயையோ!!! அறிந்தும் கூட பின் முருகா!! இப்படி எல்லாம் நீ என்னை சோதித்து விடாதே!!!
நிச்சயம் தன்னில் கூட உன் தந்தைக்கு கூட... எந்தன் ஆற்றல் தெரியும்... இதனால்தான் அறிந்தும் கூட ஈசன் அதாவது உன் தந்தையானவன் என்னை அனுப்பினான்!!!
வேலவன்
பின் நிச்சயம் அகத்தியனே என்னுடன் நீ வரத்தான் வேண்டும். நிச்சயம் பின் என் தந்தை தேவையா??? யான் தேவையா??? என்று!!
(நான் உந்தனுக்கு வேண்டுமா? அல்லது என் தந்தை ஈசன் உந்தனுக்கு வேண்டுமா என்று முருகன் குருநாதரிடம்)
அகத்தியர் பெருமான்
நிச்சயம் நீங்கள் இருவருமே தேவை!!!
வேலவன்
அப்படி என்றால் நீ என்னுடன் வா என்று!!!
அகத்திய பெருமான்
ஆனாலும் உன் தந்தை அங்கிருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.. பின் எப்படி யான் வருவது?? என்று!!
வேலவன்.
நிச்சயம் மறைத்து விடுவோம் என்று!!
அகத்திய பெருமான்
பின் வேலவா.. நிச்சயம் உன் தந்தை எப்பேர்பட்டவன்?? எதை என்று புரிய என்று!!
வேலவன்
நிச்சயம் பின் யான் சிறுவன் அல்லவா...
அகத்திய பெருமான்
நிச்சயம் நீ சிறுவன் தான்!
யான் சொன்னேன்!! அறிந்தும் கூட!!!
வேலவன்
அப்படி என்றால் நிச்சயம் பின் விளையாடுவது போல் நிச்சயம் அறிந்தும் கூட இங்கிருந்து நிச்சயம் யான் நினைக்கின்றேன்!!!
பின் அதாவது உனை கேட்கின்றேன்... என் தந்தை ஏமாந்து போவான்...
நிச்சயம் அகத்தியனே!!!!! நாம் விளையாடுவோமா!!! மயில் மீது என்று!!!!!!!!!!!!!
நிச்சயம் நீயும் கூட பின் அதாவது விளையாடுவோம் என்று!!! (விளையாடுவது போல் விளையாடி அகத்தியரை மயில் வாகனத்தில் ஏற்றி எதிரே வரும் ஆபத்தை தடுக்க முருகன் திட்டம்)
அகத்தியர் பெருமான்
அடடா!!! பின் முருகா!!! இப்படி எல்லாம் நிச்சயம் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கின்றான் உன் தந்தை..!!!
. இதனால் ஒன்றும் செய்ய முடியாது யான் அமைதியாக இங்கே அமருகின்றேன்.. என்றெல்லாம்!!
நிச்சயம் பின் அறிந்தும் அதனுள்ளே நிச்சயம் அதாவது பின் அதாவது மேல் நோக்கி விஸ்வரூபம் போல் நீர் வந்து கொண்டே இருந்தது.
ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் எவை என்று கூட ஒரு பெரிய மலை. அவ் மலையை சுற்றி கிராமங்கள் நிச்சயம் இவைதன் உணர்ந்த.. பின் அளவிற்கும் கூட நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய ஆனாலும் நிச்சயம் எதை என்று புரிய... நிச்சயம் பின் அனைத்தும் கூட... பின் கடல் நீர் கொடும் காற்றும் வந்துவிட்டதே என்றெல்லாம்..
. பின் இங்கு வரை வந்துவிட்டது (கதிர்காமம் வரை)
வேலவன்.
ஆனாலும் அகத்தியனே!!! பின் நிச்சயம் நீ ஏதாவது செய்ய வேண்டும்!!! என்று!!
இதனால் நிச்சயம் இதை என்று புரிய புரிய பின் இவ்வாறு அழிந்துவிட்டதே.. பாசத்துடன் (முருகன் பாசம் காட்டிய அனைத்தும்) என்றெல்லாம் பின் நிச்சயம்...
அப்பனே இதன் அடியில் உள்ளதப்பா!!!....
இதனால்தான் அப்பனே பெரிய பெரிய ஞானிகளுக்கும் ரிஷிகளுக்கும் அப்பனே பின் இவ் கைலாய மலை அப்பனே... பின் சூட்சமமாகவே உள்ளதப்பா.
பின் அதாவது பல பல யோகிகள் ஞானிகள் அப்பனே இங்கு வந்து அப்பனே பின் வணங்கி விட்டு செல்வார்களப்பா..
அக் கைலாயம் அவர்களுக்கு தெரியும்.. அவர்கள் கண்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
யார்?? நிச்சயம் பின் எவை என்று கூட ஞானிகளுக்கு தெரிகின்றதோ!!?? அவந்தன் மோட்ச நிலையை அடைந்து அப்பனே நிச்சயம் பின் எதை என்று புரிந்து உண்டு அப்பனே இவ்வுலகத்தை காக்க மறு பிறவியை அப்பனே.. இறைவனிடத்தில் கேட்டு வரலாம் என்பேன் அப்பனே..
அதாவது கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பெரிய கைலாயம்!! அறிந்தும் கூட...!!!!
இதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் புரிய.. எவை என்றும் அறிய அறிய.. அப்பனே இதனால் நிச்சயம்... இனிமேலும் பின் அதாவது... முருகன் பேசினான்!!!
வேலவனின் பேச்சு!!
கடல் நீர் இனிமேலும் இதைத் தாண்டி வரக்கூடாது!!! நிச்சயம்... இதுதான் என் வழி என்று... யான் இங்கேயே தங்குகின்றேன் என்று...
(கதிர்காம கருவறையில்)
குருநாதர் வாக்கு
அங்கே அழகாக முருகன் அமர்ந்திட்டானப்பா!!!
இதனால் அப்பனே அங்கே (மூலஸ்தானத்தில்) ஒரு வழி இருக்கின்றதப்பா!!
அதை மீறி அப்பனே நிச்சயம் முதல் வழியில்!!!! அப்பனே இன்னும் அப்பனே பின் எவை என்று கூட வருகின்றது...
ஆனாலும் அப்பனே நிச்சயம் முருகனுக்கு பின் பயந்து பின் கடல் நீரும் கூட அங்கே நின்கின்றது...
(பொங்கி வந்த கடல் வெள்ளம் அப்படியே நிற்கின்றது)
இரண்டாவது வழி அப்பனே திருச்செந்தூர் என்பேன் அப்பனே!!!
முதல் வழி கதிர்காமம்
இரண்டாவது வழி திருச்செந்தூர்.
(உலகத்தில் கலியுகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள் பெருகி அதன் மூலம் இறைவனால் கோபம் கொள்ளப்பட்டு பொங்கி வந்த கடல் நீர் சுனாமி அனைத்தையும் அழித்த பொழுது திருச்செந்தூரில் கடல் பயந்து பின்னே சென்று ஒரு அலை கூட வராமல் நின்றது நினைவுக்கு வரும்
கலியுக தொடக்கத்தில் இதேபோன்று கடல் பொங்கி வந்த பொழுது கதிர்காமத்தில் அமர்ந்து நீரை தடுத்து நிறுத்திய முருகனின் கருணை திருச்செந்தூரிலும் நடந்திருக்கின்றது)
அப்பனே இன்னும் அப்பனே விளக்குகின்றேன் அப்பனே!!! மூன்றாவது வழியையும் கூட!!
பின் அதாவது நீங்கள் சரியாகவே அப்பனே நிச்சயம் அப்பனே பின் அறிவு படைத்தவராக இருக்க வேண்டும்... அப்பனே நிச்சயம் மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும்... அப்பனே அன்பு கருணை அப்பனே இருக்க வேண்டும்... அனைத்து உயிர்களையும் கூட அப்பனே தன் உயிர் போல் எண்ண வேண்டும்!!
இப்படி நினைத்தால் அப்பனே வரும் காலத்தில் பின் உங்களுக்கு அனைவருக்குமே கற்றுக் கொடுத்து அப்பனே.. உங்களுக்கு என்ன தேவையோ??? அதை நீங்களே பெற்றுக் கொள்வீர்கள் என்பேன் அப்பனே!!!
ஒவ்வொரு ரகசியத்தையும் சொல்கின்றேன்.. இதனால்தான் அப்பனே பின்... ஆதிசங்கரனும் கூட!!
அப்பனே நிச்சயம் பின் அனுமானும் கூட!!
சீதையும் கூட!!
ராமனும் கூட!!
கிருஷ்ணனும் கூட... அப்பனே இன்னும் புத்தனும்(கௌதம புத்தர்) கூட அப்பனே பின் இன்னும் சித்தர்களும் கூட
ஏன் இங்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அப்பனே!!!..
இங்கு அப்பனே பின் கைலாய மலை அப்பனே அழகாகவே!!! அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட... பின் மூழ்கி கிடக்கின்றது என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே பின் அங்கிருந்து அதாவது மறைந்து பின் இருக்கின்றானே!!!........(கருவறையில்)
அங்கிருந்து...
கீழ்நோக்கி அவ் பனிமலைக்கு சென்று கொண்டே இருக்கின்றான் என்பேன் முருகன் அப்பனே!!
(கதிர்காம மூலஸ்தானத்தில் மறைமுகமாக அமர்ந்திருக்கும் முருகன் தினமும் கைலாய மலைக்கு கீழ் நோக்கி சென்று வந்து கொண்டிருக்கின்றார்)
அப்படி நிச்சயம் அவ்வாறு இங்கு (கதிர்காமத்திற்கு வந்து) வணங்கினாலே உங்கள் கர்மாவை அப்பனே எடுத்துச் சென்று அதில் விட்டு (மூழ்கி இருக்கும் கைலாச மலையில்) விடுவானப்பா!!! முருகன் அவ்வளவுதான் என்பேன் அப்பனே விஷயம்.
அப்பனே இதை என்று புரிந்து கொண்டு அப்பனே ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய... அப்பனே இதனால் அப்பனே பின்
அங்கு என்ன உள்ளது?? என்பதைக் கூட அப்பனே.. பின் அதாவது சொல்லிவிட்டேன்!!
இதுவும் கூட பாதி தான் என்பேன் அப்பனே!!
நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட பின் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு.
இதனால் அப்பனே இவையெல்லாம் அப்பனே ஈசன் விளையாட்டா?? என்றெல்லாம் அப்பனே...
நிச்சயம் அப்பனே!!! (ஆம் ஈசனின் விளையாட்டு ஈசனின் விதி)
இதனால் தான் அப்பனே... பின் கந்தன் அப்பனே.. நிச்சயம்(பொங்கி வரும் கடல்) நீரை அப்பனே... அதாவது கடல் நீரை அப்பனே பின் தடுத்துக் கொண்டே இருக்கின்றான் இன்னும்.. வர வர!!!
எவை என்று கூட அவ் முதல் வழியிலே (கடல் நீர்) நுழைந்து விட்டால் அப்பனே நிச்சயம் பின் அனைத்திலும் கூட பின் நுழைந்து விடும்!! என்பேன் அப்பனே வந்துவிடும்!! என்பேன் அப்பனே!! அப்படியே பின் அறிந்தும் கூட!!!
(கடல் பொங்கி வருவது அதாவது சுனாமி போன்று கலியுகத்தில் அழிவுகள் கடலால் வருவதை முருகன் அங்கு இருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றார் இலங்கையையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்)
இதனால்தான் அப்பனே நிச்சயம் கந்தன் காத்துக் கொண்டிருக்கின்றான் அங்கிருந்து!!... அனைவரையும் கூட அப்பனே!!
இன்னும் விளக்கங்கள் சொல்வேன் என்பேன் அப்பனே... பல ரகசியங்கள் இங்கு ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே...
நிச்சயம் பின் கந்தனே இங்கு வரவழைத்து அப்பனே இன்னும் வாக்குகள் பின் கற்பிப்பான்..
அப்பனே இன்னும் போதனைகள் எல்லாம் அப்பனே... மக்கள் தெரிந்து கொள்ளவே அப்பனே சித்தர்கள் உரைப்பார்கள் அப்பனே...
இப்போதைய நிலைமைக்கு இது போதுமப்பா!!!
எம்முடைய ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!! கோடிகளப்பா!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே... குருநாதர் உரைத்த இவ்வாக்கின் தொடர்ச்சியாக... கதிர்காம ஆலயத்தில் இருந்து மூணரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கதிரை மலையில் வாக்குகள் நலகினார்...அவ் வாக்குகள் பாகம் இரண்டில் வரும்.
ஆலயம் பற்றிய தகவல்கள்.
கதிர்காமம் கந்தன் திருக்கோவில் - இலங்கை.கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத்தலம், என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் புகழ்பெற்ற கதிர்காமம் கந்தன் திருக்கோவில் ஆகும்.பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர். திரையில் வள்ளி, தெய்வானை சமேத கந்தனின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. இங்கு பூஜை செய்பவர்களை ‘கப்புராளைமார்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாம் தரும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பித்து, மீண்டும் நம்மிடம் திருப்பித் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனிதரானாலும், திரையை விலக்கி காண இயலாது. திரைமீது உள்ள வடிவத்தை மட்டுமே தரிசித்து வரவேண்டும்.அமைவிடம் : இலங்கை நாட்டின் தென்பகுதியில், ஊவா மாகாணத்து புத்தல பிரிவில், தீயனகம காட்டில், மாணிக்க கங்கை நதிக்கரையில், கதிர்காமக் கந்தன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது கொழும்பில் இருந்து 280 கி.மீ, கண்டியில் இருந்து 210 கி.மீ. தொலைவில் இருக்கிறது..
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA. OM SARAVANA BAHVAYA NAMAHA.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete