​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 15 January 2025

சித்தன் அருள் - 1776 - திரு.ஹனுமந்ததாசன் அய்யா - அயோத்திப் பட்டினம் வாக்கு - 4!


அந்த நம்பிக்கையை அடியோடு ஒருவாரத்தில் தவிர்த்து விட்டு .... அகத்தியன் சொல்லிவிட்டான் , காலம் குறுகியது என்றானே ? யாருக்கென்று பயம் வந்தது,  என்ன பயம்? ஆக இன்னும் நீங்கள் மனிதர்களாக இருக்குகிறீர்கள் தவிர, இன்னும் ஆன்மீக அறிவு உச்சக்கட்டத்திற்கு எட்டவில்லையே? உங்களையெல்லாம் எப்படிடா திருத்தப்போகிறேன் என்று என்னக்கு புரியவில்லை?  (இந்த இடத்தில் ஹனுமந்தன்தாசன் ஐயா மற்றும் அடியவர்களின் சிரிப்பலை) 

ஆகவே திருந்துங்கள் , ஆக  நீங்கள் மனிதர்கள் அப்படித் தான் இருப்பீர்கள் ! ஆக உங்களை மாற்ற முடியாது. நானாவது உங்கள் பக்கம் மாறி கொள்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும் . (மீண்டும் அனைவரின் பலத்த சிரிப்பலை)

ஆகவே அகத்தியன் பேசவில்லையடா, ஏனென்றால் உள்ளம் கடந்து பேசுகிறேனடா !

நான் யாரிடம் மனசுவிட்டு குறையை சொல்லுவேன் ? யாரை திருத்துவேன் ? யான் எப்பொழுதும் ஒரேநிலையில் இருந்தால் , என்னை யாரும் மதிக்க மாட்டார்கள் . நானும் , உங்களோடு உங்களாக உட்கார்ந்து கொண்டு , உங்களோடு உணவருந்தி கொண்டு , உங்களோடு படுத்துறங்கி , உங்கள் தோளை தட்டி , உங்கள் குறைகளை கேட்டு , உங்களோடு நானும் ஒருவனாக ஆனால் தான் , நீங்கள் ஒருவேளை என்னை மதிப்பீர்களோ என்னமோ தெரியவில்லை ?  இனியாவது சித்தன் சொல்லை சற்று கேளுங்கள் ! அகத்தியன் நிறைய வழியை காட்டியிருக்கிறேன் ! ஆக காலம் குறுகியது , அதனால் சொல்லுகிறேன் என்றால் பயந்துவிடக்கூடாது ! ஏன் மனசிலே இந்த படபடப்பு ? ஏன் இந்த துடிதுடிப்பு ? நான் என்ன ஆயுளுக்கு பங்கம் விளைவிக்கவா உன்னை சொன்னேன் ? வாழவைக்க வந்தவனடா ! ஆயுளை நீட்டிக்கொடுத்தவனே ஒரு வாரத்திலே மறந்துவிட்டார்களே ? போன வாரம்தானே இப்படி சொன்னான் ? அதற்குள் அகத்தியன் இப்படி சொன்னான் என்று கலங்கலாமா ?  ஆக இன்னும் நீங்கள் மனிதர்களாகவே இருக்கிறீர்கள். அந்த நிலையை விட்டு சற்று உயர்ந்த நிலைக்கு சற்று வாருங்கள் ! உங்களுக்கு வாழ்கை இருக்கிறது வளமான வாழ்கை இருக்கிறது ! இன்றைக்கு கூட , நேற்றையதினம்  காலங்கிநாதரிடம் வாக்கு புண்ணியத்தை வாங்கி கொடுத்தேன் ! போகரிடம் புண்ணியத்தை வாங்கி கொடுத்திருக்கிறேன் ! இன்றைக்கு அனுமன் , அனுமனோடு , அனுமனே தன்னைத்தானே வணங்கிக்கொண்ட அற்புதமான இடமும் கூட இந்த இடம் சொல்லலாம் ! அவர் அனுமன் என்ன செய்தான்  தெரியுமா ? இந்த இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தான் ! ராமனோ வனவாசம்போல் ஊரை சுற்ற  போய்விட்டான் ? யாருமே , விபீஷணனை கண்டால் பிடிக்கவில்லை , சுக்ரீவனை கண்டால் பிடிக்கவில்லை . தனியாக அமர்ந்து கொண்டு உட்கார்ந்து யோசித்தான். பிறகு பார்த்தான் , நான் எதற்காக பிறந்தேன் ? என்று அனுமன் சிந்தித்தானே ? அந்த இடம் கூட இந்த இடம் தான். நான் எதற்காக வந்தேன் ? என்ன செய்தேன் ? ராமன்  இங்கு போ என்கிறான் , அங்கு போ என்கிறான் ,   அவன் நிலைமை புரிந்து கொள்ளவில்லையே ? குரங்கு புத்தியைவிட மோசமான புத்தியாய் இருகிறார் அவர். ஒருநிலையில் இருக்கவில்லை என்று கூட கவலைப்பட்டான் அனுமன்.  அந்த இடத்தில் பெரிய வட்டப்பாறை இருந்ததடா. அந்தப்பாறையில் தான் ராமன் அமர்ந்துகொண்டு பேசினான் . திட்டமிட்டான் ! இங்குதான் இது அயோத்தியாபுரி என்று சொன்னான் ! இப்படி சொன்னால் ? என்ன செய்வது என்று அனுமன் கவலைப்பட்டான். ஆக அனுமன் தன்னைத்தானே கிள்ளிகொண்டு பார்த்து, நான் அனுமன் தானா ? எனக்கு பலம் இருக்கிறதா ? தன் பலத்தை எல்லாம் இழந்து , தன்னம்பிக்கை எல்லாம் இழந்து ஒரு ஐந்து நிமிடம் திணறிப்போனான். இதே திணறல் அனுமனுக்கு முன்பு ஒரு சமயம் ஏற்பட்டது தான்.

ஒரு சமயம் சீதையை காணாமல், எல்லாம் துடிதுடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கைக்கு சென்றானே அனுமன், எல்லா இடத்தையும் பார்த்தான் சீதை கிடைக்கவில்லை. சீதையை பார்த்தத்ததில்லை அனுமன். அங்கலக்ஷணம் சொன்னால் கேவலம். ராமன் வேறுஎதுவும் சொல்லவில்லை. மாற்றான் மனைவி பற்றி அங்கலக்ஷணத்தை வர்ணிக்கக்கூடாது. எப்படி சீதையை கண்டுபிடிப்பது ? மனிதன் தெய்வமாயிற்றே என்று அலைந்தான்.  ஒரு சமயம் சீதை யாரை கண்டாலும் அரக்கிகளாய் இருக்கிறார்கள், அரக்கியரும் பல்வேறு உருவத்தை எடுக்கக்கூடியவர்களாய்  இருக்கிறார்கள். இதில் யார் சீதை? யார் அரக்கியர் ? தெரியாமல் முழித்து போனான். அனுமனுக்கு சோதனை வந்தது. அவனுக்கும் சந்திராஷ்டமம் ஏற்பட்டது போலும் என்று எண்ணுகிறேன். அவனுக்கும் வந்தது , அப்போது சொன்னான் "இனி சீதையை கண்டுபிடிக்க முடியாது , திரும்பி போனால் ராமன் என்னை திட்டுவான் , ஆகவே சமுத்திரத்தில் விழுந்து நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் " என்று சொல்லி அனுமன் முடிவெடுத்தான் ஒரு சமயம். பிறகு மாற்றிக்கொண்டான் என்றாலும்கூட. அதற்குப்பிறகு இதேஇடத்தில்தான் ராமன் இங்கே அயோத்திபுரி என்கிறானே ? இவனை எப்படி புரிந்துகொள்வது என்று , புரியவில்லை என்று ,  தன்னை தான் என்னசெய்யவேண்டும்  என்று தெரியாமல் ? தன்னை தானே , தன் பலத்தை எல்லாம் ராமர் சந்நிதியில் வைத்துவிட்டு யோசித்தான் . அந்த யோசித்த இடமும் இங்குதான் . பிறகு தைரியம் ஆனான் என்று வைத்துக்கொள்ளுங்கள் . ஆக எதை சொல்லுகிறேன் என்றல் இங்கு பல்வேறு ராமாயண சம்பவங்கள் நடந்திருக்கிறது. அது தான் உண்மை ! ஆக ராமருடைய மனதை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் யாராவது இருந்தால் ? மீண்டும் இன்றைக்கு நான் சொன்னேனே , இதை மறுமுறை நன்றாக யோசித்துப்பார்த்து , ஒவ்வொரு செயலுக்கும் ,  சொல்லுக்கும் அதிகாரம் இருக்கிறது , சூட்சுமம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டால் இங்கே  ராமாயணமே நடந்திருக்கிறது. ராமாயண காலத்தில் தெரியாத சங்கதிகள் நடந்திருக்கிறது. ராமர் என்று வாய்விட்டு சொன்னானே  , மனம் விட்டு சொன்னதெல்லாம் இங்கே இந்த இடத்தில்தான் ! ஆகவே அவ்வளவு புனிதமான இடத்தில் , வைகுண்ட ஏகாதசி நன்னாளில், பரணி நட்சத்திரத்தில், உங்களையெல்லாம் ராமருடைய கருணைக்கு பாத்திரமாகும் பாக்கியம் கிடைத்திருக்கிறது! ஆக உங்களை கண்டு நான் பெருமைபடுகிறேன். அகத்தியனுக்கு சின்ன வாய்ப்பு கிடைத்தது, அந்த வாய்ப்பை ராமரும், ராமரின் அடியேனும் வழங்கினேன்! அவன் சொன்னதையும், இந்த கருணைக்கடாக்ஷத்தை தான் செந்தாமரை பூவின் கன்னத்தில் கிளம்பி , கண்களில் இருந்து கிளம்பிய அந்த ஒளியை, ஒளிப்பற்றை, உங்களுக்கு நான், கருணையாக உங்கள் எல்லாருக்கும் தெளிக்கிரேன். ராமருடைய முழு கருணையையும் பெற்றுருக்கிறீர்கள்.

ஆக வைகுண்ட ஏகாதசி அன்று வைணவ கோவிலுக்கு வந்து, தரிசனமும் கிட்டி,  ப்ரசாதமமும் பெற்று, ராமரின் கருணைக்கு ஆளாகியிருக்கிறீர்கள் !!

நீங்கள் எல்லாம் பாக்கியவான்கள் என அருளாசி !!!

{அயோத்திப்பட்டினம் வாக்கு நிறைவு பெற்றது!]{

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. வணக்கம் இதுதான் சரியான அகத்தியர் வாக்குஅவதூதருடன் சில அனுபவங்கள் தொடர்ச்சியையே காணும்? அதை மீதி கட்டுரையும் பதிவிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete