இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1762 - கோவை - பகுதி 1
31. எதைப் பின்பற்ற வேண்டுமோ அதைப் பின்பற்றினால் நிச்சயம் மோட்ச கதிதான்.
32. தர்மத்தைப் பற்றி எடுத்துரையுங்கள்.
33. உன்மைதனை இவ்வுலகத்தில் யாருக்குமே புரியவில்லையே. உன்மைதனைப் புரிந்து விட்டால் கஷ்டங்கள் ஏதடா?
34. மற்றவர்களைப் பற்றி யோசி. தானாகவே அனைத்தும் நடக்கும்.
35. இறைவன் அவனவனுக்கு என்ன தகுதியோ அதைக் கொடுக்கின்றான். இறைவன் மிகப்பெரியவன்.
36. பக்தியில் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்? முதலில் கோபப்படக்கூடாது. பிறரைப்பற்றி குறை கூறக் கூடாது. பொறாமை கொள்ளக் கூடாது. தலையே போனாலும் பொய் சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட பக்தன் எங்கு காண்பி? அப்படிப்பட்ட பக்தனை நீ காட்டினால் அனைத்தும் உனக்கு தருகின்றேன். ஆனால் இருக்கின்றார்கள். ஆனாலும் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். உலகத்திற்கு வெளிக்காட்டவே இல்லை.( தன்னை வெளிக் காட்ட மாட்டார்கள்.)
37. இவ்வுலகத்தில் மிகப் பெரும் புண்ணியம் எது? ( அடியவர்கள் :- தர்மம். ) அத் தர்மத்தைப் பற்றி யாராவது எடுத்துரைத்தீர்களா? பக்தி தன் தனக்கு சாதகமாக வேண்டும் என்று இறைவனையே வணங்குகின்றார்கள். இது தர்மம் ஆகாது.
38. ஏதும் செய்யாமல் அமைதியாக இரு. இறைவன் நிச்சயம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பொம்மையை நகர்த்துவான்.
39. (மனித) பொம்மையில் மின்சாரம் இருந்தால்தான் அதையும் நகர்த்த முடியும். அதுதான் புண்ணியம். உன்னிடத்தில் புண்ணியங்கள் இருந்தால்தான் இறைவனும் உன்னை அசைப்பான் அப்பா. புண்ணியங்கள் இல்லையே.
40. (புண்ணியம்) நிச்சயம் செய்யாமல் கேட்பது தவறுதானே?
41. நீங்கள் ( புண்ணியங்கள் செய்துவிட்டு) இறைவனிடத்தில் சண்டை இடலாம். அதை யானே பொறுப்பு. கல்லைக்கூட வீசலாம். ஆனாலும் அதனுள்ளே இறைவன் கொடுத்துவிடுவான்.
42. தான் தன் நிலைமைக்கு தானே காரணம்.
43. வாசி செய்தால் சொந்த பந்தங்களே போய்விடும். புது உறவுகளைத் தேடுவான்.
44. பாதுகாப்பு என்பது புண்ணியம் தானப்பா. அதைச் செய்யாமல் எதைச் செந்தாலும் பாதுகாப்பு இல்லை.
45. பெரிய புண்ணியங்கள் எதை என்று யான் கூற? புண்ணியம் செய் என்று சொன்னாலே அதுவும் புண்ணியம் தாயே.
46. எங்களுக்கு ஒருவன் போதும் அப்பா. அவனை வைத்துக்கொண்டு யாங்கள் பல விளையாட்டுக்கள் விளையாடுவோம்.
47. ( இவ்வாக்கு கேட்ட அங்கு இருந்த அனைவரும்) அகத்தியன் அருளைப் பெற்றவர்கள்தான் நீங்கள் அனைவருமே. அதனால்தான் இப்பொழுது கூட உங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கின்றேன்.
48. மாயையில் சிக்கிக் கொள்பவனுக்கு இறைவன் பக்தி தெரியாதப்பா. இன்னும் மாயையில் சிக்கிக் கொள்ளலாம் என்று பக்தியை காண்பித்துக் கொண்டே இருக்கின்றான் அப்பா.
49. இறைவன்தான் அழிவில்லாதவன்.
50. முதலில் இறை பக்தனாக இருந்தால் முதலில் புண்ணியங்கள் பற்றியே உபசரிப்பான். ( இறை பக்தியில் பக்தனாக உள்ளவர்கள் புண்ணியங்கள் பற்றியே பிறருக்கு எடுத்துச் சொல்வார்கள்.) அறிந்தும் எதைச் சொல்வான்? முதலில் புண்ணியங்கள் செய். பிறர் உயிர் கொல்லாமை. நிச்சயம் தானின்றி இரு. பின் பிறர் பற்றி குறை கூறுதல் வேண்டாம். பொறாமை கொள்ளுதல் அவசியம் இல்லை. நிச்சயம் யான், எனது, எந்தனுக்குத்தான் இறைவன் என்று பீத்திக்கொள்ள மாட்டான்.
51. அனைத்தும் இறைவன் செயலே என்று யார் ஒருவன் இருக்கின்றானோ , அவந்தனக்குத்தான் நிச்சயம் அதி விரைவிலே நன்மைகள் ஏற்படும். யாராவது சொல்வீர்களா?
52. நான் செய்தேன். நான் செய்தேன். என்ன செய்தாய்? பாவம்தான் செய்தாய்.
53. புண்ணிய ஆத்மாக்கள் அனைத்தும் செயல் இறைவனே என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவான்.
54. இறைவனுக்கு சொந்தமானதை நீங்கள் உட்கொண்டு, அதை இறைவனுக்கே செய்தேன் என்று பாவத்தை இறைவன் மேலே பழி போடுகின்றீர்களே!!! நீங்கள் எவ்வளவு பெரிய திருடர்கள் என்று. அதாவது மனிதன் எவ்வளவு பெரிய திருடன்? ( வாயில்லா ஜீவராசிகளை - ஆடு, கோழி முதலியவற்றை - கொன்று, அதை உட்கொண்டு, மாமிசத்தை இறைவனுக்கே படைத்து இறைவன் மீதே பழி போடுகின்றான். என் சாமி பலி கேட்டது என்று மூட நம்பிக்கையில் உச்சம்.)
55. ( குல தெய்வ ஆலயத்தில் ) உயிர் பலி கொடு. பின் ( இறைவனுக்கு ) உன் சொந்தக்காரர்களைக்கூட பின் அடித்து நொறுக்கிக் கொடு. ( உயிர் பலி மகா பாவம் )
56. தாய், தந்தையரை, தன் மகனை, உற்றார் உறவினரை உயிர் பலி கொடுங்கள். ஏன் கொடுப்பதில்லை? மனிதன் திருடனப்பா. திருடன். பேசத் தெரியாத உயிர்களைக்கூட சாகடிக்கின்றீர்களே, நீங்கள் மனிதர்களா? முதலில் மனித நிலைமைக்கு வந்தால்தான் புண்ணியங்கள் செயல்படும்.
57. ( அசைவம் உண்பதை நிறுத்தாவிடில் ) நிச்சயம் சொல்கின்றேன். சிறிது காலம் ஈசன் பார்ப்பான். அப்படி இல்லையென்றால் நிச்சயம் சூரியனைத் பின் தட்டி பின் புவியில் உராய்வினை ஏற்படுத்துவான். அப்பொழுது உங்களால் தாங்க முடியாது. அப்பொழுது தெரியும். இறைவனுக்குச் சொந்தமானதை எப்படி எல்லாம் அதாவது வாயில்லா ஜீவராசிகள் அலையடிக்குது என்பது. ( வாயில்லா ஜீவராசிகள் துடித்துத் துடித்து மடிவதைப்போல உலகம் துடிக்கப்போகும் கற்பனை செய்ய இயலாத கொடூர பயங்கரம். அவசியம் அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள் அசைவம் வேண்டாம். அசைவம் தவிர் என்று. இதில் பாதிக்கப்படுவது உங்கள் வருங்கால சந்ததியினர் கூட.)
58. சித்தன் வழி வருபவர்களுக்கு புண்ணியங்கள் தேவை.
59. (மனதில்) அழுக்குகளை வைத்துக்கொண்டு இறைவனைச் சென்றடைந்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
60. ( மனதில் ) அழுக்குகளை நீங்கினால் என்ன ஆகும்? இறைவன் உன் மனதில் குடி கொள்வான்.
( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால், April 2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete