ஆக இன்னும் நிறைய சொல்லலாம் , ஆக இன்னும் போகும் போது , இன்னும் இரண்டு நாழிகை கழித்து மேற்கொண்டு யாம் அவனைப்பற்றி உரைப்பேன் ! அருமையான இடம் ! ஆனந்தமான இடம் ! நல்ல நாள் ! இந்த வைகுண்ட ஏகாதசி என்பது மோட்சத்தை எல்லாருக்கும் கொடுத்த நாள் ! ராமருக்கே ராமர் மோட்சம் கொடுத்த நாள் ! யார் யாருக்கு மோட்சம் கொடுத்தான் ? ராவணனுக்கே மோட்சம் கொடுத்தான் ! தன்னை யாரெல்லாம் எதிர்த்து தாக்கினார்களோ அத்தனை பேருக்கும் மோட்சம் கொடுத்தான் ! எதிராளிக்கும் மோட்சம் கொடுத்தவன் ! கேவலம் ஒரு தவளைக்காக துடிதுடித்து போனவன். அனால் அப்படிப்பட்ட இரக்க மனிதன் , இரக்க மனிதன் உள்ள தெய்வம் , ஆனந்தமாய் எதிர்பார்த்து காத்திருந்தான் , நல்லதொரு உள்ளம் வராதா என்று , நல்ல உள்ளங்கள் , ஆன்மீக எண்ணங்கள் கொண்ட நீங்கள் வந்திருக்கிறீர்கள் . ஆக உங்களுக்கு ராமன் தன் கருணையை உங்களுக்கு கொடுக்கிறான் என்பதை என் கண் கொண்டு பார்க்கிறேன் , ஆகவே இங்கு நரசிம்மர் வந்திருக்கிறார் ! நரசிம்மர் சிலை கூட நீங்கள் பார்த்திருக்க முடியும் . பொதுவாக எல்லா வைணவ கோவில்களில் நரசிம்மர் உருவம் இருக்கும் , எங்காவது ஓரிடத்தில், அனுமன் உருவம் இருக்கும் . இங்குள்ள நரசிம்மர் வித்தியாசமானவர் . நரசிம்ம அவதாரம் எடுத்து ஆனந்தமாய் இருக்கிற காலத்தில் ராமர் இங்கு அயோத்தியபட்டினம் என்று சொல்லிவிட்டானே ? ஒரு வேளை அயோத்தியாபுரிக்கு வராமல் இங்கயே தங்கி விடுவான் என்று , ராமா என்று கட்டித்தழுவின இடம் இந்த இடம். ஆக எவ்வளவு பெரிய பெருமைகள் இருக்கிறது. இறைவன் இறைவனை கட்டித்தழுவியதை எங்காவது கண்டது உண்டா ? அந்த அபூர்வமான சம்பவம் இங்குதான்டா நடந்திருக்கிறது. முன்ஜென்ம தொடர்பு இந்த ஜென்மத்தில் எப்படி கட்டித்தழுவ முடியும் ? ஒரே விஷ்ணுதான், வித்தியாசம் அவதாரம் தான், ஆனாலும் சில அற்புதங்கள் நடந்திருக்கிறதே !! மலைகளில் தேன் இருக்கிறது , மூலிகை இருக்கிறது , உயிர் காக்கும் மலர் இருக்கிறது , அத்தனையும் அகத்தியன் வந்து போயிருக்கலாம், மோட்சம் கொடுத்திருக்கலாம் ! வனாந்திரமாக இருந்த பிரதேசத்தை நல்ல வித வளமான பூமியாக மாற்றியிருக்கலாம். ஆக எப்பொழுது ராமன் தன் வாயால் இதுதான் அயோத்தியாபுரி என்று சொன்னானோ, அப்பவே அவன் இங்குதான் இருக்கிறான். அயோத்திக்கு சென்றிருக்கலாம் மனசெல்லாம் இங்குதான்டா இருந்தது. உடம்பு அங்க இருந்தது , மனசு இங்கே இருந்தது. இன்றைக்கு சிதிலமடைந்து இருக்கலாம் , இந்த கோயில் இன்னும் முன்னுக்கு வரமுடியாமல் இருக்கலாம் , எனக்கு இது தான் பிடிக்கிறது என்கிறான் ராமன் ! கொடிமரம் இல்லையா கவலை இல்லை ! மேலாடை இல்லாமலே பரவாயில்லை நான் கோவணத்தை கட்டிக்கொண்டு உலா வருவேன் என்று சொல்லுவது போல எனக்கு வேண்டாமே எதுவேமே வேண்டாமே , ஆடை ஆபரணங்கள் வேண்டாமே என்மீது சிறு தவறு என்றாலும் சொல்லுவதுதான். ராமன் எப்பொழுதுமே அலங்காரப்ரியன் , அலங்காரம் ஒன்றுதான் ஆசைப்படுவான். ஆக ஆசிரம வாழ்க்கைக்கு ஆசைப்பட மாட்டான் என்று அவதூறு சொல்லுகிறான், அகத்தியனுக்கே இது ஏற்கவில்லை. என்றைக்கு ராமன் அலங்காரப்ரியனாக இருந்திருக்கிறான் ? வாழ்ந்தது காலம் வேறு, இளமையிலேயே பர்ணசாலைக்கு சென்றான். அங்கு குருவோடு சேர்ந்து கொண்டே வில்வித்தை , கல்வித்தை என்று ஆசிரமத்திலேயே தன் காலத்தை கழித்தான் . பிறகு திரும்பி வந்தான் , அங்கே மையலை கண்டான் , கைகோர்த்தான் , கைப்பிடித்தான் , பிறகு தந்தையை இழந்தான் , வனாந்திரம் வந்தான் , அவன் வாழ்க்கையில் என்னடா சுகத்தை கண்டான் ? பெரும்பாலும் காட்டு வாழ்க்கையில் வாழ்ந்தவனுக்கு எப்படிடா அலங்காரப்ரியன் என்று பட்டம் கொடுத்தான் ? மனிதர்கள் பொல்லாதவர்கள் , நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் இறைவனையே மாற்றி விடுவார்கள், என்பதால் அவனே வருத்தப்பட்டு இருக்கிறான். நானும் கூட யோசித்தேன், இப்பொழுதான் அது கூட நான் யோசிக்கிறேன் , ராமனை ஏன் அலங்காரப்ரியன் என்று சொல்லுகிறார்கள் ? அவன் புஷ்பத்தின் மேல் ஆசையுண்டு, காரணம் காட்டிலே வளர்ந்தவன், காட்டு மலர்கள் மீது ஆசை கொண்டவன், அதில் தன் மனதையும் எண்ணங்களையும் பறிகொடுத்தவன். மனைவியை விட உயர்ந்த இடம் மலர்கள் என்று எண்ணியவன். மலரை அணைத்துக்கொண்டான் , முகர்ந்து பார்த்தான், தடவிக்கொடுத்தான், ஆக மலர் மேல் ஆசை உண்டு. மலர் மேல் ஆசை உள்ளதால் அவனுக்கு அலங்காரப்ரியன் என்று சொல்லிவிடலாமா ? எண்ணம் மலர் போன்று மென்மையானவன். தான் மென்மையானவன் என்று சொல்லிக் காட்டத்தான் மலர்களை அணிந்து கொள்கின்றானே தவிர , அவனுக்கு ஆசை எதுவுமே கிடையாது. அவன் ஞானி, சித்தத்தின் தன்மையில் மூத்த சித்தன் என்று கூட சொல்லுவேன், சிவபெருமான் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதால் வாயடக்கி இருக்கிறேன். அப்படி நல்லவன் அவன். எதையும் எதிர்பார்க்க மாட்டான். அப்படி சாந்த சொரூபமான நல்ல உள்ளம். அந்த மனித உள்ளம் தெய்வமாக மாறிற்று. ஆகவே பொல்லாத சிங்கம் கூட ஓடி வந்து, ஒரு மனிதனை கட்டித் தழுவும்போது, கட்டித்தழுவுவது என்பது நடக்க முடியாத காரியம், நடக்காத காரியம். சிங்கம் என்றாவது மனிதனை கட்டித்தழுவி முத்தமிடுமா ? நடந்திருக்கிறதே, இதே இடத்தில் ! இதே இடத்தில் ராமனை நரசிம்மர் கட்டித் தழுவியிருக்கிறார்களே! ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கிறானே ! அத்தனையும் வியந்து பாராட்டி வியந்து போயிருக்கிறார்களே ! ஆக மலைகள் அருமையான சுற்றுசூழல் மலைகள், நீர்வீழ்ச்சிகள் , புஷ்பவளங்கள் இதைத்தான் ராமன் ஆசைப்பட்டான்! ஏனென்றால் பழக்க தோஷம் . பதினான்கு ஆண்டுகள் காட்டில் வளர்ந்தவன்தானே. அவன் பொன்னடிகள் பட்டிருக்கிறதே, போகும் போதெல்லாம் நடந்துதான் போனான். எப்படி இடையில் திரும்ப ஆசைப்பட்டான், நான் திரும்பி வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும் என்றான். நேரமில்லையே காலமில்லையே என்று சொன்னேன் . அப்பொழுது கூட சொன்னான், இல்லை நான் கடந்த காலத்தை நினைவு படுத்தவேண்டும். இதை எல்லோருக்கும் உணர்த்தி வைக்க வேண்டும் என்று சொன்னான் . அதை தான் ராமன் திரும்பி வரும் போது, வந்த இந்த இடத்தில அமர்ந்து கொண்டு இது தான் அயோத்திபுரி!! இதுதான் என்றானே. வேறு எங்காவது ராமன் வாய் திறந்து சொன்னதாக எனக்கு தகவல் இல்லை. அதுமட்டுமல்ல கூடவே விபீஷணன் வழியனுப்ப வந்தவன் கூடவே வருகிறான் , ராமன் எங்கயோ அவனது வீட்டில் உட்கார வைத்துவிட்டு பின்பு செல்லலாம் என்று வந்திருக்கிறான், அவனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறான், சுக்ரீவனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே சுக்ரீவன், குரங்கு, மனிதஜாதியை விட்டு தாண்டியிருப்பவர் , அவருக்கும் மரியாதையை கொடுக்கிறான், கொடியமனத்துடைய அரக்கர் குலத்தில் பிறந்தவனுக்கும் தட்டிக் கொடுத்து, தழுவிக் கொண்டிருக்கிறான், ஆக தானும் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதைவிட மிகச்சிறந்த தத்துவம் வேறு எங்கயாவது உண்டா? யோசித்துப் பாருங்கள் , சூசகமாகசொல்லுகிறேன் நேரம் அதிகம் இல்லை என்று. இன்று கூட ஒரு கேள்வி எழுந்ததுதான் , காலம் குறுகியிருக்கிறது ஆனால் அகத்தியன் சிலவற்றை சொல்லுகிறேன் என்று நேற்றைய தினம் வாக்குரைத்தேன். பயம் எல்லாருக்கும், காலம் குறுகிவிட்டது- யாருக்கு காலம் குறுகிவிட்டது ? எதற்க்காக அகத்தியன் இந்த வார்த்தைகளை சொல்லுகிறான் என்றெல்லாம் கேள்விகளை கேட்டார்கள். காலம் குறுகிவிட்டது என்று உங்களை சொல்லவில்லை , நீங்கள் வாழப்பிறந்தவர்கள், வாழ வைக்கப் போகிறவர்கள் , இன்னும் வாழ வேண்டியவர்கள் , இன்னும் ஆயுசுபலம் அதிகம் என்றுதான் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் . போன வாரம் இதே நேரத்தில் சொல்லியிருக்கிறேன் உங்களுக்கு எல்லாம் இறைவன் ஆயுளை கூட்டி கொடுத்திருக்கிறான் என்று சொல்லியிருக்கிறேன்,
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteவணக்கம் 🙏
ReplyDeleteAny ladies or any group including ladies, who are planning to go to Mahakumbhamela please let me know, I would like to join 🙏
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeletestill there is 5 mins of vakku left.it comes in telegram app only not in whats app.can i have mr.agnilingam phone no to farward it sothat the rest of the vakku can be put in siddhan arul
ReplyDeleteSend me your Contact Number to agnilingamarunachalam@gmail.com. I will call you.
DeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஇன்று 15.1.2025 சேலம் அயோத்தியா பட்டிணம் சென்று ஓம் லோபமத்திரா சமேத அகத்திய பெருமான் ஆசிகளுடன் ஓம் சீதாதேவி சமேத இராமபிரான் ஆசிகள் பெற்று வந்தோம்.
ReplyDelete2013ஆம் வருடத்தில் கோவிலில் கொடிமரம் நிருவப்பட்டதாக பட்டாச்சாரியா ரஷ் தெரிவித்தார்.