20/12/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். பொதிகை மலை.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்... அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா... அப்பனே யானும் லோபா முத்திரையோடு அப்பனே அனைவருக்குமே ஆசிகள் கொடுத்திட்டோம் அப்பனே !!!
நீயும் கூட கந்தனுக்கு பல வழிகளிலும் கூட சேவைகள் செய்தாய் அப்பனே!!! (பொதிகை மலைக்கு குருநாதர் அகத்தியர் தரிசனம் செய்ய வந்த ஓதி மலையில் முருகனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகருக்கு குருநாதர் கூறிய வாக்கு)
அனைவருமே!!!
அப்பனே இதனால் அப்பனே பின் வள்ளி தெய்வானையோடு பின் அப்பனே பின் உங்களிடத்தில் அப்பனே பின் நீங்கள் தரிசித்தபோது பின் அவர்களும் வந்து உள்ளே அப்பனே அழகாகவே அப்பனே தரிசித்து அப்பனே பின் பிள்ளைகள் அனைவரும் உங்களை தேடி வந்துள்ளார்கள் என்று சொல்ல..
அப்பனே நிச்சயம் அப்பனே பின் பரிபூரணமாக யான் அனைவருக்குமே ஆசிகள் கொடுத்திட்டேன் என்பேன் அப்பனே... கவலையை விடுங்கள் அப்பனே
யான் உங்கள் அருகிலே தான் இருக்கின்றேன்.. அதனால் அப்பனே பின் கீழே செல்லுங்கள் அப்பனே பார்ப்போம்!!!!
(பொதிகை மலை உச்சியில் குருநாதர் வாக்குகள் நல்கி அதன் பின்பு கீழே அடிவாரத்திற்கு செல்லுங்கள் அங்கு வாக்குகள் கூறுகின்றேன் என்று குருநாதர் உத்தரவிட்டார்)
பொதிகை மலை உச்சியிலிருந்து கீழே அத்திரி மலை லோயர் கேம்ப் ல் குருநாதர் உரைத்த வாக்கு.
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகளப்பா!!!
அப்பனே அனைவருக்குமே அப்பனே ஒவ்வொரு விதத்திலும் கூட அப்பனே குறைகள் அப்பனே... அனைத்தையும் யான் ஆராய்ந்தேன் அப்பனே
நிச்சயம் அப்பனே படிப்படியாக அப்பனே அதனைக் கூட எப்படி யார் மூலம் அப்பனே எங்கு சென்றால்? தீர்வு காணலாம் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே பின் மனித ரூபத்தில் வந்து அப்பனே எடுத்துரைத்து அப்பனே பக்குவங்கள் படுத்தி அப்பனே உயர்த்தி வைப்பேன் அப்பனே
கவலைகள் இல்லை
அப்பனே மனிதனுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
நிச்சயம் அப்பனே காடுகளிலும் மலைகளிலும் கூட அப்பனே நிச்சயம் பின் எண்ணற்ற கோடி அப்பனே ஞானியர்கள் அப்பனே பின் தவம் செய்து கொண்டே இருப்பார்கள் அப்பனே
இதனால் அப்பனே அங்கங்கு செல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பொழுதுதான் அப்பனே சில பாவங்கள் அப்பனே விலகும் அப்பா
புண்ணியங்கள் சேருமப்பா
அப்பனே நிச்சயம் ஆனாலும் மனிதன் அப்பனே இவ்வாறெல்லாம் அப்பனே பின் செய்வதே இல்லை என்பேன் அப்பனே
ஏனென்றால் பாவங்கள் அதிகமாக இருக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் அவனால் வர முடிவதே இல்லை என்பேன் அப்பனே
இதனால் அப்பனே நல் மூலமாகவே அதாவது அப்பனே பின் யார் யாருக்கு எப் பண்பு? என்பதையெல்லாம் உணர்த்தி அப்பனே வருங்காலத்தில் அவை தான் நிச்சயம் அப்பனே யாங்களே.. மாற்றி அமைத்து அப்பனே அனைத்து நலன்களையும் கூட ஈவோம் என்பேன் அப்பனே.
இதனால் குறைகள் இல்லை அப்பா... நல் முறைகளாகவே அப்பனே அனைத்தும்... அப்பனே உலகத்தில் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் பாவ சுமை தான் பின் மக்களிடத்தில் அதிகமாக உள்ளது என்பேன் அப்பனே
இதனால் அப்பனே எண்ணங்கள் மாறும் அப்பா
அப்பனே இவ்வாறு மாறுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் பின் இல்லத்திலே அப்பனே அதிக அளவு வருங்காலத்திலே சண்டைகள் ஏற்படும் அப்பா
அப்பனே ஒருவருக்கொருவர் புரியாத நிலைமை
அப்பனே நிச்சயம் அப்பனே இவர்கள் அதாவது இவ்வாறு சண்டைகள் இடுகின்ற பொழுது அப்பனே பிள்ளைகளின் வாழ்க்கையும் கூட கெடும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் அழகாகவே அப்பனே நிச்சயம் மனிதன் அதாவது இறைவன் கூட மனிதனிடத்தில் வாழ்க்கையை கொடுத்தானப்பா...
ஆனாலும் அப்பனே கலியுகத்தில் அதை தன் தவறான வழியில் பயன்படுத்திக் கொண்டு அப்பனே மனிதனை அதாவது மனிதனே பின் கெடுத்துக் கொள்வான் என்பேன் அப்பனே.
இங்கு இறைவனுக்கு வேலை இல்லையப்பா
இறைவன் அப்பனே அழகாகவே படைத்து அப்பனே அனைத்து திறமைகளையும் கூட மனிதனிடத்தில் கொடுத்துள்ளானப்பா
ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட.. அதை தன் யார் ஒருவன் பின் சீர்முறையாகவே பயன்படுத்துகின்றானோ
அவந்தன் நிச்சயம் அப்பனே வெற்றியாள் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் அப்பனே சில புண்ணியர்களும் கூட இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.. அவர்கள் மூலம் பின் அப்பனே என்னென்ன எவை செய்ய வேண்டும் என்றெல்லாம் அப்பனே
இதனால் அப்பனே உங்களுக்கும் கூட அப்பனே பல கடமைகள் இருக்கின்றதப்பா... என்னிடத்தில் வந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஏதாவது ஒரு கடமையை.யான் செய்ய வைப்பேன் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன்.
அப்பனே நிச்சயம் இங்கு வருபவர்களுக்கும் கூட அப்பனே நிச்சயம் சன்னியாசம் செல்கின்ற வாய்ப்பும் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய அப்பனே இருக்கின்ற தப்பா... அவையெல்லாம் வரும் காலத்தில் எப்படி மாற்றுவது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அதாவது... திருமண பாக்கியம் இல்லை... திருமணம் செய்து கொண்டும் நிச்சயம் அறிந்தும் சன்னியாசம் போகுதல்... இன்னும் பல கஷ்டங்கள் என்பதை எல்லாம் அப்பனே.. விதியில் கூட பின் பிரம்மன் அதாவது... இவையெல்லாம் நிச்சயம் பின் மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா
கவலைகள் இல்லை
அப்பனே கவலைகள் உடனே நிச்சயம் பின் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே.. நிச்சயம் பின் அனைவருக்குமே... அதாவது கலியுகம் என்றாலே நிச்சயம் கவலைகள் யுகம் நிச்சயம் அழியும் யுகம் நிச்சயம் நோய்கள் யுகம் என்றெல்லாம் அழைக்கலாமப்பா!!!
ஆனாலும் அப்பனே அவற்றையெல்லாம் நீக்கி பின் அதற்கான வழி அப்பனே... இதை நீக்குவதற்கான வழி அப்பனே புண்ணியம் என்ற ஆயுதம் நிச்சயம் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே
நோய்கள் வந்து விடுகின்றதப்பா... அதை எப்படி போக்குவது?? என்பதையெல்லாம் அப்பனே தெரியாது... என்னென்ன மருந்துகள் என்று!!
ஆனாலும் அதற்கு சிறந்த ஆயுதம் அப்பா... புண்ணியம்!!!
அப்பனே நிச்சயம் கவலைகள் இன்னும் இன்னும் அப்பனே ஏன் எதற்கு.... என்னால் புண்ணியங்கள் செய்ய முடியவில்லையே என்று நீங்கள் சொன்னாலும் அப்பா...யாங்கள் வருவோமப்பா!!!
ஆனாலும் மனிதனுக்கு அப்பனே புண்ணியங்கள் செய்ய மனம் இல்லை அவ்வளவுதான் என்பேன் அப்பனே... அறிந்தும் கூட.
அவ் மனதும் எப்பொழுது வருகின்றதோ? அப்பொழுது இறைவன் நிச்சயம் அவ் மனிதனைத் தேடி வருவான் அப்பா.. அனைத்து நலன்களையும் கொடுப்பானப்பா..
நிச்சயம் பின் அவ்வாறு இல்லை என்றால்... அப்பப்பா பின் அறிந்தும் கூட.. பின் முதலில் அப்பப்பா மனக்குழப்பத்தை ஏற்படுத்துவான்... இதன் மூலம் கஷ்டங்களை நிச்சயம் அப்பப்பா இன்னும் நோய்களை எல்லாம் அப்பனே தானாகவே வந்து விடும் அப்பா
நிச்சயம் புண்ணிய கணக்கு இன்னும் அப்பனே கலியுகத்தில் அப்பனே பாவ கணக்கு தான் அதிகமாக இருக்கின்றது என்பேன் அப்பனே..
புண்ணிய கணக்கு தொடங்குங்கள் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே நிச்சயம் பின் எங்களுடைய ஆசிகளும் அருளும் நிச்சயம் இருப்பதால் அப்பனே புண்ணிய கணக்கு எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே... யானே எடுத்துச் செல்வேன்... பின் உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் உண்மையான அன்பும் பின் பாசமும் நிச்சயம் அப்பனே இருந்தால் போதுமானதப்பா!!!
மற்றவை எல்லாம் அப்பனே நிச்சயம் யாங்களே கொடுப்போம் அப்பனே
புண்ணியங்களும் கூட அப்பனே சித்தர்கள் இடத்தில் இருக்கின்றதப்பா அதிக அளவு!!!
அப்படி இல்லை என்றாலும் யாங்கள் கொடுக்க தயார்!!
அதை நிச்சயம் கொடுத்து உங்களை உயர்த்தவும் தயார்.
ஆனாலும் அப்பனே அதற்கு நீங்கள் அதாவது அப்பனே பொதுவாக தான் சொல்கின்றேன்...அவ் பக்குவங்கள் இல்லாத மனதில் அப்பனே அவ் மனதிற்கு யாங்கள் கொடுத்தாலும் அப்பனே பிரயோஜனம் இல்லாமல் போய்விடுமப்பா
அதனால்தான் அப்பனே சில கஷ்டங்கள் அப்பனே நல்விதமாகவே அப்பனே யாங்களே ஏற்படுத்தினால் தான் அப்பனே உண்மை நிலை புரியுமப்பா
அப்பனே அப்படி இல்லை என்றால் இன்னும் இன்னும் அப்பனே
அப்பனே சொல்கின்றேனப்பா
அப்பனே நிச்சயம் பின் அதாவது சிறிது காலத்திற்கே தான் இதை தன் அப்பனே நிச்சயம் அப்பனே அடிக்கடி என்னிடத்தில் வந்து கொண்டே இருந்தான் அப்பா ஒருவன்!!!
அப்பப்பா!!!... அறிந்தும் கூட ஆனாலும் நிச்சயம் எதையும் எதிர்பார்க்காமல் வருவானப்பா!!! அப்பா இதனை நிச்சயம் அதாவது முன்னே யான் இங்கு பின் அதாவது பல சித்தர்களோடு மேலே இப்பொழுது இருக்கின்றேனே...(பொதிகை மலை உச்சியில்) அங்கு பல சித்தர்களோடு பல உபதேசங்களை செய்து கொண்டிருந்தேன்.
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் பின் ஆனாலும் இவன் வருவான்ப்பா!!!
பின் ஆனாலும் இதை தன் உண்மைதனை ஆனாலும் ஏழ்மை நிலை என்றாலும் ஆனாலும் இங்கு வந்து பல பல வழிகளில் கூட நிச்சயம் ஏதோ விறகுகளை கூட சேகரித்து ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட என்னைக் கூட!!!
இங்கே தான் சித்தர்கள் இருக்கின்றார்கள்... அகத்தியனும் இருக்கின்றான் என்று..
ஆனாலும் நிச்சயம் எதுவும் அறியாமல் நிச்சயம் அறிந்தும் கூட இவ்வாறு மனம் படைத்து தான் வருவான்.
ஆனாலும் அப்பனே திடீரென்று என் காட்சிகளும் (தரிசனம்) கொடுத்திட்டேன் அப்பனே
நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது அறிந்தும் எதை என்று புரிய புரிய இவ்வாறு ஏழ்மை நிலையில் இருந்து இப்பொழுது உயர்வு பெற்றுள்ளானப்பா!!! அவந்தனும் கூட!!!
அப்பனே என்னிடத்தில் நிச்சயம் அப்பனே பல மனிதர்களும் பின் அங்கு வந்து... ஏதோ அவன் நின்றிருந்தாலும்... அவந்தனுக்கு ஆசிகள் கொடுத்து பல பல வழிகளிலும் கூட அவந்தனக்கு பின் உயர்வுகளும் கூட கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேனப்பா!!
இதனால் அப்பனே நிச்சயம் நீங்கள் பின் அமைதியாக இருந்தாலும் நிச்சயம் அப்பா உங்களை எவ்வாறு உயர்த்த வேண்டும் என்பதை எல்லாம் யாங்கள் அறிவோம்.
ஆனாலும் அதற்கும் மனது வேண்டுமப்பா.. பின் மனம் இல்லை என்றால் அப்பனே..யாங்கள் பின் என்ன செய்தாலும்... அப்பா பின் நிச்சயம் அது தன் தோல்வியில் கூட முடிந்துவிடும் என்பேன் அப்பனே
இதனால் கவலை கொள்ளாமல் இருங்கள் அப்பா... நிச்சயம் அனைவருமே அப்பனே நிச்சயம் அதாவது அனைத்து ஒவ்வொரு மலையிலும் கூட அப்பனே இன்னும் ஞானிகள் வலம் வந்து!!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே கூடு விட்டு கூடு பாயும் வித்தையும் கூட அப்பனே... அப்பொழுது ஞானிகள் ரிஷிகள் அப்பனே இன்னும் அப்பனே தெரிந்து கொண்டு உள்ளார்களப்பா.. அவர்கள் உடம்பும் அப்பனே மலைகளில் இன்னும் கூட உள்ளதப்பா
அப்பனே அவ் மலைகளில் கூட அப்பனே ஏறி இறங்கினால் போதுமானதப்பா
அப்பனே ஓதி மலையில் கூட... அப்பனே நிச்சயம் சில சில சித்தர்கள் அப்பனே இப்பொழுதும் கூட கூடு விட்டு கூடு பாயும் அப்பனே வித்தையை காட்டிக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பா
நிச்சயம் அப்பனே அங்கு சென்றாலே அப்பனே நிச்சயம் பல மாற்றங்கள்.
இதனால் அப்பனே இன்னும் பல மலைகள்... அப்பனே தோரண மலையில் கூட நடந்து கொண்டே தான் இருக்கின்றது.
(தோரணமலை. முருகன் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் எனும் ஊருக்கு வெளியே அமைந்திருக்கும் மலைக்கோயில் ஆகும். தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழியில் இருக்கின்றது.அறுபத்து நான்கு சுனைகள் கொண்ட தோரணமலையில், அந்த சுனைகளின் நீராலேயே, அங்குள்ள முருகன் கோயிலின் மூலவர் அபிசேகம் நடைபெறுகிறது
குருநாதர் அகத்தியர் பெருமான் தோரண மலையை தேரையர் மலை தற்போது தோரணமலை என்று அழைக்கப்படுகின்றது என்று திருவனந்தபுரம் சத்சங்கத்தில் கூறியதை நினைவுபடுத்துகின்றோம். தேரையர் சித்தர் பெயரில் இந்த மலை அழைக்கப்பட்டு தற்பொழுது மருவி தோரணமலை என்று அழைக்கப்படுகின்றது.)
அப்பனே இன்னும் அப்பனே எதை யான்? எவை என்று புரிய இன்னும் அப்பனே பின் பர்வத மலையிலும் கூட...!!!!
(பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.)
அப்பனே இன்னும் அப்பனே... பல பல மலைகளில் கூட இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் அப்பனே... நிச்சயம் அப்பனே அங்கு அதாவது பின் பக்கத்தில் சென்றால்.. நிச்சயம் அவர்களுடைய சக்தி பின் மனிதனுக்கு கிடைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் மனிதர்களுடைய பாவங்கள் அப்பனே நிச்சயம் பின் கரைந்து போகுமப்பா!!!
அப்பனே இவ்வாறு அதனால் தான் அப்பனே எங்கள் வழியில் வருபவருக்கெல்லாம் அப்பனே யாங்கள் காடுகளிலும் மலைகள் மீதும் ஏற வைப்போம் என்பேன் அப்பனே.
ஏனென்றால் அப்பனே பின் கர்மா அப்பனே பின் சாதாரணமில்லை என்பேன் அப்பனே.
அதை போக்குவதற்கு அப்பனே பின் எங்கு சென்றாலும் முடியாதப்பா
நிச்சயம் இங்கிருந்தே சொல்கின்றேன்... சித்தர்களால் மட்டுமே முடியும் என்பேன் அப்பனே பாவத்தை போக்க அப்பனே.
பின் அறிந்தும் கூட எதை என்று புரியப் புரிய இதனால் தான் அப்பனே நிச்சயம் எங்களை தேடி வருவோருக்கெல்லாம் அப்பனே அள்ளித் தருவோம் கஷ்டங்களை.
ஆனாலும் அப்பனே அதையெல்லாம் யார் ஒருவன் சரியாக என் பயன்படுத்தி அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று நினைக்கின்றானோ... அப்பனே யாங்கள் அவன் கையைப் பிடித்து உயர்த்தி வைப்போம்... அப்பனே நிச்சயம் அனைத்தும் கொடுப்போமப்பா
இதை தன் அப்பனே நிச்சயம் அப்பனே இதை தன் சில பேர்களே உணர்ந்துள்ளார்கள் என்பேன் அப்பனே
ஆனால் பல பேர்கள் அப்பனே நிச்சயம் அப்பனே ஏதோ விளையாட்டுக்காகவே சித்தர்களை அப்பனே நிச்சயம் இழுத்து இழுத்து... இதனால் அப்பனே என்ன பிரயோஜனம்??? அப்பனே
நிச்சயம் சித்தன் வழியில் வருபவனுக்கு அப்பனே கஷ்டத்தை அள்ளித் தருவார்களப்பா!!!!
ஆனாலும் அப்பனே முடிவில் அப்பா நிச்சயம் இன்பமே கிடைக்கும் அப்பா மோட்சமும் கிடைக்கும் அப்பா
அப்பனே நிச்சயம் சித்தன் என்ற சொல் நிச்சயம் அப்பனே யார் ஒருவன் வாயில் பின் உச்சரிக்கின்றானோ அவந்தனுக்கு நிச்சயமாய் மோட்சப் பிறவியே.. என்று அப்பனே.
நிச்சயம் அவ் மோட்ச பிறவி இருப்பவர்கள் மட்டுமே எங்களை நாடி நாடி வர முடியும் அப்பா... சொல்லிவிட்டேன் அப்பனே.
அப்படி இல்லாதவன் அதாவது அப்பனே அப்படி இல்லாதவனுக்கு என்ன சொன்னாலும் சித்தனை பற்றி புரியாதப்பா புரியாது.
இதனால் அப்பனே இவை தன் அப்பனே நிச்சயம் அப்பனே... அறிந்தும் அறிந்தும்.. உலகத்தை இயக்கிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே.
இன்னும் அப்பனே அங்கும் இங்கும் வந்து அப்பனே சில ரகசியங்களை கூட சொல்கின்ற பொழுது அப்பனே.. பின் உங்களுக்கே மாறுதல்கள் ஏற்படும் என்பேன் அப்பனே
அனைவரின் இல்லத்திலும் கூட யான் வந்து அழகாகவே அப்பனே சில கர்மாக்களை அதாவது பாவத்தை அப்பனே விலக்கி புண்ணியத்தை புகுத்தியுள்ளேன் என்பேன் அப்பனே
அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் எங்கள் பெருமைகளை கூட யாங்களே அப்பனே சொல்லக்கூடாது என்பேன் அப்பனே.. இதனால் தான் அப்பனே இன்னும் அப்பனே ஒவ்வொரு சித்தனும் கூட வந்து வாக்குகள் செப்புகின்ற பொழுது அப்பனே... சித்தன் யார்?? என்பதையெல்லாம் புரியுமப்பா
அப்பனே நிச்சயம் ஒருவனுக்கு கூட சித்தன் யார் என்பதை கூட விளங்கவில்லை என்பேன் அப்பனே
சித்தன் அறிந்தும் கூட யார் என்பதை கூட அப்பனே நிச்சயம் வரும் காலத்தில் புரிய வைப்போம் என்போம் அப்பனே
ஏதோ அப்பனே அனைத்தும் அனுபவித்து விட்டு அதாவது காதல் செய்து அதிலும் தோல்வியுற்று இல்லறத்தை பின் அனுபவித்து இன்னும் அப்பப்பா எதை எதையோ செய்து விட்டு கடைசியில் சித்தர்களைப் பற்றி எழுதுவானப்பா
ஆனாலும் அவையெல்லாம் பொய்யப்பா
அறிந்தும் கூட உண்மை நிலை யாருக்கும் தெரியாதப்பா
சித்தனை அறிந்தவன் அமைதியாக இருப்பான் அப்பா.. நிச்சயம் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே
இதனால் அப்பனே சித்தன் என்பவன் யார்? என்பதை எல்லாம் நிச்சயம் அப்பனே ஒரு மனிதனுக்கு கூட தெரியவில்லை....
அப்பனே அறிந்தும் கூட அப்பனே முதல் சித்தன் ஈசனே!!!! அப்பனே.. அறிந்தும்!!!
ஆனால் அப்பனே பின் கணபதியும் ஒரு சித்தன் தானப்பா.. அப்பனே பின் கந்தனும் ஒரு சித்தன் தான் அப்பா.. அப்பனே அறிந்து கொள். அப்பனே பின் சபரிமலையோனும் ஒரு சித்தன் தான் அப்பா
அப்பனே நிச்சயம் அப்பனே பின் வேங்கடவனும் ஒரு சித்தன் தான் அப்பா
அப்பனே இவர்கள் எல்லாம் பின் அறிந்து கொள்ள முடியவில்லை இன்னும் கூட
அப்பனே அறிந்தும் இதை என்று அப்பொழுது தெய்வங்கள் யார்??? அப்பனே அறிந்தும் தெய்வம் என்பது என்ன?? அப்பனே புரிகின்றதா???
நிச்சயம் புரியவில்லை!!!
புரியாமல் இறைவனை வணங்கினால் தான் அப்பனே கஷ்டம் அப்பா.. புரியாமல் தான் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பா
அப்பனே அறிந்தும் கூட இன்னும் இன்னும் அப்பனே உரைக்கின்ற பொழுது மனிதனுக்கு புரியும் அப்பா
பல வழிகளில் கூட.
இதனால் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அப்பனே யாங்கள் அதாவது சித்தனுக்கு அப்பனே உடம்பு இல்லை!!! அவ்வளவுதான்
என்பேன் அப்பனே!!!
மற்றவை எல்லாம் அப்பனே கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பா...
அப்பனே இதனால் அப்பனே எங்கும் எதை என்று கூட எதிலும் கூட யாங்கள் இருப்போம் என்போம் அப்பனே
நிச்சயம் அப்பனே ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் அப்பனே இறைவன் மிகப்பெரியவன் அப்பனே
நன் முறைகளாகவே அப்பனே... ஆனாலும் உங்களுக்கு ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால் அப்பனே.. புரிபவர்களுக்கு மட்டுமே இது புரியும் என்பேன் அப்பனே... புரியாதவனுக்கு அப்பனே
இதனால் யாங்கள் வாக்குகள் சொன்னால் பைத்தியக்காரனாக போய்விடுவானப்பா..
உண்மை நிலைகளை எடுத்துரைத்தால் அவன் பைத்தியக்காரனாக போய் மூளையை குழப்பிக் கொண்டு பொய்களாக்கி அதாவது பொய் என்று சொல்லிவிடுவான் அப்பா
அதனால்தான் அப்பனே முதலிலிருந்தே வருகின்றேனப்பா
அப்பப்பா அறிந்தும் கூட நிச்சயம் இன்றளவும் கூட அப்பனே நல்விதமாக உங்களுக்கு பின் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் தந்தோம் என்போம் அப்பனே.. நல்விதமாக யானும் அழகாக பார்த்தேன் என்பேன் அப்பனே
ஆனாலும் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு குறையப்பா.
அப்பனே அக்குறையைக் கூட அப்பனே எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே பின் யாங்களே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே பின் வழிகாட்டுதல் அப்பனே வழிகாட்டுதலாக அப்பனே யாங்களே இருப்போம் என்போம் அப்பனே
இதனால் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை அப்பனே இயக்குவதும் அப்பனே பின் அதாவது பின் இயங்க வைப்பதும் அப்பனே நடத்தி வைப்பதும் அப்பனே இவ்வாறு குறைகள் ஏற்படுத்துவதும் அனைத்தும் இறைவனே என்பேன் அப்பனே
ஏனென்றால் பின் தந்தைக்கு தாய்க்கு தெரியுமப்பா... ஒரு பிள்ளையை நன்றாக எப்படி வளர்ப்பது?? என்று!!!
அதேபோலத்தான் அப்பனே இறைவனும் கூட மிகப் பெரியவனப்பா... இறைவன் மனதை தான் பார்க்கின்றான் என்பேன் அப்பனே...
ஆனால் அவ் மனம் பின் யாருக்கும் இல்லை அப்பா... அப்பனே யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பா..
அப்பா ஓதி மலைக்கு வருகின்றார்களப்பா!!! பல பேர்!!! காதல் நிறைவேற வேண்டுமென்று!!!
அப்பா தாய் தந்தையரை அப்பனே பின் அதாவது பாசத்தை விட்டு விட்டு அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட இளம் வயதில் அப்பனே மாயை.. அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட காதல் அப்பனே பின் தலை தூக்கி ஆடுகின்றது என்பேன்...
அப்பனே ஏன் எதற்கு அப்பனே யார் ஒருவன் பின் இளம் வயதில் அதாவது 15 அப்பனே வயது முதல் 26 வயது வரை அதாவது அப்பனே நிச்சயம் காதல் கொள்கின்றார்களோ அவர்கள் வாழ்க்கை அப்பனே.. அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்பேன் அப்பனே.
இவ் 10, அதாவது 15, 26 வயது வரை தான் சந்தோசம்!. அதன் பிறகு ஆட்டம் காட்டி விடும் அப்பா அவரவர் செய்த கர்மாக்கள்!!
அப்பனே ஆனாலும் இதில் கூட பின் நிச்சயம் அப்பனே நல்விதமாகவே அப்பனே இறைவன் அப்பனே நல்லவராக இருந்தால் இறைவன் நுழைந்து அப்பனே நிச்சயம் நல்வழி காட்டுவான் அப்பா..
ஆனாலும் அப்பனே அனைத்தும் தாய் தந்தைக்கு தெரியாமல் தான் நடக்கின்றது இதுவும் கூட...
ஏனென்றால் ஓதி மலையான்... மிகக் கருணை படைத்தவன்... பின் அவனிடத்தில் அப்பனே சென்றால் பின் நிச்சயம் வெற்றியாகும் என்று.. ஓதிமலையானையே ஏமாற்றுகின்றார்கள் என்பேன் அப்பனே...
(ஓதிமலைக்கு வருகின்றவர்கள்)
அப்பனே இன்னொருவன் அப்பனே பின் சொத்துக்கள் எந்தனுக்கு வேண்டுமென்று அப்பனே!!!
அவனை அடித்து விட்டு நம்மிடத்தில் சொத்துக்கள் அனைத்தும் எழுதிக் கொள்ளலாம் என்று அப்பனே!!!
அப்பனே இன்னொருவன் இன்னும் அப்பனே நம் தொழில் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட மிக்க.. யார் அழிந்தாலும் பரவாயில்லை பின் அடியோடு அதாவது உயர்ந்த விடலாம் என்று அப்பனே... அனைத்தும் சுயநலம் தான் அப்பா
அப்பனே யார் ஒருவன் நல்முறையாக.... ஓதி மலையானை!!!!!
அப்பா... அனைவருக்கும் யான் நன்மைகள் செய்ய வேண்டும் என்று... எண்ணுகின்றானோ அப்பனே... நிச்சயம் அப்பொழுதுதான் வெற்றிகள் என்பேன் அப்பனே
நிச்சயம் ஓதிமலை யானும் அப்பனே முடிவு எடுத்துக் கொண்டே இருக்கின்றான்.. யாரும் (ஓதிமலை க்கு) வரக்கூடாது என்று!!!
அப்பனே நிச்சயம் இவ்வாறு கூட அப்பனே நிச்சயம் இறைவன்கள்... அப்பனே மனிதன் போனபோக்கில் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அப்பனே எவ்வாறெல்லாம் இவ்வுலகத்தில் அழிந்து செல்கின்றார்கள் என்றால் அப்பனே... மனிதன் தான் அழிவிற்கு காரணம்.
அப்பனே பின் அதாவது இறைவன் காரணம் இல்லை அப்பா!!!
ஏனென்றால் மனிதன் தான் பின் அழிவை நோக்கி பின் அனைத்து செயல்களும் கூட அப்பனே அதாவது... இறைவன் தான் படைத்தான் ஆனாலும் நல்லவனாகவே பின் படைத்தானப்பா
ஆனால் மனிதன் என்னவோ... அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அப்பனே நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்பேன் அப்பனே
அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றானப்பா!!!
அப்பொழுது படைத்தவன் என்று ஒருவன் இருக்கின்றான் அல்லவா... அவன் என்ன செய்வான்?? கஷ்டங்களை கொடுத்து தானே அப்பா!!!!
அப்பனே பணமும் புகழும் வந்து விட்டால் அப்பனே நிச்சயமப்பா.. அறிந்தும் கூட பின் அதாவது எதை என்று அறிய அறிய ஆனாலும் வருங்காலத்தில் அப்பனே நிச்சயம்... இறைவன் சரியான நேரத்தில் ஆட்டத்தை துவக்கி துவக்கி அப்பனே!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட உண்மைதனை இவ்வுலகத்திற்கு இறைவன் எடுத்து அப்பனே
இன்னும் உண்மை நிலைகள் அப்பனே எங்கு எதை என்று அறிய அப்பனே சொல்கின்றேன் அப்பனே
இன்னும் அப்பனே எப்படி வாழ்ந்தார்கள்?? என்பதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே
எப்படி இறைவனை வணங்கினால் அனைத்தும் கிட்டும் என்பதையெல்லாம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே
அப்படி வணங்கினால் தான் அப்பனே இறைவன் அனைத்தும் தருவான்.
அப்படி இல்லையென்றால் அப்பனே இறைவனை அப்பனே நிச்சயம்.. ஏதோ ஒரு சுயநலத்திற்காக பின் இறைவனை பயன்படுத்த வேண்டாம் என்பேன். அப்பனே
அனைவருமே சுயநலத்திற்காகத்தான் பயன்படுத்துகின்றார்கள் என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே பொதுவான விஷயங்களை இங்கிருந்தே அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே
அப்பனே இங்கு எங்கிருந்தாலும் அப்பனே நீங்கள் என்னிடத்திலே தங்கி உள்ளீர்கள் என்பது தான் அர்த்தம்.
அப்பனே அறிந்தும் கூட இதனால் யார் மூலம் எதை பின் சேர்த்து எவை என்று அறிந்தும் கூட அப்பனே பின் பரப்ப வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே
இதனால் அப்பனே பின் அமைதியாகவே அப்பனே நிச்சயம் இன்றைய பொழுதிலும் கூட அப்பனே உன்னை எதிர்பார்த்தான்..கந்தன்!!!
(பொதிகை மலை யாத்திரைக்கு வந்த ஓதி மலையில் முருகனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகருக்கு!!!
ஓதி மலையில் முருகன் இவர் என்னிடம் வராமல் எங்கு சென்று விட்டான் என்று பார்க்க!!! அகத்தியரை பார்க்க பொதிகை மலை சென்று விட்டாரா என்று வள்ளி தெய்வானையோடு ஓதி மலையில் இருந்து பொதிகை மலைக்கு வந்து விட்டார் முருகன்)
எங்கெங்கு இவன் சென்று விட்டான் அகத்தியனை பார்க்க என்று!!
அப்பனே இதனால் பின் வள்ளி தெய்வானையோடு ஓடோடி வந்து விட்டான் கந்தனும் கூட!!!!
அப்பனே நல் முறைகளாகவே விளக்கங்கள் இன்னும் அப்பனே பின் அறிஞர்களோடு இன்னும் இன்னும் அப்பனே ஒவ்வொரு வாழ்க்கை தத்துவத்தையும் கூட யான் சொல்கின்றேன் அப்பனே
ஏன் எதற்கு சொல்லவில்லை என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே மனம் அதாவது மனம் இருக்கின்றதே.. அது பக்குவங்கள் படவில்லை.. என்பேன் அப்பனே
அதனால்தான் அப்பனே வாக்குகள் கூட அப்பனே தனித்தனியாக அப்பனே நிச்சயம் அப்பனே...அவ் மனங்கள் எப்பொழுது பக்குவங்கள் பட்டிருக்கின்றதோ அப்பொழுது சொன்னால் அனைத்தும் புரியும் அப்பா
நிச்சயம் அப்பனே வருங்காலத்தில் தனித்தனியாக வாக்குகள் தந்து அப்பனே உங்கள் மாற்றத்தை அப்பனே நிச்சயம் தாங்களே உறுதிப்படுத்தி அப்பனே நீங்களே உறுதிப்படுத்தியும் கொள்வதோடு அப்பனே வெற்றியாளராக அனைவருமே வருவீர்கள் என்பேன் அப்பனே
அனைவருமே நிச்சயம் பின் நல்லோர்களாக வாழ வேண்டும் என்பது தான் சித்தன் நிலை.
அப்பனே ஆனாலும் பின் அவரவர் மனது எப்படி இருக்கின்றது என்றால் அப்பனே சுயநலமாகவே ஏங்கி தவிக்கின்றதப்பா
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே இன்னும் மாற்றங்கள் உண்டு இவ்வுலகத்தில் அப்பனே அநியாயங்கள் அக்கிரமங்கள் மிஞ்சி காணப்படுமப்பா!! வரும் காலங்களில் பொய்களோடு அப்பனே தாய் தந்தையரை தன் பிள்ளைகளே பின் அதாவது ஏமாற்றுவார்களப்பா
அப்பனே இன்னும் அப்பனே எது எதுவோ கலியுகத்தில் நடக்கத்தான் போகின்றது..
அனைத்திற்கும் காரணம் அப்பனே நிச்சயம் தண்டனைகள் அதிக அளவு கொடுத்தால்தான் அப்பனே நிச்சயம் திருந்துவார்கள் வரும் காலத்தில் தண்டனைகள் அதிகமாகவே இருக்குமப்பா!! இது தன் அப்பனே.. தன் மலையில் இருந்தே யான் எடுத்துரைக்கின்றேன்..
அப்பனே தண்டனைகள் அதிகமாக அதிகமாக தான் அப்பனே நிச்சயம் மனிதனும் திருந்துவானப்பா!!!
அப்பனே இன்னும் ரகசியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே
எம்முடைய ஆசிகள் பரிபூரணம்!! பரிபூரணமப்பா!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
வணக்கம் 🙏
ReplyDeleteAny ladies or any group including ladies, who are planning to go to Mahakumbhamela please let me know, I would like to join 🙏
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete