​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 2 January 2025

சித்தன் அருள் - 1766 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு 2!



இவை தன் நிச்சயம் இவ்வாறு.. யார் ஒருவனுக்கு ஏற்படுகின்றதோ... பின் அவ்வாறு திருத்தலங்கள் சென்றோம்!!! இறைவனை எப்படி எல்லாம் வணங்கினோம்.. என்றெல்லாம் யார் ஒருவனுக்கு யோசனைகள்... பின் ஒன்றுமே நடக்கவில்லை நிச்சயம் இறைவன் எங்கு?? என்று யார் ஒருவன் உணர்கின்றானோ... அவந்தனுக்கு தானப்பா!!!....

.அப்பா... நிச்சயம் நீ உணர்ந்து விட்டாயே!!! யான் படைத்தேன் பின் நிச்சயம் நீ உணர்ந்து விட்டாய் இனிமேலும்... உந்தனுக்கு நிச்சயம் ஏதோ வழியை காட்டுகின்றேன் என்று... இறைவன் காட்டுவானப்பா

ஆனாலும் அப்பனே பின் தெளிவு... அப்பனே தெளிவு தெளிவு... அப்பனே நிச்சயம் எப் பண்பு அப்பனே எவற்றின் மூலம் அப்பனே தெளிவு.. பெறுதல் அவசியமாகின்றது...

அப்பனே தெளிவு பெறாமல் பின் ஒன்றும் இல்லை அப்பா... இதனால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே பின் குருவானவன் அப்பனே வேண்டுமப்பா!!!

குருவானவன் இல்லையென்றால் ஒன்றுமில்லைப்பா அப்பனே இவ்வுலகத்தில்!!! என்பேன் அப்பனே !!

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது குருவானவன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கள் சொல்லி அதாவது நீங்கள் சொல்லி அப்பனே... நீங்கள் அப்பனே தேடி போகக்கூடாது என்பேன் அப்பனே. 

நிச்சயம் குரு அதாவது சீடனை தான் தேடி வர வேண்டும் என்பேன்..

அப்பொழுதுதான் உயர்வுகள் கிடைக்குமே தவிர... அப்பனே பின் நீங்கள் அதாவது தேடிச்சென்றாலும் அப்பனே குருவானவன் அப்பனே நிச்சயம் கிட்டபோவதுமில்லை!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தவறான பாதைகள் தான் அப்பனே நிச்சயம் பின் பக்திகள் அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே... தவறான பாதைகள் எல்லாம் அப்பனே சொல்லிக் கொடுத்து கொண்டே இருக்கின்றார்கள் கலியுகத்தில் அப்பனே. 

ஆனாலும் அப்பனே உண்மை பொருளை அப்பனே மறைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே கலியுகத்தில் என்பேன் அப்பனே 

ஆனாலும் அவையெல்லாம் எடுத்துக்கொண்டு வருகின்ற பொழுது அப்பனே உண்மை நிலை அப்பனே தெரியுமப்பா!! புரியுமப்பா!!

அப்பனே நிச்சயம் அவ்வாறு புரிகின்ற பொழுதுதான் அப்பனே... நிச்சயம் அப்பனே நல் மாற்றங்கள் அப்பனே அறிந்தும் கூட... அவ்வாறு புரியவில்லை என்றால் அப்பனே நிச்சயம் கஷ்டத்தோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும்.. நோய் நொடிகளோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எப்படி எப்படியோ அப்பனே நால்வர் கூட (சமயக் குரவர்கள் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்) அப்பனே அழகாக எழுதி வைத்தார்கள்.. இப்படி இருந்தால் இப்படி வாழலாம் என்று!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் அதையும் யாரும் பயன்படுத்துவதில்லை என்பேன் அப்பனே. 

ஏனென்றால் பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய மனிதனை எதை என்று எவ்வாறு பின் எதை என்று புரிய அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் மனிதன் அப்பனே. தன் வாழ்க்கை கஷ்டத்திலே செல்கின்றது என்பேன் அப்பனே.. அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... எதை என்று புரிய புரிய அப்பனே கஷ்டத்திற்கு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே.. எதை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் இதிகாசங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே ராமாயணம் இன்னும் மகாபாரதம் அப்பனே இன்னும் அப்பனே பின் திருவாசகம் அப்பனே இவையெல்லாம் இன்னும் இன்னும் அப்பனே.. அறிஞர்கள் அப்பனே எழுதி வைத்துள்ளார்களப்பா.. கஷ்டத்திற்காக இவை என்று அப்பனே..

ஆனால் கஷ்டங்கள் வருகின்ற பொழுது அப்பனே எதை எதையோ செய்கின்றான் என்பேன் அப்பனே மனிதன்..

ஆனால் கஷ்டங்கள் நெருங்குகின்ற பொழுது இவையெல்லாம் படித்தாலே போதுமானதப்பா.. அப்பனே பின் கஷ்டங்களே புண்ணியங்களை அப்பனைத் தேடிக் கொடுக்குமப்பா!!!

அதனால்தான் இறைவன் கஷ்டத்தை ஒன்றை அப்பனே புகுத்துகின்றான்.. அதன் மூலம் நீ புண்ணியம் செய்து கொள் என்று..

ஆனால் அப்பனே யாருமே அதை புரிந்து கொள்வதில்லையப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... அப்பனே கஷ்டங்கள் அப்பனே வருகின்ற பொழுது அப்பனே இறைவன் அப்பனே கையில் தாங்குவானப்பா!!!

தன் பிள்ளை எப்படியெல்லாம் பின் கஷ்டங்கள் படுகின்றது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே பின்.. அறிந்தும் கூட. 

அப்பனே சொல்லி விட்டேன்... இன்பம் வருகின்ற பொழுது அப்பனே பின் இறைவன் அப்பனே விட்டுவிடுவான் அப்பா.... பின் எங்கேயாவது செல்!!! எப்படியாவது செல்!! என்று!!

ஆனாலும் அப்பனே இன்பம் வருகின்ற பொழுது யார் ஒருவன்...அவ் இன்பத்திலும் கூட சரியாகவே பின் தர்மத்தின் வழியில் செல்கின்றானோ.... அவந்தனுக்கு அப்பனே நிச்சயம் துன்பம் என்பதே இல்லையப்பா!!!

கடுகளவும் வராதப்பா!!!

அப்பனே யான் உத்தரவாதம்... அப்பனே அளிக்கின்றேன்!!! இப்பொழுதே!!! இங்கிருந்தே!!! அண்ணாமலையிலிருந்தே அப்பனே... அறிந்தும். 

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் துன்பம் ஒன்று இருந்தால்தான் அப்பனே அனைத்து கற்றுக் கொள்ள முடியும் என்பேன் அப்பனே..

துன்பம் ஒன்று எவை என்று அறிய இல்லாவிடில் அப்பனே மனிதனால் அப்பனே பின் சாதிக்க முடியாதப்பா 

அப்பனே பின் இறைவன் எங்கு இருக்கின்றான் என்று அப்பனே அறியவும் முடியாதப்பா... இன்பத்திலே செல்கின்ற பொழுது அப்பனே மீண்டும் மீண்டும் பிறவிகள் வந்துவிடுமப்பா!!!

அதனால்தான் அப்பனே இறைவனே துன்பத்தை கொடுக்கின்றான் என்பேன் அப்பனே... அப்பொழுது துன்பத்தை கொடுக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் பின் இறைவனிடத்தில் செல்வான் மனிதன்..

புத்திகெட்ட மனிதனப்பா.. அப்பனே அறிந்தும் கூட பின் அதாவது இறைவன் தான் துன்பத்தை இதையும் கூட ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே... மீண்டும் மீண்டும் அப்பனே ஏன் இங்கு பின் சொல்கின்றேன் என்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே மனிதன் அப்பனே அவ்வளவு சக்தி காரன் என்பேன் அப்பனே பின் அதாவது முட்டாள்தனமாகவே யோசிக்கின்றான் என்பேன் அப்பனே.. பின் அறிந்தும் கூட மனிதன் என்பேன் அப்பனே !!!

அப்பனே இதனால் பின் கஷ்டத்தை தருபவனே இறைவன் தானப்பா!!!.. மீண்டும் பின் இக் கஷ்டத்தைப் போக்கு என்று இறைவனிடத்திலே சென்றால்.... இறைவன் சிரிக்கின்றானப்பா!!! சிரிக்கின்றான். 

இதனால் அப்பனே ஏன் கஷ்டத்தை கொடுக்கின்றான் இறைவன் என்றால்... சில பக்குவங்களை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும்... அப்பனே அதன் மூலம் பின் எவை என்று அறிய அறிய அப்பொழுதுதான் அப்பனே தர்மத்தைப் பற்றியும் தெரியும் அப்பனே!!! உண்மை பற்றியும் தெரியும்!! அப்பனே  நிச்சயம் இறைவனைப் பற்றியும் தெரியும்... அப்பனே அனைத்தும் அன்பு கருணை பாசம் என்பதெல்லாம் தெரியும் என்பேன் அப்பனே..

அதனால்தான் அப்பனே நிச்சயம் இறைவன் நிச்சயம் கலியுகத்தில் கஷ்டத்தை கொடுத்து தான் அப்பனே நிச்சயம் பின் சீர்படுத்துவான் செதுக்குவான் என்பேன் அப்பனே..

எவரும் அப்பனே நிச்சயம்  இன்பம் கொடுப்பான் என்று நினைத்து விடாதீர்கள் என்பேன் அப்பனே கலியுகத்தில் அப்பனே 

ஏனென்றால் அப்பனே நிச்சயம் மனிதன் திருந்தப் போவதில்லை... அப்பனே அதனால் பின் கஷ்டங்களும் அப்பனே பின் வந்து கொண்டே இருக்குமப்பா!!!

அப்பனே நிச்சயம் அப்பனே எப்பொழுது பின் எதை என்று புரியாமல் இருந்தாலும்... மனிதன் எப்பொழுது திருந்துவான் என்று...அப்பனே பின் ஈசனும் கூட அப்பனே பல ஆண்டுகள் அப்பனே காத்துக்கொண்டிருந்தானப்பா!!!

திருந்துவான்!! திருந்துவான்! திருந்துவான்!!... என்று!!

ஆனால் அப்பனே திருந்திய பாடு இல்லை என்பேன் அப்பனே. 

அப்பனே மனிதன் அப்பனே யோசிப்பார்கள்... அனைவரும்!!!..... இவை காக்கலாம்... எதை என்று கூட எவை என்று அறிய... இதையெல்லாம் காக்கலாம் நிச்சயம் பின் என்ன என்னவோ? விஞ்ஞானிகள் என்று..

ஆனாலும் அப்பனே எவை என்று புரிய... இதற்கும் மேலாக ஒரு விஞ்ஞானி இருக்கின்றான் என்று... மறந்து விட்டார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே.

திடீரென்று அனைத்தும் அழியுமப்பா ஒரு நாள் அப்பனே!!!

இதை யாருமே அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் தான் அப்பனே மனிதன் அப்பனே எவை என்று கூட.. இவ்வாறு யோசிப்பான்... நாளை அவை வரும்... இவை நடக்கும்... எதை என்று கூறிய புரிய அப்பனே 

 ஆனாலும் அவையெல்லாம் நடக்கப் போவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே... ஏன் எதற்கு அப்பனே.... தன்னைப் பற்றியே!!! தம் தனக்கு தெரியவில்லை என்பேன் அப்பனே. 

அதாவது முதலிலே அப்பனே சொல்ல வேண்டும். அன்பு காட்ட வேண்டும் அனைத்து உயிர்களிடத்திலும் கூட அப்பனே!!! பாசத்தை பொழிய வேண்டும்!! அப்பனே கருணை பின் அறிந்தும் கூட 

 இவ்வாறு அப்பனே சொல்லுதல் வேண்டும்... அதை தவிர்த்து விட்டு அப்பனே அதாவது பிற உயிரை கொல்லக்கூடாது என்பதை எல்லாம்.. அனைவரும் இறைவன் குழந்தைகளே!! என்று சொல்லித் தர வேண்டும்..

அவை விட்டுவிட்டு பணத்திற்காக அப்பனே அவை இவை என்று சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே.. பின் அறிந்தும் கூட பின் தன் சுயநலத்திற்காகவே அப்பனே இப்பொழுதெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய... பக்திக்குள் நுழைந்து என்னென்னவோ செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே மனிதன். 


இதனால் அப்பனே ஈசனும் கூட அப்பனே சற்று பார்ப்பானப்பா!!!!

அப்பனே நீங்களே சொல்லுங்கள் அப்பனே அறிந்தும் கூட... அதாவது அப்பனே பின் எதை என்று அறிய அறிய நீங்களும் அப்பனே பழகுகின்றீர்கள் அப்பனே மனிதர்களிடத்திலே...

 அதாவது அப்பனே மனிதர்கள் சரியில்லை என்றால் அப்பனே பின் சொல்லிப் பார்ப்பீர்கள் என்பேன் அப்பனே..

பின்பு கோபம் வந்து பின் எதை என்று அறிய அறிய எதை எதையோ செய்து விடுவீர்கள் என்பேன் அப்பனே.

அதேபோலத்தான் என்பேன் எதை என்று புரிய புரிய அப்பனே எதை என்று கூட இறைவன் கூட அப்பனே... சற்று பார்ப்பான் அப்பனே.. அறிந்தும் கூட மீண்டும் அப்பனே... ஏதோ ஒரு ரூபத்தில் பின் எடுத்துரைப்பான். என்பேன் அப்பனே. 

மீண்டும் அப்பனே பின் திருந்தாவிடில் நிச்சயம் அப்பனே அடித்து நொறுக்குவானப்பா... இதுதான் அப்பனே எதை என்று அறிய அறிய..

அப்பனே இறைவன் செய்வது அப்பனே அனைத்தும் நன்மைக்காகவே...

ஆனால் மனிதன் செய்வது அனைத்தும் அப்பனே தீயதற்காகத்தான் என்பேன் அப்பனே.

அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே நீங்களே சொல்லுங்கள் அப்பனே பின் அனைத்திற்கும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின்.. சாதாரணமாக இருந்தாலும்.. எவ் பொருளாக இருந்தாலும்.. அதை இயக்குவதற்கு ஒரு சக்தி தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே... பின் அனைவருமே நீங்களே எதை என்று கூட மீண்டும் பின் எவை என்று அறிய அறிய.... கைகளில் வைத்திருக்கின்றீர்களே...(செல்போன்) அதை இயக்குவதற்கும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் அல்லவா... அதேபோலத்தான் அப்பனே நிச்சயம்... இங்கு அனைத்தையும் இயக்குவதற்கு இறைவன் அப்பனே பின் தேவைப்படுகின்றான் என்பேன் அப்பனே. 

முழு மனதோடு அப்பனே நிச்சயமாய் அப்பனே இறைவனை பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் அறிந்து அறிந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே நீங்கள் உண்மையானவராகவே.. தர்மத்தை கடைப்பிடிப்பவராகவே இருந்தால் அப்பனே நிச்சயம் இறைவன் உங்களை.. உராய்ந்து செல்வானப்பா!!! உங்களுடைய பாவம் பின் அவன் எடுத்துக்கொண்டு செல்வானப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே!! அறிந்தும் கூட.

இதனால் அப்பனே பின் நிச்சயம் அப்பனே நீங்கள் பைத்தியக்காரர்களாக சென்று கொண்டே இருங்கள் அப்பனே.. நிச்சயம் பைத்தியக்காரனாகவே இறைவன் வருவானப்பா!! அப்பனே அனைத்தும் செய்வானப்பா... அதை விட்டுவிட்டு அப்பனே... எந்தனுக்கு பின் பணம் வேண்டும் பதவி வேண்டும் இன்னும் பொருள் வேண்டும் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே.. பின் கேட்டுக் கொண்டிருந்தால் அப்பனே..

அதாவது உங்களிடத்தில் என்ன தகுதியோ!? அதுதான் இறைவன் கொடுப்பான் என்பேன் அப்பனே!!

நிச்சயம் அப்பனே அவ்வாறு தகுதி பின் இல்லாதவனுக்கு இறைவனும் கொடுக்க போவதில்லை.. நீங்கள் எவ்வளவு வணங்கினாலும் அப்பனே... கஷ்டத்தை தான் அள்ளி அள்ளி தருவான் இறைவன் என்பேன் அப்பனே..

இங்கு நிச்சயம் அள்ளி தந்தாலும் அப்பொழுதுதான் நீங்கள் பின் பக்குவப்படுவீர்கள் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே!!!

இதனால் அப்பனே ஈசனின் அன்பும் கூட அப்பனே பின் பார்வதி தேவியின் அரவணைப்பும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே பின் பொழிந்து கொண்டே இருக்கின்றது அப்பனே... அதாவது அப்பனே... நல்லோர்களும் பின் இங்கு வந்தார்களப்பா இன்றளவு!!
(திருவண்ணாமலைக்கு தீபத்தை காண) 

அதனால்தான் அப்பனே திடீரென்று... அப்பனே அத் தீபம் எரிந்து.. அப்பனே பின் நல்லோர்களுக்காவது.. அப்பனே அறிந்தும் கூட 

ஆனாலும் அப்பனே பின் இங்கு... நல்லோர் தீயோர் இல்லை என்றாலும் அப்பனே நிச்சயம் இறைவன்... பின் அதாவது இறைவன் அருகில் அனைவருமே சமமானவர்கள் என்று கூட எண்ணலாம்..

அப்பனே ஆனாலும் அப்பனே நிச்சயம் இறைவனே அப்பனே படைத்தான்!! இறைவனே பின் பார்த்துக் கொள்வான் அப்பா... அவ்வளவுதான் என்பேன் அப்பனே 


அப்பனே நீங்கள் விரும்பியது எல்லாம் அப்பனே கொடுத்து விட்டால். அப்பனே இறைவன் எதற்காகப்பா??? அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்... இவையெல்லாம் பின் நிச்சயம் ஏற்கனவே பெரியோர்கள் உரைத்தும் விட்டனர் என்பேன் அப்பனே 

மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவே யான் இங்கு உரைக்கின்றேன் என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே யார் ஒருவன் இறைவனிடத்தில் எதையும் கேட்காமல் வணங்குகின்றானோ பின் அவந்தனுக்கு தான் இறைவன் கொடுப்பானே தவிர!!!...

எந்தனுக்கு அதைத் தா!! இதைத் தா!! என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய இறைவன் ஒன்றும் பின் எவை என்று கூட வேலைக்காரன் இல்லையப்பா!!! நீங்கள் கேட்டவை எல்லாம் கொடுப்பதற்கு!!!....

சொல்லிவிட்டேன் அப்பனே. 

அதனால் அப்பனே அறிந்தும் கூட நீங்கள் அப்பனே அதற்கு தகுதியானவராக இருந்தால் இறைவன் கொடுப்பான். 

அதற்கு நீங்கள் தகுதியானவராக இல்லை என்றால் அப்பனே இறைவன் நிச்சயம் அப்பனே ஏதோ ஒரு ரூபத்தில் கஷ்டத்தை கொடுத்து கொடுப்பான் என்பேன் அப்பனே அவ்வளவுதான் என்பேன் அப்பனே அதற்குள்ளே இறைவன் எந்தனுக்கு பின் கஷ்டத்தை கொடுத்து விட்டானே என்பதையெல்லாம் அப்பனே....

நிச்சயம் அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் என்னுடைய வாக்குகள் வரவில்லையே வரவில்லையே என்று சொல்பவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் கர்மத்தை முதுகிலே சுமந்து கொண்டு இருக்கின்றார்களப்பா!!

அனைத்தும் அவர்களுக்கு இருக்கின்றது அப்பனே பின் பணம் இருக்கின்றது சொத்து அதாவது அப்பனே இல்லறம் இருக்கின்றது என்பேன் அப்பனே 

 ஆனாலும் அப்பனே அவை தன் உபயோகிக்க முடியவில்லையே ஏன்?? எதற்கு??? அப்பனே நிச்சயம் பாவங்களப்பா!!! அவ் பாவத்தை போக்க அப்பனே பல திருத்தலங்களை யான் சொல்லி இருக்கின்றேன் அப்பனே... ஆனாலும் அதற்கு கூட அங்கெல்லாம் கூட செல்ல முடியாதப்பா 

அப்பனே இதனால் தேடி அலைந்தால் அப்பனே பின் என்ன? ஏது? என்று அறிய புத்திகள் வரும் என்பேன் அப்பனே.

தேடி அலைய அப்பனே நிச்சயம் பக்குவங்கள் பிறக்கும் என்பேன் அப்பனே... நிச்சயம் அப்பனே பின் தேடி தேடி அலைந்து பின் அறிந்தும் கூட பின் ஒன்றுமே நடக்கவில்லையே என்று அமர்ந்தால்... அப்பனே மீண்டும் சொல்கின்றேன்.. இறைவன் பக்கத்திலே வந்து அமர்வானப்பா!!

அப்பனே நிச்சயம் பின் தோள்கள் மீது பின் கையை இட்டு அப்பனே அறிந்தும் கூட பின்... கவலைப்படாதே மகனே!!!! அனைத்தும் செய்கின்றேன் என்று அப்பனே முதுகில் தட்டுவானப்பா!!

ஆனாலும் அப்பனே இதை தன் சில பேர்களே உணர்வார்கள் என்பேன் அப்பனே..

ஏனென்றால் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் இன்னும் அப்பனே விளக்கங்கள் சொல்கின்றேன் அப்பனே. 

அப்பனே பின் உயிர் எங்கு உள்ளது?? என்பதையெல்லாம் அப்பனே... அப்பனே உடம்பில் அப்பனே அப்பனே அறிந்தும் கூட 100 இடத்தில் அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று கூட பின் அதாவது உயிர் இருக்குமப்பா!!

அப்பனே அவ் உயிரை அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... எவை என்று புரிய புரிய புருவ மத்தியில் பின் வைத்து விட்டால் நீங்கள் நினைத்ததெல்லாம் பின் நிச்சயம் நடந்தேறும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய சொல்கின்றேன் எவை என்று கூட... ஏற்கனவே அப்பனே இன்னும் இன்னும் என் பக்தர்களை அப்பனே நிச்சயம் நல்வழிப்படுத்தி அப்பனே அதாவது என் பக்தர்களுக்கு.. ஏன் கஷ்டத்தை கொடுக்கின்றேன் என்றால் அப்பனே அதன் மூலமே பக்குவத்தை பட வேண்டும் அப்பனே... அதாவது நால்வருக்கு எடுத்து எடுத்துச் சொல்ல  வேண்டும்... (அதாவது நாலு பேருக்காவது உதாரணத்திற்கு குருநாதர் இங்கு குறிப்பிடுகின்றார்) நிச்சயம் பின் இறைவன் அதாவது சோதனை கொடுப்பது பின் நல்லதிற்கே என்று எண்ண வேண்டும் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே பல பல மனிதர்களும் கூட என்னையும் வணங்கியும் வருகின்றார்கள் கஷ்டங்களும் வந்து கொண்டே தான் இருக்கின்றது...

 ஏன்? எதனால்? என்றால் அப்பனே... நிச்சயம் அவன் ஒழுங்கானவனாக இல்லையப்பா... சொல்லிவிட்டேன் அப்பனே.. நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அவந்தனையும் திருத்த பார்க்கின்றேன் அப்பனே ஆனால் பொய் கூறுதல் பொறாமைப்படுதல் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் பிறர் மனைவியை விரும்புதல் அப்பனே இன்னும் எதை என்று புரிய அப்பனே எவை என்று அறிய அறிய... இப்படி எல்லாம் அப்பனே இருக்கும் பொழுது... இறைவன் எப்படியப்பா? அடிக்காமல் இருப்பான்??? என்பேன் அப்பனே!!

இதனால் அப்பனே இதனால்தானப்பா...

ஈசனும் என்னிடத்தில் முறையிட்டான்... 

அதாவது அகத்தியனே நிச்சயம் நீ சொல்வதை நிச்சயம் மனிதன் ஏற்பானா???
என்றெல்லாம்!!!

நிச்சயம் யான் நம்பிக்கையோடு சொன்னேன்.. என் பக்தர்கள் செய்வார்கள் என்று...

ஆனால் அப்பனே நிச்சயம் கர்மா அதாவது பாவம் அப்பனே பின் விடாது என்பார்களே... பின் அவனவன் செய்த பாவங்கள் விடாது என்பேன் அல்லவா....

அதாவது இது உலக பொதுமறை... என்பதும் அப்பனே இதில் கூட அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே 

அதனால் அவ் பாவங்கள் பின் உங்களை நிச்சயம் எவை என்று அறிய அறிய அதாவது அனைவருக்குமே சொல்கின்றேன் எதை என்று....

தீபம் அகத்தியன் சொல்கின்றான்!!! (நவதானிய விளக்கு நவகிரகங்களுக்கு காயத்ரி மந்திரம் சொல்லி)

 ஒரு தீபமாவது ஏற்றுவோம்!! இல்லத்தில் ஏதோ ஒன்றை செய்வோம்.. என்று ஏற்றி இருந்தால் அப்பனே... நிச்சயம் அப்பனே இவ் கார்த்திகை எவை என்று அறிய அறிய அப்பனே தீபத்தில் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட ஈசன் அப்பனே.. உங்களை அதாவது இதை ஏன் எதற்காக (தீபம் ஏற்ற சொன்னது) சொன்னேன் என்றால்... மற்றவர்களுக்காக அப்பனே!!!

நீங்கள் மற்றவர்களுக்காக இதையாவது.. நீங்கள் எதையும் செய்ய வேண்டாம் இதையாவது செய்திருந்தால் உங்களுக்கு புண்ணியமாக போயிருக்கும் என்பேன் அப்பனே... நிச்சயம் அப்பனே நீங்கள் அப்பனே நோயில்லாமல் வாழ்ந்திருப்பீர்கள் என்பேன் அப்பனே நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே மறைமுகமாக சொல்வேன்... நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே 

காட்டுகின்றேன் என் வேகத்தையும் கூட வரும் வரும் காலத்தில் அப்பனே

இதனால் அப்பனே மறைப்பதற்கு இங்கு ஏதும் இல்லை அப்பா... பின் அப்பனே நிச்சயம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே போட்டிகள் பின் பொறாமைகள் அப்பனே பிறரிடம் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே கருணை இல்லாமை அப்பனே எவை என்று கூட பின் பொய் பேசுதல் அப்பனே பின் முதுகின் பின்னே பேசுதல் அறிந்தும் எதை என்றும் புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் பின் என் பக்தர்கள் அப்பனே ஒழுங்காக இருப்பார்களப்பா!!

என் பக்தர்கள் எப்படி எதை என்று அறிய அறிய அப்பனே இருப்பார்களென்றால் அப்பனே பின் நிச்சயம் அனைத்திற்கும் காரணம் ஈசன்தான் இறைவன் தான் காரணம் இறைவன் தான் நடத்துகின்றான் என்று தான்....

பின் அவன் பொய் சொல்கின்றானா.... சொல்லட்டும்!!!....  அவன் அனுபவிக்கின்றான்!!!.....

நிச்சயம் எவை என்று கூட அவன் பாவமே செய்கின்றான் என்றால் நிச்சயம் அவன் அனுபவிக்கட்டும்.... அதாவது இறைவன் இருக்கின்றானே... பார்த்துக் கொண்டே இருக்கின்றான்... என்று தான் சொல்வானப்பா என் பக்தன் என்பேன் அப்பனே 

நிச்சயம் எதை என்று புரிய இன்னும் அப்பனே ஆசிகள் உண்டு அப்பனே இன்னும் இன்னும் வரும் காலத்தில் அழிவுகள் தான் மிச்சம் என்பேன் அப்பனே...

ஆனால் யாங்கள் தடுக்க பார்க்கின்றோம் என்பேன் அப்பனே...

ஏனென்றால் மனிதன் திருந்துவான் என்று!!!

 அப்பனே பார்ப்போம் மீண்டும் அப்பனே...

பாச போராட்டத்தோடு மறுவாக்கும் சொல்கின்றேன் ஆசிகள்!!! ஆசிகள் !! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA
    GURUVE SARANAM SARANAM

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. அன்பே அகத்தியன்! அப்பா நீயே உற்ற துணை

    ReplyDelete
  4. சித்த பெருமக்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏 வாழ்க்கையில் கஷ்டம் வந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்பதில் தவறில்லை ஆனால் வாழ்நாளில் கஷ்டம் மட்டுமே வாழ்க்கையானால் இறைவன் இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது இதை உணர்வார் யார் உள்ளார்கள் இதன் முடிவு என்னவாக இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் நல்லருள் தருவார்

      Delete
  5. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  6. Sir, namaskaram, 2025,Thiruvonam star Date's please

    ReplyDelete