7/1/2025 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்.கண்டி பிரம்பனன் இந்தோனேஷியா.
மகேஸ்வரனை பணிந்து வாக்குகளாக ஈகின்றேன்..புசண்டனவன்!!
புசண்டனவன் செப்புகின்றேன்... இன்னும் பல மனிதர்களுக்கு தெளிவு பெற வேண்டும்...
தெளிவு பெற இயலவில்லை என்றால் நிச்சயமாய் கஷ்டங்கள் பல தோன்றி நிச்சயம் பின் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து நிச்சயம் பின் அழிவார்கள்!!!
அழிந்து பின் அவனை கூட அழித்துக் கொள்ளாமல் மற்றவர்களை கூட பின் அழித்து கொண்டே வருவான் இவன் நிச்சயம் பின் பாவ ஜென்மம்!!
... பாவ ஜென்மம் என்பதே தீர்ப்பு.
தீர்ப்பு எதனால்???? என்பது...
ஆனாலும் இறைவனோ...மனிதர்களை புண்ணிய பின் ஜென்மத்தில் பிறப்பெடுக்கவைத்து பின் அமர்த்துகின்றான்..
ஆனால் நிச்சயம் அப் புண்ணியத்தை நிச்சயம் பின் செலவழிப்பது என்று... பாவத்தை மட்டும் செலவழித்து நிச்சயம் தன்னில் கூட.. பாவங்களாகவே கஷ்டங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
இது யார் மீது தவறு?? என்பதையெல்லாம் மனிதன் மீதே தவறு!!!
இதற்கு இறைவன் எப்படி?? பின் பொறுப்பேற்பான்????
பொறுப்பேற்பானா????!!.. என்பதையெல்லாம்!!...
ஆனாலும் இறைவன் சரியான வழியை காட்டித்தான் பின் உலகத்திற்கு அனுப்புகின்றான்.
ஆனால் மனிதன் சரியான வழியை பின்பற்றுவதே இல்லை..
நிச்சயம் குறுக்கு வழியில் சென்று குறுக்கு பாதையில் சென்று பின் அழிவை தேடிக் கொண்டிருக்கின்றான்.
அப்போது பின் அறிந்தும் ஈசனிடம் முறையிடுவார்.
ஈசனே அனைத்திற்கும் காரணமாக விளங்குபவன்.
அனைத்திற்கும் காரணமாக விளங்குபவன் பின்..!!
ஈசனே என்றெல்லாம்.. நிச்சயம் நேரடியாக ஈசனிடத்தில் சென்று பின் அறிந்தும் எங்களுக்கு இப்படி செய் !!அப்படி செய்!! உன்னை தானே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்!!! என்று!!
ஆனால் நிச்சயம் பின் ஈசனோ நிச்சயம் அகத்தியனிடம் செல் என்று.
ஆனாலும் அகத்தியனும் அங்கங்கு மறைந்து கொண்டிருப்பான்... ஏன்? எதற்கு ?என்று... தெரியாமல் கூட பின் அங்கங்கே சுற்றி சுற்றி சுற்றி சுற்றி பல மனிதர்களை காக்க பின் இவ் நாட்டை காக்க நிச்சயம் அறிந்தும் பின் பறந்து கொண்டே இருப்பான்.
பறப்பவனை (பறந்து கொண்டே இருக்கும் அகத்தியரை) எப்படி பிடிப்பது????.. என்றெல்லாம் மனிதர்கள் ஈசனிடம் முறையிட!!!
ஈசன்
நிச்சயம் பிடிக்கலாம்!!!அகத்தியனை!!!
நீங்கள் அனைவரும் கருணையும் நிச்சயம் தன்னில் கூட உயர்ந்த பக்தியும் மனதையும் நிச்சயம்... அமைதியாக இருந்தாலே... அறிந்தும் அனைத்தும் நிச்சயம் அகத்தியனுக்கு தெரியும்... பறப்பவனுக்கு தெரியும்.. நிச்சயம் பறந்து கொண்டே இருந்தாலும் நிச்சயம் இவந்தன் நம்தனை.. நினைக்கின்றான் என்று... அகத்தியனுக்கு தெரியும்!!
மீண்டும் பின் திரும்பி வந்து ஆசிர்வாதங்கள் கொடுத்து மீண்டும் பறப்பான்.
ஆனால் இன்றைய மனிதர்களோ...?!?!? நிச்சயம் தன்னில் கூட.. புரிந்து கொள்ள முடியவில்லை.. இறைவனைக் கூட.
அப்படி இறைவனை பின் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்... எப்படி? இறைவன் தரிசனம் கொடுப்பான்???
எப்படி இறைவன் தரிசனம் கொடுப்பான்???
நிச்சயம் இல்லை!!!
இதனால் கஷ்டங்கள் தான் மேலோங்கும்!!!
இதனால் இறைவனை வணங்கியும் பிரயோஜனமும் இல்லை...
பின் அறிந்தும்... அதனால் நிச்சயம் இறைவன் பொய் என்று நிலைமைக்கு மனிதன் வந்து விட்டு... நிச்சயம் அறிந்தும் கூட... இவன் பொய் என்று மற்றவர்களையும் கூட.. உசுப்பேத்துவான்!!! இறைவனை நம்பாதீர்கள் என்று!!!
இதுதான் கலியுகம்!!!
ஆனாலும் பின் அறிந்தும் ஆனாலும் அதனால் தான்.. அகத்தியன் மனிதர்களை மாற்ற வேண்டும்... அனைவரிடத்திலும் சக்தி.. புண்ணிய சக்தி இருக்கின்றது... என்று அவ் புண்ணிய சக்தி எப்படி எழுப்புதல்?? என்பதையெல்லாம் அகத்தியன் வாக்குகளாக பரப்பி... மனிதர்களுக்கு ஈந்து கொண்டே இருக்கின்றான்.
ஆனால் மனிதனோ நிச்சயம் தன்னைக் கூற... நிச்சயம் அதை தன் மனிதன் பின் ஒழுங்காகவே பயன்படுத்துவது இல்லை...(குருநாதர் கூறும் வழிமுறைகளை ) அதற்கும் அதாவது அகத்தியன் புண்ணிய பின் அதாவது வாக்குகளாக பரப்புவதே!! புண்ணியம்!.
ஆனாலும் அப் புண்ணியம் அவ் மனிதனிடத்தில் இருந்தால்தான்...... அகத்தியனின் வாக்கும் கேட்க முடியும்...!!!!
உணரவும் முடியும்..!!!. நிச்சயம் அதன்படியே நடக்கவும் முடியும்!!!!
அப்படி இல்லை என்றால் நிச்சயம் அகத்தியன் வாக்கை பின் கேட்கவும் மாட்டார்கள்... நிச்சயம் தன்னில் கூட அதன்படியே நடக்கவும் மாட்டார்கள்.
நிச்சயம் தன்னில் கூட பாவத்தில் விழுந்து மீண்டும் மீண்டும் பின் கஷ்டங்களை அனுபவித்து கொண்டே இருப்பார்கள்.
அதை தன் கூட சித்தர்கள் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.
ஏன் எதற்கு வந்தோம்??? எப் பிறவியை காண வந்தோம்?? என்பதையெல்லாம் மனிதர்கள் உணர்வதில்லை!
இதனால் இன்ப சுகங்களுக்காகவே.. ஆசைகள் பட்டு பட்டு... பட்டு பட்டு!!!
ஆசை படலாம்!!!... ஆனாலும் பேராசைகள் மனிதனிடத்திலே இருக்கின்றது!!! ... அறிந்தும் இதனால்தான் அறிந்தும் பல ஆலயங்களை இதனால் அகத்தியன் எழுப்பினான்.
பல ஆலயங்களை நிச்சயம் எழுப்பினான்... அதனால் பின் வாழ்ந்திடல் நிச்சயம் என்று... அகத்தியனுக்கு மட்டுமே இதன் ரகசியமாக அறிவியல் வழியாகவே நிச்சயம் தன்னில் கண்டுபிடிப்புகள் பலவற்றை.. கண்டுபிடித்து கண்டுபிடித்து!!!
ஆனாலும் அதனைக் கூட மனிதர்களால் ஒழுங்காகவே செய்ய முடியவில்லையே!!!
செய்ய முடியவில்லையே!!! அறிந்தும் கூட...
அறிந்தும் கூட செய்ய முடியாததற்கு காரணம் பின் பாவங்களே!!!!
இப் பாவங்கள் இவர்களை சூழ்ந்து உள்ளதால்... அகத்தியன் என்று பின் வணங்கலாமே தவிர... வாய்தான் சொல்லுமே தவிர... ஆனால் பின் அனைத்தும் செயல் இழந்து போகும்!!!
அப்போது என்ன நடக்கும்? என்பதையெல்லாம் மனிதனால் உணர முடியாது!!!
இதனால் தான் நிச்சயம் எங்கெங்கு அழிவுகள் இருக்கின்றதோ... அங்கெல்லாம் அகத்தியன் பின் பறந்து பறந்து சென்று அகத்தியன் திருத்தலங்களை எல்லாம் அமைத்தான்!!
அமைத்து பல வகைகளிலும் கூட நன்மைகளை செய்து கொண்டே இப்பொழுதும் கூட... உலகம் அழிவு நிலைக்கே சென்று கொண்டே இருக்கின்றது.
ஆனால் அகத்தியனோ நிச்சயம் தன்னில் கூட பின் ஓடோடி மக்களை காக்க தன் அதாவது...!!!
அனைவரும் அமைதியாகி விட்டார்கள்...
ஆனால் அகத்தியன் சொல்!! அகத்தியன் சொல்தான்!!
(அகத்தியனின் வாக்கு அகத்தியனின் வாக்கு தான்)
அகத்தியன் ஒன்றை விட்டு விட்டால்... அதை நிறைவேற்றியே தீருவான்!!! நிச்சயம் அறிந்தும் கூட!!
அப்படி அகத்தியன் வாக்கு எப்பொழுதும் பொய்க்காது!!
மனிதர்களின் வாக்கு பொய்த்து விடும்!!!
இதனால்தான் மனிதனே சொல்லி சொல்லி அகத்தியன் பெயரை வைத்து வைத்து பின் அகத்தியன் பொய்க்கின்றான் என்று!! (அகத்தியர் பொய் சொல்கின்றார் என்று)!!!
(மனிதர்கள் அகத்தியர் பெயரை பயன்படுத்தி அகத்தியர் வாக்கு சொல்கின்றார் என்று சொல்லி சொல்லி அது நடக்காமல் போனதால் அகத்தியர் சொல்வது பொய் என்ற நிலை மனிதர்களுக்கு வந்து விடுகின்றது)
பின் ஆனாலும் யாங்கள் விட்டுவிடுவோமா?? என்ன!!
உண்மை தன்னை உணராமல் இறைவனை வணங்கினாலும்.. ஒன்றும் கிட்டாது என்பதையெல்லாம் சித்தர்கள் யாம் அறிவோம்!!
பின் இன்னும் மூடநம்பிக்கைகளிலே ஒளிந்து இருக்கின்றார்கள் மனிதர்கள்.. அதையெல்லாம் பின் கலியுகத்தில் பின் நடந்து வந்து கொண்டே இருக்கின்றது.
அவ் மூடநம்பிக்கைகள் எப்பொழுது பின் ஒழித்து எறிகின்றார்களோ?!!... அப்பொழுதுதான் முக்தியும் மோட்சமும் உயர்ந்த ஞானமும் பின் கிட்டி பின்.. நினைத்தவாறு மனிதன் நினைத்தவாறு வாழலாம்.
ஆனாலும் இவ்வாறு மனிதன் நினைத்தவாறு வாழ்ந்து கொண்டிருப்பது நிச்சயம் லட்சத்தில் ஒருவரே!!! கோடியில் ஒருவரே!! ஒரு பேரே!!
ஏனென்றால் அவர்களுக்கு தெரியும்... ஏனென்றால் பல பல பிறப்புகள் எடுத்து எடுத்து பின் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வாறு எடுத்து எடுத்து நிச்சயம் இறைவன் பாதையை வகுத்து வகுத்து செல்வோருக்கெல்லாம் இது புரியும்!!
(பல பிறப்புக்கள் எடுத்து சரிமுறையாக இறைவனை வணங்கி இறைவன் பாதையில் தர்மத்தின் பாதையில் செல்வோருக்கு)
ஆனால் இப்பொழுதோ!?!?!?!
ஏன் ? இறைவனை வணங்குகின்றோம்?? என்பது தெரியாமல்... வணங்கினாலும் பின் முக்தி கிடைத்திடுமா என்ன???
நிச்சயம் தன்னில் கூட... நிச்சயம் அவை இவை என்றெல்லாம் நிச்சயம் ஆகாது!!!!
பின் இறைவனின் நிச்சயம் அதாவது... இறைவன் பக்தனாயினும் கருணை.. மிகுந்தவனாக இருக்க வேண்டும்... பாசம் மிகுந்தவனாக இருக்க வேண்டும்...!! அன்பு மிகுந்தவனாக இருக்க வேண்டும்!!! நன்றி மிகுந்தவனாக இருக்க வேண்டும்!! நிச்சயம் அறிந்தும் கூட பொய் சொல்லாதவனாக இருக்க வேண்டும்!! தர்மத்தை பின் கடைப்பிடிப்பவனாக இருக்க வேண்டும்.
நிச்சயம் பின் தர்மத்தை நிலை நாட்டுபவனாக இருக்க வேண்டும்.
அனைத்து செயல்களும் பின் இறைவனின் செயலே!! என்று இருத்தல் வேண்டும்.
நிச்சயம் பின் அனைத்து உள்ளங்களையும் கூட தன் உள்ளமாக நினைக்கப்பட வேண்டும்.
நிச்சயம் அறிந்தும் கூட அனைத்து பெண்களையும் கூட தாய்மார்களாக நினைக்க வேண்டும்... நிச்சயம் தன் தாய் போலே நினைக்க வேண்டும்.. நிச்சயம் பின் அனைவரையும் கூட.. அதாவது தன் குடும்பமாக நினைக்க வேண்டும்.
இப்படிப்பட்டவனுக்கு தெய்வம் நின்று பேசும்.. அனைத்து உதவிகளும் செய்யும்.
ஆனால் இன்று தெய்வத்தை வைத்து பின் யான் தெய்வம்!! யான் பேசுகின்றேன் தெய்வத்திடம் பேசுகின்றேன் என்று!!!
அடடா!!!!.... தெய்வம் என்ன வேலைக்காரனா???
தெய்வம்
உன் வீட்டு வேலைக்காரனா????
நீ அழைத்தவுடன் வருவதற்கு????
நிச்சயம் இல்லை!!!
பொய்கள்தான்!!! இவ் பொய்கள் எவ்வாறு கூறுகின்றீர்களோ??????
அவனையே (பொய்யாக பேசுபவர்களை நம்பி செல்பவர்கள் )அழைத்து அவ்வாறு பொய் கூறுகின்றவனிடத்தில் பின் நிச்சயம் பின் சென்றாலும் அவனும் பொய்யன் இவனும் பொய்யனே!!!
இவ் இரண்டு பொய்யர்களும் சேர்ந்து நிச்சயம்.. ஒரு மெய்ப்பொருளாக உருவாக்கி....
(பொய்யை மெய் ஆக்குதல்)
அவ் மெய்ப்பொருள் என்னவென்றால்... அழிவின் தத்துவத்தில் சென்று.. பின் தாக்கும்!!
இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட... இதனால் பின் அகத்தியனும்.. எங்கு கிரகங்களின் பின் சக்திகள் அதிகம்?? என்பதையெல்லாம் உணர்ந்து உணர்ந்து அங்கெல்லாம் பின் திருத்தலங்களை அமைத்து அமைத்து எங்களை எல்லாம் அழைத்து நிச்சயம் தன்னில் உறங்குங்கள்!!(சித்தர்களை அழைத்து அந்த ஆலயத்தில் சமாதி நிலையில் தவத்தில் அமருங்கள் என்று) சில அதாவது சில மண்டலம் வரை என்றெல்லாம் நிச்சயம் அழைத்து அழைத்து!!
இங்கெல்லாம் சக்திகள் மிகட்டும்!!! (சக்திகள் மிகுந்து போகட்டும்)
கலிகாலத்தில் மக்கள் இங்கு வந்தால் நிச்சயம் பிற பிற வினைகளை கூட பாவ வினைகளை கூட தீர்த்து... புண்ணியம்..
பின் புண்ணியத்தை பின் அளித்து தானாகவே நிச்சயம் அந்த காந்த சக்திகளானது அறிந்தும் கூட... மனிதர்களுக்குள்ளே நிச்சயம் நுழைகின்ற பொழுது பின் அதாவது பின் புண்ணியம் என்ற அலை பின்... அலையடிக்கும்.
நிச்சயம் பாவம் என்ற அலையை வெளியேற்றி விடும்!!
நிச்சயம் இவ் காந்த அலைகள் உள் நுழைந்தால்!!
நிச்சயம் யாங்கள் பல கண்டுபிடிப்புகள்...
ஆனால் அகத்தியனிடத்திலே... பல விஷயங்கள் இருக்கின்றது!!
ஆனால் அகத்தியன் தந்து விடுவானா???
அவ்வளவு ரகசியங்கள்!!
உண்மையான அன்பும் பின் கோபம் கொள்ளாமை!! காமம் கொள்ளாமை!! நிச்சயம் ஒரு உயிரையும் கொள்ளாமை யாக இருந்தால்.... நிச்சயம் அகத்தியனே... தன் இல்லத்திற்கு வந்து அனைத்து பின் அதாவது... நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் அகத்தியனுக்கு அனைத்தும் கூட !!
பின் அபிஷேகங்கள் ஆராதனைகள் புஷ்பங்கள் என்று!!! எதுவுமே வேண்டாம்!!!
நிச்சயம் அனைத்தும் அறிந்தவனுக்கு பின் அகத்தியன் வந்து உங்களுக்கு செய்வான்..
இதுதான் அகத்தியனின் மனம்!!!
அகத்தியனின் மனம் பெரும் மனது!!
அகத்தியன் இங்கு இருப்பவர்களுக்கெல்லாம்(இந்தோனேஷியாவில்) அதாவது... பின் கலிகாலம் பின் தொடங்குவதற்கு முன்பே பின் நிச்சயம் அழிந்து வந்து கொண்டே இருக்கின்றது... இங்குதான் மக்கள் அழிவார்கள் முதலில்... என்பதையெல்லாம் நினைத்து இங்குள்ள பல ஆலயங்களை கூட அழகாகவே எழுப்பினான்!!
ஆனாலும் இதனிடையே பின் ப பூகம்பங்கள் வந்தாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அது கீழாக பின் அப்படியே அதாவது அழியாது.. அப்படியே கீழ் நோக்கி சென்று விடும்.
(குருநாதர் அகத்தியர் பெருமான் உருவாக்கிய திருத்தலங்கள் பூகம்பங்கள் வந்தாலும் முடியாது அப்படியே மண்ணுக்குள் சென்று விடும் அப்படியே சிதிலமடையாமல் முழுமையாக கீழே செல்லும் !!
அப்படி கீழே மூழ்கி இருக்கும் ஆலயத்தை அப்படியே மீண்டும் எழுப்பும் சக்தி அகத்தியரிடம் உண்டு)
ஆனாலும் அதனையும் கூட மீண்டும் பின் மேல் எழுப்புவான். அகத்தியன்.
தற்போது உள்ள பல திருத்தலங்கள் இப்படித்தான் சரியாகவே வடிவமைத்தான்.
ஆனால் ராஜராஜ சோழனோ!!! அறிந்தும் எவை என்று கூட...இவ் தேசத்திற்கு வந்து பல வழிகளிலும் கூட கண்டுபிடிப்புகள் பட்டு.. இதனால் அறிந்தும் கூட..இச் சுவடிகள் இங்கே கிடைத்தது.. அகத்தியனுடைய சுவடிகள்.
அதில் கூட எழுதி இருந்தது... நிச்சயம் அதாவது.. சென்று வா!!! அங்கே நிச்சயம் நீ!!!...
சென்று போ!!! அதாவது சென்று வா!! சென்று போ!!
இதற்கு பல அர்த்தங்கள் உண்டு!!!
ஆனாலும் இதை தன் அதாவது ஒரு சுவடி கிடைத்தது... அது ஒரே வரியில் பின் முடிந்தது.
சென்று வா !! நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் மீண்டும் வா!! என்று!!
ஆனாலும் ஏதோ ரகசியம் உள்ளது என்று இங்கிருந்து அங்கு!!! அங்கிருந்து இங்கு!!!
(சோழ தேசத்தில் இருந்து இந்தோனேஷியா இந்தோனேஷியாவில் இருந்து சோழ தேசம் என்று)
அங்கு இங்கு என்றெல்லாம் திரிந்து நிச்சயம் தன்னில் ... ஓரிடத்தில் அடியோடு.. ஆழியில் சென்றிருந்த திருத்தலத்தை கண்டான்.
(ஆழி _ கடலாழி - பெருங்கடல்.)
அதாவது நிச்சயம் ஆழியில் சென்றிருக்கும் பொழுது நிச்சயம் பின் பார்த்து நிச்சயம் பின் (திருத்தலம்) இவ்வாறு தான் அமைத்திட வேண்டும் என்பதை எல்லாம் மனதில் பின் அறிந்தும் எதை என்று நேரடியாக ஓடோடி வந்து நிச்சயம்...
(ராஜராஜ சோழன் குருநாதர் ஓலைச்சுவடிகள் தந்த உத்தரவுப்படி கடல் யாத்திரை செய்யும்பொழுது கடலுக்குள்ளே ஒரு ஆலயத்தை கண்டு பிரம்மித்து இதை காண்பதற்கு தானா அகத்தியர் சுவடியில் சொல்லி என்னை அனுப்பி வைத்தார் என்று வியந்து)
இதற்குத்தானா!?! இந்த சுவடி கிடைத்தது!?!?!?!?!!!!
இறைவா!!!!!! இறைவா!!!
என்றெல்லாம் மீண்டும் அங்கிருந்து வந்து!!!! நிச்சயம் அறிந்தும் பின் தரிசனத்தையும் கண்டான் அகத்தியனின் தரிசனத்தைக் கூட.
அகத்தியனும் பல வழிகளிலும் கூட நிச்சயம் ஆசீர்வதித்து... நிச்சயம் தன்னில் நிச்சயம் இன்னும்
பன் மடங்கு உயர்வுகள் பெறுவாயாக!!!.... நிச்சயம் மூளையிலே நிச்சயம் அறிந்தும் கூட நுண்ணுயிரிகளை புகுத்துகின்றேன் அதை வைத்து கொண்டு நீ நிச்சயம் பின் அதாவது.. அழிவற்ற செயலை நீ செய்வாயாக!!!!
(குருநாதரின் கருணை எவ்வளவு பெரியது என்று இங்கே காணலாம் சமீபத்தில் கூட மூலிகைகளை சேகரித்து மருந்துகளை தயார் செய்யும் ஒரு அடியவருக்கு மூலையில் மூலிகை பற்றிய அறிவு நுண்ணுயிர் அணுக்களை புகுத்தி அவரை மேலும் செயல்பட வைத்திருக்கின்றார். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு அகத்தியர் அடியவரின் பெண் குழந்தை படிப்பில் பின்தங்கி இருந்த பொழுது அந்த குழந்தைக்கும் கல்வி அறிவு அணுக்களை வீட்டிற்கு சென்று புகுத்தி அந்த குழந்தை தற்பொழுது படிப்பில் சிறந்து விளங்கிக் கொண்டு வருவதை சித்து நிழல் வலைத்தளத்திலும் ராம் டெக் மகாராஷ்டிரா வாக்கில் பதிவாக உள்ளது குருநாதர் ராஜராஜ சோழனுக்கும் ஆலயத்தை அழிவில்லாமல் நிலைத்து நிற்கும் படி ஆசிர்வாதம் செய்து கருணை செய்தது குருவின் கருணையோ கருணை)
என்றெல்லாம் நிச்சயம் இப்படி பின் அதாவது சுவடியில் எழுதிக் கொடுத்தவாறே நிச்சயம் பின் ராஜராஜ சோழனும் கூட... அறிந்தும் கூட திருத்தலத்தை ஏற்படுத்த!!! (தஞ்சை பெருவுடையார் கோயில்)
நிச்சயம் அறிந்தும் கூட பின் ஈசனும் அங்கே மறைமுகமாகவே இருந்தான்.
ஆனால் அவனுக்கே தெரியாதவாறு!!! (ராஜராஜ சோழனுக்கு)
ஆனால் இன்னும் பின் சொப்பனத்தில் வந்து பின் இவ்வாறெல்லாம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம்.
நிச்சயம் ஈசனே தன்னிடத்தில் இருந்து கொண்டு நிச்சயம் பலவற்றையும் கூட... இன்னும் அழியாமல் இன்னும் பல திருத்தலங்கள்.
ஒன்றுதான் தெரிகின்றது...!!!
(ஒன்று மட்டும் தான் நம் கண்ணிற்கு பெரிதாக தெரிகின்றது இன்னும் பல திருத்தலங்கள் கட்டி இருக்கின்றார் குருநாதர் அகத்தியரின் கருணையால்)
இன்னும் இங்கும் கூட அமைத்திருக்கின்றான்!!(இந்தோனேசியாவிலும் ராஜராஜ சோழன் கோயில்கள் கட்டி இருக்கின்றார்)
எங்கு? என்றெல்லாம்!!
பாரெங்கும் அமைந்திருக்கின்றது பல திருத்தலங்கள்... என்பதையெல்லாம் அவந்தன் நிச்சயம் அறிந்து உணர்ந்தவனாக!!!!
அவையெல்லாம் நிச்சயம் ஆழியில் சென்று இப்பொழுது கூட!!!
(கடல் அடியில் பல திருத்தலங்கள் எப்பொழுதும் கூட அப்படியே சேதமடையாமல் இருக்கின்றது)
ஆனாலும் பின் வருங்காலத்தில் அதனையும் கூட நிச்சயம் கலியுகத்தில் கூட எழுப்பினால் மக்கள் தப்பித்துக் கொள்வார்கள். என்பதெல்லாம்.
இதனால் பல கண்டுபிடிப்புகள் மனிதர்கள் !!! ஆனால் நோய்கள் எல்லாம் வந்து கொண்டே இருக்கின்றது.
மனிதன் என்ன செய்வான்??
அறிந்தும் கூட மனிதன் என்ன செய்கின்றானோ அதற்கு தகுந்தார் போல் இறைவன் பின் செய்கின்றான் அவ்வளவுதான்.
பின் ஆனால் இன்னும் கேட்பார்கள்!!
இறைவன் நல்லதை பின் என்னென்ன???? என்பதை எல்லாம் மனிதன் நிச்சயம் இறைவனை கேட்கும் அளவிற்கு புண்ணியவான் இல்லை!!!
(இறைவன் என்ன நல்லதை செய்து விட்டார்? என்று கேட்பதற்கு மனிதர்களுக்கு தகுதிகள் இல்லை)
பல வாக்குகளில் யான் செப்பி இருக்கின்றேன்.
நீ புண்ணியவனாக இருந்தால் இறைவனிடத்திலும் சண்டையிடலாம்... இறைவனிடத்தில் கற்களும் வீசலாம்... இப்படி ஆகிவிட்டதே!! என்று!!
ஆனால் புண்ணியவான்கள் நிச்சயம்.. இவ்வுலகத்தில் குறைவே!!!
குறைவே!! என்று!!
இதனால் பல வாக்குகள் யான் எடுத்துரைத்த போதிலும் நிச்சயம் தன்னில் கூட !!!!
பின் அகத்தியனின் புகழ்மாலைகள் இன்னும் எவ்வளவு? எவ்வளவு?
பல ஞானிகள் கண்டாலும் அகத்தியன் போல் இவ்வுலகத்தில் ஞானி உண்டா????
அனைத்து கலைகளையும் கற்றவன் அகத்தியன்.
அனைத்தும் அறிந்தவன்.
நிச்சயம் பின் இவ்வுலகத்தை காப்பாற்ற வந்து கொண்டே!!!!....
இதனால் இன்னும் அகத்தியனே வந்து சொல்வான்!!! கிரகங்களைப் பற்றி நிச்சயம்!!
கிரகங்களைப் பற்றி யார் சொல்லுதல்? வேண்டும் என்பதை எல்லாம் பின் கர்மா சேராமல்... !!!
நிச்சயம் இவ்வுலகத்தில் மனிதன் நன்றாக வாழ வேண்டும் என்பதை எல்லாம்...அகத்தியன்!!
அகத்தியனுக்கு!!!
தீயோன் இல்லை!! நல்லோன் இல்லை !!
ஏழையும் இல்லை!! பணக்காரன் இல்லை !!
நோயுற்றவன் நோய் இல்லாதவன் !! என்று இல்லை
நிச்சயம் அனைவருக்கும் சமமானவன் அகத்தியன்.
ஏழைப் பங்காளன் அகத்தியன்!!!
நிச்சயம் இதனால் பின் ஒரு ஏழையையும் கூட அறிந்தும் கூட பின் கோபுரத்தில் பின் உச்சியில் அமர்த்துபவன்.
நிச்சயம் பின் கோபுரத்தில் இருப்போனையும் கூட நிச்சயம் கீழே தள்ளும் சக்தி அகத்தியனுக்கு உண்டு. அகத்தியனுக்கு உண்டு.
நிச்சயம் இதனால் இவ் தேசம் (இந்தோனேஷியா) முழுவதும் கூட எப்போதோ?? அழிந்திருக்க வேண்டியது!!!
ஆனால் அகத்தியனின் மனது கருணை.
அக் கருணையைக் காட்டி நிச்சயம் தன்னில் கூட இங்கே இருந்து வழி நடத்தி கொண்டே இருக்கின்றான்.
நிச்சயம் இதனால் மீண்டும் இறைவனோ அதாவது பின் வந்து ஈசனோ இங்கு வந்து நிச்சயம் இங்கு பல உயிர்களை கூட கொல்ல!! கொல்ல!! (பல உயிர்களைக் கொன்று கொன்று குவிப்பதை பார்த்து)
ஆனாலும் இப்படி?? கொன்று உட்கொள்கின்றார்களே என்று...
அகத்தியனோ
முடிந்த அளவு யான் நிச்சயம் மாற்றுகின்றேன் என்று... பின் ஈசனிடம் சத்தியம் செய்திட்டு... திரிந்து திரிந்து இன்னும்... அதனையும் கூட.
அதனால்... மனிதனே உன்னை பார்த்து ஒன்றை கேட்கின்றேன்.
பின் அதாவது வாயில்லா ஜீவராசிகளை விட நிச்சயம் பின் அறிந்தும் கூட மனிதனின் படைப்பே இங்கு அதிகம் உள்ளது... அப்பொழுது வாயில்லா ஜீவராசிகளை எப்படி சரியாகவே பின் மாமிசத்தை உட்கொண்டிருக்கின்றான் மனிதன் என்பதை கூட நகைக்கின்றேன்.இங்கு!!
(இவ்வுலகத்தில் ஆடு மாடுகள் கோழிகள் என மனிதர்கள் உண்ணும் ஜீவராசிகளை விட மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக அளவுக்கு அதிகமாக இருக்கின்றது அப்படி இத்தனை மனிதர்கள் அசைவம் உண்ணுகின்றார்கள் என்றால் அவர்கள் உண்ணுவது என்ன??? உண்மையில் அவர்கள் ஜீவராசிகளை உட்கொள்கின்றார்களா? என்று சிந்தித்துப் பார்த்து தெளிவு பெறுதல் வேண்டும்)
இதனால் அவன் உட்கொள்வது நிச்சயம் பின் அறிந்தும்... நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்..
இதனால் பின் அதனால் தான்... தெளிவு பெறுங்கள் தெளிவு பெறுங்கள் என்றெல்லாம்.. உரைத்துக் கொண்டே இருக்கின்றேன்.. நிச்சயம் மனிதனிடம்.
அதாவது மனிதன் அறிந்தும் கூட அதாவது நிச்சயம் பிரியோர்களாக இருக்கின்றார்கள் அதாவது மாமிச பிரியோர்களாகவே.
ஆனால் பின் வருவது அவை தான் மனிதனுடைய நிச்சயம் மாமிசம் கூட... பின் கலந்தே உண்ணுகின்றார்கள்... நிச்சயம் அவ்வாறு உண்ணுகின்ற அவர்கள் பின் குடும்பம் அதி விரைவிலேயே கீழாக போய்விடும்... ஆனால் மனிதனுக்கு தெரிவதில்லை..
(மனிதர்கள் ஜீவராசிகளின் மாமிசங்கள் என உட்கொள்ளுவதில் மனித மாமிசமும் இருக்கின்றது)
பின் இவ்வாறு தான் உண்டு கொண்டிருக்கின்றார்கள்!! பின் அறிந்தும் கூட பின் ருசிக்காகவே. அதனால் ஒன்றும் பயனில்லை பின் அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரிய
இதனால்தான் நிச்சயம் பின் அறிந்தும் பின் அதாவது மீண்டும் சொல்கின்றேன்.
வாயில்லா ஜீவராசிகளை விட நிச்சயம் மனிதர்களின் தொகை தான் பின் அதிகமாக இவ்வுலகத்தில் அதிகம் என்பேன்.
எப்படி பின் நல்லதை கிடைக்கும்??? என்பதை எல்லாம்!!!!
(யோசியுங்கள் தெளிவு பெறுங்கள்!!!)
அதனால்தான் அனுபவங்கள் தேவை என்பதை எல்லாம்... சித்தர்கள் செப்பிக்கொண்டே இருக்கின்றார்கள்.
அவ் அனுபவமும் இல்லையென்றால் நிச்சயம் பின் அறிந்தும் இறைவனை எவ்வளவு வணங்கினாலும் நிச்சயம் பின் பிரயோஜனமும் இல்லை... ஒரு பிரயோஜனமும் இல்லை.
இதனால் அனுபவமே சாலச் சிறந்தது!!!
அனுபவமே இறைவன்!!
அனுபவமே நிச்சயம் அதனால் தான் பின் எங்களிடத்தில் வந்தாலும் சில கஷ்டங்களை கொடுத்து பின் காப்போம் யாங்கள்!!
அதனுள்ளே நிச்சயம் சித்தர்களை வணங்கினால் அனைத்து கஷ்டங்களும் போகும் என்பதையெல்லாம்... பின் நிச்சயம் எதிர்பார்க்காதீர்கள். நிச்சயம் எதிர்பார்க்காதீர்கள்.. நிச்சயம் எதிர்பார்த்து விடாதீர்கள்.
நிச்சயம் எங்களுக்கு தேவை மனசாட்சியுடன் வாழ்வதே... நிச்சயம் போதுமானது... வேறொன்றுமே தேவையில்லை என்பதையெல்லாம் நிச்சயம்.
ஆனால் மனிதனோ? பின் இன்னும் இன்னும்...!?!?!?!?!?!?!!!
ஆனால் நிச்சயம் பின் யாங்களே படையெடுப்போம்... இன்னும் சில சில மனிதர்களுக்கு கூட... நிச்சயம் எங்களை வணங்கினாலும் நோய்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.
ஏனென்றால் முழுமையான உண்மை நிலையை அவன் அறியவில்லை.
எப்பொழுது? அறிகின்றானோ!!?? அப்பொழுது நோய்களும் பறந்து போகும்... நிச்சயம் தன்னில் அனைத்தும் கிட்டும்... தன் குடும்பமும் கூட செழிக்கும்... தன் சந்ததிகளும் செழித்து நீடூழி வாழுமப்பா!!!
அறிந்தும் கூட இவ் புசுண்ட முனியும் கூட... கருணை!! படைத்தவன்!! அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட !!
அதனால் தான்... மக்களை யான் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றேன்!!
ஏன்?எதற்கு?? பின் நிச்சயம் தன் பிள்ளைகள் நன்றாகவே இருக்க வேண்டும்.. என்றுதான்!!!
பின் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட...
அதனால் இன்னும் ரகசியங்கள் எல்லாம் மனிதனுக்கு எடுத்துரைப்பேன்... நிச்சயம் அறிந்தும் கூட...இதையென்று புசுண்டன்... அறிந்தும் எவை என்று அறிய... அனைத்தும் சொல்வதிலும் கூட நிச்சயம் பின் உண்மை.. அறிந்தும் எதை என்று.. உண்மைதனை கூட புரிந்து விட்டால்.... பின் இங்கு..ஏது?? மனிதனுக்கு இடம்!!!
நிச்சயம் அறிந்தும் கூட அதனால் அகத்தியனின் அன்பு... அனைவருக்கும் பெரியது... நிச்சயம் இன்னும் வாக்குகளாக ஈகின்றேன் நலம்!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக🙏
ReplyDeleteஓம் காகபுஜண்டர் நமக 🙏
அப்பா அகத்தியா 🙏 கடை நாள் வரை உங்களிடம் உண்மையான அன்பும், கோபம், காமம் அற்றும், எந்த ஒரு உயிர் இனத்தையும் கொல்லாமல் நீங்க காட்டிய வழிகளை சிக்கென பிடித்து கொண்டு பின்பற்ற ஆசிகள் பல வழங்கி வாழ்த்துவீராக 🙏 அப்பா நன்றி 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete