​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 9 June 2011

சித்தன் அருள் - 33

அகத்தியரை நாடி வருபவர்கள் பலர் உண்டு.  ஒவ்வருவரும் ஒவ்வொரு பிரச்சினைக்கு தீர்வு காண ஜீவா நாடியைத் தேடி வருகிறார்கள். இவர்களில் பலர் அகத்தியரை வணங்கி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அப்படிப்பட்ட ஒரு பெண் தனக்கு ஏற்ப்பட்ட சோதனையை தீர்க்க அகத்தியரை நாடி வந்த நிகழ்ச்சியை பார்ப்போம்.

முகத்தில் சோர்வுடன் ஒரு இளம் பெண் அகத்தியர் நாடியை தேடி வந்தார்.  வந்த வேகத்தில் அகத்தியர் நாடி படிக்கிறது நீங்க தானே என்று கேள்விகளை எடுத்துவிட்டாள்.

"எனக்கு உண்மையில் குழந்தை பாக்கியம் உண்டா?" என்று ஆக்ரோஷத்துடன் கேட்டாள் அந்த இளம் பெண்ண.

கேள்வியின் தாக்கம் தெரியாத நிலையில் "அம்மா இது பற்றி அகத்தியரிடம் தான் கேட்க்க வேண்டும்" என்றேன்.

"சரி எனக்கு எத்தனை குழந்தைகள் என்று சொல்வாரா அகத்தியர்?" என அடுத்த கேள்வி கேட்டாள் அவள்.

இது சற்று சங்கடமான கேள்வி.  இதற்கெல்லாம் அகத்தியர் பதில் சொல்வாரா என்பது கஷ்டம் தான் என்றேன்.

"ஏன்?"

"இதுபோன்ற கேள்விகளை இதுவரையிலும் யாரும் கேட்டதில்லை.  மேலும் இது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய  கேள்வி.  அவசரப்பட்டு ஏதேனும் பதில் வந்து விட்டால் பின்பு உங்களது தாம்பத்திய வாழ்க்கையே திசைமாறிவிடும்" என்றேன்.

"சரி.  ஆனால் ஒரு உண்மை எனக்குத் தெரியும். அது சரி தானா என்று மட்டும் அகத்தியரிடம் கீடுச் சொன்னாள் போதும்.  அந்த பதில் எதுவாக இருந்தாலும் மனப்பூர்வமாக நான் ஏற்று கொள்கிறேன்" என்றால் அந்த பெண்.

"பகவானே! என்னை சங்கடத்தில் மாட்டி விடாதே.  நல்ல பதிலாக எனக்குச் சொல்" என்று பயத்தோடும், பக்தியோடும் அகத்தியரை வேண்டி ஜீவா நாடியைப் பிரித்தேன்.

"இவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் நகரிலுள்ள பிரபலமான மருத்துவமனையில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தது.  மருத்துவமனையிலுள்ள ஒருவர், இவள் பிரசவத்திற்குப் பின்பு மயங்கி இருக்கும் வேளையில் இவளுக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒன்றினை எடுத்துக் கொண்டார்."

அதே அஸ்பத்ரியில் முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை பக்கத்து அறையிலிருந்து மாற்றி இவளுக்குப் பக்கத்தில் கொண்டு வைத்துவிட்டார்.  அந்த ஆண் குழந்தை வேறொருவர் வீட்டில் இருக்கிறது."

இந்த உண்மையை என்னிடம் மட்டும் தேவரகசியமாகச் சொன்ன அகத்தியர், "மைந்தா, இதை இப்போது வெளியில் சொன்னால் இந்தப் பெண் மனப்ப்ரம்மை அடைந்து பைத்தியமாக மாறிவிடுவாள்.  ஆகவே இப்போது சொல்லாதே.  ஆனால் இன்னும் ஒன்றரை மாதத்தில் இவளுக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தை மீண்டும் இவளிடமே வந்து சேரும்.  அதே போல் இவளிடம் வளரும் இன்னொருவரின் பெண் குழந்தை அவளைப் பெற்ற அந்த தாயிடமே போய்ச் சேரும்" என்று ஒரு ஆச்சரியமான தகவலையும் சினிமா பாணியில் எனக்குச் சொன்னார்.

"என்ன சார்! ரொம்ப நேரமா பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  வாய் திறந்து பேசவே மாட்டேன் எனிகிரீர்கள்" என்று என் மவுனத்தைக் கலைத்தாள் அந்த பெண்.

"நல்ல செய்தியைத்தான் அகத்தியர் சொல்லிருக்கிறார்"

"என்ன செய்தி?"

தங்களுக்கு குழந்தை பாக்கியம் உள்ளது.  இரண்டு குழந்தைகள் உண்டு என்றேன்.

வந்தவள் மிகுந்த புத்திசாலி.  என்னை அர்த்த புஷ்டியோடு பார்த்து விட்டு அடுத்த கேள்வியை மிக அழகாகக் கேட்டாள்.

"எனக்கு இரட்டைக் குழந்தைகள் ஒரே சமயத்தில் பிறக்குமா? அல்லது பிறந்திருக்குமா?" என்று ஒரு போடு போட்டாள்.  நான் அதிர்ந்து போனேன்.

"எதை வைத்து இதை கேட்க்கிறாய்?"

காரணமில்லாமல் இதைக் கேட்க்க மாட்டேன்.  நான் அகத்தியர் படம் வைத்து பல ஆண்டுகளாக வழிபடுகிறவள்.  என் தந்தை அகத்தியருக்காக கோவில் கட்டி ஐம்பது ஆண்டுகளாக வழிபட்டு வருகிறார்.  அதோடு எங்கள் குலதெய்வம் முருகன்".

என் கனவில் யாரோ எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை எடுத்துச் செல்வது போலவும் வேறு ஒரு கருப்பு நிறமுள்ள குழந்தையை என் பக்கத்தில் வைத்து விட்டுச் செல்வது போலவும் தோன்றியது.

பிரசவத்துக்கு முன்னால் என்னைப் பரிசோதித்த டாக்டர் உனக்கு இரட்டைக் குழந்தை பாக்கியம் உண்டு என்று அடிக்கடி சொல்வார்.  எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தாலும் எது என்னுடைய உண்மையான குழந்தை என்று தெரியவில்லை.  எதோ ஒரு சந்தேகம் என் மனதை இருபது நாளாக உலுக்கிக் கொண்டிருக்கிறது.  அதனால் தான் பிள்ளையைப் பெற்ற உடம்பு என்றும் பார்க்காமல் தங்களிடம் நாடி படிக்க ஓடி வந்தேன்" என்றாள் அந்த இளம் பெண்.

அவளிடம் நாடியில் வந்த உண்மையை உடனே சொல்ல என் மனம் துடியாய்த் துடித்தது.  அப்படி சொல்லாமல் போனால் வந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு நான் துரோகம் செய்தது போலாகும்.

ஒருவேளை உண்மையைச் சொன்னாள் மாரிவிட்டக் குழந்தையை எண்ணி அதிர்ச்சியில் அவளுக்கு சித்தப்ரமை பிடித்து விட்டால், அந்த பாவமும் என்னை வந்து சேரும்.  அது மட்டுமல்ல அகத்தியர் வாக்கைக் காப்பாற்றவில்லை" என்ற கேட்ட பெயரும், அகத்தியரின் கோபத்துக்கும் ஆளாகக் கூடும்.

பத்து நிமிடம் வரை எப்படி இந்த பிரச்சினையை சமாளிப்பது என்று தெரியாமல், மறுபடியும் அகத்தியரை வேண்டி என்னை இக்கட்டில் மாட்டிவிடாதீர்கள்.  அந்த பெண்ணுக்கு மறுபடியும் அவளது குழந்தையை சேர்க்க ஏதேனும் ஒரு வழியைக் காட்டும்" என்று படிக்க ஆரம்பித்தேன்.

இன்று முதல் இந்தப் பெண் கருட தண்டகம் உள்பட சில மந்திரங்களை வீட்டில் தொடர்ந்து பாடகிக்க ஆரம்பிக்கட்டும்.  இன்னும் ஒன்றரை மாதத்தில் இடம் மாறிய குழந்தைகள் மீண்டும் அதன் அதன் பெற்றோரிடமே போய்ச் சேரும் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அகத்தியர் கூறிய இந்த பதில் திருப்தியை எனக்குத் தரவில்லை.

எனக்கே திருப்தியை தரவில்லை என்றால், அந்த இளம் பெண் எப்படி மன ஆறுதல் பெறுவாள்? எதற்க்காக இதைப்படிக்க வேண்டும் என்று கேட்பாள்.  அப்படியே ஒன்றரை மாதங்கள் கழித்து அவள் குழந்தை மீண்டும் அவளுக்கே எப்படி வந்து சேரும்? அப்படியே வந்து சேர்ந்தாலும் அது தான் அவளது குழந்தை என்று எப்படி நம்புவாள்?  இதெல்லாம் இருக்கட்டும்.  எதற்காக குழந்தை இடம் மாற்றம் ஏற்பட்டது?  இதற்கு காரணம்?  யார் இப்படி செய்தது?  இதற்கு பின்னணி என்ன? என்றெல்லாம் நினைத்து என் மண்டையைப் போட்டு பிய்த்து கொண்டேன்.

நாடி பார்க்க வருகிறவர்கள் பிரச்சினையோடு தான் வருவார்கள்.  எதோ நாலு வார்த்தை நல்லபடியாக சொல்லி அவர்களை அனுப்பிவிட்டால் போதும் என்று எண்ணியே நாடி படிக்கிறவன் நான்.  ஆனால் இப்படிப்பட்ட தர்மசங்கடமான பிரச்சினைகளும் வரும், நன்றாக மாட்டிக்கொண்டு திண்டாடப் போகிறோம் என்று கனவில் கூட நான் எதிர்பார்க்கவில்லை. 

மறுபடியும் அகத்தியரிடம் அடிபணிந்து வேண்டினேன்.உண்மையை இந்தப் பெண்ணிடம் சொல்ல அனுமதி கொடுங்கள்.  அதே சமயம் அவளுக்கும் எந்த விதமான மன உளைச்சலையும் கொடுக்காமல் காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன்.  இதற்கு அகத்தியர் சொன்ன பதில் "பொறுத்திரு எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்றவர், அந்த பெண்ணை ஒன்றரை மாதம் கழித்து வரச்சொல் குழந்தைகள் விஷயமாக ஓர் அதிசயம் நடக்கும்.  இழந்ததை மீண்டும் பெறுவாள் என்று மட்டும் சொல்" என்று என்னிடம் சொன்னார்.

அகத்தியர் அருள் வாக்கை அப்படியே அந்தப் பெண்ணிடம் சொல்லி "பிரார்த்தனை செய்து கொண்டு வாருங்கள் இன்னும் ஒன்றரை மாதத்தில் உங்கள் கனவு நனவாகும்" என்று முடித்தேன்.  அவளும் இதை ஏற்று கொண்டாள்.

அந்த பெண் சென்ற பிறகு நான் யோசித்தேன்.  இந்தப்பெண்ணுக்கு எல்லாம் தெரிந்திருக்கும், அதை வெளியே சொல்லாமல் வேறு விதமாக பேசி விஷயம் கேட்க வந்திருக்கிறாள், என்று தான் என் உள்மனம் உணர்த்தியது.

சரியாக ஒன்றரை மாதம் கழிந்து, ஒரு நாள் காலை,

என் வீட்டு முன் அந்தப் பெண், அவளது பெற்றோர் அவளது கணவன் ஆகியோர் உள்ளே நுழைந்தனர்.  அவர்களை கண்டதும் எனக்கு முன்பு வந்து சென்ற காட்சி தான் நினைவுக்கு வந்தது.  ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அந்த பெண் தன கையோடு கொண்டு வந்த இரு குழந்தைகளை என்னிடம் காட்டி ஆசிர்வாதம் வேண்டினாள்.  பின்னர் சொல்ல ஆரம்பித்தாள்.

"அகத்தியர் அய்யா அன்னிக்கு சொன்னபடி என் குழந்தை மீண்டும் என்னிடமே வந்து சேர்ந்து விட்டது" என்றாள் சந்தோஷத்தோடு.

"எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  விளக்கமாக சொல்லுங்கள்" என்றேன்.

அந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் பாருங்கள்.  இரண்டிற்கும் உருவ ஒற்றுமை இரட்டை நாடி முகபாவம் எல்லாம் ஒன்றாக இருக்கிறது அல்லவா?

"ஆமாம்"

பெண் குழந்தை பிறந்திருந்தாலும் அதற்கு முக பாவம் இரட்டை நாடி போன்றவை ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.  ஆனால் அன்றைக்கு என் பக்கத்தில் போட்டிருந்த பெண் குழந்தை கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் காணப்பட்டது. எனக்கு அப்போதே அந்த குழந்தை என்னுடையது இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டது.

தங்களிடம் வந்தேன்.  அகத்தியர் அருள் வாக்கு கேட்டேன்.  ஒன்றரை மாதத்தில் ஒரு அதிசயம் நடக்கும்.  இழந்ததை மீண்டும் பெறுவாய் என்று சொல்லியிருந்தீர்கள்.  அந்த அதிசயம் தான் நேற்றைக்கு நடந்தது" என்றவள் கொஞ்சம் நிறுத்தினாள்.

அவள் பேச ஆரம்பிக்கும் வரை வேறு யாரும் பேசவில்லை.

"என் சித்தப்பா பையன் ஒருவன் இருக்கிறான்.  பெயர் சண்முகம்.  அடிக்கடி என் வீட்டிற்கு வருவான்.  நன்றாகப் பழகுவான்.  அவன் திடீர் என்று வேறு ஜாதிப்பெண்ணைக் காதலித்து வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி மணந்துகொண்டான்.  இதனால், என் சித்தப்பா அவனை வீட்டில் சேர்க்கவில்லை.  எனவே தனியாக குடிபெயர்ந்தான்.  எனக்கு பிரசவம் ஆனா அதே நாளில், அதே அஸ்பத்ரியில் அவனது மனைவியும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள்.  இது எனக்கு தெரியாது.  அவனுக்கு முதல் நாள் ஒரு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.  அந்தக் குழந்தைக்கு எதோ உடல் உபத்திரவம்.  அதிக நாளைக்கு உயிரோடு இருக்காது என்று யாரோ சொல்லிவிட்டார்களாம்.  அது அவனுக்கு மன வருத்தம்.

அதே சமயத்தில் எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் என கேள்விப்பட்டதும் அவனது கிரிமினல் புத்தி வேலை செய்து இருக்கிறது.  அவன் மனைவியின் வார்டு, என் பிரசவ வார்டுக்கு பக்கத்தில் இருந்ததால் அவன் என் உறவினர் என்று அங்குள்ளோருக்கு தெரிந்ததால் அடிக்கடி வந்து போயிருக்கிறான்.  அப்போது என் குழந்தைகளில் ஒன்றை தூக்கிவிட்டு அவனுக்கு பிறந்த பெண் குழந்தையைத் தூக்கி என் படுக்கையில் போட்டு விட்டான்.  நேற்றைக்கு குடி போதையில் இருந்தபொழுது இந்த உண்மையை மனைவியிடம் சொல்லியிருக்கிறான்.  பெற்ற மனம் இதைக்கேட்டு துடித்து போயிருக்கிறது.  அடுத்த அரை மணி நேரத்தில் அவன் பெண்டாட்டி ஆட்டோவில் வந்து இறங்கி என் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டு, தன குழந்தையை என்னிடம் இருந்து வாங்கிக்கொண்டு போனாள்.  என் தம்பியும் தன குற்றத்தை இன்று காலையில் எங்களிடம் ஒப்புக்கொண்டான்.  அவனை நாங்கள் மன்னித்துவிட்டோம்."

அகத்தியர் அருள்வாக்குப்படி சரியாக ஒன்றரை மாதத்தில் இந்த அதிசயம் நடந்தது.  அவருக்கு நன்றி சொல்லவே நாங்கள் வந்தோம் என்றாள் அந்த இளம் பெண்.