வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமான் ஜீவநாடியில் வந்து, மனிதனை வாட்டும் நோய்களிலிருந்து விடுதலை பெற, பலவித மூலிகை மருந்துகளை உரைத்துள்ளார். அப்படி சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து கேட்ட பொழுது "அது ஒரு நோயே அல்ல!" என்றார். எனினும் தொடர்ந்து விடாமல் கேட்ட பொழுது, தினமும் திரிபலா, திரிகடுகம் எடுப்பது நல்லது என்று சூக்ஷுமமாக உரைத்தார். அடியேனின் நண்பர் ஒருவர், மருத்துவர். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. அகத்தியப் பெருமான் மீது மிகுந்த பற்றுள்ளவர். அவரின் வாக்கை முழுமையாக நம்பி சரணடைந்து அதுபோல் செயலாற்றுபவர். அவர் ஏற்கனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க காலையிலும், இரவிலும் "மெட்ஃபார்மின் 500 mg" மாத்திரையை எடுத்து வந்தார்.
அகத்தியர் கூற்றின்படி, காலை உணவுக்கு முன் "திரிகடுகம்" 1 சிட்டிகையும், மத்திய உணவுக்கு முன் "திரிபலா" ஒரு சிட்டிகையும் சாப்பிட தொடங்கினார். சில நாட்களில் அவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு, சாப்பிடும் முன்னும், உணவு உண்ட பின்னும் நிறய அளவுக்கு குறைந்து போனது. இந்த சூழ்நிலையில் 500gm மருந்தை 250gm ஆக குறைத்துப் பார்த்தார். அப்பொழுதும் அவரின் சர்க்கரை அளவு 100க்கும் கீழே மிக குறைந்து இருந்தது. அகத்தியப்பெருமான் உரைத்த மருந்தும், குருவாக்கின் மீதுள்ள நம்பிக்கையும்தான் இதற்கு காரணம் என்கிறார். ஆனால், இதனுடன் சாப்பாட்டிலும் கட்டுப்பாடு இருந்ததால், இது சாத்தியமாயிற்று, உடலும் வலிமை பெற்றது என்கிறார்.
தேவைப்படுகிறவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
சமீபத்தில், தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் அகத்தியப் பெருமானின் உத்தரவால் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில், நிறையவே, கிருமிகளால் தாக்கப்பட்டு தவித்த பொழுது, கீழ் கண்ட சிகிர்ச்சைகள் அடியேனுக்கு மிக உறுதுணையாக இருந்தது. பல சித்த மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ள மருந்துகளை அகத்தியப்பெருமான் சுட்டி காட்டியதின் பேரில், உங்கள் பார்வைக்கு தெரிவிக்கிறேன்.
பச்சைக்கற்பூரம் 10 கிராம்
புதினா உப்பு(கல்) 10 கிராம்
ஓமம் கல் 10 கிராம்
கண்ணாடி பாட்டிலில் மூன்றையும் இட்டு 5 முறை குலுக்கி வைத்தால், 30 நிமிடத்தில் சிறந்த எண்ணையாகி தலைவலி, ஜலதோஷம், மூக்கடைப்பு, மார்புச்சளி, தொண்டை வலி போன்றவைக்கு நல்ல மருந்தாகும். சிறிதளவே உபயோகிக்கவும். மிகவும் எரிச்சலாக இருக்கும். மூன்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
வேப்பங்கொட்டை (அ) வேப்பம்பட்டை பொடி 100 கிராம்
கடுக்காய் பொடி 50 கிராம்
இந்துப்பு 25 கிராம்.
இம்மூன்றையும் கலந்து, காலையில் பல் தேய்த்து வந்தால், பல் சம்பந்தமான எந்த பிரச்சினையையும் ஒரு வாரத்தில் தீர்ந்துவிடும். பல்லை எடுக்கவே வேண்டி வராது. பற்கள் நல்ல பலம் பெறும்.
ஒரு வெற்றிலை + தேன் + 1 மிளகு + 1 கிராம்பு - தினம் ஒரு முறை கலந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல் உடனே குணமாகும்.
ஒரு வெற்றிலை + தேன் + பெருங்காயம் பொடி (சிறிது) + ஒரு மிளகு + சிறிதளவு சுக்கு - இவை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம்/வாயு தொல்லை. உடனே குறையும்.
மேற்கூறிய அனைத்தும் பக்க விளைவுகள் இல்லாதது. தற்போது, தமிழ்நாட்டில் எங்கும் மழையினால் பரவி நிற்கும் கிருமி தாக்குதல், தொண்டை வலி, ஜுரம், அதன் பின்னர் உள்ள உடல் வலி போன்ற பிரச்சினைகளுக்கு மிக சிறந்த நிவாரணிகள்.
மருந்து மூலிகைகள், வைத்தியம் சம்பந்தமாக அகத்தியப்பெருமான் உரைக்கின்ற விஷயங்கள், இனி இந்த பக்கத்தில் சேர்க்கப்பட்டு, தெரிவிக்கப்படும். இந்த பக்கம் "சித்தன் அருள்" வலைத்தளத்தில் மேல் வலதுபக்கம், "அகத்தியரின் மருத்துவக் குறிப்பு" என்கிற லிங்கில் காணப்படும்!
கல்வி, பரீட்ச்சையில் குழந்தைகள் சிறந்து விளங்க!
1. "Chest Nut Bud" என்கிற ஒரு ஹோமியோபதி மருந்து கிடைக்கும். தண்ணீர் போன்று இருக்கும். அது ஒரு அவுன்ஸ் வாங்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு மூன்று சொட்டு இரவில், உணவுக்குப்பின், உறங்கப்போகும் முன் (சாப்பாட்டுக்கும் இதற்கும் 30 நிமிட இடைவேளை இருக்கவேண்டும்), நாக்கை நீட்டச் சொல்லி விடுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள். உண்மையாக கூறுவதென்றால், மிக மோசமாக படிக்கிற குழந்தை கூட 95% மதிப்பெண் வாங்கும். எல்லா வருடமும் அக்டோபர் மாதம் 1 ம் தியதியிலிருந்து கொடுத்து வந்தால் அடுத்த மார்ச் மாத பரீட்ச்சைக்கு நன்றாக தயாராகிவிடுவார்கள்.
2. ஆன்மீக பரமாக கூறுவதென்றால், தினமும் காலையில் பெற்றோர்களில் ஒருவர் ஒரு கப் குடிக்கும் நீரெடுத்து, அதில் மோதிரவிரலால் ஓம் என்று எழுதி, கிழக்கு திசை பார்த்து நின்று ஹயக்ரீவரின் மந்திரத்தை (ஞானானந்தமயம் தேவம்.....) 11 முறை ஜெபித்து, அந்த நீரை பள்ளி செல்லும் முன் அருந்தக் கொடுக்கவும். ஒரு சில நாட்களில், படிப்பு நன்றாக மாறிவிடும், மனம் தெளிந்துவிடும்.
சித்தன் அருள் - 1555:-
முதுகுவலி, கழுத்து வலி, மூட்டுவலி, கால் வலி, இடுப்புவலி, கை/கால் (ஜாயிண்ட்) வலி, போன்ற பலவிதமான வலிகளுக்கும் மிக சிறந்தது ஒரு எண்ணெய்
விளக்கெண்ணெய் - 1 லிட்டர்
கஸ்தூரி மஞ்சள் பட்டை - ஆறு
ஊமத்தை இலை - 10
துத்தி இல்லை - 10
விளக்கெண்ணையை ஒரு இரும்பு வாணலியில் மிதமான (sim) தீயில் வைத்து சூடாக்க வேண்டும். எண்ணெய் கொதித்து லேசாக ஆவி வரும் பொழுது கஸ்தூரி மஞ்சள் பட்டையை அதில் போட வேண்டும். மஞ்சள் பட்டையிலிருந்து நுரை வரும். 10 நிமிடத்தில் நுரை வருவது நின்ற உடன் ஊமத்தை இலை, துத்தி இலை இரண்டையும் எண்ணெயில் போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் எண்ணெய் குளிரும் வரை காத்திருந்து அதன் பின்னர் (அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறி, போகர் பெருமானை நினைத்து, பிரார்த்தித்து) உபயோகிக்கலாம்.
சித்தன் அருள் - 1605
ஐயனே...... மாறிவரும் இக் கால சூழ்நிலையில் உடலில் சரியான வலிமை பெறுவதற்கு நாங்கள் என்ன செய்வது????
அப்பனே யான் முன்பே பலமுறை உரைத்து விட்டேன் அப்பனே!!!!! எதை என்று அறிய அறிய சொல்லிய மூலிகைகளை அப்பனே சரியாக எடுத்துக் கொண்டு அப்பனே பல வகையான கீரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் அப்பனே போதுமானது அப்பனே அதிலே சக்திகள் உள்ளதப்பா. அதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே ஆனால் நீங்கள் தான் கீரைகளை உண்ணுவதே இல்லை அப்பனே
அப்பனே எவை என்று அறிய அறிய வெள்ளை கரிசலாங்கண்ணி அப்பனே மஞ்சள் கரிசலாங்கண்ணி அப்பனே பொன்னாங்கண்ணி எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே முருங்கை இலைகளை கூட அப்பனே இன்னும் மணத்தக்காளி அப்பனே இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய முடக்கத்தான் எனும் மூலிகையை கூட அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பச்சையாகவே நெல்லிக்கனியை எதை என்றும் அறிய அறிய அப்பொழுது எவை என்றும் புரிகின்ற பொழுதும் கூட இதனால் அப்பனே பல வகையிலும் கூட பச்சைக் காய்கறிகளை உண்டு வர நன்று என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே இதை நிச்சயம் நீங்கள் செய்து வர நன்று என்பேன் அப்பனே
அவை மட்டும் இல்லாமல் அனுதினமும் அப்பனே ஓரிதழ் தாமரை இலைகளைக் கூட உண்டு வர பின் உடல் இரும்பு போல பலம் பெருகும் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய சொல்லிவிட்டேன் அப்பனே.
அதிகாலையிலும் மாலை வேலைகளிலும் நல்விதமாகவே அப்பனே சூரிய ஒளியில் உடம்பை நல்விதமாகவே வைத்திருக்க வேண்டும் அப்பனே நிமிர்ந்து நிற்க வேண்டும் சில சில வழிகளில் கூட உடல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் அப்பனே!!!!
ஐயனே இந்த சூரத் மாநகரில் நீங்கள் கூறும் மூலிகைகள் பச்சையாக கிடைப்பதில்லை உலர வைத்த பொடிகளாக உண்டு வரலாமா???
அப்பனே எதை என்றும் அறிய அறிய முழு பலன் பச்சை இலைகளுக்கே அப்பனே..... இருப்பினும் உண்டு கொள்க
அவை மட்டும் இல்லாமல் அப்பனே அனுதினமும் பூமி சக்கரை எதை என்று அறிய அறிய கிழங்கை கூட கொண்டு உண்டு வருதல் அப்பனே இன்னும் பலமப்பா!!!!
அப்பனே அதாவது பூமியில் ஒளிந்துள்ள பொருட்களை... அதாவது மண்ணிற்கு உள்ளே விளையும் கிழங்கு வகைகளை உட்கொள்ள இன்னும் சக்திகளப்பா!!!!!!
ஐயனே இந்த மூலிகைகளின் விதைகளை கொண்டு விளைவித்து எடுத்துக் கொள்ளலாமா??? குறிப்பாக ஓரிதழ் தாமரை மூலிகை அரிதாகி வருகின்றது அதையும் விளைவித்துக் கொள்ளலாமா???
அப்படியே செய்யுங்கள் அப்பனே நலமாகவே... முதலில் அதைச் செய்யுங்கள் அப்பனே!!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!
குருநாதர் இப்பொழுது தம் வாக்கில் மூலிகைச் செடிகளை பயிரிட்டு வளர்க்கச் சொல்லி இருக்கின்றார்!!!! அதனால் அடியவர்கள் அனைவரும் முடிந்தவரை தம் தன் நிலத்தில் அல்லது வீட்டு மாடி தோட்டத்தில் மூலிகைகளை வளர்க்கலாம்!!! அந்த மூலிகைகளை அன்றாடம் பயன் படுத்தி வரலாம்!!!
தேவைப்படும் அன்பர்களுக்கு வியாபார நோக்கம் இல்லாமல் மூலிகைகள் கிடைக்காத அடியவர்களுக்கு சேவை நோக்கத்தோடு அனைவருக்கும் அனுப்பித் தரலாம்!!!
ஏனென்றால் சித்த மூலிகைகள் அனைத்தும் சித்தர்களுக்கு சொந்தமானவை!!!!!!
அதை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தினால் அது முழு பயன் தயாராது!!! நமக்கு கர்மாவும் ஏற்படும் அதனால் மூலிகைகளை பயிரிட்டு வளர்ப்பவர்கள் அதை அடுத்தவருக்கு சேவை நோக்கத்தோடு செயல்பட்டு கொடுக்க வேண்டும் !!! நியாயமான முறையில் செயல்பட வேண்டும்!!!
மூலிகை என்றாலே சித்தர்களுக்கு சொந்தமானது மனிதர்களுக்கு சொந்தமானது அல்ல!!!!
சித்தர்கள் கருணை கொண்டு நமக்கு அருளிய வரம் தான் மூலிகைகள்.
அனைத்து நோய்களுக்கும் மூலிகைகள் மூலம் நிவாரணம் பெற முடியும்!!!!
அதை அவர்கள் அனுமதி பெற்று தான் அவர்கள் ஆசீர்வாதத்தோடு முறையாக நாம் வளர்த்துவதோ பறித்து பயன் படுத்தவோ செய்ய வேண்டும்!!!!! எந்த ஒரு மூலிகைகளையும் பறிக்கும் பொழுது குருநாதர் அகத்திய பெருமானையும் போகர் பெருமானையும் சித்தர்களையும் நினைத்து வணங்கி பறித்து பயன் படுத்த வேண்டும்!!!
இப்படி செய்தால் தான் சித்தர்களுடைய அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும்!!! சித்த மூலிகைகளின் பலனும் நமக்கு முழுமையாக கிடைக்கும் !!
சித்தன் அருள் - 1608 - கிரியாடினின் Vs பார்லி !
"கிரியாடினின்" என்பது குடல் அழற்சியினால் உற்பத்தி செய்யப்படுகிற ஒரு வகை திரவம். இதன் அளவு ஒருவரின் ரத்தத்தில் 0.5 - 1.20 mg அளவு இருந்தால் சிறுநீரகம் சரியாக செயல் படுகிறது என்று அர்த்தம். 1.20 க்கு மேல் கிரியாடினின் ரத்தத்தில் இருந்தால், சிறுநீரகம் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் கூறுவார்கள். இதன் அளவு 3 அல்லது 4 என்கிற அளவை தாண்டும் பொழுது "டயாலிசிஸ்" செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
அதிக ப்ரோடீன், செயற்கை எண்ணெய்கள், உணவில் சேர்க்க கூடாத ரசாயனங்கள், கண்டதை எல்லாம், கண்டவனிடம் வாங்கி உண்கிற பழக்கம் போன்றவை, இக்காலத்தில் 20 வயது வந்தவர்களுக்கே சிறுநீரகம் செயலிழக்க காரணமாகிறது. உணவில் கட்டுப்பாடு இருந்தால், இதன் அளவை ஓரளவுக்கு குறைத்து விடலாம்.
இயற்கை மருத்துவத்தில் (சித்த மருத்துவம்) இந்த குறையை நிவர்த்தி செய்ய என்ன கூறப்பட்டுள்ளது என்று தேடிய பொழுது, நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் "பார்லி" விதைகள் "கிரியாடினின்" அளவை குறைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
மூன்று ஸ்பூன் பார்லியை, ஒரு டம்ளர் நீரில் இரவு படுக்க போகும்போது எடுத்து வைத்து, அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெறும் வயிற்றில் அதை வடிகட்டி, நீரை மட்டும் பருகிவர, ஒரு வாரத்தில் "கிரியாடினின்" அளவு நன்றாக குறையும். ஒரு மாதத்தில் "கிரியாடினின்" கட்டுப்பாட்டுக்குள் வந்து உடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். நன்றாக ஊறிய பார்லியை சாதம் வடிக்கும் பொழுது அதனுடன் கலந்து உண்ணலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மிகவும் சிறந்த பதிவு. அனைவருக்கும் பயன் படும். அகத்தியர் ஐயன் துணை.
ReplyDeleteOm Agatheesaya namaha Ayya L4 L5 back pain problem marunthu ayyavidam kettu sollavum
ReplyDeleteThank you so much sir..Om agatheesaya namah....
ReplyDeleteதகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
ReplyDeleteஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
ReplyDeleteஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஎம்பெருமான் அகத்தியரின் திருவருள் 🙏🙏🙏
ReplyDeleteநன்றி அன்பரே 🙏
ReplyDeleteபச்சை கற்பூரம்,புதினாஉப்பு, ஓமம்கல் இந்த எண்ணெய் எப்படி பயன்படுத்துவது அன்பரே? வெளி உபயோகத்திற்கா? அல்லது உள் உபயோகத்திற்கா?
ReplyDeleteவெளி உபயோகத்திற்கு. மார்பிலும், நெற்றியிலும், முதுகிலும் புரட்டினால் கபம் வெளியேறிவிடும். நீர் கட்டு விலகும்.
DeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteThank you Agnilingam Aiyya for the invaluable information
ReplyDeleteSir, am suffering from psychiatric issues and sleeping disorder for last 18yrs. Am taking allopathy medicine. If anyone knows about siddha or ayurvedic treatment to cure, please let me know.
ReplyDeleteAiya .. for eyes if anything pls add in this post. My amma got cataract. Pls post in this aiya. Nandri
ReplyDeleteFor Cataract, it is better to go for surgery. முருங்கை பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேனில் குழைத்து உள்ளுக்கு எடுத்துவர, கண் மறைப்பு விலகும்! குறைந்தது ஒரு மாதம் எடுக்க வேண்டும்!
Deleteநன்றி ஜயா!
Delete