​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 10 December 2023

சித்தன் அருள் - 1534 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 7


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

[நிமிர்ந்து நில்லுங்கள். மதுரையில் நாடி வசித்த பொழுது அகத்தியப்பெருமான் தனது பக்தையான திருமதி.பாண்டியம்மாள் (திருச்சுனை) என்பவர் அகத்தியப்பெருமான் அமர்ந்து த்யானம்/பூஜை செய்து நிறுவிய அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னதானம் செய்து வருவதை மிக சிலாகித்து கூறியதை தெரிவித்த பொழுது, சித்தன் அருளை வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள், அவருக்கு இயன்ற அளவுக்கு பணமாகவும், பொருளாகவும் கொடுத்து உதவினர்.

தற்போது கிடைத்த தகவலின்படி, அந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் மண்டலாபிஷேக தினத்தன்று அகத்தியர் அடியவர்கள் அனுப்பி கொடுத்த அன்பளிப்பை வைத்துக் கொண்டு 1500 பேருக்கு அன்னதானம் செய்துள்ளார்கள். அகத்தியப்பெருமான் நம்மை எப்படிப்பட்ட விஷயத்தில் ஒன்று சேர்த்துள்ளார் என்று பாருங்கள். இதில் உதவி, பங்கு பெற்ற அனைவருக்கும் தெரிவிக்கவும், அகத்தியப்பெருமானின் அனுகிரகம் கிடைத்துள்ளது என்பதையம் தெரிவிக்கிறோம். மேலும் இது போன்ற நல்விஷயங்களில், அகத்தியப்பெருமானின் அருளுடன் பங்கு பெறுக! தொடர்க! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!]

குருநாதர்:- அப்பனே இதனால் நல் கருத்துக்களைக் கூறு அனைவருக்கும்.

அடியவர் 17:- பிறர் மனம் புண்படாமல் நாம் பேச வேண்டும். அது மட்டும் இல்லாமல் பிறர் மனம் நோகாமல் நாம் நடந்து கொள்ளவேண்டும்.

கஷ்டத்தில் யாராவது நம்முடம் உதவி கேட்டாலும் , அது நம்மிடம் இருக்கின்றதோ இல்லையோ, நம்மிடம் உள்ளவற்றைக் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் வாயில்லா ஜீவராசிகள் நிறைய உள்ளது. அவைகளுக்குத் தினமும் சாதம், தண்ணீர் கொடுக்க வேண்டும். பைரவர்களுக்கு ( பைரவ வாகனம் ) உணவு அளிக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவு வாயில்லா ஜீவராசிகளுக்கு உதவி செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

இறைவன் நம்மிடையே இருக்கின்றார். இறைவன் நம்மைப் பார்த்துக்கொள்வார். நாம் நமது கடமையைச் செய்வோம் என்ற மனநிலையில் நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

எந்த கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டங்கள் மூலமாக நமக்கு ஒரு விசயத்தைக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுத்தான் (இறைவன் ) போவார். இந்த கஷ்டம் எதனால் வருகின்றதை என்றால் தப்பு செய்தால் கஷ்டம் வருகின்றது. அப்பொழுது நாம் தப்பு செய்யாமல் நாம் நம்மைத் திருத்தி, அடுத்த முறை இத்தவற்றைச் செய்யாமல் நாம் பாரத்துக்கொள்ள வேண்டும்.

குருநாதர்:- அப்படித் திரும்பிப் பார் அப்பனே.  அப்பனே! இவ்வளவு இவ்வளவு வயது ஆகியிருக்கின்றதே அப்பனே! உன்னிடத்தில் என்ன உள்ளது? என்று கூறு அனைவருக்கும்.

அடியவர் 17:- எனது வயது 35. என்னிடம் இப்பொழுது அய்யா கொடுத்த பணம்தான் இருக்கின்றது.

(இந்த அடியவரின் ஏழ்மை நிலையில் ஊர் திரும்பிச் செல்வதற்கே பணம் இல்லை. ஆனால் அகத்தின் ஈசன் பால் அன்பு நாட்டம் கொண்டு வந்து உள்ளார். இதனைக் கருணைக்கடல் அன்புடன் அவருக்கு அங்கு உள்ள அடியவர்கள் மூலம் (பணம்) பொருள் உதவி செய்யச் சொன்னார்கள். அதனையே இங்கு குறிப்பிடுகின்றார் இந்த அடியவர்.)

குருநாதர்:- அப்பனே (உங்கள்) அனைவரிடத்திலுமே ( பொருள்/பணம்)  இருக்கின்றது. ஆனால் உன்னிடம் ஏதும் இல்லை அதனால் அப்பனே! உன்னைவிட அனைவருமே மேன்மையாகத்தான் இருக்கின்றார்கள் அப்பனே. ஆனால் அப்பனே அவை செய், இவை செய் என்றெல்லாம் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அதனால் இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். யான் நிச்சயம் பின் யாருக்கு எதைச் செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்வேன்.

இதனால் எது என்று கூற, அப்பன்களே, அம்மைகளே என்னிடத்தில் எதைக் கேட்டாலும் நிச்சயம் யான் மௌனத்தைத்தான் சாதித்துக் கொண்டிருப்பேன். இதனால் எந்தனுக்குத் தெரியும். எப்பொழுது கொடுத்தால் நன்று என்று அப்பொழுது அனைவருக்குமே கொடுப்பேன்.

இதனால் பரிகாரங்கள் அவை, இவை என்று எல்லாம் நிச்சயம் என்னிடத்தில் செல்லுபடி ஆகாது சொல்லிவிட்டேன்.

அப்பனே (அடியவர் 17) உன்னிடத்தில் அனைவருமே (பொருள் உதவி) கொடுக்கின்றார்கள். அப்பனே, அவர்களுக்கெல்லாம் நீ என்ன சொல்லப் போகிறாய்? அப்பனே.  நன்றி மட்டும் தெரிவிக்கக் கூடாது.

அடியவர் 17:- இந்த தர்மத்தின் மூலம் வரும் புண்ணியம் எல்லாம் ( கொடை அளித்த நல் உள்ளங்கள் ) எல்லாருக்கும் போய்ச் சேரட்டும் அய்யா.

( உயர் புண்ணிய ஆத்மா இந்த அடியவர். எப்பேர்ப்பட்ட வாக்கு உரைத்தார் அதுவும் கருணைக்கடல் முன்பு….இறைவா!!!!!)

குருநாதர்:- இதுதான் மற்றவர் மனதை நம்தன் சந்தோசப்படுத்தினாலே நம்தனக்கு அனைத்துமே நடந்துவிடும்.

அடியவர்கள்:- ( குருநாதரின் இந்த வாக்கு மூலம் அடியவர் 17 அவர்கள் செய்த புண்ணியதானத்தின் மகிமையை உடன் உணர்ந்து அடியவர்கள் அனைவரும் பலமாக மகிழ்ச்சியுடன் ஒருமித்து கை தட்டினார்கள். அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளமாக மாறியது.)

வணக்கம் அடியவர்களே. இப்போது அந்த 17ஆம் அடியவர் குறித்த தகவல்களை அவர் பெயர் , தொடர்பு அழைபேசி எண் உடன் நீங்கள் அனைவரும் அறியத் தருகின்றோம்.

கோயம்புத்தூர் நாடி வாக்கில் அகத்திய பிரம்ம ரிஷி உதவி புரியச் சொன்ன இந்த அடியவர் பெயர் திரு.ஹரிஹரன். பவானியை சேர்ந்த இவர் பெருந்துறையில் ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றார்.  வாரம் ஒரு நாள் மட்டுமே இவருக்கு office leave. இவர் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு ( வயதான தந்தை, மனநலம் சரிஇல்லாத அண்ணன் இவர்களை) தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர் இயலாதவர்கள் மாற்றுத் திறனாளிகள் சாலையோரங்களில் வசிப்பவர்கள் இவர்களுக்கு முடிந்த வரை தான தர்மங்களை செய்து வருகின்றார்.

கோயமுத்தூரில் குருநாதர் கருணையோடு உரையாடி உதவி செய்த இந்த நல் உள்ளத்திற்கு அகத்தியர் அடியவர்கள் முடிந்த வரை இவர் செய்யும் சேவைகளில் பங்கெடுத்த தான தர்மங்கள் செய்து புண்ணியங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவர் செய்கிற தர்ம சேவைக்கு, அன்னம் பாலிப்புக்கு அகத்தியப்பெருமானே உதவி செய்கிறார் என்பதே உண்மை. நாமும் இயன்ற அளவு இவருடன் ஒன்று சேர வேண்டும் என்பது அடியேனின் சிறிய வேண்டுகோள். அப்படி பங்குபெற விரும்புகிறவர்களுக்கு தகவலாக

அவர் தொடர்பு விபரங்கள்:-

இவர் பெயர்:- S.hariharan
தொடர்பு எண்: 9626160897

வங்கி கணக்கு விவரங்கள்:-

பெயர்:- S.Hariharan
வங்கி:- Indian overseas Bank.   
Bank ACCOUNT NUMBER
வங்கி எண்:- 286701000001740. 
IFSC: lOBA 0002867           
Branch : Bhavani..

தனக்கென எதுவும் யோசிக்காமல் பிறர் நலம் பெற சிந்தித்து செயலாற்றிக் கொண்டு சேவைகள் செய்து வரும் திரு ஹரிஹரன் அவர்களுக்கு அகத்தியர் பக்தர்கள் சார்பில் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இவரை தொடர்பு கொண்டு அடியவர்கள் இவருக்கு இயன்ற உதவி புரிய வேண்டுகின்றோம்.

இவருடைய உன்னதமான சேவையில் நாம் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.

குருநாதர்:- இதனால் அனைவருமே உணர்ந்து கொள்ளுங்கள். அவை வேண்டும். இவை வேண்டும். எதை வேண்டும்? அவை அப்படியா? இவை இப்படியா? இப்படியெல்லாம் நிச்சயம் கேட்கக் கூடாது. அனைத்தும் யான் தருவேன். சந்தர்ப்பம் எது என்று கூற விதியில் ஆராய்ந்து ஆராய்ந்து,  அப்படி விதியில் பல குழப்பங்கள், மரணம், போராட்டம் இருந்தாலும் என்னால் மாற்ற இயலும் சொல்லிவிட்டேன்.

அடியவர்கள்:- ஓம் அகத்தீசாய நமஹ, சிவாய நம.

குருநாதர்:- ஆனால் பின் அகத்தியன் அதைச் செய்யவில்லையே, இதைச் செய்யவில்லையே என்றெல்லாம் புலம்பக் கூடாது என்பேன்.

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.  உலகத்தையே என் கையில் நிச்சயம் தாங்க முடியும். அதனால் எவை என்றும் புரியாமல் நிச்சயம் யார் என்றும் தெரியாமல் கொடுத்தாலும் அது வீணாகப் போய்விடும். அதனால் நிச்சயம் யாருக்கு என்ன தகுதி? எதை எவை என்று உணர்ந்து உணர்ந்துதான் யான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன். தன் மக்களுக்கு. அதனால் அவன் தனக்கு யார் சொந்த பந்தங்கள் என்று கேள்?

அடியவர் 17:- எனக்கு சொந்த பந்தங்கள் யாருமே இல்லை அய்யா. இறைவன்தான் சொந்தம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றேன்.

(அடியவர்களே, இந்த அடியவர் கூறிய வாக்கினை மீண்டும் இரண்டு முறை படியுங்கள். விழி வழியும்.)

குருநாதர்:- எது என்று அறிய இப்படிச் சொன்னானே ( இவன் , ஆனால் இங்கு இருக்கும் உங்களில் ) யாராவது ஒருவன் யான் சொந்தங்கள் என்று சொல்லி இருக்கின்றானா? அம்மையே நீங்கள்தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களா என்ன அம்மையே. அதனால் நிச்சயம் நல் மனது அதாவது பக்குவங்கள் படுத்தி பின் மேல் எண்ணங்களாக வளர்க்க வேண்டும். யான் சொந்தங்கள் இருக்கின்றோம் என்று (இவனுக்கு) சொல்ல நிச்சயம், பின் உங்களுக்கு இறைவன் சொந்தம் இருக்கின்றான் அவ்வளவுதான். சொந்தங்கள் நிச்சயம் நன்மை செய்யும்.

அடியவர்கள்:- (பலத்த ஒருமித்த குரலில்) இனிமேல் உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம்.

யாருமே இல்லை என்று நினைக்கவேண்டாம்.
நாங்கள் எல்லோரும் உங்கள் சொந்தங்களே.
நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம் .

குருநாதர்:- அதனால் நிச்சயம் இங்கு யாரும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. அதனால் சந்தர்ப்பத்தைப் பார்த்து யானே தருவேன். அதனால் நீங்கள் நிச்சயம் கேட்டுவிட்டுத்தான் இந்த உலகத்தில் வந்தீர்களா?

யாரை நம்பித்தான் பின் பிறந்தீர்களா?
யாரை நம்பித்தான் வளர்ந்தீர்களா?
யாரை நம்பித்தான் படித்தீர்களா?
யாரை நம்பித்தான் தொழில் செய்கின்றீர்களா?
யாரை நம்பித்தான் வாழ்கிறார்களா?  அனைத்தும் இறைவனுடைய செயல்.

இறைவன் எப்பொழுது யாருக்குக் கொடுக்க வேண்டுமோ , அப்பொழுது கொடுப்பான். அவ்வளவுதான் வாழ்க்கை. இதைத் தெரிந்து கொண்டால் நன்று.

ஆனால் யான் சொல்கின்றேன். எந்தனுக்கு இன்றைக்கு நாளில் பணங்கள் வேண்டும் என்று பரிகாரங்கள் செய்து இருந்தால்  இப்படிக் கிடைத்தால் கிடைத்திருக்குமா? மகனே.

அடியவர் 17:- கிடைத்திருக்காது அய்யா.

குருநாதர்:- அப்பனே இறைவனுக்குத் தெரியும் அப்பனே. எப்பொழுது யாருக்குத் தரவேண்டும் என்று கூட அப்பனே. அதனால் எது என்றும் புரியாமல் கூட தெரியாமல் கூட செய்திருந்தாலும் அதனால் ஒன்றும் லாபம் இல்லையப்பா. அப்பனே உணர்ந்து கொள்ளுங்கள். அப்பனே உணர்ந்து கொண்டால்தான் இறைவனையும் பார்க்க முடியும்.

அதனால்தான் சித்தர்கள் யாங்கள் மனித குலத்திற்கு மூடநம்பிக்கை ஒழியுங்கள் ஒழியுங்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி  இறைவனைக் காண்பிக்க, அதாவது கஷ்டங்கள் வராமலேயே தடுக்கத்தான் மனிதனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மனிதர்கள் எங்களுக்குக் கஷ்டங்கள் வேண்டும், வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். புரிகின்றதா? அனைவருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete