​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 6 December 2023

சித்தன் அருள் - 1530 - பத்ராசலம் ராமர் தரிசனம்!

"ராம பக்தர் ராமதாஸ் பற்றி அறிந்து இருப்பாய்.  அரசாங்க கஜானாவைக் கொள்ளை அடித்து ராமபிரானுக்கு, ராமதாஸ் கட்டிய கோவில் இது (பத்ராசலம்).  இதனால் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் செய்தது தவறு என்பதால் அதற்குரிய தண்டனையைப் பெற்றாலும், அவர், தன் மீது கொண்ட பக்தியைக் கண்டு மெச்சினார் ராமர். ராமதாஸ் இருந்த சிறைக்கு ராமர் வந்து மங்களகரமாக காட்சி கொடுத்த நாள் இன்றுதான். ராமர் காட்சி கொடுத்த அந்த புனிதநாளன்றும் கோதாவரியில் வெள்ளம் வெகுண்டோடியது.  அதே போல் இன்றும் எதிர்பாராத விதமாக வெள்ளம் ஓடுகிறது.  ராமதாசுக்கு காட்சி கொடுத்த பின்னர், சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம் அவர் இந்தக் கோவிலுக்கு வந்ததும் இதே தினத்தில் தான்.  அந்த புனிதமான நாளன்று உனக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும் என்று தான் இங்கு வரவழைத்தேன்."

இன்னும் ஒன்றரை நாழிகையில் இங்குள்ள கர்ப்ப கிரகத்திற்குள் ராமார் அரூபமாக வருவதால், கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய்.  எந்த விதக் காரணம் கொண்டும் கண்ணைத் திறக்காமல் ராமரையே நினைத்திரு.  உன் நினைவலையில் ராமார் வருவதைக் காணலாம்.

ஒரு நாழிகையே அவரது தரிசனம் இங்கு கிடைக்கும், பின்பு, படி வழியாக இறங்கும் ராமர், கோதாவரி தாய்க்கு பூக்களால் நமஸ்காரம் செய்வார்.  தீப ஆரத்தியும் கட்டுவார்.  அதையும் உன் தியானத்தில் பார்க்கலாம்.  அந்த தீப வழிபாடு முடிந்த பின்னர், கோதாவரி அன்னையின் ஆவேசம் தணியும்.  நான்கு மணி நேரத்தில் வெள்ளமும் வடியும்.  பிறகு, நீ இறங்கிச் செல்லலாம்" என்று அகத்தியர் அருள்வாக்கு அருளினார்.

அகத்தியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, ராமரை நோக்கி த்யானத்தில் ஆழ்ந்தேன்.

அகத்தியர் ஜீவ நாடியில் கூறியது போல், சரியாக ஒன்றரை நாழிகை ஆனதும் பூட்டியிருந்த கர்பகிரகம் திறக்கப்பட்டது.  யாரோ உள்ளே செல்வது போல் தோன்றியது.  அபூர்வமான மலர்களின் வாசனை மூக்கை துளைத்தது.  வாசனை திரவியங்களுக்கு நடுவே வேத மந்திர கோஷம் மங்களமாக காதில் விழுந்தது.

ஆஜானுபாகுவான உருவம் மெல்ல, கருவறையிலிருந்து வெளியே வர, அதனை தொடர்ந்து மூன்று உருவங்கள் சட்டென்று வெளியேறியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.

கண்ணை மிக நன்றாக மூடிக்கொள்ள, ராம மந்திரம் தானாக என் நாவிலிருந்து வெளியே வந்தது. பரவசமுடன் த்யானத்தை தொடர்ந்தேன்.

கோவில் கருவறையில் இருந்து வெளியே வந்த அந்த நான்கு பேரும் கோதாவரி நதிக்கரையில் நிற்பது போலவும், கோதாவரி அன்னைக்கு மங்கள ஆரத்தி கட்டுவது போலவும் என் மனக்கண்ணில் தோன்றியது. சில வினாடிகள் கழித்து, அந்த காட்சி கண்ணிலிருந்து மறைந்தது, மெல்ல கண்ணைத் திறந்தேன்.

இது அகத்தியர் மைந்தன் திரு ஹனுமந்த தாசன் அவர்களின், ராமர், சீதா, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகியோரின் தரிசன நிகழ்வு. இது நடந்தது பத்ராசலம் ஸ்ரீ ராமர் கோவிலில். அகத்தியர் உத்தரவின் பேரில் பத்ராசலம் சென்று கோவிலில், காரணம் தெரியாமல், கோதாவரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாட்டிக் கொண்டு அகத்தியர் மைந்தன் தவித்த பொழுது, அகத்தியர் விளக்கிய உரை.

அகத்தியப்பெருமானின் கூற்றின்படி, அந்தநாள், இந்த வருடத்தில் 23/12/2023 - சனிக்கிழமை, மார்கழி மாதம், வைகுண்ட ஏகாதசி அன்று வருகிறது.

யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்குமோ? யாமறியேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️ மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  3. Bhadrachalam experience of Hanumandasan ayya is unforgettable post. Ever since reading, I always wanted to visit Bhadrachalam. I always recall the posts of Bhadrachalam, Ahobilam, Tirupathi meeting Bhogar Siddhar, Mantralayam etc..

    ReplyDelete
  4. ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே । ஸஹஸ்ரநாம் தத்துல்யம் ராமநாம் வராநநே

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete