​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 7 December 2023

சித்தன் அருள் - 1531 - அகத்தியப்பெருமானின் ஒரு விளக்கவுரை!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!!

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த பதிவு மிக அவசியமாகின்றது.

ஏனென்றால் மனிதகுலம் கஷ்டங்களில் இருந்து மீண்டு வர !!!!

கர்மத்தில் நுழையாமல் இருக்க !!!!

பாவங்கள் செய்யாமல் இருக்க!!!!

பிறவி பெருங்கடலை நீந்தி கடக்க!!!!

புண்ணியங்களை பெருக்கிக் கொள்ள!!!

மீண்டும் மனிதப் பிறவி எடுக்காமல் இருக்க!!!!

மோட்சப் பதவியும் இறைவன் தரிசனமும் கிடைக்க!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமானும் சித்த பெருமக்களும் எத்தனையோ வாக்குகள் தொடர்ந்து உரைத்து உபதேசித்து வந்தாலும் மக்கள் அவ்வாக்குகளை ஏனோதானோ என்று எடுத்துக் கொள்வது படித்துவிட்டு மறந்துவிடுவது வாக்குகளின் சாரம்சத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் மனிதர்கள் என்ன சொல்கின்றார்கள் சமூக வலைத்தளங்களில் பரிகாரங்கள் பூஜைகள் என்ன சொல்கின்றார்கள் என்பதை பின்பற்றி அதையும் இதையும் குழப்பிக் கொண்டு தானும் குழம்புவது மட்டும் இல்லாமல் மற்றவரையும் குழப்பிக் கொண்டு தவறாக செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை!!!!

தயவுசெய்து சித்தர்களின் வாக்குகளை சரியாக படித்து உணர்ந்து பின்பற்றி வந்தாலே பெருமளவு துன்பங்களிலிருந்து கரையேறி விட முடியும்.

உதாரணங்களுக்கு எத்தனையோ சொல்லலாம்!!!!

திருவண்ணாமலை இவ்வுலகின் உச்ச பகுதி திருவண்ணாமலையில் நவகிரகங்கள் வேலை செய்யாது!!!!


திருநாகேஸ்வரம் காளகஸ்தி கேதாரநாதன் திருத்தலங்கள் ராகு கேது களுக்கான திருத்தலங்கள்!!!

ராகு கேதுக்கள் சாதாரணமானவை இல்லை இவைகளின் ஒளி அமாவாசை திதிகளிலும் பௌர்ணமி திதிகளிலும் திடீரென்று திருக்தலங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் இதை சரியாகவே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...... எனவும் சனி சுக்கிரன் இன்னும் கிரகங்களைப் பற்றியும் இடைக்காடர் சித்தரும் அகத்திய பெருமானும் வெகு அழகாகவே வாக்குகளில் மனிதர்களுக்கு எடுத்துரைத்து விட்டார்கள்.

அப்பனே மேலிருந்து விழும் ஒளியானது எங்கெங்கெல்லாம் விழும்!!!! கிரகங்களின் கதிர்வீச்சு எந்தெந்த இடங்களில் விழுகின்றது என்பதை எல்லாம் யாங்கள் கண்டுபிடித்து அங்கெல்லாம் திருத்தலங்களை சித்தர்கள் யாங்களே அமைத்தோம்!!!

அங்கெல்லாம் சென்று தங்கி வழிபட்டு வந்தாலே தொல்லைகள் தீரும்...என்றும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு அங்கு இல்லாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் அன்னதானம் தான தர்மங்கள் செய்து வந்தாலே போதும் அப்பா.

உங்களுக்கு தெரியாது அப்பனே இறைவன் எந்த ரூபத்தில் வருவான் என்று அதனால் முடிந்தவரை ஆலயங்களுக்கு செல்லும் பொழுது வழிபாடு மட்டும் செய்யாமல் ஆலயத்திற்கு செல்வதற்கு முன்பும் தான தர்மங்கள் செய்து விட்டு ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு அங்கு அன்னம் அளித்தல் நீர் மற்றும் இனிப்புகள் வழங்குதல் தான தர்மங்கள் செய்து வந்தால் முழுமையான பலன் ஏற்படும். என்று ஒவ்வொரு வாக்கிலும் தெளிவாக வாக்குகள் தந்து கொண்டே இருக்கின்றார்.

பக்தர்களுக்கு குருநாதர் வாக்குகள் தரும் பொழுது அவர்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளாக அந்த ஆலயத்திற்கு சென்று வா இந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வா!!! சென்று தான தர்மங்கள் செய்துவிட்டு வரச்சொல் என்று வாக்குகளில் கூறுவதை அப்படியே செய்து விட வேண்டும்.

சில அடியார்கள் குருவின் வாக்குகளை கேட்டு குருநாதர் குறிப்பிடும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு தான தர்மங்கள் செய்யும் பொழுது அவர்கள் முன்னோர்களும் சித்தர் பெருமக்களும் ஏன் இறைவனும் கூட வந்து உணவை வாங்கி சாப்பிட்டார்கள் என்று குருநாதர் பின் வாக்குகளாகவும் கூறியிருக்கின்றார்.

நமக்குத் தெரியாது ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு தான தர்மங்கள் செய்யும் பொழுது நம் கைகளில் இருந்து வாங்கி செல்வது நம் கண்களுக்கு சாதாரண மனிதர்களாக தான் தெரியும் ஆனால் சித்த பெருமக்கள் ஞானிகள் இறைவன் கூட வெவ்வேறு ரூபங்களில் வந்து வாங்கி நம்முடைய கர்ம வினை அகற்றி நல்ல ஆசீர்வாதம் செய்துவிட்டு போவார்கள்.

இதை பல வாக்குகளிலும் குருநாதர் கூறியிருக்கின்றார் ஆனால் புரிந்து கொள்ள முடியாத பக்தர்கள் ஒவ்வொரு ஆலயங்களிலும் சில மனிதர்கள் ஏற்படுத்தி இருக்கின்ற பரிகார விதியை கடைப்பிடிக்கலாமா என்று குழம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் பரிகாரங்கள் என்று என்றைக்காவது வாக்குகளில் கூறியிருக்கின்றாரா இதை அனைவரும் யோசிக்க வேண்டும்

பரிகாரங்கள் பூஜைகள் அபிஷேகங்கள் இதைப் பற்றி எல்லாம் குருநாதர் கூறியிருக்கின்றாரா??? அவரவர் தன்மைகளுக்கு ஏற்ப குருநாதர் கூறியிருப்பதை  சரியாக புரிந்து கொள்ள வேண்டும்!!!

சிலருக்கு குறிப்பிட்ட நதிகளில் சென்று நீராடி விட்டு வரச் சொல்!!!! சில ஆலயங்களுக்கு அரைமண்டலம் போய் தங்கி இருக்கச் சொல்!!! இத்தனை நாட்கள் கோமாதாக்களுக்கு உணவளிக்க சொல் இயலாதவர்களுக்கு அன்னம் அளிக்க சொல்!!!! வாயில்லா ஜீவராசிகளுக்கு  உணவளித்து வரச் சொல்!!! என்றெல்லாம் தான் பரிகாரங்களாக கூறிக்கொண்டு இருக்கின்றார் இதை யாரும் உணர்வதில்லை.

எங்கு செல்வது எப்படி செல்வது தூரம் பயணம் என்பது எல்லாம் மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள் நமக்கு கஷ்டம் என்றால் நாம் அதை நிவர்த்தி செய்ய உழைக்க வேண்டும் முயற்சிகள் எடுக்க வேண்டும் அப்படி எடுத்தால் தான் அவரும் கூட நமக்கு உதவிகள் செய்வார்.

நமக்கு ஒரு தேவை என்றால் நாம் ஓடோடி அதை செய்து முடிக்கின்றோம் நம்மளுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் நாம் ஓடித்தான் ஆக வேண்டும்.!!!!!!

நாம் படும் கஷ்டங்களை பார்த்து நம்மை பார்த்து பரிதாபப்பட்டு நீங்கள் எல்லாம் பாவம் என்று நினைத்து சரி காப்பாற்றுவோம் என்று கருணைக்கடல் நம் தந்தை அகத்தியர் பெருமான் எவ்வளவு தூரம் இறங்கி வந்து நமக்காக வாக்குகள் தந்து அதை இதை செய் என்றெல்லாம் நம்மை காப்பாற்ற கூறிக் கொண்டிருக்கின்றார் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் அதன்படியே நடந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆலயங்களிலும் மனிதர்கள் குறிப்பிட்ட விதிகளையும் பரிகாரங்களையும் ஏற்படுத்தி அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் விளம்பரமாகவும் வற்புறுத்தியும் செய்து கொண்டிருக்கின்றார்கள் அதில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்???

நம் குருநாதர் அகத்திப் பெருமான் என்ன சொல்லி இருக்கின்றாரோ அதை கடைப்பிடித்து அப்படியே சென்று விட வேண்டும்!!!

 எதற்காக வீண் குழப்பங்கள்...????

அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு குருநாதர் கூறியதை முழு மனதோடு பக்தியோடு செய்து முடித்தால் அனைவருக்கும் நலம்.

ஆனால் புரிந்து கொள்ளாத மனிதர்களோ கிரக தோஷ நிவர்த்திக்கு என்ன செய்வது? வெள்ளியில் நாகம் செய்து உண்டியல்களில் இடலாமா??? அல்லது அப்படிச் செய்யலாமா??? இப்படி செய்யலாமா???? அவர்கள் அப்படி சொல்கின்றார்கள் இவர்கள் இப்படி சொல்கின்றார்கள்!!.... கண்ணால் கண்டது!!! காதால் கேட்டது!! எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொண்டு நம் குருநாதர் அகத்தியர் பெருமான் மற்றும் சித்தர்கள் என்ன சொல்லி இருக்கின்றார்கள்?? என்பதே மறந்துவிட்டு புலம்பி திரிந்து கொண்டிருக்கிறார்கள்!!!!

சித்தர்களுக்கு வேறு வேலை இல்லையா?????

எதற்காக நமக்கு வாக்குகள் தந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும் நாம் நலம் பெற இந்த உலகம் நல்வழியில் நடக்க இந்த கலியுகமே அழியும் காலம் அழியும் காலத்தில் இருந்து பக்தர்களை காப்பாற்ற எந்தெந்த சக்தி வாய்ந்த திருத்தலங்களுக்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை படித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலிருந்து வரும் ஒளியானதை எந்தெந்த இடங்களில் ஈர்த்துக் கொண்டு இருக்கும் அங்கு சென்றால் அந்த ஒளியானது நம் உடம்பில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் அதன் மூலம் நம் உடம்பில் உள்ள அணு துகள்கள் மாற்றம் அடைந்து அதன் ஆட்டம் சீராக ஓடும்!!! இதனால் கர்ம வினைகளில் இருந்தும் நோய் நொடிகளிலும் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும்!!!!

இதற்கும் புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே வாக்குகளையும் புரிந்து கொள்ள முடியும் அங்கு செல்லவும் முடியும் அந்த சக்திகளை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இப்படி ஏனோ தானோ என்று வாக்குகளை புரிந்தும் புரியாமலும் அரைகுறையாக புரிந்து கொண்டு தயவுசெய்து அது நடக்கவில்லை இது நடக்கவில்லை ஏற்கனவே நாங்கள் அங்கு சென்று வந்து விட்டோம்!!!! அவ்வளவு தூரம் நாங்கள் எப்படி செல்வது என்றெல்லாம் புலம்பி கொண்டு இருந்தால் நஷ்டம் நமக்குத் தான்!!! இதை சரியாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தாயாக இருந்து அன்பையும் தந்தையாக இருந்து கண்டிப்பாகவும் குருவாக இருந்து நல்வழியை காட்டிக் கொண்டிருக்கும் கருணைக்கடல் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகளை சரியாகப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்!!!!

எத்தனை எத்தனை ஆலயங்கள் எத்தனை எத்தனை ரகசியங்கள் எத்தனை எத்தனை வாக்குகள் எத்தனை எத்தனை ஆலயங்களுக்குள் இருக்கும் சக்திகள் என இந்த இரண்டரை ஆண்டுகளில் சுவடி ஓதும் மைந்தனை திரு ஜானகிராமன் ஐயாவை ஒவ்வொரு ஆலயங்களுக்கு அனுப்பி அனுப்பி மனித குலம் மேன்மை அடைய பல மாற்றங்களை பெறச் செய்ய ஒவ்வொரு ஆலயத்திற்கும் என்னென்ன சக்தி இருக்கின்றது அங்கு சென்றால் உங்களுக்கு என்னென்ன நடக்கும் எப்படி எல்லாம் வாழ்க்கை மாறும் என்பதை பற்றி எல்லாம் நம் அனைவருக்கும் கூறி வழிநடத்தும் நம் குருநாதர் கருணைக்கடல் அகத்தியர் பெருமான் வாக்குகளை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

தேடுவானப்பா!!! பக்கங்களை புரட்டுவானப்பா!!!! துன்பங்கள் வரும் பொழுது இதிலிருந்து மீண்டு வர அகத்தியன் என்ன சொல்லி இருக்கின்றான் என்று தீர்வினை காண வாக்குகளை தேடி தேடி பார்ப்பானப்பா என்றும் முன்னெச்சரிக்கையாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பற்றியும் குருநாதர் இப்பொழுதே கூறிவிட்டார்.

என்னுடைய வாக்குகளை யாருமே சரிவர பின்பற்றுவது இல்லை அப்பா என் பேச்சை யாருமே கேட்பது இல்லை அப்பா இனி என் பேச்சினை சரியாக கேட்பவர்களுக்கு மட்டுமே இனி என் வாக்குகள் கிட்டும் என்று கூறி இருக்கின்றார்!!!!

இதை அனைவரும் உணர்ந்து பின்பற்றி கொண்டால் அனைவருக்கும் நல்லது!!!!

என்னுடைய தளத்தில் என்னுடைய வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் அதாவது சித்தன் அருள் என்னுடைய தளம்  என்று குருநாதர் ஆணித்தரமாக உரைத்து விட்டார்! ஆகவே, சித்தன் அருள் வலைத்தளத்தையும் தடுத்து நிறுத்தி விட மனிதர்கள் குலம் நன்மை அடைவதை தடுக்க வேண்டி எண்ணி பலர் முயற்சிகள் செய்தாலும் அது ஒன்றும் நடக்காது.

அவர்கள் எண்ணம் பலிக்காது!!!!

யாருடன் மோதுகின்றோம் என்பதை தெரியாமலே சில மனிதர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்!!!

நெருப்புடன் விளையாடினால் என்ன நடக்கும் என்பதை வெகு விரைவில் அவர்கள் அறிவார்கள்!!!!

நமக்கெல்லாம் இன்னந்த பிரச்சினைகள் இருக்கின்றதே இதற்கு எல்லாம் என்ன தீர்வு என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் முழுமையாக சித்தன் அருள் வலைத்தளத்தில் குருநாதர் வாக்குகளை முழுமையாக படித்து உணர்ந்தாலே அவர்களுக்கு நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

யான் அகத்தியன் பக்தன் யான் அகத்தியன் பக்தன் என்று சொன்னால் மட்டும் போதாது குருநாதர் அகத்திய பெருமான்  வாக்குகளில் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதை பின்பற்றவும் வேண்டும் அப்படி பின்பற்றினால் தான் நமக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

அடியவர்கள் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்!!!!

புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே குருநாதர் உடைய ஜீவநாடி வாக்குகள் கிடைக்கும் அப்படி ஏதோ ஒரு புண்ணியத்தால் ஜீவநாடி வாக்குகள் கிடைத்தாலும் அதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் குழம்பிக் கொண்டு திரிந்தால் யார் பொறுப்பு????

இதை அனைவரும் யோசிக்க வேண்டும்!!!

அனைத்து வாக்குகளிலும் தெளிவான விளக்கத்தை குருநாதர் கூறியிருக்கின்றார் அதை ஏன் யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை இது யாருடைய தவறு????

யோசிக்க வேண்டும்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete