​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 6 December 2023

சித்தன் அருள் - 1529 - அன்புடன் அகத்தியர் - பைரவ்நாத் மந்திர் பிம்ப்ரி சின்ஞ்வாட்.புனே மகாராஷ்ட்ரா!


2/9/2023 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம். பைரவ்நாத் மந்திர் பிம்ப்ரி சின்ஞ்வாட், புனே மகாராஷ்ட்ரா 


ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!! 

அப்பனே அனைவருமே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல பல வழிகளிலும் கூட அதாவது அப்பனே விநாயகப்பெருமானின் இன்னும் அப்பனே விளையாட்டுக்கள் அப்பனே எடுத்துரைக்கின்றேன் இப்பொழுது

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதன் முன்னே அப்பனே அதாவது ஞானம் அடைந்தவன் அதாவது பிள்ளையோனே!!!

பிள்ளையோனை ஞானம் என்று குறிப்பிடுவேன்.

(இச் சம்பவம் காலபைரவர் கோயில் அருகே இருக்கும் மோரியாகோஸ்வி கணபதி ஆலயத்தில்)

அப்பனே அவந்தன் எதை என்றும் அறியாமலே அவந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தார்கள் அப்பனே எதை என்று கூட அப்பனே ஒரு தம்பதியினர்.

ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை அறிந்தும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் எதை என்றும் புரியாமலும் கூட.

ஆனாலும் கஷ்டத்தில்!!!

அப்பனே பின் வாழ தகுதி இல்லாமல் அதாவது வாழ தகுதி என்ன எதை என்றும் அறிய அறிய மனிதனுக்கு என்ன அப்பனே இருக்க வேண்டுமோ அவையெல்லாம் ஒன்றுமே இல்லையப்பா!!!!!! 

இதனால் அப்பனே உணபது உறங்குவது... அங்கே பின் கணபதிக்கு அப்பனே பின் சேவை செய்வது இவ்வாறாகவே இருந்தது!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதாவது பின் கணபதியின் அருளால் பின் கர்ப்பமுற்று (கருவுண்டாயிற்று) அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே குழந்தையும் அழகாகவே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள்!! அப்பனே!

இதனால் அவர்களுக்கும் பின் தெரிந்து விட்டது.... பிள்ளையை நம்மால் வளர்க்க முடியாது என்று எண்ணி பின் அங்கேயே விட்டுவிட்டு அப்பனே எங்கேயோ சென்றுவிட்டார்கள்!!!

அப்பனே எவ்விடத்திற்கு என்றெல்லாம் யான் அங்கங்கு உணர்த்திடுவேன் அப்பனே இமயமலைக்கு சென்று விட்டார்கள் எதை என்றும் அறிய அறிய.

நம்மால் இனிமேலும் வாழ முடியாது இதனால் அங்கு சென்று விடலாம் என்று!!!

ஆனாலும் சில காலம் அங்கே பின் தங்கி அறிந்தும் அறிந்தும் கூட அங்கேயே ஈசனை பாடி பாடி பல பல வழிகளிலும் கூட பல பல வழிகளில் அறிந்தும் கூட அப்பனே பல மனிதர்களுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தனர்.

ஆனாலும் இப்பிள்ளையை கவனிக்க ஆள் இல்லை

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அழுது கொட்டியது அப் பிள்ளை!!!! 

ஆனாலும் உண்ண உணவல்லாமல் கூட... எதை என்று கூட அப்பனே சிறு குழந்தைக்கு என்ன உணவு என்பதை கூட நீங்களே அறிவீர்கள்!!!! (பால்) 

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் பிள்ளையோன் அப்பனே பெண் ரூபமாக வடிவெடுத்து அப்பனே அக்குழந்தையை தூக்கி அப்பனே நல்விதமாகவே வளர்த்தான் அப்பனே!!!!

அனைத்தும் எதை என்று அறிய அறிய மூன்று வருடங்கள் நான்கு வருடங்கள் அப்பனே பெண் வடிவிலே எதை என்று அறிய அறிய அப்பனே இருந்து அக்குழந்தையை வளர்த்தான் அப்பனே!!!

இதனால் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் கூட 

இதனால் ஒரு நிலைக்கு அக்குழந்தை வளர்ந்து விட்டது 

இதனால் அப்பனே சரி என்று கூட அப்பனே ஆனாலும் மாறி  அங்கே அமர்ந்து விட்டான் !!

( உருமாறி மீண்டும் கருவறையில் கணபதி அமர்ந்து விட்டார்) 

ஆனாலும் அப்பனே அக்குழந்தைக்கு பாசம் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய

பின் எங்கே தாய்?????  எங்கே தாய்????? இவ்வாறு என்றெல்லாம் அழுது புலம்பி !!!!

ஆனாலும் பிள்ளையோனுக்கு கூட பல வேலைகள்!!!!

யோசித்தான்.... இப் பிள்ளையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால்!!!!???

அனைவரையும் பார்க்க வேண்டுமே என்று எண்ணி!!!! யோசித்தான். 

ஆனாலும் மௌனம். 

ஆனாலும் எப்படியாவது மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணி மனதையும் மாற்றி விட்டான்.

ஆனால் அக்குழந்தை எதை என்று அறிய அறிய தெரிந்துவிட்டது.

ஆனால் இப் பிள்ளையோன் தான் நமக்கு அனைத்துமே!!!!

தாய் தந்தை எதை என்றும் அறிய அறிய இனிமேல் இவன்தான் என்று எண்ணி அனுதினமும் பின் பிள்ளையோனுக்கு எதை என்று அறிய அறிய நீரை ஊற்றுவது இன்னும் புஷ்பம் வைப்பது இன்னும் எதை எதையோ எதை என்று அறிய அறிய எப்படியோ எதை என்றும் பின் இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட

 இதனால்  அவந்தனுக்கும் வயது ஆகி கொண்டே சென்று விட்டது.

ஆனாலும் பின் இருபது எதை என்று அறிய அறிய அதன் முன்னே பல வழிகளிலும் கூட பின் பிள்ளையோனுக்கு பல மனிதர்களுக்கு உபதேசங்கள் என்பதை எல்லாம் பல பாடல்களையும் கூட பாடிட்டு எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் பின் பிள்ளையோனை பார்த்து!!!!

பிள்ளையோனே!!!!!!! 

அதாவது பின் கணபதியே எதை என்று அறிய அறிய உனக்கை யான் சேவைகள் செய்து கொண்டிருக்கின்றேன்!!!!

பின் என்னால் சொந்த பந்தங்கள் எவை என்றும் அறிய அறிய யாருமே இல்லை!!!

அதனால் யான் என்ன செய்வது ?? எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் எந்தனுக்கு இனிமேல் யாருமே தேவையில்லை!!!

பிள்ளையோனே!!!!!!!!...... நீ  !!! கூட  எந்தனுக்கு தேவையில்லை.... அறிந்தும் அறிந்தும்.

ஆனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் பிள்ளையோன் தான் வளர்த்தான் என்பது அவந்தனுக்கு தெரியாமல்!!!

ஆனாலும் அப்பனே இதுதான் மாயை யப்பா!!!! மனிதன் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனுக்கு இறைவன் பல ரூபங்களில் கூட உதவிகள் செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே.

ஆனால் அதை தெரியாமலே வீணாக காலங்களை கழித்துக் கொண்டு இருக்கின்றார்கள் மனிதர்கள் அப்பனே

இதனால் என்ன பிரயோஜனம் அப்பனே?????

எதை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய இருப்பதை வைத்து அப்பனே சரியாகவே வாழ்ந்து வந்தாலே இறைவன் என்னென்ன செய்வான் என்பதை கூட அப்பனே வரும் காலங்களில் எடுத்துரைக்க போகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அவந்தனுக்கும் மனம் வெறுத்து விட்டது.

இதனால் எவை என்று கூட அவ் குழந்தையும் எதை என்றும் அறியாமலும் அதாவது இனிமேல் எந்தனுக்கு யாருமே தேவையில்லை சொந்த பந்தங்களே தேவையில்லை!!!

பின் கணபதியே !!!!! நீ கூட தேவையில்லை!!!! எதை என்று அறிய அறிய எந்தனுக்கு என்னதான் கொடுத்தாய் ????என்று அழகாகவே அப்பனே!!!

அப்போது இது தனி இடம் அப்பா.... இங்கே வந்து அமர்ந்து விட்டான் அப்பனே

(மோரியா கோஸ்வி கணபதி ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கால பைரவர் ஆலயம் இருக்கும் இடத்திற்கு )

இங்கே படுப்பது அப்படித்தான் எதை என்று கூட எதை என்று அறிய அறிய அனைவருமே எதை என்று அறிய அறிய அப்பனே

பல பேர்கள் அப்பனே இவனை எதை என்றும் அறிய அறிய இங்கிருந்து துரத்த பார்த்தார்கள் அப்பனே!!! ஏன் பைத்தியக்காரனாக இருக்கின்றானே என்று!!!

ஆனாலும் எவை என்றும் புரியாமல் கூட இங்கே தங்கி அப்பனே எழுந்து உட்காருவான் ஆனாலும் யாரிடமும் பேச எவை என்று கூட பேச மாட்டான் அப்பனே ஆனால் பேச முடியும் ஆனால் எவையும் பார்க்க மாட்டான் மனிதர்கள் என்றாலே இவந்தனுக்கு பிடிக்காமல் போயிற்று அப்பனே.

யார் எதை கொடுத்தாலும் எதுவும் வாங்க மாட்டான் அப்பனே அப்படியே அமர்ந்து அமைதியாக!!!!

ஆனாலும் அப்பனே பிள்ளையோனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் 20 ஆண்டுகள் என்று சொல்லிவிட்டேன் அல்லவா அப்பனே ஆனாலும் பிள்ளையோன் மீது மட்டும் பற்றுகள்!!!!!!

ஆனாலும் எதை என்று கூட ஆனாலும் பிள்ளையோனும் பின் எதை என்று.......

இப்படி சொல்லிவிட்டு போய் விட்டானே!!!!..........எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று.... ஆனாலும் நம்மிடம் பாசம் வைத்திருக்கின்றானே என்று கூட...

அவன் பின் எதை என்று கூட அதாவது ஞானவான் அதாவது ஞானம் என்பவன் இங்கு குறிப்பிடுவது பிள்ளையோனையே குறிப்பேன்!!! 

நினைத்தான் ஆனாலும் அதாவது அவ் ஆசைகள் கூட இவந்தனுக்கு வர கூடாது என்று எண்ணி எதை என்றும் அறிய அறிய 

ஆனாலும் பின் மாயை எதை என்று கூட மனதை மாற்றி விட்டான். 

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அதாவது இவ் எதை என்று கூட அதாவது இவந்தனுக்கு புரிந்து விட்டது... பிள்ளையோன் தான் மாற்றுகின்றான் என்று!!! 

ஆனாலும் இங்கிருந்தே ஆனாலும் சிறு வயதிலே ஞானம் பெற்று விட்டான்


இங்கிருந்தே பிள்ளையோனை அதாவது 

கணபதியே அறிந்தும் கூட என் மனதை மாற்றுகின்றாயா!!!!! நிச்சயம் முடியாது.... நீ என்ன செய்தாலும்!!!! 

ஏனென்றால் யான் பக்குவம் பெற்று விட்டேன்... அதனால் நீ என்ன செய்தாலும் எந்தனுக்கு ஒன்றுமே ஆகாது!!!! 

செய்!!!! என்று கூட. 

அதனால் உன்னை தான் யான் நினைப்பேன் என்று!!! 

இதனால் கணபதியே கணபதியே கணபதியே கணபதியே என்றெல்லாம்

ஆனாலும் வருவோர்கள் போவோர்கள் எல்லாம் இவந்தன் என்ன பைத்தியகாரனா???? கணபதி அங்கே இருக்கின்றான் என்று!!!!

(காலபைரவர் ஆலயம் இடத்தில் இருந்து கொண்டு மோரியா கோஷ்வி ஆலயத்தில் இருக்கும் கணபதியை இங்கு சொல்லிக்கொண்டு இருக்கின்றானே என்று)

ஆனாலும் ஒருவன் வந்து கேட்டான்!!!!

கணபதி கணபதி என்கின்றாயே இங்கே இருந்து!!!!

நான் உன்னை அங்கு அழைத்துச் செல்லட்டுமா என்று!!!

நிச்சயம் பின் யான் வரப்போவதில்லை இப்பொழுது தான் பேசினான்!!! ( இத்தனை நாட்கள் யாரிடமும் பேசாமல் இருந்து)

யான் ஏன் அவனைப் பார்க்க வேண்டும்????

எதற்காக பார்க்க வேண்டும்????

எந்தனுக்கு ஏதாவது இருக்கின்றதா யான் அவனைப் பார்க்க வேண்டுமா?????? 

அதனால் நிச்சயம் இல்லை!!! 

அவனை கணபதி கணபதி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அவன் வரட்டும் இங்கு என்று!!!!

ஆனாலும் மனிதனுக்கு அதாவது கேட்டானே அந்த மனிதன் இவனைப் பார்த்து

உந்தனுக்கு இப்படித்தான் ஆக வேண்டும் கணபதி யார் தெரியுமா??? அவந்தன் லீலைகள் தெரியுமா....அவந்தன் எப்பேர்பட்ட பெரிய ஆள் என்பதை கூட நீ அறியாது அவன் வரட்டும் என்று சொல்கின்றாயே!!!! அதனால்தான் நீ இப்படி இருக்கின்றாய்( பைத்தியக்காரன் போல) என்று கூறி சென்று விட்டான் அவ் மனிதன்.

ஆனாலும் இவன் சிரித்தான்!!!!!

 நீ தான்!!!! நீதான்டா பைத்தியக்காரன் என்று காரி துப்பி அனுப்பிவிட்டான்.

ஆனாலும் (அந்த மனிதன் இவனைப் பார்த்து)

அவந்தன் பின் என்னையே...பின் ஒன்றும் இல்லாதவன் நீ !!!!

அதாவது என்னையே நீ இப்படி சொல்லிவிட்டாய் ( நீ தான்டா பைத்தியக்காரன் என்று) என்று கல்லை வீசினான்.

கல்லை வீசியது உடனடியாக அப்படியே பிடித்துக் கொண்டான் பிள்ளையோன். ஆனாலும் மனித ரூபத்தில் வந்து!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவனும் ஓடோடி வந்து நிச்சயமாய் அறிந்தும் கூட இப்படி எதை என்று கூட இவனை அடித்தேன் ஆனால் நீ அதை தடுத்து விட்டாயா என்று ""பளார் ""!!!என்று அடி?!!!

( மனித ரூபத்தில் வந்த கணபதிக்கு அடி)

எதை என்று அறிய அறிய பிள்ளையோனுக்கு!!!!


பார்த்தீர்களா எதை என்றும் அறிய அறிய!!!!

பிள்ளையோனும் பொறுத்துக் கொண்டான்!!!

எதை என்று அறிய அறிய ஆனால் மனிதனாக இருந்தால் எப்படி செய்திருப்பான் என்பது நீங்கள் அறிந்ததே!!!!

(மனிதராக இருந்திருந்தால் அடித்ததற்கு திருப்பி தாக்கி சண்டையிட்டு இருப்பார்கள்)

அதனால்தான் மனிதா உந்தனுக்கும் இறைவனுக்கும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் புரிகின்றதா??? வேறுபாடு !!!!

ஆனாலும் பின் அதாவது எவை என்று கூட ஒரு பக்தியில் இருந்தவனுக்கு இறைவன் பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் ஏதாவது நிச்சயம் பின் நிச்சயம் அறிந்தும் கூட எவை என்று கூட அப்பனே ஒரு பக்தனுக்காக இறங்கி வந்து தன் பக்தனுக்காகவே இறங்கி வந்து அடியும் வாங்கினான்!!! என்பதை அப்பனே நீங்கள் சரியாகவே பக்தியை காண்பித்தாலே உங்களுக்காக எதுவும் செய்ய காத்திருக்கின்றான் இறைவன் அப்பனே!!!!

அதனால் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்!!!

அப்பனே எதை என்றும் உணர்ந்தும் அப்பனே மீண்டும் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எதை என்று எவை என்று பிள்ளையோனும் அமைதி காத்திருந்தான். 

ஏன்???  இவனை இப்படி கல் எடுத்து வீசினாய் என்று....( மனித ரூபத்தில் இருந்த கணபதி அவனைப் பார்த்து)

ஆனாலும் இவன் இப்படி கூறி விட்டான் யானும் கணபதியுடைய பக்தனே என்று (அவ் மனிதன்) 

ஆனாலும் பின் கணபதி சிறிது நேரம் நகைத்து விட்டான்!!!!

யான் இங்கே இருக்கின்றேன் அது கூட தெரியவில்லையே உந்தனுக்கு.... என்று மனதில் எண்ணி!!!! 

இதுதானப்பா பக்தி...... இப்படித்தானப்பா!!!! பக்திகளை செலுத்துகின்றார்கள் அப்பனே....

ஏதோ விதவிதமாக எதை என்று அறிய அறிய ஏதோ தானோ என்று வணங்கி!!!

ஆனால் இறைவன் ஒவ்வொருவருக்கும் காட்சி தருகின்றான்.

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இன்னும் ஆழ்ந்து இருந்தால் அப்பனே இறைவன் நேரடியாக வந்துவிடுவான் அப்பனே
எதை என்று கூட!!!

அதனால் ஆனாலும் எவை என்று அறிய அறிய பின் அதாவது அவ் ஞானம் அடைந்தவன் 20 வயது என்று சொன்னேனே அவன் புரிந்து விட்டான்!!!

வந்தது பிள்ளையோன் என்று.....

ஆனாலும் பிள்ளையோனை திட்டினான்.....ஏன் ??எதற்காக ??? இங்கு வந்தாய்?? என்று கூட!!!

யப்பா!!!!! அப்பா!!!!!! நீ தானே!!!!!!!...... பின் அங்கிருந்து வரட்டும் என்று கூட........

( கணபதி என்னை பார்க்க இங்கே வரவேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார் அல்லவா கணபதி வந்துவிட்டார்)

ஆனால் யான் அடி வாங்கிப் போகின்றேன் அறிந்தும் கூட ஏன் எவை என்று... அதனை தடுத்து விட்டாய்!!!

ஆனாலும் பின் ஆனாலும் அவ் மனிதன் அதாவது கல்லை வீசினானே!!!!!

இவர்கள் இருவரும் பைத்தியக்காரர்களே இவர்களை என்னதான் செய்வது ????என்று!!! சென்று விட்டான்.
மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட

அதனால் சரி!!!!!  எவை என்று கூட தடுத்து விட்டேன் எவை என்று கூட!!!!!

பின் வளர்த்த பாசங்கள் எவை என்று கூட அதனால் வந்து விட்டேன் என்று. ஆனாலும் மீண்டும் பிள்ளையோன் சென்று விட்டான்.

அப்பனே இப்படித்தான் அப்பா மனிதர்கள் பாசத்தோடு அன்போடு பிணைந்து கொண்டு அப்பனே பின் வாழத் தெரியாமல் மாயையில் மாட்டிக் கொண்டு அதாவது அப்பனே எப்படி எப்படியோ கர்மாக்களை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய பிள்ளையோன் பார்த்து கொண்டே இருந்தான்....

இவன் என்ன தான் செய்கின்றான் ?? என்று !!!

ஆனாலும் எவை என்றும் புரியாமலும் கூட.... ஆனாலும் அவந்தன் பிள்ளையோனை எதை என்றும் அறிய அறிய என்னிடத்திற்கே வர வேண்டும் என்று எண்ணி எண்ணி!!!! 

ஆனாலும் எதை என்று அறிய அறிய எதை என்றும் புரியாமலும் கூட இதனால் அப்பனே நல் விதமாக எதை என்று. 


ஆனாலும் பிள்ளையோனுக்கு..... இவனை இப்படியே விட்டு விட்டால் மனிதர்கள் இவை எவை என்று...... பாடாய் படுத்தி விடுவார்கள் என்று எண்ணி...... அவனை மாயையில் இன்னும் மறைத்து மறைத்து!!!

 ஆனாலும் பின் ஒரு பைரவனை அனுப்பினான்!!!! ( பைரவ வாகன உயிரினம்) 

அவ் பைரவன் அவன் அருகிலேயே இருந்தது!!!! 
அறிந்தும் அறிந்தும் கூட 

இதனால் அறிந்தும் எதை என்றும் புரியாமலும் கூட அவ் பைரவன் எதை என்று கூட அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பிள்ளையோனே!!! அனுப்பியது!!! 

இதனால் கவனமாக இவனுக்கு துணை இருந்தது... 

இதனால் எவை என்று கூட இதனால் நல் விதமாகவே பின் ஆனாலும் எவை என்று கூட அவ் ஞானி என்று புரிய சிறு வயதிலே... 

இதனால் பின் அதனை பார்த்தான் (பைரவனை) 
எதை என்றும் அறிய அறிய அதாவது பைரவனை... 

எதை என்றும் அறிய அறிய சரி!!!!!  நம்தனுக்கு தான் உணவுகள் இல்லையே... இதாவது பின் உண்ணட்டும் என்று!!!! 

அனைவரும் தந்தார்கள்!!!! இதனால் இவ் பைரவனுக்கே கொடுத்திட்டான் அனைத்தும்!!!! 

ஆனால் கையை ஏந்தினான் அப்பனே புரிந்து கொண்டீர்களா அப்பனே.... 

மற்றவர்களுக்காக.... எப்போது வாழ்கின்றோமோ!!!!! அப்பனே அப்பொழுதே இறைவன் நம்மிடத்தில்... வந்து விடுவான் அப்பனே நிச்சயம்!!!!! 

அப்பனே பின் நல் மாற்றங்களாக மாறும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதிலிருந்து அப்பனே!!!!! 

அவன் ஒன்றுமே வாங்கவில்லை அப்பனே ஆனால் அப்பனே ஒரு எவை என்று கூற எதை என்று கூட..... பைரவனை இதையாவது வாழ வைக்கலாமே என்று!!!!! 

இது தானப்பா எவை என்று கூட ஞானியர்களின் அப்பனே எதை என்று கூட உயர்ந்த வகை தத்துவங்கள் என்பேன் அப்பனே... 

இப்பொழுது இருக்கின்றார்களே ...இவந்தனுக்கு ஏன் செய்ய வேண்டும் என்று... மற்றவர்களிடம் இருந்து பிடுங்குகின்றார்கள் அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே. 

எதை என்று கூட இதனால் பின் இவன் சொல் பலித்தது!!!!!!!!! 

அனைவருமே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் புரியாமலும் கூட!!!! 

இருந்தாலும் அனைத்தும் சரி செய்து விட்டான் இவன். 

பின் யாராவது வந்தால் அப்பனே இவன் ஒரு அடி அடிப்பான் அப்பனே..... உடனடியாக நோய்கள் தீர்ந்து விடும் அப்பனே 

யாராவது வந்து மன கஷ்டங்கள் என்றால் அப்பனே...... """பளார்!!!!! என்று ஒரு அடி அடிப்பான் அப்பனே.... அனைத்தும் தீர்ந்து விடும்... 

இதனால் அப்பனே இவந்தனுக்கு எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் அடி எதை என்று கூட........ 

:""""""" அடி கணபதி """"!!!!!!!!என்றே இவந்தனக்கு பெயரே வைத்து விட்டார்கள் அப்பனே அனைவரும் கூட!!!!!!

அனைவரும் அதாவது  இத் தேசத்தில் (புனே மகாராஷ்டிரா) எதை என்று அறிய அறிய !!!

பல பல நபர்கள் அவனை சந்தித்தால் அனைத்தும் ஒரு அடி கொடுப்பான் ஆனால் அனைத்தும் போய்விடும்!!!

அப்பனே இதனால் அப்பனே மந்திரம் தந்திரம் ஏதும் இல்லையப்பா!!!

எவை என்று கூட அடிதானப்பா !!!! அனைத்திற்கும் ஒரே தீர்வு!!

அதனால் இவ்வுலகத்தில் அப்பனே எவன் ஒருவன் சற்று பக்தியாக மிகுந்து அப்பனே இறைவனை நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவந்தன் எதை என்று கூட அப்பனே...பின் எவை என்று கூட மந்திரம் இல்லாமலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய தந்திரம் இல்லாமலும் அப்பனே பின் எவ் மருந்தும் இல்லாமலும் அப்பனே பின் எதை என்று கூட குணப்படுத்த முடியும். என்பேன்.அப்பனே!!! 

ஆனால் அப்படிப்பட்ட நிலை இப்பொழுது இல்லையப்பா (யாரும் ) இல்லையப்பா!!!

அதனால்தான் மனிதர்களுக்காக கலியுகத்தில் வந்து வந்து பின் வாழுங்கள் வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லி சொல்லி சொல்லி கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!

இதனால் அப்பனே எவை என்று கூட அவ் முதியவன் (வயதாகி விட்டது) அதாவது எதை என்று அறிய அறிய காலம் வந்துவிட்டது நெருங்கி விட்டது அப்பனே முதியவன் ஆகிவிட்டான் அப்பனே!!! 

ஆனாலும் அவந்தனுக்கு ஒரு நினைப்பு!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய கணபதி வந்துவிட்டால் நலமாகவே என்று

ஆனாலும் இவன் நினைப்பு கணபதிக்கும் தெரிந்து விட்டது அப்பனே 

சென்று விடுவோம் என்று இதனால் அப்பனே இங்கே எவை என்று கூட அப்பனே இங்கேயே அவந்தன் எதை என்றும் அறியாமலே கூட அப்பனே அப்படியே எதை என்றும் புரியாமலும் கூட அப்படியே பின் அதாவது பின் கணபதிக்கும் அப்பனே தெரிந்துவிட்டது!!!
( முதியவன் ஜீவசமாதி அடையும் நேரம்)

இவை எதை என்று கூட இதனால் நம் அருகிலே இருக்கட்டும் என்று கூட எதை என்று கூட இங்கேயே  இவ்இடத்திலேயே அப்பனே எதை என்று கூட அனைத்துமே கணபதியே நல்விதமாகவே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எதை என்று கூட உடம்பை மட்டும் தான்!!!!( ஜீவசமாதி)

ஆனால் உயிர் இன்று கூட இவந்தனுக்கு பிரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றது!!!

அதனால் அப்பனே அவ் பைரவனும் கூட இங்கேயே அழகாக இன்னும் கூட அப்பனே பின் எதை என்று கூட மண்ணுக்குள் அப்பனே

( பைரவ வாகன உயிரினமும் ஜீவ சமாதி)

இதனால் வருபவர்களுக்கெல்லாம் நன்மைகள் செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

அதனால் அப்பனே சில சில விஷயங்கள் அப்பனே சிறிதாயினும் அப்பனே ஸ்தலங்கள் பலமாகும் என்பேன் அப்பனே

அதனால் அப்பனே அடிக்கடி அங்கிருந்து கணபதி இவனை பார்ப்பதற்கும்

(மோர்யா கோஸ்வி கணபதி ஆலயத்தில் இருந்து காலபைரவர் ஆலயம் வந்து செல்கின்றார் பார்ப்பதற்கு)

எதை என்று கூட வந்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே

அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் சிறப்பு அப்பனே எவை என்றும் அறிய அறிய 

அதனால் அப்பனே நீங்கள் சரியாக இருந்தால் இறைவன் உங்களிடத்திலே வந்து அனைத்தும் செய்வானப்பா!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏமாந்தது போதும் என்பேன் அப்பனே!!!

எழுந்து நில்லுங்கள் அதாவது அப்பனே உறங்கியது போதும் எழுந்து நில்லுங்கள் என்று தான் யான் சொல்கின்றேன் அப்பனே!!!! 

இன்னும் !!!இன்னும் !! இன்னும்!! இன்னும் !! மாற்றங்களோடு யான் எதை என்றும் அறிய அறிய இன்னும் கணபதி பல லீலைகளை நிகழ்த்தியுள்ளான் என்பேன் அப்பனே!!!

அதனால் சாதாரண பட்டவன் கணபதி அல்லான்!!!!! ( கணபதியின் சக்தி சாதாரணமில்லை) என்பேன் அப்பனே!!!

இதனால் இவனைப் பற்றி இன்னும் இன்னும் வாக்குகள் சித்தர்கள் செப்புவார்கள் என்பேன் அப்பனே....

நலமாக நலமாக ஆசிகள் !!! ஆசிகள் !! அப்பனே!!!

ஆலய முகவரி

காலபைரவர் மந்திர் ஹனுமான் மந்திர், எதிரில் கணேஷ் சூப்பர் மார்க்கெட், 398/409, தியோ வாடா, தலேரா நகர், சின்ச்வாட், பிம்ப்ரி-சின்ச்வாட், மகாராஷ்டிரா 411033

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!
 


 

2 comments:

  1. (எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய )கணபதி வந்துவிட்டால் நலமாகவே என்று

    குருநாதருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.மேற்கண்ட வாக்கியத்தில் கணபதி வந்து விட்டால் நலமாகவே என்பது பொருள்‌. ஆனால் அதற்கு முன் உள்ள வார்த்தைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே புரிதலில் சற்று சோர்வை உண்டாக்குகிறது அப்பனே.எவை என்று கூற அப்பனே ஒரே கோர்வையாக இருந்தால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் அப்பனே.நீண்ட பதிவுகளை படித்து முடிக்க தடுமாற்றம் உள்ளது.

    குருவே தங்களின் கருணைக்கு நன்றி.

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete