​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 3 December 2023

சித்தன் அருள் -1527 - அம்மை அப்பனின் திருநட்சத்திரங்கள்!


லோபாமுத்திரா அம்மா, அகத்தியப்பெருமான் ஆகியோரது திருநட்சத்திரங்கள் இந்த மார்கழி மாதம் கீழ் கண்ட தினங்களில் வருகிறது.

  • டிசம்பர் - 18/12/2023 திங்கட்கிழமை அன்று லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திரம் - சதயம்!
  • டிசம்பர் - 30/12/2023 சனிக்கிழமை அன்று அகத்தியப்பெருமானின் திருநட்சத்திரம் - ஆயில்யம்!

நம் குருநாதரிடம் அந்த நாட்களில் அபிஷேக பூஜைகளுக்காக உத்தரவு கேட்ட பொழுது,

"மதுரையில் எம் ஆலயத்தில் இரு தினங்களும் வந்து செய்யவும்!" என உரைத்தார்.

கோவில் நிர்வாகத்தினரிடம், பூஜாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பூசைக்கான அனுமதி அளித்துள்ளனர். பூசாரியும், அந்த இரு தினங்களிலும், மாலை 5 அல்லது 6 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தர ஒப்புக்கொண்டுள்ளார்.

அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூ வாசகர்கள், அடியவர்கள் இயன்றவரை வந்து பங்கு பெறலாம். இங்கு வர முடியாதவர்கள், இரு நாட்களையும் குறித்து வைத்துக் கொண்டு தங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள அகத்தியப்பெருமான் கோவிலுக்கு சென்று பூசைகளில் ஈடுபட்டு அகத்தியப்பெருமான்/லோபாமுத்திரையின் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை அகத்திய மகரிஷி ஆலயம் முகவரி

https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
 
அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம்,
தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004
தமிழ் நாடு, இந்தியா.

திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில்.

மதுரை To திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு Thiagarajar Engineering Collegeக்கு முந்தின ஸ்டாப்.

Bus Route No: 5 A, B, C, D, E,   9A   14 A, B    22,    48 A, B, C, D

Shri Arulmigu Sakthi Mariamman Temple,
Thiagarajar Colony,
Pasumalai, 625004, Madurai, Tamil Nadu State, India

https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete