​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 21 December 2023

சித்தன் அருள் - 1543 - அகத்தியப்பெருமானின் வழிகாட்டல்!




வணக்கம் அகத்தியர்  அடியவர்களே !!!!

நமது சித்தன் அருள் வலைத்தளம் குருநாதருடைய நேரடி பார்வையில் இயங்குவது இயங்கி வருவது இயங்கி வந்து கொண்டே இருக்கும்!!!

வலைத்தளத்தில் குருநாதர் உடைய சித்தர்களுடைய வாக்குகள் அடியவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டி பல ரகசியங்களை பல்வேறு சக்தி வாய்ந்த திருத்தலங்களை பல உபாயங்களை பல மருந்து குறிப்புகளை தங்களுடைய வாக்குகள் ஒவ்வொன்றிலும் கூறி நமக்கு ஒரு தெளிவினை தந்து வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போதுள்ள காலகட்டத்தில் சித்தர்களுடைய வாக்குகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது என்பதை அடியவர்கள் அறிவீர்கள்.

அதாவது மேல் உள்ள கிரகங்களின் துகள்கள் நம் உடம்பிலும் இருக்கின்றது மேலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் என்னென்னவெல்லாம் செய்யும் எங்கெல்லாம் சென்றால் என்னென்ன நடக்கும் என்ற ரகசியங்கள் எல்லாம் அறிவியல் வழியாக சித்தர்கள் உரைத்துக் கொண்டு வருகின்றார்கள்.

நவகிரகங்களை பற்றியும் குறிப்பாக மனித ஜோதிடர்கள் கூறுவதெல்லாம் பொய் ஒவ்வொரு கிரகத்தின் அதன் பலா பலன் என்ன?? எவ்வாறு நன்மைகள் செய்தால் கிரகங்களுடைய ஆசிர்வாதங்களை பெறலாம்? ஒவ்வொரு கிரகத்தின் திசை நடக்கும் பொழுது எங்கெங்கு செல்ல வேண்டும்? எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும்? என்ன மாதிரியான முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும் ?அப்படி நடந்தால் தான் கிரகங்களும் அனுகூலம் செய்யும் என்பதெல்லாம் சித்தர்கள் நமக்கு வாக்குகளில் சொல்லி ஜோதிடம் பற்றி அடிப்படை அறிவு இல்லாமல் மனிதர்கள் சொல்வதைக் கேட்டு பரிகாரங்கள் அது இது என செய்து குழம்பி இருந்த நிலையில் ஜோதிடம் குறித்தும் வாக்குகள் தந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உலகமே இருள் அடைந்த காலகட்டத்திலும் மக்களைக் காப்பாற்ற 30க்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகளை கூறி நம்மை காப்பாற்றவும் கருணையோடு வந்து மருந்துகளை பரிந்துரைத்து அது மட்டுமில்லாமல் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எந்தெந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் திரிபலா திருகடுகம் அவற்றின் தன்மை என்ன அவை உடலுக்குள் சென்று என்னென்ன செய்யும் ???  இயற்கை ஆக வாழும் முறைகள் என அனைத்தையும் தெளிவாக நமக்கு கூறி வழி நடத்திக் கொண்டே வருகின்றார்கள்.

அதேபோல சித்தர் வழியில் பக்தி வழியில் போலியாக நடந்து கொண்டிருக்கும் போலி பக்தர்களை அடையாளப்படுத்தவும் தயங்கவில்லை ஏனென்றால் இப்படியே சென்று கொண்டிருந்தால் சித்தர்களே இல்லை என்ற நிலைமைக்கு மனிதர்கள் வந்து விடுவார்கள் மனிதர்களை நம்பி நம்பி மனிதர்கள் கர்மாக்களை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி போலியானவர்களைப் பற்றிய அடையாளப்படுத்தியும் கொண்டு வருகின்றார்கள்.

நமக்கு எச்சரிக்கையும் தந்து கொண்டு வருகின்றார்கள்.

இதே போல உண்மையான அகத்தியர் பக்தர்களையும் அடையாளப்படுத்த தவறவில்லை. சித்தன் அருள் வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

உண்மையான பக்தர்களை அவர்கள் முன் ஜென்மம் பற்றி அவர்களுக்கும் அகத்தியருக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு அவர்கள் இந்த ஜென்மத்தில் செய்து வரும் சேவைகள் தொண்டுகள் அவர்களோடு சித்தர்கள் வந்து ஆசிகள் தந்தது ஆட்கொண்டது தரிசனம் காட்டியது என நல்ல உள்ளங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி என் பக்தர்கள் இப்படி எல்லாம் இருக்கின்றார்கள் என்று நமக்கு காட்டியும் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் ஒரு அகத்திய மைந்தன் அகத்திய பக்தர் அகத்தியருக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து வரும் ஒரு நபரை பற்றியும் அவருக்கு குருநாதர் தந்த வாக்குகளை பற்றியும் அவரை பொதுமக்கள் குறை தீர்க்க சொல்லி குருநாதர் கூறியதையும் தற்பொழுது இந்த பதிவில் பதிவு செய்கின்றோம்.

சித்தர்களின் சித்தன் அருள் வலைத்தளத்தில் எந்த ஒரு விளம்பர நோக்கத்திற்காகவும் தனிப்பட்ட காரணத்திற்காகவும் எந்த ஒரு தகவலும் வெளியிட அனுமதி இல்லை.

குருநாதருடைய வாக்குகள் அதன் அடிப்படை தன்மையை ஒட்டியுள்ள அடியவர்கள் அவர்களுடைய செயல்பாடுகள் அவர்களுடைய சேவைகள் இதை வெளியுலகத்திற்கு சித்தர்களுடைய அனுமதியோடு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

அந்த அகத்திய அடியவர் அனைவரும் அறிந்தவர் தான் அகத்தியர் ராஜ்ஜியம் என போற்றப்படும் பாலராமபுரத்தில் இருக்கும் அன்னை லோப முத்ரா தேவி சமேத அகத்தியர் திருக்கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் பணிவிடைகள் செய்து வந்த திரு சுமேஷ் போற்றி அவர்கள்.

பாலராமபுரத்தில் அன்னை லோப முத்திரை தாயாரும் நம் குருநாதர் அப்பா அகத்திய பெருமானும் பல திருவிளையாடல்களை பல லீலைகளை செய்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மரிக்கொழுந்து பச்சை கற்பூரம் சில பல உத்தரவுகள் ஓதியப்பன் பிரதிஷ்டை என அங்கு பல திருவிளையாடல்கள் நடந்த பொழுது ஒரு அகத்திய அடியவர் பெரியவர் உதவியோடு சுமேஷ் போற்றி. பல சேவைகள் புரிந்து பல அற்புதங்களை குருநாதர் செய்து கொண்டு வருவதை வெளிப்படுத்தியவர்கள்.

அவர் சில பல காரணங்களால்!!!

தற்பொழுது திருவனந்தபுரத்தில் இருந்து பொதிகை மலை செல்லும் வழியில் ஒரு ஆசிரமத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் சன்னதியில் பூஜை மற்றும் சேவைகள் செய்து வருகின்றார்.

கடந்த வருடம் திரு ஜானகிராமன் ஐயா திருவனந்தபுரம் வந்த பொழுது குருநாதரை ஜீவநாடியை வணங்கி சந்தித்து திரு சுமேஷ் போற்றி அவர்கள் வாக்குகள் கேட்ட பொழுது

அப்பனே நீ என் மைந்தனப்பா!!

இந்த உறவு இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல நீ எடுத்த பிறவிகள் எல்லாம் என்னையே நம்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாய் என்னையே வணங்கிக் கொண்டிருந்தாய். ஒரு ஜென்மத்தில் உன்னை அழித்துவிட மாந்திரீக கட்டுக்களால் உன்னை அடைத்து விட்டனர். ஆனால் யான் உன்னை காப்பாற்றி என்னிடத்திலே வைத்துக் கொண்டேன்.

மனிதனாய் பிறந்து விட்டாலே சில கஷ்டங்களும் துன்பங்களும் வரும் அப்பா ஆனால் நீ என் அருகிலே தான் இருக்கின்றாய்.

மகன் மனது கஷ்டப்பட்டால் அந்த கஷ்டம் தந்தையான எனக்கும் உண்டு ஆனாலும் யான் உன்னை கைவிடமாட்டேன்!!!!

அனைவரும் என்னுடைய பிள்ளைகளே அன்பு ஒன்று மட்டும் எந்தனுக்கு போதும் அப்பனே!!!

அன்பை விட இந்த உலகத்தில் வேறு எதுவும் பெரிது ஒன்றும் இல்லை அப்பனே.

அவ் அன்பினை எந்தன் மீது நீ காட்டிக்கொண்டே இருக்கின்றாய் அவ அன்பிற்கு யானும் உந்தனுக்கு செய்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே என்று வாக்குகள் தந்திருந்தார்.

சில சமயங்களில் உந்தன் மனது சந்தோசமாக இருக்கின்றது சில சமயம் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கின்றது என்று மனதில் கவலைகள் வந்து விடுகின்றது

கவலையை விடு அப்பனே குறைகள் இல்லை எந்தன் அருகிலேயே இருக்கின்றாய்!!!!

அன்னை லோப முத்திரையும் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றாள் உந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கின்றாள்!! ஆனாலும் யான் பொறுத்திரு என்று கூறிக் கொண்டே இருக்கின்றேன்!!

எதை எப்பொழுது செய்ய வேண்டுமோ அதை யான் செய்து முடிப்பேன். எந்தனுக்கு தெரியும் அப்பனே உந்தனக்கு எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று தக்க சமயத்தில் உன்னை ஏற்றி விடுவேன் அப்பனே !!

சிலவற்றை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் அப்பனே ஆனாலும் யான் உன்னை கைவிடமாட்டேன் அப்பனே!!!

என்று கடந்த ஆண்டு வாக்கில் கூறியிருந்தார்.

இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண திரு சுமேஷ் போற்றி அவர்கள் உடன் இரு நண்பர்கள் அகத்தியர் அடியவர்களை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை வந்தார்.

குருநாதரின் உத்தரவுப்படி அப்படியே உத்திர காவிரி நதிக்கரையில் குருநாதருக்கு நடந்த யாக பூஜையிலும் கலந்து கொண்டு நடத்திக் கொடுத்தார்.

பூஜையை யாகத்தை குறித்து குருநாதரும் யானும் அப்பனே கலந்து கொண்டேன் யானே உன் மூலம்  அமர்ந்து நடத்தி வைத்தேன் என்று கூறியிருயிருந்தார்.

அதன் பிறகு குருநாதர்  அவருக்கு  வாக்குகள் கூறினார் அவ்வாக்குகள் பின் வருமாறு!!!!!!

அப்பனே நல்லாசிகள்!!!!!

யான் இருக்கின்றேன் அப்பனே !!!!

உன்னை நிச்சயம் அனுதினமும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே 

அதனால் என்னுடைய பிடியில் நீயப்பா!!!!

என்னிடத்தில் இருந்து நீ தப்பவே முடியாதப்பா!!!!

அதனால் யான் என்ன செய்கின்றேன் அதாவது யான் என்ன செய்ய நினைக்கின்றேனே நினைத்தேனே அதன்படியே தான் யான் செய்வேன்!!! உன்னுடைய இஷ்டப்படிக்கு யான் செய்ய மாட்டேன். செப்பிவிட்டேன் அப்பனே!!!

அதனால் அப்பனே அது நடக்கவில்லை இது நடக்கவில்லை என்னால் வாழ முடியவில்லையே என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்காதே அப்பனே

உந்தனுக்கு என்ன தேவையோ ?? அது வருமப்பா அதை யானே கொடுப்பேன்!!!

அப்பனே அதனால் அப்பனே லோபா முத்திரையும் எதை என்று அறிய அறிய ஏதாவது செய்யுங்களேன்!!! ஏதாவது செய்யுங்களேன்!!! மைந்தனுக்கு என்று!!!!

ஆனாலும் பொறுத்திரு தேவியே !!!

என்று யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!

அப்பனே இன்னும் நீ பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் அப்பனே.

பல மனிதர்களுக்கு குறைகள் தீர்க்க வேண்டும் என்பேன் அப்பனே.

எதை என்று அறிய இது போல் பூஜைகள் செய்து!!!

( ஹோமங்கள் யாகங்கள் பூஜைகள்)

அதனால்தான் அப்பனே இது ஆரம்பம்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய முன் ஜென்மத்திலே அப்பனே எவை என்று அறிய அறிய பல நல்லோர்களுக்கு அப்பனே எவை என்று கூட தீயோர்கள் எல்லாம் அப்பனே பின் தீயவைகள் செய்து கொண்டே இருந்தார்கள் என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே என்னிடத்தில் எதை என்று கூட நீயே முறையிட்டு.... எந்தனுக்கு ஒரு பிறவியை படை!!!

எதை என்று அறிய அறிய பின் நல்லோர்களுக்கு ஏதாவது பின் எவை என்று கூட தீயவர்களால் பல கஷ்டங்கள். நல்லோர்களுக்கு எதையெதையோ செய்து விடுகின்றார்கள்!!

அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

அதனால் பின் அதனை கற்றுக் கொடுத்து மறுபிறவியில் அதை செய்ய வேண்டும் என்று எண்ணி நீ தானப்பா கேட்டாய் அப்பனே

யான் கொடுத்து விடுகிறேன் அப்பனே அனைத்தும் கொடுத்து விடுகின்றேன் அப்பனே

அவை மட்டும் இல்லாமல் உந்தனுக்கே சேவைகள் செய்ய வேண்டும் என்று

ஆனாலும் யான் கேட்டேன் அப்பனே இன்னும் அனைத்தும் வேண்டுமா ?? அப்பா ?? என்று

எதுவுமே தேவையில்லை என்று கோபத்தோடு நீ கூறிவிட்டாய் !!

ஆனாலும் யான் கொடுப்பேன் அப்பனே!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே அப்பனே யான் இருக்கின்றேன் அப்பனே!!!! 

என்று நல்லாசிகள் நல்வாக்குகள் தந்து ஆசீர்வாதம் செய்திருந்தார்.

குருநாதருடைய வாக்குகளில் கூறியுள்ளது போல் மக்களுடைய பிரச்சினைகள் தீர சில ஹோமங்கள் யாகங்கள் செய்து குறைகள் இதுபோன்று செய்து தீர்க்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார் குருநாதர்.

அதனால் அடியவர்கள் தங்களுடைய ஸ்தாபனத்தில் வீட்டில் சில ஹோமங்கள் யாகங்கள் பூஜைகள் செய்வதற்கு இவரை தொடர்பு கொண்டு இவர் மூலம் செய்து கொள்ளலாம்.

மக்கள் குறை தீர்க்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார் குருநாதர் அகத்திய பெருமான் அதன்படி பூஜைகள் சில குறிப்பிட்ட உதாரணத்திற்கு கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் மகா மிருதுஞ்ய ஹோமம் பகவதி சேவை மற்றும் சுப நிகழ்வுகள் சுப பூஜைகள் சுப ஆரம்ப நிகழ்வுகள் வீடு ஸ்தாபனம் வியாபார ஸ்தலம் என நீங்கள் செய்ய நினைக்கும் பூஜை நிகழ்வுகளை  அகத்தியர் அருளாசி பெற்ற இவரை கொண்டு செய்து கொள்ளலாம்.

சுமேஷ் திருமேனி சுமேஷ் போற்றி என அழைக்கப்படும் இவர் எளிமையானவர் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆடம்பரங்களோ வசதிகளோ இல்லை ஆத்மார்த்தமாக நம் குருநாதருக்கும் அன்னை லோப முத்திரைக்கும் சேவை செய்து கொண்டு வருபவர். இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஜென்மம் ஜென்மங்களாக குருநாதருடைய பக்கத்தில் இருந்தவர். தமிழ் அரைகுறையாக புரிந்தாலும் தெளிவாக அனைத்தையும் ஆத்மார்த்தமாக பவித்திரமாக செய்து கொடுப்பார்.

அடியவர்கள் இவரை தொடர்பு கொண்டு பேசி செய்து கொள்ளலாம்.

தொடர்பு எண்.
சுமேஷ் திருமேனி. 
9497866079.
இவருடன் ஆலயம் பூஜைகள் என உடன் வந்து முழுவதும் தமிழ் அறிந்த அகத்தியர் அடியவர் திரு கணபதி சுப்பிரமணி திருமேனி அவர்கள் எண் 9633422803

இந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசி செய்து கொள்ளலாம்.

நன்றிகள் நமஸ்காரங்கள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அகத்தீசாய நம 🙏🙇‍♂️

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete