​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 11 December 2023

சித்தன் அருள் - 1535 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி - 8


இறைவன் எப்பொழுது செய்ய வேண்டும் எதை என்றும் அறிய அறிய இன்று யான் சொல்கின்றேன் அனைவருக்குமே நல்ல செய்திகள். போதுமா?

(மகத்தான நிகழ்வு.  அங்கு வந்திருந்த அடியவர்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டியவற்றை அருளினார்கள் ஒரே வரியில். குருநாதா !!!! என்னே நின் கருணை!!! கருணைக்கடலே  போற்றி!!!!   போற்றி!!!!!! போற்றி!!!!!! இறைவன் அகத்தின் ஈசன் திருவடிகள் சரணம்! சரணம் !! சரணம் !!!! )

அடியவர்கள்:- ( மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர் ) ஓம் அகத்தீசாய நம!!!!!!!!!!!!
நமச்சிவாய!!!!!!!!!!!!!

குருநாதர்:- அதனால் யார் யாருக்கு என்ன குறை என்பதைக்கூட எங்களுக்குத் தெரியும். அதை யாங்கள் தீர்த்து வைப்போம். ஆனால் மனிதனால் முடியாது.

அப்பனே அனைவருமே அப்பனே ஒவ்வொன்றாகக் கேட்கத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே. ஆனால் அப்பனே தானம் தர்மம்தான் சிறந்தது என்பேன்.

அப்பனே (அடியவர் 17)  உன்னிடத்தில் நல்லவிதமாகவே இறைவன் உந்தனுக்கும் கொடுத்து, அனைவருக்குமே பின் மாற்றங்கள் உண்டு எளிதில் கூட. இதனால் எக்குறைகளும் கொள்ளத் தேவையில்லை. அவரவர் விருப்பப்படி நோய்களும் எதையும் கூற சரியாகவே திருமணம் ஆகாதவர்களுக்கும், தன் கஷ்ட சூழ்நிலை இருப்பவர்களுக்கும் யானும்  லோபாமுத்ராவும் உங்கள் மனதை ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அதனால் நீங்கள் கேட்கத் தேவையே இல்லை. யானே செய்வேன். நீங்கள் கேட்டுத்தான் பின் ஆசிகள் பெற வேண்டுமா என்ன? அதனால்தான் யானே முந்திக்கொண்டேன்.

நீங்கள் கேட்டுத்தான் பெற வேண்டும் என்றால் இறைவன் எதற்கு? யாராவது கூறுங்கள்?

அடியவர் 16:- எல்லாமே அவருக்குத் தெரியும். எல்லோர் மனதில் யார் எப்படி இருக்கின்றீர்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால யார் யாருக்கு எப்போது கொடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

குருநாதர்:- அம்மையே அப்பொழுது யான் கொடுக்கமாட்டேனா என்ன?

அடியவர் 16:- (குருநாதர்) கண்டிப்பாக கொடுப்பார்கள்.

குருநாதர்:- அம்மையே ஓடோடி வந்தாய் அம்மையே , கொடுத்து விடுகின்றேன் உந்தனுக்கு என்ன தேவையோ. அதே போலவே அனைவருக்கும் ஆனால் விதியில் சில மாற்றங்கள், தடுமாற்றங்கள், போராட்டங்கள் என்றெல்லாம்  இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் யான் மாற்றி என்று கூற கொடுக்கின்றேன். போதுமா அனைவருக்குமே?

அங்கு வந்த அடியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மிகவும் பாக்கியசாலிகள். தலை கீழாக நின்றாலும் பல ஜென்மங்கள் எடுத்தாலும் நடக்காத அதிசயம் அங்கே அமைதியாக யாருக்கும் உள் விளக்கம் புரியாமல் நடந்து முடிந்தது. அகத்தின் ஈசன் பாதத்தில் நிற்பது தங்கத்தில் நிற்பதற்குச் சமம் என்று முன்னர் மதுரை பசுமலை ஆலய நாடி வாக்கில் கூறி இருந்தார் குருநாதர்.

அந்த வாக்கினைக் கோவை அடியவர்களுக்கும், உலகெங்கும் உள்ள அகத்திய பிரம்ம ரிஷிகள் அடியவர்களுக்கும் மீண்டும் தருகின்றோம். அந்த தங்க வாக்கு:-

“முன்னேற்றப்பாதையில் யான் அழைத்துச்செல்கின்றேன். தைரியமாக இருங்கள். யானே இருக்கின்றேன்!!!!!. என்னிடத்தில் இருப்பது தங்கத்தில் நிற்பதற்கு சமம் என்பேன்!!!!!!!. அப்பொழுது (நீங்கள் தங்கத்தின் மேல் நின்றாலும்) பின் தங்கம் இருந்தாலும் ஆனால் உங்களுக்குப் புரியத் தெரியவில்லையே. ஆனால் அதற்கும் என் ஆசிகள் வேண்டும். ஆசிகள் கொடுத்து விட்டேன். சிறிது பொறுங்கள். அதையும் புரிந்துவிட்டு செல்லுங்கள் அப்பனே. நலன்கள் அம்மையே. அனைத்தும் கொடுக்கின்றேன் அனைவருக்குமே.”

இதனையே இந்த கோவை வாக்கு நேரில் கேட்ட அனைத்து அடியவர்களுக்கும் அறியத் தருகின்றோம்.

வாருங்கள் மீண்டும் கருணைக்கடலின் வாக்கின் உள் சென்று ஞான அமுதத்தை அருந்துவோம்…..)

குருநாதர்:- அதனால் எக் குறைகளும் கொள்ளத் தேவையில்லை. முதலில் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் கேட்கலாம். நாங்களும் மனிதர்கள் தான் என்று.

ஆதி ஈசனை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:-
 
உருவத்தில் இருந்தால் மட்டும் போதாது.
எப்போதும் நம் மனசில் இருக்க வேண்டும்.
எப்போதும் நம் எண்ணங்களில் இருக்க வேண்டும்.
எப்போதும் நம் செயலில் இருக்கவேண்டும்.

குருநாதர்:- அதனால் முதலில் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிந்து கொண்டால் உங்கள் பிறவியின் ரகசியத்தை  அனைவருக்குமே சொல்கிறேன் எதை என்றும் அரிய ரகசியத்தைச் சொல்லி நீங்கள் என்ன ஏது என்று கூற இவ்வுலகத்திற்கு எதற்காக வந்துள்ளீர்கள் என்பதையெல்லாம், அதைத் தெரிந்து கொள்ளாமல் நீங்கள் எதுவும் செய்ய இயலாது. தன்னைப் பற்றி உணர வேண்டும் முதலில். ஏன் எதற்காகப் பிறந்தோம் என்று எவனொருவன் பின் உணருகின்றானோ, அவனுக்கு அனைத்துமே கிடைக்குமாம். ஆனால் அதை உணர்வதே இல்லை.  பின் அதனை உணராவிடில் பின் என்ன தந்தாலும் வீணே.

அடியவர் 16:- அய்யா என் மனசில் ஒன்று இருக்கின்றது. எங்கள் கிராம தேவதைக்கு என்ன உபகாரம் செய்ய வேண்டும் என்று கூற வேண்டும்.

குருநாதர்:- அம்மையே  கடமையைச் செய். அவ்வளவுதான்.  மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கிறேன்.

அடியவர் 26:- அஞ்சு மாதமாக ( பூசைகள் ) எதுவும் செய்யவில்லை. அய்யா சொல்கின்றேன் என்று சொன்னார்கள். அதான் கேட்கின்றேன்.

குருநாதர்:- அம்மையே இப்பொழுதெல்லாம் அனைவருக்கும் என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அம்மையே?

அடியவர் 16:- கடமையைச்செய் என்று கூறினார்கள்.

குருநாதர்:- அம்மையே அனைத்தும் செய்கின்றேன் என்றால் என்ன அர்த்தம்?

அடியவர் 16:- அவரவர் கடமையை அவரவர் செய்யுங்கள். நான் உங்களுக்கு எல்லாமே செய்கின்றேன்.

குருநாதர்:- அம்மையே அதனால்தான்  (உன்னை) செய்யச் சொன்னேன். யான் செய்கிறேன் என்று சொல்லி விட்டேன் அம்மையே.  செய்தும் விட்டேன் அம்மையே.  அவள் (கிராம தேவதை ,  கிராமத்தின் ஆலயத்தின்) உள்ளேயும் வந்து விட்டாள். நல்லதே நடக்கும்.

அடியவர் 16:- சரிங்க அய்யா.

(இங்கு அடியவர்கள் ஒன்றைக்கவனிக்க வேண்டும். இந்த வாக்கு சில நொடிகளே. இந்த குறுகிய நேரத்தில் இறைவன் குருநாதர் அவர்கள் இந்த 16ஆம் அடியவர்களின் கிராம தேவதையிடம் சொல்ல (அருள் ஆனையிட) உடனே அவர்கள் கிராம தேவதை அவர்கள் கிராமத்தில் நொடிப்பொழுதில் அங்கு வந்து அருள் புரிய ஆரம்பித்து விட்டார்கள். கருணைக்கடல் இறைவன் குருநாதர் இனிமேல் அவர்கள் கிராமத்தில் பல நல்ல நிகழ்வுகள் அந்த கிராம தேவதையால் நடக்கும் என்று அருளினார்கள். இது ஒரு மகத்தான நிகழ்வு இந்த கோவை வாக்கின் இடையில் நடந்தேறியது. அனைவருக்கும் பொது நன்மை உண்டாக்கும் என்றால் அது உடனே நடக்க இறைவன் குருநாதர் அருளுவார் என்பதற்கு மிகச்சிறந்த நிகழ்வை. இதுபோல் நாம அனைவரும் அறியாமல் பல நிகழ்வுகள் உலகெங்கும் ஆதி குருநாதரால் நடந்து கொண்டே உள்ளது. குருவே சரணம்!!!!!! எம்மை ஆட் கொண்ட மாமுனியே சரணம்!!!!! )

குருநாதர்:- அப்பனே அனைவரிடத்திலும் கேள்வி கேள் அப்பனே நீயே?

அடியவர் 17:- அய்யா, யார் யாருக்கு என்ன என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள் அய்யா.

( நீண்ட அமைதிக்குப் பின்னர்…)

ஆதி ஈசனை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:- யாருக்குமே எந்த குறையும் இல்லை. எல்லோரும் நன்றாக…

அடியவர் 7:- யார் யாருக்கு என்ன என்ன பிரச்சுனை உள்ளதோ, அதை தீர்த்து வைக்கின்றேன் என்று சொல்லி விட்டார். பின் கேட்பதற்கு என்ன இருக்கின்றது சாமி?

குருநாதர்:- அப்பனே இது சரியா? உன்னை யார் வாய் திறக்கச் சொன்னது?

அடியவர்கள் :- ( சிரிப்பு அலை )

அடியவர் 18:- என் பெற்றோர்களுக்கு அய்யா ஆசிர்வாதம் வேண்டுகின்றேன்.

அடியவர் 17:- ஐயா அவர்கள் பெற்றோர்களுக்கு ஆசிர்வாதம் வேண்டும்.

குருநாதர்:- அப்பனே இதுவரை யான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் அப்பனே? நீ கூறு?

அடியவர் 17 :- எல்லோருக்கும் ஆசிகள் உண்டு. என்ன என்ன தேவையோ அதைப் பாரத்து செய்கின்றேன் என்று அய்யா சொல்லிவிட்டார்.

குருநாதர்:- வந்து விட்டீர்கள். ஆனால் மரண தண்டனை ஒருவனுக்கு நெருங்கிக் கொண்டே வருகின்றது. அதையும் மாற்றி விடப் போகிறேன். அவ்வளவுதான்.

( இந்த வாக்கு சொல்லி முடித்த மறு நொடியே அங்கு ஒரு மணிச் சத்தம் தொடர்ந்து கேட்டது)

(இந்த மரண தண்டனையை நீக்கிய முழு ஆச்சரிய அற்புத திருவிளையாடலை பின் வரும் மதுரை வாக்கு இனைப்பில் படித்து குருநாதர் பாதங்களைச் சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள்

https://siththanarul.blogspot.com/2023/11/1509-04092023-21.html?m=1

படித்து மகிழ்ந்தீர்களா அடியவர்களே…நன்று…வாருங்கள் ..மீண்டும் கோவை வாக்கின் உள் செல்வோம்….)

குருநாதர்:- அதனால் தான் யான் எதுவுமே சொல்லவில்லை. என்னை நினைத்து வந்து இருக்கின்றீர்கள் நீங்கள். அதனால் உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதைக் கூட பின் யான் சொல்லவில்லை என்றால் யான் அகத்தியனே இல்லை. நீங்கள் கேட்டுத்தான் யான் பதில் அளிக்க வேண்டுமா என்ன?

( அடியவர்கள் உரையாடல்கள்)

குருநாதர்:- இதனால் அனைவருக்குமே ஒரே பதில் தான். யான் அனைத்தும் செய்கின்றேன். குற்றங்கள் எவை என்று கூற மனக் குழப்பங்கள் இன்னும் இன்னும் ஏங்கிக் கொண்டேதான் இருக்கின்றது ஒவ்வொரு மனதிலும் கூட.

ஆனாலும் அவையெல்லாம் ஆராய்ந்தேன். பொறுமையாக எதையும் அறிய விதியில் கூட இருக்கின்றது. அவை எல்லாம் நான் மாற்றி அமைக்கின்றேன்.  ஆனாலும் மாற்றி அமைப்பதற்கும் என்னால் முடியும்.

ஆனாலும் யார் என்று கூற (விதியை மாற்றும்) அப்பதவி இருக்கிறதோ , (பிரம்ம தேவன்) அவனிடத்தில் போய் சென்றால் பின் கேட்டால்தான் எந்தனுக்கும் மதிப்பு. அதனால் நீங்கள் புண்ணியம் செய்யுங்கள். அப்புண்ணியத்தைப் பற்றி எடுத்து பிரம்மாவிடம் கூறி அனைத்தும் மாற்றி வைக்கின்றேன். ஆனால் புண்ணியம் செய்யவில்லை என்றால் நிச்சயம் யானும் மௌனம் காத்து இரண்டு அடிகள் கொடுத்து பின் புண்ணியத்தைச் செய்ய வைக்க வேண்டும்.  அவ்வளவுதான்.

அதனால் நன்மையோ தீமையோ அகத்தியன் இருக்கிறான் என்று என்மேல் பழி இடுங்கள். யான் பார்த்துக்கொள்கிறேன்.

அதனால்தான் அனைவருக்குமே இவ் வாக்குகள் சொல்லிவிட்டேன்.

( அடியவர்களே, இந்த கோவை வாக்கு உலகில் உள்ள அனைத்து அடியவர்களுக்கும் பொது வாக்காக மலர்ந்து உள்ளது. அனைவரும் புண்ணியம் செய்யுங்கள். புண்ணியம் செய்யச் செய்ய குருநாதர் அருளால் தானாக விதி மாற்றம் அடைந்து உயர் நல்வாழ்வு உண்டாகும். இந்த வாக்கு படித்த பின் அனுதினமும் புண்ணியம் செய்வதே உங்கள் மூச்சாக இருக்கட்டும். )

குருநாதர்:- இன்னும் வாக்குகள் வேண்டுமா? அப்பனே கேள்.

அடியவர் 17:- அம்மா, ஐயா, இன்னும் யாருக்கும் வாக்குகள் வேண்டுமா?

அடியவர்கள் :- ( அமைதி ) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete