6/1/2025 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்.அர்கா குபாலா. இந்தோனேஷியா.
ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!!
அப்பனே ரகசியத்தை இப்பொழுது சொல்லப் போகின்றேன் அப்பனே நலன்களாகவே.
அப்பனே ஒரு பெரிய கிராமம் அப்பனே இங்கு உண்டு அப்பனே
அப்பனே இதை தன் நிச்சயம் அப்பனே அதாவது பின்.. யான் நன்மைக்காக இவ்வுலகத்தின் நன்மைக்காக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே இவை தன் உணர்ந்தேன் அப்பனே.
பின் அதாவது இன்னும் இரு வருடம் தான் பின் மிஞ்சி காணப்படுகின்றது.
இதனால் பின் நிச்சயம் அனைத்தும் கூட அப்பனே பின் எதை என்று யான் கூற!!!.... அப்பனே
இதனால் அப்பனே அறிந்தும் கூட.. பின் இவர்கள் எல்லாம் அழிவார்கள் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே.
ஆனால் நிச்சயம் சில விஷயங்களை கூட யான் பின் மறைத்து சொல்ல வேண்டிய சூழ்நிலை.
அப்பனே ஏனென்றால் அப்பனே அவையும் கூட சாபமாக போய்விடும்...
குருநாதர் இன்றைய சூழ்நிலை வாக்கு
அதனால் தான் அப்பனே நிச்சயம் அதிக பேர் அப்பனே பின் ஏன் எதற்கு சரியாக விடை அறிந்தும் கூட...!!!
(குருநாதர் அடியவர்களுக்கு வாக்குகள் தரும்பொழுது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யான் பார்த்துக் கொள்கின்றேன்!!! யான் பார்த்துக் கொள்கின்றேன்... என்று கூறுவதன் முழு அர்த்தம் புரியாமல் குருநாதர் சரியான விடையை கூற மறுக்கின்றாரே... என்ற எண்ணங்கள் இருக்கின்றது அதற்கு குருநாதர் கூறிய விளக்கங்கள்)
அப்பனே ஏனென்றால் அதை சொல்லி அப்பனே யான் பார்த்துக் கொள்கின்றேன் என்றால்? அப்பனே!!!! பெரிய விஷயங்கள் அப்பனே பின் நிற்கின்றது என்பேன் அப்பனே (பெரிய விஷயங்கள் என்றால் கர்மாக்கள் பாவங்கள்)
அதாவது விதி தனில் கூட அப்பனே பெரிய பாவங்கள் நிற்கின்றது.
இதனால்தான் அப்பனே அவையெல்லாம் எப்படி? நீக்க வேண்டும்?? ஏது பின் எப்படி? பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் யான் அறிந்து தான் செய்வேன் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே நிச்சயம் பின்.... ஆனால் மனிதர்களோ பின் அவை இவை என்று அதற்குள்ளே அப்பனே!!! நிச்சயம் பின் சென்று அப்பனே தோல்வியை சந்தித்து மீண்டும் வந்து அப்பனே பின் அனைத்தும் இழந்து பின் என்னிடத்தில் வருகின்றார்கள் அப்பனே.
(குருநாதர் பொறுத்திரு!! யான் பார்த்துக் கொள்கின்றேன் என்பதை முழுமையாக உணராமல் அங்கு அதைச் சொல்கின்றார்கள் இங்கு இதைச் சொல்கின்றார்கள் அதை பின்பற்றி பல பரிகாரங்கள் செய்து அது தோல்வியில் முடிந்து அதன் மூலம் கர்மாக்களை சம்பாதித்து மீண்டும் குருநாதரிடம் வருகின்றார்கள் இதை தனிநபர் வாக்குகளில் பல பேருக்கு சில தேவையற்ற இடங்களுக்கெல்லாம் சென்று தேவையில்லாத பரிகாரங்களை எல்லாம் செய்ததால் மேலும் கர்மாக்கள் அதிகரித்து விட்டது என்று கூறி இருக்கின்றார் அதன் அடிப்படையில் இங்கு இந்த விளக்கம்)
இதனால் அப்பனே என்ன பயன்?????
அகத்தியன் பார்த்துக் கொள்கின்றேன் என்றால்..
.(குருநாதர் பக்தர்களுக்கு உரைக்கும் வாக்கில் அப்பனே நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று உரைப்பது)
அப்பனே அகத்தியன் பார்த்துக் கொள்வான் என்ற அப்பனே நம்பிக்கை வர வேண்டும் என்பேன் அப்பனே..
இந்தோனேஷியா தேசத்தில் ஏற்கனவே குருநாதர் வந்த பொழுது நடந்த சம்பவம்
அப்பனே இதனால் அப்பனே இங்கு வந்து விட்டேன்... அப்பனே இங்கு அனைவருக்கும் போதனைகள் இட்டேன் அப்பனே.
இவ்வாறு இருந்தால் நன்மை!!!
இதனால் பின் உங்கள் குழந்தைகளோடு வாழலாம் என்றெல்லாம்.. அப்பனே
ஆனாலும் அப்பனே யாரும் கேட்கவில்லையப்பா!!
ஆனாலும் நிச்சயம் வந்து விட்டான் இவன்...(அகத்தியரை பார்த்து)
இவந்தனுக்கு என்ன தெரியும் ??
என்றெல்லாம் சிலர்.
பின் சிலர் இவன் சொல்வதெல்லாம் பொய்...
பின் அறிந்தும் கூட இன்னொருவன் கூட இப்படி எல்லாம் அதாவது இவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட. !!!
குருநாதர் இன்றைய சூழ்நிலையில் வாக்கு
அதனால்தான் அப்பனே ஒவ்வொன்றாக உங்களுக்கு பக்குவப்படுத்தி எது உண்மை?? எது பொய்?? என்பதையெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே சரியாகவே பக்குவங்கள் பட்டுவிட்டால்... அப்பனே அனைத்தும் நீங்களே வெல்வீர்களாக!!!
இதனால் அப்பனே அனைவரையும் கூட இங்கு இருப்பவர்கள் (இந்தோனேசியாவில் குருநாதர் ஏற்கனவே முன்பு வந்து அவர்களை நல்வழிப்படுத்த அதாவது அழிவை முன்கூட்டியே அறிந்து நல்வழிப்படுத்த) அதாவது அழிவு நிலைக்கு செல்கின்ற பொழுது யான் சொல்லியதை இங்கிருந்தே இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே !!
அந்த சமயத்தில் இந்தோனேசியாவில் உள்ள அந்த மக்களுக்கு குருநாதர் கூறிய உபதேசம்
அனைவருமே தியானத்தில் சரியாகவே அமர்ந்து பின் மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். வெளியிட வேண்டும். என்பதையெல்லாம் அப்பனே சொன்னேன் அப்பனே.
ஏன் இதற்கும் அப்பனே பின் கிரகங்களுக்கும் சம்பந்தங்கள் உண்டப்பா.
அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே சரியாகவே அப்பனே ஆபத்து காலத்தில் அமைதியாகவே பின் உட்கார்ந்து விட்டால்.. அப்பனே நிச்சயம் அறிந்தும் பின் எதை என்று புரிந்தும்.. நிலைமைகள் கூட அப்பனே அனைத்தும் மாறி விடுமப்பா.
இதனால் பின் சில மாதங்கள் அமைதியாக தியானங்கள் செய்யுங்கள் என்று சொன்னேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் பின் நிச்சயம் பின் அவரவர் குலதெய்வத்தை எல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே சில ரகசியங்கள் பின் சொன்னேன் அப்பனே.
ஆனாலும் யாரும் அதை பொருட்படுத்தவில்லை அப்பா.
ஆனாலும் நிச்சயம் அப்பனே.. ஈசன் என்னிடத்தில் முறையிட்டு விட்டான்.
அகத்தியனே!!!! அழிவுகளை ஏற்ப்படுத்த போகின்றேன்!!!
உன்னால் முடிந்தால் தடுத்துக்கொள் என்று!! பின் அழகாகவே.
ஆனாலும் நிச்சயம் பின் வந்து விட்டேன் அப்பனே..
குருநாதர் இன்றைய சூழ்நிலை வாக்கு
இது போன்று தான் அப்பனே மக்கள் இக்கலி யுகத்தில் அப்பனே... நல்லதை சொன்னால் பின் நம்ப மாட்டார்கள் என்பேன் அப்பனே.
தீயவை சொன்னால் நம்பி விடுவார்கள் என்பேன் அப்பனே.
அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் முதலில் அப்பனே நிச்சயம் அதாவது மாமிசத்தை உட்கொள்ளாதீர்கள்.. இதை நிச்சயம் நீங்கள் உட்கொள்ளாமல் இருந்தாலே.. நீங்கள் காக்கப்படுவீர்கள் என்று. (பிழைத்துக் கொள்வீர்கள் என்று)
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!!
அப்பனே பின் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் கூட அப்பனே.. அதாவது ஒவ்வொரு அறிந்தும் கூட அப்பனே பல வகைகள் அப்பனே பின் அதாவது இன்னும் ஆடுகள் அப்பனே பசுமாடுகள் இன்னும் அப்பனே பின் பல ஜீவராசிகள் உள்ளது என்பேன் அப்பனே.
அப்பனே அதற்கு தெரியும் அப்பா... ஒவ்வொரு விதத்திலும் கூட பின் ஒவ்வொரு சக்தி இருக்கின்றது... அதை உட்கொள்ளும் என்பேன் அப்பனே.. நிச்சயம் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அதனால்... பலமான உணவுகளை தான் அவை உட்கொள்ளும் என்பேன் அப்பனே.
அப்படி உட்கொள்ளும் பொழுது அப்பனே பின் அதனை மனிதன் தின்றால் அப்பனே நிச்சயம் பின் பலமாக உள்ளே மோதல் ஏற்படுமப்பா..
ஆனாலும் பின் பல வாக்குகளிலும் செப்பி விட்டேன் அப்பனே நிச்சயம் அதை தன் கிரகங்கள் கூட அப்பனே!!...
(பஞ்சவடி வாக்கு பாகம் 2 சித்தன் அருள் 1225
சித்தன் அருள் 16 42 மீர்காட் காசிவாக்கு
சித்தன் அருள் 1662 முன்னேஸ்வரம் வாக்கு
இவ் வாக்குகளில் எல்லாம் அசைவம் உண்டால் அந்த ஜீவராசிகளின் அணுக்கள் மனித உடலுக்குள் இருக்கும் அணுக்களோடு சேராமல் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்பதை புழுக்கள் உருவாகும் என்பதை ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார் அனைவரும் மீண்டும் படித்து உணர்ந்து கொள்ளவும்)
அப்பனே பின் அதி வேகமாக இங்கே அப்பனே பின் அதை இயக்குமப்பா!!
இவ்வாறு இயக்குகின்ற பொழுது கோபங்கள் காமங்கள் அப்பனே இன்னும் தீய எண்ணங்கள் எல்லாம் பின் மனதில் உதித்து விடுமப்பா
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அவை மட்டுமில்லாமல் பின் அதாவது நீ பக்கத்தில் உள்ளாயா... உன் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அப்பனே சரியான இயக்கத்தில் இயங்க விடாமல் அது வேகமாக இயங்கி கொண்டிருக்கும் என்பேன் அப்பனே.
இதனால் அவந்தனுக்கும் அக் கர்மா என்பேன் அப்பனே...
(ஒருவர் அசைவம் உண்ணுகின்றவர் அருகாமையில் இருந்தாலும் அவருடைய இயக்கங்கள் மற்றவரையும் தாக்கும் கர்மாக்கள் ஏற்படும்)
அதனால்தான் அப்பனே நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய அப்பனே
கெடு!!... நீ மட்டும் கெடு!!
அப்பனே மற்றவர்களை கெடுக்காதே!!!... அறிந்தும் எதை என்று புரிய!!!
அதாவது அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் தான் இங்கு சொல்லிக் கொண்டிருந்தேன்..(இந்தோனேஷியாவில் முன்பு குருநாதர்)
கெடு... மற்றவரை கெடுத்து பின் சாய்க்காதே!! என்றெல்லாம்!!
ஆனாலும் அனைத்தும் என்னால் முடியும் அப்பா... அறிந்தும் கூட!!
எதை என்று கூட இதனால் அப்பனே
ஒருவனை திட்டினேன். (அந்த ஊரில் இருந்த குருநாதர் பேச்சை மதிக்காமல் இருந்த ஒருவனை)
நீ மட்டும் பின் சொன்னால் கேட்க மாட்டேன் என்கின்றாய் அதனால் பின் நிச்சயம் நீ மட்டும் விலகிவிடு!!!! என்றெல்லாம்... ஆனாலும் அவனும் கூட நிச்சயம்... எங்கள் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் கூட அனைவரும் சொந்தக்காரர்கள் தான்.
இதனால் நிச்சயம் இவை எல்லாம் ஏற்கப் போவதில்லை என்று!!
ஆனாலும் நிச்சயம் பின் ஆடு மாடுகள் பின் அனைத்தையும் வெட்டுவோம் பார்ப்போம் என்று!!...
பின் அதாவது அப்பனே வந்தது கோபம்!!!...
ஆனாலும் பின் ஈசனோ பின்.... அகத்தியனே!!! பொறுத்திரு!!!
பின் இதற்கெல்லாம் விடை நிச்சயம் அறிந்தும் கூட!!! இதனால் தான் இவையெல்லாம் வரும் காலத்தில் இங்கு உள்ளோர்கள் திருந்துவார்கள் என்றெல்லாம்.
பின் யானும் நிச்சயம் சிவபெருமானே!!!! நிச்சயம் அறிந்தும் கூட பின் பொறுத்திரு!!!...
ஏன் எதை என்று கூட பல கோடி அறிந்தும் கூட இவ்வுலகத்தில் மக்கள் இருக்கின்றார்கள்... ஏன் இங்கெல்லாம் விளையாடுகின்றாய்... என்பதையெல்லாம்!!
ஈசன் !!!
நிச்சயம்.. பின் எங்கெல்லாம் நிச்சயம் அதிகம் என்னுடைய வாகனமான பசு மாடுகளை கொன்று குவித்து வருகின்றார்களோ... அங்கெல்லாம் நிச்சயம் உண்மை இருக்காது... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் அறிந்தும் கூட பின் எவ்வளவு படிப்புக்கள் படித்தாலும் அவன்... ஞானம் உள்ளவனாக இருக்க மாட்டான்.
அவை மட்டுமில்லாமல் பின் எவ்வளவு பின் அறிவுகள் இருந்தாலும் இழி (கீழான )செயல்களை கூட பின் செய்து கொண்டிருப்பான்... என்பவையெல்லாம் அப்பனே... ஈசனே!!!
இதனால் தான் அப்பனே ஆனால் பின் ஈசன் சொல்லிவிட்டான்.
ஆனாலும் சில நேரத்தில் கூட நன்மைகளாக. செய்வேன் விட்டுவிடுவேன் பிழைத்துக் கொள் என்று..(ஈசன் சில நேரங்களில் கருணையோடு விட்டு விடுகின்றார்)
ஆனாலும் அதே போல் செய்து கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது ஈசன் சொன்னான் ஒரு வார்த்தை!!!!
அறிந்தும் எதை என்று புரியப் புரிய பின் அகத்திய மாமுனிவரே!!!!
நிச்சயம் அறிந்தும் கூட பின் படைத்தவனுக்கு தெரியாதா??? நிச்சயம் அறிந்தும் கூட பின் எப்பொழுது படைப்பது??? எப்பொழுது அழிப்பது??... என்று.
ஒழுங்காகத்தான் படைத்தேன்... இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று!!
நிச்சயம் ஆனால் மீண்டும் யான் அப்பனே நன்மைகளையே சொன்னேன் மனிதனுக்கு.
ஆனாலும் இதில் கூட ஒருவன் அவை பொய் இதையெல்லாம் செய்து விடாதே... என்றெல்லாம் அப்பனே...(குருநாதர் செய்த உபதேசங்களை எல்லாம் பொய் என்று)
குருநாதர் தற்போதைய சூழ்நிலையில் கூறிய வாக்கு
இதனால்தான் அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் கூட அப்பனே...... ஆனாலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே...
ஒருவன் இருக்கின்றான் அப்பா... அவன் அதாவது அவனுக்கு நல்லதை பின் சொன்னேன் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே....
ஆனால் அவன் இவையெல்லாம் நம்பக்கூடாது பொய் என்று அப்பனே...
இப்படி இருந்தால் எப்படியப்பா உலகம் திருந்துமப்பா???
அப்பனே அறிந்தும் கூட இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் அப்பனே நல்லதை சொன்னால்... பின் எதை என்று அறிய அறிய அப்பனே.... யார் வேண்டுமானாலும் எதை என்று கூட நல்லதை சொல்லலாம் என்பேன் அப்பனே.
அப்பொழுதெல்லாம் அப்பனே உயர்ந்தவர்கள் நல்லதை சொன்னார்கள் அப்பனே அறிந்தும் கூட பின் உயர்ந்தவர்கள் சொன்னால் கேட்க வேண்டும்.
ஆனால் பின் அப்பனே தீயவைகளை எல்லாம் செப்பி விட்டு சென்று விட்டார்களப்பா!!
அதேபோலத்தான் இக்கலி யுகத்தில் கூட யாங்கள் நிச்சயம் தர்மம் ஏந்துபவர்களாக நிச்சயம் அப்பனே ஏதும் இல்லாமல் அப்பனே கிழிந்த சட்டைகளோடு அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய... பின் அறிந்தும் கூட அதாவது நீராடாமல் கூட பின் நிச்சயம் வருவோம் அப்பனே.... சில கர்மங்களை கூட எடுத்துச் சென்று கொண்டே இருக்கின்றோம் அப்பனே
இன்னும் அப்பனே இப்படித்தான் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் எவை என்று அறிய அறிய ஒரு பெண்மணிக்கும் கூட அழகாக காட்சியளித்து அப்பனே தந்தேன்.
சில சில பாவங்களைக் கூட நிச்சயம் யான் இருக்கின்றேன் யான் இருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.
ஆனாலும் அவள் கேட்கவில்லை... அதனால் உண்மையில் சென்று நிச்சயம் அவளிடத்தில் பின் தேநீர் அருந்திவிட்டு அப்பனே சென்று விட்டேன் சில கர்மாக்களையும் கூட எடுத்து சென்று விட்டேன் அப்பனே.
இந்தோனேஷியாவில் முன்பு குருநாதர் வந்து அவர்களுக்கு செய்த உபதேசம்
எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் இங்கே பல மனிதர்களுக்கு கூட இவ்வாறு உரைத்தேன் அப்பனே.
ஆனாலும் எவரும் நம்பவில்லையப்பா!!
இதனால் அப்பனே நிச்சயம் எதை என்று கூட!!!
பின் இவன் சொல்கின்றான்...(அகத்தியர்)
இவன் சொன்னால் நாம் கேட்க வேண்டுமா????? என்று நிச்சயம் பின் அனைத்து ஜீவராசிகளையும் கொன்று குவியுங்கள் என்று
ஆனாலும் பின் அனைவரும் கொன்று குவித்து ஒரு ஆட்டமே... பின் இட்டிட்டு...
பின் வேண்டாம் என்று சொன்னேன் அப்பனே..!!!
நிச்சயம் பின் ஆடி பாடி அப்பனே பின் அனைத்தையும் கூட கொன்று விட்டு இவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
ஈசனுக்கு உடனடியாக கோபம் வந்தது... அனைத்தையும் அழித்து விட்டான் அப்பனே.
அப்பனே புரிகின்றதா???
அப்பனே அதனால்தான் மீண்டும் இத் தேசம் அழிந்து கொண்டே செல்கின்றது.
அதனால்தான் அப்பனே அங்கங்கு நிச்சயம் அப்பனே பின் என்னுடைய எவை என்று அறிய அறிய அப்பனே சிலைகளை ஏற்படுத்தி அப்பனே நல்வழிப்படுத்த போகின்றேன் அப்பனே
நிச்சயம் மாறும் அப்பா..
அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் யான் காத்திட அதாவது எந்தனுக்கும்( சக்திகள் உண்டு)எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய!!!
அப்பனே பல வழிகளில் கூட அப்பனே ஈசன் எவை என்று புரிய சொல்லிக் கொண்டே இருப்பான்...
இவ்வாறு அழிக்கப் போகின்றேன்!!!.. அவ்வாறு அழிக்கப் போகின்றேன்.. என்று!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஆனாலும் என்னாலும் காக்க முடியும் நிச்சயம் இவ் உலகத்தை அப்பனே எதை என்று புரிய புரிய.
ஆனால் அப்பனே மனிதனால் தான் அப்பனே!!! (அழிவுகள்)
ஆனாலும் பின் நல்வழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றேன் யான்!!!
ஆனாலும் கேட்கவில்லையே... என்று அறிந்தும் கூட!
இதனால்தான் அப்பனே இன்றளவும் கூட அப்பனே ஏங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... பல பரிசுத்தர்கள்!!!
அப்பனே மீண்டும் அவர்களுக்கு அப்பனே பின் ஆன்மாக்களுக்கு (பரிசுத்த ஆன்மாகளுக்கு) அப்பனே பின் முக்தியும் அப்பனே எவை என்று அறிய அறிய பின் புண்ணியத்தையும் கொடுத்து... மீண்டும் இங்கே எல்லாம் பிறப்பெடுத்து உள்ளார்கள் அப்பா.
இதனால் அப்பனே அவர்கள் எல்லாம் அப்பனே எவை என்று கூட தீய வழிகளில் செல்வோரை எல்லாம் நல்வழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே எவை என்று புரிந்தும் கூட இன்னும் அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே.
அதனால் தான் அப்பனே நிச்சயம் எவை என்று புரிய அப்பனே.. நல் மாற்றங்கள் அப்பனே இன்னும் அப்பனே.. அங்கங்கு அப்பனே நிச்சயம் யானே வந்து அப்பனே தவக்கோலத்தில் அமர்வேன்... அப்பனே அப்படியே கல்லாக மாறிவிட்டு அப்பனே.. பின் சக்திகளை விட்டுவிட்டு சென்று விடுவேன் அப்பனே.
வணங்கினால் நன்று!!!
அதாவது அப்பனே வணங்கச் சொல்லவில்லை... எதை என்று கூட அதாவது பின் என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டாலே கர்மா நீங்கிவிடும் என்று!!! யான் அமர்ந்து எவை என்று கூட கல்லாகவே!!!
சிலர் அப்பனே பிடித்தனர்!!!... தப்பித்துக் கொண்டனர் என்பேன் அப்பனே... சிலர் பிடிக்காததால் அப்பனே வேதனை அடைந்து அப்பனே... எதை என்று கூட இப்பொழுது கூட எதை என்று அறிய அறிய!!.....
இதனால் தான் அப்பனே நன் முறைகளாக அப்பனே நிச்சயம் எவை என்று கூட... இன்னும் நோய்களும் அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அழிவுகள்.. கூட பின் விபத்துக்குள்ளாவதும் கூட நிச்சயம் அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் அதாவது....
மனிதன் சொல்வதை !!!??????!
அப்பனே.... அதாவது ஈசன் கோபம் கொண்டிருந்தான்!...
(மனிதர்கள் சொல்வது) பின் நீ சொல்வது நடந்து விடுமா? என்று!!
நிச்சயம் அப்பனே அடுத்த வகையில் ஏதோ வகையில் அப்பனே பின் எவை என்று கூட அப்பனே செய்கின்றான் அப்பனே.
அதனால் அப்பனே... பின் மனிதர்கள் அப்பனே இன்னும் அவை இவை என்றெல்லாம் நடக்கும் என்று அப்பனே இதெல்லாம் பொய் என்பேன் அப்பனே.
நிச்சயம் மனிதனால் அப்பனே பின் எதை என்று கூட எதையும் கணிக்க முடியாதப்பா!!! அனைத்தும் பொய் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே ஒவ்வொரு விஷயத்திலும் இன்னும் குறிப்பாக அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே மாற்றம் ஏற்படுவது உறுதி!!
ஆனாலும் அப்பனே... நிச்சயம் அப்பனே அழிவுகள் வருவதும் உறுதி.
ஆனாலும் அப்பனே நீங்கள் என்ன எதை என்று புரிய.. அப்பனே எதை என்று அறிய அறிய... நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அப்பனே.. நல் முறையாகவே நல்மனதாகவே பின் செயல்பட்டுக் கொண்டிருந்தாலே அப்பனே பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பேன் அப்பனே.
எவை என்று அறிய அறிய கவலைகள் இல்லை.. அப்பனே.
நிச்சயம் அப்பனே யானும் எவை என்று புரிய அப்பனே எதை என்று அறிய இங்கெல்லாம் மக்களை பின் பண்படுத்தி அப்பனே எப்படி எல்லாம் சிறப்புக்கள்.. இறைவனிடத்தில் பின் எவை என்று.. கூறி காக்க வேண்டுமோ...... அப்பனே அவ்வாறெல்லாம் நிச்சயம் உங்களை காத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. நிச்சயம் அப்பனே.
அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே நல்லதையே கேளுங்கள்!!! அப்பனே பின் அதாவது பின் அதாவது நல்லதை கேளாமல் இருந்தாலும் அப்பனே காதுகளில் நோய்கள் வந்துவிடும் அப்பா...
அப்பனே நன்றாகவே நல்லதையே முகர வேண்டும் மூக்கின் வழியே அப்பனே.
அவ்வாறு முகரவில்லை என்றால் அப்பனே பின் மூக்கும் எதை என்று அறிய அறிய அதன் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும் அப்பா.
அப்பனே நல்லதையே காண வேண்டும் அப்பனே கண்களால் எதை என்று அறிய அறிய இவைகள் எல்லாம்.. சொல்லிவிட்டார்கள் அப்பனே..
மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே அவ்வாறே காணாவிட்டால் அவ்வாறே பின் எவை என்று.. அறிய அறிய கண்களில் நோய்கள் வரும் அப்பா. அப்பனே பற்கள் பின் அதாவது நல்லதையே பின் எவை என்று அறிய அறிய பொய்கள் சொல்லக்கூடாது என்பேன் அப்பனே... அவ்வாறு அதற்கு மாறாக சொன்னால் அப்பனே.. பற்களும் கூட விழுந்து விடும் என்பேன் அப்பனே... வயதான காலத்தில் உண்ணவும் முடியாது என்பேன் அப்பனே.
நிச்சயம் இதே போல தான் அப்பனே அழகாக திருத்தலங்களை நோக்கி காலடி வைக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் அப்பனே கால்களில் நோய்கள் அப்பனே!!
இறைவனை அப்பனே துதித்து பாட வேண்டும் அனுதினமும்... படைத்தவனையும் கூட பின் கையெடுத்து வணங்க வேண்டும் அப்பனே இறைவனை கூட எதை என்று அறிய அறிய!!
அதனால் தான் அப்பனே அதாவது... நன்றி அதாவது அப்பனே பின் எதை என்று அறிய... எதை என்று கூட !!!
இறைவனை யாரும் வணங்கச் சொல்லவில்லை அப்பனே !!! அதாவது நன்றி கூற வேண்டும் !!
நிச்சயம் இறைவா நன்றாக படைத்தாய்!!! என்று!!!
என்று அப்பனே நிச்சயம் அப்பனே நன்றாகத் தான் அனைவரையும் படைத்திருக்கின்றான்... ஆனாலும் அப்பனே மனிதன் நிலைப்பாடு !! நிலைப்பாட்டிற்கு மாறாகவே எவை என்று தோன்றி அப்பனே எவை என்று அறிய அறிய அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது அப்பனே!!!
அதனால் இரு கரம் கூப்பி அப்பனே நன்றி செலுத்துதல் வேண்டும் என்பேன் அப்பனே.
அவ்வாறு நன்றி செலுத்தாத கைகள் அப்பனே இருந்தும் பயனில்லை... கால்கள் பின் நல்லதை நோக்கி செல்ல.. அப்பனே பின் இயலாமல் அவ்வாறு கால்கள் இருந்தும் பயனில்லை... அப்பனே எவை என்று கூட அனைத்திற்கும்.. இதே போலத்தான் என்பேன் அப்பனே.
இன்னும் எப்படி? எல்லாம் நோய்கள் ஏற்படுகின்றது என்பதை எல்லாம் அப்பனே பின் கூர்ந்து அப்பனே பின் எவை என்று கூட பின் எவை என்று கூட கவனியுங்கள் அப்பனே... நிச்சயம் சொல்வேன் என்பேன் அப்பனே..
இங்கெல்லாம் அழிவுகள் அப்பனே எதை என்று... எப்படி எல்லாம் தடுக்கலாம் என்றெல்லாம் அப்பனே வரும் காலத்தில் அப்பனே யான் எடுத்துரைப்பேன் அப்பனே.
யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... நோய்களின் காலமப்பா.. நோய்களின் காலமப்பா..
ஆனாலும் அப்பனே அதனைக் கூட எவை என்று புரிய அப்பனே!!!
நிச்சயம் அப்பனே அனைவருக்கும் எம்முடைய நல்லாசிகள் என்பேன் அப்பனே..
நிச்சயம் இங்கிருந்தே அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய.. அப்பனே எவை என்று கூட என் பக்தர்களுக்கும் கூட வர முடியவில்லையே... அகத்தியனை பின் காண செல்ல முடியவில்லையே.. என்றெல்லாம் பின் உண்மையான பக்தர்கள் கூட இருக்கின்றார்கள்... அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே தருகின்றேன் என்பேன் அப்பனே.
ஆசிகளப்பா!! ஆசிகளப்பா!! என்னை நினைத்தாலே போதும்ப்பா!
யான் வருகின்றேன் அழகாகவே... ஆசிகளோடு அப்பனே!!..
ஆசிகள்!!! ஆசிகள்!!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
OM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
THIRUVADI SARANAM
NANRI AYYANE
கருணை மிகுந்த வாக்கு... அப்பா அகத்தியா நன்றி நன்றி நன்றி 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக, நன்றி இறைவா 🙏
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA.
ReplyDeleteவணக்கம் ஐயா.. எனக்கு நாடி பார்க்க ஆசை படுகிறேன் எனது பெயர் சரவணன்
ReplyDelete
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
வணக்கம் அடியவர்களே,
சித்தன் அருள் - 1784 - அன்புடன் அகத்தியர் - அர்கா குபாலா. இந்தோனேஷியா.
இந்த ஒரு பதிவுக்காக நம் சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் ஜானகி ராமன் அய்யா அவர்கள் எவ்வளவு கடினப்பட்டு, இந்த இடத்தில் சென்று, இந்த வாக்கை நமக்காகப் படித்துள்ளார் என்று பின் வரும் காணொளியைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
Gupolo statue
https://www.youtube.com/watch?v=27bv-4-opms
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
Om Agatheesaya Namaha
ReplyDeleteArca means statue and Gupolo is the Javanese name for Agastya, an important figure of the Mahabharata and Ramayana epics.
The statue is almost three meters tall. Agastya is represented with a beard and mustache and a big belly on Java.
If you look closer,you can see the carved flower patterns of his trousers, countering influences for more than a thousand years
Reference. Flickr photos
Regards
Chitra