வணக்கம் அகத்தியர் அடியவர்களே.... அஜ்மீர் ராஜஸ்தான் புஷ்கரில் குருநாதர் அகத்தியர் பெருமான்... சாவித்திரி காட் ரத்தனகிரி மலையில் பொது வாக்கு தந்த மறுநாள். 31/12/2024..புடா புஷ்கர் எனும் தீர்த்தக்கரையில் வைத்து குருநாதர் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வாக்குகள் தந்தார் அதன் தொகுப்பு !
குறிப்பு!
குருநாதர் சில பக்தர்களுக்கு மட்டும் கூறிய பதில் வாக்காக இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்...
குருநாதருடைய வாக்குகளை பெற்றவர்கள்!! அவர்களுக்கு குருநாதர் சொன்ன முற்பிறவி ரகசியங்கள் எல்லாம் அவரவருக்கு தனித்தனியாக கூறியது எல்லாம் அனைவருக்கும் தெரியும் !
அவரவருக்கு சில சந்தேகங்கள் சில கேள்விகள் இருக்கும்.
குருநாதர் இந்த வாக்கில் கேள்விகளுக்கு பதில் உரைத்த வாக்கு அனைவரின் தன் முற்பிறவி ரகசியங்கள் மற்றும் மனதில் இருக்கும் சந்தேகங்கள் கேள்விகள்
குருநாதர் கூறிய வாக்குகளின் சாராம்சத்தோடு பொருந்தி போகும் சந்தேகங்கள் விலகும். அதனால் இதை தனிநபர் வாக்குகளாக பார்க்க கூடாது அதில் உள்ள பொதுவான விஷயங்கள் என்ன என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வாக்கு வெளியிடப்படுகின்றது.
அப்பனே என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே.. ஆசிர்வாதங்கள் அப்பனே மிகுந்து கொண்டே போகும் அப்பா...
இதனால் அப்பனே எக்குறைகளும் கொள்ள தேவையில்லை அப்பனே.. சில மன மாற்றங்கள் அப்பனே நல்விதமாகவே நிச்சயம் அப்பனே யானே செய்திடுவேன் என்பேன் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!
அப்பனே நிச்சயம் அப்பனே பல வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே அவை அனைத்தும் நிச்சயம் அப்பனே போக போக எவ்விடத்தில் என்பதையெல்லாம் தீர்மானித்து யான் எடுத்துரைப்பேன் அப்பனே கவலைகள் இல்லை
அப்பனே பின் அனைத்தும் இப்பொழுது கூட யான் சொல்லலாம்.. ஆனாலும் அப்பனே கேள்விகளாக நீங்கள் கேட்கத்தான் போகின்றீர்கள்... இதனால் கேளுங்கள்!!
குருவே முக்தி என்றால் என்ன மோட்சம் என்றால் என்ன இரண்டிற்கும் என்ன வேறுபாடு?????
அப்பனே நிச்சயம் அனைத்தும் இழந்தால் முக்தி!!!!...... அப்பனே இதன் மூலம் வருவது மோட்சம்!!!
குருவே முக்தி அடைந்த ஆத்மா எங்கு இருக்கும்???
மோட்சம் அடைந்த பின் ஆத்மா எங்கு செல்லும்???
அப்பனே முக்தி ஆன பிறகு அப்பனே நிச்சயம் அப்பனே மனம் இறைவனிடத்தில் சென்றடைந்து விடும் என்பேன் அப்பனே.
மோட்சம் என்றால் அப்பனே நிச்சயம் பின் உடம்பும் அப்பனே ஆன்மாவும் தனித்தனி அப்பனே... ஆன்மா நிச்சயம் இறைவனிடத்தில் கூட... அப்பனே அதாவது அப்பனே பின் உடம்பும் கூட அப்பனே பின் இறைவனால் அனுப்பப்பட்ட அப்பனே... சில உயிர்கள் அப்பனே பின் உண்ணும் அப்பா... இதுதான் அப்பனே
பின் அதனால் உடம்பும் பின் எவை என்று கூற ஆன்மாவும் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனுக்கு சொந்தமானது அப்பனே... அவனே எடுத்துக் கொள்வான்.... இதுதான் மோட்சம்.
குருவே மனம் ஆத்மா என்று நீங்கள் கூறுகின்றீர்கள் மனம் மற்றும் ஆத்மாவிற்கு என்ன வித்தியாசம்??
அப்பனே வித்தியாசம் இல்லையப்பா... ஆனால் இவ் ரகசியத்தை இப்பொழுது யான் சொல்லப்போவதில்லை!!
குருவே அப்படி என்றால் மனமும் ஆத்மாவும் இறைவனிடத்தில் செல்கின்றதா???
அப்பனே பின் மனமும் கூட ஆத்மாவும் கூட ஒன்றே என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே இப்பொழுது இதை யான் தெளிவுபடுத்தவில்லை!!
குருவே எங்கள் வாக்குகளில் மனிதனுடைய ஆத்மா உடலில் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் என்று கூறி இருந்தீர்கள் அதைப் பற்றி விளக்கமாக கூறுங்கள்!!!
அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய ஒவ்வொருவருக்கும் ஆன்மா உடலில் பல பாகங்களில் இருக்கும் அப்பனே சிலருக்கு கண்களில் சிலருக்கு மூக்கு நுனியில் சிலருக்கு முதுகில் சிலருக்கு வயிற்றில் சிலருக்கு அவரவர் குறிகளிலும் கூட இருக்கும் அப்பனே.
அப்பனே இவ்வாறு நிச்சயம் குறிகளில் இருந்தால் அப்பனே பின் அதிக காம உணர்வுகள் வந்து கொண்டே இருக்கும்.. அப்பனே பின் முதுகில் பின்னே இருந்தால் அப்பனே நிச்சயம் பின் அதாவது அனைத்தும் தெரிந்து கொள்வார்கள் அப்பனே ஆனாலும் வெளிகொள்ள மாட்டார்கள்.
அப்பனே நுனியில் அதாவது மூக்கின் நுனியில் இருந்தால் அப்பனே கோபங்கள் அதிகமாக வரும் அப்பனே நிச்சயம் வயிற்றில் இருந்தால் அதிக அளவு உண்பார்கள் அப்பனே.
அப்பனே நிச்சயம் அப்பனே எங்கெங்கும் உள்ளதோ அதன்படியே அப்பனே ஆசைகள் வரும் அப்பா!!!
அதை அப்பனே நிச்சயம் அதாவது புருவம் மத்தியில் வைக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே உடலில் அங்கங்கு இருக்கும் ஆன்மாவை புருவ மத்தியில் இவ்வாறு வைத்தால்தான் முக்தியும் கிடைக்கும் மோட்சமும் கிடைக்கும்!!
அப்பனே அங்கு வைப்பதற்கு பல கஷ்டங்கள் என்பேன் அப்பனே.....
அப்பனே பல தவங்கள் பல தியானங்கள் பல யோகாசனங்கள் இறைவனை வணங்கினாலும் முடியாதப்பா!!!!
அப்பனே இவ் ஆன்மா எத்தனை பிறப்புக்கள் எடுத்துள்ளதோ? பின் அத்தனை பிறவிகளில் எங்கெல்லாம் இறைவனை கண்டுள்ளதோ... அவ்வவ் இடங்களுக்குச் சென்றால் தான் அப்பனே தானாக மேலே ஏறுமப்பா!!!
ஆனால் இன்றய அளவில் யாரும் செல்வதில்லை... அப்பனே பின் யாரோ ஒருவருக்குத்தான் முக்தியும் மோட்சமும் கிடைக்கின்றது என்பேன்.
அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அங்கு (புருவ மத்தியில்) வந்து விட்டால்...!!! இறைவன் என்னடா!!!! இறைவன் என்னிடத்தில் இருக்கின்றான்... போங்களடா என்று சொல்லிவிடுவீர்கள் நீங்கள்!!
இதனால் அப்பனே நீங்கள் தியானங்கள் என்ன செய்ய வேண்டும்... அப்புறம் நீங்கள் என்ன செய்தாலும் ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே... இதனால் அவை எப்படி பின் வைப்பது என்பதை யான் அறிவேன் அப்பனே.
அதனால் உங்களை (திருத்தலங்கள் திருத்தலங்களாக) அலைய வைக்கின்றேன் அவ்வளவுதான்.
அப்பனே அதனால்தான் அப்பனே உங்களை எங்கெங்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் அழைத்துச் சென்று அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது அங்கே தானாகவே எழுந்து விடும் என்பேன் அப்பனே.
அப்படி சில சில இடங்களில் கூட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் சக்திகள் அதிகம்.
அப்பனே கிரகங்களின் சக்திகள் கூட பின் அதிகம்...அவ் இடங்களுக்கு சென்றாலே அப்பனே... சிறிது சிறிதாக அப்பனே... இங்கு வந்து விட்டால் (புருவ மத்தியில்) அப்பனே அனைத்து திறமைகளும் கூட அப்பனே உங்களுக்கு வந்து விடும் என்பேன் அப்பனே அடுத்தவரை பற்றி நீங்களே சொல்லலாம் என்பேன்!!
நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா.. பின் அதாவது அடுத்து என்ன நடக்கும் என்று நீங்களே கணித்து விடலாம் என்பேன் அப்பனே!!!
அப்பனே இத்தனை நாட்களாக கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே இதனால் முன்னே நடப்பது கூட யான் உங்களுக்கு சரியாகவே அப்பனே எப்படியெல்லாம் நடத்திட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே.. அது சுலபம் அப்பா!!!
அப்பனே இன்னும் நாட்கள் செல்லட்டும் அப்பனே பின் உங்களுக்கு சொல்லித் தருகின்றேன்... நீங்களே அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை நீங்களே பின் கணித்துக் கொள்ளலாம் என்பேன்.அப்பனே
அப்பனே இதனால் இறைவன் எவ் வடிவத்தில் ரூபத்தில் வருவான் என்பதை எல்லாம் அப்பனே யானே அறிவேன் அதனால் உங்களுக்கு செப்புவதில்லை... யானே அழைத்து செல்கின்றேன். அப்பனே...
அப்பனே இதனால்தான் அப்பனே அனைத்தும் யாம் அறிவோம் அப்பனே கவலையை விடுங்கள்.. அப்பனே பின் நிச்சயம் சொல்லியும் கொடுப்போம்.
இதனால் அப்பனே மனிதன் தவம் செய்து கொண்டு!!!!....
அப்பனே இன்னும் யோகாசனங்கள் செய்து கொண்டு!!!.....
இன்னும் அப்பனே பின் எதை எதையோ செய்து கொண்டு அப்பனே!!!.......
பின் நிச்சயம் அவ் ஆன்மாவை எழுப்பாமல் பின் தோல்வி அடைந்து விடுகின்றான் அப்பனே
இதனால் மறுபிறப்பும் பின் தோன்றுகின்றது என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் பின் இப்படி ஆத்மா மேலே வந்து விட்டால் எதற்கும் ஆசைப்பட மாட்டான் அப்பா... அமைதியாக உட்கார்ந்து விடுவான் என்பேன் அப்பனே...
ஆனாலும் இன்றளவில் தியானங்கள் அவை இவை செய்கின்ற பொழுது மீண்டும் அப்பனே பின் மனிதன் என்ன தவறுகள் பின் செய்கின்றானோ.. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான் என்பேன் அப்பனே... இவையெல்லாம் அப்பனே ஏற்க முடியாது சித்தர்கள் யாங்கள்.
அப்பனே எங்களால் முடியும் அப்பா... பின் அங்கு எழுப்புவதற்கு (புருவ மத்தியில்)...
ஆனால் அப்பனே இப்பொழுது வேண்டாம் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே....அது தன் மாறுவதற்கு பின் நீங்கள் அப்பனே பின் எங்கெங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்... அதை அப்பனே நிச்சயம் சற்று யோசிக்க வேண்டும்.
அப்பனே இதனால் பின் சிலருக்கு கண்களில் இருக்குமப்பா!!!
கண்கள் தவறானதை எல்லாம் பார்க்கும் அப்பா இதனால் அப்பனே நிச்சயம் இன்னும் கர்மா ஏற்படும் அப்பா.
சிலருக்கு அப்பனே காதுகளில் இருக்குமப்பா.. ஆனால் காதுகளில் அப்பனே தவறானதை எல்லாம் கேட்கும் அப்பா.. இதனால் அப்பனே இன்னும் கர்மா அதிகரிக்கும் அப்பா... கஷ்டங்கள் அதிகரிக்கும் அப்பா.
சிலருக்கு கைகளில் கூட அப்பனே அதாவது வாங்குவதும் செயல்களை செய்வதும்....
சிலருக்கு கால்களில் அப்பா.... மிதிக்காத இடங்களுக்கெல்லாம் சென்று அப்பனே.....(கால்கள் வைக்க கூடாத இடங்களுக்கெல்லாம் சென்று கர்மாவை சம்பாதித்துக் கொள்வது)
அப்பனே இன்னும் இருக்கின்றதப்பா... இதனால்தான் அப்பனே பின் எவை தன் பின்... அதாவது அங்கு உள்ளதால் அப்பனே... அதனால் பின் இன்னும் அதிகரித்தால் நோய்கள் வந்து விடுகின்றது அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
உதாரணத்திற்கு மூக்கு நுனியில் சொன்னேன் அப்பனே இதனால் கோபங்கள் அதிகமாக வருமப்பா... இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே.. இல்லையென்றால் கர்மா சேர்ந்து விடும் அப்பா அவ்வளவுதான்... இது பொதுவானவை அனைத்துமே....
(உடலில் ஆத்மா இருக்கும் பாகங்கள் சார்ந்து தவறான செயல்களை செய்யும் பொழுது கர்மா சேர்ந்து விடும்)
அப்பனே பின் ஒன்றை அதாவது.. நாளை இவை நடந்து விடும் அவை நடந்து விடும்... என்று சொல்லிவிட்டு செல்லலாம் என்பேன் அப்பனே..
ஆனாலும் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.. என்னுடைய கருத்து...
அதாவது அப்பனே நீங்கள் கூட... தன் பிள்ளைகள் படிப்பில் நன்றாக அதாவது படிக்க வேண்டும்.. முதல் தரத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அல்லவா?!!!...
அதேபோலத்தான் அப்பனே இத் தந்தையானவனுக்கும்.. நீங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று!!!
குருவே நீங்கள் அனைத்தும் எங்களிடம் ஒப்படைக்கின்றேன் என்று சொல்கின்றீர்கள் கூடவே இருக்கின்றேன் என்று சொல்கின்றீர்கள் நாங்கள் மனிதர்கள் எங்களால் சில சில தவறுகள் ஏற்பட்டும் விடுகின்றது இதனால் கர்மா சேர்ந்து விடுமோ என்ற பயமும் இருக்கின்றது
அப்பனே யான் விடப்போவதில்லை என்பேன் அப்பனே... அதனால்தான் அப்பனே சில விஷயங்கள் நீங்கள் நினைப்பது நடக்காமல் போவதற்கும் கூட யான்தான் காரணம்!!! கர்மா சேரும் எதையும் அப்பனே உங்களை அண்ட விடுவதில்லை என்பேன் அப்பனே.
குருவே நீங்கள் வாக்குகளில் ஒரு ஆத்மா பல குறிப்பாக ஆயிரம் பிறவிகளுக்கு மேல் பிறப்பெடுத்து வரும் என்று கூறினீர்கள்... எங்களுக்கும் இதேபோன்று கூறினீர்கள் இதில் ரிஷிகளால் முனிகளால் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சம்பவங்களையும் எங்களுக்கு கூறியுள்ளீர்கள்.. முற்பிறவிகளில் பெற்ற இறை தரிசனம் முனிவர்களின் சித்தர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்ற எங்களுடைய. இவ்வளவு தூரம் பயணம் செய்த எங்களுடைய ஆத்மா தற்பொழுது அவற்றில் இருந்து எல்லாம் விலகி கர்மா உள்ள மனிதப் பிறவியாய் ஏன் பிறக்க நேரிட்டது?????!
அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே... ஆனாலும் இதற்கெல்லாம் பதில் இப்பொழுது இல்லை... அப்பனே நல் முறையாக... இன்னும் விவரிக்கும் பொழுது அப்பனே... நிச்சயம் அனைத்தும் வரும் அப்பா
எதை எப்பொழுது தெரிவிக்க வேண்டும் என்பதையெல்லாம் யான் அறிவேன் அப்பனே
அப்பனே இத்தனை ஆண்டுகள் பிறந்து பிறந்து வந்துள்ளதால் தான் அப்பனே... நீங்கள் என்னுடைய அருகிலே இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே.
குருவே நீங்கள் வாக்குகளில் எங்களுடைய முற்பிறவிகளில் ரிஷி முனி களோடு இருந்தோம் சித்தர்களோடு இருந்தோம் என்று இறைவன் தரிசனம் எல்லாம் உங்களுக்கு கிடைத்தது என்றெல்லாம் வாக்குகளில் எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள்... உங்களோடு இருந்த பொழுது ரிஷிமுனிகளோடு இருந்த பொழுது அப்பொழுதே எங்களுக்கு ஏன் முக்தி கிடைக்கவில்லை????!
அப்பனே இன்னும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பேன் அப்பனே.... அப்பனே பின் அதாவது யாங்கள் மீண்டும் அனுப்புவோம் என்போம் அப்பனே... சில நபர்களை மட்டுமே அப்பனே!!! மக்களுக்கு சேவையை செய்ய என்பேன் அப்பனே!!
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே புரிந்து கொள்ளுங்கள்.
குருவே சித்தர்களோடு ரிஷிமுனிகளோடு முற்பிறவிகளில் வாழ்ந்த ஆத்மாக்கள் மனிதப் பிறப்பு எடுத்து வரும் பொழுது அவர்களுடைய ஆத்மா புருவ மத்தியில் இருக்குமா???
மனிதப் பிறப்பு எடுத்து வந்தாலும் அப்பனே பல ஆசைகள் இருந்தால் நிச்சயம் ஆத்மா அவ் அவ் இடத்தில் தான் இருக்கும் என்பேன் அப்பனே... நிச்சயம் அப்பனே எதையும் நினைக்காமல் எதற்கும் ஆசைப்படாமல் இருந்தாலே பின் சுலபமாகவே மேலே ஏறிவிடும் தானாகவே என்பேன் அப்பனே.
குருவே முற்பிறவிகளில் இருந்த சித்தர்களின் வாசம்... தற்போது இப்பிறவிகளில் விலகி நிற்க வேண்டிய கட்டாயம் என்ன???
அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே போக போக புரியும் அப்பா... அனைத்து பின் பொருள்கள் மீதும் ஆசை கொண்டாலும் அப்பனே தெரியாதப்பா... முதலில் உங்கள் கடமைகள் விருப்பங்கள் நிறைவேறட்டும்... அதன் பிறகு ஆசையே இல்லாமல் இருக்கும் பொழுது புரியும் அப்பா
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விசுவாமித்திரன் பின் தவத்தை மேற்கொள்ளவே பின் பல ஆயிரம் ஆண்டுகள் அதாவது பல ஆயிரம் பிறப்புக்கள் எடுத்து வந்து தான்... அவந்தன் பெற்றான் என்பேன் அப்பனே... நேற்றைய பொழுதில் சொன்னேன் அல்லவா...
அதனால் அப்பனே ஒரே பிறவியில் பின் நிச்சயம் அப்பனே முக்தியும் மோட்சமும் கிடைக்காதப்பா.
அப்பனே இறைவனை வணங்குவதற்கே தகுதிகள் வேண்டுமப்பா..
அதாவது பின் பல ஆயிரம் பிறவிகள் எடுக்க வேண்டி பின் வேண்டி வந்தால்தான் அப்பனே... இவை போன்ற இடங்களுக்கெல்லாம் வர முடியும் என்பேன் அப்பனே.
குருவே என்னுடைய முற்பிறவியில் சித்தர்களோடும் ரிஷிமுனிகளோடும் பயணப்பட்ட என் ஆத்மா இந்த பிறவியில் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன் என்னுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது
அப்பனே நிச்சயம் அப்பனே பல பல முனிவர்கள் கூட தேவர்கள் கூட அப்பனே அறிந்தும் கூட எவ்வாறு வாழ்க்கை இருந்தது இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டாயா அப்பனே
அனைத்து சுகங்களும் கிடைக்காதப்பா... பின் காலில் அணிவதற்கு செருப்பு கூட கிடைக்காதப்பா!!
அப்பனே பொதுவாக சொல்கின்றேன் உங்களுக்கு வாக்குகள் தரும் பொழுது ஒவ்வொரு படியாக ஏற்றிவிட்டு கொண்டே இருக்கின்றேன் அப்பனே ஒவ்வொரு கர்மாவையும் தொலைத்துக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே.
குருவே நான் விரும்பும் இறைவனை அடைவது எப்படி????
யான் சொல்லியதை கேட்டு நடந்தாலே இறைவன் உங்களை தேடி வருவான் அப்பனே... இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே... யான் என்ன சொல்கின்றேனோ அதைக் கேட்டு நடங்கள் அப்பனே அப்படியே கடைப்பிடித்து வரும் பொழுது இறைவனையும் காண்பிப்பேன் அப்பனே உங்களை தேடி வர செய்வேன் என்பேன் அப்பனே.
அப்படியே நீங்கள் அதாவது மனிதர்கள் அனைவருமே.. விரும்பி விட்டால் வந்து விடுவானா இறைவன்??????????? என்ன???????
அப்பனே.. நீங்களே சொல்லுங்கள் அனைவருமே யோசித்து!!! சொல்ல வேண்டும்!!
இதை கேட்ட அடியவர்கள் ஒரு நிமிடம் அமைதிப்பொறுத்து.... உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர் பெருக்கெடுக்க !!; அப்பா அகத்தீசா!!!!! நீங்களே கருணாமூர்த்தி.... இறைவனை விட எங்கள் மீது அன்பும் கருணையும் வைத்திருப்பது நீங்கள் தான் உங்களைத் தவிர எந்த லோகத்திலும் மனிதர்கள் மீது கருணையும் பாசம் காட்டுவதற்கு ஆள் இல்லை அப்பா... உங்கள் பாதங்களே சரணம் அகத்தியப்பா!!!
அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைத்தும் செய்வேன் என்பேன் அப்பனே அதாவது பிள்ளைகள் எதை கேட்டாலும் அப்பனே நிச்சயம் எதை என்று புரிய புரிய அப்பனே நல்லவை அப்பனே தீயவை எதை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் அதாவது.. உங்கள் பிள்ளைகளுக்கு கூட !! நீங்கள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து விடுகின்றீர்களா ??என்ன
நீங்களே சொல்லுங்கள்!!!
அப்பொழுது அப்பனே குழந்தைகள் அழும் அப்பா... என் தந்தை இது பின் வாங்கி கொடுக்க வில்லையே என்று... அவ்வாறுதான் நீங்கள் இப்படி!!!
அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே உடம்பை மட்டும் விட்டு அப்பனே.. ஆன்மாவை வெளியேற்றுவது எப்படி எல்லாம் என்பதை அப்பனே இன்னும் காலங்கள் செல்லட்டும் சொல்கின்றேன் என்பேன் அப்பனே !!! அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் அப்பனே மற்றொரு தலத்தில் விரிவாகவே விவரிக்கின்றேன் அப்பனே ஆசிகள் ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
.சித்தன் அருள்.....தொடரும்!
பூமிக்கு மேலே இருக்கும் கிரகங்களில் எல்லாம் வேற்று கிரக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் புண்ணியங்கள் அடிப்படையில் மேலே சந்திரனிலும் மற்ற கிரகங்களிலும் மேலே லோகங்கள் இருக்கின்றது அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை பற்றி குருநாதர் ஏற்கனவே பல வாக்குகள் தந்திருந்தாலும்... சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தில் விநாயகர் உருவம் போன்று ஒரு புகைப்படம் தெரிந்தது அருகிலேயே கற்களால் ஆன ஆலயம் போன்றும் இருந்தது இது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
ReplyDeleteஇதன் உண்மை தன்மையை குறித்து குருநாதரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனிப்பட்ட முறையில் கேள்வியாக கேட்ட பொழுது
அப்பனே மேலோகத்தில் கிரகங்களில் எல்லாம் சித்திரக்குள்ளர்கள் ஞானிகள் ரிஷிகள் அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே சந்திரன் செவ்வாய் அங்கும் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே
அங்கு திருத்தலங்கள் இருக்கின்றது அதாவது கிரகங்களில் .
ஆனால் புண்ணிய நதிகள் அங்கு இல்லை .
அதனால் கீழே இங்கு வந்து மானசரோவர் கங்கோத்திரி காசி கங்கா காவேரி தாமிரபரணி புஷ்கர் புனித ஏரி நர்மதா தபதி சிந்து மற்றும் புனித நதிகள் அனைத்திலும் நீராடி செல்வார்கள் பிரம்ம முகூர்த்தத்தில்...
மேலே உள்ள புகைப்படங்கள்
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA . GURUVE SARANAM SARANAM
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete