​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 28 January 2025

சித்தன் அருள் - 1788 - அன்புடன் அகத்தியர் - கதிரை மலை. இலங்கை!






17/1/2025 அன்று குருநாதர் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: கதிரை மலை. இலங்கை.

வள்ளி திருவிளையாடல் படலம்!!!

மயில் மீது அழகாக!!!! அழகாக!!!! பறந்து செல்கின்ற முருகா!!!!!

உந்தனையே மனதில் பின் மீண்டும் நினைத்து...  உரைப்பேன் அகத்தியனே!!!

கந்தனே!!!!

கந்தனே அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குவதை எல்லாம் இப்பொழுது எடுத்துரைக்க போகின்றேன்!!!

மீண்டும் அங்கிருந்து பின் கந்தனும் கூட!!!!.

(கதிர்காமத்தில் இருந்து)

வேலவன்

அகத்தியனே!!  நிச்சயம் யாம் செல்வோம்!!! பின் இங்கிருந்து நிச்சயம் இவ் மலை தெரிகின்றதே இங்கு செல்வோம்!!!..

.(கதிரை மலைக்கு) 

பின் அங்கு இன்னும் பல வடிவங்களில் கூட... என்னென்ன இருக்கின்றதோ?? அவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட... ஆனாலும் பின் பார்த்து விடுவோம் வா!! என்று நிச்சயம். 

யானும் கூட!!!

அகத்திய பெருமான் 

முருகா!!! இவ்வாறெல்லாம் பின்... அறிந்தும் இதனை என்று நினைக்க நிச்சயம்..

எதற்காக?? என்னை அனுப்பினார்?? உன் தந்தையான ஈசன்!!

ஆனாலும் இப்பொழுது இப்படி எல்லாம் எனை அழைத்து நிச்சயம்!!!.......

அங்கு (பாரத தேசத்தில் இருக்கும் கைலாயத்திற்கு) சென்றாலும் உன் தந்தை நிச்சயம் விடப்போவதில்லை!!!... அதாவது நீயும் இங்கு என்னை விடப்போவதில்லை!!!... அதனால் என்ன செய்வது?? சரி!!! உன் பின்னே வருகின்றேன்!! என்று!!

வேலவன். 

அகத்தியரே நிச்சயம்... நீயாவது வாரும் !! என் பின்னே!!!

பார்த்துக் கொள்வோம் என்று!!

அகத்திய பெருமான்!

ஆனாலும் நிச்சயம் இப்பொழுதே உன் தந்தை அறிந்திருப்பார்!!!... அனைத்திற்கும் காரணம் அகத்தியன் தான் என்று!!

வேலவன் 

பின் நினைக்கட்டும்!! நினைக்கட்டும்!! அகத்தியரே!!.. நிச்சயம் அவ்வாறு நினைத்தால் என்ன????

யான் இருக்கின்றேன் அல்லவா!!!!

அகத்திய பெருமான் 

 நிச்சயம் அறிந்தும் கூட சரி!!

பின் தலையை இப்படி சாய்ப்பதா?? அப்படி சாய்ப்பதா??.... 

(சரி என்று சொல்வதா வேண்டாம் என்று சொல்வதா) 

என்று தெரியாமல்.. பின் அதாவது நிச்சயம் உன் தந்தையைப் பற்றியும் தெரியும்... 

பின் யான் உடனடியாக சென்று நிச்சயம் பின் முருகன் இப்படித்தான் (அடம்) இருக்கின்றான் என்று!! மன்னித்து விடுங்கள் ஈசனாரே!! என்று சொல்லிவிட்டால்!!!....

சரி அகத்தியனே!! என்று மன்னித்து விட்டு விடுவான்!! அவ்வளவுதான்! 

ஆனாலும் இங்கு நாம் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தையும் உன் தந்தை கேட்டுக் கொண்டே இருக்கின்றான். 

சரி பரவாயில்லை!!!

வேலவன். 

அகத்தியரே வாரும்!!! வாரும்!!!

அறிந்தும் எதை என்று கூட இவை ஆனாலும் ஈசனாருக்கும் இவை தெரிந்தது!!

ஆனாலும் மீண்டும் பார்வதி தேவியிடம் ஈசன்!!

பார்வதி தேவியே!!!.. நிச்சயம்தனை கூட பின் அதாவது பின் வரப்போவதில்லை!! கந்தன்! 

எப்படியாவது நிச்சயம் என்னவென்று அதாவது.. ஒரு பெண்ணை அனுப்பினால் என்ன?!! என்று யோசனை!! அதனால் ஒரு பெண்ணை அனுப்புகின்றேன்!! நிச்சயம் அதாவது அறிந்தும் கூட!! எதை என்று அறிய!!

இங்கெல்லாம் அதாவது அப்போதெல்லாம் அதாவது பின் உன் குகன் கூட நிச்சயம் அதாவது ஒன்றும் இல்லாமல் பின் இருக்கும் பெண்களை தான் பிடிக்கும். 

(ஏழை எளிய எதுவும் இல்லாமல் இருக்கும் பெண்களை முருகனுக்கு பிடிக்கும்) 


ஆனாலும் அறிந்தும் கூட அதனால்... பின் ஒன்றும் இல்லாமல் இருக்கும் இடத்திலிருந்து அனுப்புவோம் என்று. 

இதனால் தான் நிச்சயம் தன்னில் கூட... ஒன்றுமே இல்லாமல்... உணவிற்கு கூட வழி இல்லாமல்  இருக்கும் பின் அறிந்தும் கூட பின் அழகாகவே பின் அப்படியே படைத்து நிச்சயம் அவள் தனக்கு... இச்சா சக்தியும், ஞான சக்தியும் அனைத்து சக்திகளையும் இட்டு நிச்சயம் அனைத்தும் 

புரிந்து கொள்ளும் வல்லமையும் கொடுத்து நிச்சயம் பின் இங்கு வள்ளியை அனுப்பினார்.

(கதிர்காமத்திலும் கதிரை மலையிலும் வேடுவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்களும் வழிபாடு செய்து வருகின்றார்கள். இன்றளவும் கூட அவர்கள் இனம் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றது இலங்கையில். 

காட்டில் வாழும் அவர்கள் இனத்தில் இருந்து ஈசன் வள்ளி தேவியை அனுப்பினார்)

மலையில் தனியாக நிற்கும் அப் பெண்ணை பார்த்து முருகன்!!!

வேலவன்

பின் அகத்தியரே!! அகத்தியரே!! அறிந்தும் கூட பின் அழகாக ஒரு பெண் தோன்றுகின்றாள் இங்கே! பின் எதனால் என்று!!

ஆனாலும் யான் அகத்தியன் உணர்ந்து கொண்டேன். 

அகத்திய பெருமான் 

நிச்சயம் முருகா!!! அவை எவை என்று கூட யாருமே இல்லை!!! ஆனாலும் ஒன்றும் இல்லாமல் தான் கீழே இருக்கின்றார்கள்!!(வேடுவர்கள்)

ஆனாலும் நிச்சயமாய் பின் அறிந்தும் கூட...இவள் மட்டும் இங்கு அழகாக வந்திருக்கின்றாளே!! என்றெல்லாம்!!

ஆனாலும் பின் என் மனது ஆனாலும் அறிந்தது இதெல்லாம் இதன் காரணம் ஈசனாரே என்று!!

யான் முருகனைப் பார்த்து நிச்சயம் முருகா!!! எதற்காக இப்பெண் இங்கு இருக்கின்றாள்?? என்று நீயே கேள் என்று!!!

நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது அப் பெண்ணிடம்  நேராகச் சென்று கந்தன்.. அப் பெண்ணை பார்த்து...

பெண்ணே யார் நீ??அழகாக இருக்கின்றாய்!!! எதற்காக? நீ இங்கு வந்தாய்??.. பின் இதெல்லாம் இங்கு அழியப் போகின்றது... இங்கிருந்து ஓடி விடு!! என்று!!

(வள்ளி) அப் பெண்.

யான் இங்கிருந்து செல்ல மாட்டேன்!!! உந்தனை விரும்புகின்றேன் என்று அப் பெண்மணியும் கூட!!

வேலவன். 

என்ன?????

நிச்சயம் நீ என்னை விரும்புகின்றாயா??! அப்படி என்ன???... எப்படி?? அறிந்தும் எதை என்று கூட!!

பின் விரும்புகின்றாயா???? எதற்கு விரும்புகின்றாய்???

(வள்ளி) பெண்மணி 

நிச்சயம் உந்தனை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என்று. 

நிச்சயம் முருகன் பின் ஓடிவந்து அகத்தியரே!! அகத்தியரே!!

என்ன இது????!

நாம் தன் அதாவது உலகத்தை காக்க நின்றோம்... ஆனாலும் இப் பெண்மணியோ என்னை விரும்புகின்றேன் என்று இன்னும் ஏதேதோ பின் எடுத்துரைக்கின்றாள்... அதாவது பின் என்னை திருமணம் கொள்கின்றேன் என்று!!!

அகத்திய பெருமான்!!!

அப்பா!!!!!...... எந்தனுக்கு ஏதும் தெரியாது!!!! என்னை விட்டு விடு!!!

பின் நீ!!! ஆவது!! உன் தந்தை...ஆவது!!

 என்றெல்லாம் !!

(நீயாச்சு உன் தந்தையாச்சு) 

வேலவன் 

பின் தந்தைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று!!

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் யான் நினைத்தேன்... ஆனாலும் பின் அனைத்தையும் நடத்தி வைப்பவனும் கூட பின் ஈசனார் என்று..

ஆனாலும் எதை என்று அறிய அறிய...

அங்கிருந்தே. ஈசன். அகத்தியனே!! ஏதாவது பின் சொதப்பி விடாதே... என்ற சப்தமும் எந்தனுக்கு கேட்டது!!

பின் ஆனாலும் யான் அமைதியுற்றேன்.

(கைலாய மலையில் இருந்து அகத்தியருக்கு மட்டும் ரகசியமாக ஈசன் காரியத்தை கெடுத்து விட வேண்டாம் என்று கட்டளையை கொடுத்து விட்டார்) 

அகத்திய பெருமான் 

நிச்சயம்.... முருகா உன்னுடைய இஷ்டம்!!! அறிந்தும் கூட என்றெல்லாம்!! நிச்சயம் அப்பெண்மணியும் கூட முருகனின் கால்களை கூட கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

நிச்சயம் பின் கட்டிக் கொள்! என்னை என்று!

வேலவன். 

நிச்சயம் அப்படி எல்லாம் பின் அறிந்தும் நிச்சயம் பின் எதை என்று கூட முடியாது..

நிச்சயம் நீ எங்கிருந்தாயோ? நிச்சயம் உன் சொந்த பந்தங்கள் யார் ? என்ன? என்றெல்லாம் நிச்சயம்! 

(வள்ளி) பெண்மணி

இதோ என் சொந்த பந்தங்கள் எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட அனைவரையும் பின் அதாவது பின் காட்டினாள்.

வேலவன்

ஆனாலும் இவர்கள்தான் உன் சொந்த பந்தங்களா??? நிச்சயம் அறிந்தும் கூட பின் இவர்கள் இப்படி இருக்கின்றார்களே???(காட்டில் வாழும் வேடுவர்கள்) 

நீ மட்டும் எப்படி இப்படி அழகாக இருக்கின்றாயே?? என்ன? எப்படி? என்று!!!

(வள்ளி) பெண்மணி .

ஆனாலும் என்னை இறைவன் பின் படைத்து விட்டான் இப்படி.. ஆனாலும் எனக்கும் ( திரு)மணம் கூடி வரவில்லை... யாரும் என்னை (திரு)மணம் முடிக்க வரவில்லை!!!

நீயும் பின் இவ் மலையில் சென்று கொண்டிருந்தாய்... உன்னை யான் பார்த்தேன் விரும்பி விட்டேன் என்று ஏதேதோ பேசினாள். 

அகத்திய பெருமான்.. தற்போது நமக்கு

அப்பனே இதன் தாக்கத்தையும் கூட வரும் வரும் வாக்கியத்தில் சொல்கின்றேன் அப்பனே.. நிச்சயம் ஏன்? எதற்காக? இவள் தன் தேடி வந்தாள்?? என்றெல்லாம் அப்பனே பின்...

இச்சா சக்தியும்!! கிரியா சக்தியும்!! இன்னும் அப்பனே பின் அனைத்தும் அனைத்து அஷ்ட சக்திகளும் இணைந்தது தான்..

அப்பனே பின் தெய்வானையாகவே!! அப்பனே பின் வள்ளியாகவே!!!

அறிந்தும் கூட இவையெல்லாம் பின் தத்துவங்களாக வரும் காலத்தில் பின் யான் உரைப்பேன் என்பேன் அப்பனே..

நிச்சயம் பின் அதாவது பின் வள்ளியும் கூட அறிந்தும்.. பின் நிச்சயம் தன்னில் கூட.. 

வள்ளி தேவி!!

அதாவது என்னை திருமணம் செய்து கொள்கின்றாயா என்ன? என்று!!

வேலவன் 

நிச்சயம் வேண்டாம் பின் திருமணங்கள் வேண்டாம் என்று!!!

ஆனாலும் பின் அகத்தியனே... பின் என்ன?? இது??? தொந்தரவுகள்!!... இப்படி ஆயிற்றே!!!

நாம் தன் எதற்காக?? வந்தோம்??

ஆனால் இப்படி இப்பெண்மணியே நம்மை விடவில்லை என்று..

நிச்சயம் பின் அகத்தியனே!!! இவள்தனை பின் அழகாகவே.. இவளிடத்தில் சென்று விட்டு விடு!! நிச்சயம் அறிந்தும் என்றெல்லாம்...

இவள்தன் ஒருவளாக அதாவது தனியாக இருக்கின்றாள் அல்லவா!!! நிச்சயம் இவள் ஊரில் அதாவது எந்தனுக்கு இவள் ஊரை காட்டினாள். யான் இங்கிருந்தே பார்த்துவிட்டேன்... நீ இவளை பின் பத்திரமாக இவள் ஊரில் விட்டு விடு என்று. 

அகத்திய பெருமான்..

அறிந்தும் யானும் சென்று நிச்சயம் பின் ஆனாலும்...

வள்ளியோ!!!!? அறிந்தும் கூட பின்...


வள்ளி தேவி 


நிச்சயம் முனிவரே!!! அனைத்தும் நீங்கள் செய்கின்றீர்கள் பின் அதாவது யான் மீண்டும் (கூட்டத்தில்) சென்றால்... என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் அவர்கள். 


(காட்டில் வாழும் வேடுவர் கூட்டம் கூட்டத்திலிருந்து தனியாக சென்ற ஒருவரை குறிப்பாக பெண்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதி முறை அதாவது ஒரு நாள் அல்லது ஒரு இரவு கூட்டத்திலிருந்து விலகி விட்டு சென்று விட்டால் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள் இன்றளவும் நாடோடிகளாக இருக்கும் சில குழுக்களிலும் வனவாசிகளாக வாழும் இனங்களிடமும் இந்த நடைமுறை இப்போதும் இருக்கின்றது) 


நிச்சயம் நீங்கள் ஏதாவது ஒன்றை செய்வீர்களாக என்று நிச்சயம்!!


அகத்தியர் பெருமான் 


நிச்சயம் நீ செல் தாயே!! யானும் உன்னுடன் வருகின்றேன் என்று பின் நிச்சயம் அங்கு  அழைத்துச் சென்று!!



கூட்டி வந்தாள்..அக் கூட்டம் இருக்கும் இடத்திற்கு..


பின் அவர்களோ!? அதாவது அக் கூட்டத்தினர்... அறிந்தும் கூட இவள் வேண்டாம்!!! எங்களை விட்டு விட்டு இவள் எங்கோ சென்று விட்டாள்!!! நிச்சயம் இவள் எங்களுக்கு திரும்பவும் வேண்டாம் என்று அனைவரும்!! நிச்சயம் பின் எதை எதையோ சொல்லி ஏதேதோ செய்து என்றெல்லாம் நிச்சயம் இவள்தனை விரட்டினார்கள்!



வள்ளி தேவி. 


நிச்சயம் பார்த்தாயா முனிவரே!!!... அங்கு அவர்களிடம் சேர அவர்களும் விடவில்லை!!


 இங்கும்...என்னை விடவில்லை!!! ஏற்றுக்கொள்ளவில்லை!!..


இனி யான் சாகத் தான் போக வேண்டும் என்றெல்லாம். 


நிச்சயம் மீண்டும் பின் முருகனிடத்தில்.(அகத்தியரும் வள்ளியும் முருகன் இருக்கும் இடத்திற்கு)


பின் முருகன் என்னை பார்த்து!!


வேலவன்! 


அகத்தியரே! அகத்தியரே! இது என்ன விளையாட்டு! 

யான் உன்னிடத்தில் என்ன சொன்னேன்???... நீ என்ன? பின் அறிந்தும் கூட என்ன செய்கின்றீர்கள்? என்று!!!


அகத்திய பெருமான். 


முருகா!!!.... என்னை சரியாக விட்டு விடுங்கள்!!!...


பின் மகனும் கூட! தந்தையும் கூட...! சேர்ந்திட்டு!!!!.........


 நிச்சயம்.. பின் இவ்வாறு அவ்வாறு.. பின் இவ்வாறு இல்லாமல் பின் சேர்ந்திட்டு.. இப்படி என்னை செய்கின்றீர்களே எப்படி..? என்றெல்லாம்!!


(தந்தையான ஈசனும் மகனான முருகனும் சேர்ந்து என்னை ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று குருநாதர்) 


அப்பனே யான் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றேன்... நீயும் நிச்சயம் இப் பெண்ணும் கூட ஏதாவது பேசி நிச்சயம்...(ஒரு முடிவுக்கு வாருங்கள்)



வேலவன் 


 நிச்சயம் பின் பெண்ணே!! உன்னை ஏன் உன் கூட்டத்தில் சேர்க்கவில்லை??


வள்ளி தேவி


நிச்சயம் பின் அதாவது உலகத்தை காக்க வந்தவன் நீ அல்லவா... நிச்சயம் ஏன் என்று உந்தனக்கு தெரியாதா???? என்றெல்லாம் நிச்சயம்!!


ஒரு பெண் பின் அதாவது ஒரு இரவு அதாவது கூட்டத்தில் இருந்து விலகி ஓரிடத்தில் சென்றுவிட்டால் நிச்சயம் அவர்களை மீண்டும் நிச்சயம் பின் சேர்க்கப் போவது இல்லை என்னை சேர்க்கவும் மாட்டார்கள் நிச்சயம் ஏற்கப் போவதுமில்லை... யான் நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட. 


இதனால் இதனால் அறிந்தும் இதை தன் புரியாமல் கூட நிச்சயம் அதனால் நீ தான் என்னை நிச்சயம் பின் அறிந்தும் கூட திருமணம் செய்ய வேண்டும். 


நீதான் என்னை அழைத்துச் செல்ல வேண்டும். 



வேலவன். 


அய்யய்யோ!!!..... அறிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொண்டால்....!?!?!! என் தந்தை இருக்கின்றானே... நிச்சயம் கோபம் கொள்வான்!!


பின் அதாவது நீ ஏதோ ஒன்றை வீராப்பாக பேசிவிட்டு உலகத்தை காப்பதாக சொன்னாயே!!! இங்கேயே (இலங்கை கதிர்காமத்திலே) இருக்கின்றேன்!!


 நீங்கள் செல்லுங்கள் என்று சொன்னாயே!!!


இப்போது ஒரு பெண்ணை வந்து பின் அழைத்து வந்திருக்கின்றாயே என்று.. நிச்சயம் என் தந்தை கோபம் கொள்வான். 



அகத்தியர் பெருமான் நமக்கு  தற்போது உரைக்கும் வாக்கு


ஆனாலும் இதுவும் ஈசன் செயலே !! அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே!!! இவையெல்லாம் பின் நிச்சயம் புரியாதப்பா!!


பின் எடுத்துரைத்தால் தான் பின் புரியுமப்பா!!!... போகப் போக பின்  ரகசியங்களை எல்லாம் சொல்வேன் என் பக்தர்களுக்கு அப்பனே. 


தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வெற்றி உண்டு... வெற்றிகளோடு வாழலாம் என்பேன் அப்பனே... அனைத்தும் அப்பனே பின் அதாவது நீங்களே அன்பு கருணை அப்பனே அனைத்தும் தெரிந்து கொண்டு வாழலாம். 


அதற்காகத்தான் அப்பனே பன்மடங்கு அப்பனே பின் உங்களை உயர வைக்கத்தான்.. பின் யாங்கள் யுகங்கள் யுகங்களாக அப்பனே வந்து தெளிவு படுத்துகின்றோம் அப்பனே. 


அப்பனே தெளிவு பெறாமல் வாழ்ந்து வந்தாலும் நிச்சயம் அப்பனே... கலியுகத்தில் நன்றாக வாழ முடியாதப்பா!! கஷ்டங்கள் அப்பனே இன்னும் துன்பங்கள் ஏற்பட்டு அப்பனே பிரிவு நிலைகள் ஏற்பட்டு அப்பனே நிச்சயம் பின் உங்களை சார்ந்தவர்களும் அழிவு நிலைக்கு தான் செல்வீர்கள் என்பேன் அப்பனே. 


அதனால் அப்பனே அறிந்தும் கூட இதனால் நிச்சயம் பின்.. கந்தனும் கூட!!


வேலவன். 


பின் அகத்தியரே!! என்ன இது? ஏதோ ஒரு விஷயத்திற்காக நாம் வந்தோம்!!


ஆனாலும் கடைசியாக இப்படி இப்பொழுது சிக்கிக் கொண்டோமே என்றெல்லாம்..


நிச்சயம் யான் அகத்தியனும் கூட.. நிச்சயம்.. பின் அறிந்தும் கூட பின்..


அகத்தியர் பெருமான். 


குகனே!!! பின் (திருமணம்) முடித்துக் கொள்!! என்ன!!! அப் பெண்ணை  யாரும் காப்பாற்றப் போவதில்லை..


பின் நீதான் இவ்வுலகத்தை காப்பாற்றுவேன் என்று சொன்னாயே.... இப்பொழுது இந்தப் பெண்ணை காப்பாற்று.. இப்போது நீ இந்த பெண்ணை திருமணம் செய்து தான் ஆக வேண்டும்...


அப்படிச் சென்றாலும் அவர்களும் விட மாட்டார்கள்.(கூட்டத்தில் சேர்க்க மறுப்பு)



. இப்படி சென்றாலும் நீயும் ஏற்க மறுக்கின்றாய்!!! 


இப் பெண் எங்கு செல்லும்??? என்று!!


ஆனாலும்.. பின் அறிந்தும் கூட 


வேலவன். 


அகத்தியரே... நிச்சயம் பின் எப்படி ??என்று கூட!!


இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய ஆனாலும் பக்குவமாக எடுத்துரைத்து பின் பேசினான் வள்ளியோடு. 


வேலவன் வள்ளியுடன் 


நிச்சயம் எனக்கு இவ் ஆசைகள் எல்லாம் இல்லை!! நிச்சயம் ஏதோ உனை யான் பார்த்தது கூட இல்லை!!!


என்னை விரும்புகின்றாய் திருமணம் செய்து கொள்கின்றாய் என்று சொல்கின்றாய்!!!


நிச்சயம் யான் இவ்வுலகத்தை காக்க வேண்டும் அவ்வளவுதான் என்று..


வள்ளி 


நிச்சயம் உன் மேல் அன்பு கொண்டு உள்ளேன்!! நிச்சயம் பின் கந்தா!!! நிச்சயம் அதாவது உன் பக்கத்திலே இருக்கின்றேனே!!! (உன் பக்கத்தில் மட்டும் இருந்து கொள்கின்றேன்) 


நிச்சயம் எனை நீ விரும்பவும் வேண்டாம் திருமணமும் செய்யவும் கொள்ள வேண்டாம்!!... நிச்சயம் யான்!!  எந்தனுக்கு உன் பக்கத்தில் இருக்கும் பாக்கியத்தை கொடு என்று!!


வேலவன் (தனியாக ஓரமாக அமர்ந்திருந்த அகத்தியரை அழைத்து)


பின் அகத்தியரே நிச்சயம் வாரும்!!! நிச்சயம் பின் இவ்வாறு அதாவது இப்பொழுது ஒத்துக் கொண்டாள். பின் வேண்டாம் என்று திருமணமும் செய்யவில்லை என்று நிச்சயம் இவள் என் பக்கத்தில் நின்றாலே போதும் என்று சொல்கின்றாள்.. என்று 



அகத்தியப் பெருமான்


நிச்சயம் பின் அடடா !! பின் அதாவது முருகா!! யான் 

கூட சென்று விடுவேன்...




 நிச்சயம் அதாவது உந்தனுக்கு வழி காட்டியாக பின் இருக்கலாமே இப் பெண்மணியும் கூட என்று!!


(முருகனிடம் குருநாதர் அதாவது எப்பொழுதும் நான் உன்னுடன் இருந்து கொண்டே இருக்க முடியாது யானும் அங்கு இங்கு என்று சென்று விடுவேன்! ஆனால் இந்த பெண்மணி உன்னுடன் இருந்தால் உனக்கு வழிகாட்டியாக இருப்பாள் அல்லவா என்று)



வேலவன். 


நிச்சயம் அதாவது தந்தை என்ன சொல்லுவானோ??? என்று நிச்சயம்!!


சரி செல்வோம் தந்தையிடமே செல்வோம் என்றெல்லாம் நிச்சயம் கந்தனும் கூட. 



(குருநாதர் அகத்தியர் பெருமான் முருகன் வள்ளி மூவரும் இங்கு இருக்கும் கைலாய மலைக்கு வந்து ஈசனை சந்தித்து!!)


வேலவன். 


தந்தையே!!! (என்று தயங்கிக் கொண்டு)



ஈசனும் பார்வதி தேவியும்.


அதாவது ஒன்றும் தெரியாதவர் போல் ஈசனாரும் பார்வதி தேவியாரும் முருகனைப் பார்த்து !!!


முருகா!!! ஒரு பெண்ணை அழைத்து வந்து விட்டாயா???


நிச்சயம் நீ பின் இவ்வாறு செய்யலாமா????


உலகத்தை காக்க வேண்டும் என்று அடம் பிடித்து நின்றாயே!!!..


இப்போது ஏன் ஒரு பெண்ணை இப்படியா????



வேலவன்!!


அய்யய்யோ!!  பின் தந்தையே!! அறிந்தும் கூட யான் செய்யவில்லை எதுவும்!! செய்யவில்லை! 


இப் பெண் தான் அனைத்திற்கும் காரணம் என்று. 



ஈசனார் குருநாதரை பார்த்து!


பின் அகத்தியனே.. என்ன இது விளையாட்டு?? அறிந்தும் எதை என்று எவை என்று புரிய புரிய... பின் நீயும் கூட இப்படி ஆகிவிட்டாயே என்று!!


ஆனாலும் அனைத்து விஷயங்களும் கூட பின் ஈசன் அறிவான்!!!


சரி!!! இப் பெண்ணை திருமணம் செய்து கொள்!! என்று ஈசனும் கூட பார்வதி தேவியும் கூட முருகனிடம் திருமணம் செய்து கொள் என்று!!!


வேலவன். 


திருமணமா??????????????


நிச்சயம் இல்லை!!!!!!!!!!


என்னிடத்தில் இவள் வந்தாள்!!.. பின் என்னை விரும்பவும் தேவையில்லை!! நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் எவை என்று புரிய.. நிச்சயம் எதை என்று அறிய அறிய... திருமணமும் செய்ய தேவையில்லை என்றாள்.


நிச்சயம் உன் பக்கத்தில் நின்றாலே போதும் என்றாள்!! என்று!!



அகத்தியர் பெருமான் நமக்கு கூறும் வாக்கு


ஆனாலும் வள்ளியை ஈசனே அனுப்பியது தான் அப்பனே!!!


 ஆனாலும் பக்கத்தில் அதாவது..‌ முருகனும் கூட மனம் மகிழ்ந்து... நிச்சயம். அவள் தனக்கு யாரும் இல்லையே என்று!!!


 நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட பின் பின் பக்கத்தில் இடம் அளித்தான் அப்பனே!!!


அனைத்து சக்திகளும் இணைந்தது தான் வள்ளி என்பேன் அப்பனே!!!


நிச்சயம் பின் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய... அப்பனே இன்னும் அப்பனே முருகனுக்கு சக்திகள் கொடுத்து (வள்ளியின் சக்தி முருகனுக்கு) இக்கலியுகத்திலும் கூட அப்பனே... பின் எவை என்று அறிய அப்பனே இன்னும் அப்பனே 


""""காத்துக்கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!



(இலங்கை இன்றும் இருப்பதற்கு முருகனே காரணம். முருகனே லங்காபுரியை மட்டுமல்ல இவ்வுலகத்தையே காப்பாற்றி கொண்டிருக்கின்றார்)


அனைத்து சக்திகளும் இணைந்தது வள்ளி என்பேன் அப்பனே. 


தெய்வானையைப் பற்றிய கூட விவரமாக விவரிக்கின்றேன் அப்பனே. 


இன்னும் அப்பனே பின் எப்படி? எது என்று அறிந்தும் கூட அப்பனே அறிந்து செயல்படுங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் எதை என்று அறிய அறிய 


அப்பனே பின் ஈசன் அனுப்பியது தான் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே வள்ளிதனைக் கூட அப்பனே!!


சக்திகளாக இருக்கட்டும் என்று அப்பனே!!


இதுதான் அப்பனே பின் அதாவது இன்னும் சொல்கின்றேன்...


ஆனால் இப்பொழுதெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!


என்ன மனிதர்களுக்கு????

(மனிதர்களுக்கு என்ன எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு திரிவார்கள்)


அப்பனே பின் எதை என்று அறிய தெரியாமல் என்பேன் அப்பனே!!


(வள்ளி முருகன் குறித்து மனிதர்கள் தன் இஷ்டத்திற்கு கதைகள் கவிதைகள் என உண்மை பொருள் தெரியாமல் பரப்பிக் கொண்டிருப்பதை குருநாதர் சுட்டிக்காட்டுகின்றார்)


இதனால்தான் அப்பனே பின் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 


நிச்சயம் அப்பனே பின் கவலைகள் இல்லை எம்முடைய ஆசிகளும் கூட அப்பனே இன்னும் அப்பனே ரகசியங்களை எல்லாம் சொல்வேன்!!


நடுவில் என்னென்ன நடந்ததுள்ளது?? என்பதையெல்லாம் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட 


அதனால் அப்பனே காத்துக்கொண்டே இருக்கின்றாள் அப்பனே வள்ளியும் கூட மலையின் (கதிரை மலை) மீது நின்று அப்பனே பின் கீழே இருக்கும்(கதிர்காமம்) எவை என்று கூட அழகான எதை என்று அறிய அறிய அப்பனே பெண்களையும் கூட அனைவரையுமே காத்துக் கொண்டு அப்பனே சக்திகளாக திகழ்ந்து கொண்டே இருக்கின்றாள் அப்பனே!!


பின் முருகனுக்கு இருக்கக்கூடிய சக்தி!! பின் வள்ளிக்கும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய! உண்டு!!!


ஏனென்றால் அப்பனே முருகனைக் கூட அப்பனே ஈசன் தான் பின் அனுப்பியது!!!


அப்பனே வள்ளியையும் கூட அப்பனே ஈசன் தான் அனுப்பியது..


இதில் என்ன வித்தியாசம் என்பதெல்லாம் அப்பனே நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!


உண்மை நிலை தெரியாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் அப்பனே இறைவன் ஒன்றும் செய்யப் போவதில்லை... என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே. 


உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!! இறைவனை வணங்குங்கள் பின்பு அனைத்தும் கொடுப்பான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 


பக்குவங்கள் இன்னும் வளரட்டும்!! அப்பனே பின் திருந்தட்டும் பின் மனிதர்கள் அப்பனே நன்முறைகளாக அப்பனே இன்னும் விளக்கத்தோடு அப்பனே நிச்சயம் அப்பனே பல ரகசியங்களை சொல்கின்றேன் அப்பனே!!


ஆசிகள் ஆசிகள் ஆசிகளப்பா!!!.... ஆசிகள்!!!



கதிரை மலை பற்றிய விபரங்கள்.

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமம் கதிரைமலை முருகனாலயத்தைத் தரிசிக்க மலையேற வேண்டும்.

கதிர்காமத்திலிருந்து 3 1/2 கிலோ மீட்டர் தொலைவில் ஏழுமலை என அழைக்கப்படும் கதிரைமலை ஆலயத்திற்கு 

 படிக்கட்டுகள் உள்ளன. கதிர்காமத்திற்குச் செல்லும் பக்தர்கள் கதிரைமலைக்கும் செல்வார்கள்.

மலையடிவாரத்திலிருந்து சுமார் 5000 கி.மீட்டர் உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. அந்தக்காலத்தில் மலைஉச்சியில் வேலுடன் கூடிய முருகனாலயம் அமைந்திருந்ததாகக் கூறுவர்.

இன்று வேலுண்டு.

நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் வேலில் நைவேத்தியங்களை (அவல் கடலை பொங்கல்) சாத்தி வழிபாடு செய்கின்றனர். சிவன் ஆலயமும் உள்ளது.அரச மரங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. எங்குமில்லாத குளிர்காற்று வீசிக்கொண்டேயிருப்பது சிறப்பம்சமாகும்.

கதிரமலை மேலே செல்வதற்கு ஜீப் வசதியும் உண்டு.



அடியவர்களுக்கு ஒரு விளக்கம். 


சமீப காலமாக சித்தன் அருள் வலைத்தளத்தில் குருநாதருடைய சித்தர்களுடைய வாக்குகள் படித்து வரும் அடியவர்கள்.. சில கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு விளக்கம். 



அனைத்தும் அறிந்தவர்கள் சித்தர்கள். அஷ்டமா சித்திகளை அடைந்து அகிலத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சித்தர்களுக்கு அனைத்து மொழியும் தெரியும்.. அனைத்து வட்டார வழக்கு மொழியும் தெரியும். 



சித்தர்களுடைய வாக்குகள் எப்படி இருக்கும் என்று தெரியுமா ??? இந்த வாக்குகள் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றது என்று சிலர் கருத்துக்கள் கூறுகின்றனர். 


அகத்தியர் மைந்தன் திரு ஹனுமதாசன் ஐயா காலகட்டத்தில் ஜீவநாடி ஓதும் பொழுது தூய தமிழில் வந்து குருநாதர் வாக்குகள் உரைத்த பொழுது அதில் பல்வேறு சொற்களுக்கு விளக்கம் பொருள் புரியாமல் வேண்டி கேட்டுக்கொண்டு தற்போதைய தமிழில் வந்து வாக்குகள் தாருங்கள் என்று குருநாதரிடம் மன்றாடி கேட்டு குருநாதர் தன்னுடைய வாக்கு நடைமுறையை மாற்றி மக்கள் தற்போதைய காலகட்டத்தில் பேசி வரும் மொழி ஆளுமையில் சித்தர்களும் குருநாதரும் வாக்குகள் தருகின்றனர். 



உண்மையில் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் தான் பாடம் நடத்துவார்... புரியாத மொழியில் புரியாத நடையில் பாடம் நடத்தினால் எப்படி மாணவர்களுக்கு புரியும்??


மாணவர்களுக்கு இருக்கும் புத்திக்கு தகுந்தவாறு தான் பாடம் எடுக்கப்படும். 


இங்கு சித்தர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு வாக்குகள் தந்து அவர்களுக்கு புரியும்படி அவர்கள் பேசும் சொற்களை பயன்படுத்தி வாக்குகள் தந்து நமக்கு புரிய வைக்கின்றனர். 


இல்லை !! இது சித்தர்களின் மொழி இல்லை !! சித்தர்களின் வார்த்தைகள் இப்படி இருக்காது என்றெல்லாம் குழப்பங்கள்.



சித்தர்கள் இப்படித்தான் பேச வேண்டும் இந்த சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் மனிதர்கள் நாம் கட்டாயப்படுத்த முடியாது. 


சித்தர்கள் தகாத வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.. எப்படி இப்படி எல்லாம் அவர்கள் கூறுவார்கள் என்று. 


ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் மனிதர்கள் இங்கு தகாத செயல்களில் ஈடுபடும் பொழுது அவர்கள் செய்யும் தகாத செயல்களை தகாத வார்த்தைகளில் கூறித்தான் புரிய வைக்க முடியும். 


காகபுஜண்டர் மகரிஷி ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என மனிதர்கள் இங்கு செய்வதை அவரது வாக்குகளில் சொல்லி புரிய வைக்கின்றார்..



சித்தர்கள் தங்களுடைய நூல்களில் உதாரணத்திற்கு அகத்தியர் 12000 ஞானக்கோவை சித்த மருத்துவம் இந்த நூல்களில் எல்லாம் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத வகையில் நுணுக்கமாக ரகசியமாக சில மூலிகைகள் மூலிகைகளின் கலவைகள் எப்படி செய்வது என்பதை எல்லாம் மறைமுகமாக சூட்சுமமாக எழுதி வைத்திருப்பார்கள். ஏனென்றால் அதனை அறிந்து கொள்வதற்கு அடிப்படையிலிருந்து பக்குவங்கள் பெற !


படிப்படியாக அந்த ஞானத்தை அடைந்து அந்த பாடலில் இருக்கும் பொருளை புரிந்து கொள்ள முடியும். 


ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் மக்கள் வாழ்வு நலம் பெற அவர்களுடைய மக்களுக்கு புரியும் படி வாக்குகள் தந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றார்கள். 



சரி!! ஒரு உதாரணத்திற்கு சித்தன் அருள் 1670 பதிவு எண் அன்புடன் அகத்தியர் சபரிமலை வாக்கில் 


அதாவது சாதாரண உரைநடை வழியில் 


நீரின் !!!....


நீரிலே ஊற்றி 


ஊற்றிய பின் 


பின் எடுத்து 


எடுத்தபின் அறிந்தும் இதற்கென்ன லாபம் 


லாபம் கிட்டி அறிந்தும் கூட அதையும் தப தப வென ஓட 


ஓடிய நீரை எடுத்து!!!


எடுத்தானாம் ஒருவன் 


ஆனால் வரவில்லையே 


ஆனால் இதற்கு எப்படி பின் எடுத்தால் பின் வருமோ!!!


அறிந்தும் கூட அப்படி பின் எடுத்தால் நிச்சயம் நீரையும் எடுத்து பின் அதாவது அருந்தி விடலாம்!!!


நிச்சயம் உடம்புக்குள் புகுத்தி விடலாம்!!



என்று வாக்குகளில் கூறியிருந்தார் இதன் பொருள் விளக்கத்தை அதாவது சாதாரண தமிழில் கூறிய இந்த வாக்கினை வாக்கில் இருக்கும் பொருளை உணர முடியவில்லை..


 இதற்கு என்ன அர்த்தம்??..

என்று சிலருக்கு உணர்ந்து கொள்ள முடியவில்லை.


புரியவில்லை என்றெல்லாம் அடியவர்கள் பேசியிருந்தார்கள். உண்மைதான்..


வாக்குகள் இடையே இது போன்ற தத்துவங்களையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.


ஆனால் சாதாரண தமிழில் வாக்குகள் வந்தால்....இது எப்படி? என்றெல்லாம் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்.


வாக்குகள் புரிந்து கொள்ளப்பட்டு பின்பற்ற பட வேண்டும் என்பதற்காக தான் சித்தர்கள் தங்கள் வாக்குகளை மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைக்கின்றார்கள்.




உண்மையில் சித்தர்கள்

புரியாததை தெரியாததை ரகசியங்களை புரியும்படி எடுத்துரைத்து மனிதர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தி வாக்குகள் தந்து கொண்டிருப்பதை....


இது சித்தர்கள் வாக்கு அல்ல!!!... சித்தர்கள் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள் என்றெல்லாம் ஏதேதோ தமது கற்பனைக்கு தீனியிட்டு... கருத்துக்களை முன் வைக்காதீர்கள். 


ராஜராஜ சோழனுக்கு எந்த தமிழில் வாக்குகள் தந்திருப்பார்கள்?? ராஜராஜ சோழனிடம் பேசிய தமிழில் இப்பொழுது பேசினால் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா???


மொழி பரிணாம வளர்ச்சி அடைந்து பாதையை மாற்றி சென்று கொண்டிருக்கும் பொழுது!!!


 காலத்தால் கணக்கிட முடியாத சித்தர்கள் அந்த கால ஓட்டத்திற்கு ஏற்ப மக்களின் மனோ நிலைக்கு ஏற்ப கலியுகத்தின் பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப புரியும் படி வாக்குகள் தருவதை உணர்ந்து கொள்ளுங்கள். 


சித்தர்கள் நமது மொழியில் நமக்கு புரியும் வகையில் கருணையோடு மனமிரங்கி நமக்கு புரிய வைப்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி தெரிவித்து வணங்குங்கள்.நன்றி.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தய்யன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  4. அற்புதம் ஐயா... ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete