​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 13 January 2025

சித்தன் அருள் -1772 - திரு.ஹனுமந்த தாசன் அய்யா - அயோத்திப் பட்டினம் வாக்கு - 2!


இங்கு வந்த பிறகு தான், இந்த மலைகளை சுற்றி பார்த்த பிறகுதான்  இதுவே அயோத்திபுரி என்று வாய் திறந்து சொன்னான். ராமனால் ஒரு நல்ல வாக்களிக்கப்பட்டு, இந்த இடம் புனித தலமாயிற்று. அதுவரை மஹான்களின் பிரதேசமாக, வெறும் மிருகங்கள் நடமாடிக்கொண்டிருந்த இடம் இது. 27 மலைகள் இங்கு இருக்கின்றது.

27 மலைகளில், ஒவ்வொரு மலையிலும் ஒரு புனித நதி இன்று, தினம்  ஒவ்வொரு பௌர்ணமி அமாவாசை தோறும் வந்து தன் பங்கை செலவழித்து ராமர் இருந்த  இடத்தை புனிதப்படுத்திக்  கொண்டிருக்கிறது. இதோ இந்த இடத்தில் கூட ஒவ்வாரு ஆறும் ஒவ்வாரு மாதமும் பௌர்ணமி தோறும், அல்லது புனர்பூசம் நட்சத்திரம் தோறும் அந்த புனிதமான நதிகள் எல்லாம் இங்கு வந்து ராமருக்கு பாதத்தால் தங்கள் பாதத்தை நனைத்து ராமரை புனிதப்படுத்தி சென்று கொண்டிருக்கிற காட்சி அகத்தியனுக்கு தெரியும். ஏன் என்றால் இந்த இடம் அவ்வளவு புனிதமான இடம் !!! 

கொடிமரத்தை வெட்டிவிட்டார்கள் என்பது மிக பெரிய குறை. குறையில்லாத மனிதன் யார் ? ராமன் மனிதன் தானே ? அவனுக்கும் குறைகள் இருக்க வேண்டும் என்பதற்காக போல என்னவோ தெரியவில்லை இன்று வரை கொடி மரம் கட்டவில்லை. கொடிமரம் கட்டினால் தான் இதன் பூமியில் சில தோஷங்கள் இருக்கிறது. பூமிக்குளே இன்னும் பல வித தோஷங்கள் இருக்கின்றது. மன்னர்கள் சரியாக ஆளவில்லை. அப்படியே ஆண்டாலும் அந்த களங்கப்பட்ட கையுடன்தான் ராமருக்கு எத்தனையோ அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்ததனால் ராமன் இதை ஏற்கவில்லை. நான் அமைதியாக இருந்துவிட்டு போகிறேன், அந்த களங்கப்பட்ட கையால் அபிஷேகம் செய்ததால் அதை ஏற்கமாட்டேன் என்று ராமனே மன்னனனை விரட்டி அடித்தான். அது முதல் அன்று சென்ற மன்னன் திரும்பவே இல்லை. அது முதல் ராமனின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று எந்தவொரு மன்னனும் எடுத்து எந்த காரியமும் செய்யவில்லை. அனால் இந்த இடம் புனிதமான இடம் மட்டுமல்ல, மலைப்பாங்கான இடம். இதற்கு கீழே ஒன்றை சொல்லப்போனால் தெய்யவ ரகசியம் தான், இருந்தாலும் சொல்லவேண்டிய நிர்பந்தம் அகத்தியனுக்கு இருப்பதனால் சொல்லுகிறேன். இதற்கு கீழே ஏராளமான தங்க, வைர புதையல் எல்லாம் இருகின்றது. புதையல் என்று சொன்னால்  ஆசை வந்து வாயை பிளக்கவேண்டாம்.  புதையல் அத்தனையும் அருமையான புதையல்  , தெய்வத்துக்கு சேர்ந்தது. தெய்வத்துக்காக மக்கள் அளித்த அனைத்து ஆபரணங்களும் அத்தனையும் இதற்குள் அடங்கி இருக்கின்றது.

அதையெல்லாம் என்றைக்காவது ஒருநாள் தோண்டி எடுக்கப்பட்டு , அந்த ஆபரணங்களை இங்கே சாத்திவைக்கப்பட்டு, அதை சீதையும் ராமனும் மகிழ்ந்து, அந்த கண்கொள்ளா காட்சியை இங்குள்ள அனைவரும் என்றாவது ஒரு நாள் காணாத்தான் போகிறீர்கள். அது தான், அப்பொழுதுதான் ராமர் முகத்தை நீங்களே பார்க்கப் போகிறீர்கள் , புன்னகை தவழும்! ராமன் ஆபரணத்துக்கு ஆசைப்பட்டவனல்ல, ஆசைக்கு ஆசைப்பட்டவனல்ல, ஆசை அறுபதையும் தொலைத்தவன் தான். இருந்தாலும் சிறு களங்கம் இருக்கின்றது. மனிதனாக இருந்து நடமாடியதால் என்னமோ தெரியவில்லை, அவனும் சில மனிதருக்குள் உள்ள களங்கம் போலவே  சில களங்கம் அவனுக்கும் இருந்தது. இருந்தாலும் இங்கு வந்து, இலங்காபுரியை அழித்துவிட்டு, அதற்குப்பிறகு நேராக இங்கு வந்து அமர்ந்த பின்புதான், அவ்முகத்திலே சாந்தம் ஏற்பட்டது. அதுவரை கவலை தோய்ந்த ராமனாக இருந்தான். அப்பபோழுது கூட  வசிஷ்டர் வந்து சொன்னார் " ராமா நீ உன் களங்கத்தை மாற்றி விடு அப்படி என்றான். உனக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், நீ ஏற்க்கனவே செய்து விட்டாயே பிராம்ஹத்தி தோஷம், அந்த பிராம்ஹத்தி தோஷத்திற்கு பரிஹாரம் செய்யாமல் நீ பட்டாபிஷேக அரியணை ஏறக்கூடாது என்று, வசிஷ்டரும் சொன்னார் , தூர்வாசரும் சொன்னார்.  ஆக எல்லா முனிவரும் ஒன்று சேர்ந்து ராமனை வேண்டி, உனக்கு பட்டாபிஷேகம் வேண்டும் என்றால், நீ ராமேஸ்வரம் சென்று ஆங்கோர் தில தர்ப்பணம் செய்துவிட்டு அந்த கறையை போக்கிய பிறகுதான் நீ அரியனையேற தகுதி அடைவாய். ஆக கொலை பாதை உள்ள ஒருவன் மன்னனாக இருக்க முடியாது என்று சொல்லி சட்டத்தை வலுயுறுத்தினார்கள், சட்டத்தையும் கேட்டான் அவன். அதற்குப்பிறகு தான் இங்கிருந்து அவன் ராமேஸ்வரம் சென்று, ராமர் தில தர்ப்பணம் செய்து விட்ட பிறகு தான் , அவனுக்கு பட்டாபிஷேகம் நடத்துகின்ற தகுதி ஏற்பட்டது. அதற்கு முன்னால் சின்ன ஆசை , இது தான் அயோத்தி என்று வாய்  திறந்து சொன்னான் என்று சொன்னேனே, அப்போ இதுவே அயோத்தியாக மாறிவிட்டது.

அப்ப இதுவே அயோத்தியாக மாறிவிட்டது. கோபுரங்கள் தெய்வ வாக்கல்லவா , இடமே புனிதமாகிவிட்டது. பொல்லாத மிருகங்களும் ஓடி விட்டது ! அனுகிரங்கள் கிடைத்துவிட்டது ! புனித நதிகள் ஓடி வந்து சேர்ந்தன ! எங்கு நதி இருக்கிறதோ ? எங்கு வற்றாமல் ஜீவநதி ஓடுகிறதோ ? அந்த இடம் புனிதமான இடம் தாண்டா ! அங்கு தான் தெய்வமே இருக்கிறது. வரண்ட பிரதேசத்தில் தெய்வம் இருப்பதில்லை . ஆகவே சுற்றிலும் மலைகள், அருவிகள், சுனைகள் அத்தனையும் இருக்கிற அருமையான இடத்தில் பார்த்து, இந்த ஆனந்தமான வாழ்க்கை தான் எனக்கு வேண்டும் என்றான். எதற்காக இந்த வார்த்தை சொன்னான் என்று அகத்தியன் நானே ராமனிடம் ஒருமுறை கேட்டேன். எதற்காக இந்த வனாந்திர பிரதேசத்தை தேர்ந்தெடுத்தாய்? எதற்கு அயோத்திபுரி என்று ஏன் சொன்னாய்? இதைவிட்டு உனக்கு சிறந்த ஆசனம் இல்லையா ?  ஏன் நீ பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த அயோத்திபுரி உனக்கு அருமையான இடமாக தெரியவில்லையா? எல்லோரும் பிறந்த இடத்தையும் பிறந்த மண் பூமியையும் ஆசைப்பட்டு ஓடுவார்களோ? உனக்கு ஏன் இந்த பிறந்த மண் மீது ஆசை இல்லை என்று கேட்டேன்? அப்பொழுது சொன்னான் பதினான்கு ஆண்டுகள் நான் காட்டிலே வாழ்ந்தவன். எனக்கு காட்டு வாழ்க்கை தான் பிடித்திருக்கிறது. நான் நகரத்துக்கு அரசனாக இருந்தால் கூட காட்டிலே வாழவேண்டும் என்று ஆசை படுகிறேன்.

இது காடல்ல நாடாக மாற்றி காட்டுவேன் ! ஆக எனக்கு இது தான் அயோத்திபுரி என்று வாய் திறந்து சொன்ன அருமையான நாள் இந்த நாள் தான். அதை தான் சொல்லுகிறேன் , இந்த நாளில் இன்னொரு விஷயம் உண்டடா , யாராவது எவராவது தனுக்குத்தானே ஆராதனை செய்து கொள்வார்களா ? மாட்டார்கள். என்றாவது தன் படத்துக்கு தானே பூசை போட்டு, தான் அகம் மகிழ்ந்து கொண்டிருப்பார்களா ? மாட்டார்கள். அதே ராமன் இன்றைய தினம், திருவரங்கத்துக்கு சென்று, எம்பெருமானை கண்டு, அவருக்கு தன் கையால் ஆராதனை செய்த நாள் இந்த நாள் தான் ! இந்த வைகுண்ட ஏகாதசி அன்று தான், இதே ராமன் ஸ்ரீரங்கத்துக்கு சென்று, தனக்கு தானே ஆராதனை பண்ணிக் கொண்ட அருமையான இடம் தான் திருவரங்கம் ! அந்த புனிதமான நல்ல நாளில் தான் , உங்களையெல்லாம் இங்கு வரவழைத்து, ராமரின் பெருமையை சொன்னேன் ! இங்கும் அருமையான மூலிகைகள் இருக்கிறது ! அவ்வுயிரை காக்கும் மூலிகைகள் இருக்கிறது ! உலகத்தில் எந்த நோய்ப்பட்டாலும் ?  எந்த காத்துப்பட்டாலும் ? போகக்க்கூடிய அற்புதமான மூலிகைகள் இருக்கின்றது ! அதர்வண வேதம் என்று சொல்லக்கூடிய நாலாவது வேதம், அதை யக்ஷினி என்ற தேவதையின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. அதை  யக்ஷினி வேதத்தை  வைத்து அவர்களை எல்லாமே ஒருவனை வாழவிட மாட்டார்கள், சில காலமே துவண்டு போய்விடுவார்கள். இந்த யக்ஷினி என்ற தெய்வத்தை எல்லாம் அடக்கி , அந்த தெய்வத்தை போக்க கூடிய சக்தி இந்த மூலிகைக்கு இருக்கிறது. அந்த மூலிகை இந்த பக்கத்தில் இருந்து ஏழாவது காதம், காதம்  என்றால் மைல், 7 வது மைலில் 27வது மலை இருக்கிறதே, அந்த மலையின் நடுவில் அற்புதமான சுனை உண்டு. சுனைக்கு பக்கத்தில் தென்னங்கீற்று உண்டு. தென்னங்கீற்றுக்கு இடது பக்கத்தில் சென்றால் அந்த மூலிகை இருக்கிறது. அந்த மூலிகை சாற்றை, யாராவது ஒருவர் எவராவது மேலே தடவிக்கொண்டால் போதும், அவனுக்கு அதர்வண வேதத்தால் எந்த எத்தனை செய்வினைகள் இருந்தாலும் , எத்தனை மோசமான விதிகள் இருந்தாலும் அந்த இலை பட்டாலே அத்தனையும் பொடிப் பொடியாக ஓய்ந்துவிடும் . அந்த துர்த்தேவதை இங்கிருந்து ஓடஓட விரட்டி அடிக்கப்படுவாள். ஒரு மூலிகை ஒரு தேவதையை விரட்டி அடிக்கும் சம்பவம் இங்கு தான் நடந்திருக்கிறது. அந்த அருட்பெரும் காரியத்த செய்தவன் எல்லாம் ராமன் தான். ராமனுடைய சக்ராயுதம் ராமனுடைய வில் அங்கு சென்று அமர்ந்திருக்கிறது ! பொதுவாய் இன்னொரு கதையும் உண்டடா, அதையும் சொல்லித்தான் ஆகவேண்டும் இன்று.

ஆங்கொரு நாள் விளையாட்டாக ஒரு கதை சொல்லுவார்கள் , ராமர் ஒரு சமயம் அங்கு நதி கரை பக்கத்தில் செல்லுகின்ற பொழுது, தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுது , தன் கையில் உள்ள வில்லையும் அம்பாரியையும் மரத்திலே மாட்டி வைக்க வேண்டும் , அல்லது வீரனுக்கு அழகு அந்த அம்பை கீழே மண்ணில் குத்தி வைக்கவேண்டும், படுக்க வைக்க கூடாது . படுக்க வைத்தால் அது துக்கத்துக்கு அணிகலன் என்று பெயர். ஆகவே அந்த சமயத்தில் ராமன், தன் அம்பாரியை அருகில் உள்ள மரத்தில் மாட்டி விட்டு, அம்பது வில்லை பூமியிலே குத்திவிட்டு நீராட சென்றான். நீராடிவிட்டு தந்தைக்கு வேண்டிய தர்பணங்களையெல்லாம் செய்து விட்டு , மீண்டும் கரைக்கு வந்த பொழுது அம்பை எடுத்தான் , அம்பிலே, அம்பின் நுனியிலே ரத்தம் இருந்தது . எப்படி ரத்தம் வந்தது என்று யோசித்து பார்க்கும் பொழுது, ஆங்கோர் தவளை துடித்து கொண்டிருந்தது , அந்த தவளையை பார்த்து கேட்டான் அய்யய்யோ அநியாயமாக தவளையை கொன்றுவிட்டேனே ? என்றான். எப்படிப்பட்ட ராமன் சொன்னான் , ராவணனனை கொன்றவன் , அந்த கொன்றுவிட்டு , ஆயிரக்கணக்கான அசுரர்களை  எல்லாம் அழித்துவிட்டு, அரக்கர்களை அழித்துவிட்ட அந்த குணமுடையவன் சொல்லுகிறான், ஒரு தவளையின் நெஞ்சிலே ரத்தம் வந்துவிட்டதே என்றான் துடிக்கிறான் . எவ்வளவு  இரக்கமான மனிதன் எவ்வளவு  பெரிய காரியத்தை செய்திருக்கிறான் பாருங்கள் ! வித்தியாசம் தெரிகின்றதா ? அரக்கனை கொல்லக்கூடிய தைரியம் இருந்ததே ? அனால் ஒரு சாதாரண தவளையை கொன்றுவிட்டோமே என்று துடிதுடித்து போனான். அப்பொழுது கேட்டான் தவளையே தவளையே நான் குத்தும் பொது நீ கத்த கூடாதா ? ராமன் கேட்டான். அதற்கு தவளை சொல்லிற்று , சதா சர்வ களமும் நான் எப்பொழுதுமே , ராமா ராமா என்று உன்னையே த்யானம் செய்து கொண்டிருப்பேன், அந்த ராமனே என்னை கத்தியால் குத்தினால் , நான் வேறு எங்கு போவேன் ? எப்படிடா வாய் திறந்து சொல்லுவேன் என்று சொன்னதாம். அந்த அருமையான இடம் கூட , நடந்த சம்பவம் கூட இதே இடத்தில் தான்.

ஆகவே மிகப்பெரிய தத்துவத்தை உலகத்துக்கு உணர்த்திய இடம் இது . அந்த அருமையான தத்துவத்தையெல்லாம் ராமர் இதுபோல ஏறத்தாழ 7417  தத்துவங்களை , உலகமகளுக்கு வழங்கிய புண்ணியமான இடம் இது. நிறைய பேருக்கு தெரியவில்லை. போலிகள் இப்போது நடமாடிக்கொண்டிருக்குக்கிற காலத்தால் எல்லா மக்களும் அங்கு எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள் . இன்றைக்கு இங்கு வருகிற அத்தனைபேருமே ராமரின் அன்புக்கு பாத்திரமானவர்கள். ராமர் ஆசை பட்டு கட்டி தழுவி மெய்சேர்த்து ஐந்து பேர்களை தன் பக்கம் சகோதர்களாக ஏற்று கொண்டார். கூடப்பிறந்த சகோதரர் தவிர குஹனை ஏற்றான் , விபீஷணனை ஏற்றான் , இப்படி பல அனுமனை ஏற்றான். அப்படிப்பட்ட சமயத்தில் கூட அவன் ஆசை பட்டதெல்லாம் மிக சாதாரண மனிதர்களே. நன்று உற்று கவனியுங்கள் இதில் அருமையான கருத்து விளங்கும். மிருகங்களை துணைக்கு வைத்துக்கொண்டான். தாழ்குலத்தை சேர்ந்த வேடனை கட்டி தழுவிக் கொண்டான். அண்ணனை காட்டிக் கொடுத்த விபீஷணன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் , அவனையும் அரவணைத்துக் கொண்டான். வித்தியாசமான ஆட்களோடு ராமன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது ராமனுக்கு ஒன்றே ஒன்று நன்றாக தெரிகிறது , அவனுக்கு பணம் பதவி ஆசை மகிழ் தேவையில்லை, மிக சாதாரணமான மக்களே தனக்கு வேண்டும் என்று சொன்னானே ? நாமெல்லாம் சாதாரண மக்கள் தானே , உங்களையெல்லாம் அரவணைத்துக் கொண்டிருக்கிறான். இன்றைய தினம் நீங்கள் எல்லாம் வந்து பார்த்தீர்கள் அல்லவா ? நீங்கள் எல்லாம் ராம தரிசனம் கண்டீர்கள் அல்லவா ? இந்த தரிசனம் வெறும் கல்சிலையயை கண்டுவிட்டு திரும்புவதாக எண்ணி விடக்கூடாது . ராமர் அங்கு உயிரோடு இருக்கிறார் ! ஆத்மாவாக இருக்கிறார் ! அவரது கருணை தான் உங்களுக்கு விழுந்திருக்கிறது ! அவர் ஆசைப்பட்டார் , யாரேனும் நல்ல உள்ளம் கொண்ட யாரும் வரமாட்டார்களா ? அவர்களை கட்டித்தழுவி ஆனந்திக்கப் படமாட்டேனோ என்று ஆசை பட்டன் ராமன். ஆக அந்த ராமனின் ஆசை இன்று  நிறைவேறியிருக்கிறது. காரணம் நல்ல உள்ளங்கள் , ராமரின் மேல் அவா கொண்டவர்கள் . வேறு எங்கும் ஆடு மந்தையை போல் பின்னல் செல்லாமல் அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டு ஓடிவந்திருக்கிறாய் எல்லா வேலையையும் விட்டுவிட்டு. அப்படிப்பட்ட உன்னைத்தான் வாசலில் விழிவைத்து காத்திருந்தான். அந்த ராமனின் கருணை உங்கள் அத்தனை பேருக்கும்  கிடைத்திருக்கிறது. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக, ஜெய் ஶ்ரீ ராம் 🙏

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha .
    "ராமர் இதுபோல ஏறத்தாழ 7417 தத்துவங்களை , உலகமகளுக்கு வழங்கிய புண்ணியமான இடம்". What is the 7417 concept?
    Regards
    Chitra

    ReplyDelete
  3. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA. SRIRAM JAYARAM JAYA JAYA RAM

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  5. வணக்கம் 🙏
    Any ladies or any group including ladies, who are planning to go to Mahakumbhamela please let me know, I would like to join 🙏

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete