​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 24 January 2025

சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா.








8/1/2025 அன்று திருமூலர் சித்தர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்.பிரம்பனன் இந்தோனேஷியா.

பாரெங்கும் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் இறைவா போற்றி!!!

போற்றியே நின் தாள் பணிந்து பின் பரப்புகின்றேன் மூலனவனே!!!

நமச்சிவாய! நமச்சிவாய!! நமச்சிவாயனே!!!

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!

அல்லலன்றி போகும்போது உன்னையன்றி யாரும் இல்லை நமச்சிவாயனே!!

அன்பு என்ற சொல்லுக்கு அடைக்கலமானவனே!!!

உண்மைப் பொருளுக்கு விளக்கமானவனே!!

துயரம் துன்பம் போக்குபவனே நமச்சிவாயனே!!

நமச்சிவாயனே!!
அன்பு கருணை நிறைந்தவனே நமச்சிவாயனே!!
நமச்சிவாயனே!!

அன்பு தன்னில் காட்டி தன்னை அணைத்துக்கொள்ளும் நமச்சிவாயனே!!!

இருளை நீக்கி ஒளியை புகுத்தும் நமச்சிவாயனே 
உலகத்தை காத்தருளும் நமச்சிவாயனே 

துன்பம் அதை போக்கி நின்று இன்பத்தை அளிக்கும் நமச்சிவாயனே!!

அன்பு உள்ளம் கொண்டவனே நமச்சிவாயனே 

ஊழி எங்கும் நின்றபோதிலும் நமச்சிவாயனே 

இன்பம் துன்பம் யாவையும் நமச்சிவாயனே 

இன்பத்தை அளிப்பவனே நமச்சிவாயனே 
துன்பத்தை அழித்து பின் இன்பத்தை கூட்டிடும் நமச்சிவாயனே

ஆறு எங்கும் ஏழு எங்கும் எட்டு எங்கும் நவ என்பது என்னவென்று புரிந்த தந்தையே 

புரிந்த பொழுதும் மக்களுக்கு புரியவில்லையே 

உன்னை தாள் வணங்கியும் என்று மக்களுக்கு புரியவில்லையே.. நமச்சிவாயா என்று சொல்லி உன்னை அழைக்கவே!!! உன்னை அழைக்கவே!!

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!

பல மக்கள் உன்னைப் தொழுது நமச்சிவாய மந்திரத்தை ஓதுகின்றனர். 

ஆனாலும் புத்தி கெட்டு அறிந்து உண்மை தெரியாமல் பேசுகின்றனர். 

 அன்பை மட்டும் உன்னிடத்தில் செலுத்தினால் மட்டும் போதுமே நமச்சிவாயனே

வேறொன்றும் தேவையில்லை என்று உணர்வதில்லையே மனிதனே 

மனிதனே அனைத்தும் வேண்டும் அனைத்தும் வேண்டும் என்று உன்னிடத்தில் வருகின்றார். 

நமச்சிவாயா நமச்சிவாய அன்பு நிறைந்தவனே. 

அனைவரும் வந்து உன்னை தொழுதெய்தினால் நமச்சிவாயம் அனைத்திலும் இருப்பவனே 

வேறொன்றுமில்லை அனைத்தும் நீயே என்று மனிதர் இருந்தால் மட்டும் போதுமே 

அனைத்தையும் கருணை மிகுந்து அளித்திடும் நமச்சிவாயனே!!

அன்பு கொண்டு நமச்சிவாயம் என்று ஓதுமே அனைத்தும் கொடுத்து அருளிடுவான் நமச்சிவாயனே 

மனதில் என்ன நினைத்தாலும் அதை தன்னை கொடுத்திடாது நமச்சிவாயனே...

அன்பு மட்டும் போதும் என்று நமச்சிவாயனே!!

அன்பு மட்டும் போதும் உன்னை மட்டும் தொழுகையில் எந்தனுக்கு எதுவும் தேவையில்லை என்று வணங்கினால் மட்டும் போதுமே போதுமே நமச்சிவாயனே 

கருணை மிகுந்தவனே நமச்சிவாயனே 
மானிடர்கள் எல்லாம் உன்னை நினைத்து நினைத்து நமச்சிவாய நமச்சிவாய என்று தொழுது ஒன்றுமில்லாமல் நீயும் கூட அமைதி காத்திடுவாய். 

ஏன் எதற்கு என்று மனிதன் தெரிவதில்லையே!!! அறிவதில்லையே!!!
புரிவதில்லையே!!!

நீ மட்டும் காதினால் அன்பை மட்டும் செலுத்து என்று அவர்களுக்கு ஓதிட அவர்கள் அவ் பக்தியில் நிலையில்லாமல் அதைக் கேட்காமல் நிச்சயம் தன்னில் எங்கெங்கோ ஓட!!

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!

உலகத்தை தன் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் நமச்சிவாயனே 

சூல்வினை பெருமூளை பெரு குடல் சிறு குடல் அனைத்தும் இயக்குபவனே. பெருங்குடல் சிறுகுடல் அங்கே இருக்கும் நமச்சிவாயனே.. அதிலிருந்து அனைத்தும் தரும் நமச்சிவாயனே 

மனிதனை படைத்து மனிதனை இயக்கி மனிதனை அழிப்பதில் வல்லமையானே

கொடுப்பதிலும் வல்லமையானே கொடுப்பதில் வல்லமை உள்ளோன்தானே 

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே 
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே 

உண்மை பொருளே நமச்சிவாயமே உண்மை பொருள் நமச்சிவாயமே 
பாவங்களை கொடுத்து தன் புண்ணியங்களை தீர்ப்புடன் சரியாக பாவம் தனையும் புண்ணியம் தனையும் சேர்த்து தன்னை பின் நல்லோர்க்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் நமச்சிவாயனே நமச்சிவாயனே 

பாவம் ஆயினும் புண்ணியம் ஆயினும் இவை இரண்டும் நிச்சயம் தன்னில் மனிதனை தாக்கும் என்பதை நிரூபித்து சரியான போக்கை காட்டி உய்ய வைத்திடும் நமச்சிவாயனே 
உயர்வு தன்னை மக்களுக்கு கொடுத்திடும் நமச்சிவாயனே 

படைத்தலும் காத்தலும் அழித்தலும் நமச்சிவாயனே 
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே 

கிரகங்களை ஆட்டிப்படைக்கும் நமச்சிவாயனே!! நமச்சிவாயனே!!

உலகமெங்கும் அன்பு பெருக... அன்பு தனில் இருந்தால் அனைத்தையும் வெல்லும்.. சாதனையை கொடுக்கும் நமச்சிவாயனே 
திறமையே நமச்சிவாயனே 
திறமையை நமச்சிவாயனே 
வெற்றியே நமச்சிவாயனே 

அன்பனே நமச்சிவாயனே 
நண்பனே நமச்சிவாயனே 

அகால மரணம் அடைந்திருந்தும் தன் கருணையால் வந்து நின்று நிச்சயம் இல்லாதவர்களை தன் பால் அணைக்கும் சொந்தக்காரனே...

சொந்த பந்தங்கள் அனைத்தும் விட்டொழித்தாலும் கட்டி அணைத்து கொள்ளுபவன் அன்பு நிறைந்த நமச்சிவாயனே. 

மக்களுக்கு புரியாமல் அலைந்து திரிந்து நமச்சிவாயனே... புத்தி கெட்ட மனிதர்கள் தன்னை நமச்சிவாய நமச்சிவாய!!   என்று புரியாமல் அழைக்கின்றார்களே!!

புரியும்படி நிச்சயம் தன்னில் நீயும் தன்னை பல மடங்கு நிச்சயம் தன்னை பல ஆண்டுகள் நமச்சிவாயனே 

நமச்சிவாயன் என்ற நாமத்தை சொல்லி சொல்லி பக்குவங்கள் பட்டுப்பட்டு அன்பு என்னும் உள்ளத்தில் உதிக்கும் நமச்சிவாயனே 

உதித்த பிறகு ஒன்றும் தேவையில்லை என்று மனிதன் நின்ற பொழுது 
அப்பொழுதுதான் அனைத்தும் தருவாய் நமச்சிவாயனே. 

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே 
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே. 

நிற்பதும் நடப்பதும் உன் செயலாலே!! உயிரையும் இயக்குவது உன் செயலாலே!! அள்ளிக் கொடுப்பதில் வல்லமை படைத்த அருளாளனே
நின் மனதில் பரிசுத்தமானவனே

பிரபுவே! கீர்த்தியே! நமச்சிவாயனே! 
உண்மை பொருள் என்பது மெய்ப்பொருள் காண்பதே நமச்சிவாயனே 
அன்பனையும் கந்தனையும் ஒன்று சேர்த்து பின் பொறுத்த போதிலும் நமச்சிவாயனே 

படைத்தலும் காத்தலும் அழித்தலும் இதனை ஒன்றாக சேர்த்து தொழில் செய்யும் நமச்சிவாயனே 

எவ் நிலையில் மனிதன் இருந்தாலும் மோட்சத்தை அளிக்கும் நமச்சிவாயனே 
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே. 

துன்பம் ஒன்றை போற்றி அதன் மூலம் வெற்றியை கொடுக்கும் நமச்சிவாயனே 
இன்பம் ஒன்றை கொடுத்து வாழ்க்கை ஒன்றும் இல்லை என்று தீர்மானித்த பிறகும் அனுபவிக்கும் வல்லமை பின் கொடுப்பதில் வல்லமையானவனே

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே எங்கும் நிறைந்த நமச்சிவாயனே எதிலும் நிறைந்த நமச்சிவாயனே அகிலம் நிறைந்த நமச்சிவாயனே 
கடலில் நிறைந்த நமச்சிவாயனே 

சூரியனே 
சந்திரனே 
ராகுவே 
கேதுவே 
குருவே 
புதனே 
நமச்சிவாயனே 
செவ்வாயே 
சனியே 
நமச்சிவாயனே 
சுங்கனே
நமச்சிவாயனே 
மாந்தியே
நமச்சிவாயனே 

மனிதர்கள் ஜாதகங்கள் எப்படி என்று அறியாமல் தெரியாமல் பின் உலவுகின்ற போதிலும் நமச்சிவாயனே 

மாந்தி ஒன்று மறைமுகமாக செயல்படுகின்றது என்று தெரியாமல் போனதற்கு காரணங்கள் பல உண்டு நமச்சிவாயனே!!!!

மாந்தியை சொருகியே மனிதன் சொல்வதெல்லாம் உண்மை என்று நிரூபிக்க ஜாதகத்தில் மாந்தியை புகுத்துபவனே!!

வகுத்தவனே வல்லமையில் வல்லமைக்காரனே!!!

வல்லமை தள்ளாமை நேர்மையை பிடித்த போதிலும் இதன் தன்மை நிச்சயித்த வாழ்க்கை தன் அமைக்க முடியவில்லையே

ஏன் இந்த மாற்றங்கள் என்றெல்லாம் மனிதனுக்கு தோன்றுகின்ற பாதையில் மனிதனே அன்பை காட்டி அணைத்து கொண்டமை.. அணைத்து கொண்டு அனைத்தும் தருபவனே நமச்சிவாயனே!!

ஈடு இணை இல்லாத வல்லமை கொண்டவனே 
அன்பு மட்டும் போதும் என்று இங்கே அமர்ந்தாய்!! அன்பு மட்டும் போதும் என்று இங்கே அமர்ந்தாய்!!

ஏதும் எனக்கு தேவையில்லை அன்பு மட்டும் காட்டி என்னை தொழுவோருக்கு ஆசிகளை வழங்கி இன்னும் பன்மடங்கு உயர்வுகள் கொடுக்கும் நமச்சிவாயனே 

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!

உன்னிலே யான் இருந்தபோது அனைத்தும் நீ காட்ட நமச்சிவாயனே 
ஊழ்வினை அகற்றுபவனே நமச்சிவாயனே 

இன்பமும் துன்பமும் ஆணும் பெண்ணும் அனைத்தும் நமச்சிவாயனே!!
இரவும் பகலும் நமச்சிவாயனே!!!

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!

பிரம்மாவே !!
 விஷ்ணுவே  !!
 முருகனே !!
 கணபதியே !!
 சபரியே !!
ஈசனே!!
 போற்றியே !! போற்றியே!! போற்றியே!! போற்றியே!!

காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி மதுரை மீனாட்சி அனைத்தும் நமச்சிவாயனே

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!

பைரவனை !!துர்கையை !!
நிச்சயம் தன் தலைமுடியில் சுற்றி இருக்கும் நமச்சிவாயனே... வராகியும்  அனைத்து உருவையும் காக்கும் ஈசனே

அனைத்தும் நிரூபிக்கும் இறைவன் ஒன்றே நமச்சிவாயனே!!!! அனைவரும் ஒன்றே நமச்சிவாயனே!!!

அனைத்தும் நமச்சிவாயனே!!!
அனைத்தும் நமச்சிவாயனே!!!

திறமையும் சோம்பேறித்தனமும் இருந்தபோதிலும் அனைத்தும் இவைதன் கூட்டி நல்முறையாக்க வெற்றியை தருவதில் பின் வல்லவனே!! வல்லவனே!!!

இங்கெல்லாம் உனையெல்லாம் காண ஆள் இல்லையே 

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!

ஆளில்லாமல் நீ இங்கு இன்று தனியாக நிற்க யாங்கள் நிச்சயம் தன்னில் 
இங்கோ அமர்ந்து நிச்சயம் உன்னை சுற்றி உள்ளோம்..

இதற்காகவாவது வருவாய் காப்பாய் மனிதனை நமச்சிவாயனே..

ஈசனே நமச்சிவாயனே பெருமானே நமச்சிவாயனே 
அனாதையே நமச்சிவாயனே 

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!

மனிதர்கள் தவறு செய்வோரை பொறுத்தருளும் நமச்சிவாயனே!!!

தந்தை போல் இருந்து காக்கும் நமச்சிவாயனே!!
தாயைப் போன்றுதனையும்... நமச்சிவாயனே. 

அனைவரையும் சமமாக பார்க்கும் நமச்சிவாயனே 
அனைத்தும் நீயே நமச்சிவாயனே!!!
அனைத்தும் நீயே நமச்சிவாயனே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. GURUVE SARANAM SARANAM. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. நாளும் நமசிவாயனே கோளும் நமசிவாயனே எங்கும் நமசிவாயம் எதிலும் நமசிவாயம்

    ReplyDelete
  4. om namashivaya
    om namashivaya
    om namashivaya
    guruvadi saranam
    tiruvadi saranam

    nanri ayyane

    ReplyDelete
  5. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    சித்தன் அருள் - 1785 - அன்புடன் திருமூலர் சித்தர் பாடல் வாக்கு - அனைத்தும் நீயே நமச்சிவாயனே!!!

    YouTube Link to the song
    https://www.youtube.com/watch?v=BuELLEKEvmw

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  6. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!

    ReplyDelete
  7. அகத்தியர் அய்யா போற்றி போற்றி போற்றி , நம்ம பாரதத்தில் வடக்கே மஹாகும்பமேளா கொண்டாடி வராங்க. முக்கடல்ல மூழ்கி குளிச்சு புண்ணியத்த தேடிக்கிறாங்க. நாம இங்க அந்த புண்ணியத்தை பெற என்ன செய்ய வேண்டும். கேட்டு சொன்னா நல்ல இருக்கும். அவ்வள தூரம் போக முடியாதவங்க என்ன செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் திருவடிகள் சரணம்

      வணக்கம். உங்கள் கேள்விக்கான பதில் பின் வரும் பதிவில்

      சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!
      https://siththanarul.blogspot.com/2024/10/1710.html

      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete
    2. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

      உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி (கங்கை, யமுனை, சரசுவதி) சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள்
      https://siththanarul.blogspot.com/2025/01/1790.html
      சித்தன் அருள் - 1790 - மௌனி அமாவாசை வாக்கு!

      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
      சர்வம் சிவார்ப்பணம்!!!!!

      Delete