​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 16 January 2025

சித்தன் அருள் - 1777 - அகத்தியப்பெருமானின் விளக்கம்!


கேள்வி; ஒரு மனிதன் தான் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் மனசாட்சி தான் உண்மையாக சொல்லும். உதாரணமாக, நான் நல்லவனா என்பதை இறைவனும் சித்தர்களும் தான் கூற வேண்டும். ஆனால், நான் கெட்டவன் இல்லை/கெட்டவன்தான் என்பதை எந்நாளும் தீர்மானிக்க முடியும். ஒரு புண்ணிய தலத்தில் கெட்டவர்கள் கை ஓங்கி இருக்கவும், எளியோர்கள் அத்தனை சிரமங்களையும் அனுபவிப்பதை இறைவன் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்?

அகத்தியர்: இறைவன் ஏன் மனிதனை படைக்கிறான்? ஏன் தவறு செய்பவர்களை ஊக்குவிக்கிறான், என்று கூறு!

அடியவர்: அவருக்கு தன் திருவிளையாடலை நடந்த மனிதர்களும், கெட்டவர்களும் தேவை, அதனால்.

அகத்தியர்: ஆம். அனைவரும் கர்மாவில் விழுந்து சிரமங்களை அனுபவிக்கும் பொழுதுதான் சித்தர்கள் அவர்களிடம் வருவார்கள். யாருக்கு சித்தர்கள் மனமிறங்குவார்கள்? துன்பத்தில் உழல்பவர்களுக்குத்தான். துன்பம் வந்தவனுக்குத்தான் உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும். மனிதன் எத்தனையோ பிறவிகள் எடுக்கிறான். உடலை நீத்தபின், இவ் ஆத்மா, அழுது கொண்டே போகுமப்பா. ஆனாலும் யாங்கள் வழியிலிருப்போம். ஐயோ! இவன் இவ்வாறு எல்லாம் பாபங்கள் செய்து விட்டானே என்று. மீண்டும், எங்களை தாண்டித்தான் இவ் ஆன்மா செல்லவேண்டும் அப்பனே. சிலபேருக்கு தெரியுமப்பா. எங்கள் கைகளை பிடித்துக் கொண்டு அழும் போது, நிச்சயம் அடுத்த பிறவியில் யான் வந்து வழி காட்டுகிறேன் என்று கூறுவேன். அதனால் தான் இப்பொழுதும் வந்து வழி காட்டிக் கொண்டிருக்கின்றேன்.  சித்தன் யார் என்பதை இன்னும் புரியாத நிலையில்தான் இருக்கின்றான் மனிதன். புரிந்து கொண்டால், ஒன்று அவன் இறக்க வேண்டும், அல்லது சன்யாசம் வாங்கி காட்டில் போக வேண்டும். சித்தனுக்கு எதுவுமே தேவை இல்லை. மனிதன் மனசாட்ச்சியோடு வாழ்ந்தால் போதுமப்பா.  அப்பனே துன்பத்தை கடந்து வந்துவிட்டால், நாள் ஏது, கோள் ஏது, நட்சத்திரம் ஏது, இறைவனும் ஏதப்பா?

கேள்வி: இறைவன் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை மனிதனுக்கு உணர்த்திவிட்டால், அவன் பிற மனிதர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு செல்ல மாட்டான் அல்லவா?

அகத்தியர்: நாங்கள் தான் அதற்கான வழியை காட்டி கூறுகின்றோமே. இருந்தாலும் இவன் பிற மனிதன் கூறுவதை நம்பி சென்று கர்மாவை வாங்கிக்கொள்கிறான். அப்பனே! மனிதன் துன்பப்பட வேண்டும். துன்பப் பட்டுவிட்டால், நீ எங்கு அமர்ந்திருந்தாலும், இறைவன் அங்கு வருவானப்பா. இறைவன் தாயை போன்றவன். நீ அழைத்தால் வராமல் இருப்பானா? தவறு செய்கிற மனிதனை கூட இழுத்து வந்து புத்திகள் கூறிக் கொண்டிருக்கின்றோம். அப்பனே! எங்களுக்கு அனைத்தும் ஒன்றுதான் அப்பனே. அப்பனே, முடிந்தால் சொல்லித் திருத்துவோம். முடியாவிட்டால், அடித்து திருத்துவோம், அவ்வளவுதான்.  எங்களை தேடி வந்து பின்பற்றுபவர்களும் கூட தவறு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். பொறுத்துக்க கொண்டு இருக்கின்றோம். மனிதன் உடனேயே தண்டனை கொடுத்து விடுவான். யாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கின்றோம். தண்டனை கொடுத்தால், ஒரு போதும் மறக்க மாட்டானப்பா!

பெற்றோரையும், இல்லறத்தையும் விட்டு விட்டு என்னை வந்து வணங்கினால், கொடுப்பதற்கு நான் என்ன முட்டாளா? முதலில் உன் கடமைகளை ஒழுங்காக செய். அவனை நோக்கி யான் இல்லத்தை தேடி வருவேனப்பா. அனைவர் மனதையும் புண் படுத்தி, தாய் தந்தையரையும் புண்படுத்தி வாழ்ந்தால், இறைவன் கூட ஏற்றுக் கொள்ள மாட்டானப்பா. நீ வேண்டுமானால் கூறி கொள்ளலாம் நான் சித்தனின் பக்தன் என்று.  

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. உங்கள் மகத்தான உதவிக்கு மிக்க நன்றி மதிப்பிற்குரிய ஐயா. இந்த மகத்தான சேவையை தொடருங்கள். இந்த பக்கத்தை தொடர்ந்து புதுப்பித்து சுவாமி அகத்தியரின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறோம். இதை எங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete