( வணக்கம் அடியவர்களே. ஏப்ரல் 2024 - கோவையில் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் ஒரு சத்சங்கம் நடந்து முடிந்தது. அதில் காகபுசண்ட மாமுனிவர் பல முக்கிய வாக்கு உரைத்தார்கள். அவ் வாக்கில் உள்ள முக்கிய வாக்குகளை , வாக்கு சுருக்கமாக இங்கு காண்போம்.)
நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் புசண்டனவன்.
1. (உலகத்தில் தர்மத்தின் நிலை.) தான தர்மங்கள் இதைச் செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அதைச் செய்வதே இல்லை. மனிதன் ஒரு முட்டாளே.
2. (சித்தர்கள் இறங்கி வந்து விட்டனர்.) யாங்கள் மலைதன்னில் வாழ்கின்றோமே என்று. ஆனால் இதுவரை விட்டு விட்டோம். கீழே இறங்கி விட்டோம். பின் அடி பலமாகக் கொடுக்க ஏற்பாடுகள். ஏனென்றால் தர்மங்கள் மனிதனிடத்திலே இல்லை. பொய் சொல்லி நடித்துக்கொண்டிருக்கின்றான். சித்தன் பற்றிய ரகசியங்கள் யாருக்குமே தெரிவதில்லை.
3. கலியுகத்தில் திருடர்கள்தான் மிச்சம்.
4. மனிதன் வாயா ஜாலன். பொய் கூறுவதில் மாயா ஜாலன்.
5. அனைவரிடத்திலுமே ஒரு சக்தி இருக்கின்றது. அதை வெளிக்காட்டத் தெரியவில்லை. அகத்தியன் அனைவருக்குமே சக்தி கொடுத்திட்டான். ( புண்ணியம் செய்யாமல் மனிதர்களை நம்பியதால் அவ் சக்தி செயல்படாது. நேரடியாக இறைவனை, சித்தர்களை மட்டும் நம்புங்கள். பணம் பறிக்கும் மனித குரு உங்கள் தரித்திரம் என்று உணருங்கள்.)
6. மனிதனை மிதித்தால்தான் நிச்சயம் உலகம் நிமிர்ந்து வாழும்.
7. சித்தன் வழியில் வருபவனுக்குத் தர்மத்தைப் போதிக்க வேண்டுமே தவிர, அவை செய் செய் என்றெல்லாம் சொல்லக்கூடாது. இதிலிலே தோல்வி அடைந்து விடுகின்றான். எவ்வாறு எங்கள் பக்தனாவான்?
8. ( தர்மங்கள் செய்யாமல் ) வாழத்தெரியாமல் வாழ்ந்து வருகின்றான். தன் வினைக்கு தானேதான் காரணம்.
9. அங்கே தீயவை உள்ளது என்று சொல்கின்றார்கள். அங்கேயேதான் மனிதன் காலடி வைக்கின்றான் மனிதன்.
10. ( பரிகாரங்கள் ) பொய் என்று உணர்ந்து விட்டாயா?
11. எப்பொழுது உனை நீ நம்பி செல்கின்றாயோ அப்பொழுது உயர்வுகள். நீ அடுத்தவனை நம்பி சென்றால் வாழ்க்கையே பறிபோய் விடும். ( இறைவனை , சித்தர்களை நம்பாமல் - பணம் பறிக்கும் தரித்திரம் பிடித்த மனித குருவை நாடிச் சென்றால் வாழ்க்கை பறிபோய்விடும். )
12. எங்களால் விதியை மாற்ற முடியும்.
13. ( புண்ணியம் செய்யும் ) தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத் தகுதியை வளர்த்துக் கொண்டாலே அனைத்தும் நிச்சயம் யாங்கள் கொடுப்போம். அத் தகுதி இல்லை என்றால் மனிதன் அதாவது கொடுத்தாலும் எங்கேயோ பின் மாயையை தேர்ந்தெடுத்து அனைத்தும் அழித்து விடுவான். சோம்பேறிகள்.
14. நம்மால் முடியாது என்றால் முடியாமல் போய்விடும். ஆனால் முடியும் என்றால் நிச்சயம் ( செய்ய முடியும் ). ஆனால் அது வருவதில்லையே. ஏன்?
15. பாவ புண்ணியத்தை மனிதனால் நீக்க முடியுமா? எப்படி நீக்க முடியும்? மனிதன் புண்ணியங்கள் செய்கின்றானா?
16. தர்மம் தலை கீழாகச் சென்று கொண்டிருக்கின்றது. நிமிர்த்த வேண்டும். (தர்மம் செய்யாமல் இருந்தால் இனி) அடிதான்.
17. பக்தியைச் சொல்லிச்சொல்லி மனிதன் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றான்.
18. ( ஏன் பரிகாரங்கள் தோல்வி அடைகின்றன?) பாவம் புண்ணியங்கள் சரிபார்கப்பட்டது பிறவி. அதில் பாவங்கள் இருக்கும் வரை எதைச் சொன்னாலும் பின் நிச்சயம் நடக்காது. புண்ணியங்கள் தேங்கி இருக்கும் பொழுதை அப்புண்ணியத்தைக்கூட நாம்தான் களரிவுட வேண்டும். ஆனால் களர்வதற்கு வழிகள் தெரியவில்லையே ( உங்கள் யாருக்கும் ). யாரும் செப்புவதில்லையே!!!!! ஏனென்றால் களரிவிடுவதற்கு தெரிவதில்லை. அதனால்தான் அவை செய் இவை செய் என்றெல்லாம். ஆனால் புண்ணியங்கள் அப்படியே தேங்கி நிற்கின்றது. மகன்களே சொல்கின்றேன். புண்ணியத்தை (களரிவிட) கலைத்து விட , கடல் அடிகள் அறிந்தும் கூட அலை அலையாக வரும் என்பதற்குச்ண சான்றாகவே பின் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் நிச்சயம். ( கடல் அலைகள் போல தொடர்ந்து இடை விடாமல் நீங்கள் உலகில் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும். அப்போதுதான் புண்ணியத்தை களரிவிட முடியும். ) மற்றவை எல்லாம் ஒன்றும் செய்ய இயலாது.
19. வாசி யோகம் அது அனைத்து கர்மாத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளும். அனைவருமே கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள். வாசி யோகம் செய்தவன் யான் நன்றாக இருக்கின்றேன் என்று யாராவது சொல்லட்டும் பார்ப்போம்? ( வாசி யோகம் செய்தால் கர்மா அதிகமாகும்.)
20. முதலில் வாசியோகம் கற்றுக்கொண்டவன் இல்லத்தில் பிரச்சினை வரும். மனைவியால், மனை விட்டுப் பிரிதல் நேரிடும். பிள்ளைகள் விட்டு பிரிதல் நேரிடும். வாசி யோகத்தில் முழுமை பெற்றவன் 5 பெண்களை வைத்திருப்பான்.
21. ஞானம் அடைவதற்கு முதல் வழி புண்ணியம்.
22. அவரவர் கடமையைச் செய்தாலே உயர்ந்து விடலாம். ஆனால் கடமையைச் செய்வதில்லையே.
23. சித்தன் வழியில் வருபவருக்கு நிச்சயம் தர்மத்தை பின் பற்ற வேண்டும். அப்படி பின்பற்றுபவனே எங்கள் அருகில் யாங்களே வைத்துக் கொள்வோம். அனைத்தும் தருவோம். அப்படி பின் பற்ற வில்லை என்றால் யாங்களே நோய்களை ஏற்படுத்தி அனைத்தும் அழிப்போம்.
24. ( எங்களிடம்) வந்தால் தர்மத்தோடு வாருங்கள். அப்படி இல்லையென்றால் வராது இருங்கள். வந்தாலும் கஷ்டம்தான்.
25. (அடியவர் ஒருவர் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கேட்டதற்குப் பதில் ) தர்மத்தைச் செய்.
26. மனிதர்களிடத்தில் தர்மம் செய், தர்மம் செய் என்று அவன் சொன்னாலும் பின் ஏற்காவிடிலும் பரவாயில்லை. ஏற்பவன் புண்ணியவான். ஏற்காதவன் உன் பாவத்தை அவன் சுமந்து செல்வான். புரிகின்றதா?
27. சித்தர்கள் நிச்சயம் அன்பைத்தான் எதிர்பார்த்தார்கள். தர்மத்தைத்தான் ( எதிர் பார்த்தார்கள்) அறிந்தும் கூட. ஆனால் செய்வதில்லையே!!!!
28. பரிகாரத்தால் எதை வெல்ல முடியும் இவ்வுலகத்தில்?
29. தர்மத்தைப் போதி. ( பிரச்சினை ) இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
30. தாய் தந்தையை மதியுங்கள். முதலில் அதை மதித்தாலே தானாகவே உங்களை அனைத்தும் தேடி வரும்.
( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால், March 2024 மதுரையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)
ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சித்தன் அருள்.....தொடரும்!
🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteவாசி யோகத்தில் முழுமை பெற்றவன் 5 பெண்களை வைத்திருப்பான்.
ReplyDeleteஇது நிஜமாகவே அகத்தியர் வாக்கு தானா?
அனைத்து சித்தர்களும் வாசி யோகத்தில் முழுமை பெற்றவர்கள்.அப்படியென்றால்?
சித்தர்களை சிறுமைப் படுத்துவது போல் உள்ளது.தயை கூர்ந்து முழு விளக்கம் பெற்று தரவை மேம்படுத்த வேண்டுகிறேன்
இல்லையென்றால் பதிவை தயை கூர்ந்து நீக்குங்கள்
இறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
குருநாதர் அகத்தீசர் பாதம் சரணம்.
வாசி யோகம் தொடர்பான சில வாக்குகள்:-
இதனை முழுமையாக படித்து வாசியோக ஞானம் குறித்து தெளிவு அடைக.
(பொது நல எச்சரிக்கை :- அகத்திய மாமுனிவர் அருள் இல்லாமல் குண்டலினி/வாசி யோகம் வேண்டாம். இந்த யோகம் மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும். இந்த பதிவு இந்த யோகத்தை தவறாக செய்வதால் எழும் விளைவுகளை சுட்டும் பதிவு. )
===============================================================
சித்தன் அருள் - 1514 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 26!
https://siththanarul.blogspot.com/2023/11/1514-04092023-26.html
சித்தன் அருள் - 1504 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 16!
https://siththanarul.blogspot.com/2023/11/1504-04092023-16.html
சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023)
https://siththanarul.blogspot.com/2023/02/1290-5-06022023.html
சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6
https://siththanarul.blogspot.com/2023/03/1303-6.html
=======================================================
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
இறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6
https://siththanarul.blogspot.com/2023/03/1303-6.html
தியானத்திற்கும் வாசி யோகத்திற்கும் உள்ள வேறுபாட்டை தயவு செய்து விளக்கம் கொடுங்கள். -அகத்திய பெருமானே!
ஒன்றை மட்டும் சொல்லுகின்றேன்! த்யானம் என்றால் இறந்து போய்விடுவது. ஆனால், இதன் ரகசியத்தை கூட உள்ளுணர்ந்து பார்த்தால், நிச்சயம் யோகங்கள்! த்யானம் என்றால், இறந்தவனுக்கு சமம். ஆனால், வாசி என்றால், அனைத்து இன்பங்களுக்கு சொந்தம். அனைத்து உறுப்புகளும், எவை என்று அறிய! அறிய! இன்பத்தை நாடியே செல்லும்! வாசிகள் கற்றவர்கள் இல்லையப்பா! அப்படி கற்றிருந்தாலும், ஒரு பெண்ணை அவன் வைத்துக் கொண்டிருப்பான்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
இறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023)
https://siththanarul.blogspot.com/2023/02/1290-5-06022023.html
29. யோகியர்கள் சிவனேனு இருந்து செயல்பட்டார்கள் செயல்படுகிறார்கள! விளக்குங்களேன் குருநாதா!
அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே! இதைப்பற்றி விளக்குவதற்கு, மனிதன் இன்னும் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இவை எல்லாம், யான் ஈசனிடம் கேட்டுத்தான் உரைக்க வேண்டும் அப்பனே! இன்னும் யான் சொல்லுகின்றேன், மூலாதாரத்தை எப்படி எல்லாம் இயக்க வேண்டும். வாசி யோகம் எது என்று கூட உரைக்கின்றேன். ஒரு குரு மூலமே இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையான ஒருவன் இல்லையப்பா! இல்லையப்பா! என் பெயரை அழைப்பது, பல சித்தர்கள் பெயரை இழுப்பது, இங்கே கற்றுக்கொடுப்பான் என்று உரைப்பது. யானே சிரிக்கின்றேன் அவனை பார்த்து. ஏன் என்றால், வாசி யோகம் யார் ஒருவன் சொல்லிக் கொடுக்கின்றானோ, அவன் காமத்தை மேலே ஏற்றி இன்னும் கர்மாவை சேர்த்துக் கொண்டு இருக்கின்றான் அவன். வாசி யோகத்தை கற்றவன் ஒருவன் அருகில் இருந்து பார், அவன் எப்படி மாயையில் சிக்கி கொண்டு இருக்கின்றான் என்பதை கூட. இன்னும் ஏராளமான பொய்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே. இதுவும் கூட பதிலளிக்க, புசுண்ட முனி வரவில்லை. வந்திருந்தால், யான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை அப்பா!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
இறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
சித்தன் அருள் - 1504 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 16!
https://siththanarul.blogspot.com/2023/11/1504-04092023-16.html
குருநாதர்:- அப்பனே வாசி ( யோகம் ) ஒரே வார்த்தையில் சொல்கின்றேன் அப்பனே. இதை நிச்சயம் கூற வேண்டும்?
அடியவர் 1:- வாசியோகத்தை யாராவது கூறுங்கள்.
அடியவர் 2:- சிவம் தான் வாசி
குருநாதர்:- அப்பனே உண்மையே. அப்பனை இடது நாசியை மூடு. முன்னே இருப்பவனை சொல்கின்றேன்.
அடியவர்:- ( இடது நாசியை மூடினார்)
குருநாதர்:- அப்பனே இதனால் வாசி யோகம் பயிற்சியே அப்பனே இப்பொழுது எதில் இருந்து மூச்சு வருகின்றது.?
அடியவர் 1:- வலதில் இருந்து. ( வலது நாசி)
அடியவர 2:- சூரிய நாடியில் இருந்து
குருநாதர்:- அப்பனே இதில் மூச்சு பின் இப்படியே அப்படியே ஒரே வழியில் ( வலது நாசியில் மட்டும்) மூச்சை விட்டு ஒருவன் ( எப்போதும் சுவாசிக்கின்றானோ) அவன்தான் ஞானியாவான் என்பேன் அப்பனே. மற்றவர்கள் ஆகவே முடியாது என்பேன் அப்பனே. கர்மம் கூட இப்படித்தான் அப்பனே வலது நாசியில் வந்து விட்டாலே போதுமானது அப்பா அப்பனே யாராலும் ஒன்றும் செய்ய முடியாது அப்பா. இதை உங்களால் பண்புடனே செய்ய முடியுமா என்ன? அப்பறம் நிச்சயம் முடியாது அப்பா. இது தான் அப்பனே யோகம் வசியோகம். இதனால் பல நபருக்கு இது தெரிவதே இல்லை அப்பனே.
அடியவர்:- ஏழு எட்டு வருசமா (எனக்கு) இயற்கையாக அப்படி (வலது நாசியில் மட்டும் சுவாசம் எப்போதும் ) போற மாதிரி தோணுது.
குருநாதர்:- அப்பனே நம்பப்போவதில்லை யான் அப்பனே.
அடியவர்:- சரி….
குருநாதர்:- அப்பனே அப்படிபோய் விட்டால் உனக்கு அனைத்துமே கிடைத்திருக்குமே? ஏன் கிடைக்கவில்லை அப்பனே? கிடைக்காததால் இங்கு வந்து கொண்டிருக்கின்றாய் அப்பனே. பின் அப்படி வந்து விட்டால் நீ அங்கேயே இருந்திருப்பாய் என்பேன் அப்பனே. எதுவுமே தேவை இல்லை என்று சொல்லியிருப்பாய் அப்பனே. ஆசைகள் கூட அப்பனே வேண்டாம் என்று சொல்லி விட்டு இருப்பாய் அப்பனே. புரிகின்றதா அப்பனே. அவ் நாசியில் (வலது நாசியில் மட்டும் ) பின் வந்து கொண்டே இருந்தால் அப்பனே ஆசைகள் போய்விடும் அப்பா. எவையும் வேண்டாம் என்று அப்பனே அமைதியான இடத்தைத் தேடி அப்பனே கண்ணுக்கு தெரியாமல் அப்பனே பின் சென்று விடுவான் அப்பனே. ஆனால் யாராவது உண்டா என்றால் சத்தியமாக இல்லை.
அடியவர் 1:- வலது சுவாசம் மட்டும் ஓடிட்கிட்டே இருக்கும்.
அடியவர் 2:- எதாவது செஞ்சுட போறீங்க. அவர் சொல்ரார். அதுவா வரனும். அது அதை (இடது சுவாசம்) நிறுத்துறதுக்காகதான்.
அடியவர் 3:- எனக்கு வலது சுவாசம் ஓடிஇருக்கு சில நேரங்களில்.
குருநாதர்:- அப்பனே ஆனாலும் அப்பனே பின் உன்னை நால்வர் வைத்து அப்பனே பார்க்க வேண்டியதான் அப்பனே. அவ்ளோதான் அப்பனே.
நாடி அருளாளர்:- ( வலது நாசியில் மட்டும் சுவாசம் வருகின்றது என்று சொன்ன அடியவரை) அப்ப உனனை நாலு பேரை வைச்சு செக்தான் பண்ணனும் அப்டின்னு சொல்கின்றார் குருநாதர். யாராவது நாலு பேரை வைத்து….
அடியவர்கள்:- ( சிரிப்பு )
குருநாதர்:- அப்பனே வசிதன்னில்( வாசி யோகம்) இதுவே கடைசியாகும் என்பேன் அப்பனே. ஆனால் எதை எதையோ கற்றுக் கொடுக்கின்றேன் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அப்பா! ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஆனால் இதுவும் இறை அருள் இருந்தால் இருந்தால் தான் வரும் அப்பா சொல்லி விட்டேன். அப்பனே ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுது பார் அப்பனே. ( மூச்சு ) இடது வலது அப்பனே மாறி மாறி வரும் என்பேன் அப்பனே. அதுபோலத்தான் வாழ்க்கை என்பேன் அப்பனே. வருத்தங்களும் எவை என்று கூற மாறி மாறித்தான் வரும் அப்பனே.சிறிது நேரம் தொழில். சில நேரம் தொழில் இல்லை. அப்பனே திருமணம் செய்தாலும் சில தரித்திரங்கள். அனைத்தும் அப்பனே சமநிலை படுத்தவேண்டும் என்றால் அப்பனே இதை யாங்கள் தான் கொடுக்க வேண்டும் எனபேன் அப்பனே. (சித்தர்கள் யாங்கள் அப்படி அருள் கொடுக்கும் போது) யான் சொன்னேனே ( மூளையில் உள்ள ) அச்செல்லானது அப்பனே பின் (உடலை விட்டு ) பறந்துவிடும் என்பேன் அவ்வளவுதான். அப்பனே புதுமையான விசயத்தை சொல்லிவிட்டேன்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
இறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
சித்தன் அருள் - 1514 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 26!
https://siththanarul.blogspot.com/2023/11/1514-04092023-26.html
குருநாதர்:- அப்பனே பின் வாசி யோகத்தை கற்றுக் கொண்டால் அப்பனே காமம் தலைக்கு ஏறிவிடும் என்பேன் அப்பனே. அதை அவனிடத்தில் கூறு.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ஐயா நிறைய வாக்கில் சொல்லி இருக்காங்க முன்பே. வாசி யோகம் செய்யும் பொது அது உங்கள் விந்து சக்தி மேலெழும்பிச்சுன்னா காமம் கன்னாபின்னான்னு ஏறிடும். அதனால முறையான ஒரு ( பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் சித்த) குரு இல்லாம வாசி யோகா பயிற்சி செய்யவே கூடாது.
குருநாதர்:- அப்பனே பின் தெரியாததை தெரியும் என்று ( பொய் ) சொல்பவன் தான் மனிதன் என்பேன் அப்பனே.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- தெரியாததை தெரியும் என்று சொல்ரவன் மனுஷன்.
குருநாதர்:- அப்பனே உந்தனுக்கு ( வாசி யோகத்தை தவறாக) சொல்லிக் கொடுத்தானே ( தரித்திரம் பிடித்த மனித குரு) அவன் ஏன் உனக்கு இதை சொல்லி கொடுக்கவில்லை? என்று கேள் அப்பனே.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்ல இந்த வாசி யோக பயிற்சியை, இதை ஏன் சொல்லி கொடுக்கவில்லை? உங்கள் பிரச்சினையை சரி செய்ய ஏன் சொல்லி கொடுக்கவில்லை? அவர் ஏன் சரி பண்ண முடியவில்லை?
அடியவர்:- அவர் போய்விட்டார்.
குருநாதர்:- அப்படி அதை வைத்துக் கொண்டு அவன் (உயிரோடு) இருந்திருக்கலாமே?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- வாசி யோகம் என்பது சாகாக்கலை பயிற்சி. மரணமில்லா பெரு வாழ்வு. அதுக்குத்தான் வாசி யோகம் என்று சொல்றாங்க.
அடியவர்:- ஊரை விட்டு வேற எங்கேயோ போய் விட்டார். இப்போது நான் எல்லா கோயிலுக்கும் போகும்போது அதனுடய துடிப்பு அதிகமாக இருக்கு. அதனால மனம், நரம்பு எல்லாமே பாதிப்பாக இருக்கிறது.
குருநாதர்:- அப்பனே (அவன்) கருமத்தை இவன் பால் விட்டு விட்டுச் சென்றான். அவ்வளவுதான் அப்பனே.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- அவர் இந்த மாதிரி நிறைய சேர்த்து உங்க கிட்ட கொடுத்து விட்டு போயிட்டார்.அதனாலதான் உங்களுக்கு பிரச்சனை.
குருநாதர்:- அப்பனே இவன் விதியில் ( வாசி யோகம் ) அதை கற்றுக்கொள்ளும் தகுதியே இல்லையப்பா. ஆனால் ஏன் கற்றுக்கொண்டான் அப்பனே? அதுதான் அப்பனே விதியில் இல்லாததை அப்பனே செய்தால் இப்படித்தான் அப்பா.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- விதியில் உங்களுக்கு வாசி யோகம் இல்லைங்க. அந்த மாதிரி ஒரு பயிற்சி செய்து, யாரோ தவறானவர்கள் பேச்சை கேட்டு நீங்க அந்த வழி போய் இதை நீங்க தெரிஞ்சு, அதனால் உங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை. விதியிலே இல்லை என்று குருநாதர் சொல்கின்றார்.
குருநாதர்:- அப்பனே இப்பொழுது மூச்சை எவ் நாசுயில் வருகின்றது என்று கேள்?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- இப்போ எந்த நாசி வழியாக ஓடுகிறது? மூச்சு வலது நாசி வழியாகவா? இடது நாசி வழியாகவா? நீங்க வாசி யோக பயிற்சி செய்து இருக்கீங்க என்று சொன்னீங்கல்ல?
அடியவர்:- ( எனது சுவாசம் தற்போது ) இடது நாசியில் ( ஓடுகின்றது ).
குருநாதர்:- அப்படியே இடது நாசி செல்லலாமா என்று கூறு.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ( வாசி யோகம் பயின்றவருக்கு ) இடது நாசியில் மூச்சு ஓடலாமா?
அடியவர்:- வலது நாசியில்தான் ( ஓடவேண்டும் )
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ஏன்?
அடியவர்:- சூரிய கலை இயங்கும்.
குருநாதர்:- அப்பனே நேற்றே சொல்லிவிட்டேன். வசி யோகத்தை கற்றுக்கொண்டவன் ( எப்பொழுதும் சுவாசத்தை ) வலதிலே ( வலது நாசி/சூரிய கலை ) விட்டு விட்டுக் கொண்டு இருப்பான். அவன் தான் உண்மையானவன் சொல்லிவிட்டேனே. உண்மையானவன் யாரும் இல்லை. நீங்கள்தான் அப்பனே நல்லவன் சேகரித்து கற்றுக் கொள்ள வேண்டும் அப்பனே.
அடியவர் 1:- இதுதான் எங்களுக்கு எப்படி என்று தெரியலையே. ( யாரை நம்புவது? விதி என்ன ? )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
ஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete