​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 31 December 2024

சித்தன் அருள் - 1761 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - 22!


( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12 
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 16
சித்தன் அருள் - 1755 - மதுரை வாக்கு - 17
சித்தன் அருள் - 1756 - மதுரை வாக்கு - 18
சித்தன் அருள் - 1757 - மதுரை வாக்கு - 19
சித்தன் அருள் - 1759 - மதுரை வாக்கு - 20
சித்தன் அருள் - 1759 - மதுரை வாக்கு - 21

( மிக வேகமாகத் தனிநபர் வாக்குகள் ஆரம்பம் ஆனதால்,  அவ் வாக்கில் உள்ள பொது வாக்குகளை மட்டும் இங்கு சுருக்கமாகப் பகிர்கின்றோம்.)

1. ஆன்மா வேறு. ( சுவடி வாக்குகள் அவரவர்தான் கேட்க வேண்டும்.) 
2. ராகு கேதுகளுக்கு பரிகாரங்கள் பலிக்காது. 
3. (நீங்கள்) செய்யும் புண்ணியத்தால் நல் நடக்கும். 
4. ( சிலர் இல்லங்களில் அவர்கள் முன்னோர்கள் ஆன்மாக்கள் இருப்பதால், அவ் இல்லத்தில் உள்ள அவர்கள் முன்னோர்கள் வழி விட்டால்தான் சில தடைகள் விலகும். ) 
5. (ஒரு அடியவர் முழு சரணாகதியில் அதீத நம்பிக்கையுடன் வந்திருந்தார். அவருக்கு ஒரு ஆச்சரிய மூட்டும், அற்புத வாக்கு ஒன்றை நல்கினார் கருணைக்கடல். அந்த வாக்கு…) அப்பனே என்னை நம்பி வந்துவிட்டார்கள் அப்பனே. யானே ஆட்கொண்டுவிட்டேன். யானே அனைத்தும் செய்கின்றேன் என்று அதாவது அவை, எவை என்று புரியாமல் ஒரு இல்லத்தில் ஒரு மூத்தோன்  எப்படி பின் இருந்து  வழி நடத்துவானோ அப்படி வழி நடத்துகின்றேன் என்று  சொல்லிவிடு. ( இந்த அடியவருக்கு மாபெரும் பாக்கியம் அங்கு கிட்டியது. )
6. ( இப்போது ஒரு உண்மைக் கதை அங்கு வெளியானது. குருநாதரே பெரியவராக இருக்கும் இவ் அடியவர் இல்லத்தில் ஒரு கோமாதாவிற்கு குருநாதர் அருளிய கருணையை எடுத்துரைத்தார் அவ் அடியவர். அவர்கள் இல்லத்தில் கோமாதா (பசு) ஒன்று உள்ளது. அவ் கோமாதாவினை நன்கு பராமரித்து வர , வாக்கு ஒன்றை சில மாதங்கள் முன்னர் நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளினார்கள். அதன்படி அவ் இல்லத்தவர் அவ் பசுமாட்டிற்கு சேவை செய்து வந்த நிலையில்,  திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போனது அவ் கோமாதாவிற்கு. அவ் கோமாதாவின் வயிற்றில் கன்று ஒன்று. அந்த கோமாதாவால் எழுந்து நிற்க இயலாத அளவில் உடல் நிலை சரியில்லை. எந்நேரமும் பிரசவம் நடக்கும் என்ற நிலை. அவ் கோமாதாவால் சாப்பிடவும் முடியவில்லை. எழுந்து நின்றால் உடனே கீழே விழுந்து விட்டது. நாளை கன்று ஈன்றெடுக்கும் நிலையில் உள்ள  அந்த கோமாதாவிடம் அவ் அடியவர் இரவு 11 மணிக்கு அதன் அருகில் சென்று வல கோமாதாவிடம் நம் குருநாதர் மீது உள்ள அதீத நம்பிக்கையில் பின் வருமாறு பேசியுள்ளார். “ (எங்கள் அன்பு கோமாதாவே) இப்போது உனக்கு உடல் நலம் சரியில்லை. உன்னால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. உனக்கு பிரசவம் இன்று நடக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றுகின்றது. எங்களை கூப்பிட்டால் எங்களால் வர இயலாத துர்பாக்கியச் சூழ்நிலை. நீ இங்கு தனியாக இருக்கின்றாய். நாங்கள் அங்கு தனியாக உள்ளோம். எங்களை நீ கூப்பிட்டால் எங்களால் வர இயலாத ஒரு சூழ்நிலை. இந்த நேரத்தில் உன் அருகில் நாங்கள் இருக்க வேண்டும். ஆனால் விதி நம்மை இப்படி. அதனால் உனக்கு ஏதாவது வலி வந்தால் எங்களை அம்மா, அப்பா என்று கூப்பிடாதே.  அப்பா, அகத்தியா!!! அம்மா, லோபாமுத்ரா!!! என்று அவர்களைக் கூப்பிடு. அவர்கள் வந்து உனக்கு பிரசவம் பார்ப்பார்கள். எங்களால் வர இயலாது”  என்று அந்த கோமாதாவை வாஞ்சையுடன் அழுது கொண்டே தடவி கொடுத்தனர்.  அதனைக் கேட்ட அவ் கோமாதா சரி என்பது போல் அவர்களிடம் திரும்பி நம்பிக்கையுடன் படுத்தது.  அந்த கோமாதாவிடம் வருத்தத்துடன் அழுது கொண்டே கனத்த மனதுடன் சொல்லிவிட்டு சென்று விட்டனர். அதிகாலை 3 மணிக்கு அவர்கள் மீண்டும் அவ் கோமாதாவை பார்க்க ஓடோடி வந்த பொழுது அந்த அதிசயத்தை கண்டார்கள். அவ் கோமாதா ஒரு இளம் கன்றினை ஈன்றெடுத்து அதனுடன் மகிழ்வாக விளையாடிக்கொண்டு இருந்தது. இத அப்பா அகத்தியரும், அன்னை லோபாமுத்ரா அம்மாவும் செய்த லீலை என்று அக்கம் பக்கதினருடம் உரைத்த போது அவர்கள் இவர்களை ஏளனமாக பார்த்து சிரித்துள்ளனர். இது குறித்து அவ் அடியவர் நெகிழ்வுடன் குருநாதரிடம் நீங்கள் தானே வந்து பிரசவம் பார்த்தீர்கள்? என்று கேட்டதற்குப் பின் வருமாறு உரைத்தார் குருநாதர். “அம்மையே முதலிலேயே சொல்லிவிட்டேன். யான் ( உன் இல்லத்தில் ) பெரியவனாக இருக்கின்றேன் என்று.” 
7. ( வணக்கம் அடியவர்களே ஒரு கோமாதாவிற்கு நம் அன்னை லோபாமுத்திரா உடன் தந்தை அகத்திய மாமுனிவர் வந்து பிரசவம் பார்த்து அவ் கோமாதாவை , கன்றுடன் மீண்டும் ஆரோக்கியத்துடன் வாழ வைத்த நெகிழ்சிக் கதை இது. மேலும் கலியுகத்தில் இறைவனே நேரில் வந்தாலும் ஏளனமாகப் பேசும் இவ்வுலகம் என்பதற்கு இவ் உண்மைச் சம்பவமே சிறந்த சாட்சி. அவ் கோமாதாவிற்கும், அவ் அடியவர் குடும்பத்திற்கும் குருநாதர் மீது இருந்த அதீத நம்பிக்கையை, அடியவர்கள் இதனை ஒரு பாடமாக எடுத்து இறுகப்பற்றுங்கள் குருநாதர், இறைவன் திருவடிகளை. அதிசயங்கள் உங்கள் இல்லத்திலும் பல இது போல் நடக்கும்.) 
8. (அவ் அன்பு அடியவர்கள், அவ் கோமாதாவின் பாலை மோராக்கி அங்கு அனைவரும் பருக நன்றியுடன் எடுத்து வந்தனர் , கொடுத்தனர். இதுவல்லவோ அடியவர்களின் அன்பு, பாசம். என்னே ஒரு நேசம், குரு பக்தி அவ் அடியவர்களுக்கு) 
9. ( மேலும் இவ் அம்மைக்கு) அம்மையே கோமாதாக்களை வளர்த்து வா. அதன் கழிவுகளை அம்மையே சுத்தம் செய்துவா. இதுதான் வேலை. இதைச் செய்தால் புண்ணியம் பெருகும் அம்மா. அம்மையே பரிகாரமாக்க் கூறிவிட்டேன்.
10. (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் மற்ற சிவ ஸ்தலங்கள் விட ஏன் மகிமை புகழாக உள்ளது என்று  ஒரு அடியவர் ஒரு பொது கேள்வி கேட்ட போது உரைத்த பொது வாக்கு) அம்மையே முதலில் பஞ்ச ஸ்தலங்களுக்குச் செல்லச் சொல் அம்மையே. ஏன் பஞ்ச பூத ஸ்தங்களுக்குச் செல்லச் சொல்கின்றேன் என்றால், நிச்சயம் அங்கு சென்று , சென்று வந்தாலே ஐம் புலன்களையும் கூட அடக்கலாம். இதை நிச்சயம் அப்பனே, அம்மையே, அடக்கி விட்டால் அப்பொழுதுதான் பிற பிற திருத்தலங்களுக்கும் செல்ல முடியும். இதை முதலில் ( அனைவரையும் ) பயன் படுத்தச் சொல். 
11. அவ் அடியவர் (பஞ்ச ஸ்தலங்கள்) ஐந்தும் தரிசனம் செய்துவிட்டேன் என்று உரைக்க, அதற்கு குருநாதர் “ அம்மையே செல் மீண்டும், மீண்டும். உந்தனுக்கு ஞானங்கள் பிறக்கும்.” என்று எடுத்துரைத்து அருளினார்கள். 
12. சில கஷ்டங்கள் கொடுத்துத்தான் இறை பலத்தையே கூட்டுவான் இறைவன். 
13. (ஒரு அடியவர் , அவர் இல்லத்தவரும் சுவடி ஓதும் மைந்தனைப் பார்த்து ) ஐயா, ( குருநாதர்) ஐயாவினுடைய அனுக்கிரகத்தில் வெகு சிறப்பாக இருக்கின்றோம் சுவாமி. ஒவ்வொரு அணுவிலும் எங்களால் உணர முடிகின்றது. மிகச் சிறப்பாக எங்களை வைத்துள்ளார் சுவாமி. (குருநாதர்) அவர் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டும் நாங்கள் இருவரும். அது போதும் சுவாமி. 
14. நம் குருநாதர் :- அப்பனே இவ்வாறு பின் செப்பிவிட்டாலே போதுமானது அப்பா. பின் யானே அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. கவலை இல்லை. அப்பனே என் அருகிலேயே இருக்கின்றாய் அப்பனே நலமாகவே. கவலையை விடு. அனைத்தும் தருகின்றேன் அப்பனே. 
15. (அவ் அடியவர்) நன்றி ஐயா. (அவ் அடியவர் இல்லத்தரசி ) ஒவ்வொரு அணுவிலும் உணர முடியுது ஐயா. (அவ் அடியவர்) இருக்கின்றீர்கள் சுவாமி. சந்தோசம் ஐயா. ( அவ் தம்பதிகள் குரல் நெகிழ்சியில் தழுதழுத்தது சுவடி ஓதும் மைந்தனிடம்) 
16. (மற்றொரு அடியவருக்கு) அனைத்தும் அகத்தியன் செயல் என்று விட்டுவிடு. அனைத்தும் யான் பார்த்துக் கொள்கின்றேன் தாயே. கவலையை விடு. யான் இருக்கின்றேன் அங்கே. 
17. இயற்கை மூலிகைகளை உண்டு வரச்சொல். அவை மட்டும் இல்லாமல் முருங்கை இலைகளைக்கூட, பொன்னாங்கன்னி எனும் இலைகளைக கூட இன்னும் பின் மணத்தக்காளி இலைகளைக் கூட உண்டுவரச்சொல். அவை எல்லாம் உண்டு வரச்சொல் நலமாகும். 
18. செய்த தருமங்கள் கைவிடாது. 
19. (என் பெண் குழந்தைக்கு ஆசீர்வாதம் என்று கேட்டபோது) யான்தான் இவளை ( உனக்கு ) கொடுத்தேன். என்னிடத்திலே ஆசீர்வாதங்களா? பிச்சை இட்டவனுக்கே பிச்சையா? 
20. (ஒரு அடியவர் குருநாதரை சொந்த வீட்டில் வைத்து பூசை செய்ய இயலவில்லை என்று கேட்டபோது) அப்பனே அன்பு போதுமானதப்பா. அனைவருக்கும் சொல்கின்றேன். எதுவும் எந்தனுக்குத் தேவைஇல்லை அப்பா. அன்பைச் செலுத்தினாலே யானே வந்து வாக்குகள் செப்பி, அனைத்தும் திருத்தி அப்பனே விதியில் சில கெடுதல்கள் இருந்தாலும் அதை மாற்றிவிடுவேன் அப்பா. கவலையை விடு அனைவரையும் கூட. 
21. (ஒரு அடியவர் ஆசி கேட்ட பொழுது) அப்பனே காடு மேடுகளுக்கு அழைத்துச் செல்வேன். அப்பொழுது தெரியும் உந்தனுக்கு.  குருநாதன் வந்து விட்டானா? ஏன் வந்து விட்டான்? என்று. 
22. (ஒரு அடியவர் வேலை பயம் குறித்துக் கேட்ட போது) அப்பனே வேலை என்றாலும், திருமணம் என்றாலும், ஞானி என்றாலும் அப்பனே எதில் சென்றாலும் கஷ்டங்கள் வருவது இயல்பப்பா. அதை மாற்றும் சக்தி உத்தனுக்கே கொடுக்கின்றேன். கவலை விடு. திறமையும் கொடுக்கின்றேன். முன்னேறிவிடுவாய். ( அடியவர்கள் இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் . அனைத்தும் தருவது நம் கருணைக்கடல் அகத்தீசரே!!!! திறமை உட்பட.) 
23. இவ்வுலகமே என் குழந்தைகள் என்று நினைத்துக்கொள். அனைத்தும் நடக்கும். 
24. அனைத்தும் யான்தான் சீர் செய்ய வேண்டும். நீ செய்யும் அதாவது என்ன நடத்தையிலோ அதைத்தான் யான் செய்ய முடியும் பிரம்மாவிடம் கூறி. 
25. அப்பனே எவை என்றும் அறியாமல் கூட இருந்தாலும் நிச்சயம் அறியவைத்து , புரியவைத்து அப்பொழுதுதான் என்னாலும் அனைத்தும் தர முடியும் அப்பனே. பக்குவ நிலையைப் பெறவில்லை என்றால் அப்பனே பின் எது கொடுத்தாலும் வீணப்பா. அப்பனே ஏன் அனைத்தும் சிலருக்கு வெகு விரைவாக  நடக்கும். சிலருக்கு எவை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் தாமதமாக நடக்கும். ஏனென்றால் அவன் அறிந்து கொள்ளவில்லை. அதனால்தான் தாமதமாக போகின்றது. அறிந்து கொள்பவனுக்கு அப்பனே முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டே இருக்கின்றான் அப்பனே. உண்மை நிலையை உணருங்கள் அப்பனே. ( இவ் சத்சங்கத்தில் ) சொல்லிவிட்டேன் அனைத்தும் கூட அப்பனே. இதைச் செய்திட்டு வாருங்கள்.  அப்பனே இன்னும் வாக்குகளாகச் சொல்கின்றேன். நலன்கள் ஆசிகளப்பா இப்பொழுதைய நிலைமைக்கு அப்பனே. ஆசிகள். ஆசிகள். 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் நிறைவு அடைந்தது. இந்த மகத்தான வாக்குகளை அடியவர்கள் தொகுத்து, இலவசமாக அனைவருக்கும் அச்சிட்டு வழங்க புண்ணியங்கள் உண்டாகும்.  அனைவருக்கும் இதனை ஒரு பாடமாக வகுப்பு எடுத்து சொல்ல முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். ) 

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙇‍♀️

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமஹ! Happy New Year 2025 to everyone.
    Regards
    Chitra R

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  6. ஓம் சிவாய நம ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete