வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஒரு சிறு நினைவுபடுத்தல்!
1. அம்மா லோபாமுத்திராவின் திரு நட்சத்திரம் 04/01/2025, சனிக்கிழமை அன்று வருகிறது. மரிக்கொழுந்து வாங்கிக் கொடுத்து, உழவாரப்பணி செய்து அருள் பெற்றுக் கொள்ளவும்.
2. ஜனவரி 15க்குள் பாபநாச தாமிரபரணிக் கரையில் ஸ்நானம் செய்து, இறைவனை தரிசித்திட நன்மைகள் நடக்கும்!
இனி மதுரை வாக்குக்கு செல்லலாம்!
( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 16
நம் குருநாதர்:- இதனால்தான் அப்பனே, அனைத்திலும் கஷ்டம் இருக்கின்றதப்பா. அப்பனே எல்லா வேலைகளிலும் கூட கஷ்டம் இருக்கின்றதப்பா. கஷ்டங்கள் இல்லாமல் ஒன்றும் இல்லையப்பா. அப்பனே கஷ்டத்தை கடந்தவன்தான் அனைத்தும் தெரிந்து கொள்கின்றான்.
அடியவர் :- கண்ணதாசன் சொல்லுவார் ஐயா - அனுபவம் தான் இறைவன்.
நம் குருநாதர் :- அப்பனே, ஆனால் இன்றைய அளவு அப்படி இல்லையப்பா. நீ சொல்கின்றாயே அப்படித்தான் இருக்கின்றார்கள் மனிதர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- கஷ்டப்படக்கூடாது. ஜாலியாக இருக்கனும். அப்படி இருந்தால் எப்படியப்பா என்று கேட்கின்றார்.
நம் குருநாதர் :- அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். நீங்கள் இன்பம் வேண்டும். நலன்கள் வேண்டும் என்று கேட்கின்றீர்கள். அனைத்தும் இன்பமாகக் கொடுத்துவிட்டு இறைவன் , இவன்தனக்கு இன்னும் கொடுத்தாலும் பிரயோஜனமில்லை. இன்பமாகவே அனைத்தும் கொடுத்துவிட்டோம் என்று மீண்டும் அழைத்துக் கொள்வான் இறைவன் சுலபமாக.
அடியவர் :- ஆயுள் குறைவாகிவிடும்.
நம் குருநாதர் :- அப்பனே துன்பம் ஒன்று இருந்தால் பின் என்னதான் செய்கின்றான் பார்ப்போம் என்று விட்டுவிடுவான் இறைவன். அப்பொழுது இன்பம் என்பது ஆயுள் குறைவு. இதையும் வைத்துக் கொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- துன்பம் யாருக்கு இருக்கின்றதோ அவர்களுக்கு ஆயுள் கூடவும் இருக்கும். நல்லா வாழலாம்.
நம் குருநாதர்:- அப்பனே நன்றாக வாழ வேண்டும் என்றுதான் வந்திருக்கின்றீர்கள். சாவதற்கு யாரும் வரவில்லை. அப்பொழுது உங்களுக்கு என்னதான் தர வேண்டும்? கூறுங்கள் அப்பனே? ஆனால் நீங்கள் மாயைதான் ( பணம், பதவி, பட்டம், இல்லம், பொருள், மனை….) வேண்டும் என்று மீண்டும் கேட்பீர்கள் அப்பனே. ஆனால் யான் தரப்போவதில்லை.
அடியவர் :- மாயை கூட வேண்டுமென்று நினைக்கவில்லை ஐயா சில பேர்…
நம் குருநாதர் :- நேற்றைய பொழுதில் கேட்டாய். என் பிள்ளைகள் சந்தோசமாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு அர்த்தம் என்ன கூறு?
அடியவர்கள் :- ( பல அடியவர்கள் சிரிப்பு )
அடியவர் :- அவங்க நல்லபடியாக இருக்க வேண்டும்.
பல அடியவர்கள் :- உங்க ஆயுள் நன்றாக இருந்தால்தான் அவர்களை நீங்கள் பார்ப்பீர்கள்
நம் குருநாதர் :- நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டாய். இன்னும் பணம் வருகின்றது என்று. ஆனாலும் அப்பொழுதே யோசித்திருந்தால் , வேண்டாம் இவ்வாழ்க்கை எப்படி முடிகின்றது என்று கூட பின் நம்தனே பாதுகாப்பாகவே வைத்துக்கொண்டு இருப்போம் என்று வந்துவிட்டால் , அம்மையே ஏதம்மா இப்பொழுது துன்பம்?
(உதாரணம்:- முதலீடு செய்த பணம் இப்போது திரும்பிவராத நிலை - ஏமாற்றம்)
அடியவர்கள் :- ( சிரிப்பு அலை )
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியரை வாதத்தில் வெல்ல முடியாது. பெரிய பெரிய ஆட்களே நான் பார்த்துள்ளேன். அகத்தியர் பெரிதா நான் பெரிதா என்று பலர் வந்தனர். ஆனால் அகத்தியர் ஒரு கேள்விதான் விடுவார். மெயின் சுவிட்சை தொடுவார் ( அவர்களிடம் ). அவர்கள் என்ன செய்தார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்று அங்க தொடுவார். கப் சிப் என்று ( அமைதி ) ஆகிவிடுவார்கள். அதனால நாம யோசிச்சு (ஜாக்கிரதையாக பய பக்தியுடன்) கேட்கனும். (முதலீடு செய்த) அந்த நேரத்தில் நீங்க ஏன் யோசிக்கவில்லை என்று கேட்கின்றார்? அந்த நேரத்தில் நீங்க யோசித்திருந்தால் நீங்க பெரிய ஆள் என்று சொல்கின்றார். ( யோசித்திருந்தால் பணம் நிலைக்கும் )
அடியவர் :- கண்டிப்பாக….
நம் குருநாதர் :- அதனால்தான் மனிதன் மூட நம்பிக்கையில் ஒளிந்துள்ளான். ஒளிந்துள்ளான். அதை முதலில் மீட்டுக்கொள்ள வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை ஒழித்தால், நீங்கள் மாயையைக் கேட்க மாட்டீர்கள் என்று சொல்கின்றார்.
நம் குருநாதர் :- அனைத்தும் யான் தெரிவித்து விட்டால் நீங்கள் எதையுமே என்னிடம் கேட்க மாட்டீர்கள் அப்பனே. உங்களைப் பக்குவப் படுத்தினால், புண்ணியங்கள் ஏற்பட்டுவிடும். அப்புண்ணியத்தாலே நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் சந்ததிகளுடன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் )
நம் குருநாதர் :- அப்பனே இதற்குச் சரியாக எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுகின்றேன். ஏமாற்றுபவன் எப்படியெல்லாம் மனதை மயக்கிப் பேசுவான். ஆனால் ஏமாந்து விடுவீர்கள் அல்லவா? அதே போல்தான் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஏமாற்றுபவன் செய்வது போல ஆனால் உங்களுக்கு இவ் அறிவுரைகள் மூலம் வெற்றி, நல்லது உண்டாகும் ) அது போல நீங்கள் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டு நன்றாக வாழ்வீர்கள்.
அடியவர் :- சத்தியம் ஐயா. ( உண்மைதான்)
நம் குருநாதர் :- பிள்ளைகள் அதாவது ஒரு தந்தைக்கும், தாய்க்கும் தன் பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார். அதே போல்தான் அப்பனே, என்னை நம்பி வந்தவர்களுக்கும், தன் (என்) பிள்ளைகளாக யான் ஏற்றுக் கொண்டு நீங்கள் நன்றாகவே இருக்க வேண்டும் அறிவின் வழியாகவே , அறிவு பொருந்தியவராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது அவா.
அடியவர் :- சரிங்க அகதீசப்பா.
நம் குருநாதர் :- ஆசிரியன் பின் பாடம் நடத்திக்கொண்டிருந்தாலே போதுமானது. நிச்சயம் அதை மாணவர்கள் ஏற்றுக் கொண்டு அறிவுள்ளவர்களாக ஆகிவிடுவார்கள். அதே போலத்தான் உங்களுக்கும் சொல்லிவிட்டேன். உயர்கல்வி கற்று அவன் வழியில் அவன் சென்று கொண்டே இருப்பான். பின் அவனைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )
நம் குருநாதர் :- புண்ணியத்தைப் பற்றி யான் இங்கு உரைக்காமல் அதைச் செய், இதைச் செய் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எவை என்று அறிய அறிய, ஆனால் புண்ணியம் செய்ய முடியாது உங்களால்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் - புண்ணியம் குறித்த அறிவு புரிதல் இல்லாமல் புண்ணியம் செய்ய இயலாது. மற்றவை குறித்து விளக்குவதும் பலனில்லை. புண்ணியமே நல்வாழ்வின் ஆணி வேர். )
நம் குருநாதர் :- நலமாகவே அப்பனே நேற்றைய பொழுதிலே சொல்லிவிட்டேன். பல முறை சொல்லி விட்டேன். மூளையில் ஒரு செல்லை இறைவன் நன்றாகப் புகுத்திவிடுகின்றான். ஆனால் இவை எல்லாம் சுவடிகள் மூலம் யாங்கள் எழுதி வைத்தோம் அப்பா. ஆனாலும் இவைத்தன் மக்கள் விற்று விட்டார்கள் அப்பா வெளியோன் இடத்திற்கு ( வெளிநாட்டவருக்கு ). அதைப் பயன் படுத்திக்கொண்டு அப்பனே புதுப்புது வித்தைகள் காட்டுகின்றான் மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- செல், கம்ப்யூட்டர் எல்லாமே சித்தர்கள் ஓலைச் சுவடியில் எழுதி வைத்திருந்தார்கள். ஆனால் காசுக்காக மனிதன் விற்றுவிட்டான். இதை வைத்துக்கொண்டு (வெளி நாட்டவர்கள்) புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டு உள்ளார்கள். ஆனால் இவை எல்லாம் சித்தர்கள் கண்டுபிடித்து ஓலைச் சுவடியில் எழுதி வைத்ததே என்று சொல்கின்றார் அகத்தியர்.
நம் குருநாதர் :- அப்பனே ஆனால் யாங்கள் விடப்போவதில்லை. அப்பனே மூளையில் சிறு பாகத்தில் ஒரு செல் இருக்கும் அப்பா. அதுதான் இறைவனுக்குச் சொந்தம் என்பேன் அப்பனே. ஏற்கனவே ( மனிதன் ) இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இறைவன் சொருகி விடுவான் என்பேன் அப்பனே. இப்பொழுது அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.
அப்பனே அவ் செல்லை அழித்திட வேண்டும் என்பேன் அப்பனே. யாராலும் அழிக்க முடியாது. எங்களால் மட்டுமே அழிக்க முடியும் அப்பா. அதனால்தான் மனிதன் பக்குவப்படுவதற்காக கஷ்டங்களைக் கொடுத்து இறைவன் அச்செல்லை, அவன் வைத்ததை அவனே நீக்குகின்றான் அப்பனே. அப்பொழுது நீங்கள் ஞானவான்களாக மாறி விடுகின்றீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த செல்லை யாரால் நீக்க முடியும்?
அடியவர் :- இறைவனால்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனால் மட்டுமே நீக்க முடியும். அப்படி நீக்க வில்லை என்றால் நாம் எல்லாம் கஷ்டங்கள்தான் படவேண்டும்.
நம் குருநாதர் :- அம்மையே கேள் , உந்தனுக்குத்தான் முதலில் உரைத்தேன். என்ன வேண்டும் கேள்?
அடியவர் :- தாம்தான் வேண்டும். தந்தை ( குருநாதர் ) தவிர எதுவும் வேண்டாம்.
நம் குருநாதர் :- அம்மையே நிச்சயம். இதை பன்மடங்கு யான் உரைத்து விட்டேன். தன் பிள்ளைக்குத் தாய், தந்தை என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக அறிவார்கள். நிச்சயம் நீங்கள் கேட்காவிடிலும், கேட்டுவிட்டாலும் யான் பின் தன் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத் தான் செய்வேன். அதைத்தான் செய்வேன். அனைவருக்கும் தெரிவித்து.
அப்பனே எந்தனுக்குத் தெரியும் அப்பா, நீங்கள் அனைத்தும் மாயையைத்தான் கேட்பீர்கள் என்று. ஆனால் தன் பிள்ளைகளுக்கு யான் கொடுத்து விடுவேனா என்ன???!!!
அப்பனே கலியுகத்தின் மற்றொரு பெயர் துன்பம்.
அப்பனே அப்பொழுது துன்ப லோகத்தில் பிறந்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே!!!! அப்படி எப்படியப்பா இன்பம் காணமுடியும்? எப்படியப்பா நினைக்கின்றீர்கள் அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் )
நம் குருநாதர் :- அப்பனே போக முடியும் அப்பா. அப்பனே ஒருவன் கிணற்றில் விழுந்து விடுகின்றான். ஆனால் நீந்துதல் தெரியும் எப்பேன் அப்பனே. (நீந்தி) வந்துவிடுகின்றான் அப்பனே. ஆனால் அதற்கும் பல வகையான முயற்சிகள் செய்து, பல கஷ்டங்கள் பட்டுத்தான் கற்று , தெளிவடைந்து வருகின்றான். அதே போலத்தான் அப்பனே, நீங்கள் அனைவருமே பாவத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. நீங்கள் கற்றுத் தெளிந்தால்தான் அவ் பாவத்தில் இருந்து வெளியேற முடியும் என்பேன் அப்பனே. புரிகின்றதா இப்பொழுது?
சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள்). பாவம் எப்படியெல்லாம் நம்மை அண்டாது என்று தெரிந்தால் துன்பம் இல்லையப்பா.
நம் குருநாதர் :- அப்பனே யாங்கள் கையைப் பிடித்து வா என்று சொல்கின்றோம். ஆனால் இதுதான் இன்பம் என்று நீங்கள் செல்கின்றீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( சித்தர்கள் ) அவங்க கையை பிடிக்கின்றாங்களாம். வர மாட்டேன் என்று நீங்கதான் சொல்கின்றீர்களாம்.
அடியவர் :- அப்படி இருந்தோம் என்றால் கையை அறுத்து விடிகின்றார்கள் ( மனிதர்கள்). அப்படி இருந்தோம் நாங்கள்.
நம் குருநாதர் :- அப்பொழுது கை இருந்து என்ன? கால் இருந்து என்ன லாபம்? அதனால் முதலில் கற்றுக்கொள்ளுங்கள். தெளிவு பெறுங்கள். பின்பு நீங்கள் கேட்பீர்களாக. அப்பொழுது யான் தருகின்றேன். முதலில் தந்துவிட்டால் அதை உருப்படியாகச் செயல்படுத்த முடியாது தாயே!!! தந்தையே!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- ( பாவத்தில் நீந்தும் பொழுது ) அப்படி நீங்கள் கேட்டாலும், அவர் கொடுத்தாலும், நீங்கள் சரியாகப் பயன்படுத்த மாட்டீர்கள்.
அடியவர் :- ( புரிதல் மகிழ்ச்சி. நீண்ட ) ம்….
சுவடி ஓதும் மைந்தன் :- கொடுப்பது வேஸ்ட் என்று சொல்கின்றார்.
அடியவர் :- ( நீண்ட ) ம்….
நம் குருநாதர் :- அம்மையே உன்னைப் பார்த்தே கேட்கின்றேன். உன்னிடத்தில் பணம் இருக்கின்றது. ஆனால் (கொடுக்க) மனம் இல்லை. இதை இறைவன் பார்த்து விடுவான். ஆனால் இவள்தனக்கு மனமே இல்லை. ஆனால் அதை அப்படியே மற்றொருவரிடம் சென்றுவிடும் அம்மையே. இது தவறா? சரியா? ஆனால் இதற்குப் பெயர் இப்பொழுது ஏமாற்றல் என்று ஆகிவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அம்மா எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து யாரும் ( அதிக லாபம் உனக்கு தருகின்றேன் என்று ஆசை காட்டி கேட்டால் பணத்தை ) ஒரு லட்சம் என்று கேட்டால் கொடுத்துவிடாதீர்கள். அது இறைவனே நடத்தும் லீலை. உங்களிடம் கொடுப்பார். எதோ காசு கொடுத்தால் ஒரு எறும்புக்காவது செலவு செய்யுங்கள். அப்படி இறைவன் பார்ப்பார். இந்த 10 லட்சம் கொடுத்துவிட்டோம். இதை use பன்னத்தெரியல. யாராவது அனுப்பி ( ஏமாற்றி ) பிடுங்கிவிட்டுப் போய்விடுவார்.
அடியவர்கள் :- ( சிரிப்பு )
சுவடி ஓதும் மைந்தன் :- தெரிந்து கொள்ளுங்கள் ஐயா அனைவரும். மனம் பெரிதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு லட்சம் வந்தால் ஒரு பகுதி அதாவதை ஒரு 5% அல்லது 10 % கொடுங்கள் ( பிறர் உதவிக்கு, பிறர் நலனுக்கு ) . இறைவன் நினைப்பார். சரி என்று. அப்படி மனம் இல்லை என்றால் இறைவன் யார்மூலமாவது வாங்கி விட்டுப் போயவிடால்…
அடியவர் :- அவ்வளவுதான்..
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, ஐயா எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். குருநாதர் அருமையாகச் சொல்கின்றார். கலியுகத்தில் இப்படி நடக்கும் என்று சொல்கின்றார். பார்த்துக்கொள்ளுங்கள்.
நம் குருநாதர் :- கஷ்டமா என்று, அப்பொழுது உந்தனுக்கு என்ன தேவை என்று கூறுங்கள்? உண்ணுவதற்கு உணவு இருந்தால் போதும் என்று.
அடியவர்கள்:- புரிகின்றது ஐயா.
நம் குருநாதர் :- புரியாமல் வாழ்ந்தால்தான் கஷ்டங்களே வருகின்றது. அப்பொழுது நீங்கள் எல்லாம் புரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். அதனால்தான் கஷ்டம்.
அப்பனே நிச்சயம் மாற்றங்களை யானே ஏற்படுத்துவேன் என்பேன் அப்பனே. நீங்கள் எதையுமே கேட்கத்தேவை இல்லை. அப்பனே அனைவரையும் பார்த்தே ஒன்றை கேள்வி கேட்கின்றேன். நீங்கள் கேட்டுத்தான் இவ்வுலகத்திற்கு வந்தீர்களா என்ன?
அடியவர்கள் அனைவரும் :- இல்லை ஐயா.
நம் குருநாதர் :- அப்பனே பாவம் புண்ணியம் சரி பார்த்து இறைவன் வழங்குகின்றான். அவ்வளவுதான். ஆனால் இவ் ஆன்மா ஐயோ என்று அப்பா என்று அடித்துக்கொள்ளும் அப்பனே. பிறவியா வேண்டாம் வேண்டாம் என்று. ஆனால் இறைவனோ , தட்டி போய்விடு என்று சொல்லிவிடுவான்.
அடியவர் :- தெரிந்தாலும் நடைமுறைப் படுத்த முடியவில்லை. இது சரி, தப்பு என்று தெரிகின்றது. நடைமுறைப் படுத்த முடியவில்லை.
நம் குருநாதர் :- அப்பனே கண்களுக்கு என்ன புகுத்தி உள்ளாய் அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் கண்ணாடி அணிந்துள்ளீர்கள் என்று கேட்கின்றார்.
அடியவர் :- எண் பார்வை மங்கலாகி விட்டது. பார்வை தெரியவில்லை.
நம் குருநாதர் :- எப்படி நினைத்துக்கொண்டாய் நீ?
அடியவர் :- பார்வை தெரியவில்லையே
நம் குருநாதர் :- அறிந்தும் கூட ஏன் இதைச் செய்தாய்?
சுவடி ஓதும் மைந்தன் :- கண்ணாடி ஏன் போட்டுக்கொண்டீர்கள் என்று கேட்கின்றார்.
அடியவர் :- கண்ணாடி போட்டால்தான் நன்றாகத் தெரிகின்றது. இல்லை என்றால் தெரியாது.
நம் குருநாதர் :- அப்பனே தலை கீழாக நில்லப்பா. அனைத்தும் மாறும் அப்பா.
அடியவர்கள் :- ( பல புரிதல் உரையாடல்கள். தலை கீழ் உடல் பயிற்சி. சிரசாசனம். )
நம் குருநாதர் :- அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். கேட்கவில்லையே. ஆனால் இதற்குச் சம மூலிகைகள் யான் சொல்லியிருக்கின்றேன். அதுக் கேட்டாயா முதலில்?
வணக்கம் அடியவர்களே , கண் பார்வை சரி செய்ய குருநாதர் உரைத்த இரண்டு பதிவுகள் இங்கு உங்கள் பார்வைக்கு. எடுத்துச் சொல்லுங்கள். அனைவரும் பலனடையட்டும்.
(1) சித்தன் அருள் - 1341 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 7 .
கண் பார்வை பாதிப்பை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
அப்பனே, இதை பற்றி பல சித்தர்களும் எடுத்துரைத்து விட்டார்கள். பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை எடுத்துக் கொண்டு, அவை மட்டுமல்லாமல், வாரத்துக்கு இருமுறை முருங்கை சாற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், சிரசாசனம் தினமும் செய்ய வேண்டும்.
(2) சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!
அப்பனே கண்களில் கூட அதாவது சிறிது சிறிதாக நுண்ணுயிர்கள் பின் அழிகின்ற பொழுது அப்பனே நிச்சயம் பின் கண்ணும் அதாவது பார்வை குறைபாடும் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே
இவ்வாறு புண்ணிய நதிகளில் நிச்சயம் அப்பனே அதாவது அவ் நுண்ணுயிர்கள் அழிந்து கொண்டே போகின்றது இதனால் தான் அப்பனே பார்வை குறைபாடு இதனால் அப்பனே புண்ணிய நதிகளில் நீராட நீராட அவ் கண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களுடன் நதிகளில் இருக்கும் நுண்ணுயிர்கள் பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே ஒன்றாக இணையும் பொழுது அப்பனே இன்னும் அப்பனே பார்வை அதிகரிக்குமப்பா!!
அப்பனே இதுதான் அப்பனே சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே!!
=======================
சுவடி ஓதும் மைந்தன் :- ( குருநாதர் உரைத்த மூலிகைகள்) அதை உண்ணுங்களேன். எல்லாம் தெரியுது. நீங்கள் சொன்னது சரிதான் ஐயா.
அடியவர் :- நடைமுறைப் படுத்தமுடியவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- நடை முறைப்படுத்த முடியவில்லை. ஆனால் ( கண்ணாடி அணிவதை மட்டும் ) ஏன் நடை முறைப்படுத்தினாய் என்று கேட்கின்றார்? முயற்சி செய்து அவர் சொன்னதை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேட்கின்றார்.
அடியவர் :- கண்ணாடி மட்டும் முயற்சி செய்து அணிந்துவிட்டாய். அதே போல் நான் சொன்னவற்றை முயற்சி செய்து பயன்படுத்து என்று சொல்கின்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- கரெட் ஐயா. அதேதான் சொல்கின்றார். அதேபோல் முயற்சி செய்து செய் என்று சொல்லுகின்றார் ஐயா.
( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
THIRUVADI SARANAM
NANRI AYYANE
OM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
THIRUVADI SARANAM
NANRI AYYANE
ஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete