வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!! இந்த மாத தொடக்கத்தில் திருவண்ணாமலையில் கடும் மழை பொழிவு ஏற்பட்டு மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு.. அதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திற்கு என சில நாட்களே இருக்கும் பொழுது அண்ணாமலையில் ஏற்பட்ட இந்த சம்பவம் பக்தர்களுக்கு சில மனகலக்கத்தை ஏற்படுத்தியது... இதைக் குறித்து அனைவரும் கவலை கொண்டிருந்தனர்.
அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு குருநாதர் அகத்திய பெருமான்... திருவண்ணாமலையில் இப்படி நடக்க என்ன காரணம் என்பதை சுவடியில் வாக்குகளாக கூறினார்.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!
அப்பனே முன்பே ஏனைய வாக்குகளிலும் கூட அப்பனே உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே அழிவு காலம் அப்பனே.... மனிதனின் செயல்கள் அத்துமீறுகின்ற பொழுது அப்பனே இறைவனை இப்படி ஆட்டத்தை ஆரம்பிப்பானப்பா !
அப்பனே மனிதர்களுக்கு பக்தி என்பது என்னவென்றே தெரியவில்லை அப்பனே பக்தியை எப்படி காட்ட வேண்டும் என்பதையும் தெரியவில்லை அப்பனே சாதாரண மலை இல்லை என்பேன் அப்பனே அண்ணாமலை!!!
இறைவன் கண்ணெதிரே அப்பனே அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகி வழிகின்றன அப்பனே அண்ணாமலையிலே என்பேன் அப்பனே!!! பொய் கூறிக் கொண்டும் அப்பனே இறைவன் பெயரை வைத்துக் கொண்டும் ஏமாற்றித் திரிகின்றார்கள் அப்பனே!!!
அனைத்தும் பணத்திற்காகவே என்பேன் அப்பனே!!!
எல்லை மீறுகின்ற பொழுது இப்படித்தான் நடக்கும் என்பேன் அப்பனே!!
ஈசனே நடத்திய நாடகமப்பா இது!!!!
ஈசன் கொடுத்த எச்சரிக்கை அப்பா !!!
இதை எதை என்று அப்பனே அறிவியல் பூர்வமாகவே விளக்குகின்றேன் அப்பனே அப்பனே அவ் மலையானது அப்பனே பஞ்சபூதங்களையும் அடக்கி உள்ளது அப்பனே... அதன் உள்ளே நீரும் நெருப்பும் கொதித்துக் கொண்டே இருக்கின்றது அப்பனே!!!
அதன் அடியிலே ஏராளமான தண்ணீர் உள்ளது என்பதை அப்பனே!!!! நெருப்போடு சேர்ந்து அப்பனே மேலே எரிமலை போல் எடுத்து கிளம்பியது என்பேன் அப்பனே!!!
அவ் நீரை ஈசன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளான் அப்பனே... இதை யாராலும் எவ் விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாது என்பேன் அப்பனே!!
அப்பனே எப்போது வேண்டுமானாலும் மலை பொங்கி வரும் அப்பா எரிமலை போல!!!
மனிதர்கள் அப்பனே இவை ஒரு அபாய எச்சரிக்கை என்பேன் அப்பனே
மனிதர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈசன் ஒரு சிறு எச்சரிக்கை மட்டுமே தற்போது விடுத்துள்ளானப்பா
இவ் அண்ணாமலையை சுற்றி அப்பனே ஆசிரமங்களை அமைப்பது இன்னும் கூட அப்பனே விடுதிகள் ஏற்படுத்துவது.. அதன் மூலம் அப்பனே பணத்தை ஈட்டுவது அப்பனே மனிதர்களின் ஈன புத்தி அப்பனே... பணம் பணம் என்று திரிந்து கொண்டே இருக்கின்றான் .... இறைவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் என்பதை மறந்து விட்டார்கள் அப்பா
இனியும் அப்பனே இம் மலையை சுற்றி அநியாயக்கிரமங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் ஈசன் மீண்டும் அடிப்பான் அப்பனே!!!... நல்லோர்களுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்துவிட்டு அனைவரையும் வெளியேற்றிவிட்டு அப்பனே மலையாக அப்படியே பொங்கி எழுவானப்பா!!.... அனைத்தையும் மண்ணால் நிரப்புவானப்பா!!!! இது ஆரம்பம் தான் அப்பா.....
அவனிடத்திற்கே யாரையும் வராமல் செய்து விடுவான் அப்பனே... அவன் தலத்தையும் மலையை பொங்கச் செய்து மண்ணை கொண்டு மூடி விடுவான் என்பேன் அப்பனே!!! கலியுகத்தில் இதுவும் நடக்கும் அப்பனே.....
ஈசன் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே அனைத்தும் பொய்கள் அப்பா பணத்தை மட்டுமே குறிக்கோளாக எண்ணி மனிதன் நடந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே....
அப்பனே நாங்கள் சித்தர்கள் மலையை சுற்றி குருகுலத்தை நடத்தி இருக்கின்றோம் அப்பனே அன்று எல்லாம்... பணத்திற்காக இல்லை அப்பனே மனிதர்கள் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே அனைத்தையும் கற்றுக் கொடுத்தோம் அப்பனே ஆனால் இன்றைய நிலையில் அப்படி இல்லை அப்பனே மலையை சுற்றி ஆசிரமங்களை அமைத்து பணத்திற்காகவே பணம் பணம் என்று அப்பனே இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை மறந்து விட்டார்கள் அப்பனே
ஈசன் கொடுத்த அபாய எச்சரிக்கை அப்பனே... மனிதர்கள் இப்படியே நடந்து கொண்டிருந்தால் யாரையும் இங்கு வரவிடாமல் செய்து விடுவான் என்பேன் அப்பனே.
உண்மையான ஞானிகள் அப்பனே மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே..... அவர்களை எல்லாம் விரைவில் யான் காண்பிப்பேன் அப்பனே... அவர்களும் மலையை சுற்றிக் கொண்டே வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பா.... இங்கு நடக்கின்ற அநியாயங்களை கண்டு ஈசனிடம் முறையிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பா
உன்னை நீ நம்பு!!
அப்பனே இங்கு வருபவர்கள் தன்னை முதலில் நம்ப வேண்டும் அப்பனே!!! பிறரை நம்பி இங்கு வந்தால் அப்பனே!!! அழிவுகள் தான் என்பேன் அப்பனே!!!
நீர் அதன் அடியில் கொதித்துக் கொண்டே இருக்கின்றது அப்பனே நெருப்பின் அப்பனே வெப்பம் கூட கூட அப்பனே மேலே பொங்கி வழியும் அப்பா
இவ் ரகசியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாதப்பா!!!
இனியும் யான் வாக்குகள் கூறுகின்றேன் என்றெல்லாம் கூறிக் கொண்டு திரிவார்களப்பா மனிதர்கள்!!
ஆனால் இதனைப் பற்றி எல்லாம் அப்பனே அறிவியல் பூர்வமாகவே வாக்குகளாக கொடுத்து உணர்த்துவேன் என்பேன் அப்பனே
இனி இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கும் என்பதை அறிவியல் பூர்வமாகவே வாக்குகளாக கூறுவேன் என்பேன் அப்பனே... மனிதர்கள் அதை பிறகுதான் உணர்வார்கள் என்பேன் அப்பனே!!!
அழிவு காலங்கள் என்பேன் அப்பனே!!!!.... இவ்.... (சென்னை மழை வெள்ளம்) தலைநகரிலும் பேரழிவுகள் காத்திருக்கின்றது கடல் பொங்கி உள்ளே வரும் என்பேன் அப்பனே
கடல் ஊருக்குள் வந்தால் என்ன ஆகும் என்பதை அறிந்ததே என்பேன் அப்பனே
அப்பனே ஈசனும் சித்தர்களும் கட்டுக்குள் வைத்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!!
அழிவுகள் வரக்கூடாது என்பதற்காகவே அப்பனே பல ஞானிகளும் சித்தர்களும் ஜீவசமாதி ஆகி காத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே !!
ஞானிகளும் சித்தர்களும் ஈசனிடத்தில் முறையிட்டு நல்லோர்களும் இருக்கின்றார்கள் ஈசனே அவர்களை காக்க வேண்டும் ஈசனே என்றெல்லாம் போராடி காத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.... எப்பொழுது அழிவுகள் வரும் என்பதை தெரியாது அப்பனே மனிதர்களுக்கு காஞ்சி (காஞ்சிபுரம் )வரை கடல் நீர் பொங்கி வழியும் அப்பா!!!
(சென்னையை சுற்றி பல சித்தர்கள் ஜீவசமாதி ஆகி இருப்பது நகருக்கு அழிவுகள் வரக்கூடாது என்பதற்காக அழிவுகளில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்)
அப்பனே நவதானியங்களை வைத்து ஏன் தீபங்களை ஏற்ற சொன்னேன் என்றால் அப்பனே....
அப்பனே ஈசன் மறுத்துவிட்டானப்பா...இவ் கார்த்திகை தீபம் தனை ஏற்றக்கூடாது.. எந்தனுக்கு. மனிதர்களின் செயல்கள் கண்டு ஈசன் தீபம் தனை நடத்தி விடக்கூடாது என்று அப்பனே முடிவெடுத்து விட்டான் என்பேன் அப்பனே..
ஆனால் பொறுத்திருக!!! ஈசனே பொறுத்திருக என்றெல்லாம் யாங்கள் போராடிய அப்பனே அழிவில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே....
ஈசன் கருணை உள்ளவன் தான் அப்பனே ஆனால்... ஒரு நிலை வரை நான் பார்ப்பான் என்பேன் அப்பனே அடித்து நொறுக்கிக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே...அவந்தனுடைய ஆலயத்தையும் கூட மண்ணை கொண்டு நிரப்பி விடுவான் அப்பனே யாரும் இங்கு வர முடியாமல் செய்து விடுவான் என்பேன் அப்பனே!!!
ஈசன் ஒரு சிறிய எச்சரிக்கை மட்டும் தற்பொழுது காட்டி உள்ளான் அப்பனே !!!
என் பக்தர்களை ஏன் தீபம் ஏற்றச் சொன்னேன் என்றால் யாரெல்லாம் யான் கூறியபடி விளக்கேற்றி வழிபட்டார்களோ அவர்களுக்கு பரிபூரண ஆசிகள் உண்டாப்பா!!!... பேரழிவுகள் ஏற்பட்டு இன்னும் பல பேர் காணாமல் போய் இருக்க வேண்டியது என்பேன் அப்பனே..... நீங்கள் ஏற்றிய விளக்கு அவர்களுடைய ஆத்மாவை சாந்தி படுத்தவே என்பேன் அப்பனே!!!! உயிரிழந்த ஆன்மாக்கள் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் இவ் தலத்திலேயே பிறப்பெடுத்து உயர்வாக வாழ்வார்கள் என்பேன் அப்பனே...இவ் ஆன்மாக்களை சாந்திப்படுத்த யாரெல்லாம் தீபங்களை ஏற்று வழிபட்டார்களோ அவர்களுக்கெல்லாம் அவ் புண்ணியங்கள் கிட்டும் என்பேன் அப்பனே!!!! தீபம் ஏற்றி வழிபாடு செய்தவர்கள் குடும்பமே செழித்து வாழும் என்பேன் அப்பனே பிள்ளைகள் பரம்பரை என அப்பனே நீடூழி வாழ்வார்களப்பா!!
நவகிரகங்களின் சக்தியானது மொத்தமாக அண்ணாமலையிலே படிகின்றது என்பேன் அப்பனே!!..... மனிதர்களுடைய பாவங்கள் அதிகரிக்க அதிகரிக்க அப்பனே அதன் உள்ளே எரிந்து கொண்டிருக்கும் நீரும் நெருப்பும் அப்பனே அப்படியே பொங்கி வழியும் அப்பா எரிமலை போல.... இதையெல்லாம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பேன் அப்பனே
அவ் நெருப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் ஈசன் என்பேன் அப்பனே
தற்போது அதில் ஒரு சிறு துளை மட்டுமே ஏற்படுத்தியுள்ளான் அப்பனே சிறு எச்சரிக்கையாகவே என்பேன் அப்பனே....
ஈசன் கருணை உள்ளவன் என்பேன் அப்பனே.... அப்பனே புனிதமான இடத்தில் எப்படி வாழ வேண்டும் என்பது தெரியாமல் உயிர்களை கொன்று தின்பது அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்வது பணம் பணம் என்று ஏமாற்றி வாழ்வது என ஈசன் கண் முன்னே இப்படி நடந்தால் விட்டு விடுவானா என்ன??? அப்பனே!!!!
ஈசன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு பொறுத்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்பேன் அப்பனே...
ஆனால் அப்பனே!!!! அடிக்க ஆரம்பித்து விட்டால் உலகத்தையே அழித்துவிட்டு சென்று விடுவான் அப்பா இன்னும் கடல் பொங்கி வரும் அப்பா... பூமியவளும் குலுங்குவாள். என்பேன் அப்பனே...(பூகம்பம்)
ஜீவகாருண்யத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!! பணத்தாசை இல்லாமல் இருக்க வேண்டும் அப்பனே!!!!
இது கலியுகம் என்பேன் அப்பனே... கலியுகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை எல்லாம் வாக்குகளாக செப்பி செப்பி வழிநடத்திக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே ஆனால்... மனிதர்கள் திருந்துவதே இல்லை என்பேன் அப்பனே
இன்னும் அப்பனே மறைமுகமாக ஞானிகள் ரிஷிகள் அப்பனே.. தன்னை யார் என்று வெளிப்படுத்தாமல் அப்படி மனித ரூபத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே இவ் மலையை சுற்றி.... மனிதர்கள் பணத்தை பிடித்து நடந்து கொள்வதை கண்டு அப்பனே அவர்களும் அப்பனே இங்கு நடப்பதை கண்டு வெறுத்து அப்பனே சாபமிட்டு செல்கின்றனர் என்பேன் அப்பனே.....
அது மட்டுமில்லாமல் அப்பனே உண்மையான பக்தர்களும் அப்பனே அவர்கள் ரூபத்தில் முற்றுப்பெற்ற ஆத்மாக்களும் ஞானிகளும் ரிஷிகளும் கூட உண்மையான பக்தியில் முதிர்ச்சி பெற்றவர்களும் கூட அப்பனே அப்பனே பௌர்ணமி தினங்களில் வலம் வருகின்ற பொழுது என்ன நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை கண்டு... ஈசனே என்ன இது?? உன் கண் முன்னே இப்படி எல்லாம் நடக்கின்றதே!! இதையெல்லாம் நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றாயா இதற்கெல்லாம் விடிவு இல்லையா!!!!! இதற்கெல்லாம் தண்டனைகள் கிடையாதா என்று ஈசனிடம் முறையிட்டு வேண்டிக் கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே!!!!
இப்படி எல்லாம் மக்கள் இருக்கின்றார்களே.... நாங்கள் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... என்ன ஈசனே இதெல்லாம் நியாயமா!!! இதையெல்லாம் கண்டு கொண்டு நீ அமைதியாக தான் இருப்பாயா? ஈசனே!!! என்றெல்லாம் அப்பனே முறையிட்டு செல்கின்றார்களப்பா!!! சிலர் ஈசனைத் திட்டி தீர்த்து விடுகின்றார்கள் அப்பா
இவர்களும் கூட அப்பனே உண்மையான பக்தர்களை கண்டு பேசுவார்கள் அப்பா.. அப்படி பேசி செல்கின்றார்கள் அப்பா வழி நடத்துகின்றார்கள் அப்பா
ஈசன் தன் ஆட்டத்தை தொடங்கினால் யாரும் தாங்க முடியாத அப்பா.... அடியில் இருந்து பொங்கிக் கொண்டே இருக்கின்றதப்பா ஈசன் அதனை தன் கட்டுக்குள் வைத்துள்ளான்ப்பா!!!
மனிதர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு சிறு விளையாட்டு காட்டியுள்ளான் என்பேன் அப்பனே
இனியும் மனிதன் எல்லை மீறும் பொழுது நடப்பதெல்லாம் அப்பனே... என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாதப்பா எவ் விஞ்ஞானியாலும் கணித்து சொல்ல முடியாதப்பா
எதிர்பார்க்காத நேரத்தில் அழிவுகள் வருமப்பா யாராலும் அவைகளை கணித்து கூற முடியாதப்பா!!! மனிதர்கள் அது நடக்கும் இது நடக்கும் என்பதெல்லாம் பொய்யாகி போய்விடுமப்பா!!!..... பெரிய பெரிய அழிவுகள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே..... கடல் பொங்குமப்பா !!!!
ஆனால் சித்தர்கள் நாங்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பேன். அப்பனே நல்லோர்கள் வாழட்டும் என்று அப்பனே.... இவ். பூமியும் ஒரு நெருப்பு கோளம் என்பேன் அப்பனே...... வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கடலும் பொங்கும் அப்பா நிலமும் அதிருமப்பா
அனைத்தையும் ஏற்கனவே யான் வாக்குகளில் கூறியிருக்கின்றேன் அப்பனே அதை படிப்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே... புண்ணியங்கள் இல்லையென்றால் என்னவோ ஏதோ என்று கடந்து சென்று கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே வாக்குகளை படிக்கவும் முடியாது அப்பனே
வாக்குகளை கூட பொய் என்று மனிதர்கள் கூறி திரிவார்களப்பா!!! இந்த உலகத்தில் நன்மை நடந்து விடக் கூடாது என்பதற்காகவே கலிபுருஷன் கலியின் வேலையப்பா!!!
யார் மூலம் இவ்வுலகத்தில் நன்மைகள் நடக்கின்றதோ அவர்களை எல்லாம் அவர்களுக்கெல்லாம் அப்பனே தடைகளை ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே கலியவன்.
அவந்தனுடைய வேலையே இப்பொழுது அப்பனே பக்தியை பொய்யாக்க வேண்டும்... பக்தியை பொய்யாக்கினால் மனிதர்களால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவன் தன் வேலையை செய்து கொண்டிருக்கின்றான் கலியவன் என்பேன் அப்பனே...
கோடி கோடி திருடர்கள் பக்திக்குள் வருவார்களப்பா வந்து... வந்து யான் தான் இறைவன்!! யான்சொல்வது என்னிடத்தில் ஈசன் பேசுவான் என்னிடத்தில் அகத்தியன் பேசுவான் இன்னும் சித்தர்கள் பேசுவார்கள் என்றெல்லாம் அப்பனே யான் உரைப்பது தான் வாக்கு.... அவை பொய் அங்கு பொய் இன்னும் கூட அப்பனே இங்கு தான் இறைவன் உள்ளான் இவ் பரிகாரம் செய் இவ் மந்திரம் செப்பி வா என்றெல்லாம் பொய்கள் கூறி பக்தியை பொய் ஆக்குவார்களப்பா ஏமாற்றி திரிவார்களப்பா!!!
இப்படி எல்லாம் மனிதர்களை ஏமாற்றினால் கடைசியில் மனிதன் ஒன்றும் நடக்காமல் இறைவனே இல்லை என்ற நிலைமைக்கு வந்து விடுவான் அப்பா... கலியவன் இதனை செய்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே...
மனிதர்கள் இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு வந்து விட்டால் கலியவன் வேலை சுலபமாக போய்விடும் என்பேன் அப்பனே இன்னும் மாந்திரீகம் தாந்திரீகம் அனைத்திலும் நுழைந்து மனிதர்களை ஏமாற்றி அப்பப்பா.... இப்படி எல்லாம் செய்து தன்னைத்தானே அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றான் அப்பனே
ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே.....
திருவண்ணாமலையில் தாரக மந்திரமே உன்னை நீ நம்பு இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமோ என்பேன் அப்பனே... அப்படி உன்னை நீ நம்பி வந்தால் இறைவன் ஆசிகள் கிட்டும் என்பேன் அப்பனே மற்றவரை நம்பி வந்தால் அப்பனே ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே... பணத்தை இழப்பது தான் நடக்கும் என்பேன் அப்பனே....
சாதாரண மலை இல்லை என்பேன் அப்பனே
ஈசன் ஒரு முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டான் அப்பனே இன்னும் அநியாயங்கள் அக்கிரமங்கள் கூடிக்கொண்டே போனால் மலையின் மீது
தீபமும் ஏற்றக்கூடாது மலையின் மீதும் யாரும் கால் வைக்க கூடாது...தன் ஸ்தலத்திற்கும் யாரும் வரக்கூடாது என்றெல்லாம் ஈசன் முடிவெடுத்து இருந்தான் அப்பனே
ஈசன் முடிவெடுத்து விட்டால் அப்பனே
யாரும் இங்கு வர இயலாது என்பேன் அப்பனே அப்படி ஒரு முடிவை ஈசன் எடுத்து விடுவான் என்பேன். அப்பனே... அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்துவிட்டு மலையை பொங்க செய்து அப்படியே மூடி விடுவான் என்பேன் அப்பனே...
ஆனால் யாங்கள் ஈசனை சாந்தப்படுத்தி அழிவிலிருந்து காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே
இன்னும் இவ்வுலகத்தில் எங்கெல்லாம் என்னவெல்லாம் நடக்கப் போகின்றது அதனை எல்லாம் அறிவியல் பூர்வமாகவே விளக்கப் போகின்றேன் அப்பனே
ஏனென்றால் அங்கு அவ்வாக்குகள் இங்கு இவ்வாக்குகள் என்றெல்லாம் மனிதர்கள் கூறும் வாக்குகளை கேட்டு கேட்டு ஒன்றும் நடக்காமல் இறைவனே இல்லை என்று ஏமாற்றம் அடைந்து... பக்தியை பொய்யாக்குவார்கள் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே இனியும் அறிவியல் பூர்வமாக வாக்குகள் தந்து அனைத்தையும் உணர்த்துவேன் என்பேன் அப்பனே
காசுக்கு ஆசைப்படாதவன் சித்தன் அப்பனே
எங்கெல்லாம் காசுக்காக ஆசைப்படுகிறார்களோ அங்கு சித்தர்கள் இருப்பதில்லை என்பேன் அப்பனே
பணத்திற்கு ஆசைப்படுபவன் மனிதன் என்பேன் அப்பனே....
யாரும் இங்கு நல்லதை சொல்லுவதில்லை என்பேன் அப்பனே... ஆசிரமங்கள் ஆகட்டும் அப்பனே குருகுலங்கள் ஆகட்டும் அனைத்தும் பணத்திற்காகவே இயங்குகின்றன என்பேன் அப்பனே
யாரும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வதில்லை என்பேன் அப்பனே அசைவம் உண்ணுதல் கூடாது என்பதை பற்றி உபதேசிப்பதில்லை என்பேன் அப்பனே..... பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்று யாரும் சொல்வதில்லை என்பேன் அப்பனே..... அதை சொல்லிக் கொடுக்காமல் எவ்வித தீட்சையை கொடுத்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே
தீட்சை என்பது என்ன ? அப்பனே.....
யார் ஒருவனுக்கு தீட்சை பெற தகுதி இருக்கின்றது என்றால் அப்பனே
எவன் ஒருவன் எந்தனக்கு எதுவும் தேவையில்லை.... யான் தர்மத்தை கடைப்பிடிப்பேன்... எந்தனக்கு எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் இறைவன் எவ்வளவு கஷ்டங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும்.. யான் தாங்கிக் கொள்வேன் என்ற மனநிலை இருப்பவர்களுக்கு தான் அப்பனே தீட்சை வாங்குவதற்கு.... தகுதியானவர்கள் என்பேன் அப்பனே அப்பொழுதுதான் ஞானம் கிட்டும் என்பேன் அப்பனே.... அவை தேவையில்லை இவை தேவையில்லை பணம் தேவையில்லை இறைவன் மட்டும் தான் தேவை என்று எவன் ஒருவன் நினைக்கின்றானோ அவன் ஒருவனுக்கு மட்டும்தான் தீட்சை பெறுவதற்கு தகுதி என்பேன் அப்பனே
யானும் தர்மத்தை கடைபிடிப்பேன் இன்னும் பல பேருக்கு தர்மத்தை பற்றி எடுத்துரைப்பேன்!! எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்று எடுத்துக் கூறுவேன் தன்னை போலவே பிறரையும் எண்ணுவேன்!! பிறரிடம் போட்டி பொறாமை கொள்ளுதல் கூடாது என்பேன் அனைத்தும் இறைவனுடைய செயல் இறைவனுடைய கட்டளை என்று எண்ணுவேன்... இப்படி யார் யோசிக்கின்றார்களோ அவர்கள்தான் தீட்சை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பேன். அப்பனே
ஆனால் இது போல யாரும் ஆள் இல்லை அப்பா
இனியும் யாங்கள் நிரூபிப்போம் என்பேன் அப்பனே மனிதர்களுக்கு சொன்னால் புரிவதில்லை என்பேன் அப்பனே நிரூபித்து காட்டினால் தான் தெரியும் என்பேன் அப்பனே...
இனியும் யாங்கள் யார் என்பதை காட்டுவோம் என்பேன் அப்பனே!!!!
இனிமேலும் மனிதர்கள் திருந்திக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!!
நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதற்காகவே அப்பனே யாங்கள் வாக்குகள் தந்து தந்து வழி நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்பேன். அப்பனே!!!
இனியும் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே இன்னும் அடுத்த வாக்கில் விளக்கமாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே ஆசிகள்! ஆசிகள்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியார் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் சிவாய நம. ஸ்ரீ அகத்தியர் பெருமான் திருவடிகள் போற்றி
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக, நன்றி அகத்தியர் ஐயா, தொகுத்தருளியமைக்கு நன்றி அக்னிலிங்கம் அன்பரே 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஅப்பா அகத்தியனே நீங்க தான் உற்ற துணை 🙏
ReplyDeleteSiva Siva, Om Nama Sivaya 🙏🙏🙏🙏🙏
ReplyDeleteபணிவான வணக்கம் கலிபுருசனை இறைவனே கெட்டது செய்ய படைத்து விட்டு மனிதனை குறை கூறுவதில் என்ன தாத்பரியம் இருக்கிறது.மேலும் நல்லோர்களை வழி நடத்தி செல்ல எந்த ஒரு சித்தரும் வருவதில்லை மாறாக அவர்களுக்கு இன்னலை மட்டுமே இறைவன் தருகிறார்.ஆனால் தீயோருக்கு சிறப்பான வாழ்க்கை, அதிகாரம் ,பதவி என்று கொடுத்தால் பூமியில் எவ்வாறு தர்மம் வாழும் இதற்கு அகத்திய பெருமான் கூறும் பதில் என்னவோ?
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
Deleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
சித்தன் அருள் - 1749 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் தாண்டவம்!
https://siththanarul.blogspot.com/2024/12/1749.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
இறைவா நீயே அனைத்தும்.
Deleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
சித்தன் அருள் - 1749 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் தாண்டவம்!
https://siththanarul.blogspot.com/2024/12/1749.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
பிறருக்கு ஒரு சிறு குற்றத்தை, தீங்கை ஏற்படுத்தாத ஒருவரின் நல்ல எண்ணம், சொல், செயலே அறமாகும். அத்தகைய வலிமை வாய்ந்த அறத்தின் வழியில் ஒருவர் இயங்கும்போது ஏற்படும் நன்மைக்கும் அவரே காரணமாகிறார். அறமற்ற வழியில் வினையாற்றும் போது ஏற்படும் தீமைக்கும் அவரே காரணமாகிறார். எனவே தான்
ReplyDelete@//தீதும் நன்றும் பிறர் தர வாரா//@ என்றனர்.
தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !
- ஆசான் திருமூலர்.
அண்ணாமலை உண்ணாமலை அம்மாள் திருவடிகள் போற்றி
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் வாக்கு
ஏன் திருவண்ணாமலையில் அருணாச்சல தாண்டவம் ?
சித்தன் அருள் - 1748 - அருணாச்சல தாண்டவம்!!
=========
YouTube link
https://youtu.be/ScVUaLs0oCM
===========
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
OM SRI AGATHEESAYA NAMAHA
ReplyDeleteவணக்கம். முதலில் இரண்டு சொல்லிற்கு ஒருமுறை வரும் அப்பனே அப்பனே என்ற சொல்லை நீக்கவும்.
ReplyDeleteதிருவண்ணாமலையில் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. உயிர் இழந்தது சிறு குழந்தைகளுடன் உள்ள ஒரு அருமையான குடும்பம். பொய் கூறிக் கொண்டும் இறைவன் பெயரை வைத்துக் கொண்டும் ஏமாற்றித் திரிகின்றவர்களை எச்சரிக்கை செய்ய அந்த ஈசனுக்கு இந்த குடும்பம்தான் கண்ணுக்கு தெரிந்ததா. போலிகள் யாரும் தெரியவில்லையா.
அடியேனின் கருத்து திருவண்ணாமலையில் சுற்றி திரியும் போலிகள் மற்றும் போலிகள் பெயரில் உலவும் சாமியார்களை ஈசன் எந்த விதத்தில் தண்டித்தார் என்பதுதான்
DeleteUnfortunately,you are not understanding the wrath of Sivan and seriousness of the topic, instead you have arguments only.
Deleteஇறைவா! நீயே அனைத்தும்.
Deleteஇறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.
ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் ஆதி ஈசானரைக் கேள்வி கேட்கும் முன்னர், பின் வரும் கேள்விகளுக்குப் பதில் உங்களுக்குத் தெரிவது அவசியம். மனிதன் என்றாலே குறை உள்ளவன். ஒரு உயர் பதவியில் உள்ளவரை அணுகும் முன்னர் நமது ஆவணங்களைச் சரி பார்ப்பது மிக ரகசியம்.
1. உங்கள் பிறப்பின் கர்ம ரகசியம் என்ன?
2. என்னென்ன கர்மாவை தங்கி இவ் மனித பிறப்பு உங்களுக்கு ஈசனார் கொடுத்தார் என்று தெரியுமா?
3. இது எத்தனையாவது பிறவி என்று தெரியுமா?
4. உங்கள் ஆன்மா ஏன் இவ் பிறப்பைக் கேட்டது என்று தெரியுமா ?
5. நிழலுக்கு ஏற்றைபோல புண்ணியம் செய்ய வேண்டும். உங்கள் உண்மை நிழல் என்ன என்று அறிய விழைந்தீர்களா ?
6. இதுவரை ஏன் நீங்கள் உங்கள் ஆன்மாவின் வழியில் பயணம் செய்யவில்லை - இதன் ரகசியம் அறிந்தீர்களா?
இதனைத் தெரிந்து கொண்டால் உங்கள் அணைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும்.
உங்களிடம் புண்ணியம் இருந்தால் இந்த கேள்விகளுக்கு விடை உங்களைத் தேடி வரும்.
உங்கள் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் கேள்வி கேளுங்கள்.
உலகத்தில் உள்ள பல தளங்கள் போன்று அல்ல சித்தன் அருள் வலைத் தளம். இங்கு பதிவிடும் முன்னர் சற்று நிதானம் அவசியம்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
ஓம் அகத்திசாய நமக
ReplyDeleteதிரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
சித்தன் அருள் சம்பந்தமாக சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
சமீப காலமாக சித்தன் அருள் வலைதளத்தின் சாரம்சமம் அருள் நிறைந்த செறிவும் குறைந்து விட்டது என்று எண்ணுகிறேன். ஏகப்பட்ட எதிர்மறை வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன.
அகத்திய பெருமான் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர். மனிதர்களை எந்தன் சேய்கள் என்றுதான் சொல்லுவார். எளிய வழியில் கர்மாவை கரைக்க தங்கள் வழி சித்தன் அருள் வழி எங்களுக்கு எடுத்துரைப்பார். அகத்தியரிடம் தங்களுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு அனுபவமும் அற்புதங்கள் நிறைந்து இருக்கும்.
சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள், அருள் நிறைந்த வாழ்க்கைக்கு, அகத்தியர் பெருமான் அருள்வாக்கு போன்ற அதி அற்புதமான படிக்க படிக்க திகட்டாத பதிவுகளுக்கும் கடந்த 2 வருட பதிவுகளுக்கும் ஏகப்பட்ட வார்த்தை வேறுபாடுகள் ஐயா.
கருணை உள்ளமும் தாயன்பும் நிறைந்த குருநாதர் தன்னுடைய ஜீவ நாடியில் மனிதர்களை தரிதரம் பிடித்தவர்கள், திருடர்கள் என்று கடுமையான வார்த்தைகளை சொல்லுவாரா என்ன. சித்தன் அருள் என்பது சித்தன் சாபமோ என்று எண்ணம் வருகிறது. அகத்தியரை பொறுத்தவரை மனிதர்கள் அனைவரும் அவர் சேய்களே
எங்களை போன்ற எளிய மனிதர்களுக்கு தங்களின் மனதில் நிறைந்திருக்கும் பல நல்ல தனிப்பட்ட இறை அனுபவங்களையும் குருநாதரின் எளிய அருள் வாக்கையும் சித்தன் அருளில் மீண்டும் பதிவிட வேண்டுகிறேன். வேறு எதுவும் வேண்டாம்.
வேண்டுமானால் திரு. ஜானகிராமன் அவர்கள் தனியாக ஒரு வலைத்தளம் ஆரம்பித்து தன்னுடைய நாடி அனுபவங்களை வெளியிடட்டும். அதற்கு தங்களையம் சித்தன் அருள் வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
எங்களுக்கு அந்த பழைய சித்தன் அருள் மீண்டும் பொலிவு பெற வேண்டும். அதன் வழி குருநாதரின் அருள் ஒளி அனைவருக்கும் பல்கி பெருக வேண்டும்.
Dear brother,it seems that you are fully prejudiced by not grasping what exactly Agastyar appa indicated.
Deleteஅன்போடு அணுகினால் பாலாம்பிகை ஆகவும், பக்தியோடு அணுகினால் லலிதாம்பிகை ஆகவும் வந்து அருள் புரியும் மகாசக்தியே, அஹங்காரத்துடன் குயுக்தியுடன் அணுகும் துஷ்டர்களின் குருதியை தெறிக்கவிடும் மகாகாளி ஆக வருகிறாள்!!
Deleteஅனைவரும் அகத்தியர் மைந்தன் மற்றும் அக்னிலிங்கம் ஐயா அவர்களுக்காக சிவனாரின் கால பைரவரை வேண்டுங்கள்!!
சிவாய நம: ||
காலபைரவ அஷ்டகம்
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞ ஸூத்ரமிந்து ஶேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்
காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே॥ 1॥
பானுகோடி பாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டம் ஈப்ஸிதார்த தாயகம் த்ரிலோசனம் ।
காலகாலம் அம்புஜாக்ஷம் அக்ஷஶூலம் அக்ஷரம்
காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே॥2॥
ஶூலடங்க பாஶதண்ட பாணிமாதி காரணம்
ஶ்யாமகாயம் ஆதிதேவம் அக்ஷரம் நிராமயம் ।
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥3॥
புக்திமுக்திதாயகம் ப்ரஶஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் ।
வினிக்வணன் மனோஜ்ஞஹேமகிங்கிணீ லஸத்கடிம்
காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥4॥
தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாஶகம்
கர்மபாஶ மோசகம் ஸுஶர்மதாயகம் விபும் ।
ஸ்வர்ணவர்ண ஶேஷபாஶ ஶோபிதாங்க மண்டலம்
காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥ 5॥
ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம் நித்யம்
அத்விதீயம் இஷ்டதைவதம் நிரஞ்ஜனம்|
ம்ருத்யுதர்பநாஶனம்
கராளதம்ஷ்ட்ர மோக்ஷணம்
காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥6॥
அட்டஹாஸ பின்னபத்மஜாண்டகோஶ ஸந்ததிம் த்ருஷ்டிபாதநஷ்டபாப ஜாலமுக்ரஶாஸனம் ।
அஷ்டஸித்திதாயகம் கபால மாலிகந்தரம்
காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥7॥
பூதஸங்கநாயகம் விஶாலகீர்திதாயகம்
காஶிவாஸலோக புண்யபாபஶோதகம் விபும் ।
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥8॥
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் ।
ஶோக மோஹ தைன்ய லோப கோப தாப நாஶனம்தே
ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம் ॥9॥
இதி ஶ்ரீமச்சங்கராசார்யவிரசிதம் காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
அனைவரும் வேல்மாறல் பதிகத்தை ஒதிடல் வேண்டும்..
Deleteதிருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )
வெற்றி வேல் முருகனுக்கு அரஅரோகரா!
Siththan arul always obey gurunather order as well shri. Janakiraman ayya.
DeleteDo not post personal advise here in public domain, which will hurt
Many agathiar followers.
Mr. (in the name of sithan), please stay away from this page. don't confuse others.
Deleteஇறைவா! நீயே அனைத்தும்.
Deleteஇறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.
சித்த மார்க்கம் என்பது இலவம் பஞ்சு மேல் நடப்பது போன்று அல்ல. துன்பத்தைத் தங்கத்தயார் என்றால் மட்டுமே இதில் நுழையவேண்டும். கர்மாவை நீக்கவேண்டும் என்றால் அதற்குப் பல வழிகள் சித்தர்கள் வசம் உள்ளது.
உங்களைப் போன்றவர்களை, ஆதி ஈசனார் மிக அழகாக நம் குருநாதரிடம் உரைத்த வாக்கில்
" உன்னைத் திட்டியும் தீர்த்துக் கொள்கின்றார்கள். எதனையென்று கூட உன்னை வணங்கியே உன்னை எதையெதையோ சொல்கின்றார்கள்." என்று பின் வரும் வாக்கில் சொல்லியுள்ளார். அந்த வாக்கு
=========================
சித்தன் அருள் - 1169 - அன்புடன் அகத்தியர் - நமச்சிவாயன் வாக்கு!
https://siththanarul.blogspot.com/2022/08/1169.html
ஈசன் அகத்தியருக்கு பதில்:-
அகத்தியனே பொறுத்துக்கொள்!!!!!
நீதான் இப்படிக் கூறுகின்றாய்!!! உன்னை வணங்குபவர்களே உன்னை ஏற்றுகின்றார்கள். உன்னைத் திட்டியும் தீர்த்துக் கொள்கின்றார்கள்.
எதனையென்று கூட உன்னை வணங்கியே உன்னை எதையெதையோ சொல்கின்றார்கள்.
அகத்தியன் பொய் என்றெல்லாம் அதை நீ உணர்வாயா!? முதலில்!...
அகத்தியர் பதிலுரை:-
தாயே!! தந்தையே !!! வேலவா!!!
அனைத்தும் உணர்ந்தவன் யான்!!!!
பரவாயில்லை!!!! என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை மனிதர்கள்.
ஆனால் யான் நல்லதைத்தான் செய்ய வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் இட்ட கட்டளை முதலில் நீங்கள் மறந்து விட்டீர்களா!!!! என்ன???
கலியுகம் தோன்றும் முன்பே!!!!!
=================================
இதற்கு மிகசிறந்த உதாரணம் உங்கள் பதிவு. மகிமை புகழ் அகத்திய மாமுனிவரை வணங்கியே அகத்திய மாமுனிவரைத் திட்டும் பக்தன். இதுதான் கலியுகத்தின் உண்மையான முகம்.
எப்பேர்ப்பட்ட கருணைக்கடல் நம் குருநாதர். கலியுகம் என்ற சாக்கடையில் விழுந்த மனிதர்களை மீட்டு எடுக்கவந்த மாபெரும் மாமுனிவரை , அவர் பெயர் வைத்து வணங்கிவிட்டு அவர் வாக்குகளையே திட்டும் அளவுக்குப் பதிவுகள் இங்கு இட்டு கொஞ்சம் கூட உண்மை நிலையை உணராத பக்தன்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்களைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?
இந்த உலகத்திலேயே சுவடி வாசிக்க , குருநாதர் கட்டிய வழியில் திருத்தலம் திருத்தலமாக அலைந்து , பசி தூக்கம் பல துறந்து , எந்த சுகங்களும் இல்லாமல் , நீதி நேர்மையை கடைப்பிடித்தது , பல அற்புத வாக்குகளை அந்த அந்த திருத்தலங்களில் சென்று வசித்து அதனை மக்களுக்கு இட்டு உள்ளார்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் சென்ற ஆலயங்களை பின் வரும் கூகிள் மேப் இணைப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்
https://www.google.com/maps/d/u/0/edit?mid=1vR0Yqdohc1h0IsppUYQomUhsu0-of7c&ll=16.424347049839334%2C77.00628364795313&z=4
சித்தன் அருள் - 1739 - கூகிள் வழிகாட்டி!
https://siththanarul.blogspot.com/2024/11/1739.html
அன்புடன் அகத்தியர் என்ற தலைப்பில் வெளிவரும் அனைத்து வாக்குகளும் உங்களைப்போன்ற ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட வாக்குகள்.
நமது இந்த வாழ்க்கையை வெற்றி கொள்ளும் அனைத்து ரகசியங்களும் அதில் உள்ளது. யாராக இருந்தாலும் கர்மத்தை நீக்கினால் மட்டுமே நல்வாழ்வு கிட்டும்.
இந்த வாக்குகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவே பல புண்ணியங்கள் தேவைப்படுகின்றது.
நம் குருநாதர் எப்பேர்ப்பட்ட மகத்தான வாக்குகளை உரைத்து வருகின்றார். இனிய கதை அனுபவங்கள் இங்குப் பல நடந்து கொண்டே உள்ளது.
செல்லமே , என் தங்கமே என்று கொஞ்சும் அன்னை , தனது மகன் தவறான வழியில் சென்றால் அடித்து விடுவாள். அதற்குக் கரணம் குழந்தையின் மீது உள்ள வெறுப்பு அல்ல. அது தனது பாசத்தின் உச்சம்.
இப்போது அதுதான் நடக்கின்றது. இப்படி இருக்கையில் மீண்டும் மகன் ஒருவர் தவறாகச் சென்றால் ?........
உலகத்தில் உள்ள பல தளங்கள் போன்று அல்ல சித்தன் அருள் வலைத் தளம். இங்குப் பதிவிடும் முன்னர் சற்று நிதானம் அவசியம்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
இறைவா! நீயே அனைத்தும்.
Deleteஇறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.
பின்வரும் வாக்கினை பலமுறை படிக்கவும். புரிதல் வரும்.
சித்தன் அருள் - 1708 - பாகம் 13 - கேள்வி-பதில்!
https://siththanarul.blogspot.com/2024/10/1708-13.html
==================================
123. தவறு செய்பவனை தண்டிக்காமல், இன்றைய மனிதர்களை, அதுவும் உங்களிடம் வாக்கு கேட்க வரும் அடியவர்களை, எல்லா வாக்கிலும் திட்டி தீர்ப்பதில் என்ன லாபம் கிடைக்கிறது?
அதாவது ஏற்கனவே சொல்லிவிட்டேன். சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது, தாயவள், என்ன தவறு செய்தாலும் பொறுத்துக்க கொண்டு தான் இருப்பாள் அல்லவா? பெரியவனாக ஆக, நிச்சயம் திட்டி தீர்ப்பாள், அப்பொழுது தான் புத்திகள் வரும்.
=================================
===============================
சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு!
https://siththanarul.blogspot.com/2022/08/1168.html
1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.
யான் காறி துப்புவேன்!!!!
எதை என்று அறியாத ஒரு உயிருள்ள ஜீவ ராசியை உண்டு மகிழ்கின்றாயே!!!
நீ எதை என்று கூற நீ நன்றாக இருப்பாய் என்று எண்ணி கொண்டிருக்கின்றாயா???????? கூறு!!!!!!!
எதை என்று கூற கறியின் மீது ஆசைப்படுகின்றவனை யான் எதையெதையோ சொல்வேன்!!!! எதையெதையோ சொல்லி திட்டி தீர்ப்பேன்!!!!
காறியும் துப்புவேன்!!!! கீழான மனிதனே!!!!
இதையென்று அறிந்து அதனால் நிச்சயம் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடியுங்கள் கடைபிடியுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!!
===============================
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
சித்தன் அருள் - 1749 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் தாண்டவம்!
https://siththanarul.blogspot.com/2024/12/1749.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
This comment has been removed by the author.
ReplyDeleteஅகத்தியர் அப்பா திருவடிகள் போற்றி போற்றி......
ReplyDeleteஅகத்தியர் அப்பா திருவடிகள் போற்றி போற்றி......
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete