11/11/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்.சீரடி சாய்பாபா சமாதி.மந்திர்.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதர் ஏற்கனவே ஜல்காவ் சத்சங்கத்தில் கூறியபடி திரு ஜானகிராமன் ஐயா மற்றும் அடியவர்கள் சீரடி வந்து நல்முறையாக பாபாவை தரிசனம் செய்தனர் பாபாவை தரிசனம் செய்ததற்கு வெளியே வரும் பொழுது ஒரு எளிமையான தோற்றத்தில் ஒரு முதியவர் ஆலயத்திற்கு உள்ளே இருக்கும் குடிநீர் குழாய்களில் தனது கையில் இருந்த பாட்டில்களில் நீரை பிடித்து அங்கே இருக்கும் மற்ற ஜீவசமாதிகள் போல் இருக்கும் பீடங்கள் மற்றும் மரங்களுக்கு அதாவது பெரிய பெரிய மரங்களுக்கு கீழே இருக்கும் சிறு சிறு துளைகளில் நீரை ஊற்றிக் கொண்டு இருந்தார்.
அடியவர்களையும் திரு ஜானகிராமன் அய்யாவையும் பார்த்து புன்னகைத்த அவர் அருகில் வந்து பேசினார்!! அதன் பிறகு உடன் வந்த அடியவர்களும் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை அறிமுகப்படுத்தி அகத்தியரின் சுவடி இது என சொல்லிய போது அவரும் அப்படியா என்று கேட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டே வந்து நானும் அமருகின்றேன் என்று அமர்ந்தார்.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே நல் முறையான ஆசிகள் அப்பனே அனைவருக்கும்.. இவந்தனும் (அருகில் அமர்ந்திருந்த சாது முதியவர் ) கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அதாவது பின் இவந்தனிடம் (பாபாவிடம்) சீடனாக இருந்து நிச்சயம் பின் பல வழிகளிலும் கூட பின் நிச்சயம் சேவைகள் செய்தவன் தான் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பின் இல் ஞானியைப் பற்றி இப்பொழுது சுருக்கமாக கூறப்போகின்றேன்.
அப்பனே நல்விதமாகவே அப்பனே இவந்தனும் (பாபா) கூட அப்பனே பின் அதாவது பல பல வகைகளில் கூட பின் ஏழை குடிலில் பிறந்து அப்பனே நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே
ஆனாலும் இவந்தனைக் காக்க ஆள் இல்லையப்பா..
ஆள் இல்லையப்பா அப்பனே அறிந்தும் கூட
இதனால் இவ் ஞானி அப்பனே அதாவது எவை என்றும் கூட பின் பின் எதை என்று புரிந்து இதனால் அப்பனே பின் நல் முறையாகவே அப்பனே அறிந்தும் கூட பின் உணர்ந்தும் கூட அப்பனே பல வகையிலும் கூட அப்பனே பின் அதாவது இவ் ஞானி... அதாவது அப்பனே பின்.. பின் அறிந்தும் கூட ஏழை குடிலில் கூட இவ்வாறு வளர்ந்து ஒரு பிறவியில் அப்பனே... பின் ஒன்றும் இல்லாமலே அப்பனே
மீண்டும் மறுபிறவி எடுத்தானப்பா நிச்சயம்.. அப்பொழுது கூட அப்பனே ஒன்றுமில்லாமல் அப்பனே
அப்பனே நிச்சயம் ஒவ்வொரு பிறவியிலும் கூட அப்பனே பின் ஒவ்வொரு பிறப்பெடுத்து அப்பனே வாழ்ந்து வந்தான் அப்பனே
பின் அதனால் அப்பனே என்ன? ஏது ? என்று கூட அப்பனே... ஆனாலும் அனைத்தும் தெரிந்து கொண்டான் அறிந்து கொண்டான்...
அப்பனே அறியும் வண்ணம் நிச்சயமாய் எதை என்றும் கூட இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே செப்ப போனால்.. அப்பனே நிச்சயம் ரகசியத்தை சொல்லப் போகின்றேன்
இதனால் ஒரு பிறவி எடுத்து அப்பனே கஷ்டங்கள் பட்டுப் பட்டு அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே பின் சிறு வயதில் இருந்தே அப்பனே ஞானம் பெற்றான்
அவ் ஞானம் கூட அப்பனே எப்படி?? பெற்றான் என்பதை எல்லாம் அப்பனே இப்பொழுது சொன்னால் மனிதனுக்கு புரியாதப்பா!!!
அப்பப்பா !! இதனால் பின் அனைவரின் இல்லத்திற்கும் கூட சென்று பிச்சை அதாவது தர்மம் ஏந்தி நிச்சயம் பின் உண்டு வந்தான்!!!
ஆனாலும் பின் தர்மம் ஏந்துகின்ற பொழுது நிச்சயம் அறிந்தும் கூட...அவ் இல்லத்தில் என்ன பிரச்சனை?? என்று பின் ஆராய்ந்து உடனடியாக சரி செய்வான்.
நிச்சயம் பின் இப்படியே பின் பல பல ஊர்களுக்கும் சென்று நிச்சயம் பின் பிச்சை ஏந்தி அதாவது அவ் இல்லத்தில் என்ன பிரச்சனைகள்?? என்று நிச்சயமாய்... அறிந்தும் கூட பின் இவந்தனக்கு தெரிந்துவிடும்.. பின் நல்படியாகவே அனைத்து செயல்களையும் செய்து வந்தான்.
இதனால் அனைவருக்குமே மாற்றங்கள்.
இதனால் பின் மறு ஊருக்கு செல்கின்ற பொழுது நிச்சயம் பின் இவந்தன் இவ்வாறு நிச்சயம் பின் நம் இல்லங்களுக்கு வந்த பிறகுதான் மாற்றங்கள் என்று நிச்சயமாய் பல வழிகளிலும் கூட ஊரில் அதாவது பக்கத்து கிராமமே கொண்டாடியது
நிச்சயம் அறிந்தும் உண்மைதனை எதுவென்று கூற இதனால் நிச்சயம் பின் இவ்வாறு பின் இவ்வாறு ஞானியானவனை அறிந்தும் கூட பல பல மக்களும் கொண்டாடினார்கள்.. இவரால்தான் நிச்சயம் பிழைத்துக் கொண்டோம் என்று.
ஆனாலும் பல மனிதர்கள் நிச்சயம் அறிந்தும் இவை என்றும் கூட நிச்சயம்.. இவந்தன் பைத்தியக்காரன் ஆனால் மக்களும் பைத்தியக்காரர்கள்.. யாரோ இவன்!!!!!!!!!!? நிச்சயம் பின் இல்லத்திற்கு வந்தானாம் !?!?!?!?!?!?!?!?!?!
தர்மம் கொடுத்தார்களாம்!?!?!?!?!?!? பின் உயர்ந்துவிட்டார்களாம்!?!?!?!?!?!?!... என்று நிச்சயம் இதையெல்லாம் பின் நம்புவதா?????.... என்றெல்லாம்!
நிச்சயம் இதனால் இவந்தன் இவ் ஊருக்கே வரக்கூடாது... அதனால் நிச்சயம் இனிமேல் இவந்தன் இங்கு தர்மமும் ஏந்த கூடாது.... என்று
இதனால் தன்னந்தனியாக அப்பொழுதெல்லாம் இவையெல்லாம் காடுகள் !!!
நிச்சயம் பின் இவந்தனை ஒதுக்கி விட்டார்கள்...
நிச்சயம் இனிமேல் நீ அதாவது... பிச்சைக்காரனுக்கு இவ்வளவு... அறிந்தும் இவ்வளவு நிச்சயம் பின் இவ்வளவு திமிரா ???? என்றெல்லாம்!! என்றெல்லாம் நிச்சயம் சில பேர்... பின் இவந்தன் ஆடைகளையும் கூட கழற்றி நிச்சயம் இவை என்று கூட ஓட விட்டனர்.
ஆனாலும் பின் நிச்சயம் கோபங்கள் வரவில்லை இவந்தனுக்கு... பின் அழகாகவே... இதையென்று நிச்சயம் பின் அமைதி காத்தான்.
நிச்சயம் மேல் நோக்கி....
இறைவா!!!!.... என்னை நீ படைத்தாய்!!!!!
ஆனாலும் மக்கள் இப்படி இருக்கின்றார்களே!!!.....
நிச்சயம் மக்களை மக்கள் மதிக்க தெரியவில்லையே
நிச்சயம் இறைவா!!! என்னை அழைத்துச் செல் உன்னிடம் என்றெல்லாம்!
ஆனாலும் அமைதியாக நிச்சயம் சரி...நம் தனக்கும் ஒரு இடம் உண்டு... என்றெல்லாம் நிச்சயம் இங்கு வந்து அமர்ந்தான். நிச்சயம் இங்கு வந்த அமர்ந்தான்.
நிச்சயம் இறைவா!!! யான் நல்லதை செய்தேன்.. உன் ஆணைப்படி!!!
ஆனால்... எனது ஆடைகளை கூட கழற்றி விட்டார்கள்... நிச்சயம் பின்....தா!!!!!!
அதாவது இப்பொழுது தந்தால் யான் வாழ்வேன்... இல்லையென்றால் நிச்சயம் இங்கேயே சாவேன் என்று!!
அழகாக மேலிருந்து உடைகள் வந்ததப்பா!!!!
ஆடைகளை சரியாகவே இவந்தன் அணிந்து கொண்டான்!!!
அணிந்து பின் இங்கே அமர்ந்தான்... அதாவது அப்பொழுதெல்லாம் இங்கு நிச்சயம் காவலாளிகள் (ரோந்து பணி) எல்லாம் பின் சுற்றி பார்க்க அதாவது யார்? யார்? வந்திருக்கின்றார்கள் என்றெல்லாம்!!!
நிச்சயம் இங்கு வந்து பார்த்தார்கள்... நிச்சயம் பின் நேற்றைய பொழுதில்... இவந்தனுக்கு அதாவது ஒன்றுமே இல்லாமல் துரத்தினார்கள்.
ஆனால் இங்கே வந்து அமர்ந்திருக்கின்றான்...
நிச்சயம் இவந்தன் கூட இங்கே எதன் மூலம்??? பின் அதாவது நிச்சயம் பின் அதாவது உடுக்க ஆடைகளும் நேற்று இல்லையே ஆனால்..????
இன்று உடுத்தி இருக்கின்றானே... இவன் திருடன் என்று... ஊரார்களிடம் சென்று நிச்சயம் தளபதிகளிடம் எல்லாம் சென்று நிச்சயம் அழைத்து வந்து...
பின் நீ ஆடைகளை எங்கே திருடினாய்??? என்றெல்லாம்!!!
இவந்தன் நிச்சயம் யான் திருடவில்லை... இறைவன் தான் கொடுத்தான் என்று!!
ஆனாலும் பின் அறிந்தும் கூட.... நிச்சயம் இறைவன் கொடுத்தானாம்!????????
அவ் இறைவன் எங்கு இருக்கின்றான்??? நிச்சயம் காட்டு என்று!!
நிச்சயம் ஆனாலும் பின் பார்ப்போம்... இறைவனை காட்டு!!!
அதாவது நீ திருடவில்லை என்றால் இறைவனை காட்டு என்று !!!!
நிச்சயம் இவந்தன் தன் கைகளை மேலே தூக்கி.. வானை நோக்கி பின் உடைகள் அங்கிருந்து தான் வந்தது என்று.
ஆனாலும் நிச்சயமாய் இது இக்கலியுகத்திலே நடந்தது
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் பல பல மனிதர்கள் நிச்சயம்... உடைகள் மேலிருந்து வந்ததா????????
இதை நாங்கள் நம்ப வேண்டுமா???????
இவந்தன் பொய் கூறுகின்றான்... நிச்சயம் பின் அறிந்தும் கூட.... ஒருவன் இவனிடம் வந்தான் பின் இவந்தன் வாயின் மேலே குத்தினான்... அறிந்தும் கூட..
அப்பொழுதும் கூட இவந்தன் மேல் நோக்கி... இறைவா!!!! பின் அதாவது இப்பொழுது கூட தண்டனையா?????
நீ தான் கொடுத்தாய்... வந்து தான் இவந்தனுக்கு பின் காண்பி !! என்று!! நிச்சயம் அறிந்தும் கூட!
இதனால் நிச்சயம் பல பல மனிதர்கள் நிச்சயம் எதை என்று... நிச்சயம் இவன் திருடன்.... திருடன் தான் இவனை சங்கிலியில் இட்டு நிச்சயம் பின்... ஊர் முன்னே நிறுத்தி அதாவது...
ஊர் முன்னே வேண்டாம்... இன்னொருவன் அதாவது இன்னொருவன் இவனை இங்கே நிறுத்தி நிச்சயம் பலமாக கற்களால் அடித்து இவன் சாகட்டும் என்று
இதனால் பின் நிச்சயம் அனைத்தும் அதாவது சங்கிலியால் கட்டி துணியில்லாமல் நிச்சயம் பின் அடித்து அடித்து!!!
இதனால் மேலிருந்து நிச்சயம் ஒரு சப்தம் (அசரிரீ ஆகாசவாணி) கேட்டது !!
நிச்சயம் இவனை அடித்தால் நிச்சயம் பின் அனைவரின் வாழ்க்கையும் நிச்சயம் இப்பொழுதே தொலைந்து போகும் என்றெல்லாம்.
நிச்சயம் அதாவது அடித்தவர்கள் அதாவது மறுகணமே நிச்சயம் பின் கற்களை வீசினோர்கள்.. அவர்கள் மீது கற்கள் திருப்பி நிச்சயம் படிந்தது மீண்டும்.. பின் அறிந்தும் கூட..
அப்பொழுதுதான் தெளிவு பெற்றார்கள்... இறைவன் எதை என்று அறிய நிச்சயம்.. தூதன்.. என்று
(இறைதூதன்).... அனைவருமே வந்து நிச்சயம் இவந்தனை தொழுது... நிச்சயம். இவந்தனை பின் நிச்சயம் நீங்கள் தான் காக்க வந்த தெய்வம்.. என்றெல்லாம் நிச்சயம் பின் போற்றி துதித்து!!!!
ஆனாலும் சில கயவர்கள் நம்பவில்லை
...இவந்தனை விட்டுவிட்டால் நிச்சயம் மக்கள் இவனை நம்புவார்கள் என்று நிச்சயம்... மத கலவரத்தையும் தூண்டினார்கள்..
நன்முறைகளாகவே மதக் கலவரத்தை தூண்டினால் நிச்சயம் எவை என்று அறிய அறிய பின் அதாவது... பல சுற்று வட்டார பகுதிகளில் கூட... நிச்சயம் இவந்தன் அறிந்தும் கூட... பின் ஏதோ ஒன்றைக் கூட..
(பாபா உருவத்தோற்றத்தினை குறித்தும் வசித்து வந்த இடத்தினை குறித்தும் (ஒரு பழைய பள்ளிவாசல்) மக்கள் பல்வேறு விதமான சந்தேகங்களுடனே இப்பொழுதுமே இருக்கின்றனர்... அவர் அந்த மதம் இந்த மதம் என்ற உரிமை கொண்டாட்டமும் வெறுப்பும் இன்றளவும் இருக்கின்றது!!
குருநாதர் வாக்குகளில் கூறுகின்றபடி இந்த கலியுகத்தில் அந்த சமயத்திலும் அதாவது அவர் உயிர் உடலாக இருந்த பொழுதும் இந்த பிரச்சினை இருந்திருக்கின்றது! மனிதர்கள் அப்போதிலிருந்து இப்போது வரை திருந்தவில்லை என்று தான் எண்ணிக் கொள்ள வேண்டியிருக்கின்றது !!
மதங்களைக் கடந்த மகானை மதம் எனும் வட்டத்தில் அடைத்து பார்ப்பது தவறு என்பது மக்கள் குருநாதரின் இந்த வாக்கினை படித்தாவது திருந்திக் கொள்ள வேண்டும்)
இதனால் மதவாதிகள் அனைவரும் வந்துவிட்டனர்.. யார் இவன்??? என்ன ஏது?? என்றெல்லாம் நிச்சயம்!! அறிந்தும் கூட !!!
(அன்றைய காலகட்டத்தில் பாபா எங்கள் மதத்திற்கு தான் சொந்தம் அவர் எங்கள் மதம் என்று இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டனர் அவர்களை எல்லாம் பாபா அழைத்து)
இதனால் அப்பொழுதே யான் பின் அதாவது இவந்தன் ... அனைவரின் முன் தோன்றி அதாவது...
"""யான் அனைவருக்குமே பின் அதாவது சொந்தக்காரன்!!!
என்னை எந்த மதத்திலும் சம்பந்தப்படுத்த கூடாது...
என் சம்மதம் இல்லாமல் நிச்சயம் எவ் மதத்தையும் நிச்சயம்...யான் என்னை எதிலும் எந்த மதத்திலும் சேர்க்கலாகாது..... அதனால் இப்பொழுதே... மாறுகின்றேன் என்று!!!
நிச்சயம்... அனைத்தும் அறிந்தும் கூட பின்... அதாவது நிச்சயம் எவை என்று கூட... அறிந்தும் அறிந்தும் கூட சேவைகள் செய்ய பல வழிகளும் கூட இறைவன் அனுப்பினான்...!!
நிச்சயம் அதாவது நிச்சயம் இவர்கள் தான் அதாவது... இவர்கள் நிச்சயம் !!!
அதாவது மறைமுகமாக இவந்தனக்கு ஒரு சக்தி இருந்தது!!!
அனைவரும் வருவார்கள் இவர்களை பார்த்து!!!
இதோ இவர்கள்... அதாவது முன்பெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது பின் இவை என்று கூட... இந்து மதத்தில் இருப்பவர்கள் இதோ இவர்கள்தான் பாருங்கள்... எந்தனுக்கு சொந்தக்காரர்கள் !!
இன்னும் கிறிஸ்தவம் இவர்கள்தான் எந்தனுக்கு சொந்தக்காரர்கள்...
இன்னும் இஸ்லாமியர்கள் இவர்கள்தான் எந்தனுக்கு சொந்தக்காரர்கள்... என்று அனைவரையும் வரவழைத்தான்... இன்னும் பௌத்த மதத்தையும்... இன்னும் சமண (ஜெயின் )மதத்தையும்... அனைவருக்குமே
யான் சொந்தக்காரன் தான் அனைவருமே என் சொந்தக்காரர்கள் தான்
நிச்சயம் யான் ஒரு அனாதை தான்...
ஆனாலும் நிச்சயம் நீங்கள் ஏன் இப்படி எல்லாம் சொல்கின்றீர்கள்???
இதனால் நிச்சயம் நீங்கள் அனைவருமே எந்தனுக்கு சொந்தக்காரர்கள் தான்...
நிச்சயம்... என்னிடத்தில் வந்தால் அனைவருமே ஒன்றுதான் என்று நிச்சயம் அப்பொழுது தெரிவித்தான்.
இதனால் அனைவருமே அவந்தனைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள்...
நிச்சயம் அன்றிலிருந்து நிச்சயம் இன்று வரை நிச்சயம் இங்கே இருந்து மறைமுகமாக பல வழிகளிலும் கூட.. பின் சூட்சமமாக வந்து அனைவருக்குமே
பின் ஜாதி மதம் நிச்சயம் அறிந்தும் கூட மொழி பாகுபாடின்றி சேவைகள் செய்து கொண்டே வருகின்றான்...
இவந்தன் பின் சாதாரண பிறப்பல்ல...
ஆனால் இப்பொழுது கூட சேவைகளை செய்து கொண்டே வருகின்றான்... மனிதனைப் போன்றே!!!!
ஆனால் இவ்வாறு நிச்சயம் யாராவது செய்ய முடியுமா??? என்ன???
நிச்சயம் செய்ய முடியாது.. நன்முறைகளாகவே...
ஆனால் பின் நிச்சயம் இவனை தூற்றுவதும் நிச்சயம் அறிந்தும் கூட.... மகா பெரிய பாவம் என்பேன்....!!!
அவ் பாவங்களை நிச்சயம் சுமக்கத்தான் ஆக வேண்டும்..
நிச்சயம் இவன் செய்யும் லீலைகள் யாராவது செய்ய முடியுமா??? என்ன!!!
இக்கலி யுகத்தில் பின்... இவனை நம்பி எத்தனையோ பேர்கள்
நிச்சயம் பின் அன்னத்தை உண்கின்றார்கள்.
எத்தனையோ பேர்கள் மருத்துவர்கள்... எத்தனையோ பேர்கள் நிச்சயமாய் பின் அறிந்தும் கூட பின் கல்வி....
இன்னும் இன்னும் பின் எத்தனை எத்தனையோ? பேர்கள் இன்னும் பின் அதாவது இன்னும் பின் எண்ணும் அளவிற்கு கூட வசதி இல்லாமல்!!!
அவர்களுக்கெல்லாம் வசதி வாய்ப்பை தந்து கொண்டே இருக்கின்றான்
அதனால் இவனைப் போன்று யார்?? என்று சொன்னால் நிச்சயம் பின் அறிந்தும் எதை என்றும் புரியப் புரிய இதனால் இவ் ஞானி பின் அனைவருக்கும் பின் ஆசிகள் தந்து!!!
பின் அதாவது ஏழை எளியோர் பின் பாகுபாடின்றி அதாவது இன்னும் பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி இங்கு வருவோருக்கெல்லாம் அள்ளிக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான்...!!!
அவ்வளவு மகத்தான பின் கோடீஸ்வரன் இவன் !!!!
இவனைப்போய் ???அறிந்தும் கூட!!!!
ஆனால் நீங்கள் எதைச் சொன்னாலும் இவன் ஏற்றுக் கொள்வான் ...
இவனுடைய ஒரே தத்துவம்!!!
நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் எதை என்று உணர்கின்ற அளவிற்கு கூட எதைச் சொன்னாலும் அதாவது அடித்தாலும்.!!!!.
பின் அதாவது இறைவா!!!!! இவனை... நல்லவனாக வாழ வை!! பின் நன்றாக வாழட்டும் என்றுதான்..
ஆனால் இப்படிப்பட்டவர்கள் இவ்வுலகத்தில் இருக்கின்றார்களா....?? என்றால் இல்லை நிச்சயம் இல்லை!!!
இவ் ஞானியை பற்றியும் இன்னும் சிறப்பான வாக்கு ஒன்றை கூட கூறி தெளிவுபடுத்துகின்றேன்.. ஆசிகள் !!!!
பின் இவந்தனும் அதாவது பக்கத்தில் இருக்கின்றானே... இவந்தன் கூட(அருகில் அமர்ந்திருந்த பெரியவர்) அவனோடு இருந்தவன் தான்... பின் அதாவது.. அவந்தனுக்கு சேவைகள் செய்தவன் தான்.. பின் அருகில் இருப்பவர்களிடம் அவன்(பாபா) தண்ணீர் கேட்பான்... இவன்(முதியவர் அந்த பிறவியில் சீடனாக)நிச்சயம் அவந்தனக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
நிச்சயம் இப்பொழுதும் கூட பின் மறைமுகமாக வந்து.. பின் இவனிடத்தில் பின் ஏதோ ஒன்றை தந்து கொண்டே தான் இருக்கின்றான்.
நலன்களாக ஆசிகளாக இவந்தனும்..!!அவந்தனுக்கு பின் சேவைகள் அதாவது தண்ணீர் இப்பொழுதும் கூட ஊற்றிக் கொண்டே இருக்கின்றான்.
ஆகும் !! நலமாகும்!!! ஆசிகள் !! ஆசிகள்!! அனைவருக்குமே!! அனைவருக்குமே!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
குருநாதரின் வாக்கினை கேட்பதற்கு அருகில் வந்து அமர்ந்த பெரியவருக்கு மொழிபெயர்த்து குருநாதர் கூறிய வாக்கினை கேட்ட பொழுது மிகவும் ஆனந்தம் அடைந்தார்.
ஏனென்றால் அவர் ஒரு சந்நியாசி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார் நாடோடியாக அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றவர் குடும்பம் என்று எதுவும் இல்லை இறைவனை மட்டும் துணையாக குறிப்பாக சாய்பாபாவை மட்டும் நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருபவர்... எங்கேயாவது இவர் சுற்றிக் கொண்டிருப்பார் திடீரென சீரடி செல்ல வேண்டும் என்ற ஞாபகம் வந்துவிட்டால் உடனடியாக எப்படியாவது இங்கு வந்து விடுவார்!! வந்து மாத கணக்கில் தங்கி அன்னதான கூடத்தில் உண்டு விட்டு அங்கேயே உறங்கி விட்டு தினமும் பாபாவை தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள சில இடங்களில் சென்று நீரை ஊற்றுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.
குருநாதர் அகத்தியர் பெருமான் கூறிய வாக்கினை கேட்டு விட்டு அடியேன் கைகளால் நீரை அருந்துகின்றாரா?? பாபா.. அவருக்கு சீடனாக இருந்திருக்கின்றேனா?? என்றெல்லாம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரு உண்மையான சாது எப்படி இருப்பார்கள் என்பதை புரிய வைத்தார் அவருக்கு உதவி கரம் நீட்டுவதற்கு உதவிகள் செய்த போது அவர் கட்டாயமாக மறுத்துவிட்டார்!!! எனக்கு எதுவும் தேவையில்லை ஒரு ரூபாய் கூட உங்களிடமிருந்து தேவையில்லை....
என்னிடம் பணம் வந்து விட்டாலே அது தேவையில்லாத சிந்தனையை எனக்கு கொடுக்கின்றது... அதனால் எனக்கு பணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் அன்பாக...
அதன் பிறகு சரி வாருங்கள் எங்களுடன் வந்து உணவு அருந்துங்கள் என்று வற்புறுத்திய பொழுது கூட இல்லை இல்லை ஆலயத்திற்கு உள்ளே அன்னதான கூடத்தில் அன்னம் அளிக்கின்றார்கள் அதுவே எனக்கு போதும்!!!
என்று அனைவரையும் ஆசீர்வதித்து மகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்று விட்டார்....
சில ஆலயங்களில் காவி அணிந்து கொண்டு கட்டாயப்படுத்தி அது வேண்டும் இது வேண்டும் என்று ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களை தொல்லை செய்யும் சாதுக்களுக்கு நடுவில் இப்படியும் ஒரு சாது!!! இருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டு!!!
எல்லாம் குருவின் திருவருள் என்று நினைத்துக் கொண்டு!!! மகாராஷ்டிரா யாத்திரை குருநாதரின் திருவருளால் நல்படியாக நிறைவு பெற்றது!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இறைவா! நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா! நீ நன்றாக இருக்கவேண்டும்.
சித்தன் அருள் - 1747 - அன்புடன் அகத்தியர் - ஷீர்டி வாக்கு!
https://siththanarul.blogspot.com/2024/12/1747.html
====================
Google Map link
https://maps.google.com/?cid=161492536327951220
====================
====================
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் இவ் உலகிற்கு சுட்டிக்காட்டப்பட்ட மகத்தான ஆலயங்கள் - Google Map link
https://www.google.com/maps/d/u/0/edit?mid=1vR0Yqdohc1h0IsppUYQomUhsu0-of7c&usp=sharing
====================
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் முருகா கந்தன் கருணை
ReplyDeleteஓம் சிவாய நம
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete