வணக்கம் அகத்தியர் அடியவர்களே
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் ஹிவர்கேட் ஏழை பக்தன் வீடு மற்றும் சிவாலயம் இங்கெல்லாம் சென்று விட்டு குருநாதர் அடுத்ததாக மற்றொரு பக்தன் வீட்டிற்கு செல்ல சொல்லி உத்தரவு கொடுத்தார்.
அவர் மகராஷ்டிரா மாநிலத்தில் ஜல்ஹாவ் எனும் ஊரில் வசித்து வருகின்றார்.
அவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குருநாதர் அகத்தியர் மீது பக்தி கொண்டு அவர் காட்டும் வழியில் வந்து கொண்டு இருப்பவர்... பல தான தர்மங்கள் சேவைகள் செய்து அகத்தியர் கூறும் அனைத்து திருத்தலங்களுக்கும் சென்று வருபவர்.. குருநாதர் வாக்கில் கூறும் அனைத்து விஷயங்களையும் முறையாக செய்து வழிபாடு செய்து வருபவர்.
இவருக்கு மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் மருத்துவ ஒப்பந்த பணி மூலம் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருபவர். இவருடைய விதியிலும் சில பிரச்சனைகள் இருந்தது...
அதாவது அரசாங்கத்துடன் தொழில் ஒப்பந்தம் செய்தால் முறைப்படி வருமானம் வருவது கால தாமதம் ஏற்படும் அது மட்டும் இல்லாமல் இருக்கும் அதிகாரிகள் முதல் கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் வரை இத்தனை சதவீதம் எனக்கு கமிஷன் எதிர்பார்ப்பார்கள் அதே தான் இவருக்கும் நடந்தது.
நேர்மையாக தொழிலை முறையாக பதிவு செய்து அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து தொழில் செய்து வந்தாலும் லஞ்சமாகவும் கமிஷனாகவும் இவருடைய உழைப்பையே முழுவதும் உறிஞ்சி விட நினைத்து இவரை வற்புறுத்த இவர்.. நான் நேர்மையாக உழைத்து சேர்க்கின்ற பணம் இது இதிலிருந்து லஞ்சமாக தர மாட்டேன் என்று கறாராக மறுத்து விட்டார்.
ஆனால் அரசாங்கத்தில் இருப்பவர்கள் இவருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை கிட்டத்தட்ட இவருடைய வாழ்வாதாரம் அது ஒட்டுமொத்த உழைப்பு அது கிட்டத்தட்ட இரண்டே கால் கோடி ரூபாய் வர வேண்டும் ஆனால் அதை வேண்டும் என்று நிறுத்தி வைத்து உதாசீனப்படுத்தி விட்டார்கள்.
செய்வதறியாது திகைத்த இந்த பக்தர் குருநாதரிடம் நாடி வாக்குகள் கேட்டார்!!! வேறு வழியே இல்லை குருநாதா எங்கள் வாழ்வாதாரம் முழுவதும் இதில் தான் இருக்கின்றது இவர்கள் எப்படி செய்தால் நாங்கள் வாழவே முடியாது உயிரை இழப்பதை தவிர வேறு வழியே இல்லை... என்று குருநாதரிடம் தன் கோரிக்கையை வைத்தார்.
ஏனென்றால் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் இதனை குறித்து உள்ள பின்புல நகர்வுகள் அனைத்தும் முதலை வாய்க்குள் சென்ற கதையை தான்!!
புலி வாலை பிடித்த கதை தான்!!!
ஆனால் குருநாதர் தன் பக்தரை கைவிட்டு விடுவாரா?? என்ன??
அப்பனே நீ ஒன்றும் கவலைப்பட தேவையில்லை!!! என்னையே நம்பிக் கொண்டிருக்கின்றாய் நீ!!
உந்தனுக்கு சனியின் தொல்லைகள் சில இருக்கின்றது!!! அதனால் நீ சனி சிங்னாப்பூர் சென்று அமைதியாக தியானம் செய்து வா!!! சனியவன் உந்தனுக்கு நல் மாற்றங்களை ஏற்படுத்துவான்.
அதேபோல் அனுதினமும் ஸ்ரீ ராம ஜெயத்தை எழுதிக் கொண்டே வா!!! ஒருமுறை காமாக்யா தேவி சென்று வா!!!!
யான் உன்னுடன் இருக்கின்றேன் அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு தொடு!!!! உன் உடனேயே இருக்கின்றேன்... யான் பார்த்துக் கொள்கிறேன் அப்பனே !! இது கலியுகம் அப்பா இங்கு நேர்மைக்கு காலம் இல்லை.... என்று வாக்குகள் தந்து அரசாங்கம் மற்றும் அந்த அதிகாரிகளுக்கு குறிப்பாக நிலுவைத் தொகை தடை செய்து வைத்திருந்த மாவட்ட ஆட்சியாளரை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடுக்க வைத்தார் நம் குருநாதர்.
இதற்கிடையே சனி சிங்னாப்பூர் அவரும் சென்று வழிபாடு செய்து தியானம் செய்து கொண்டிருக்கையில் ஒரு காகம் இவர் அருகே வந்து அமர்ந்து இவரது தொடையில் வந்து தொட்டு கொத்தி விட்டு சென்றது.
அனுதினமும் இவர் வீட்டில் ஆயிரத்திற்கும் மேலே ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் என எழுத தொடங்கினார் .
தீபம் ஏற்றி வழிபாடு செய்ய ஆரம்பித்து இரண்டு மூன்று குயர் நோட்டுகளும் முழுமை பெற்று விட்டன.
குருநாதர் கூறியதை போல் அசாமில் இருக்கும் காமாக்யா தேவி சக்தி பீடத்திற்கும் சென்று வழிபாடு செய்து விட்டு வந்தார்.
இதற்கு இடையே குருநாதர் சிவனேரி கோட்டையில் (சித்தன் அருள் பதிவு எண் 1321) அஷ்ட விநாயகர் திருத்தலங்களை ஒரு அமாவாசை தினத்தில் முழுவதும் தரிசனம் செய்ய வேண்டும் என்று குருநாதர் கூறியதை கடைபிடித்து அந்த திருத்தலயாத்திரையையும் நிறைவு செய்தார்)
இந்த இரண்டு மாதத்தில் நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றி பெற்று தீர்ப்பு இவருக்கு சாதகமாக வந்தது.. இவருக்கான நிலுவைத் தொகையும் இவருக்கு கிடைக்கும்படி தீர்ப்பு வந்துவிட்டது.
எல்லாம் குருநாதருடைய திருவருள்!!!!
இவரது குடும்பமே நிம்மதி பெருமூச்சு விட்டது ஏனென்றால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உழைத்த உழைப்பு இது பணியாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் ஏஜென்சி யை நடத்த வேண்டும். இந்தக் கவலையில் அனுதினமும் அலுவலகங்களுக்கு செல்வது மன்றாடுவது திரும்புவது வேதனையில் தவிப்பது என இருந்த குடும்பத்தில் குருநாதர் இந்த வழக்கில் வெற்றி பெறச் செய்ததன் மூலம் குடும்பத்தில் சுபிட்சத்தையும் ஐஸ்வர்யத்தையும் ஏற்படுத்திவிட்டார்.
அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து வெற்றியும் பெற வைத்த குருநாதருக்கு கண்ணீர் மல்க நன்றிகள் தெரிவித்தார்...இவர்
அன்னை லோப முத்திரையை இவருக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலயே ஒரே மகளான பெண் குழந்தைக்கு லோப முத்ரா... என பெயர் வைத்துள்ளார். அந்தக் குழந்தைக்கும் புதிய புதிய பாடத்திட்டங்களால் பள்ளியில் கல்வி பயிலும் பொழுது புரிந்து கொள்ள முடியாமல் அந்த குழந்தை தடுமாறியதனால் மனக்கவலை உற்ற அடியவர் குருநாதரிடம் வேண்டி கேட்ட கொண்ட பொழுது அவரது இல்லத்திற்கே குருநாதர் சென்று அந்த குழந்தைக்கும் சில மூளைக்குள் அணுக்களை செலுத்தி அருள் செய்தார் இதை பின்வாக்கில் குருநாதரே கூறினார்.
மேலும் ஒருமுறை கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு மகளை அழைத்துச் சென்று வா... மகளுக்கு சரஸ்வதி தேவியின் ஆசிகள் கிட்டும் அவள் மேலும் கல்வியில் சிறந்து விளங்குவாள் என்று உத்தரவு கொடுத்து அதன்படி அவர்களும் சென்று வந்து அந்த குழந்தை தற்பொழுது கல்வியில் படு சுட்டியாக முதலிடம் பெற்று படித்து வருகின்றாள்.
இதெல்லாம் இங்கு ஏன் குறிப்பிடப்படுகின்றது என்றால் குருநாதர் சொல்லுவதை அப்படியே கேட்டு நடந்தால் மலை போல வந்த துன்பமும் பனி போல விலகி விடும்.. என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம்.
இப்படிப்பட்ட பக்தன் வீட்டிற்கு தான் குருநாதர் சுவடியை எடுத்துச் செல்ல சொன்னார்.
அங்கு அவரது வீட்டில் விவசாயிகள் பக்தர்கள் என மகாராஷ்டிரா மாநில அகத்தியர் அடியவர்களுக்கு சத்சங்கம் நடந்தது.
இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் ஜீவநாடி சித்தர்களின் ஓலைச்சுவடிகளை குறித்து பல பேருக்கு கிட்டத்தட்ட 40 வருடங்களாக இதன் பின்னால் திரிந்து அலைந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி குருநாதர் அகத்தியரை ஜீவநாடியை பெருமளவு மக்களுக்கு அதாவது ஓலை சுவடிகள் என்ற ஒரு விஷயம் அறிமுகப்படுத்திய முன்னாள் விமானப்படை கமாண்டோ அதிகாரி திரு சசிகாந்த்... புனே அவர்களும் கலந்து கொண்டார்கள்.
குருநாதரிடம் இருந்து அன்பு வாக்குகள் அவருக்கு கிடைத்தது சில இடங்களில் குருநாதரின் அன்பு வாக்குகள் அவருக்கு தருகின்ற பொழுது அவர் கண்ணீர் மல்க குருநாதரிடம் மனம் விட்டு பேசி மகிழ்ந்தார்... அதில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு கேட்ட பொழுது அதாவது ஒரு முறை குருநாதர் தரிசனம் பயணமாக குற்றாலத்திற்கு வந்திருக்கின்றார்! அங்கு அருகில் இருக்கும் அகத்தியர் ஆலயங்கள் அனைத்திற்கும் சென்று விட்டு அருவியில் குளிக்கலாம் என்று நினைத்த பொழுது திடீரென அங்கு வந்த மனிதர் கட்டாயப்படுத்தி இவருக்கு உடலில் எண்ணெய் தேய்த்து விட்டு சென்றுவிட்டார்.. கட்டணமும் வாங்கவில்லை அவர் உடலில் எண்ணெய் தேய்த்து விட தேய்த்து விட இவருக்கு மனக்கண்ணில் சில காட்சிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டது ஒரு வித மயக்க நிலையில் இருந்து விட்டு தெளிந்த பிறகு... வந்தவர் இவரை பார்த்து ஒரு மர்ம சிரிப்பு சிரித்து விட்டு சென்று விட்டார்.
வந்தது யாராக இருக்கும்?? என்ற கேள்வி இவருக்கு இருந்தது!!
ஏனென்றால் குற்றாலத்தில் சுற்றிலும் இதை ஒரு வியாபாரமாக எண்ணெய் மசாஜ் செய்பவர்கள் வரும் சுற்றுலா பயணிகளிடம் பேரம் பேசி வருமானம் ஈட்டுவதற்காக இந்த தொழிலை செய்து வருவார்கள். கறாராக பேசுவார்கள் பேரம் பேசுவார்கள்...ஆனால் மேலே அருவியில் திடீரென்று வந்த ஒரு நபர்!!
அங்கு கூட்டமும் இல்லை
நீ இங்கே வா உனக்கு தேய்த்து விடுகிறேன் என்று தேய்த்து விட்டு சென்றுவிட்டாரே!!!!... கட்டணம் கூட வாங்காமல் சென்று விட்டாரே!!!. இவர் யாராக இருப்பார்???? என்று சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
(தன்னை உண்மையாக நேசிக்கும் பக்தர்களுக்கு குருநாதர் எதை வேண்டுமானாலும் செய்வார் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் இருக்கின்றது)
இதற்கிடையே கடந்த ஆண்டு புனே ஜாங்கிலி மகாராஜ் சித்தர் ஜீவ சமாதியில் குருநாதர் (சித்தன் அருள் 1328) வாக்குகள் உரைத்த போது இவரும் வந்து கலந்து கொண்டு குருநாதரிடம் வாக்குகள் வாங்கினார்... அப்போது குருநாதர்
அப்பனே...
அன்பு மகனே !! யான் உன்னுடனே இருக்கின்றேன்!!! நீ இப்பொழுது என்னிடம் எந்த கேள்வியும் கேட்க தேவையில்லை உன்னுடைய ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் உன் மனதிலேயே யான் தெரிவித்து விடுவேன் என்று வாக்குகள் தந்துவிட்டார்... இதனால் இவருக்கு பல கேள்விகள் சந்தேகங்கள் பல தோன்றினாலும் குருநாதரை நினைத்து தியானம் செய்யும் பொழுது அதற்கான விடை அவரது மனதிற்குள்ளேயே கிடைத்துவிடும்.
அதன்படி இந்த முறை ஜல்காஹ்வில் வந்து குருநாதா!!!! அன்று குற்றாலத்தில் என்னைத் தொட்டு எண்ணையை தேய்த்து விட்டவர் நீங்கள் தானே என்று கேட்க!!!
அப்பனே அனைத்தையும் உணர்ந்து கொண்டு அதை மீண்டும் கேட்க கூடாது அப்பனே அது யான் தான் அப்பனே என்று குருநாதர் பதில் உரைத்தார்.
அதைக் கேட்டு மெய்சிலித்து விட்டார் திரு சசி காந்த் அவர்கள்.
அதன் பிறகு ஜீவ நாடியை வணங்கி குருநாதரிடம் அனுமதி பெற்று தொட்டு தடவி திரு ஜானகிராமன் ஐயாவை கண்ணீர் மல்க கட்டி அணைத்துக் கொண்டார்.
அவர் கேட்டதில் முக்கியமாக ஒரு விஷயம் அதாவது தற்பொழுது வட இந்தியாவில் நடந்து வருவது!!!
அதாவது சீரடி சாய்பாபா அவர்கள் திருத்தலங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றது ஆனால் இந்த சமீபத்திய காலகட்டத்தில்... அவர் ஒரு வேற்று மதத்தவர் என்று இந்து மதத்தை சேர்ந்த சில புரிதல் இல்லாத மனிதர்கள் அவர் இருக்கும் ஆலயங்களில் இருக்கும் சிலைகளை தாக்குவது மற்ற ஹிந்து ஆலயங்களில் இருக்கும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது!!! தவறான முறையில் சமூக வலைத்தளங்களில் தவறான விஷயங்களை பதிவு செய்வது பொய் பிரச்சாரங்கள் செய்வது என நடந்து கொண்டிருக்கின்றது.
இது போன்ற செயல்கள் இனியும் நடக்கக் கூடாது!!!
குருநாதா!!! இதற்கு நீங்கள் ஒரு தீர்வினை சொல்ல வேண்டும்.
இந்த செயலை எல்லாம் பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு மனம் வேதனை அளிக்கின்றது இதனை குறித்து குருநாதர் வாக்குகள் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு
குருநாதர்
அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய இவையெல்லாம் அப்பனே வீணான குழப்பங்கள்!!
மனிதன் அதாவது அப்பனே மனிதன் செய்யும் தவறுகள் அப்பனே அழிவு நிலைக்கு செல்கின்றது என்பேன் அப்பனே.
அவன் (பாபா) அனைத்தும் கடந்தவனப்பா!!! அப்பனே அனைத்து மதத்திற்கும் சொந்தக்காரனப்பா!!! அவ்வளவுதான்!!!!
அப்பனே!! ஞானியானவனுக்கு!!!
மதம் கிடையாது!!!
மொழி கிடையாது!!
அப்பனே பின் ஏழை கிடையாது!!! பணக்காரன் கிடையாது!!! அனைத்தும் ஒன்றுதான் அப்பா!!!
அப்பனே அவன் அனைவரையும் ஒன்றாக பார்த்தவன்!!!
அதாவது!!! அப்பனே இவ்வாறு இஸ்லாமியர்களுக்கு அப்பனே இஸ்லாமிய வடிவத்தில் சென்று நல்லதை செய்தவன்.
அதேபோல் அப்பனே பின் இந்து எவை என்று அறிய அறிய அங்கு பின் கெட்டது நடந்தால் அங்கு இந்து வடிவில் சென்று பின் நன்மை செய்தவன்....
பின் கிறிஸ்தவனுக்கும் பௌத்தனுக்கும் இதே போலவே வடிவம் எடுத்து வடிவம் எடுத்து நல்லதை செய்து கொண்டிருந்தான் அப்பா...
அதனால் இவனை எதில் சேர்ப்பது???? நீயே கூறு??
அப்பனே அவந்தன் வாழ்க்கையையே பார்க்காதவனப்பா!!!
பின் மக்களுக்காகவே சேவை செய்தவனப்பா!!!
அவனைப் போய் இப்படி மனிதன் ஏசுகின்றானே!!!
நியாயமா??? அப்பா!!!
இதுதானப்பா!! கலியுகம்!! ஏனென்றால் கலியுகத்தில் பின் இறைவனே நேரில் வந்தாலும்.. ???
பின் மனிதன் பொய் என்று சொல்வானப்பா!!!
இதனால் அப்பனே இப்பொழுது மறைமுகமாக இருந்து நன்மைகள் தான் அவன் செய்து கொண்டிருக்கிறான் அப்பா!!!
அப்பனே!!! சில சீடர்களும் கூட!!!
(சாய்பாபாவின் சீடர்கள் தற்போது இப்படி எல்லாம் மனிதர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று பாபாவிடம் முறையிட)
இப்பொழுது நீ சொன்னாயே!!! (சசிகாந்த் அவர்கள் கேட்ட கேள்வி)
இதே போல சீடர்களும் அவந்தனிடம்
இப்படி உன்னை ஏசுகின்றார்களே என்றெல்லாம்.. நிச்சயம் அவனுடைய சீடர்களும் கூட நிச்சயம் அவனிடத்தில் தெரிவிக்க..
நிச்சயம்(அவரை ஏசுபவர்கள்) அவர்களும் நன்றாக இருக்கட்டும் என்று அவன் (பாபா) பின் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றானப்பா!!
அவ்வளவு பெரிய உள்ளமப்பா!!!
அதனால் அப்பனே இறைவனைப் பற்றி குறை சொல்வதற்கு மனிதனுக்கு தகுதியே இல்லை என்பேன் அப்பனே!!!
ஆனால் இக்கலி யுகத்தில் அப்படித்தான் அப்பனே... சித்தர்கள் யாங்கள் அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!
அப்பனே அதனால் இறைவனை வைத்துக்கொண்டு இறைவன் எங்கே இருக்கின்றான் என்றெல்லாம் அப்பனே மனிதன் பேசுகின்றான்... ஆனால் பெரிய பெரிய கஷ்டங்கள் வந்தால் தான் பின் திருந்துவானப்பா!!!!
அதனால் தான் கலியுகத்தில் இறைவனே பெரிய பெரிய கஷ்டங்களை மனிதனுக்கு கொடுக்கத்தான் போகின்றான்.
அப்பனே இறைவன் அமைதியாக இருந்தான் அப்பா... வருங்காலத்தில் காட்டுவான் அப்பா அவனுடைய வேலையை கூட!!!! அப்பனே இதை எப்பொழுதே பின் தெரிவித்து விட்டேன்... சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பின் தன் தாயவளும் தந்தையானவனும் தன் குழந்தை என்ன தவறு செய்தாலும் நிச்சயம் விட்டு விடுவார்கள்.
ஆனாலும் குழந்தை வளர வளர நிச்சயம் பின் தவறு செய்யும்பொழுது தான் பலத்த அடியாக தாய் தந்தையர் நிச்சயம் பின் நிச்சயம் அறிந்தும் கூட பின்.
அதேபோலத்தான் அப்பனே இறைவனும் கூட அப்பனே.
என்று வாக்குகள் உரைத்தார் நம் குருநாதர்... அதன் பிறகு அவர் மேலும் சில கேள்விகளை கேட்டார் பக்தர்களும் கேள்விகள் கேட்டனர் குருநாதர் நல்வாக்குகள் நல்கினார்.
இதன் பிறகு குருநாதர் அவந்தனை பற்றி அவனுடைய தலத்திலே மேலும் உரைக்கின்றேன் என்று வாக்குகள் கூறினார்.
ஜல்காவ் பக்தர் வீட்டில் சத்சங்கம் நிறைவு செய்த பிறகு... குருநாதர் சீரடி சாய்பாபா பற்றி அவருடைய தலத்தில் வாக்குகள் கூறுகின்றேன் என்று கூறியிருந்தார் அல்லவா நாம் அங்கு செல்வோம் என்று தரிசனம் செய்துவிட்டு குருநாதருடைய வாக்குகளை கேட்போம் ஏனென்றால் அங்கிருந்து பக்கம் தான் சீரடி என்று சத்தங்கத்தை நிறைவு செய்துவிட்டு சீரடிக்கு பயணம் மேற்கொண்டனர்
திரு ஜானகிராமன் அய்யா மற்றும் அடியவர்களும் சீரடி சாய்பாபா தரிசனத்திற்காக சீரடி சென்றார்கள்... சீரடியில் சாய்பாபா தரிசனம் மற்றும் பாபாவின் வாழ்க்கை குறித்து குருநாதர் கூறிய வாக்கு. சாய்பாபாவின் சீடரை சந்திக்க வைத்த குருநாதர். அடுத்த பாகத்தில் வெளிவரும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இந்தத் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு உதவியதற்கு மிக்க நன்றி. இவை மிகவும் மதிப்புமிக்க தகவல்களாகும், இது கடவுளின் இருப்பு மிக அருகில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அகத்தியர் சுவாமிகளின் அருள் கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteமிக அருமை🙏 ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏
ReplyDeleteSRI RAMA JAYAM. OM SAI RAM . OM AGATHEESAYA NAMAHA . GURUVE SARANAM SARANAM
ReplyDelete