சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1
சித்தன் அருள் - 1742 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 2
சித்தன் அருள் - 1745 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 3
சித்தன் அருள் - 1750 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 4
சற்று நேர அமைதிக்குப் பின் நண்பர் பேசத் தொடங்கினார்.
"ஹிமாலயத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். எப்படி வந்தீர்கள்? ரயிலா? அல்லது விமானமா? இங்கு எங்கு தங்கியிருக்கிறீர்கள்?" என்றார்.
எல்லா இடமும் எங்களுடையதுதான். இதில் எதற்கு ரயில், விமானம்? வாயு பகவானை விட வேகமாக கடத்தி செல்லும் ஒரு வண்டி இங்கு உள்ளதா?" என்றார் சிரித்தபடி.
புரிந்து கொண்ட நண்பர் "அஷ்டமா சித்தியோ" என்றார் மெதுவாக. அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. சிரித்தபடி நின்றிருந்தார் அவர்.
"சரி! புரிந்தது! ஆனால், நான் சாதாரண மனிதன்! என்னை தேடி வரவேண்டிய காரணம் என்ன? அதுவும் அந்த ஈசான மூலையிலிருந்து, இந்த கன்னி மூலைக்கு?" என்றார் நண்பர்.
"ஆஹ்! எனக்கு ஒரே ஒரு மூச்சு சொல்லிகுடுங்க போதும்! அது மட்டும் நீள அகலம் தெரிய வேண்டும்! நீங்கள் அந்த பயிற்சியில் சிறந்தவர் என கேள்விப்பட்டேன். இங்கேயே இப்பொழுது ஒரு மூச்சு!" என்றார்.
"சரி! என்று கூறி, சரியான விகிதத்தில் நீள அகலத்துடன் மூச்சை உள்ளிழுக்க, அந்த பெண்மணி ஒரே வினாடியில் கண் மூடி திறக்க, நண்பரின் மூலாதாரத்திலிருந்து குளிர்ச்சியை வெளுப்படுத்தி ஒரு சக்தியானது எல்லா சக்கரங்களையும் கடந்து உச்சியில் சஹஸ்ராரத்தை சென்று அடைந்தது. ஒரு நிமிடத்தில் சித்தம் ஆடிப்போனது. சற்றே நிலை குலைந்தார் எனலாம்.
பொதுவாக மூலாதாரத்திலிருந்து உயரும் சக்தி உஷ்ணத்தை வெளிப்படுத்தித்தான் உயரும். இது குளிர்ச்சியை வெளுப்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன் இது போன்று உணர்ந்ததில்லை. எப்படி? என்று மனதில் யோசிக்க, அந்த பெண்மணி பதிலை தொடர்ந்தார்.
"போதும்! ஒரு மூச்சுதான் வேண்டும்!" என்றார் சிரித்தபடி.
"ஏன் அக்னி மட்டும்தான் மூலாதாரத்திலிருந்து உயருமா? குளிர்ச்சி வராதா என்ற, உங்கள் இத்தனை நாள் கேள்விக்கு, இன்று அனுபவம் கிடைத்தது இல்லையா? இவை எல்லாம் எந்த சக்ராவின் எந்த இதழை தூண்டுகிறோம் என்பதை பொறுத்தது. இதை பற்றி நிறைய படியுங்கள்! இனி வரும் நாட்களில் பலருக்கும் நன்மை செய்ய பிரயோசனப்படும்!" என்றார் சிரித்தபடி.
ஒரு நிமிடத்தில் புத்துணர்ச்சி பெற்று நின்ற நண்பர், "சரி என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பியா? டீயா? எப்படி வேண்டும்?" என்றார்.
சிரித்தபடியே கடைக்காரரை திரும்பி பார்த்தபின், "எனக்கு, அவர் இப்ப டம்பளரில் விடுகிறாரே, அந்த நீர் சூடாக ஒரு கப் வாங்கி குடுங்க!" என்றார்!
கடைக்காரரை திரும்பி பார்த்த நண்பர், அவர் மிக கட்டியான டிகாஷனை ஒரு பாத்திரத்துக்குள் விடுவதை கண்டார்.
"அண்ணே! அந்த டிகாஷன் சூடாக ஒரு கப்பில் விட்டு இவங்களுக்கு வேண்டுமாம். குடுங்க!" என்றர் நண்பர்.
நண்பரை அருகில் அழைத்த கடைக்காரர், "என்ன சொல்லறீங்க! இந்த ஒரு கப் டிகேஷன்ல ஐம்பது காப்பி போடலாம், அவ்வளவு கெட்டியானது. அதையா குடுக்க சொல்றீங்க. இதை அப்படியே குடிச்சா குடல் எரிந்துவிடும்! சொல்லுங்க!" என்றார்.
அவரை திரும்பி பார்த்த நண்பர், "இது போதுமா? உங்களுக்கு?" என்றார்.
நண்பர் கடைக்காரரிடம் திரும்பி "அவங்க கேட்கறாங்க இல்ல? குடுத்திடுங்க!" என்றார்.
கடைக்காரரும் "என்னவோ! நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்!" என்ற படி ஒரு கப் நிறைய கெட்டியான டிகேஷனை சூடாக கொடுத்தார்.
அதை பெற்றுக்கொண்ட அந்த பெண்மணி, முகத்தில் எந்த பாவ மாற்றமும் இன்றி அந்த டிகேஷனை குடிக்க தொடங்கினார்.
"கடைக்காரர் என்ன சொன்னார்?" என்றார்!
அவர் கூறியதை தெரிவித்ததும்,
"அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இன்றைய சந்திப்பு முடிந்து நாம் சென்ற பின்னிலிருந்து இங்கு நடந்த விஷயங்கள் எல்லாம் அவர் ஞாபகத்திலிருந்து அழிக்கப்படும். முடிந்தால் , நீங்கள் நாளை இதே நேரத்தில் வந்து நம்மை பற்றி கேட்டுப் பாருங்கள். என்ன சொல்கிறார் என்பது அப்போது புரியும்" என்றார்.
மேலும் ஒரு விஷயத்தை கூறி, "இதற்கு என்ன வழி?" என்று கேட்டார் அந்த பெண்மணி.
"எனக்குத் தெரிந்து, திரு.எம் அப்படினு ஒரு பெரியவர் பெங்களுருவில் இருக்கிறார். அவர் ஆஸ்ரமத்தில் போய் அவரை பார்த்தால் இது சரியாகும்" என்ற தகவலை பகிர்ந்தார் நண்பர்.
"ம்! சரி!" என்றபடி தான் டிகாஷன் குடித்த கப்பை கடைக்காரர் முன் வைத்தார். ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினார். கடைக்காரர் நண்பரை பார்க்க, "அவர் குடித்த டிகேஷனுக்கு மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார் நண்பர்.
கடைக்காரர் கொடுத்த பாக்கியை பையில் வைத்துக் கொண்டு நண்பரை நிமிர்ந்து பார்க்க, நண்பரோ, "பின்னாடி பாருங்கள். ஒரு முரட்டு நாய் நம்மை நோக்கி நேராக வந்து கொண்டு இருக்கிறது. அது பக்கத்தில் வந்தால், உங்களை பார்த்து, குரைத்து பிரச்சினை பண்ணும்!" என்றார்.
"ஆம்! மிருகங்களுக்கு அனைத்தும் தெரியும்" என்று கூறி நாயை திரும்பி பார்த்தார்! நாய் ஏதோ ஒன்றினால் செலுத்தப்பட்டது போல் இவர்கள் திசையை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது.
"அந்த மின் கம்பம் வரை வரும். பின் நின்று இரு பக்கமும் பார்த்துவிட்டு வந்த வழியே சென்று விடும்!" என்றார்.
"பார்ப்போம்!" என்றார் நண்பர், சிரித்தபடியே.
இருவரும் வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.
அந்த நாய் வேகமாக மின் கம்பத்தின் அருகில் வரை வந்தது. ஏதோ தோன்றி அங்கேயே நின்று இரு புறமும் பார்த்தது. மண்ணை முகர்ந்து பார்த்தது, சட்டென திரும்பி வந்த வழியே, குறைத்தபடி சென்றது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
🙏🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ 🙏🙇♀️
ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Agathiyar ayyan potri...Ayya can you share the details of Thiru M avargalin ashram address please
ReplyDeletehttps://www.kulaluravuthiagi.com/av.htm
ReplyDeleteதிருவண்ணாமலையில் குபேர லிங்கத்துக்கு முன்பு உள்ள அகஸ்தியர்
ஆஸ்ரமம் வெளியிடும் 'ஶ்ரீ அகஸ்திய விஜயம் ' என்ற
மாதாந்திர புத்தகத்தை படித்து பாருங்கள் பக்த நண்பர்களே.
அதில் வரும் ' அடிமை கண்ட ஆனந்தம் ' ... அற்புத ஆன்மிக அனுபவங்கள்....
,,🙏🙏🙏
The drive to Madanapalle is around 3.5 hours from Bangalore, depending on the traffic within the city. There are plenty of buses available from Kempegowda Bus Station (Majestic) or old Madras Road, Bengaluru. Details : https://satsang-foundation.org/madanapalle-ashram/
ReplyDeleteஓம் சிவாய நம
ReplyDeleteஓம் அகத்தீஸாய நமஹ
அற்புதமான, புதிய அனுபவம்.... நன்றி
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete