​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 30 December 2024

சித்தன் அருள் -1757 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - 19


( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12 
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 16
சித்தன் அருள் - 1755 - மதுரை வாக்கு - 17
சித்தன் அருள் - 1756 - மதுரை வாக்கு - 18

( வணக்கம் அடியவர்களே. இவ் தொடர் வாக்கின் முந்தைய 18 ஆம் பகுதியை படித்து இவ் பதிவைப் படிக்க நன்று. இது ஜோதிடம் தொடர்பான உரையாடல் பதிவு. ) 

நம் குருநாதர் :- அப்பனே, அம்மையே நிச்சயம் உன்னிடத்தில் அதாவது யான் சொல்லிவிட்டேன். அதாவது சூரியப் பிழம்பாக நெற்றியில் பின் அதை கொண்டுவர வேண்டும் என்று. ஆனால் இவ் நவகிரகங்களும் அதை இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால் எப்படி ஒரே மாதிரியான ஆற்றலை இழுத்துக்கொண்டே இருக்கும் தாயே. அப்பொழுது நீச்சம் ஆகும். 

அடியவர் 11:- சரிங்க ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- முன்பே சொன்னார் இல்லையா? அந்த ஒளிப் பிழம்பை , சூரியன் மாதிரி எரிந்து கொண்டே இருக்கும். அந்த ஒளியானதை அந்த நவ கிரகங்களும் இழுத்துக்கொண்டே இருக்குமாம். அதை எப்படி நீச்சமாகும் என்று கேட்கின்றார்? அம்மா இது புதிதாக சொல்கின்றார் அம்மா. 

அடியவர் 11 :- ம்ம்ம்….

நம் குருநாதர் :- நீச்சம் பெற்றவன் உச்சத்தில் இருக்கின்றான் தாயே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அம்மா உங்க ஜாதகத்தில் ) நீச்சம் பெற்றவனும் உச்சத்தில் இருக்கின்றான் என்று சொல்கின்றார். உங்கள் ஜாதகத்தை பார்த்துக்கொள்ளுங்கள். 

அடியவர் 11 :- நீச பங்க ராஜ யோகம்….

நம் குருநாதர் :- அம்மையே உச்சத்தில் இருக்கின்றவன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றான். அம்மையே இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால் நீங்கள் தான். புண்ணியப் பாதையில் சென்று கொண்டே இருந்தாலே, நீச்சமும் உச்சப் பலனைச் செய்யும். உச்சனும் பின் நீச்ச பலனைச் செய்வான் அவ்வளவுதான் கிரகங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியப் பாதையிலேயே சென்று கொண்டு இருந்தீர்கள் என்றால், நீச்சமும் கூட உச்சம் ஆகிவிடும் என்று சொல்கின்றார். ( நீச்சம் ஆன ஒரு கிரகம் உச்சனைப்போல் பலன் அளிக்க ஆரம்பித்துவிடும்). அம்மா புரியுதுங்களா,  ஐயா? ஏதும் சந்தேகம் உண்டா? 

அடியவர்கள் :- புரிகின்றது ஐயா.

அடியவர் 12 :- சாமி இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கொடுக்கனும். ( அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.) 

நம் குருநாதர் :- அம்மையே அனைத்தும் செயலில் பதிவு செய்யப் பட்டுக் கொண்டே இருக்கின்றது.  ( கருணைக் கடல் அருளால், மதுரையில் அடியவர் இல்லத்தில் சத்சங்கம் நடந்த இடத்தில் mobile மூலம் அனைத்தும் பதிவு செய்யப் பட்டு, கருணைக் கடல் ஆசியால் பதிவுகளில் இருந்து தட்டச்சு செய்து மக்களுக்கு இப்போது வெளியாகி உள்ளது. அனைத்தும் கருணைக் கடல் அருள் கடாட்சமே உலகோருக்கு.) 

அடியவர் 11 :- செவ்வாயும் குருவும் சேர்ந்து இருந்தால் அப்போ முருகன்தான் நமக்கான கடவுளா? குழந்தைங்க இடம் ஐந்தாம் இடம் இல்லையா? அப்போ முருகன் சம்பந்தமாகத்தான் இருக்குமா ஐயா? 

நம் குருநாதர் :- முதலில் அதாவது உச்சப்பகுதியில் நிச்சயம் குருவானவன் இருந்தால் பின் மறைமுகமாக இறைவனே இயக்குவான் என்பதுதான் பொருள். 

சுவடி ஓதும் மைந்தன் :- உச்சம் பெற்ற இடத்தில் குருவானவர் இருந்தால்,  மறைமுகமாக இறைவன் இயக்குவார். 

நம் குருநாதர் :- அப்பனே குருவானவனுக்கு ஒரு வேலை இருக்கின்றதப்பா. அவன் நீச்சமானாலும் , பகையானாலும் நல்லதையே செய்ய வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- விளக்கங்கள்

அடியவர் 11 :- எனக்கு சொல்லுவாங்க ஐயா. குரு பார்வை இருக்கின்றது. அது மட்டும் இல்லை என்றால் வாழவே முடியாது என்று. 

நம் குருநாதர் :- அம்மையே அனைத்து கிரகங்களும்தான் பார்க்கின்றது அம்மையே. குருவுக்கு மட்டும் ஏன் சிறப்பு? 

அடியவர் 11 :- என் என்றால் குருதான் நல்ல கிரகங்களில் பஸ்ட் ( முதன்மை ) அப்படி என்று சொல்வார்கள். 

நம் குருநாதர் :- அப்படி இல்லை தாயே. சனியவன்தான். எவை என்று அறிய அறிய நீதிபதி, நியாயாதிபதி. (சனி தேவன் ) அவன் விட்டால்தான் குரு. 

அடியவர் 12 :- ( சனி தேவன் ) அவர்தான் முதல்ல. 

சுவடி ஓதும் மைந்தன் :- சனி தேவன் (வழி) விட்டால்தான் , குரு (தேவன்) வேலை செய்வார். ( பலன் அளிக்க ஆரம்பிப்பார் ). இல்லை என்றால் குரு வேலை செய்ய மாட்டார். 

அடியவர்கள் :- ( Oooh…சில புரிதல் உரையாடல்கள் ) 

நம் குருநாதர் :- தெரியாமல் கேட்கின்றேன். குருவும் , சந்திரனும் சேர்ந்து இருந்தால் வெற்றி. பின் குருச் சந்திர யோகம் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு சனியானவன் சம்மதிக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா இது புது தகவல் அம்மா. யாருக்குமே தெரியாது. 

அடியவர் 12 :- யாருக்குமே தெரியாது. ஐயா இதை  record ( audio recording ) செய்கின்றார்களா? 

அடியவர் 11 :- ஆம் அம்மா. 

சுவடி ஓதும் மைந்தன் :- குரு சந்திர யோகம் நிறைய பேருக்கு இருக்கின்றது. ஆனால் அது யாருக்கோ ஒருத்தருக்குத்தான் செயல்படுகின்றது. ஏன் செயல் படுகின்றது என்றால் சனீஸ்வர தேவன் விட்டால் தான் அந்த யோகம் செயல்படும். நீங்க இதை நிறைய ஜாதகத்தில் சோதிக்கலாம். நிறைய ஜாதகத்தில் செயல்படாது. 

நம் குருநாதர் :- அப்பொழுது முருகனைப் பற்றி இங்கு பேசவில்லையே. ஏன்?

அடியவர் 11 :- செவ்வாய் உச்சமாக இருந்தால் நமக்கு உதவுவது முருகப்பெருமானா ஐயா?

நம் குருநாதர் :- அம்மையே முதலில் வருவது சனீஸ்வரன். அடுத்த படியாக வருவது செவ்வாய். அம்மையே இவ் கிரகங்கள் நல் முறையாக இருந்தாலே இவ்வுலகத்தில் வாழலாம். வெற்றியும் கொள்ளலாம். பின் ஆளலாம். 

அடியவர் 11:- சரிங்க ஐயா

நம் குருநாதர் :- ஆனாலும் மாற்றி விட்டிருப்பீர்கள் மனிதர்கள். அதனால் மனிதனை பின் பொய்யான் என்றே யாங்கள் அழைக்கின்றோம்.  

அம்மையே சனியவன் பலமாக இருந்தால் , நியாயத்திற்குத் தகுந்தவாறே அனைத்தும் செய்து பின் மாற்றி விடுவான். பின் கந்தன் அனைத்து தோஷங்களையும் பிடுங்கி விடுவான். அப்போது குருவானவன் தானாகத் தேடி வந்து விடுவான்.

அடியவர் 11 :- சரிங்க ஐயா

அடியவர் 6 :- குருநாதர் சொல்வதை வைத்துப் பார்த்தால் , என்னதான் ஜாதகத்தின் படி உச்சம் , நீச்சம் சிறப்பான அமைப்பில் பிறந்து இருந்தாலும், இந்தப் பிறவியில் நாம் செய்யக்கூடிய புண்ணியப் பலன்களால் தான் அந்த ஜாதகம்(ஜாதகர்) செயல்படும். 

அடியவர் 11 :- முதலில் சனீஸ்வரர் , அப்புறம் செவ்வாய் , முருகன் வந்து வழி விடுவார். அப்புறம் குரு வந்து கரை சேர்த்திடுவார். 

நம் குருநாதர் :- அம்மையே, ஒன்றைச் சொல்கின்றேன். ராகு கேதுக்கள் தோஷம் என்கின்றார்கள். பின் ஏன் அதைச் சொல்கின்றார்கள்? ஆனாலும் அத்தோஷங்களைக் கழிக்க முடியாது. ஏன் கழிக்க முடியாது கூறு? 

அடியவர் 11 :- ஆமாங்க ஐயா. எனக்கு ( ஜோதிடர்கள் ) எத்தனையோ பேர் கழிக்கின்றேன், கழிக்கின்றேன் (பணம்) பிடுங்கினார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான். உங்களைப் பற்றித்தான் சொல்கின்றார். அவர் அப்படியே எடுத்து வந்து விடுவார். ஒருத்தர் ஒருத்தர் எடுத்து வந்துவிடுவார். இதெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். தெரியாமல் அகத்தியரிடம் கேட்கக்கூடாது ஐயா.  அவர் கொடுக்கத் தயார். ஆனால் நீங்க பயன்படுத்த மாட்டீர்கள் என்று சொல்கின்றார். ஆமாங்க ஐயா. 

அடியவர் 11 :- எனக்கு __ல் ராகு , __ல் கேது இருக்கு ஐயா. ராகு கேது பிடியில்தான் எல்லா கிரகங்களும் இருக்கு இருக்கு சொல்லிச் சொல்லி (பல ஜோதிடர்கள் பணம்) பிடுங்குகின்றார்கள் ஐயா. ஆனால் ஒன்றும் நடக்க வில்லை. 

நம் குருநாதர் :- இவைதன் மறைமுகமான கிரகம் என்கின்றார்கள். ஆனாலும் இவர்கள் கொடுத்தால்தான் மோட்ச கதிக்கே செல்ல முடியும். இவர்கள் விட்டுவிட்டால்தான் இறைவன் பலத்தை பெற முடியும். அதிசயத்தையும் பெற முடியும். அதனால் இவர்களை கணிக்க முடியாது. 

அடியவர் 11 :- (ராகு, கேது) நிழல் கிரகங்கள் என்றாலும் அவர்கள்தான் பெரியவங்க. 

நம் குருநாதர் :- இதனால் நிச்சயம்  இவ் தோஷத்தை உடையவர்கள் கஷ்டங்கள் பட்டு,  பாவத்தை ஒழித்தால்தான் இன்பம் கிடைக்கும். இதற்கு பரிகாரங்கள் உருப்படாது. 

அடியவர் 13 :- எனக்கு __ திசை நடக்கின்றது. _ ( கிரகம் )  , பகை கிரங்களோட சேர்ந்து இருக்கு. 

நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது நீ நண்பனோடு சேர். 

ஒரு அடியவர் :- நல்ல நண்பர்களுடன் சேரச் சொல்கின்றார்.

நம் குருநாதர் :- அப்பனே ஏனப்பா கிரங்களுக்கு பகை என்பது? எப்படியப்பா பகை என்று நீ சொல்கின்றாய்? 

அடியவர் 13 :- ஜோதிட சாஸ்திரத்தில் அப்படிச் சொல்கின்றார்கள். 

நம் குருநாதர் :- அப்பனே அதுதான் மூட நம்பிக்கை என்பேன். பகை என்பது என்ன தெரியுமா அப்பனே? உன் எண்ணம்தான் அப்பா பகை. உன் எண்ணம் பகையாக இருந்தால் அவையும் பகையாகிவிடும். அவ்வளவுதான் என்பேன் அப்பனே. உன் எண்ணம் சரியானதாக இருந்தால் அதாவது உயர்ந்த உள்ளமாக இருந்தால் , அனைத்தும் உந்தனுக்கு நண்பனாகிவிடும் என்பேன் அப்பனே. அவ்வளவுதான் என்பேன் அப்பனே.  (நவ கிரகங்கள் ) அவைதன் நண்பனாகத்தான் இருக்கின்றார்கள் அப்பனே. மனிதன்தான் பகையாக இருக்கின்றான் என்பேன் அப்பனே. அதற்காகத்தான் அதுவும் பகையாகிவிட்டு பின் கெட்டதைச் செய்துவிடுகின்றது அப்பனே? எப்படியப்பா கிரகங்களைக் குற்றம் சொல்லலாம் அப்பனே. உங்களைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். நீங்கள் செய்த தவறுக்குத்தான் அவை கூட இவ்வாறு மாறி மாறி அழிக்கின்றது என்பேன் அப்பனே.

அடியவர் 13 :- ஜோதிடத்தையே பார்க்கத் தேவை இல்லை ஐயா. 

நம் குருநாதர் :- அப்பனே பின் அறிந்து கொள்ளுபவர் எவர்?

சுவடி ஓதும் மைந்தன் :- அறிந்து கொள்ள முடியாது ஜோதிடத்தை. 

நம் குருநாதர் :- அப்பனே யான் ஒன்று கடலில் அதாவது சிறிய கல்லை வீசுகின்றேன் அப்பனே. அதை தேடி, பிடித்து கொண்டுவர முடியுமா?

அடியவர் 13 :- முடியாது ஐயா

நம் குருநாதர் :- அதே போலத்தான் அப்பனே கிரகங்களின் பின் ஆராய்ச்சிகள் செய்யவே முடியாதப்பா. அவை என்ன செய்ய , எப்படிச் செய்யும் என்பதையெல்லாம் யான் தான், சித்தர்கள் தான் கணிக்கமுடியும் சொல்லிவிட்டேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- முடியாது மனிதனால்.

அடியவர் 13 :- ஜோதிடம் கடல் மாதிரி. 

அடியவர் 11 :- அய்யா ஒன்பதில் சனி இருந்தால் எப்படி ஐயா?

அடியவர் 13 :- ( சிரிப்பு ) திரும்பவும் கேள்வி கேட்கின்றாங்க. 

நம் குருநாதர் :- அம்மையே ஒன்றாம் வகுப்பில் இருந்து வா. யானே ஒவ்வொன்றாகக் குறிப்பிடுகின்றேன். 

அடியவர்கள் :- சிரிப்பு.

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா இது பத்தாம் வகுப்பு கேள்வி. அதுக்கு போக்க் கூடாது. ஒன்றாம் வகுப்பில் இருந்து வரச் சொல்கின்றார். 

நம் குருநாதர் :- இருப்பினும் சொல்லுகின்றேன். பாக்கியங்கள் பல செய்து, பல பல மனிதர்கள் அதாவது உண்ண உணவு, இருப்பிடம், இன்னும் ஞானியர்களுக்கு பல வகைகளில் கூட உதவி செய்வோரை தடுத்துள்ளாய் முன் ஜென்மத்தில் கூட. அது பாவமாக அதாவது சனீஸ்வரன் அங்கு அமைந்து நிச்சயம் அப்பலனுக்கு இப்பொழுது தண்டனை தருகின்றான் அம்மையே. அவ்வளவுதான். 

அடியவர் 11 :- புரியுதுங்க ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் பல. அதாவது முன் ஜென்மத்தில் உதவி செய்பவர்களைத் தடுத்ததால், இவ் ஜென்மத்தில் உதவிகள் செய்ய வேண்டும் என்று மனதில் எண்ணங்கள் உதயமாகும். ஆனால் அதை சனி தேவன் தடுப்பார். பழிக்குப் பழி என்று விளக்கச் சுருக்கம் அளித்தார்கள்.) 

அடியவர் 11 :-  இதுக்கு என்ன செய்யனும் ஐயா. 

நம் குருநாதர் :- அவ்வீடு எவருடையது என்று தெரியுமா?

அடியவர் 11 :- தெரியாது ஐயா.

நம் குருநாதர் :- தெரியாமல் எப்படி ஒன்பதாம் இடத்தில் சனியவன் இருக்கின்றான் என்று கேட்டாய்?

அடியவர் 11 :- என்னோட ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் ( என்று சொன்னார்கள்) 

நம் குருநாதர் :- ஆனாலும் பாதி அளவு தெரிந்து வைத்துக் கொண்டு கேட்கலாமா?  ஆனாலும் அதாவது ஐந்தில், ஒன்பதில், பின் இன்னும் சில இடங்களில் கேதுவானவன் இருந்தால் நிச்சயம் வழி நடத்துவான். இறைவனுக்குச் சேவை செய்வான். 


==============

( கேது தேவன் குறித்து குருநாதர் உரைத்த ஒரு வாக்கு இங்கு காண்போம். 

சித்தன் அருள் - 1711 - அகத்தியப்பெருமானுடன் கலந்துரையாடல்-1!

https://siththanarul.blogspot.com/2024/10/1711-1.html

குருநாதர்: அறிந்தும், சிலகாலங்களுக்கு இப்படியே போகட்டும். கிரக நிலைகள் நல்லபடியாக மாறும் பொழுது, யாமே தேர்ந்தெடுத்து சொல்கிறோம். ஜோதிடம் பார்ப்பவன், ஒரு ஜாதகத்தில் கேதுவானவன் ஐந்து, ஒன்பது பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தால், அந்த ஜாதகனுக்கு, பலன் சொல்லவே கூடாது. ஏன் என்றால், அவர்கள், வாழ்க்கையில் அனைத்தையும், பட்டு, அனுபவித்து இறைவனை வந்தடைய வேண்டும் என்பது விதி. இப்படிப்பட்டவர்களுக்கு ஜாதகம் பார்த்து சொல்லப்போக, ஜோதிடம் பார்ப்பவன் அவர்களது கர்மாவை வாங்கிக்கொள்வான், என்பது விதி. இது போல் இன்னும் பல நிலைகள் உண்டு. ஆகவே அமைதி அடைக! )

================


சுவடி ஓதும் மைந்தன் :- சில இடங்களில் கேது (தேவன்) இருந்தால் இறைவனுக்குச் சேவை செய்வார்கள்.

நம் குருநாதர் :- இன்னும் கிரகங்களைப் பற்றிச் சொல்லப்போனால் ஒரு மாதங்கள் ஆகிவிடும். சொல்கின்றேன் சிறிது சிறிதாக.

அடியவர் 6 :- குளிகள், மாந்தி…

நம் குருநாதர் :- அப்பனே சனீஸ்வரனின் உருவங்களப்பா. முப்பெரும் தேவர்கள் என்கின்றார்களே யார், யார்?

அடியவர்கள் :- விஷ்ணு, பிரம்மா, சிவன். 

நம் குருநாதர் :- அதே போலத்தான் அப்பனே. முப்பெரும் தேவன் என்று சனீஸ்வரனுக்குப்  பட்டம் உண்டு என்பேன் அப்பனே. விடுவானா என்ன சனீஸ்வரன்? 

அடியவர் 11 :- ஐயா ராகு, கேது பெயர்ச்சி , பிடியில் இருந்து வெளியில் வர என்ன செய்ய வேண்டும்?

நம் குருநாதர் :- அம்மையே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். புண்ணியங்கள் தேவை என்று. புண்ணியங்கள் செய்யாவிடில் பின் எப்படியும் வெளியே வர முடியாதம்மா. 

அடியவர்கள் :- ( வெளியில் சிரித்தனர். ஆனால் ஆழ் மனதின் உள்ளே பிடியில் இருக்கும் வேதனை ) 

நம் குருநாதர் :- அம்மையே ஒருவனைப் பார்த்து அதாவது முன் ஜென்மத்தில் இருந்து அவன் பாவம் என்னவோ. ஆனாலும் எந்தனுக்கே ( அது ) புரியும். அம்மையே , தர்மம் ஏத்திக்கொண்டிருக்கின்றான் அம்மையே. ஆனாலும் 80 வருடங்கள் ஆகிற்று. யாரும் கண்டு கொள்ளவில்லை, பின் இறந்துவிட்டான். மீண்டும் பிறப்பெடுத்து இப்போது கூட தர்மம் ஏந்திக்கொண்டிருக்கின்றான். ஏன்? ராகு கேது , பின் குரு, சனி பெயர்ச்சிகள் ஆகிக்கொண்டே இருக்கின்றதே!! ஏனம்மா? 

அடியவர் 11 :- புண்ணியம் செய்யவில்லை.

சுவடி ஓதும் மைந்தன் :- பாவங்கள். 

நம் குருநாதர் :- அப்பனே பாவம், புண்ணியத்திற்கு ஏற்றவாறே கிரகங்கள் வேலை செய்யும். சொல்லிவிட்டேன். இதனால் புண்ணியம் செய்து கொண்டே இருந்தால் எக் கிரகங்கள் பெயர்ச்சி வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. பாவம் செய்து கொண்டே இருந்தால் கவிழ்த்து விடும். 

அடியவர் 11 :- So கிரகங்கள் எப்படி இருந்தாலும் , நாம் புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும். பாவத்தைக் குறைக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான்.

நம் குருநாதர் :- இப்பொழுதெல்லாம் ( சனீஸ்வர தேவன் ) முப்பெரும் தேவராக இருப்பதால் நிச்சயம் நல்லதுதான் செய்யவேண்டும் அல்லவா? ஏன் தீயவை செய்கின்றான்? …….

அடியவர்கள் :- ( அமைதி )

நம் குருநாதர் :- நீங்கள் செய்ததற்குத் தக்கவாறு பதில் அளிக்கின்றான், அவ்வளவுதான். ஏன் நீங்கள் பயப்படுகின்றீர்கள்? நீங்கள் பாவம் செய்துள்ளீர்கள் என்று உங்களுக்கே தெரிகின்றது. அதனால்தான் பயம். என்னை ஏன் சனீஸ்வரன் அண்டப்போகின்றான் என்று தைரியமாக இருங்கள் பார்ப்போம். அண்டுகின்றான் என்று யானும் பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :- நீதான் தைரியமான ஆள் ஆயிற்றே, தைரியமாக நில் என்று சொல்கின்றார்.

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

அடியவர் 6 :- குற்றம் செய்த நெஞ்சே குறுகுறுக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படிதான் சொல்கின்றார். புரியுதுங்களா எல்லாருக்கும். 

( சுவடி ஓதும் மைந்தன் தொடர்ந்து சுவடி படித்ததால்…) 

அகத்திய அன்ன சேவை புரியும் மதுரை அடியவர் இல்லத்தில் , அவ் இல்லத்தவர் ஒருவர்:- ( சுவடி ஓதும் மைந்தனிடம் ) ஐயா , ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். 

( மீண்டும் சத்சங்கம் தொடர்ந்தது.  ) 

அடியவர் 11 :- நீங்க நீச்சம் என்று இல்லை என்று சொல்கின்றீர்கள் ஐயா. ஆனால் ( ஜோதிடர்கள் ) எனக்கு ( சுய ஜாதகத்தில் ஒரு கட்டத்தைச் சொல்லி, அதில் ) புதன் நீச்சம் என்றுதான் ஆரம்பிக்கின்றனர். 

நம் குருநாதர் :- அம்மையே அறிவுக்கு அதிபதி புதன் அம்மையே. புதன் ஏன் நீச்சம் ஆகின்றான்? அம்மையே சிலவற்றை எடுத்துக் கூறு அம்மையே. புண்ணியம் செய்திருந்தால் உன் அறிவு பொங்கி வழிந்திருக்கும். அதனால் வெற்றிகள் கொண்டிருப்பாய் அம்மையே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது ஒரு எறும்புக்காவது உணவிடுங்கள். அதை செய்திருந்தால் அறிவை அவர் கொடுத்திருப்பார். 

அடியவர் :- ஜோதிடம் பற்றி ( இனிமேல் ) கேட்காதீர்கள். பாவம் புண்ணியம். புண்ணியம் செய்யுங்கள். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். கேது, சந்திரன் சேர்க்கை பெற்ற அடியவர் ஏதோ புண்ணியம் செய்ததால் சந்திரனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்டார் குருநாதர். புண்ணியம் அவசியம். நாம் செய்த வினைகள் நம்மையே தாக்கும். அதனால் நல்லது செய்யுங்கள் என்று  சொல்கின்றார். ) 

நம் குருநாதர் :- அம்மையே நல்லது செய்து பின் கெட்டுப் போனாலும் பரவாயில்லை. யான் இருக்கின்றேன். ஆனாலும் கெட்டதைச் செய்து பின் நல்வாழ்க்கை வாழ , அம்மையே சிறு காலமே. ஆனாலும் அழிந்துவிடும் தாயே. 

அடியவர்கள் , சுவடி ஓதும் மைந்தன் :- ( உரையாடல்கள் , விளக்கங்கள். கெட்டதைச் செய்து நல் வாழ்வு போல் இருந்தாலும் அனைத்தும் அழிந்துவிடும்.)

அடியவர் 11 :- கலிகாலத்தில் கெட்டது செய்பவர்கள் நன்றாக உள்ளனர். 

நம் குருநாதர் :- அம்மையே நீ பார்த்தாயா? பார்த்ததை மட்டும் சொல்?

அடியவர் :- வெளிய இருந்து பார்த்தால் நன்றாக இருப்பது போல் தோற்றம்.

நம் குருநாதர் :- அம்மையே அவனவனுக்கு ஒரு கஷ்டங்கள் இறைவன் அதாவது கலியுகத்தில் கஷ்டங்கள் இல்லாமல் யாரும் வாழ முடியாதம்மா. ( இறைவன் ) நோய்கள் கொடுத்து வைத்திருக்கின்றான். அவ்வளவுதான். அனைத்தும் இருந்தும் அவனால் உபயோகப்படுத்தவில்லை. அம்மையே பார்த்துக்கொண்டேதான்  இருக்கின்றேன் அம்மையே. எவர் எப்படி? இறைவன் எப்படியெல்லாம் அவந்தனக்கு கஷ்டங்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்றான் அம்மையே. அதனால் நிச்சயம் தீயவை செய்தோர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.  யான் பார்க்கின்றேன் யுகம் , யுகங்களாக. 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete