வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நம் குருநாதர் அகத்தியப்பெருமானின் திருநட்சத்திரம், மார்கழி மாத ஆயில்யம், இந்த மாதம் (டிசம்பர்) 19ம் தேதி, வியாழக்கிழமை அன்று வருகின்றது.
ஆகவே, அகத்தியர் அடியவர்கள், உங்கள் வீட்டின் அருகிலுள்ள ஏதேனும் அகத்தியர் கோவிலிலோ, அல்லது அவரின் தனி சன்னதியிலோ நடக்கும் அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்டு அவரின், அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களால் இயன்ற உழவார பணிகளை செய்து, நிறைவாக அகத்தியர் லோபாமுத்திரை தாய்க்கு ஒரு பிடி "கொழுந்தை" வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இயன்றவர்கள், தை மாதம் பிறக்கும் வரையிலும் கொடுக்கலாம். அதனால், சிவராத்திரி வரை, மனிதனை தாக்கப்போகும் வியாதிக்கு தகுந்த பரிகாரமாக இருக்கும், என அகத்தியர் உத்தரவு.
கிடைத்த தகவல் படி பசுமலை மாரியம்மன் கோவில் மதுரையில் 19/12/2024 அன்று மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் குருநாதருக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வதாய் அடியவர்கள் தீர்மானித்து ஏற்பாடு செய்துள்ளார்கள். இயன்றவர்கள் அங்கும் சென்று பங்கு பெறுக, அவர் அருள் பெறுக!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி
ReplyDeleteஅ/ மி சக்தி மாரியம்மன் கோவில் வளாகம்,
தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை-4.
[திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில். மதுரை திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே, எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு முந்தின ஸ்டாப்.]
Sri Arulmiga Sakthi Mariamman Temple,
Thiagarajar Colony,
GST Road, Moolakarai, 625004,, Pasumalai, Madurai, Tamil Nadu 625004, India
https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
கொழுந்து என்பது மரிக்கொழுந்து.... அன்பர்கள் புரிந்து கொள்ளவும்
ReplyDeleteவணக்கம் அண்ணா
Deleteதை மாதம் பிறக்கும் வரை அகத்தீசனார் சன்னதிக்கு மரிக்கொழுந்து வாங்கிக் கொடுக்க வேண்டுமா? அல்லது அருகிலிருக்கும் சிவன் கோவிலில் அகத்தீசனார் வழிபட்ட லிங்கம் இருந்தால் அங்கே சமர்ப்பிக்கலாமா?
அகத்தியர் சன்னதியில் செய்ய வேண்டும்.
Deleteநன்றி ஐயா 🙏
Deleteதகவலுக்கு நன்றி ஐயா🙏 ஓம் அகத்தீசாய நம ❤️
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteநம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் அருளும் மதுரையில் உள்ள இவ் மகிமை புகழ் ஆலயத்தைப் பற்றி குருநாதர் உரைத்த வாக்குகளை இங்கு அளிக்கின்றோம். இவ் ஆலயம் செல்லும் முன்னர் இந்த வாக்குகளைப் படித்துச் சென்று அருள் பெற்று நல் வாழ்வு பெறுக
சித்தன் அருள் - 1068 - அன்புடன் அகத்தியர் - மதுரை சக்தி மாரியம்மன் கோவிலில் வாக்கு!
https://siththanarul.blogspot.com/search?q=1068
சித்தன் அருள் -1527 - அம்மை அப்பனின் திருநட்சத்திரங்கள்!
https://siththanarul.blogspot.com/search?q=1527
சித்தன் அருள் - 1471 - அகத்தியப்பெருமான் அருள் வாக்கு - மதுரை அகத்தியர் ஆலயம் பற்றி!
https://siththanarul.blogspot.com/search?q=1471
சித்தன் அருள் - 1436 - அன்புடன் அகத்தியர் - மதுரை பசுமலை அகத்தியர் கோவில் வாக்கு!
https://siththanarul.blogspot.com/2023/09/1436.html
சித்தன் அருள் - 1465 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு - மதுரை!
https://siththanarul.blogspot.com/2023/10/1465.html
சித்தன் அருள் - 1471 - அகத்தியப்பெருமான் அருள் வாக்கு - மதுரை அகத்தியர் ஆலயம் பற்றி!
https://siththanarul.blogspot.com/2023/10/1471.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteநன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் குழந்தை வேலன் துணை 🙏🙏🙏
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஅன்னை லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வராய நமஹ
ReplyDeleteபசுமலை அகத்தியர் ஆலயத்திற்கு பேருந்தில் வருவோர் மூலக்கரை பஸ்ஸடாப் என்று இறங்குமிடம்கூறவும். வெறுமனே பசுமலை என சொன்னால் அங்கு எனக்கு விடுவார்கள், அங்கிருந்து மீண்டும் ஆட்டோ, பஸ்ஸில் 2 கிமீ்தூரம் பயணிக்க வேண்டும்