​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 31 December 2024

சித்தன் அருள் -1759 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - 20


( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12 
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 16
சித்தன் அருள் - 1755 - மதுரை வாக்கு - 17
சித்தன் அருள் - 1756 - மதுரை வாக்கு - 18
சித்தன் அருள் - 1757 - மதுரை வாக்கு - 19

நம் குருநாதர் :- அம்மையே அதனால்தான் சொல்கின்றேன். புண்ணியங்கள் செய்து கெட்டுப்போனாலும் சரி, இறைவன் கெட்டியாக பாசத்தோடு அணைத்துக்கொள்வான் உங்களை. ( புண்ணியம் ) இவை வேண்டுமா? 
(பாவம் ) அவை வேண்டுமா? 

அடியவர் 11 :- சரிங்க ஐயா. புண்ணியம் தான் ஐயா. 

அடியவர் :- பொருள் வேண்டுமா? அருள் வேண்டுமா? 

அடியவர் 11 :- கர்ணன் போல..

நம் குருநாதர் :- அம்மையே பின் புண்ணியம் செய்து கொண்டே இருந்தால் பல வழிகளில் கூட தொந்தரவுகள், மனக் கஷ்டங்கள் , அம்மையே எது எதுவோ வரும். ஆனாலும் இவை எல்லாம் தாங்கும் சக்தி இருந்துவிட்டால் உயர்ந்த உள்ளமாக மாறிவிடும். பின் எவர் என்ன சொன்னாலும் நடக்காது தாயே!!!!!

ஆனாலும் மனம் குறுகிய அளவு உள்ளது மனிதனிடத்தில் அம்மையே. இதுதான் பின் எப்படி அவைதன் பின் பெரிதாக்குவது? ஆனால் கஷ்டங்கள் என்ற நிலைமைக்கு வந்தால்தான் பெரிதாக்க முடியும் என்று அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் யானே கஷ்டத்தை. 

அடியவர் 11 :- புரியுதுங்க ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- மனது பெரிதாக வேண்டும். 

நம் குருநாதர் :- அதனால் எதையும் கேட்பீர்களா நீங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எதுவும் வேண்டுமா என்று கேட்கின்றார். ஒரு வாய்ப்பு கொடுக்கின்றார். 

அடியவர் 11 :- உயர்ந்த உள்ளம் ஆவதற்கான வழி வேண்டும்? 

நம் குருநாதர் :- அம்மையே நற்பண்புகள், நற்சிந்தனைகள், உழைக்கும் திறன், இவ்வுலகத்தில் எப்படி வாழ்வது இவை எல்லாம் கற்றுக் கொடுத்தாலே புண்ணியங்கள் ஆகிவிடும் அதிக அளவு. பின்பு நீங்களே உயர்ந்து விடுவீர்கள் தாயே. யான் உயர்த்துவது என்ன? இதை பலமுறை  சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

நம் குருநாதர் :- அதனால் வினையாக வருவது நீங்கள் செய்யும் பாவம், புண்ணியம் மட்டுமே.  அதனால்தான் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன். புண்ணியங்கள் பெருக்குக, பெருக்குக என்று. 

ஆனாலும் சில நேரத்தில் புண்ணியங்கள் சென்றுகொண்டிருக்கும் பொழுது இறைவனே சோதிப்பான். ஆனாலும் விட்டு வைக்கக் கூடாது ( கஷ்டத்திலும் புண்ணியம் செய்வதை விடக் கூடாது). சரி என்று பரவாயில்லை விட்டுவிடு என்று. அது போலத்தான் இங்கு சோதனைகள் சில பேரை செய்து கொண்டிருக்கின்றான் இறைவன். 

அடியவர் :- ( குறைந்த கட்டணத்தில் காசி யாத்திரை பயணம் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணம் குறித்து  ஒரு அடியவர் கேட்ட போது ) 

நம் குருநாதர் :- அப்பனே எண்ணம் வந்துவிட்டாலே அது நல்லதா, தீயதா என்று இறைவனுக்குத் தெரியும் அப்பனே. நல்லது இருந்தால் இறைவனே செய்து முடிக்கப் போகின்றான் அப்பனே.  உந்தனுக்கு ஏதப்பா கவலை? 

அப்பனே, கொடுப்பதும் அவனே. எடுப்பதும் அவனே. இதை புரிந்து கொண்டால் நன்று. 

அப்பனே, அம்மையே உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கின்றேன். இதைத் தான் அனைவரிடத்திலும் கேட்டுவிட்டேன். இப்பொழுதும் கேட்கப் போகின்றேன். உயிரே உங்களுக்குச் சொந்தம் இல்லை. இறைவனுக்குச் சொந்தமானது. ஆனால் நீங்களோ அவை இவை என்று தேடிக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள். அதனால்தான் மனிதர்களைப் பாவம் என்று இறங்கி வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

அம்மையே அவை நடத்தல், இவை நடத்தல் , இன்னும் பதவி வேண்டும், புகழ் வேண்டும், பணங்கள் வேண்டும், பிள்ளைகள் வேண்டும் என்று கேட்பது மூடத்தனம் என்பேன் அம்மையே. இவையெல்லாம் கொடுத்து இவைகளால் கஷ்டங்கள் வரும் அதிக அளவு. ஆனால் நீங்கள் கேட்காவிடில் , பின் இறைவா!!!! படைத்துவிட்டாய். எப்படி வாழ்வது என்று கேட்டுவிட்டால், நிச்சயம் அவைகளெல்லாம் சரி செய்து, பின் நீங்கள்   கேட்டதை விட உயர்வாகக் கொடுப்பான் இறைவன். இதனால்தான் மூட நம்பிக்கையில் ஒளிந்துள்ளீர்கள் என்று யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். அதனால்தான் கையைப் பிடித்து , நற்காரியங்கள் செய்ய வைத்து, உங்களை பின் புண்ணியப் பாதையில் தேட வைத்து விட்டால் எத்தனுக்கு வேலையே இல்லை. அப்புண்ணியமே உங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாகிவிடும். உன் பிள்ளைகளும் உந்தனுக்கு என்னென்ன தேவையோ அப்புண்ணியங்களே கொடுத்து விடும். 

அடியவர்கள் :- சரிங்க ஐயா. 

அடியவர் ஒருவர் :- ( சுவடி ஓதும் மைந்தனைப் பார்த்து) உங்களுக்கு (சுவடி) கிடைத்தது போல் ஐயா. (உங்கள்) அப்பா செய்த புண்ணியத்திற்கு உங்களுக்கு ( மும்மூர்த்திகள் ஆசி பெற்ற ஒரே சுவடி ) இந்த பெரும் புண்ணிய சேவை. 

நம் குருநாதர் :- அம்மையே தர்மனைப் பற்றித் தெரியுமா யாருக்காவது? நிச்சயம் எடுத்துரையுங்கள்? 

அடியவர் 4 :- குந்தியின் மைந்தன். 

நம் குருநாதர் :- அம்மையே ஏதோ பின் வந்ததை பின் வாயில் கொட்டிவிடாதே. 

அடியவர் 6 :- ( தர்மரைப் பற்றி ஒரு மகாபாரத கதை உரைத்தார்) 

நம் குருநாதர் :-  அப்பனே, தர்மன் என்னென்ன செய்தான் அப்பனே?

அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் ) நீதி , நெறி வழுவாமல்…

நம் குருநாதர் :- அப்பனே அவந்தனக்கே கடைசியில் எவ்வளவு கஷ்டங்கள் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்ன. ஆனால் இறைவனே நாய் வடிவில் வந்தானப்பா. ஆனால் இன்றளவோ நாயினை எப்படி எப்படியோ பேசுகின்றார்கள் அப்பனே. 

அப்பனே அதுபோல் நீங்கள் நிச்சயம் புண்ணியங்கள் அதிக அளவு செய்து கொண்டால் நாயைப் போல் நிற்பானப்பா இறைவன். மிகக் கருணை கொண்டவனப்பா. 

அப்பனே வீழ்வதும்,  உயர்வதும் உங்களிடத்திலே. 

அடியவர் :- புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், புண்ணியம் செய்ய முடியாதபடி நம்மை பாவங்கள் தடுக்கின்றது. 

நம் குருநாதர் :- அப்பனே எப்படியப்பா? அதாவது இரவு உணவு, மதிய உணவு, காலை உணவு அப்பனே வேளாவேளைக்கு சாப்பிடுகின்றாய் அல்லவா? அது மட்டும் ஐயோ!!!! என்னை தடுக்கின்றது என்று ஏன் பேச மாட்டாய் அப்பா?  அப்பனே இதெல்லாம் சுயநலம் அப்பா. செய்யலாமா அப்பா? சோம்பேறி அப்பா. 

அடியவர் 11 :- தீதும் நன்றும் பிறர் தர வாரா. 

நம் குருநாதர் :- அப்பனே இறைவன் அனைத்தும் பிறக்கும் பொழுது உங்களிடையே கொடுத்து அனுப்புகின்றான். ஆனால் சிலரோ சரியாக உபயோகப் படுத்தி உயர்ந்து விடுகின்றார்கள்.  சிலரோ சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல்  கீழே விழுந்து விடுகின்றார்கள் அப்பனே.  இதனால்தான் அப்பனே இறைவன், ஐயோ!!!! இவனுக்கு அனைத்தும் கொடுத்து விட்டோமோ என்று மனம் வருந்துகின்றான் இறைவனே. 

அப்பனே அப்பொழுது இறைவன் மனம் வருந்தினாலே மிகப் பாவமப்பா. இன்னும் கீழே செல்வீர்கள் நீங்கள் அப்பனே.

அப்பனே அப்பொழுது இறைவன் வருந்தக் கூடாதப்பா. அப்பனே நீதி, நேர்மை, பின் தவறாமல் தர்மத்தோடு வாழ்ந்தால், பிற உயிரைக்கூட தன்போல் நினைத்து வாழ்ந்தால் இறைவன் மகிழ்வானப்பா. உயர்த்திவிடுவான் என்பேன் அப்பனே.

ஆனாலும் நீங்களும் கேட்கலாம் அப்பனே. ( அங்கு உள்ள ஒரு அடியவரை சுட்டிக்காட்டி ) இப்பொழுது கேட்டாளே இவள் தாய் , பின் தீயோர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே என்று.

ஆனாலும் இதற்கும் இன்னொரு கட்டத்தில் பதில் அளிக்கின்றேன். ( இப்போது யான் பதி அளித்தால் இவ் சத்சங்க உரையாடல்கள் ) நீண்டு போகும். 

அனைவருக்கும் என்ன வேண்டும்? கேளுங்கள்? 

( தனி வாக்குகள் ) 

நம் குருநாதர் :- (தனி வாக்கில் உள்ள மகத்தான பொது வாக்கு ) நீங்கள் செய்யும் உதவியில் யானும் பின்னே சிலகாலம் இருக்கின்றேன் என்றால்  , பாவம் தொலைந்திருக்கும் அப்பனே. அவ் புத்தி வரவில்லையே. அவ் புத்தி வந்திருந்தால் உந்தனுக்கு இறைவன் அனைத்தும் கொடுத்திருப்பான்.

(தனி வாக்குகள்)

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙇‍♀️

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. சித்தன் அருள் - 1759 - மதுரை வாக்கு - 20
    https://siththanarul.blogspot.com/2024/12/1759-20.html

    ReplyDelete