​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 4 December 2024

சித்தன் அருள் - 1745 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 3



சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1
சித்தன் அருள் - 1742 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 2

எந்த கேள்விக்கும் அவரிடம் பதில் தயாராக இருந்தது. "இல்லை இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று நண்பரால் கூற முடியவில்லை. முன் பின் தெரியாத ஒருவர் தன்னை பற்றி, தான் பயிற்றுவிக்கும் யோகாவை பற்றி, நடக்கிற விஷயங்கள் அனைத்தும் தன் எதிர்பார்ப்பிற்கு நேர் எதிராக நடக்கும் போது மேலும் கேள்வி கேட்டு, சோதித்து, அதையும் கண்ணால் பார்த்து பின் இயல்பாவோம் என்ற தீர்மானத்துக்கு வந்தார்.

"இதுவரை நீங்கள் சொன்னது/செய்தது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. உங்கள் குரு எங்கிருக்கிறார்?" என்றார், நண்பர்.

"என் குருவானவர் ஹிமாலயத்தில் இருக்கிறார். என்னைப்போல் பலரும் "நாகா"குழுவை சேர்ந்தவர்கள். குருவின் உத்தரவை நிறைவேற்ற பல இடங்களுக்கும் போய் அவர் கூறிய வேலையை செய்து விட்டு போவோம்" என்றார் சிரித்தபடியே!

"ஹிமாலய நாகா குழுவை சேர்ந்தவர் என்கிறீர்களே! அப்படியாயின் ஒரு நிகழ்ச்சியை நடத்தி காட்டுங்கள், தெளிவியுங்கள்!" என்றார் நண்பர்.

"சரி! நீங்களே சொல்லுங்கள்!" என்றார் புன்னகைத்தபடி.

நண்பர் தான் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து அப்படியே திரும்பி பார்த்தார்!

ஒரு இளைஞ்சன் வீட்டுக்கான சாமான் வாங்கிக் கொண்டு இவர்களை கடந்து, அந்த பெண்மணியையும், நண்பரையும் அதிசயமாக பார்த்தபடி சென்றான். அவன் நடந்து சென்று ஒரு நிமிடம் ஆனவுடன், நண்பர் பேசினார்.

"நம்மை கடந்து அந்த இளைஞ்சன் சென்று ஒரு நிமிடம் ஆகிறது. இன்னும் ஒரு நிமிடத்தில், பக்கத்தில் இருக்கும் கோட்டை வாசல் வழியே வெளியே சென்று விடுவான். அவன் இந்த கடைக்கு திரும்பி வந்து ஆங்கிலத்தில் "A Coffee without Sugar" என்று கூறி கடைக்காரரிடம் காப்பியை பெற்று, குடித்துவிட்டு திரும்பி அவன் வந்த வழியில் சென்று விட வேண்டும்! இதை செய்ய முடியுமா? "

நின்ற இடத்திலிருந்து அவர் திரும்பி பார்க்க, அந்த இளைஞ்சன் கோட்டையின் வாசலை தொட்டுவிட்டான், வலது பக்கம் திரும்பி வெளியே சென்றான்.

அந்த பெண்மணி ஒரு நொடி கண்ணை மூடி திறந்தார். பின் நண்பரை பார்த்து "Done!" என்று கூறி, நண்பரை பார்த்து சிரித்தபடி, நீங்கள் கேட்டது உங்கள் கண் முன் உடனே நடக்கும்! பொறுத்திருங்கள்!" என்றார்.

"அந்த இளைஞ்சன் கோட்டையை கடந்து, வலது பக்கம் திரும்பி போய்விட்டான்! இனிமேலா திரும்பி வருவான்? அதுவும் நான் கூறியதுபோல் ஆங்கிலத்தில் கேட்ப்பான் என்கிறீர்களா? சரி பார்ப்போம் என்றார்" நண்பர் சிரித்தபடியே.

"கேட்டுக் கொண்டபடி நடக்கும்! சற்று பொறுங்கள்! அமைதியாக கவனியுங்கள்!" என்றார் அந்த பெண்மணி.

சிரித்துக் கொண்டே நின்ற நண்பரிடம், கடைக்காரர், "என்ன அய்யா! எப்போதும் போல ஸ்டராங் காப்பி உங்களுக்கு போடவா?" என்றார்!

"சற்று பொறுங்கள்! பேசி முடித்து பின் கூறுகிறேன்!" என்றார் நண்பர்.

சற்று இயல்பாக பேசும் சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்ட நண்பர்,

"அதெப்படி! உங்களால் மலையாள மொழியில் பேச முடிகிறது? நீங்களோ ஹிமாலயத்திலிருந்து வருகிறீர்கள் என்கிறீர். இதற்கு முன் இங்கு கேரள நாட்டில் இருந்திருக்கிறீர்களா?" என்றார்.

"இந்த நாட்டிற்கு இதுதான் முதன் முறையாக வருகிறேன்" என்றார்.

"அப்போ! எப்படி சரளமாக மலையாள மொழி பேசுகிறீர்கள்?"

"இங்கு காற்றில், ஆகாசத்தில் அனைத்து மொழிகளும் உள்ளது. ஆகவே அதை எடுத்து உபயோகிப்பது எங்களுக்கு மிக எளிது!" என்றார்.  

ஏதோ கேட்க எத்தனித்தவரை, கண்களால் சமிக்ஞ்சை காட்டினார் அந்த பெண்மணி.

யாருக்கோ வழிவிட சொல்கிறார் போல என்று நினைத்து திரும்பி பார்த்த நண்பர், அதே இளைஞ்சன் அத்தனை சாமான்களையும் கையில் சுமந்தபடி, கடையை நெருங்கியதை கண்டார்.

கையில் இருந்த அத்தனை சாமான்களையும் கீழே வைத்துவிட்டு, கடைக்காரரிடம், ஆங்கிலத்தில் "A Coffee without Sugar" என்றார். பின் திரும்பி இவர்கள் இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

நண்பர் பெண்மணியை பார்த்து, ஒத்துக் கொள்ளும் பாவனையில் தலையாட்டினார்.

"உங்கள் கேள்வியின் முதல் பாகம் நடந்துவிட்டது. இரண்டாவது பாகம் இருக்கிறது. அதுவும் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்றார் அந்த பெண்மணி.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete