​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 1 December 2024

சித்தன் அருள் - 1743 - ஏழை பக்தன் வீட்டில் குருநாதர் பாகம் 3








வணக்கம் அகத்தியர்  அடியவர்களே

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா ஹிவர்கேட் கிராமத்தில் உள்ள ஏழை பக்தன் ஒருவர் வீட்டிற்கு குருநாதர் சென்று நல் ஆசிகள்... தந்த பிறகு அந்த கிராமத்தில் உள்ள சிவாலயத்திற்கு குருநாதர் செல்வதற்கு உத்தரவு கொடுத்தார். 

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த பக்தர் அவரது கிராமத்தில் அமைந்திருக்கும் அந்த சிவாலயத்தில் உள்ள மிகப் பழமையான சிவலிங்கம் கால ஓட்டத்தின் காரணமாக சிறிது பின்னம் அடைந்திருந்தது... இதனைக் குறித்து திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு 

குருவே சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம் இப்படி உள்ளது இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?? என்று ஒட்டுமொத்த கிராம மக்களின் சார்பாக அவர் குருநாதரிடம்  கேட்டதற்கு

அப்பனே ஈசனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஈசன் இடத்திற்கு வந்து தான் சொல்ல வேண்டும் அப்பனே யானே அங்கு வருகின்றேன் அப்பனே!!!!... ஏன் எதற்கு எவை என்று கூட எங்கு எதனைச் செப்ப வேண்டும் என்பதை யாம் அறிவோம் அப்பனே.... பொறுத்திருக என்று குருநாதர் வாக்குகள் தந்திருந்தார். 


அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் குருநாதருக்காக காத்திருக்கத் தொடங்கினர்....

தினசரி ஆலய வழிபாட்டு முறைகள் ஆளும் அபிஷேகங்களாலும் அந்த சிவலிங்கம் நிலை குறித்து மீண்டும் கிராம மக்கள் 

குருநாதா!!!! நமஸ்காரங்கள் நீங்கள் எப்பொழுது வந்து இதற்கான தீர்வை சொல்வீர்கள் என்று நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்... நாங்கள் உங்களையே நம்பிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் ஊரில் உள்ள சிலர் இப்படி சிறிது சேதம் அடைந்த சிவலிங்கத்தை வைத்து வணங்கக்கூடாது என்றெல்லாம் பேசுகின்றார்கள் நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை இதற்கான தீர்வை நீங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்!!! அதாவது ஊரில் உள்ள மற்றவர்கள் வேறொரு சிவலிங்கத்தை புதிதாக பிரதிஷ்ட செய்துவிடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.. இதற்கிடையே குருநாதர் இடம் மீண்டும் வாக்குகள் கேட்ட பொழுது 


அப்பனே அவ்  லிங்கத்தின் சக்தி என்ன???? ஈசனின் தீர்மானம் என்ன என்பது உங்களுக்கு தெரியாது அப்பனே!!!!

அவ் சிவலிங்கத்தை யாரும் மாற்றிவிட நினைக்கக் கூடாது... மிகப்பெரிய ரகசியங்கள் உள்ளது... இங்கிருந்து சொன்னால் பாவமாகிவிடும்... இதனைப் பற்றி அங்கு வந்து யான் உரைப்பேன்!!!.... நீங்கள் அவன் சிவலிங்கத்தின் மேலே ஒரு கவசத்தை பொருத்திடுக!!!... கவசத்தை பொருத்தி விட்டு நீங்கள் வழிபாடுகள் செய்யலாம்!!... நல்விதமாக ஈசனுக்கு கவசத்தை அணிவித்து அன்றைய தினத்தில் ஆலயத்தில் இயலாதவர்களுக்கு அன்னத்தை வழங்க வேண்டும் நல்விதமாகவே அப்பனே என்று வாக்குகள் கூறியிருந்தார்.

அதன்படியே கிராம மக்கள் ஒன்று கூடி விவாதித்து சிவலிங்கத்தின் மேல் உலோக கலசத்தை அமைத்து விடலாம் என்று தீர்மானித்து மகாராஷ்டிராவை சேர்ந்த மற்றொரு அகத்தியர் அடியவரின் உதவியால் சிவலிங்கத்தை முறையாக அளவெடுத்து கச்சிதமாக உலோக கவசத்தை பொருத்தினர்.30/8/2022 ல் இந்த நிகழ்வு நடைபெற்றது. 
 குருநாதருடைய உத்தரவுபடி அன்றைய தினம் அனைவருக்கும் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் அதிவிரைவில் யான் அங்கு வந்து ரகசியங்களை எல்லாம் எடுத்துரைப்பேன் என்றும் நல்வாக்குகள் தந்திருந்தார்!!


குருநாதர் வருகைக்காக கிராம மக்கள் அனைவரும் அந்த ஆலயத்தில் ஒன்று கூடி அமர்ந்திருந்தனர். 

திரு அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா ஆலயத்திற்கு சென்றவுடன் குருநாதரையும் மைந்தனையும் மிகவும் அன்போடு மரியாதையோடு வரவேற்றனர் திரு ஜானகிராமன் ஐயா கைகளால் ஈசனுக்கு தீபா ஆரத்தியும் செய்வித்து ஈசனை வணங்கி ஆலயத்தில் இருக்கும் அனுமனை வணங்கி கிராம மக்கள் அனைவரையும் அமரச் செய்து திரு ஜானகிராமன் ஐயா சுவடியை வாசிக்க தொடங்கினார்!!!


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!!

அப்பனே சில ரகசியங்களை கூட இப்பொழுது யான் எடுத்துரைக்கப் போகின்றேன்!!!

அப்பனே பின் நேற்றைய பொழுதில் அப்பனே... ராமன் (நாக்பூர் ராம் டெக் கோட்டை கோயில்) நிச்சயம் அப்பனே அங்கும் கூட பின் என்னுடைய ஆசிரமத்தை அமைத்து அப்பனே பல வழிகளிலும் கூட... பின் நேற்றைய பொழுதில் நிச்சயம் அப்பனே நீங்கள் அங்கு இருந்தீர்கள் அல்லவா!!!

அங்கு பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் பல பல மனிதர்கள் ஞானத்தை பெற வேண்டும் என்று அப்பனே நிச்சயம் ராமன் பின்... ராமனுக்கு அப்பனே பின் அறிந்தும் கூட... ஈசன் கிட்ட கட்டளை முன்னொரு ஜென்மத்தில் கூட!!

(ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு முன்னொரு ஜென்மத்தில் மக்களுக்கு ஞானத்தை போதிக்க வேண்டும் என்று சிவன் உத்தரவு கொடுத்திருந்தார்)

அப்பனே நிச்சயம் இச் ஜன்மத்திலும் கூட அப்பனே பின் ராமன் அப்பனே அதாவது தந்தையே!!! என்று அழைத்திட்டு பின் அதாவது நிச்சயம்... எப்பிறப்பு நிச்சயம் அறிந்தும் கூட... இங்கு வருபவர்கள் நிச்சயம் நீ அறிந்தும் பின் புரிந்தும் கூட அனைவருக்குமே நல்லதை செய்ய வேண்டும் என்று நிச்சயம் சத்தியம் செய்து தா!!! என்று நிச்சயம் என்னிடம் கேட்க!!

(ராமச்சந்திர மூர்த்தி அகத்தியர் பெருமானிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்)

நிச்சயம் யான் பின் ராமனே!!!

பின் அறிந்தும் கூட நிச்சயம் பின் கலியுகம் முடியும் வரை யான் நிச்சயம் இங்கே இருந்து மனிதர்களுக்கு நல் ஒழுக்கத்தையும் கற்பிப்பேன்.

ஆனாலும் மனிதர்கள் நிச்சயம் இங்கு வருபவர்கள் எல்லாம்  சில தீய எண்ணங்களோடு நிச்சயம் வருவார்கள் கலியுகத்தில். 

ஆனாலும் அவர்களுக்கும் கூட பின் நல் பின் மனதாக பின் அறிந்தும் கூட சில தீய எண்ணங்கள் இருந்தாலும் அவர்களை நிச்சயம் பக்குவப்படுத்தி அனுப்புகின்றேன் என்று யானும் பின் கூறினேன். 

இதனால் பின் அறிந்தும் கூட ஆனாலும்... ராமனும் கூட எதை என்று கூட இன்னும் இன்னும் பல ரகசியங்களை நிச்சயம் இவ்வுலகத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.. அதனால் என்னை நிச்சயம் பின் தனியாகவே அனுப்புங்கள் என்றெல்லாம். 


நிச்சயம் அறிந்தும் கூட பின் இவை என்று பின் புரிந்தும் உண்மைதனை கூட உண்மைதனை எடுத்துரைக்க இதனால் நிச்சயம் பின் 

தந்தையே பின் அறிந்தும் கூட பின் அதாவது பின் எதையாவது எந்தனக்கு கொடும்!!!!

நிச்சயம் அவ்வாறு யான் பின் அறிந்திருக்க வேண்டும் என்பதை எல்லாம் என்னிடத்தில் ராமனும் கூற!!!

இதனால் நிச்சயம் பின் அழகாகவே... யான் நிச்சயம்  ஒரு சிவலிங்கத்தை.. இதோ!! பின் எடுத்துச் செல் என்று அறிந்தும் கூட ராமனுக்கு கொடுத்தேன்!!

பின் சரியாகவே நீ நடந்து செல்... அப்படியே நீ நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது... நிச்சயம் அறிந்தும் கூட பின்.. நீ கால் தடுக்கி விழுவாய்... அங்கே நிச்சயம்.. இதை வைத்து விடு..

நிச்சயம் அங்கேயே உன் தியானத்தை தொடங்கு என்று!!!

இதனால் பின் இராமனும் கூட சிவலிங்கத்தோடு நடந்தே வந்தான்.

பின் நிச்சயம் கால் அதாவது இங்கே தடுக்கியது!!! நிச்சயம் சிவலிங்கமும் கூட அப்படியே பின் அறிந்தும் கூட... இங்கேயே பின் நிச்சயம் அதாவது அழகாகவே பின் ஒட்டிக்கொண்டது. 

(குருநாதர் அகத்தியர் பெருமானால் கொடுத்து விடப்பட்ட சிவலிங்கம் இந்த கிராமத்தில் அதாவது ஹிவர்கேட்.. தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் ராமர் கல் தடுக்கி கீழே விழுகின்ற நேரத்தில் சிவலிங்கமும் கீழே மண்ணில் பிரதிஷ்டை ஆகிவிட்டது) 

நிச்சயம் இதுதான் எம் தந்தை அகத்தியன் சொன்னது... என்று எண்ணி நிச்சயம் அறிந்தும் இதை என்றும் அறிய அறிய பின் நிச்சயம் பல பல கோணங்களிலும் கூட மனதாலே பின் நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்றெல்லாம் துதித்துக் கொண்டே !!! துதித்துக் கொண்டே!!! ராமனும்!!!


இதனால் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் அறிய சில ஆண்டுகள் போகவே நிச்சயம் பின் அறிந்தும் கூட... மீண்டும் அதாவது... அங்கே எனது ஆசிரமத்திற்கே மீண்டும் வந்தான் ராமன்.

(இந்த கிராமத்தில் சிவலிங்கத்தை வைத்து அனுதினமும் தியானங்கள் செய்து வணங்கி அதன் பிறகு மீண்டும் நாக்பூர் ராம் டெக் குருநாதருடைய ஆசிரமத்திற்கு திரும்பச் சென்றார் ராமச்சந்திர மூர்த்தி) 


நிச்சயம் இவ்வாறு இத்தனை வருடங்கள் யான் பூஜை செய்து விட்டேன்.. நிச்சயம் அறிந்தும் கூட !!!


யானும் ராமனிடம் 
எதை என்றும் கூட தெரியாமல் நிச்சயம் பின் ஏன்? இப்படி எல்லாம் என்பதை எல்லாம்.. நிச்சயம் மீண்டும்..நீ அங்கேயே செல்!!

நிச்சயம் பின் தானங்கள் அதாவது தர்மங்கள் பின் மக்களுக்கு எடுத்துரை!!!

நிச்சயம் பின் அதாவது பூஜைகளும் செய்... பின் நடுநிசியில் கூட... நிச்சயம் ஈசன் அங்கு வந்து... உந்தனுக்கு என்ன... எதை என்று அறிந்தும் கூட செய்வதற்கு தானாகவே.. முன் வருவான் என்று.

இதனால் மீண்டும் ராமன் இங்கே வந்து அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட அறிந்தும் கூட பின் பூஜைகள் செய்து செய்து தர்மத்தை நிலை நாட்ட!!!

இங்கெல்லாம் அப்பொழுதெல்லாம் காடுகள்!!!

நிச்சயம் பின் விலங்குகள் கூட விளையாடினான்.. நிச்சயம் அறிந்தும் கூட பின் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய..... விலங்கினமாகவே அதாவது... விலங்கு ரூபத்தில் ஈசன் வந்து பின் ஆசீர்வதித்தான் ராமனையும் கூட...

பின் அதனால்  நன் முறைகளாகவே பூஜைகள் செய்து கொண்டு பல பல மகிமைகள் கூட 

இதனால் நிச்சயம் பின் ஈசனும்.. பின் அதாவது மீண்டும் பின் அறிந்தும் கூட பின்... பன்றி ரூபம் எடுத்து ஆசிர்வதித்து பின் மீண்டும் மனித ரூபம் எடுத்து!!!

(நாக்பூர் ராம் டெக் ஆலயத்தில் ராமர் கோயிலுக்கு எதிரே ஒரு மண்டபத்தில் மிகப்பெரிய வாராஹம் அதாவது பன்றி திருவுருவ சிலை பெரிதாக ஒன்று அமைந்துள்ளது கூடுதல் தகவல்)



 அதாவது... ஈசன்!!! ராமனிடம் 
உந்தனக்கு என்ன வேண்டும்??? என்று கூற

ராமன் நிச்சயம் பின் இங்கெல்லாம் சிவலிங்கமாக இருக்க வேண்டும் என்று... ஈசனிடம் ராமன் கேட்க !!!

ஈசனும் இதனால் நிச்சயம் அப்படியே ஆகட்டும் என்று பின்... சிவலிங்கங்களாகவே ஈசன் அனைத்தையும் மாற்றினான். 

ஆனாலும் அப்பனே இப்பொழுதெல்லாம் இங்கெல்லாம் அப்பனே பின் சிவலிங்கங்கள் எல்லாம் இதன் அடியிலே அழகாகவே புதைந்துள்ளது அடியில் கூட அப்பனே சிவலிங்கங்கள் என்பேன் அப்பனே 

இதனால் நிச்சயம் நியாயத்தை  அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே சில மாற்றங்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே... உங்களுக்கு செப்பியும்!!!

அப்பனே இவந்தனக்கும் (ஏழை பக்தர் ரவீந்திர காவன்டே)  கூட அப்பனே ஒரு பிறவியில் அப்பனே இங்கே கூட அப்பனே நிச்சயம் ராமனுக்கு அப்பனே பல உதவிகள் செய்தான் என்பேன் அப்பனே. 
அவன் தான் மீண்டும் இங்கு பிறந்து அப்பனே நிச்சயம் சில உயிர்களையும் காத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே...

நன் முறைகளாகவே முடியுமப்பா !!

இன்னும் ரகசியங்களை யான் சொல்கின்றேன் அப்பனே!!!


அப்பனே அறிந்தும் கூட... ஏன் நீங்கள் அமர்ந்து உள்ளீர்கள் என்பதற்கேற்ப

 (ஆலயத்திற்கு குருநாதர் வாக்குகளை கேட்பதற்கு வந்த கிராமவாசிகள் கிட்டத்தட்ட ஒரு 40 பேர் அமர்ந்து இருந்தார்கள்)

 அப்பனே ராமனும் கூட அறிந்தும் கூட அப்பனே அதாவது நீங்கள் எல்லோரும் அப்பனே ராமனை தேடி பல வழிகளிலும் கூட அப்பனே சேவைகள் செய்தவர்கள் தான் என்பேன் அப்பனே!!

 அப்பனே இன்றளவும் கூட இரவில் வந்து அப்பனே ராமன் இங்கு தங்கி சென்று கொண்டு தான்... தங்கு சென்று கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே 

இதனால் அப்பனே உங்களுக்கும் ஆசிர்வாதங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே 
சில துன்பங்கள் உங்களுக்கு இருக்கலாம் ஆனாலும் போக போக அனுமான் அருளால் அதை நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட அனுமான் மாற்றி விடுவான் என்பேன் அப்பனே 

அப்பனே பின் நிச்சயம் அனுமானும் உங்களுக்கு நன்றாகவே காத்துக்கொண்டிருக்கின்றான் அப்பனே 

இதனால் அப்பனே மறவாமல் பின் நிச்சயம் அனுதினமும் 108 முறை பின் ராமன் நாமத்தை ( ஸ்ரீ ராம ஜெயம்) எழுதிக் கொண்டு வந்தாலே போதுமானதப்பா!!! அவர்கள் இல்லத்திற்கு அனுமான் வந்து ஆசிகள் கொடுத்து தங்களுக்கு என்ன வேண்டும்? என்று நிச்சயம் பின் அனுமான் நிச்சயம் செய்வானப்பா செய்வான்! 

அப்பனே இதனால் அப்பனே நீங்கள் அனைவருமே அப்பனே நிச்சயம் தர்மத்தை நிலைநாட்டி விட்டால் போதுமானதப்பா... உங்கள் பரம்பரை அப்பனே நீடூழி வாழுமப்பா!!!

அப்பனே நல்முறையாகவே அப்பனே பின் அருகில் நிச்சயம் அதாவது பௌர்ணமி பௌர்ணமி தினத்தன்று அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிந்தும் கூட பின் அதாவது ஈசனும் பார்வதியும் வந்து அப்பனே பின் நலன்களாகவே இங்கு தங்கிட்டு செல்வார்களப்பா!!

அதாவது அப்பனே பௌர்ணமி திதி முடியும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு!!!

(குருநாதரின் இந்த வார்த்தை கேட்ட ஒரு அடியவர் அதிர்ந்து போய் பௌர்ணமி நாளில் பஞ்சபூத ஸ்தலங்கள் குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் காசி அதற்கு அடுத்தபடியாக இந்த திருத்தலத்தை குருநாதர் குறிப்பிடுகின்றார் என்றால் இந்த ஆலயம் எத்தகைய மகிமை வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று வியக்க)

அப்பனே சம்பந்தங்கள் உண்டு என்பேன் அப்பனே!!


அப்பனே நிச்சயம் ராமன் சீதாவும் அப்பனே நல்விதமாகவே சேனைகளையும் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட ராமேஸ்வரத்தில் இருந்து அப்பனே எதை என்று அறிய அறிய அயோத்திக்கும்!!!

அயோத்தியில் இருந்து அப்பனே நிச்சயம் ராமேஸ்வரத்திற்கும் கூட அப்பனே...இவ் வழியாகத்தான் (ஹிவர்கேட் ஊர் வழியாக)சென்றார்கள் என்பேன் அப்பனே!!!

அப்பனே இப்பொழுது கூட அப்பனே நிச்சயம் அங்கங்கு அப்பனே சிலசில மறைமுகமான பின் அறிந்தும் கூட சேனைகள் உள்ளனர் (அவர்கள் இப் பிறப்பில் பிறந்துள்ளார்கள்) என்பேன் அப்பனே... நிச்சயம் அவர்களும் கூட இத்திருத்தலத்திற்கு உதவிகள் செய்வார்கள் என்பேன் அப்பனே. 


வேண்டியதை தரும் வரப்பிரசாதம் 


அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே... உங்களுக்கு இங்கு என்ன வேண்டுமானாலும்...

 அப்பனே பின் 1008 முறை அப்பனே நல்விதமாகவே அப்பனே ராமஜெயத்தை எழுதி எழுதி அப்பனே அப்பனே அதாவது மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் அப்பனே பின் எழுதி எழுதி அப்பனே பின் அனுமானிடம் கொடுத்து விட்டால் அப்பனே அனுமானே அனைத்தையும் பார்த்துக் கொள்வான் அப்பனே!!!

(ஆலயத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் அனுமார் திருவுருவச் சிலையிடம் ராமஜெயத்தை எழுதி வைத்துவிட வேண்டும்! என்ன வரம் வேண்டுமென்றாலும் கிடைத்துவிடும்)

அப்பனே நிச்சயம் மறைமுகமாகவே இன்னும் அப்பனே சிவலிங்கங்கள் அப்பனே பின் அடியில் உள்ளதப்பா
அப்பனே பின் போக போக அப்பனே ஈசன் நிச்சயம் ஈசனே தன்னை அப்பனே வெளிப்படுத்துவான் என்பேன் அப்பனே 
(ஈசன் அருளால் சிவலிங்கங்கள் தானாக வெளியே வரும்) 

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே பின் பரிசுத்தமான சித்தர்களும் கூட அப்பனே பின் இவையெல்லாம் அப்பனே.. இங்கிருந்து அப்பனே நிச்சயம் சில மைல் தொலைவில் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இங்கு சுற்றி சுற்றி !!!.... 

ஏனென்றால் அப்பனே பல மூலிகை காடுகளும் கூட அப்பனே இங்கே தான் இருந்தது என்பேன் அப்பனே!!!

அப்பனே அனுதினமும் அப்பனே நிச்சயம் பின் அனுமானும் இங்கு மூலிகைகளை பறிப்பதற்கு வருவானப்பா!!

ஏன்? எதற்கு? என்று இந்த ரகசியத்தை அடுத்தடுத்த வாக்குகளில் யான் சொல்லுகின்றேன் அப்பனே!!

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் புரிந்தும் ஆசிர்வாதங்கள் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே இங்கு அமர்ந்து அப்பனே நிச்சயம் அனுதினமும் அப்பனே பின் ராமாயணத்தையும் கூட அப்பனே சரியாகவே ராமனின் பாடல்களையும் கூட அப்பனே நிச்சயம் பாடிட்டு வந்தாலே... ராமஜெபத்தை செப்பிக் கொண்டிருந்தாலே... அப்பனே அனைத்தும் மாறும் அப்பா... மாறும் அப்பனே 

அப்பனே ஈசன் அடியில் இருக்கின்றான் நீங்கள் அப்பனே அவனுக்கு மேலே நீங்கள் இருக்கின்றீர்கள் அப்பனே. 

இதனால் சக்திகள் புகுமப்பா!!!! நல்விதமாகவே!!

(அமர்ந்திருந்த கிராம பக்தர்கள் கூட்டம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஓம் நமசிவாய அனுமார் தாதா கி ஜே என பக்தி பெருக்குடன் பரவசத்துடன் கண்களில் நீர் வழிய உணர்ச்சிவசப்பட்டு ஆமோதித்தனர்)



(ஆலயத்தில் அமர்ந்து ராமாயணம் படிப்பது ராமன் பாடல்களை பாடுவது ராம நாமத்தை ஜெபிப்பது என இப்படி இந்த ஆலயத்தில் அமர்ந்து கொண்டு செய்கின்ற பொழுது ராமருக்கு ஈசன் தந்த வரத்தின்படி சிவலிங்கங்களாக காட்சி அளித்த லிங்கங்கள் அனைத்தும் இந்த ஆலயத்தின் அடியில் உள்ளது!!!.... அப்பொழுது மேலே அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் அமர்ந்து தியானங்கள் அல்லது பாராயணம் செய்யும்பொழுது சக்திகள் நமது உடலுக்குள்ளே புகும்)


அப்பனே நல்விதமாகவே அப்பனே இன்னும் மாற்றங்கள் ஏற்படும் அப்பா இதனால் அப்பனே பின் யாரும் எவை என்று கூற எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்பேன் அப்பனே 

நல்விதமாகவே உங்கள் இல்லத்தில் கூட ராமஜெபத்தை அப்பனே எழுதிக் கொண்டு வந்தாலே போதுமானதப்பா 

அப்பனே சில தொல்லைகள் இருக்கலாம் அப்பனே சில நோய்களும் கூட அப்பனே நிச்சயம் இருக்கலாம் அப்பனே பின் எதை எதையோ தம் தன் இல்லத்திலும் கூட ஆனாலும் அப்பனே அனைத்தும் அப்பனே நிச்சயம் அனுமானே சரி செய்து விடுவான் என்பேன் அப்பனே!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல்... பிரதோஷ காலத்தில் அப்பனே பின் நல்விதமாகவே இங்கு வந்து அப்பனே இறைவனுக்கு அப்பனே ஏதாவது ஒரு ரூபத்தில் அப்பனே சேவைகள் செய்ய உங்கள் வாழ்க்கை அப்பனே மாறும் அப்பா!!

நீங்கள் உயர்வான இடத்திற்கு சென்று அப்பனே நீங்கள் விரும்புவதை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே!!

அப்பனே அனுமானும் உங்களுக்கு கொடுக்க தயாராகவே இருக்கின்றான் என்பேன் அப்பனே...


நீங்கள் சரியாக யான் சொல்லியதை கடைப்பிடித்து நடந்து கொள்வதில் தான் உண்டு என்பேன் அப்பனே 


அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் யாரெல்லாம் இங்கு அப்பனே பின் வருகின்றீர்களோ... அவர்கள் குடும்பம் அப்பனே செழித்து ஓங்கும் என்பேன் அப்பனே!!! அனுமான் அருளால் என்பேன் அப்பனே!!

அப்பனே நல்விதமாகவே அப்பனே அனுமான் அப்பனே பின் அதாவது இதற்கு முன்னே தான் பின் கேட்டார்கள் என்பேன் அப்பனே!!!

(இந்த ஊருக்கு நல்லதை செய்வதற்கும் பசுக்களை பாதுகாப்பதற்கும் தான் தர்மத்தை பேணுவதற்கும் அரசியல் நுழைந்து சேவை செய்வதற்கு மக்களுடைய வீட்டில் குருநாதரிடம் ஆசிர்வாதம் கேட்டதை குறிப்பிடுகின்றார்)

நிச்சயம் பின் அப்பனே ஒருவனை சரியாகவே அப்பனே அதாவது அரசியலில் நுழைய விட்டு அப்பனே தலைவனாக ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் அனுமான் பின் தலத்திற்கு அனைத்தும் செய்விப்பான் என்பேன் அப்பனே!!!

அப்பனே இதனால் கவலைகள் இல்லையப்பா

அப்பனே நிச்சயம் அனுமான் உங்களை பார்த்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே...

அனுதினமும் அப்பனே அனுமான் இங்கு நடமாடி நடந்து சென்று கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே 

ஏன் எதற்கு? என்றெல்லாம் அப்பனே வரும் வரும் வாக்கியத்திலும் கூட யான் எடுத்துச் சொல்வேன். 

இதனால் அப்பனே நிச்சயம் நீங்கள் அனைவருமே ராம ஜெபத்தை எழுதிக் கொண்டு வந்தாலே அனைவருக்குமே வெற்றி கிடைக்கும் என்பேன் அப்பனே வாழ்க்கையில் என்பேன் அப்பனே... குடும்பமும் கூட சுபிட்சமாக இருக்கும் என்பேன் அப்பனே

அப்பனே நலன்களாகவே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய நீங்கள் விரும்பியதை அனுமான் கொடுத்திடுவான் என்பேன் அப்பனே எளிதில் கூட... அப்பனே 


அப்பனே இதனால் நல்விதமாகவே அப்பனே ராம ஜெபத்தை அப்பனே பின் அதாவது நீங்கள் மனதில் எண்ணி எண்ணி அப்பனே நல்விதமாகவே அப்பனே தீபமேற்றி அப்பனே நிச்சயம் அதன் முன்னே அதாவது நிச்சயம் அறிந்தும் கூட அனுமானை நினைத்து அத் தீபத்தை அதாவது தீபம் எரிகின்றதே!! ( தீப ஜூவாலை யை) அதை அனுமானாகவே நினைத்து பின் ராமஜெபத்தை எழுதிக் கொண்டே வந்து நிச்சயம் பின்  கடைசியில் இவ் ஆசைகளை அதாவது அறிந்தும் கூட பின் எனது தீர்மானமான நியாயமான ஆசைகளை நிறைவேற்று... பின் நல்லதை மக்களுக்காக நல்லதை தான் செய்யப் போகின்றோம் என்று மனதார !! மன உறுதியோடு நிச்சயம் வேண்டிக் கொண்டாலே... போதுமானதப்பா!!!

நிச்சயம் அனுமானே உங்களுக்கு நிச்சயம் அனைத்தும் செய்து முடிப்பான் என்பேன் அப்பனே!!!


அப்பனே நிச்சயமாய் அனுமான் உங்களை ஒவ்வொரு துறைக்கும் அப்பனே நிச்சயம் பின் என்ன ஏது என்று அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட அப்பனே அனுமான் யோசித்து வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே 

அதனால் உங்களுக்கு என்னென்ன தேவை? என்பதை கூட ஆராய்ந்து அப்பனே பின் நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெற பின் அனுமான் இருப்பான் என்பேன் அப்பனே 

ஏன் எதற்கு அப்பனே நீங்கள் மட்டும் இங்கு அமர்ந்திருக்க வேண்டும்?????

என்பதை எல்லாம் அப்பனே இதற்கும் கூட அப்பனே காலங்கள் அப்பனே பதில் சொல்லும் என்பேன் அப்பனே... அதாவது இறைவன் பதில் கூறுவான் என்பேன் அப்பனே 

அனைவருக்குமே அப்பனே பின் நிச்சயம் அனுமான் அப்பனே கொடுத்து அப்பனே உங்களுக்கு என்னென்ன தேவை? என்பதை கூட நிச்சயம் அப்பனே ஈசனும் அப்பனே பின் அறியும் படி அதாவது அறிந்தும் விட்டான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே உங்களுக்கு அப்பனே சில சில தரித்திரங்களையும் கூட நீக்கி சில பக்குவங்களை ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் அனைத்தும் செய்வானப்பா அப்பனே ஈசன்!!!


அப்பனே எக்காலத்திலோ நீங்கள் செய்த புண்ணியங்கள் அப்பனே இங்கு உங்களை வரவழைத்து விட்டேன் அப்பனே...

யான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அதை நீங்கள் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றீர்கள் அப்பனே 
நிச்சயம் யான் சொல்லியதை நீங்கள் பயன்படுத்துங்கள் அப்பனே

நிச்சயம் வெற்றிகள் உண்டாகும் அப்பா!!!


அப்பனே நிச்சயம் அனைவரின் வீட்டிலும் கூட அப்பனே பின் ராமன் அழகாகவே அப்பனே அதாவது நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள் அல்லவா... உங்கள் அனைவரின் இல்லத்திற்கும் கூட ராமன் வந்து சென்று கொண்டே தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே 

இதனால் அவரவர் குடும்பத்திற்கும் கூட நிச்சயம் சுபிட்சங்கள் அப்பனே!!!

 நிச்சயம் அதாவது ராமன் செல்லும் இடமெல்லாம் அப்பனே அனுமானும் செல்வான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே சுபிட்சம் அப்பனே நிறைவேறுமப்பா


அப்பனே இதனால் கவலைகள் இல்லை என்பேன் அப்பனே 

அப்பனே யார் மூலம்? என்ன செய்ய வேண்டும்? பின் எவ் வேலையைக் கூட இறைவனே அப்பனே நிச்சயம் செய்து முடிக்க எவை என்று அறிய அறிய இறைவனே அப்பனே ஏற்பாடுகள் செய்வான் என்பேன் அப்பனே 

கவலையை விடுங்கள் என்பேன் அப்பனே 

அப்பனே சில சோதனைகள் கூட நிச்சயம் சோதனைகள் வந்தால் தான் அப்பனே நிச்சயம் பக்குவங்கள் பிறக்கும் என்பேன் அப்பனே ஆனாலும் உங்களை கைவிடமாட்டான் என்பேன் அப்பனே அனுமான். 


அப்பனே இதனால் அப்பனே இச் ஜென்மத்திலும் கூட அப்பனே நீங்கள் புண்ணியம் செய்துள்ளீர்கள் அனைவருமே என்பேன் அப்பனே...அப் புண்ணியங்களே உங்களை அழகாகவே வழிநடத்தும் என்பேன் அப்பனே... இறைவனிடத்திலும் கூட கொண்டு சேர்க்கும் என்பேன் அப்பனே 

அப்பனே கவலைகள் இல்லை நல்விதமாகவே அப்பனே என்னுடைய அருள்களும் ஆசிர்வாதங்களும் கடை நாள் வரையிலும் உங்களுக்கு இருக்கும் அப்பா 

அப்பனே நிச்சயம் நீங்களும் கூட... பின் வரும் காலத்தில் பல புண்ணியங்கள் செய்வீர்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே உங்கள் குடும்பமும் கூட எவை என்று கூட சுபிட்சங்களோடு வாழும்.. எவை என்று அறிந்தும் கூட!!!

""""""'''''''வாழுங்கள் அப்பனே வாழுங்கள் !!!! வாழ்த்துகின்றேன் அப்பனே!!!!

அப்பனே இதனால் கவலைகள் இல்லையப்பா நல்விதமாகவே நிச்சயம் அப்பனே தாங்கள்... தாங்கள் (நீங்கள் ஒவ்வொருவரும்) நினைத்துள்ளவாறே அப்பனே நிச்சயம் அனுமான் உங்களை வழி நடத்துவானப்பா!!!

அப்பனே நலன்களுடனே அப்பனே நீங்கள் பின் கேட்டதை பின் ஈசனும் அப்பனே தருவானப்பா!!!

அப்பனே அனைவருக்குமே பின் எதை என்று அறிய அறிய அப்பனே எப்படி எப்படியோ? இருந்தவர்களை கூட அப்பனே இப்படி அழைத்து கொண்டு வந்துள்ளானப்பா
ஈசன் என்பேன் அப்பனே...

இனிமேலும் அழைத்துக் கொண்டு அப்பனே மேல் நோக்கி செல்வானப்பா!! ஆசிகளோடு!!! நீங்களும் அப்பனே முன்னேற்ற பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே!!!

அப்பனே நல்லாசிகள் என்பேன் அப்பனே

யான் சொல்லியதை நிச்சயம் மறவாதீர்கள் என்பேன் அப்பனே... நல்விதமாகவே அப்பனே கடைபிடித்து வாருங்கள் வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே கவலைகள் இல்லை 

மீண்டும் அப்பனே நிச்சயம் அதாவது... தை அல்லது மாசி அப்பனே பங்குனி அப்பனே பின் இவை தன்னில் யான் உரைப்பேன் அப்பனே... சில ரகசியங்களை கூட...

ஆசிகள் ஆசிகளப்பா!!!





அரசியல் பாதையில் செல்வது குறித்து கிராம முக்கிய பிரமுகர்கள் குருநாதரிடம் கேட்டதற்கு

அப்பனே அறிந்தும் கூட அனுமானே உங்களை வழிநடத்துவானப்பா!!!


குருநாதா!!!

 இந்த விதர்பா பிராந்தியத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை இது உங்களுடைய பூமி!!! விவசாயிகளும் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்களுக்கு தொழில்களும் சரியாக இல்லை இதற்கு தீர்வு கூறுங்கள் 

அப்பனே அதனால்தான் அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே !!

யான் சொல்லியதை அனைத்தும் செய்க!!!

 அப்பனே... யான் சொல்லியதை மறவாதீர்கள் என்பேன். அப்பனே!!! உங்களிலிருந்து அனுமான் தேர்ந்தெடுத்து முன்னேற வைப்பான் என்பேன் அப்பனே!!!... நிச்சயம் கிடைக்குமப்பா!!!


வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!! குருநாதர் நல்முறையாக ஆலயத்தில் வாக்குகள் நல்கி அதன் பிறகு அங்கிருந்த கிராம மக்கள் அனைவரும் குருநாதரை வணங்கி பிரியாவிடை பெற்றனர்.....

திரு ரவீந்திர காவண்டே அவர்களும் கண்களில் கண்ணீர் கசிய திரு ஜானகிராமன் ஐயாவை கட்டியணைத்துக் கொண்டு ஓலைச்சுவடி பெட்டகத்தை கட்டி அணைத்துக் கொண்டு வணங்கி விடை பெற்றார்....

அன்று மாலையே
 குருநாதர் உத்தரவுபடி மற்றொரு தலத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் கிட்டத்தட்ட மாலை யாத்திரை தொடங்கி இரவு நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கையில் திரு ரவீந்திர காவண்டே... போனில் தொடர்பு கொண்டார்.... இரவில் மூன்று பசுக்களை ஏற்றி கடத்திக் கொண்டு வந்த வாகனத்தை கைப்பற்றி பசுக்களை மீட்டு எடுத்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது....

மீட்டெடுத்த பசுக்களை அடுத்த நாள் காலையில் கோசலையில் கொண்டு போய் சேர்க்க போகின்றேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் திரு ஜானகிராமன் ஐயாவும் குருநாதருடைய திருவருள் உங்களுடன் எப்பொழுதும் இருக்கும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி..... குருநாதர் உத்தரவுப்படி அடுத்த தலத்திற்கான யாத்திரை தொடர்ந்தது!!!!


ஹிவார்கெட் (ருப்ராவ்),
Tk.Telhara,Dist.Akola.
444103, மகாராஷ்டிரா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...;.தொடரும்!

8 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. இந்த விவரங்கள் அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நாம் அனைவரும் பாக்கியவான்கள்.ஐயா அகதீசாய நமஹ

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. ஓம் சிவாய நம
    இந்த பதிவில் உள்ள ஐயாவின் ஆசிகள், நல் வாக்குகள் அனைத்தும் எங்களுக்குமானது என்று எண்ணி மகிழ்ந்தோம்

    ReplyDelete
  5. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  6. ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

    ReplyDelete
  7. அகத்தியர் அடியவரான ஏழை பக்தரின் சேவைகள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு ஒரு சிறிய தொகை அனுப்பி அவருடைய சேவையில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete